Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவதெல்லாம் உண்மைதான் செங்கொடி. ஆண்களைக் குறை கூறுவதிலும் பெண்களைத்தான் கூறவேண்டி உள்ளது. என்னைப் பொறுத்த\வரை எழுதுவது ஒன்று செய்வது ஒன்று அல்ல. என் பிள்ளைகள் விடயத்தில் நான் அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துள்ளேன். இங்கு பிறந்து வளரும் பஈல்லைகளில் பெரும்பாலானோர் தெளிவான சிந்தனையுடன் எதிர்கால வாழ்வின் தீர்க்க தரிசனத்துடந்தான் இருக்கின்றனர். சிலர்தான் சுய சிந்தனையின்றி வாழ்பவர். அதிலும் என் தலைமுறைப் பெண்கள்தான் பாவம்.

பூமிக்கு எல்லை வானம். இந்த வாழ்க்கைக்குக் கூட ஒரு எல்லை உண்டு. எல்லை அற்ற சுதந்திரம் என்பது ஆபத்தான பின்விளைவுகளைக் கொண்டு வரும்.

பிள்ளைகளுக்கு சுதந்திரம் வழங்கிறம் என்று தாங்கள் புரிந்து கொள்ளாத ஒரு சமூக வெளியில் அவர்களை பிடித்துத் தள்ளி விடுவது.. அவர்கள் சுதந்திரத்தை அல்ல ஆபத்தை சந்திக்கவே அதிக வாய்ப்புள்ளது.

நீங்கள் பலர் வெள்ளைக்காரப் பெண் பிள்ளைகளை அல்லது அவர்களின் நடத்தைகளை எண்ணத்தில் வைச்சுக் கொண்டு சுதந்திரத்தை அளவிடுகிறீர்கள். அது தவறு. இன்று பார்க்கப் போனால் 16 வயதிலேயே மன அழுத்த மாத்திரைகளை அதிகம் எடுக்கும் நிலைக்கு வெள்ளையர்கள் பிள்ளைகளைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். பலர் பள்ளிப்படிப்பை முடிக்க முதலே வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். அதேவேளை வெள்ளைகளிலும் கூட.. பிள்ளைகளோடு யுனிக்கு வரும் பெற்றோர் கூட உள்ளனர். (அப்படி வரும் வெள்ளைப் பெற்றோர் புடிங் செய்து கொண்டு வந்து தந்து சாப்பிட்டிக்கமில்ல. அந்தச் சுவையே தனி.)  பிள்ளைகளின் சுதந்திரம் என்பதன் எல்லையை வளர்ந்தவர்கள் சரியாக தீர்மானிக்கும் பக்குவம் இருப்பது அவசியம். பிள்ளைகள் தாங்களா.. சமூகம்.. சூழலை மதிப்பிட்டு முடிவெடுக்கும் நிலை வரை.. அவர்களுக்கு சுதந்திரம் என்ற போர்வையில் வழங்கப்படும் எல்லையற்ற நடத்தை என்பது ஆபத்தானது. ஏனெனில் இந்தச் சமூகத்தில்.. ஆண்களுக்கும் ஆபத்து உள்ளது. பெண்களிற்கும் உள்ளது..! கூடிய சுதந்திரம் இரண்டு பாலாரையும் பாதிக்கும் விடயங்களில் பொதுவானது.

எல்லை தாண்டிய சுதந்திரம் மீள முடியாத பாதிப்புக்களில் போய் நிற்கவும் வாய்ப்புள்ளது..!

கோழி கூட குஞ்சை கொத்தி வளர்க்கிறது. காரணம்.. சுதந்திரத்தை தடுப்பதல்ல. அதற்குரிய எல்லையை உணர்த்தி வைக்க..!

நான் நினைக்கிறேன்.. சகாரா அக்கா விசுகு அண்ணா போன்றோர்.. இதில் தான் அதிக கவனம் செலுத்தி உள்ளனர் என்று.

அதேவேளை.. இன்னொரு விடயத்தையும் எங்கள் அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும்... நாங்களா கெடாமல்.. ஆபத்தை தேடிப் போகாமல்.. அவை எம்மை தேடி வருவது குறைவு..! அப்படி வந்தாலும் சமாளிக்கும் திறன் எம்மிடம் இருக்கும். அப்படியான சூழலுக்கு பிள்ளைகளை தயார்படுத்தினால் எத்துறையிலும் எவரும் கல்வி பயிலலாம்.. தொழில் செய்யலாம்..!

நாங்க எல்லாம் பப் போயிருக்கிறம்.. கிளப் போயிருக்கிறம்... டிஸ்கோ போயிருக்கிறம்.. நண்பர்கள் நண்பிகளோடு.. கூடி கூத்தடிச்சிருக்கிறம்.. ஆனால்.. எங்களுக்கு உள்ள சுதந்திரம் எல்லை என்பதை நாங்களும் மீறவில்லை.. மற்றவர்களும் எங்கள் சுதந்திர எல்லையை மீறி எங்களை நோக்கி வரவும் அனுமதிக்கல்ல..! எங்களைப் போலவே வாழ்ந்த பெண் பிள்ளைகளையும் காண்கிறோம். அதேவேளை ஒரு கிளப்பிங்கோடு.. தனி..ஒழுக்கத்தை பறிகொடுத்து மன உளைச்சலில் வீழ்ந்த பெண் பிள்ளைகளையும் கண்டிருக்கிறோம். :icon_idea::)

பொட்டை.. உங்களின் தனித்துவ இனத்துவ கலாசார பண்பாட்டு அடையாளங்களை தொலைப்பதன் மூலம்.. நீங்கள் பெரிய சுதந்திரத்தை அடைவதாக எண்ணிக் கொள்வது மகா மட்டமான சிந்தனை. இதனை மற்றைய இன மக்களும் வரவேற்பதில்லை. அவரவர் அவரவருக்குரிய தனித்துவத்தை அடையாளப்படுத்த முடியல்லைன்னா.. அப்புறம் அந்த சுதந்திரம் இருந்து என்ன பயன். ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவனவனுக்கு என்று ஒரு சிறப்பு உண்டு. அப்படி இருக்கும் போது ஒரே இன மக்களுக்கு அது அமைவது பாதகமோ.. சுதந்திரத்தைப் பறிப்பதோ கிடையாது. அதை விட அது அவனை மற்றவர்களில் இருந்து பெளதீக ரீதியில் வேறுபடுத்தி அழகு படுத்திக் காட்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 219
  • Views 16.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பூமிக்கு எல்லை வானம். இந்த வாழ்க்கைக்குக் கூட ஒரு எல்லை உண்டு. எல்லை அற்ற சுதந்திரம் என்பது ஆபத்தான பின்விளைவுகளைக் கொண்டு வரும்.

பிள்ளைகளுக்கு சுதந்திரம் வழங்கிறம் என்று தாங்கள் புரிந்து கொள்ளாத ஒரு சமூக வெளியில் அவர்களை பிடித்துத் தள்ளி விடுவது.. அவர்களை சுதந்திரத்தை அல்ல ஆபத்தை சந்திக்கவே அதிக வாய்ப்புள்ளது.

நீங்கள் பலர் வெள்ளைக்காரப் பெண் பிள்ளைகளை அல்லது அவர்களின் நடத்தைகளை எண்ணத்தில் வைச்சுக் கொண்டு சுதந்திரத்தை அளவிடுகிறீர்கள். அது தவறு. இன்று பார்க்கப் போனால் 16 வயதிலேயே மன அழுத்த மாத்திரைகளை அதிகம் எடுக்கும் நிலைக்கு வெள்ளையர்கள் பிள்ளைகளைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். பலர் பள்ளிப்படிப்பை முடிக்க முதலே வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். அதேவேளை வெள்ளைகளிலும் கூட.. பிள்ளைகளோடு யுனிக்கு வரம் பெற்றோர் கூட உள்ளனர். பிள்ளைகளின் சுதந்திரம் என்பதன் எல்லையை வளர்ந்தவர்கள் சரியாக தீர்மானிக்கும் பக்குவம் இருப்பது அவசியம். பிள்ளைகள் தாங்களா.. சமூகம்.. சூழலை மதிப்பிட்டு முடிவெடுக்கும் நிலை வரை.. அவர்களுக்கு சுதந்திரம் என்ற போர்வையில் வழங்கப்படும் எல்லையற்ற நடத்தை என்பது ஆபத்தானது. ஏனெனில் இந்தச் சமூகத்தில்.. ஆண்களுக்கும் ஆபத்து உள்ளது. பெண்களிற்கும் உள்ளது..! கூடிய சுதந்திரம் இரண்டு பாலாரையும் பாதிக்கும் விடயங்களில் பொதுவானது.

எல்லை தாண்டிய சுதந்திரம் மீள முடியாத பாதிப்புக்களில் போய் நிற்கவும் வாய்ப்புள்ளது..!

கோழி கூட குஞ்சை கொத்தி வளர்க்கிறது. காரணம்.. சுதந்திரத்தை தடுப்பதல்ல. அதற்குரிய எல்லையை உணர்த்தி வைக்க..!

நான் நினைக்கிறேன்.. சகாரா அக்கா விசுகு அண்ணா போன்றோர்.. இதில் தான் அதிக கவனம் செலுத்தி உள்ளனர் என்று.

அதேவேளை.. இன்னொரு விடயத்தையும் எங்கள் அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும்... நாங்களா கெடாமல்.. ஆபத்தை தேடிப் போகாமல்.. அவை எம்மை தேடி வருவது குறைவு..! அப்படி வந்தாலும் சமாளிக்கும் திறன் எம்மிடம் இருக்கும். அப்படியான சூழலுக்கு பிள்ளைகளை தயார்படுத்தினால் எத்துறையிலும் எவரும் கல்வி பயிலலாம்.. தொழில் செய்யலாம்..!

நாங்க எல்லாம் பப் போயிருக்கிறம்.. கிளப் போயிருக்கிறம்... டிஸ்கோ போயிருக்கிறம்.. நண்பர்கள் நண்பிகளோடு.. கூடி கூத்தடிச்சிருக்கிறம்.. ஆனால்.. எங்களுக்கு உள்ள சுதந்திரம் எல்லை என்பதை நாங்களும் மீறவில்லை.. மற்றவர்களை மீறி எங்களை நோக்கி வரவும் அனுமதிக்கல்ல..! அப்படியான பெண் பிள்ளைகளையும் காண்கிறோம். அதேவேளை ஒரு கிளப்பிங்கோடு.. தனி..ஒழுக்கத்தை பறிகொடுத்து மன உளைச்சலில் வீழ்ந்த பெண் பிள்ளைகளையும் கண்டிருக்கிறோம். :icon_idea::)

நன்றி ஐயா

(பச்சை முடிந்ததால்)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் உரிமைகள் ஆணைவிடவும் பெண்களினாலேதான் அதிகம் மறுக்கப்படுகிறது. மாமியாக, நாத்தனாராக, மைத்துணியாக, இது அரங்கேற்றப்படுகிறது. இந்த நிலமை ஒரு ஆணுக்கு அவனுடைய மாமன், மச்சான், மைத்துணர்களினால் ஏற்படுவது அபூர்வம் என்றே கூறலாம். இதனை மறுத்து எவரும் எத்தனை கோடுகள் போட்டாலும்! அவை அனைத்தும் வளைந்து, வட்டமிட்டே சுழன்றுவரும். :o  :( 

பெண்களுக்கு வேறை வேலை கிடையாது சார்.. கொஞ்சம் பொறுங்க.. இப்பிடியே பேசிட்டு சோறுவடிக்கப் போய்டுவாங்க.. :D

பெண்களுக்கு வேறை வேலை கிடையாது சார்.. கொஞ்சம் பொறுங்க.. இப்பிடியே பேசிட்டு சோறுவடிக்கப் போய்டுவாங்க.. :D

இசைக்கு வர வர லொள்ளுக் கூடிப் போச்சு!

சுமே எடு அந்தப் பழந்தும்புக்கட்டையை    .....  :lol:

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு வர வர லொள்ளுக் கூடிப் போச்சு!

சுமே எடு அந்தப் பழந்தும்புக்கட்டையை    .....  :lol:

juz953.gif

நீங்கள் எடிட் பண்ண முன்னம் இது நடந்தது..  :lol:

juz953.gif

நீங்கள் எடிட் பண்ண முன்னம் இது நடந்தது..  :lol:

:lol:  :lol: ம்ம்.... சரியான தாக்குதல் உது தான் :lol:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூமிக்கு எல்லை வானம். இந்த வாழ்க்கைக்குக் கூட ஒரு எல்லை உண்டு. எல்லை அற்ற சுதந்திரம் என்பது ஆபத்தான பின்விளைவுகளைக் கொண்டு வரும்.

பிள்ளைகளுக்கு சுதந்திரம் வழங்கிறம் என்று தாங்கள் புரிந்து கொள்ளாத ஒரு சமூக வெளியில் அவர்களை பிடித்துத் தள்ளி விடுவது.. அவர்கள் சுதந்திரத்தை அல்ல ஆபத்தை சந்திக்கவே அதிக வாய்ப்புள்ளது.

நீங்கள் பலர் வெள்ளைக்காரப் பெண் பிள்ளைகளை அல்லது அவர்களின் நடத்தைகளை எண்ணத்தில் வைச்சுக் கொண்டு சுதந்திரத்தை அளவிடுகிறீர்கள். அது தவறு.

நாங்க எல்லாம் பப் போயிருக்கிறம்.. கிளப் போயிருக்கிறம்... டிஸ்கோ போயிருக்கிறம்.. நண்பர்கள் நண்பிகளோடு.. கூடி கூத்தடிச்சிருக்கிறம்.. ஆனால்.. எங்களுக்கு உள்ள சுதந்திரம் எல்லை என்பதை நாங்களும் மீறவில்லை.. மற்றவர்களும் எங்கள் சுதந்திர எல்லையை மீறி எங்களை நோக்கி வரவும் அனுமதிக்கல்ல..! எங்களைப் போலவே வாழ்ந்த பெண் பிள்ளைகளையும் காண்கிறோம். அதேவேளை ஒரு கிளப்பிங்கோடு.. தனி..ஒழுக்கத்தை பறிகொடுத்து மன உளைச்சலில் வீழ்ந்த பெண் பிள்ளைகளையும் கண்டிருக்கிறோம். :icon_idea: :)

பொட்டை.. உங்களின் தனித்துவ இனத்துவ கலாசார பண்பாட்டு அடையாளங்களை தொலைப்பதன் மூலம்.. நீங்கள் பெரிய சுதந்திரத்தை அடைவதாக எண்ணிக் கொள்வது மகா மட்டமான சிந்தனை. இதனை மற்றைய இன மக்களும் வரவேற்பதில்லை. அவரவர் அவரவருக்குரிய தனித்துவத்தை அடையாளப்படுத்த முடியல்லைன்னா.. அப்புறம் அந்த சுதந்திரம் இருந்து என்ன பயன். ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவனவனுக்கு என்று ஒரு சிறப்பு உண்டு. அப்படி இருக்கும் போது ஒரே இன மக்களுக்கு அது அமைவது பாதகமோ.. சுதந்திரத்தைப் பறிப்பதோ கிடையாது. அதை விட அது அவனை மற்றவர்களில் இருந்து பெளதீக ரீதியில் வேறுபடுத்தி அழகு படுத்திக் காட்டும்..! :icon_idea:

.வெள்ளைக்காரர்களைப் பார்த்து எண்கள் சுதந்திரத்தை அளவிடுகிறோம்  என்பதே ஆணியம் சார்ந்த கொள்கைதான் நெடுக்ஸ். மேலே niramidappadda  பகுதிகூட நாங்கள் எதுவும் செய்யலாம், நாங்கள் புத்திசாலிகள். பெண்கள் தான் தவறிளைக்கக் கூடியவர்கள் என்பதாகக் காட்டுகிறது. வந்த முதல்நாளே தனிஒழுக்கத்தைப் பறிகொடுக்கக் கூடிய பிள்ளை கிளப்புக்கு வராமலும் அதைச் செய்யக் கூடியதுதான். அப்படி ஒரு தவறை அன்ய்தப் பெண் தனியே சிகிறதா?? இல்லையே அதற்கு ஒரு கேடுகேடேட ஆண்தானே உடந்தையாகிறான்,. அவன் ஆணாக இருப்பதனால் அவன் மட்டும் நல்லவனோ???

நாம் அதிகூடிய சுதந்திரத்தைப் பற்றிக் கதைக்கவில்லையே. சாதாரணமாகக் கிடைக்கவேண்டியவற்றைத்தானே குறிப்பிடுகிறோம்.

இசைக்கு வர வர லொள்ளுக் கூடிப் போச்சு!

சுமே எடு அந்தப் பழந்தும்புக்கட்டையை    .....  :lol:

பழந்தும்புத்தடியை பாஞ்ச் ஏற்கனவே பறிச்சுக்கொண்டு போட்டுது. இனிப் புதுசுதான் வாங்கவேணும் அலை. :( :(

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

.வெள்ளைக்காரர்களைப் பார்த்து எண்கள் சுதந்திரத்தை அளவிடுகிறோம்  என்பதே ஆணியம் சார்ந்த கொள்கைதான் நெடுக்ஸ். மேலே niramidappadda  பகுதிகூட நாங்கள் எதுவும் செய்யலாம், நாங்கள் புத்திசாலிகள். பெண்கள் தான் தவறிளைக்கக் கூடியவர்கள் என்பதாகக் காட்டுகிறது. வந்த முதல்நாளே தனிஒழுக்கத்தைப் பறிகொடுக்கக் கூடிய பிள்ளை கிளப்புக்கு வராமலும் அதைச் செய்யக் கூடியதுதான். அப்படி ஒரு தவறை அன்ய்தப் பெண் தனியே சிகிறதா?? இல்லையே அதற்கு ஒரு கேடுகேடேட ஆண்தானே உடந்தையாகிறான்,. அவன் ஆணாக இருப்பதனால் அவன் மட்டும் நல்லவனோ???

நாம் அதிகூடிய சுதந்திரத்தைப் பற்றிக் கதைக்கவில்லையே. சாதாரணமாகக் கிடைக்கவேண்டியவற்றைத்தானே குறிப்பிடுகிறோம்.

பழந்தும்புத்தடியை பாஞ்ச் ஏற்கனவே பறிச்சுக்கொண்டு போட்டுது. இனிப் புதுசுதான் வாங்கவேணும் அலை. :( :(

நீங்கள் உங்களின் பிரச்சனைகளை ஆணின் மீது சாட்டிவிட்டு நீங்கள்.. தவறு செய்வதை.. அல்லது தவறிழைப்பதை நியாயப்படுத்த ஆணாதிக்கத்தை திணிக்கிறீர்கள். நீங்கள் என்பது உங்களை மட்டுமல்ல.. பெண்களாக இருந்து.. தாமே கொண்டுள்ள நம்பிக்கையீனங்களுக்கு ஆண்களை பலிக்கடாவாக்கும் பெண்கள் எல்லோரையுமே சொல்கிறோம்.

ஆம் என்னால் ஆணித்தரமாகச் சொல்ல முடியும். நம் பெண்களின் விடுதலை.. சுதந்திரம் என்பது வெள்ளையினத்தினரை மையமாகக் கொண்டு எழுகிறதே தவிர அவர்களின் சொந்தத் தேவைகளைக் கருதியல்ல. இதனை பல இடங்களில் அவர்களே எடுத்துக்காட்டாக்கி வருவதை நீண்ட காலம் அவதானித்து வருகிறேன்.

யாழில் மட்டுமல்ல..வீரகேசரியிலும் குங்குமம் சங்கமம் பகுதி வெளிவந்த காலத்தில் பள்ளி மாணவனாக ஒரு நேரடி கட்டுரை விவாதத்தை ஒரு பெண் பேராசிரியரோடு செய்திருந்தோம். அப்போது நாங்க சொல்லிக் கொண்ட விடயம்.. பெண்ணின் தாழ்வுக்கு அவளே காரணமே தவிர.. ஆண்கள் அல்ல என்று. அதனை நீண்ட ஒரு வரலாற்றியல் உயிரியல் பின்னணியோடு.. எழுதி இருந்தோம். அதற்கு பதிலாக கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியை பதில் கட்டுரை எழுதி இருந்தா. அவா தாய்நிலைச் சமூகத்தில் இருந்து தந்தை வழிச் சமூகம்.. தோன்றியது கோட்பாடுகளை எல்லாம் அடிக்கி.. அந்தக் கட்டுரைக்கு மறுப்புச் சொல்ல வேண்டிய தேவை எழுந்திருந்தது. காரணம்.. அதன் தாக்கம்.. ஒட்டுமொத்த பெண்ணிலைவாதத்திற்கும்.. சாவு மணி அடிக்குமோ என்ற அச்சம். அதன் பின் பல பெண் எழுத்தாளர்கள் நாங்கள் புதிய சித்தாந்தத்தை உருவாக்குவதாக கவிதை வேறு வடித்திருந்தார்கள். அது ஓர் ஆணின் கட்டுரை என்று உள்ளடக்கத்தை விட்டு எழுதியவரை நோக்கி.. விமர்சனம் வைத்தார்கள்.

ஆனால்..  அந்தக் கட்டுரையின் அதே வடிவத்தை இன்றைய பெண்கள்.. பின்- பெண்ணியத்துவம் மூலம் நகர்த்தி வரும் இந்த வேளையில்.. நீங்கள் இன்னும் ஆண்கள் மீது பழிபோடும்.. பழைய சித்தாந்ததில் ஊறிக் கிடந்து கொண்டு சுதந்திரத்தை அவனிடம் எதிர்பார்ப்பது ஒரு வகையில்.. புத்திசாலித்தனம் அல்ல.

கால்பந்து மைதானத்துக்குள் வந்திட்டால்.. நீங்கள் தான் கோல் அடிக்கனும். ரெபரி அல்லது விசிறி.. உங்களுக்காக அடிக்க முடியாது..! அதேபோல்.. அந்த எல்லைக்குள்.. அந்தக் கட்டுப்பாட்டுக்குள் தான் அடிக்கனும்... அப்போது தான் அது செல்லுபடியாகும் அது ஆணுக்கும் பொருந்தும்... பெண்ணிற்கும் பொருந்தும். ஆனால் நீங்களோ.. கோல் அடிக்காமல் இருப்பதற்கு ஆணே காரணம் அந்த விதிகளே காரணம்.. என்பது தான் தவறாகிறது இங்கு..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ஆ! எனக்கு இப்பதான் ஞாபகம் (இப்பதான் நித்திரையால எழும்பினனான்) வருது நான் என்னையே எனது மனைவியிடம் குடுத்திட்டன். இதில இனி எனக்கெங்க சுதந்திரம் இருக்கு! நானாப் போராடிப் பெற்றால் சரி. இவளுகள் எப்ப எப்ப என்ன மூடில இருப்பாளுகள் எப்ப எப்ப இவளுகளுக்கு கோபம் வரும் எண்டு அட்ஜஸ்ட்பணுறதிலேயே எங்கட சுதந்திரம் பறிபோயிடுது.

சூ....! சூ....!  சு....தந்திரம்!

அவை கோல் அடிச்சாலும் கப் கொடுக்க நாங்கதான் வரணும்!!  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு எனது நேரத்தை தொடர்ந்தும் இழக்க விரும்பவில்லை. இறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொண்டு விடைபெறுவது எனது நேரத்தை மீதப்படுத்தும்.

அப்ப நான் இந்தத் திரியிலிருந்து நன்றி வணக்கம் சொல்லி விடைபெறுகிறனாம்.

நன்றி வணக்கம்.

அப்படி பிஸியானா நீங்களெல்லாம்....அப்பப்ப ஒருசில திரிகளில் தொட்டுநனைக்கிற வேலைகளைசெய்யாதீர்கள். கருத்திற்கு கருத்திட்டால் இன்னொருபக்கம் விடையைதேடுமாறு சுட்டுவிரலை நீட்டுவது போக்கிரித்தனம்.
 
புலம்பெயர் நாடுகளிலிருந்து பெண்ணுரிமையைப்பற்றி கொக்கரிக்கும் பல கோழிகளை பார்த்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அதில் நானுமொருவன்........

கோழியின் பிள்ளை குஞ்சு ,

மனைவி என்ன கணவனின் பிள்ளையா ?

கோழி குஞ்சை பொத்தி வளர்த்து  பின்னர் வயது வர கொத்தி துரத்துது போய் தனித்து வாழச்சொல்லி எம்மவர் கடைசி வரை மனைவிமாரை அடைத்துதான் வைத்திருக்க விரும்புகின்றார்கள் அவ்வளவு சுயநலம்  .

மன்னிக்க வேணும் அண்ணோய். பிசியாக இருப்பதால் இங்கே நனைக்க வரவில்லை. இதில் எதை எழுதினாலும் நீங்கள் எங்கள் கருத்தில் உள்ள நியாயத்தை அல்லது உரிமை மீறலை புரிந்து கொள்ளப்போவதில்லை. புரிந்து கொள்ளாது தொடர்ந்தும் நீங்களே சரியென்று நிற்கும் பெரும்பான்மை கருத்துக்கு பதில் எழுதி எனது நேரத்தை வீணாக்குவதில் எந்த வெற்றியும் வந்துவிடாது அதனால்தான் விலகிக்கொள்கிறேன். இதைக்கூட நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே திரும்பவும் இங்கு வந்துள்ளேன்.

நீங்கள் கோழிகளைத்தான் பார்த்திருக்கிறீர்கள் இதுவரையில: பெண்களைப் பார்க்கவில்லை. ஆக ஆறறிவு கொண்ட பெண்ணைவிட 5அறிவு கொண்ட பேசத்தெரியாத கோழிகளைப் பார்த்த பாதிப்புக்கான பலனும் உங்களுக்கானதே.

இங்கின உண்மையை சொல்லி பூரிக்கட்டையால் அடிவாங்க முடியாது என்பதால் கருத்தை தவிர்க்கிறேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

கோழியின் பிள்ளை குஞ்சு ,

மனைவி என்ன கணவனின் பிள்ளையா ?

.

மனைவியையும் தன் பிள்ளைபோலக் காப்பவன் தானே கணவன் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவியையும் தன் பிள்ளைபோலக் காப்பவன் தானே கணவன் :icon_idea:

இன்னும் என்னவெல்லாம் பெண்களை மருட்டச் சொல்லுவியளோ தெரியாது :D :D

கோழியின் பிள்ளை குஞ்சு ,

மனைவி என்ன கணவனின் பிள்ளையா ?

கோழி குஞ்சை பொத்தி வளர்த்து  பின்னர் வயது வர கொத்தி துரத்துது போய் தனித்து வாழச்சொல்லி எம்மவர் கடைசி வரை மனைவிமாரை அடைத்துதான் வைத்திருக்க விரும்புகின்றார்கள் அவ்வளவு சுயநலம்  .

உண்மை அண்ணா. ஆணின் ஒவ்வொரு செயலிலும் தன சுயநலம் சார்ந்தே இருக்கும்

அவை கோல் அடிச்சாலும் கப் கொடுக்க நாங்கதான் வரணும்!!  :lol:

ஒரு பெண்ணைக் கொண்டு கப் குடுக்க உங்கட ஈகோ விடாதே :lol: :lol:

மனைவியையும் தன் பிள்ளைபோலக் காப்பவன் தானே கணவன் :icon_idea:

ஒன்றும் தெரியாத குழந்தை போல மனைவி என்றால் நீங்கள் சொல்வது சரி .

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் தெரியாத குழந்தை போல மனைவி என்றால் நீங்கள் சொல்வது சரி .

அதுதான் இனிமையான வாழ்க்கை அர்ஜுன் அண்ணா :D

 ஒன்றும் தெரியாத குழந்தைபோல மனைவியும்

ஒன்றும் தெரியாத குழந்தைபோலக் கணவனும்

இருந்துவிட்டால்

ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஒன்று தான் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Spoiler

அண்ணா எந்த நாட்டில் எண்டாலும் கிணற்றுக்குள் வாழ்பவர்களைப் பற்றி நான் கதைக்கவில்லை. வெளியே வந்து உலகத்துடன் போட்டிபோட்டு சவால்களைச் சந்தித்து சுதந்திரமாய் வாழும் பெண்களைப் பற்றித்தான் கதைக்கிறேன். என் பிள்ளைகள் பொட்டு வைப்பதில்லை. அதற்காக அவர்கள் கலாச்சாரம்  பண்பாட்டைப் பேணுபவர்கள் அல்ல என்பதும் இல்லை. பொட்டு வைத்துக்கொண்டு திரியும் பலரிடம் இல்லாத நல்ல பண்புகள் அவர்களிடம் உண்டு.

பச்சை குத்துவது கூடத் தவறென்று எப்படிச் சொல்ல முடியும்??? காலத்துக்கேற்ப நாம் மாற்றமடைந்துதான் தீரவேண்டும். அதைவிட்டு இப்பவும் நான் உரலில் மாவிடித்து வறுத்துத்தான் புட்டவிப்பேன் என்று கூறினால் அவர்களுக்காக இரக்கப்படலாமே தவிர வேறொன்றும் செய்ய முடியாது. ஆண்களுக்கு அந்த வல்லமை இல்லை என்றுதான் பெண்களுக்கு அந்தப் படைப்பைக் கொடுத்தது இயற்கை.  உருவத்திலும்  செயல்களிலும் வேறுபாடு இருந்தாலும்  பெண்கள் ஆண்களுக்கு குறைந்தவர் இல்லை. :D

  :D
அமைதியான அழகான பதிலுக்கு நன்றி. உங்கள் கருத்தில் பல நிஜங்கள் இருந்தாலும்......பெண்ணுரிமைப்பிரச்சனைகள் பொருளாதாரம் பின் தங்கிய நாடுகளில் மட்டுமே தலை விரித்தாடுகின்றது. பொதுவாக எம்மவர் புலம்பெயர்ந்து வாழும் மேலைத்தேய நாடுகளில் (எங்கடைசனம் பேய்க்காயள்) தங்கள் பெண்ணுரிமைபற்றி வாதாடுகின்றார்களா? அவுஸ்ரேலியா,அமெரிக்கா,கனடா(ஓ..மைகாட்)இங்கிலாந்து,நியூஸ்லாந்து,ஒல்லாந்து,சுவிற்சலாந்து,ஜேர்மனி(சைஸ) டென்மார்க்,நோர்வே,சுவீடன் இன்னும் பல நாடுகளை சொல்லலாம்.அங்கே  தங்கள் பெண்ணுரிமைபற்றி ஏதாவது கதைக்கின்றார்களா? போராடுகின்றார்களா? இல்லையே!!!!! ஏன்?
 இதேநேரம் இத்தகைய நாடுகளில் அவரவர் வாழ்க்கை முறைகளையும் சிறிது சிந்தியுங்கள்.
 
இன்னுமொரு விசயம்....வாழ்க்கைமாறுது....காலம் மாறுது எண்டுட்டு கண்டபடி பச்சையெல்லாம் குத்தாதேங்கோ.....  பிறகு எல்லாபச்சையையும் கண்டபடி அழிக்கேலாது.....ஏனெண்டால் சாறி,நகை டிசைன் மாதிரி  இதுவும் மாறிக்கொண்டே வருது....

ஒரு பெண்ணைக் கொண்டு கப் குடுக்க உங்கட ஈகோ விடாதே :lol: :lol:

எல்லாரும் வீராங்கனைகளாக இருப்பதால்.. வீராங்கனைகள் கப் வாங்கலாமே தவிர கொடுப்பது முறையல்ல.  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Spoiler

  :D
அமைதியான அழகான பதிலுக்கு நன்றி. உங்கள் கருத்தில் பல நிஜங்கள் இருந்தாலும்......பெண்ணுரிமைப்பிரச்சனைகள் பொருளாதாரம் பின் தங்கிய நாடுகளில் மட்டுமே தலை விரித்தாடுகின்றது. பொதுவாக எம்மவர் புலம்பெயர்ந்து வாழும் மேலைத்தேய நாடுகளில் (எங்கடைசனம் பேய்க்காயள்) தங்கள் பெண்ணுரிமைபற்றி வாதாடுகின்றார்களா? அவுஸ்ரேலியா,அமெரிக்கா,கனடா(ஓ..மைகாட்)இங்கிலாந்து,நியூஸ்லாந்து,ஒல்லாந்து,சுவிற்சலாந்து,ஜேர்மனி(சைஸ) டென்மார்க்,நோர்வே,சுவீடன் இன்னும் பல நாடுகளை சொல்லலாம்.அங்கே  தங்கள் பெண்ணுரிமைபற்றி ஏதாவது கதைக்கின்றார்களா? போராடுகின்றார்களா? இல்லையே!!!!! ஏன்?
 இதேநேரம் இத்தகைய நாடுகளில் அவரவர் வாழ்க்கை முறைகளையும் சிறிது சிந்தியுங்கள்.
 
இன்னுமொரு விசயம்....வாழ்க்கைமாறுது....காலம் மாறுது எண்டுட்டு கண்டபடி பச்சையெல்லாம் குத்தாதேங்கோ.....  பிறகு எல்லாபச்சையையும் கண்டபடி அழிக்கேலாது.....ஏனெண்டால் சாறி,நகை டிசைன் மாதிரி  இதுவும் மாறிக்கொண்டே வருது....

ஆருக்கு எழுதியிருக்கிரியள் எண்டு விளங்கவில்லை அண்ணா :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேணும் அண்ணோய். பிசியாக இருப்பதால் இங்கே நனைக்க வரவில்லை. இதில் எதை எழுதினாலும் நீங்கள் எங்கள் கருத்தில் உள்ள நியாயத்தை அல்லது உரிமை மீறலை புரிந்து கொள்ளப்போவதில்லை. புரிந்து கொள்ளாது தொடர்ந்தும் நீங்களே சரியென்று நிற்கும் பெரும்பான்மை கருத்துக்கு பதில் எழுதி எனது நேரத்தை வீணாக்குவதில் எந்த வெற்றியும் வந்துவிடாது அதனால்தான் விலகிக்கொள்கிறேன். இதைக்கூட நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே திரும்பவும் இங்கு வந்துள்ளேன்.

நீங்கள் கோழிகளைத்தான் பார்த்திருக்கிறீர்கள் இதுவரையில: பெண்களைப் பார்க்கவில்லை. ஆக ஆறறிவு கொண்ட பெண்ணைவிட 5அறிவு கொண்ட பேசத்தெரியாத கோழிகளைப் பார்த்த பாதிப்புக்கான பலனும் உங்களுக்கானதே.

உங்களிப்போன்ற ஆறறிவு கோழிகளை விட இரண்டு சிறகைக்கொண்ட கோழிகள் எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கின உண்மையை சொல்லி பூரிக்கட்டையால் அடிவாங்க முடியாது என்பதால் கருத்தை தவிர்க்கிறேன் :D

அடே தம்பி அஞ்சரன் இதையே மறுதரப்பு கருத்தாக எடுத்துக் கொள்கிறேன். :lol:

Spoiler

  :D
அமைதியான அழகான பதிலுக்கு நன்றி. உங்கள் கருத்தில் பல நிஜங்கள் இருந்தாலும்......பெண்ணுரிமைப்பிரச்சனைகள் பொருளாதாரம் பின் தங்கிய நாடுகளில் மட்டுமே தலை விரித்தாடுகின்றது. பொதுவாக எம்மவர் புலம்பெயர்ந்து வாழும் மேலைத்தேய நாடுகளில் (எங்கடைசனம் பேய்க்காயள்) தங்கள் பெண்ணுரிமைபற்றி வாதாடுகின்றார்களா? அவுஸ்ரேலியா,அமெரிக்கா,கனடா(ஓ..மைகாட்)இங்கிலாந்து,நியூஸ்லாந்து,ஒல்லாந்து,சுவிற்சலாந்து,ஜேர்மனி(சைஸ) டென்மார்க்,நோர்வே,சுவீடன் இன்னும் பல நாடுகளை சொல்லலாம்.அங்கே  தங்கள் பெண்ணுரிமைபற்றி ஏதாவது கதைக்கின்றார்களா? போராடுகின்றார்களா? இல்லையே!!!!! ஏன்?
 இதேநேரம் இத்தகைய நாடுகளில் அவரவர் வாழ்க்கை முறைகளையும் சிறிது சிந்தியுங்கள்.
 
இன்னுமொரு விசயம்....வாழ்க்கைமாறுது....காலம் மாறுது எண்டுட்டு கண்டபடி பச்சையெல்லாம் குத்தாதேங்கோ.....  பிறகு எல்லாபச்சையையும் கண்டபடி அழிக்கேலாது.....ஏனெண்டால் சாறி,நகை டிசைன் மாதிரி  இதுவும் மாறிக்கொண்டே வருது....

ஒரு ஜேர்மன்காரன் ஒரு குழந்தைக்குத் தகப்பனாக எவ்வளவுதூரம் பயப்படுகிறான் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?!  :o  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.