Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் அடுத்த வீடியோ .

Featured Replies




நான் பார்க்கவில்லை. செஞ்சோலை K.P.யின் கோட்டை. அங்கு எந்த படமும் எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அர‌சின் வீடியோவில்.... உண்மை எதுவும், இருக்காது என்ற‌ ப‌டியால்....நானும் பார்க்கவில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த திரிக்கே வரேல்லப்பா

  • கருத்துக்கள உறவுகள்

அர‌சின் வீடியோவில்.... உண்மை எதுவும், இருக்காது என்ற‌ ப‌டியால்....நானும் பார்க்கவில்லை.
 


ஆனால் அர்யூன்  அண்ணா

மிகவும் உன்னிப்பாக கவனித்துப்பார்த்திருப்பார்

அவருக்கு என்ன தேவையோ

அவை  இங்கு கிடைக்கும் :(  :(  :(

  • தொடங்கியவர்

எல்லாவற்றயும் உன்னிப்பாக பார்ப்பதுதான் எங்கள் வேலை ,

வன்னியில் மட்டும் அல்ல புலம் பெயர்ந்தும் பலர் பங்கருக்குள் இருந்ததாகத்தான் உலகம் சொல்லுது .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றயும் உன்னிப்பாக பார்ப்பதுதான் எங்கள் வேலை ,

வன்னியில் மட்டும் அல்ல புலம் பெயர்ந்தும் பலர் பங்கருக்குள் இருந்ததாகத்தான் உலகம் சொல்லுது .

 

 

நீங்கள்  சிறிலங்கா அரசின் ஊதுகுழல் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றீர்கள்.

பாலச்சந்திரனின் காணொளியை அரசினதோ , ஒட்டுக்குழுக்களின் தளங்களிலோ போட முடியுமா என சிந்தியுங்கள்.

இவர்கள்  காட்டுவதை  ஒருவரும் நம்ப மாட்டார்கள். ஏதோ சனல்4 தமிழருடையது  போல் தான் சிங்களவன் கருதுகிறான்,

 

அதுதான் தானும் எடுத்து விடாறான். மோடையன்

  • தொடங்கியவர்

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டேன்று சொன்ன கதைதான் .

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது இல்லாத புலிகளை பற்றி பேசி என்ன ஆக போகின்றது? இப்பொழுது உலகம் கேட்கும் கேள்வி சரி புலிகள் அப்பிடி செய்திருந்தாலும் ஒரு அரசாங்கம் எப்பிடி இப்பிடியான ஒரு கீழ்த்தரமான தீவிரவாதத்தை விட கேவலமான படுகொலைகளை நிகழ்த்தி இருக்க முடியும்? Tell me Arjun Anna tell me

  • தொடங்கியவர்

தம்பி சுண்டல் இப்படியான கேவலமான அரசாங்கத்தை அமத்த முடியாமல் இருப்பதே அதற்கு மேலாக புலிகள் செய்த அலுவல்கள்தான்.

தமிழனுக்குள் ஒற்றுமையும் இராஜதந்திரமும்  இருந்திருந்தால் எப்பவோ இந்தியாவை கொண்டோ அல்லது பின்னர் சர்வதேசத்தை கொண்டோ சிங்களவனை ஒரு கை பார்த்திருக்கலாம் .

எல்லாரும் கண்ணை மூடினால் எப்படி?

 

திறமையாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இதுவும் ஆவணப்படுத்தப் படும். பிறகு தமிழர்களுக்கு எதிராகப் பாவிக்கப்படும். போர்க்குற்றம் தொடர்பான சனல் 4 இன் பரப்புரை தமிழர்களுக்கு ஆதரவைத் தந்த மாதிரி இது தமிழர்களுக்கு எதிராக முடியலாம். 

   

கதிர்காமர் ஊர் ஊராய் போய் இராசதந்திர நடவடிக்கை செய்த போது கண் மூடி இருந்த மாதிரிதான் முடியும்.

(ர)சி(னி)ன் அடுத்த வீடியோ. எண்டுட்டெல்லே இஞ்சை வந்தன்.. :D

நாங்கள் Channel-4 போடுறதை மட்டும் தான் பார்ப்போம்.... எங்களுக்கு சாதகமா எதாவது கொண்டுவந்து போடுங்கோ.... அதுக்கு பிறகு பாருங்கோ எங்கட commentsஐ ..... எங்களுக்கு கசகுறதை ஏன் வேலைமெனக்கிட்டு பார்க்கிறோம்...

எல்லாவற்றயும் உன்னிப்பாக பார்ப்பதுதான் எங்கள் வேலை ,

வன்னியில் மட்டும் அல்ல புலம் பெயர்ந்தும் பலர் பங்கருக்குள் இருந்ததாகத்தான் உலகம் சொல்லுது .

காட்டிக் கொடுக்கவும் கழுத்தறுக்கவும் சிலர் இருக்கும் போது பங்கருக்குள் பதுங்குவதில் தப்பில்லையே!

நான் பார்க்க விரும்பவில்லை ,அரசிடமிருந்து  ஒன்றும் கிடைக்காமலா இதை கொண்டு வந்து நேரம் செலவழித்து போடுறாங்கள் ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றயும் உன்னிப்பாக பார்ப்பதுதான் எங்கள் வேலை ,

வன்னியில் மட்டும் அல்ல புலம் பெயர்ந்தும் பலர் பங்கருக்குள் இருந்ததாகத்தான் உலகம் சொல்லுது .

 

அண்ணே வடிவா உத்து  உத்து பாருங்கோ.....
கனநாளாய் சோபா சுத்தி புத்தகம் ஒன்றும் எழுதவில்லை. ஈழந்தில் என்ன நடந்தது என்று நீங்களும் ஈழ விடுதலை போரை பற்றி அறிய தானே வேண்டும்.
அப்பதானே இங்கே அரசியல் விமர்சனம் செய்யலாம்.
சிங்களவன்  படம் காட்டினால்தான் உங்களுக்கு வன்னியில் என்ன நடந்தது என்று தெரியும். எங்களுக்கு அந்த குறைபாடு இல்லை .......... ஒட்டுமொத்த உறவுகளும் அங்குதான் இருக்கிறார்கள்.
 
நாங்கள் இந்த உலகம் என்ற பங்கருக்குள்ளேயே வாழ்ந்துட்டு போகிறோம்.
 
கற்பனைகளில் வாழ்க்கை ஓட்ட ............. எமது வாழ்க்கை அப்படி அமையவில்லை.
தமிழருக்கு பிள்ளைகளாக பிறந்தவர்கள் நாங்கள். உண்மைகளை எளிதாக கடக்க முடியாது.

எல்லாவற்றயும் உன்னிப்பாக பார்ப்பதுதான் எங்கள் வேலை ,

வன்னியில் மட்டும் அல்ல புலம் பெயர்ந்தும் பலர் பங்கருக்குள் இருந்ததாகத்தான் உலகம் சொல்லுது .

 

விமர்சனங்கள் இருந்தாலும் போராளி இயக்கங்களுக்குள் நேர்மையும் அர்ப்பணிப்பும் கட்டுக்கோப்பும் இருந்தது புலிகளிடம் தான். அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், கடமை கண்ணியம் தவறிய இயக்கங்களிடம் இருந்ததில்லை... இருக்க போவதுமில்லை! கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் தான் வைகுண்டம் போயின்னு முன்னோர் சும்மாவா சொன்னாங்க! :mellow:

  • தொடங்கியவர்

விமர்சனங்கள் இருந்தாலும் போராளி இயக்கங்களுக்குள் நேர்மையும் அர்ப்பணிப்பும் கட்டுக்கோப்பும் இருந்தது புலிகளிடம் தான். அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், கடமை கண்ணியம் தவறிய இயக்கங்களிடம் இருந்ததில்லை... இருக்க போவதுமில்லை! கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் தான் வைகுண்டம் போயின்னு முன்னோர் சும்மாவா சொன்னாங்க! :mellow:

வீடியோ பார்க்கவில்லையா ? அல்லது விளங்கவில்லையா ? அல்லது அந்த முன்னாள் போராளி பொய் சொல்கின்றாரா ?

அதில் தெரியுது பக்குவம் ,கடமை ,கண்ணியம் எல்லாம் .

காயப்பட்டவர்களை பஸ் உடன் வைத்து கொழுத்தியது பதிவில் இருக்கு அண்ணை .

இங்கு அர்ஜுன் அண்ணாவை  வலிந்து இழுத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் நீங்கள் எத்தனை நாட்கள் சா .....  மணித்தியாலங்கள் விடுதலைப் புலிகளில் இருந்து நாட்டுக்காகப் போராடினீர்கள்??  


"எதிரிகளை விடத் துரோகிகளே ஆபத்தானவர்கள்" - தலைவர் வே. பிரபாகரன்


(யாரையும் குறிப்பிட்டுக் எழுதவில்லை போதுவாகவே எழுதுயுள்ளேன் எனவே சண்டைக்கு வரவேண்டாம்  :) )

  • கருத்துக்கள உறவுகள்

 அந்த முன்னாள் போராளி பொய் சொல்கின்றாரா ?

 

 

முதன் முதலாக

ஒரு புலி  பொய் சொல்லாது என்று எழுதியுள்ளீர்கள்

நன்றி....... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ பார்க்கவில்லையா ? அல்லது விளங்கவில்லையா ? அல்லது அந்த முன்னாள் போராளி பொய் சொல்கின்றாரா ?

அதில் தெரியுது பக்குவம் ,கடமை ,கண்ணியம் எல்லாம் .

காயப்பட்டவர்களை பஸ் உடன் வைத்து கொழுத்தியது பதிவில் இருக்கு அண்ணை .

 

 

புளட்டில் கோரக்கொலைகள் புரிந்து கொல்லப்பட்ட போராளிகளை நீங்கள் பார்த்துக்கொண்டு இருந்துள்ளீர்கள்.காரணமாக இருந்தீர்களோ தெரியவில்லை. உங்களையும் புலன் விசாரணை செய்ய வேண்டி உள்ளது. 

  • தொடங்கியவர்

அப்படி எல்லாம் இருந்திருந்தால் இப்படி சந்தியில் வந்து படம் போட்டு எழுத முடியுமா என்ன ?

எவரிடம் கேட்டாலும் அண்ணை அந்த மாதிரி என்ற பதில் வரும் என்ற துணிவுதான் .

டயரியில் எழுதாத பக்கங்கள் இன்னமும் பல இருக்கு நுணா .

இணைப்புக்கு நன்றி அர்ஜுன்.

 

சிங்களம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் சிந்தித்து எடுத்து வைக்கும் அடிகளாகத்தான் தெரிகின்றன. அவற்றுக்கான counter actions தேவையான காலத்தில் கண்டிப்பாக இவற்றினை பார்த்து அவர்களின் பிரச்சாரங்களை அறிதல் வேண்டும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி அர்ஜுன்.

 

சிங்களம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் சிந்தித்து எடுத்து வைக்கும் அடிகளாகத்தான் தெரிகின்றன. அவற்றுக்கான counter actions தேவையான காலத்தில் கண்டிப்பாக இவற்றினை பார்த்து அவர்களின் பிரச்சாரங்களை அறிதல் வேண்டும்.

 

 

முள்ளி வாய்க்காலில்  இருந்த மருத்துவர்களின் தகவல்படி ..... இறுதி நேரத்தில் அங்கே 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட கயப்ட்ட மக்கள் இருந்திருக்கிறார்கள். திரைப்படம் காட்டவும் ....
மருத்துவ உதவி என்ற பெயரில் திருகோணமலையில் இந்தியா அமைத்து வைத்திருந்த உளவு மருத்துவ சேவைக்கு விசாரணைக்கு கொண்டு செல்லவும் ஒரு 3000 வரையான கயபட்டவர்கள் கொண்டு செல்ல பட்டிருக்கிறார்கள். மிகுதி பேருக்கு என்ன நடந்தது என்ற தெரியவில்லை.
 
இப்போ மேலே அர்ஜுன் (உண்மை உலகில் வாழுபவர்) அவர்கள் எழுதியிருக்கிறார் பஸ் ஒன்று எரிவது சிங்கள இராணுவத்தால் காட்சி படுத்த பட்டுள்ளதாம். தமிழ் மக்கள் மீது சிங்கள் இராணுவம் எவளு கருசனையுடன் இருக்கிறார்கள் என்று வியந்து நிற்கின்றார்.
(உண்மை உலகில் புலிகள் 1983 ஆம் ஆண்டில் இருந்து செய்த கொடுமைகள் உங்களுக்கு நான் எழுத தேவை இல்லை. வாசித்து மெய்யான மெய்களை வெட்டும் வேலை காரணமாக உங்களுக்கே அதிகள் தெரியும்)
 
உங்களுடைய எண்ணம் அறிவு சார்ந்தது எனினும்.
இது உண்மை உலகில் இருக்கும் நபர்களுக்கு அவலாக இருக்குமே தவிர. நீங்கள் எண்ணும்  எண்ணங்களுக்கு ஒருபோதும் உதாவது.
ஒட்டுமொத்த இனத்தின் வலியை ஓரிருவர்தான் சுமக்கிறார்கள். இந்த பாவ சுமையை சுமப்பவர்களுக்கு  சுமையின் கனம் தெரியும். அதை வீடியோ காட்சிகளில் பார்க்க வேண்டிய தேவை  அவர்களுக்கு இல்லை. உண்மை உலகில் வாழுபவர்களுக்குதான்  காட்சிகள் தேவை.
 
இந்த திரியிலேயே இதன் தாக்கங்கள் தெரிகிறது.....
மேலே தனது உயிரை நாட்டுக்கு தாரைவார்த்த ஒரு கருப்ம்புலி வந்து கேட்டிருக்கிறார். இங்கே இருக்கும் எத்தனை பேர்  புலிகளுடன் இருந்து போராடினீர்கள்? என்று.
போராடாத  காரணத்தால்............. அர்ஜுன் சொல்லும் உண்மைகளை வாயை  பொத்தி கொண்டு  கேளுங்கள்  என்பதன் இன்னொரு  பொருளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
 
காயபட்ட போராளிகளை புலிகள்  எரித்து விட்டார்களாம் ...........
காயப்பட்ட போராளிகள் மேல் எவளவு  கருணையாக இருக்கிறார் என்று பார்த்தீர்களா?
அவர்கள் கயபாடாது இருந்திருப்பின்......... அவர்கள் இறக்க வேண்டியவர்கள்  என்று அதே கையால்தான்  திரிக்கு திரி எழுதிவருகிறார்.
இவருக்கு இப்போ என்ன கவலை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுதான்.
 
தனது மனைவி பிரவச வலியால் துடிக்கிறாள் .....
துடித்தவள் பிள்ளை வெளியில் வருமுன்பே மயக்கம் அடைகிறாள். பல மணிநேரம் வலியால்  துடித்தவளின் உணர்வுகள் குறைய தொடங்குகிறது. தனது அருமை தனக்கு ஒரு வாரிசு  தர நினைத்து தன்னையும் அழிக்க போகிறது என்று ............ ஜூலியஸ் சீசர் துடிக்கிறான். எந்த முன் அனுபவமோ உலகில் வேறு எங்கும் அப்படி நடந்தே இருக்காத ஒரு முடிவை  எடுத்து   தனது வாளால் மனைவியின்  வயிறை வெட்டி பிள்ளை எடுத்துவிட்டு . வெட்டிய வயிறய் தனக்கு தெரிந்த மாதிரி  தைத்து பொருத்தி மனைவியின் உயிரை  காப்பாற்ற போராடுகிறான். உலகில் அதிசயம் நிகழ்கிறது  மனைவியும் பிள்ளையும்  தப்புகிறார்கள்.
இன்று இந்த உலகில் சிசரியன் செய்து எத்தனை இலட்சம் குழந்தைகள் வாழுகின்றார்கள் .
 
கொடுப்பதற்கு உணவில்லை ........... மருந்தில்லை ............. கயபட்டவர்கள் கதறிக்கொண்டு இருந்திருப்பார்கள். போராளிகளுக்கு  அவர்களின்  அடுத்த நிமிடத்தின் நிலை என்ன என்று  தெரியாது. போராளிகளின் மனதை மனித குணாம்சம் உள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியும். புலிகள் சண்டையில் தனது அருகில் இருக்கும் போராளி காயபட்டால்  ஓடி சென்று முதல் செய்யும் வேலை  அவர்களின் சயனட்டை பறித்து எடுப்பதாகும். மிகுந்த வலியால்  அவர்கள் தற்கொலை செய்துவிடுவார்கள் .............. சிலர் செய்திருக்கிறார்கள் அதன் படிப்பினையாகத்தான்  அதை செய்து வந்தார்கள். 
ஆயுத போர் என்றால் .......... உண்மை உலகில் படங்களிலும் சோபா சுத்தி எழுதும் புத்தகத்திலும்  வாசித்து தெரிந்த மிருகங்கள். 
இதை அவலாக காவிதிரிகின்றது.
 
அந்த காட்சி உண்மை பொய் என்ற வாதம் எனக்கும் உங்களுக்கும் தேவை இல்லை. அப்படி ஒன்று  நடந்திருந்தால் கூட ............. எரிந்தவனின் வலியும். எரித்தவனின் வலியும். எங்களுக்கு தெரியும் .............. இருவருமே  நானும் நீங்களும் வாழவேண்டும் என்றுதான் இன்று  சாம்பல் கும்பிகளாக குவிந்து கிடக்கிறார்கள்.
 
இந்த பாழ்பட்ட இனம் இதை பார்த்து ............
இதற்கு எதிராக எதையாவது செய்யும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எங்கிருந்து வந்திருக்கும் ? என்று யோசிக்கிறேன் ............. எனக்கும் அப்படி ஒரு நம்பிக்கை வேண்டும்.
எப்படி முயற்சித்தாலும் ஒரு துளிகூட வரவில்லை.
 
நாங்கள் என்ன பாவம் செய்தோம் தெரியாது .............. தமிழராக பிறந்துவிட்டோம்.
செய்பவர்கள் ............
செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இப்படி ஒரு படம் வரும்  என்பது ஏற்கனவே தெரிந்ததுதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.