Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரும் உலகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புளியங்காய் ஒட்டு பட்டம்...பார்த்து 28+ வருடங்கள்....

 

பிரம்பு, வடலி விண் எல்லாம் கிளாசிக் சமாசாரம்..

 

நான் உரப்பை விண் தான் உபயோகபடுதியது...

 

மார்கழி விடுமுறையே எப்படி போகிறது என்று தெரியாது......

 

உரப்பை விண்ணிலே டபிள் நார் போட்ட பழக்கம் இருக்கா? நாங்கள் கூவக்கட்டயை கொஞ்சம் நீளமாக வெட்டி டபிள் நார் போடுவோம். ஒவ்வொரு நாரும் ஒவ்வொரு தொனியில "கதறும்" - டேர்மினோலஜி .

 

  • Replies 103
  • Views 23.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாழ் இந்து மைதானத்துக்குள்தான் பட்டம் ஏற்றுவது. எட்டுமூளைப் பட்டம்தான் அதிகமாய் செய்வது. ஒரு ஆள் உயரத்துக்கு.அதை அந்தச் சிறியமைதானத்துள் வைத்து ஏற்றுவதே ஒரு டெக்னிக்தான். பின் அதை வீட்டடிக்கு கொண்டுவாறது ஒரு பெரிய கலை. கிரவுன்ட்ஸ்  மதிலுடன் டெலிபோன் போஸ்டுடன் வயர் போகும். அதன்மேலால்  நூல் பந்தை எறிந்து பின் வீதியில் வைத்து அதைமாத்தி கொண்டுவந்து வேலி மரத்தில் கட்டுவது.அது இரவிரவாக வின் கூவிக்கொண்டிருக்கும். :rolleyes::D

 

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சுவாரசியமான திரியும், பதிவுகளும் யாழ் மாவட்டதைப்பற்றி அறியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் உங்களின் வட்டாரச் சொற்கள்தான் சுட்டும் பொருளை பிரித்தறிய குழப்பமாக இருகிறது.

 

ஈழத்தின் பிற பகுதிக்காரகளும் - பொத்துவில்,கதிகாமம் வரை அறிந்தவர்களும் இங்கே எழுதினால் நாங்களும் ஈழம் பற்றிய ஒரு முடிவிற்கு வருமில்லையா? :)

 

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் பட்டம் விடுவதிலுள்ள பல அரிய சூட்சுமங்களைச் சொல்லியுள்ளீர்கள். பிராந்து, கொக்கு கட்டுவது இலகுவானதல்ல. நான் ஒருபோதும் கொக்கு கட்ட முயற்சிக்கவில்லை. அதற்கு சிம்புகளைக் கட்டுவது என்பது மிகவும் கடினமான விடயம்.

பிராந்து நீங்கள் சொல்லியபடிதான் கட்டுவது. நேரான பூவரசம்தடியை வெயிலில் காயவைத்தும் குப்பைக்குள் சுட வைத்தும்தான் முள்ளந்தண்டை சரிக்கட்டவேண்டும். நான் வார்னீஸ் போட்டு ஒட்டியதில்லை. ஆனால் சிவப்புப் பட்டத்தாளையும், நீலப்பட்டத்தாளையும் இரண்டு அடுக்காக ஒட்டி ஊதாக் கலரை உருவாக்குவேன். சாடையாகத் தண்ணிகாட்டி காயவிட்டால் ஒட்டு இறுகிவிடும்.

பிராந்துக்கு முச்சை கட்டுவது, சரித்தால் அதற்கேற்ப முச்சையைத் திருத்துவது, தலைப்பாரம் கூடினால் "பெல்லி" வைத்துக் கட்டுவது என்று எத்தனையோ நிபுணத்துவங்களை எல்லாம் பழகித்தான் இருந்தோம். பிராந்தை இன்னொரு பட்டத்துடன் தொடுத்து ஏற்றுவது தெரியும். ஆனால் நாங்கள் அப்படி ஏற்றுவதில்லை. இதற்கென்றே பட்டம் பிடித்துவிட சிறுவர்களைப் பழக்கி வைத்திருந்தோம் :) மேலும் தங்கூசி பாவித்ததில்லை. அதை வாங்குமளவிற்கு காசு இருப்பதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சுவாரசியமான திரியும், பதிவுகளும் யாழ் மாவட்டதைப்பற்றி அறியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் உங்களின் வட்டாரச் சொற்கள்தான் சுட்டும் பொருளை பிரித்தறிய குழப்பமாக இருகிறது.

 

ஈழத்தின் பிற பகுதிக்காரகளும் - பொத்துவில்,கதிகாமம் வரை அறிந்தவர்களும் இங்கே எழுதினால் நாங்களும் ஈழம் பற்றிய ஒரு முடிவிற்கு வருமில்லையா? :)

 

நன்றி.

வட்டாரச் சொற்கள் அதிகம்தான். அவை இல்லாமலும் எழுதுவது கடினம். எங்களூர் வட்டாரச் சொற்கள் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளில் இருப்பவர்களுக்கும் புரிவதில்லை.

நேரம் கிடைக்கும்போது வட்டாரச் சொல்லகராதியை அடிக்குறிப்பில் இடுகின்றேன்.

எனக்கும் பிறபகுதிகளைப் பற்றி அறியவேண்டும் என்ற விருப்பம். அதனால்தான் தொடக்கி வைத்தேன். ஆனால் எல்லாரும் பம்முகின்றனர்!

  • கருத்துக்கள உறவுகள்

நகரை என்ற பெயரை நினைவுபடுத்தியதற்கு நன்றி அகஸ்தியன். எங்கோ பக்கத்தில்தான் இருந்திருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது!!

பெரும்பாலும் நீங்கள் சொல்லும் பட்ட டெக்னிகல் சொல்லுகளே நாங்களும் சொல்லுறுது.

ஆமி பிரச்னை காலத்தில் 751 பேருந்து ஓடுவதில்லை, உங்கட ஊருக்காலை போய் தான் குஞ்சர்கடையில் 750 எடுத்து யாழ்ப்பாணம் போய் வருவோம். குஞ்சர்கடை சந்திக்கு போக முன் ஒரு வீட்டிலை சைக்கிளை விட்டுவிட்டு போவம், முன் பின் அறியாதவர்கள் நல்லவர்கள்.சில வேளைகளில் சைக்கில் இல்லா விட்டால் நடைதான். 750 பஸ்சிலும்

23 ஸ்ரீ வசந்த மாளிகை பஸ்ஸை ராசையா அண்ணை ஓடும் அழகே தனி அழகு.

சாரம் அவிண்டாலும் பட்ட நூலை கை விடோம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை போன போது மினகெட்ட பட்டம்.

 

CYMERA_20131210_182833.jpg

தும்பளையான் உங்கள் யாழ் பயண போட்டோக்கள் நன்றாக இருந்தன, அதில் சில பட்டங்களையும் இணைத்து இருந்தீர்கள், இந்த படம் ஒரு ஆள் அளவு உயரம். இதுக்கு நைலான் நூல் பாவித்தால் கையை வெட்டும், குறுலோன் நூல்தான் நல்லது, ஆனால் விலை கூட.

பட்டம் ஊமையாக உள்ளது, விண் பூட்ட வில்லையா ?

உரப்பை விண்ணிலே டபிள் நார் போட்ட பழக்கம் இருக்கா? நாங்கள் கூவக்கட்டயை கொஞ்சம் நீளமாக வெட்டி டபிள் நார் போடுவோம். ஒவ்வொரு நாரும் ஒவ்வொரு தொனியில "கதறும்" - டேர்மினோலஜி .

 

 

நான்  double நார் போட்டது இல்லை..ஆனால் நண்பர்கள் செய்ய பார்த்திருகின்றேன் ...

கடந்த கிழமை தமிழ்மணம் வலைபதிவில் ஒருவர் தென் தமிழ்நாடில் விடும் பட்டம் என்று ஒரு கோபுர வடிவில் பட்டத்தின் படம் போடிருந்தார்...அந்த பட்டத்தில் வால் எங்களது முறையில் இருந்தது...மற்றும் அவரும் மார்கழியிலே பெரும்பாலும் தாங்களும் பட்டம் விட்டதாக எழுதியிருந்தார்...எங்களது வகை பட்டங்களை நான் இந்தியாவில் (சென்னையில்) இருக்கும் வரை கண்டது கிடையாது...(சென்னையில் வாலாகொடி மாதிரி ஒரு பட்டத்தை ஏற்றி.. நூலில் glass தூள் தடவி ஆட்களை கொல்லுவது தான் மிச்சம்)

 

நீங்கள் பருத்தித்துறையில் இருந்த பொது யாரும் light  பூட்டி பறக்க விட்டார்களா..(இப்போது LED, அது ..இது என்று "ரெக்னோலொயி" ரொம்ப முன்னேரிட்டுது... :) -- பெடியளுக்கு நல்ல அட்டகாசமாக இருக்கும்)

 

சாரம் அவிண்டாலும் பட்ட நூலை கை விடோம்

 

 

Same Blood !!!

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாரும் எட்டுமூலைப் பட்டம் கட்டுவதில்லையா..! யாழில் அதுதான் பிரசித்தம். மேலே நட்சத்திரம்போல், கீலே நீளமான வண்டி, நடுவில் விளக்குச் சாரளம்போல் ஒரு ஓட்டை இருக்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மூலை கட்டி ஏற்றியுள்ளேன். அதற்கு வாலைக் குறைத்து விண்பூட்டிக் குத்தவிட்டுப் பலருக்கு எரிச்சலைக் கொடுத்திருந்தேன். ஆனாலும் படலம், பிராந்தைப் போன்று அதிகம் எட்டுமூலையுடன் மினக்கெடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் கட்டுவதிலும் இத்தனை டெக்னிக் இருக்கா. நான் பெரிய பட்டங்களைக் கண்ட நினைவில்லை எங்கள் ஊரில். சிலவேளை ஆண்கள்தான் அதை உன்னிப்பாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.கேட்கச் சுவாரசியமாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மூலை கட்டி ஏற்றியுள்ளேன். அதற்கு வாலைக் குறைத்து விண்பூட்டிக் குத்தவிட்டுப் பலருக்கு எரிச்சலைக் கொடுத்திருந்தேன். ஆனாலும் படலம், பிராந்தைப் போன்று அதிகம் எட்டுமூலையுடன் மினக்கெடவில்லை.

கொட்டடிக்காரர் ஒருபக்கம், கோணாந்தோட்டக்காரர் இன்னொருபக்கம், நாவாந்துறைக்காரர் இன்னொருபக்கம்! 

 

எட்டு மூலைப்பட்டம் விடுகிற காலத்தில, 'விண் சத்தம்' ஆக்களை நித்திரை கொள்ள விடாது! :o  

சுவாரஸ்யமான பழைய ஞாபகங்களை மீட்டும்படியாக திரியொன்றை ஆரம்பித்த கிருபனுக்கு மிக்க நன்றி.

 

விதம் விதமான பட்டம் கட்டுவதிலும், பட்டம் ஏற்றுவதிலும் நிறையச் சூட்டுமங்கள் இருக்கு. அதில் நானும் ஒரு விற்பன்னனாக விளங்கினேன் என்பது எனது அந்தக்கால சாதனைதான். :D

மூங்கிலை நன்கு சீவி பண்படுத்தி அளவுத்திட்டங்கள் எல்லாவற்றையும் கவனித்து ஒரு பட்டத்தின் அடிப்படை உருவமைப்பை அமைத்தபின்னர் அதனை அழகுபடுத்துவதற்காக (என்ன 'ஒட்டு' ஒட்டுறது? என்பார்கள் - கண் ஒட்டு, காத்தாடி ஒட்டு, தூண் ஒட்டு , புளியங்காய் ஒட்டு அல்லது டைமன் ஒட்டு, பூ ஒட்டு, நட்சத்திர ஒட்டு, பிரிட்டிஷ் ஒட்டு, எக்ஸ் ஒட்டு, வரி ஒட்டு என பல பெயர்களில் பல விதமான டிசைன்கள் ) விதவிதமான டிசைன்களில் வர்ணத்தாள் வாங்கி ஒட்டி அலங்காரப்படுத்தி... அதற்கு விண் பூட்டி ....

(பெரிய பட்டங்களுக்கு தேக்குமரத்தில் சீவியெடுத்த விண் வில்லையும் பாவிப்பதுண்டு - கூவக்கட்டை எனப்படும் விண் வில்லின் இருபக்கமும் பொருத்தும் கட்டைகள் செய்வதற்கு மிக உகந்தது காய்ந்த முள்முருக்கு மரத்தண்டுதான் ),

(விண் நார் செயவதற்கு வடலி நார், பார்சல் சுற்றி வரும் நாடா , உரப்பை இழைகள், பேப்பர் றிபன், கதிரை பின்னும் இழைகள் என பலவகை

பொருட்களை பாவிக்கலாம் - இதில் குறிப்பாக செப்புக்கம்பியை தட்டி தட்டையாக்கி விண் செய்தால்... அந்த ஏரியாவில உள்ள வயர்லெஸ் தொடர்பு சாதனங்களை பாவிக்க ஏலாதவகையில் கீ... என்ற சத்தம் வரும்  :icon_idea::lol: )

.....வால்கட்டி, முச்சை கட்டி.... ஏற்றி அழகுபார்ப்பதே ஒரு அலாதி அனுபவம். அதிலும் இரவிரவாக பறக்கவிடுவதும் (இராக்கொடி)... மழைவருதா? நார்ச்சத்தம் தொடர்ந்து கேக்குதா? என இடைக்கிடை முழித்து அவதானிப்பதும், விண் நார்ச் சத்தத்தால்  இரவில் தூங்கமுடியாத சனங்கள் எல்லாம் காலையில் புலம்புவதும்.....  பட்டம் அறுந்துசென்றால் நூலோட்டம் பார்த்து தேடுவதும்..... என சுவாரஸ்யமான அனுபவங்களும் நினைவுகளும் இதில் இருக்கு. :rolleyes::lol::wub:

 

வடமராட்சியில் பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறை வரையிலான பகுதியில் ஒக்ரோபர் ஆரம்பம் முதல் - தைப்பொங்கல் நாள் வரைக்கும் (கச்சான் காத்து சீசன் என்பார்கள்) வண்ண வண்ண வடிவில் விதம்விதமான பட்டங்களை பறக்கவிடுவார்கள்.

சென்ற தைப்பொங்கலுக்கும் அங்கு பறந்த பட்டங்களின் புகைப்படங்களை பலர் முகப்புத்தகங்களில் பகிர்ந்திருந்ததைப் பார்க்கையில்... பழைய ஞாபகங்கள் வந்து போயின. மீண்டும் எப்பொழுது அந்த இனிமையான காட்சிகளை நேரில் பார்க்கப்போகின்றோம் என்ற ஏக்கமே எஞ்சி நிற்கின்றன. :(:unsure:

 

 

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் உங்கள் யாழ் பயண போட்டோக்கள் நன்றாக இருந்தன, அதில் சில பட்டங்களையும் இணைத்து இருந்தீர்கள், இந்த படம் ஒரு ஆள் அளவு உயரம். இதுக்கு நைலான் நூல் பாவித்தால் கையை வெட்டும், குறுலோன் நூல்தான் நல்லது, ஆனால் விலை கூட.

பட்டம் ஊமையாக உள்ளது, விண் பூட்ட வில்லையா ?

 

நான் போன கிழமைதான் பட்டத்துக்கு வர்ணம் பூசி முடித்திருந்தார்கள். இன்னும் முச்சையே கட்டியிருக்கவில்லை. முச்சை கட்டிய பின்னர் தான் விசை பூட்ட வேண்டும். காரணம் விசை மாற்றவேண்டிய காரணம் வந்தால் முஷ்சயைக் கழற்ற வேண்டியதில்லை. விசையில் இருக்கும் விண்ணை பட்டம் ஏற்ற முதல் தான் இறுக்கி ஏற்றிய பின்னர் உடனடியாகக் கழற்றி விடுவொம், இல்லாவிட்டால் விசையின் விசை குறைந்துவிடும், நார் ஈஞ்சு விடும். விசையை இறுக்கமாகக் கட்டாவிட்டால் விசை இடம் வலமாக ஓடித் திரியும் இது நடந்தால் "விசை ஓடீட்டுது" என்பார்கள். இப்பிடி விசை ஓடாமல் இருக்க விசையின் நடுவிலே ஒரு சிறிய நூலை இளக்கமாக கட்டி அதனுள்ளே ஒரு சின்ன பூவரசம் குச்சியைப் போட்டு முறுக்கி விசையுடன் சேர்த்து இன்னொரு நூலால் கட்டி விடுவோம் - இதன் பெயர் விசைக்கட்டை.

 

 

நான்  double நார் போட்டது இல்லை..ஆனால் நண்பர்கள் செய்ய பார்த்திருகின்றேன் ...

கடந்த கிழமை தமிழ்மணம் வலைபதிவில் ஒருவர் தென் தமிழ்நாடில் விடும் பட்டம் என்று ஒரு கோபுர வடிவில் பட்டத்தின் படம் போடிருந்தார்...அந்த பட்டத்தில் வால் எங்களது முறையில் இருந்தது...மற்றும் அவரும் மார்கழியிலே பெரும்பாலும் தாங்களும் பட்டம் விட்டதாக எழுதியிருந்தார்...எங்களது வகை பட்டங்களை நான் இந்தியாவில் (சென்னையில்) இருக்கும் வரை கண்டது கிடையாது...(சென்னையில் வாலாகொடி மாதிரி ஒரு பட்டத்தை ஏற்றி.. நூலில் glass தூள் தடவி ஆட்களை கொல்லுவது தான் மிச்சம்)

 

நீங்கள் பருத்தித்துறையில் இருந்த பொது யாரும் light  பூட்டி பறக்க விட்டார்களா..(இப்போது LED, அது ..இது என்று "ரெக்னோலொயி" ரொம்ப முன்னேரிட்டுது... :) -- பெடியளுக்கு நல்ல அட்டகாசமாக இருக்கும்)

 

சாரம் அவிண்டாலும் பட்ட நூலை கை விடோம்

 

 

Same Blood !!!

 

 

இப்போது பூந்தோட்டங்களில் அழகுபடுத்தப் பாவிக்கும் சிறிய சோலர் பனல்கள் சிலவற்றைப் பொருத்தி விடுகிறார்கள். இருண்டா தன்டபாட்டில வெளிச்சம் பத்தத் தொடங்கி விடிஞ்சா அணைஞ்சு விடும். கீழே இருந்து 240V அனுப்பும் ஆபத்தான அரியண்டம் இல்லை. உதென்ன பெரிய விஷயம், சின்னப் பெடியன் ஒருத்தனே "மேல" அனுப்பி வீடியோ எடுத்திருக்கிறாங்கள். 

 

நீங்கள் யாரும் எட்டுமூலைப் பட்டம் கட்டுவதில்லையா..! யாழில் அதுதான் பிரசித்தம். மேலே நட்சத்திரம்போல், கீலே நீளமான வண்டி, நடுவில் விளக்குச் சாரளம்போல் ஒரு ஓட்டை இருக்கும். :)

 

யாழ்ப்பாணத்தில் வசித்த எனது மச்சான் ஒருமுறை ஊர்வந்தபோது கட்டி ஏத்தினோம். நாங்கள் அதை மணிக்கூட்டுப் பட்டம் என்றுதான் கூப்பிடுவோம். அவன்தான் கட்டி, எங்கள் ஒழுங்கிலே கவன் எறிஞ்சு ஏற்றிவிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வின்னை இழுத்துக் கட்ட ரீல்கட்டை பாவிப்போம்...!

 

தும்பளை நீங்கள் சொன்னதுபோல் பழைய சுவர் மணிக்கூடு போல்தன் அது இருக்கும். அந்த பிக்பென் மணிக்கூடு அதிகமாய் எல்லா கொஞ்சம் வசதியான வீடுகளிலும் தொங்கும், இரண்டு மூன்றுநாளைக் கொருமுறை சாவி கொடுக்க வேண்டும்...! :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வின்னை இழுத்துக் கட்ட ரீல்கட்டை பாவிப்போம்...!

 

தும்பளை நீங்கள் சொன்னதுபோல் பழைய சுவர் மணிக்கூடு போல்தன் அது இருக்கும். அந்த பிக்பென் மணிக்கூடு அதிகமாய் எல்லா கொஞ்சம் வசதியான வீடுகளிலும் தொங்கும், இரண்டு மூன்றுநாளைக் கொருமுறை சாவி கொடுக்க வேண்டும்...! :rolleyes::D

எனக்கு இந்த மணிக்கூடு,  அரை மணிக்கு மணி அடிக்கிறபோது ஒரு முறை அடித்துவிட்டு, மணியடிக்கிற காலைத் தூக்கிக்கொண்டு அடுத்த அரைமணித்தியாலம் ஒத்தைக்காலில நிக்கும்! :D

 

அதோட மனியடிக்கிறபோது வாற 'கிர்ர்ர்ர்' சத்தமும் நல்லாயிருக்கும்! :icon_idea:

 

இப்போதைக்குச் சாவி மட்டும் தான் தரலாம்! :rolleyes:

IMAG020A.JPG

  • கருத்துக்கள உறவுகள்

மணிக்கூட்டையும்  இரவலாய்த் தந்தீங்கள் எண்டால் நான் பகலில் மணிபார்த்துவிட்டு  மறக்காமல்  இரவு தந்து விடுகிறேன், பின்பு காலையில் வந்து வாங்குகிறேன்...! :rolleyes::D

இந்த கட்டு கொடி தான் ஏற்றுவதற்கும் அமைப்பதற்கும் கடினமானது...

426914_470983322957758_1548243326_n.jpg

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற பட்டத்தை இப்போதுதான் பார்க்கின்றேன்...! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பட்டம் விட்டுக்கொண்டால் தைப்பூசமும் தாண்டிவிடும். எனவே வேறு ஊர்களையும் அவற்றின் பெருமைகளையும் எழுதுவோமே!

முன்பு ஒருமுறை இந்தப் பதிவில் நான் புகுந்த ஊரைப்பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன் . நான் அங்கு நின்ற நாட்களில் கண்டு கேட்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . இதில் சிலவேளை பிழைகள் இருக்கலாம். யாராவது பருத்தித்துறை வாசிகள் திருத்தினால் நன்றியுடையவனாய் இருப்பேன்.
 

நான் புகுந்த இடம் பருத்தித்துறை , அதில் குறிப்பாக சொல்வதானால் தம்பசிட்டி என்ற சிறிய கிராமம் . பருத்தித்துறை அடிப்படையில் ஓர் துறைமுகப் பட்டினமாகும். ஆரம்பகாலங்களில் இங்கு பருத்தி அதிக அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செயப்பட்டதால் பருத்தித்துறை என்ற பெயர் வந்ததது . இந்த நகரத்தை ஆங்கிலத்தில் "பொயின்ற் பிட்ரோ"  என்றும் அதையே தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து " பீத்துறு முனை " என்றும் சொன்னார்கள்  ஆனால் , ஒல்லாந்து கடலோடியான பெட்ரோ இந்த நகரை கண்டுபிடித்தால் பொயின்ற் பெட்ரோ என்று பெயரிட்டதாக வரலாறு சொல்கின்றது .
 

பருத்தித்துறையும் அதனோடு சேர்ந்த தம்பசிட்டியும் தோசை , வடை , அப்பம் , எள்ளுப்பா போன்ற உணவுகளுக்குப் பெயர் பெற்றது . தோசை என்றால் அதற்கு இடி சம்பல் , பொரி சம்பல் , பச்சைமிளகாய் சம்பல் , சிவப்பு மிளகாய் சம்பல் , தோசைக்கறி போன்றவற்றுடன் பரிமாறுவார்கள் . அதுவும் தோசைக்கறி பருத்தித்துறைக்கே சொந்தமானது ஒன்றாகும்.  அதே போல் அப்பதட்டிகளை இங்கே தான் காணலாம். பழைய பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து அம்மன் கோவிலடியால் செல்லும் பொழுது கல்லூரி வீதி வரை இந்த அப்பதட்டிகள் இருக்கும் . இவை பார்பதற்கு விநோதமானவை. வீட்டு மதில்களில் சிறியளவில் ஒரு ஓட்டை வைத்திருப்பார்கள். மதிலுக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. காசுப் பரிமாற்றமும் , பொருளும் இந்த ஓட்டையினாலேயே நடைபெறும். இந்த அப்பத்தட்டிகள் பருத்தித்துறை பெண்களது அன்றாட பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செயக்கூடியதாக இருந்தது. இப்பொழுது புலத்திலே காணப்படுகின்ற " ட்றைவ் இன் " கள் வர முன்பே பருத்தித்துறையில் அப்பத்தட்டிகள் வந்துவிட்டன என்பது குறிப்பிடத் தக்கது ஒன்றாகும் .

பருத்திதுறை பல கல்விமான்களை உருவாக்கிய நகரமாகும் . அதில் முக்கியமானவர் சதாவதானி கதிரவேற்பிள்ளை ஆவார் . மேலும் இங்கு நான்கு பாடசாலைகள் பிரபல்யமானவை. அவையாவன ஹாட்லி கல்லூரி , வேலாயுதம் மகாவித்தியாலயம் ,  மெதடிஸ் பெண்கள் கல்லூரி , வட இந்து மகளிர் கல்லூரி போன்றவை ஆகும் . பிரசித்தி பெற்ற கோவில்களாக ,  பண்டாரி அம்மன் கோவில் , ஆத்தியடி பிள்ளையார் கோவில் , ஆவோலைப் பிள்ளையார் கோவில் , சிவன் கோவில் , கோட்டுவாசல் அம்மன் கோவில் , பத்திரகாளி கோவில் , வல்லிபுர ஆழ்வார் கோவில் , தொப்பிலாவத்தை வைரவர் கோவில் போன்றவை இருக்கின்றன .

 

9yo3.jpg

 

பருத்தித்துறையில் கடற்கரையோரமாக முனையும் துறை முகமும் உள்ளது . முனை சரியாக ஆண் கடலையும் பெண்கடலையும் இரண்டாகப் பிரிக்கின்றது . கோடைகாலத்தில் இங்கு பட்டம் விடுதல் முக்கிய நிகழ்வு . அதே போல் வல்லிபுரக் கோவில் தீர்த்தத் திருவிழாவும் பிரபல்யமானது . வல்லிபுரக் கோவில் கடற்கரையில் இருக்கும் மண் புட்டிகளைக் கடந்து பெருமாளை கொண்டுவந்து கடற்கரையில் தீர்த்தமாட விடுவார்கள். இது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும் . இங்குள்ள வீடுகள் சிலவற்றுக்கு கடற்கரையில் இருந்தே நேரடியாக படகுகள் , சிறிய ரக கப்பல்கள் வருவதற்குப் பாதைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கின்றேன் .
 

இது பெண் கடல்

 

zut2.jpg

 

இறுதியாக குடிமகன்களுக்கு பிரபல்யமானது கூவில் தவறணையாகும்  :wub:  :D  . கூவில் கள்ளு அடிக்கவே வெளியூர் குடிமகன்கள் இங்கு படையெடுப்பார்கள் :lol:  :D  .

 

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கோ ! பருத்தித்துறையிலும் கூவில் இருக்கா..!  கீரிமலைக்கு அருகேயும் கூவில் உண்டு !

  • கருத்துக்கள உறவுகள்

தம்பசிட்டியில் கண்ணாடி இழைநார் படகு கட்டும் தொழிற்சாலை ஒன்று இருந்தது என நினைக்கிறேன். அங்கே கொட்டப்பட்டிருக்கும் இழை நார்களை எடுத்து வந்து விண்ணில் பூட்டி பட்டம் ஏற்றிய ஞாபகம் சிலருக்கு இருக்கும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

தம்பசிட்டியில் கண்ணாடி இழைநார் படகு கட்டும் தொழிற்சாலை ஒன்று இருந்தது என நினைக்கிறேன். அங்கே கொட்டப்பட்டிருக்கும் இழை நார்களை எடுத்து வந்து விண்ணில் பூட்டி பட்டம் ஏற்றிய ஞாபகம் சிலருக்கு இருக்கும்.. :D

 

உங்கட வீட்டடியத் தாண்டித்தானே கூவில் தவறணைக்குப் போக வேண்டும் அண்ணா? :unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வீட்டடியத் தாண்டித்தானே கூவில் தவறணைக்குப் போக வேண்டும் அண்ணா? :unsure:

அதை பிரதி செய்து கொள்ளுங்கள் தும்ஸ். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.