Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலியில் கன்னியாஸ்திரி குழந்தையொன்றை பிரசவித்தார்: கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை என்கிறார் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் கன்னியாஸ்திரி ஒருவர் குழந்தையொன்றை பிரசவித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சல்வடோரைச் சேர்ந்த 31 வயதான இக்கன்னியாஸ்திரி தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

3842_nun-italy-birth.jpg

கடந்த புதன்கிழமை இவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். 3.5 கிலோ எடையுள்ள இக்குழந்தையும் தாயும் நலமாக உள்ளதாக இத்தாலிய  ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தாலியின் ரெய்ட்டி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் குழந்தையை பிரசவித்தார்.
 
தனது குழந்தைக்கு அவர் பிரான்சிஸ் எனப் பெயரிட்டுள்ளார்.
இத்தாலியில் மிகப் பிரபலமான பெயர்களில் பிரான்சிஸ் ஆகும். புனித பிரான்சிஸ் அடிகளாரின் நினைவாக பலர் இப்பெயரை குழந்தைகளுக்கு சூடுகின்றனர்.
 
மேற்படி கன்னியாஸ்திரி, இத்தாலியின் ரெய்ட்டி நகரில் வயோதிபர் இல்லமொன்றை பராமரித்துவரும் கன்னியாஸ்திரிகள் சபையொன்றை சேர்ந்தவராவார். அவர் குழந்தையொன்றை பிரசவித்தமை குறித்து தாம் பெரும் வியப்படைந்துள்ளதாக அவரின் சக கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.

.
- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=3842#sthash.X2W3TA4K.dpuf

Edited by நியானி

  • Replies 85
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவர் குழந்தையொன்றை பிரசவித்தமை குறித்து தாம் பெரும் வியப்படைந்துள்ளதாக அவரின் சக கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இதிலென்ன வியப்பு? :huh::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கானின் மானம்.. கேய்களாலும்.. பீடோக்களாலும்.. கப்பல் ஏறிக் கொண்டிருக்கும்... இன்றைய நிலையில்.. இப்படி ஏதாச்சும்.. சொல்லித்தானே சனத்தை சமாளிக்கனும்.

கறுமம் கறுமம்... கடவுளின் பெயரால் மனிதர்கள் செய்யுற கண்றாவிக்கு எல்லாம்.. அதிசயம் என்று பெயர் வைச்சிடுறாங்கள்..! பாவம்.. அந்தக் கடவுள்.  :(:icon_idea:

ஒருத்தரும்  durex   இருக்கு என்டு  சொல்லி கொடுக்க இல்லையோ

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின்படி கன்னியாஸ்திரிக்கு கர்ப்பமடைந்ததே தெரியவில்லை. சிலவேளை அவருடன் கூட இருக்கும் மற்ற கன்னியாஸ்திரிகளில் ஒருவர் ஆணாக இருப்பாரோ! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின்படி கன்னியாஸ்திரிக்கு கர்ப்பமடைந்ததே தெரியவில்லை. சிலவேளை அவருடன் கூட இருக்கும் மற்ற கன்னியாஸ்திரிகளில் ஒருவர் ஆணாக இருப்பாரோ! :blink:

அண்மைய  செய்திகளின்படி

அதிகாரத்தில் இருப்பவர்கள் (பிரெஞ்சு ஐனாதிபதி)

மக்களை  நல்வழிப்படுத்தபவர்கள்..........

என எவருமே தான் தோன்றித்தனமாக நடப்பதையே  காணமுடிகிறது

கட்டுக்கடங்காத ஆசைகளும்

படோபரகரமான வாழ்வும்

பணமும்

பதவிகளும்

மனசை  தறி  கெட வைத்து

அவர்களால் சொல்லப்படும்

ஒழுக்கங்களை  அவர்களேலேயே  பின்பற்றமுடியாத நிலையை 

இன்றைய  வாழ்வுமுறை  உருவாக்கி  சீரளிந்து செல்கிறது.

இதன்படி

இந்த சமுகம்

பெரும் மாற்றத்துக்கு தன்னை  ஆளாக்கவேண்டிய தேவையை  இது உணர்த்தி  நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் குழந்தை

  • கருத்துக்கள உறவுகள்
தப்பும், தவறுமாக நினைப்பதை விடுத்து அவர் சொல்வதை உண்மையாக இருக்கும் என நினைத்தால் (தனக்கு தெரியாது என்பதை) வேறு விடயம், (அரசும், பொலிசாரும் பெண்களுக்கு விடும் எச்சரிக்கை) புலப்படும்.
 
spiking the drink எனும் விடயத்தில் கவனமாக இருக்குமாறு மீண்டும் மீண்டும் சொல்லப் படுகின்றது.
 
அப்பாவிப் பெண்களை, பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் கவனம் திசை மாறும் போது அவர்கள் அருந்திக் கொண்டிருக்கும் பானத்தில் (tea, coffe or alcohol drinks) இந்த வகை மருந்தைக் கலந்து மயங்க வைப்பது. 
 
பொது இடத்தில் இருந்தால், போதை கூடி விட்டது, இண்டைக்கு நம்மாளு நிறைய தண்ணி போட்டுவிட்டார், என்று உதவி செய்வது போல தள்ளி கொண்டு தனியிடம் செல்வது, அல்லது தனது அறைக்கு கொண்டு செல்வது.
 
பின்னர் தமது நாச வேலையினை, எதிர்ப்பின்றி முடித்து நழுவுவது அல்லது பொது இடத்திலேய மயக்கம் தெளியும் முன் விட்டு விட்டு நழுவுவது. இதை drugged rape எனும் சொல்வார்கள்.
 
இந்த பெண்ணுக்கும் அவ்வாறு நடந்ததோ தெரியவில்லை.
 
பிரிட்டனில், pub போகும் பெண்களுக்கு, அறிமுகம் இல்லா ஆண்கள் கொண்டு வந்து தரும் பானங்களில் கவனமாக இருக்குமாறும், பானங்களை கையிலேயே கொண்டு, டொயிலட் போவதாய் இருந்தாலும், செல்லுமாறும் சொல்கிறார்கள்.
 
drugged rape குறித்த பெரும் விழிப்புணர்வு உண்ணடாக்கப் பட்டுள்ளது. எனினும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இது மோசமாக உள்ளதாக தெரிகின்றது. இதற்கு முக்கிய காரணம் பாதிக்கப் பட்ட பெண்கள் பெரும்பாலும் முறையிடுவதில்லை. 
 
இங்கு வாழும் எமது பெண்களுக்கு இது குறித்து சொல்லப்பட  வேண்டும். பல்கலைக் கழகங்களில் இது முன்னர் நடந்ததாக சொல்வார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் குழந்தை

அப்ப உந்தக் குழந்தையின் DNA ஐ எடுத்தால் கடவுளின் DNA யை கண்டுபிடிச்சிடலாம் என்றீங்க. மிஸ்டர் & மிஸ்ஸிஸ் கடவுள்.. மாட்டிக்கிட்டார்கள். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை இருந்தால் கலியாணம் கட்டி வாழவேண்டியதுதானே. ஏன் தன்னையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றவேண்டும். தூஊஊ..... இதெல்லாம் ஒரு பிழைப்பு!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உந்தக் குழந்தையின் DNA ஐ எடுத்தால் கடவுளின் DNA யை கண்டுபிடிச்சிடலாம் என்றீங்க. மிஸ்டர் & மிஸ்ஸிஸ் கடவுள்.. மாட்டிக்கிட்டார்கள். :lol::D

நான் எழுத நினைத்தது வேற ,ஏன் சும்மா இருக்கிற நியானியை கூப்பிட்டுவான் எண்டு விட்டிட்டன்  :o  :icon_idea:

கன்னியாஸ்திரிக்கு கற்பப்பை இருக்கு அவா பெத்திட்டு போறா, நாங்கள் ஏன் கவலைப்படுவான். பிள்ளை பெறாமல் இருந்தாபோல் இந்த சமூகம் எதோ நல்ல பெயர் கொடுக்கப்போகுதோ...

அடசும்மா போங்கப்பா ஏதோ நடக்காதது நடந்தமாதிரி.....

இதையேதான் நித்தியும் ரஞ்சிதாவும் செய்தவங்க.

சமூக சிக்கலில் இருந்து தப்பிக்கொள்ள தாம் செய்யும் அசிங்கங்களுக்கு கடவுளையும் மதங்களையும் பாவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி போடுவார்கள்.. நான் கருவுற்றிருந்ததை நான் அறிந்திருக்கவில்லை என்பதுபோல் ஒரு தலைப்பு..

திடீரென்று வயிற்றுவலி வந்து மருத்துவமனையில் சேர்த்ததாகவும அங்கு தமக்குப் பிள்ளை பிறந்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறவர்கள் விவரிப்பார்கள். இது எவ்வாறு சாத்தியம் என்று சிந்திதததுண்டு. ஆனால் மேற்கத்தையோரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களில் சிலரின் அறிவுத்திறன் போன்றவற்றால் இவை சாத்தியமே என்கிற முடிவுக்கு வந்திருந்தேன்.

இந்தக் கன்னியாஸ்திரி விடயத்திலும் இது உண்மையாக இருக்கலாம். அவர் தனக்கு இது எவ்வாறு நேர்ந்தது என்று தெரியவில்லை என்று சொல்வதாக வானொலியில் தெரிவித்தார்கள்.

இந்தமாதிரி மேற்படி சமாச்சாரங்களில் சரியான அறிவூட்டல் கொடுக்காமல் மத விவகாரங்களை மட்டும் பயிற்றுவித்திருந்தால் இது சாத்தியமே.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பிள்ளை. தகப்பன் பெயர் தெரியாமல்... வளரப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாரும் ஆண்கள் எண்டதால ஒரு விடயம் விளங்கவில்லை. ஐந்து மாதங்களில் பிள்ளை கால்களால் உதைப்பதை தாயால் உணர முடியும். பேசாமல் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்யலாம் என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது.

எங்களால் பிள்ளை பெற முடியாவிட்டாலும் :lol: அங்கால இங்கால கண்டு அறிஞ்சு கொள்ளுவமில்ல??!! :wub::icon_idea:

http://www.youtube.com/watch?v=Q5bvlYfdr6c

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி போடுவார்கள்.. நான் கருவுற்றிருந்ததை நான் அறிந்திருக்கவில்லை என்பதுபோல் ஒரு தலைப்பு..

திடீரென்று வயிற்றுவலி வந்து மருத்துவமனையில் சேர்த்ததாகவும அங்கு தமக்குப் பிள்ளை பிறந்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறவர்கள் விவரிப்பார்கள். இது எவ்வாறு சாத்தியம் என்று சிந்திதததுண்டு. ஆனால் மேற்கத்தையோரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களில் சிலரின் அறிவுத்திறன் போன்றவற்றால் இவை சாத்தியமே என்கிற முடிவுக்கு வந்திருந்தேன்.

இந்தக் கன்னியாஸ்திரி விடயத்திலும் இது உண்மையாக இருக்கலாம். அவர் தனக்கு இது எவ்வாறு நேர்ந்தது என்று தெரியவில்லை என்று சொல்வதாக வானொலியில் தெரிவித்தார்கள்.

இந்தமாதிரி மேற்படி சமாச்சாரங்களில் சரியான அறிவூட்டல் கொடுக்காமல் மத விவகாரங்களை மட்டும் பயிற்றுவித்திருந்தால் இது சாத்தியமே.

இந்த  நிகழ்ச்சியை  நானும் பார்த்திருக்கின்றேன்

ஒருவரை  அல்ல

சிலரது அனுபவங்களை  இப்படி பதிவு செய்திருந்தார்கள்

மிக  அண்மையிலும்

ஒரு நாட்டில் (பெயர்ஞாபகமில்லை)

இப்படி நடந்ததை செய்தி  ஊடாகவும  அறிந்திருந்தேன்.

ஆனால்  இங்கு சந்தேகங்களுண்டு

அதேபோன்று

இங்கு சுமே சொல்லும் அனுபவமும் உண்மையே...

அப்படியாயின்............??

நீங்கள் எல்லாரும் ஆண்கள் எண்டதால ஒரு விடயம் விளங்கவில்லை. ஐந்து மாதங்களில் பிள்ளை கால்களால் உதைப்பதை தாயால் உணர முடியும். பேசாமல் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்யலாம் என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது.

அப்பிடி இப்பிடி பார்ட்டிகளில் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலோ அல்லது செமிபாட்டு சிக்கல் இருந்தாலோ இலகுவான வற்று உபாதை ஏற்பட்டு விடும்.

அப்படி இருக்க ஆறுமாதங்கள் பில்லை காலால் உதையும்வரை கற்று இருக்கவேண்டியதில்லை.

இது அந்த அம்மணியின் சுத்த சுத்துமாத்து... நம்பும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி இவா மாதாந்த லீவைக்கூட மறந்து  ,வாயில விரலா வச்சிருந்தவா :icon_mrgreen: .அப்புறம் பிள்ளை வளர்ந்து  ...

மம்மி நான் வளர்கிறேனே எண்டு  சொல்லும்வரைக்கும் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி இப்பிடி பார்ட்டிகளில் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலோ அல்லது செமிபாட்டு சிக்கல் இருந்தாலோ இலகுவான வற்று உபாதை ஏற்பட்டு விடும்.

அப்படி இருக்க ஆறுமாதங்கள் பில்லை காலால் உதையும்வரை கற்று இருக்கவேண்டியதில்லை.

இது அந்த அம்மணியின் சுத்த சுத்துமாத்து... நம்பும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நாங்கள் இதை நம்புவது

நம்பாதது ஒரு புறமிருக்க..

இது போன்ற  நிகழ்வுகள் ஏற்கனவே  நடந்துள்ளன  என்பதையே  பதிவு செய்தேன்.

நான் இப்படிப்பார்த்தேன்

இவர் கன்னியாஸ்திரியாக இருப்பதால் தான்

இவர்கள்

இப்படிப்பட்டவர்கள் தான் என்ற ஒரு முடிவுக்கு நாம் விரைவாக வந்துவிடுகின்றோமோ??

என்று.

இப்படி நாம் முடிவுக்கு வருவோமானால்

புலிகள் பயங்கரவாதிகள் தான்

என்று மகிந்த சொன்னதை உலகம் இவ்வாறு தான்

கண்ணை  மூடிக்கொண்டு ஏற்று 

வாழாவிருந்தது 

ஏனோ  ஞாபகத்துக்கு வருகிறது........... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில்... இருக்கும் போது மித்திரன் பத்திரிகையில் வாசித்த செய்தி இன்று மட்டும் மறக்காமல் உள்ளது.
அப்படி... இவருக்கு நடந்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்கலாம்.

ஒரு குடும்பத்தில், இளைஞர் ஒருவருக்கு... கனவில் சாரத்தில் விந்து வெளியேறி உள்ளது.
அவர் தனது சாரத்தை கிணற்றடியில் உள்ள கொடியில் போட்டு விட்டு, குளித்து விட்டு வேலைக்குப் போய் விட்டார்.
பின் பாடசாலைக்குப் போவதற்காக, அங்கு வந்த தங்கை அந்தச் சாரத்தை கட்டிக் கொண்டு குளித்துள்ளார்.
சில மாதங்களின் பின் அவருக்கு உடலில் சில மாற்றங்கள் உருவானதை... அறிந்து வைத்தியரிடம் போன போது, இவர் கர்ப்பமாகியுள்ளது தெரிய வந்தது. இவர் கட்டிய சாரத்தில் இறக்காமல், இருந்த விந்துகள் இவரின் உடலில் புகுந்திருக்க சந்தர்பம் இருக்கலாம் என்று கருதினார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி சார்.. இது நம்பும்படியாகவா இருக்கு? :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி சார்.. இது நம்பும்படியாகவா இருக்கு? :D

இது நடந்த விடயம்

நானும் அந்த செய்தியை  பார்த்தேன்

அந்த நேரத்தில் பெரும் அளவில் பேசப்பட்டு

காரணமும்   இதுதான் என அறிவிக்கப்பட்ட செய்தி அது.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.