Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்திரி பேசுகிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! நரித்திரியை தொடங்கியது ஏன் என்றால் சாத்திரி தன்னை வெளிக்காட்டி பொது அரசியலில் ஈடுபடும் ஒருவர். ஒரு காலத்தில் அவருடன் நண்பர்களாக இருந்தவர்கள் இப்போது எதிரிகளாக மாறிவிட்டார்கள் என்பதையும் இன்னும் சிலர் விசுவாசிகளாக இருக்கின்றார்கள் என்பதையும் இந்தத் திரியில் உள்ள பின்னூட்டங்கள் சொல்லுகின்றன.

இது தமிழருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கோடு தொடங்கப்படவில்லை. தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராட உயிரைக்கூட துறக்கத் தயாராக இருந்த பலர் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தார்கள் என்பதையும், வெறும் உணர்ச்சிவயப்பட்டுப் போராடப் போனவர்கள் எதைச் சாதித்தார்கள் என்பதையும் இந்தப் பேட்டியில் இருந்து, அதன் உண்மை பொய்களுக்கு அப்பால் அறிந்துகொள்ளலாம்.

தலைவர் பிரபாகரன் எந்தச் சூழ்நிலையிலும் எதிரிகளிடம் இருந்து தப்பிப் பிழைப்பவராகவும் தனது கொள்கையில் அழுத்தமான உறுதியுடனும் பிடிவாதத்துடனும் இருந்தார். அதனால்தான் சரிபிழைகளுக்கு அப்பால் தமிழ்மக்கள் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டனர். அவரின் வழிமுறைகளைப் பின்பற்றியவர்கள் தங்கள் குறிக்கோள்களில் தொடர்ந்தும் தெளிவாக இருந்திருப்பார்களேயானால் முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்குப் பின்னரும் பலம் பெற்று எழுந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவுமே நடக்கச் சாத்தியமாக இல்லை என்பதைத்தான் கடந்த ஐந்து வருடங்களில் தமிழர்களின் அரசியலில் நடப்பவை உணர்த்துகின்றன. அதைத்தான் சாத்திரியின் இந்தப் பேட்டியும் சொல்கின்றது. கப்பல் மூழ்கும்போது அதில் இருந்து தப்பிப் பிழைத்து ஓடும் எலிகள் விசுவாசம், கொள்கை என்பனவற்றை எல்லாம் கடைப்பிடிப்பதில்லை.

 

 

நன்றி.......

  • Replies 143
  • Views 20.3k
  • Created
  • Last Reply

தங்களுக்கு என்று ஒரு ஆறடி நிலம்கூட வேணாம் என்று முகம் தெரியாது எம் மக்களுக்காய் தங்களை அழித்து பெரும் தியாங்களை புரிந்தவன் எல்லாம் இவர்களுடன் ஒப்பிடுகையில் தெய்வத்துக்கு மேல் ..

 

ஒருவரின் கொள்கை செத்து விட்டால் இலட்சியம் செத்துவிட்டதாய் அர்த்தம் இல்லை ...

 

நாம் சரியா உள்ளவரை பாதைகள் வளையாது எங்க பயணங்கள் முடியாது போகுமிடத்தை சேரும்வரை :( :(

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்றால் சாத்திரி தன்னை வெளிக்காட்டி பொது அரசியலில் ஈடுபடும் ஒருவர்//////பொது அரசியல் என்பது விளம்பரம் என்பது வேறு. சாத்திரி தன்னுடைய விளம்பரத்துக்காகவே இதை எல்லாம் செய்கின்றீர்கள் என்றால் மறுப்பீர்களா? யாழ்களமோ, வேறு எங்கோ முகத்தைக் காட்டி கருத்து எழுதுவது என்பது அவரவர் விருப்பம். ஆனால் அதற்காக முகம் காட்டி எழுதுவது என்பது மறுபக்கம் ஏன் விளம்பரம் சார்ந்ததாகவும் இருக்க முடியாது. தனிப்பட்டவிதத்தில் பழகியவர்களுக்கு நான் என்னை மறைத்ததில்லை. ஆனால் அதை பொது இடத்தில் காட்டிச் செய்ய வேண்டும் என்றால் எனக்கு ஒரே ஒரு நோக்கம் விளம்பரமாகவே இருக்கும். வேறு எந்தத் தேவையும் அங்கே கிடையாது.

யோசித்துப் பார்க்கின்றபோது சாத்திரி என்ற நபர் இதுவரை காலமும் யாழில் மற்றவர்களைப் பற்றி நன்றாகவே எழுதியதில்லை. அவலம் தொடக்கம், அனைத்து விடயங்களும் மற்றவர்கள் மீது அவதூறாக எழுதப்பட்ட கருத்துக்களே. அப்படிப்பட்ட பானையில் இருந்து இப்போது வந்ததின் செயலும் அதுவாகத் தானே இருக்கப் போகின்றது. தவிர, சமீபத்தில் பிரான்சில் ஒருவர் நாடு கடத்தப்படும் நிலையைக் கண்டவுடன் இவருக்கும் அச்சம் வந்திருக்குமோ என்னவோ? தன்னையும் ஏதோ தாக்குதலில் சம்பந்தப்பட்டவராக ஊர் முழுக்கக் கதை அளந்து திரிந்தவர், இப்போது திடீரென்று நிறத்தை மாற்றிக் கொள்வதற்கு அதுவே காரணமாக இருக்கும் அன்றி வேறு ஏதுவாக இருக்கக்கூடும்

உண்மையைச் சொல்லப் போனால் மேலே இருந்து எழுதப்பட்ட கட்டுரையும் சரி, கருத்துக்களையும் சரி நுனிப்புல் மேய்ந்தது போலத் தான் படித்தேன். இதனால் யாராவது இதே மாதிரி எழுதி இருப்பின் இக் கருத்தினைத் தவிர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு என்று ஒரு ஆறடி நிலம்கூட வேணாம் என்று முகம் தெரியாது எம் மக்களுக்காய் தங்களை அழித்து பெரும் தியாங்களை புரிந்தவன் எல்லாம் இவர்களுடன் ஒப்பிடுகையில் தெய்வத்துக்கு மேல் ..

 

ஒருவரின் கொள்கை செத்து விட்டால் இலட்சியம் செத்துவிட்டதாய் அர்த்தம் இல்லை ...

 

நாம் சரியா உள்ளவரை பாதைகள் வளையாது எங்க பயணங்கள் முடியாது போகுமிடத்தை சேரும்வரை :( :(

 

அதே

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்கா முதல் அனுராதபுரம் வரை கொளுத்தி விட்டவன் எல்லாம் சும்மா இருக்க நாங்க ஒரு சீனாவெடி கொளுத்தி போட்டுட்டு படுற பாடு இருக்கே .... :D :D

 

சரியா சொன்னீங்கள் :D

எந்த ஒரு பதிவு  அரசியல் கட்சியிலும் பல காலம் இருந்து அதில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டு வெளியேற்றபட்டவர் தான் இருந்த அரசியல் கட்சியைபற்றி படு மோசமாக திட்டுவதே வழமை. இது அரசியல் அறிவுடைய மக்களுக்கு மட்டுமல்ல சாதாரண பாமர மக்களுக்கே புரிந்த விடயம். (

 


1978 ல் எமது மாகாண  சொல்லின் செல்வர் திரு இராஜதுரை அவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியை திட்டோ திட்டு என்று திட்டி பாரிய குற்றச்சாட்டுகளுடன்  அரைமணி நேர பாராளுமன்ற உரையே ஆற்றியிருந்தார்.  அந்த உரையை அதை ஐக்கிய தேசிய கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக உபயோகித்ததது.   பதிவு செய்யபட்ட ஜனநாயக வெளிப்படை தன்மை உள்ள அரசியல் கட்சியிலேயே வெளியே வந்தவர் இல்லாததையும் பொல்லாதையும் சொல்லகிறார் என்றால் ஒரு தலைமறைவு  கெரில்லா  ஆயுத  போராட்ட இயக்கத்தில் உள்ப் பிரச்சனைகளை பற்றி வெளியில் வந்து கதையடிப்பவர் சொல்லவதை எல்லாம் நம்புவதற்கு நாம் என்ன இளிச்சவாயர்களா?

 

தி.மு.க வில் இருந்து வெளியேற்றபட்டவர் தி.மு.க வைதிட்டி பாரிய குற்றசாட்டுகளை அதன்மீது வைத்து  மீண்டும் அதிமுகவில் இருந்து வெளியேறும்போது அதிமுக வை திட்டி அதன் மீது பயங்கர குற்றசாட்டுகளை வைத்து   மீண்டும் திமுகவிலை செருவது தமிழக அரசியலில் சாதாரணம். அது போல் ஒன்று தான் இதுவும்.  ஒரு இயக்கதில் இருந்து வெளியேறி அடுத்த இயக்கத்திற்கு சென்றவர் மீண்டும் முதல் இருந்த இயக்கதில் சேரலாம் என்ற நிலை இருந்திருந்தால் திமுக அதிமுக போல நகைச்சுவைகளை நாமும் பார்த்திருப்போம். அநேகமாக சாத்திரியும் அந்த நகைச்சுவை கோமாளிகளில் ஒருவராக இருந்திருப்பார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலிகள் மீது குற்றஞ் சாட்டும் சாத்திரி அவர்கள் உண்மையிலேயே திருந்தி விட்டாரென்றால் இப்படிப் பேட்டி எல்லாம் கொடுக்காமல் நான் மனுக்குலத்திற்கெதிரான குற்றங்களைச் செய்தேன் என்று பிரான்ஸ் நாட்டுப் பொலிசில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைக் கொடுத்துச் சரணடைய வேண்டும்.மேலிடம் கட்டளை இட்டால் அதனை ஆராயாமல் செய்து விட்டு கட்டளையை நிறைவேற்றினேன் என்று சொல்லித்தப்பவதற்கு அவர் ஒன்றம் பால்கடிப் பரவத்தில் பொய் இயக்கத்தில் சேரவில்லை.

அல்லைக்கை..நொல்லைக்கை எல்லாம் சுட்டது நாங்கதான் என்று வாக்குமூலம் கொடுக்கிறம் அதைவிடுங்கோ நீங்கள் கெட்டிக்காரர் என்று ஒப்பு கொள்ளுறம் அதோட சேர்த்து ..பிரேமதாசவை போட்டம் ..ராஜீவை போட்டம் என்றும் ஒரு ஒப்புதல் கொடுத்தா சட்டுபுட்டு என்று கேஸை மூடிட்டு அவன் அவன் தங்கள் அலுவலை பார்ப்பன் எல்லே ...

 

பிறகு வந்து இந்த கட்டத்துக்கு நித்திரை என்று எல்லாம் சொல்லக்கூடாது ஆமா ...பழைய வேட்டை துவக்கும் ..SLR வைத்தே இவ்வளவு என்றால் ..

M 16..மற்றும் 203 கொண்டு திரிச்சவங்கள் எழுத தொடங்கினா என்னாகும் போங்கோ .

 

நிங்கள் நேசிக்கும் தலைவனுக்கு நீங்கள் உண்மையா இருந்து இருந்தால் மவுனமா குப்பியை கடிக்க வேணும் ஒழிய எடுத்து மற்றவர் சோத்தில் கலக்க கூடாது .

 

உதாரணம் :கேணல் கிட்டு .

  • கருத்துக்கள உறவுகள்
கீழ்வரும் கருத்து முகநூலில் ஒருவருக்கு எழுதியது அதனை இங்கும் இணைத்திருந்தேன். களவிதி முகநூல் கருத்தை நீக்கப்பட்டுள்ளது. சில திருத்தங்களுடன் மீளவும் :-
 
3.8றீற்றா கைத்துப்பாக்கியென்பதை றிவோல்வர் என்று சொல்வார்கள் . ஆரம்பககாலப்போராளிகளில் இந்தக் கைத்துப்பாக்கியை வைத்திருந்தவர்கள் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான். அதுவும் உயர்மட்ட போராளிகள். பயிற்சியே எடுக்காத ஒருவர் தொட்டுப்பார்க்கக்கூட கைத்துப்பாக்கிய வழங்கியிருக்காத1984 காலம். 
 
1990களில் போராளிகளாகியவர்களே AK.47 தொட்டுப்பார்க்கவே 6மாதகாலம் எடுத்தது. அதுவரையில் கொட்டான் தடியும் SLRதுவக்கும் மட்டுமே போராளிகளின் பயிற்சிக்கால ஆயுதங்கள். பயிற்சியில் போராளிகளுக்கு ஆயுதங்கள் பற்றி கற்பிக்கும் போது மட்டுமே 3.8 றீற்றாவை அல்லது இதர ஆயுதங்களையோ போராளிகள் பார்க்க முடியும்.
 
புலிகளின் வரலாற்றில் யாருக்கும் சூட்டுப்பயிற்சியே பெற்றுக் கொள்ளாத புதிதாக இயக்கத்தில் இணையும் ஆட்களுக்கு  கைத்துப்பாக்கியைக் கொடுத்து குறிபார்த்துச்சுடச் சொல்லி ஒரு போராளி ஒருவரை நம்பினார் என்பது ???? பொய் மட்டுமன்றி வாசகனுக்கு சினிமா கதை சொல்லும் தைரியமே தொக்கி நிற்கிறது.

 

M 16..மற்றும் 203 கொண்டு திரிச்சவங்கள் எழுத தொடங்கினா என்னாகும் போங்கோ .

 

 

எழுத வேண்டிய நீங்கள் வரலாற்றை எழுதாமல் இருந்தால் இப்பிடித்தான். இனியெண்டாலும் போராடின ஒவ்வொருத்தரும் உண்மையான போராளிகளின் தியாகங்கள் சமர்கள் அர்ப்பணிப்புகளை எழுதுங்கோ.
 
பகலவன் , வாணன் , அஞ்சரன் , ஆதிபகவன் , காளமேகம், திருமலை சீலன் ,கரன்....கனபேர் இருக்கிறியள். எழுதுங்கப்பா வரலாறு முக்கியம்.
  • கருத்துக்கள உறவுகள்

 

கீழ்வரும் கருத்து முகநூலில் ஒருவருக்கு எழுதியது அதனை இங்கும் இணைத்திருந்தேன். களவிதி முகநூல் கருத்தை நீக்கப்பட்டுள்ளது. சில திருத்தங்களுடன் மீளவும் :-
 
3.8றீற்றா கைத்துப்பாக்கியென்பதை றிவோல்வர் என்று சொல்வார்கள் . ஆரம்பககாலப்போராளிகளில் இந்தக் கைத்துப்பாக்கியை வைத்திருந்தவர்கள் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான். அதுவும் உயர்மட்ட போராளிகள். பயிற்சியே எடுக்காத ஒருவர் தொட்டுப்பார்க்கக்கூட கைத்துப்பாக்கிய வழங்கியிருக்காத1984 காலம். 
 
1990களில் போராளிகளாகியவர்களே AK.47 தொட்டுப்பார்க்கவே 6மாதகாலம் எடுத்தது. அதுவரையில் கொட்டான் தடியும் SLRதுவக்கும் மட்டுமே போராளிகளின் பயிற்சிக்கால ஆயுதங்கள். பயிற்சியில் போராளிகளுக்கு ஆயுதங்கள் பற்றி கற்பிக்கும் போது மட்டுமே 3.8 றீற்றாவை அல்லது இதர ஆயுதங்களையோ போராளிகள் பார்க்க முடியும்.
 
புலிகளின் வரலாற்றில் யாருக்கும் சூட்டுப்பயிற்சியே பெற்றுக் கொள்ளாத புதிதாக இயக்கத்தில் இணையும் ஆட்களுக்கு  கைத்துப்பாக்கியைக் கொடுத்து குறிபார்த்துச்சுடச் சொல்லி ஒரு போராளி ஒருவரை நம்பினார் என்பது ???? பொய் மட்டுமன்றி வாசகனுக்கு சினிமா கதை சொல்லும் தைரியமே தொக்கி நிற்கிறது.

 

 

 

 

சாத்ரி  போன்றவர்களுக்கு கருத்து எழுதுவது என்றால் நாம் நல்ல வெறியில் இருக்க வேண்டும்.
வெறி இல்லாதவர்கள் அவர்களின் கருத்தை வாசித்தால் வெறி போல ஒரு மாதிரியான தலைசுற்று வருகிறது.
 
இவர் இனி அர்ஜுன் ஆட்களுக்கு  போன்று நாட்டில் என்ன நடந்தது என்று தெரியாதவர்களுக்கு ....... அதாவது மரம் தெரியாதவர்களுக்கு இலை புடுங்கி காட்டவே லாயக்கு.
 
பயிட்சியின் போது  கொடுப்பது உண்மையான SLR இல்லை அது SLR போன்று இருக்கும் வெடிக்காது அதுக்கும் மூன்று மாத பயிற்சி முடித்த பின்தான் கொடுப்பார்கள்.
 
முதன்முதலில் 2:2 தான் சுட கொடுப்பார்கள் இது .2 millimeter ரவைகளை கொண்டது. அதனால் ஓரளவிற்கு எப்படி குறிபார்த்து சுடுவது போன்ற பயிற்சி  கொடுத்த பின்பு. AK ரக துப்பாக்கி பயிற்சி கொடுப்பார்களாம்.
 
இதை விட வேடிக்கையானது புலிகள் ஆயுதம் கொடுக்கும் எல்லோருக்கும் ரவைகளை எண்ணியே கொடுப்பார்கள்  குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அவற்றை கணக்கெடுப்பார்கள். சண்டைகளுக்கு சென்றுவந்தால்  எத்தனை ரவைகள் சுட பட்டது என்று கணக்கு எடுத்து கொள்வார்கள். அல்லது இராணுவ முகம்  தாக்குதல்கள் என்று சென்றால் கூடிய ரவைகளை கொடுத்துவிட்டு சண்டை முடிந்து வந்த உடனேயே கணக்கு பார்த்து  மிகுதியை வேண்டி விடுவார்களாம்.
சண்டையில் கைப்பற்றும் ரவைகளை சில போராளிகள் ஒழித்து வைத்திருப்பார்களாம் ....... அப்படி எனது  
நண்பர் ஒருவர் கொண்டுவந்து  குரங்குகள் இரண்டை சுட்டுவிட்டு போனார். 
 
புலிகளில் தளபதிகள்தான் பிஸ்டல் வைத்திருப்பார்கள் 
அவர்களை தவிர்த்து புலானாய்வு போராளிகள் வைத்திருப்பார்கள். புலிகளில் பல சாதனை படைத்தவர்களே  
பிஸ்டலால் சுட்டிருக்க மாட்டார்கள்.
 
இங்க ஒருவர் போவதற்கு முன்பே சுட்டுபோட்டு போயிருக்கிறார் .............
பாட்டி வடை சுட்ட கதை தவறுதலாக சாத்த்ரியாரின் பேட்டியோடு பிரிண்ட் ஆயிட்டுதோ தெரியவில்லை.

இவை இந்தியாவில் பயிற்சி எடுத்த போராளிகள் சொன்ன கதைகள் ....
1992 இற்கு பின்பு புலிகள் பாரிய இராணுவமாக மாறிய பின் ஏதும் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்.

ஒட்டு மொத்தத்தில் உங்களுக்குள் இருக்கும் கசப்புணர்வை புரிந்து கொள்கிறேன் .......வேறொன்றுமில்ல .அவ்வளவுதான்  :D  :D  :D

ஒட்டு மொத்தத்தில் எனக்கிருக்கும் கசப்புணர்வை நீங்கள் புரிந்து கொண்டால் அதை சொல்லமுடியுமா ?

உங்களிடம் நேரடியாகவே கேட்கின்றேன் ,உங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் அதை கண்டித்து ,பக்குவமாக அவர்களுக்கு உணர்த்துவீர்களா ?,அல்லது ஞாயப்படுத்துவீர்களா ? :D  :icon_idea:

ஒட்டு மொத்தத்தில் எனக்கிருக்கும் கசப்புணர்வை நீங்கள் புரிந்து கொண்டால் அதை சொல்லமுடியுமா ?

உங்களிடம் நேரடியாகவே கேட்கின்றேன் ,உங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் அதை கண்டித்து ,பக்குவமாக அவர்களுக்கு உணர்த்துவீர்களா ?,அல்லது ஞாயப்படுத்துவீர்களா ? :D  :icon_idea:

மிஸ்டர் கரி ,,,,,,,,,,,,,,,,,,,,ஆட்டுக்க மாட்ட கொண்டு வந்து  ஓட்டாதீங்க ....................விடுதலைப்புலிகளையும் . பிள்ளைகளையும் ஒன்றாக சமப்படுத்திப்பார்க்கும் உங்க அறிவு இருக்கே .ஆகா அற்புதம் ...உங்க அறிவுக்கு ஏற்ப சிந்தனையை உங்ககூடவே வச்சிருங்க ,அத நான்  ஏற்க வேணும் என்று எழுதி தொலைக்காதீங்க ..........உங்க கசப்புணர்வை நான் புரிந்து கொண்டேன் என்பதற்காக குழந்தைப்பிழ்ழைத்தனமாக எழுதாதீங்க .........வரட்டா நயினா ..................... :D  :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கீழ்வரும் கருத்து முகநூலில் ஒருவருக்கு எழுதியது அதனை இங்கும் இணைத்திருந்தேன். களவிதி முகநூல் கருத்தை நீக்கப்பட்டுள்ளது. சில திருத்தங்களுடன் மீளவும் :-
 
3.8றீற்றா கைத்துப்பாக்கியென்பதை றிவோல்வர் என்று சொல்வார்கள் . ஆரம்பககாலப்போராளிகளில் இந்தக் கைத்துப்பாக்கியை வைத்திருந்தவர்கள் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான். அதுவும் உயர்மட்ட போராளிகள். பயிற்சியே எடுக்காத ஒருவர் தொட்டுப்பார்க்கக்கூட கைத்துப்பாக்கிய வழங்கியிருக்காத1984 காலம். 
 
1990களில் போராளிகளாகியவர்களே AK.47 தொட்டுப்பார்க்கவே 6மாதகாலம் எடுத்தது. அதுவரையில் கொட்டான் தடியும் SLRதுவக்கும் மட்டுமே போராளிகளின் பயிற்சிக்கால ஆயுதங்கள். பயிற்சியில் போராளிகளுக்கு ஆயுதங்கள் பற்றி கற்பிக்கும் போது மட்டுமே 3.8 றீற்றாவை அல்லது இதர ஆயுதங்களையோ போராளிகள் பார்க்க முடியும்.
 
புலிகளின் வரலாற்றில் யாருக்கும் சூட்டுப்பயிற்சியே பெற்றுக் கொள்ளாத புதிதாக இயக்கத்தில் இணையும் ஆட்களுக்கு  கைத்துப்பாக்கியைக் கொடுத்து குறிபார்த்துச்சுடச் சொல்லி ஒரு போராளி ஒருவரை நம்பினார் என்பது ???? பொய் மட்டுமன்றி வாசகனுக்கு சினிமா கதை சொல்லும் தைரியமே தொக்கி நிற்கிறது.

 

எழுத வேண்டிய நீங்கள் வரலாற்றை எழுதாமல் இருந்தால் இப்பிடித்தான். இனியெண்டாலும் போராடின ஒவ்வொருத்தரும் உண்மையான போராளிகளின் தியாகங்கள் சமர்கள் அர்ப்பணிப்புகளை எழுதுங்கோ.
 
பகலவன் , வாணன் , அஞ்சரன் , ஆதிபகவன் , காளமேகம், திருமலை சீலன் ,கரன்....கனபேர் இருக்கிறியள். எழுதுங்கப்பா வரலாறு முக்கியம்.

 

 

 

கடந்த காலங்களில் நடந்து முடிந்தவற்றைத்தான் வரலாறு என்று நான் இதுவரை நினைத்திருந்தேன். எங்கள் காலப்பகுதியில் நடந்ததை நாம் இப்பவே வரலாற்றாக்கிவிட்டோம்.   எம்மைப் பற்றி நாமே அறிவதற்கு நாம் ஏன் மற்றவர்களிடம் செல்ல வேண்டும்?  எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கும் தீயதும் இருக்கும்.   விடுதலைப்புலிகளுக்கும் அது பொருந்தும்.  என்னவொன்று, மொளனித்தவர்கள் மௌனமாகவே இருக்க வேண்டிய சூழ்நிலையினால் இப்போது ஓநாய்கள் ஊளையிடுகின்றன.  அவற்றைப் பெரிதுபடுத்துவதால்தான் மேலும் மேலும் அவை ஊளையிடுகின்றன.  ஆகவே, அவைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே மௌனித்திருப்பவர்களுக்குப் பலம் சேர்க்கும்.  ஒருவனை ஓரிருவர் எதிர்த்தால் சண்டையிட்டு வெல்லலாம்.  இது உலகமே சேர்ந்து நின்று சதி செய்த விடயம்.  ஆகவே சாதுர்யமாகத்தான் வெல்ல முடியும்.  விடுதலைப் புலிகளை அறிந்தவர்களுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை.  அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அவர்களைப் போலவே மொனமாக இருக்கிறார்கள்.  இங்கு கருத்தெழுதியவர்களின் கருத்துகளிலிருந்து அவர்கள் விடுதலைப் புலிகளையும்  எமது போராட்டத்தையும் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது.

சாத்திரி ஒரு பேப்பரில் மற்றவர்களை பற்றி  எழுதும் போது இதே கருத்துகளை யாரும் வந்து வைத்திருந்தால் உங்களில் ஒரு மரியாதை ஏற்பட்டிருக்கும் .

எரிகின்ற வீட்டில எண்ணையை ஊற்றி விட்டு இப்ப உங்கட வீடும் எரியும் போது கத்தி எதுவும் ஆக போவதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

அல்லைக்கை..நொல்லைக்கை எல்லாம் சுட்டது நாங்கதான் என்று வாக்குமூலம் கொடுக்கிறம் அதைவிடுங்கோ நீங்கள் கெட்டிக்காரர் என்று ஒப்பு கொள்ளுறம் அதோட சேர்த்து ..பிரேமதாசவை போட்டம் ..ராஜீவை போட்டம் என்றும் ஒரு ஒப்புதல் கொடுத்தா சட்டுபுட்டு என்று கேஸை மூடிட்டு அவன் அவன் தங்கள் அலுவலை பார்ப்பன் எல்லே ...

 

பிறகு வந்து இந்த கட்டத்துக்கு நித்திரை என்று எல்லாம் சொல்லக்கூடாது ஆமா ...பழைய வேட்டை துவக்கும் ..SLR வைத்தே இவ்வளவு என்றால் ..

M 16..மற்றும் 203 கொண்டு திரிச்சவங்கள் எழுத தொடங்கினா என்னாகும் போங்கோ .

 

நிங்கள் நேசிக்கும் தலைவனுக்கு நீங்கள் உண்மையா இருந்து இருந்தால் மவுனமா குப்பியை கடிக்க வேணும் ஒழிய எடுத்து மற்றவர் சோத்தில் கலக்க கூடாது .

 

உதாரணம் :கேணல் கிட்டு .

 

இது எனக்காக எழுதியதா ? அப்படி எனக்காக  எழுதியிருந்தால் அல்லக்கை நொல்லக்கை சாத்திரி என்று எழுதி விடவும் அதற்கான பதிலை பின்னர் நான் எழுதுகின்றேன். அதற்கு பின்னர் குப்பியை பற்றி யோசிக்கலாம்

கிருபன் பகுதி 3 வருமா வராதா?

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் பகுதி 3 வருமா வராதா?

 

 

ஏதோ கிருபன் தான் பேட்டி எடுத்த மாதிரி அவரிடம் கேட்கிறீர்கள் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி பேசுகிறேன் பாகம்: மூன்று

s1.jpg

ஈழப் போராட்டம் சம்பந்தமாக சிறந்ததொரு உரையாடல் களத்தை ஆரம்பிக்கும் முகமாகவே சாத்திரியின் விரிவான பேட்டியை நான் எனது தளத்தில் பதிவு செய்துகொண்டிருக்கிறேன். பாகம் ஒன்று, பாகம் இரண்டிற்கான எதிர்வினைகளை பொதுவெளியில் ஆங்காங்கே சிலர் பதிவு செய்திருந்ததை அவதானித்தேன். சாத்திரியின் பேட்டி சம்பந்தமாக எதிர்வினைகள் இருப்பின் அதை எனக்கு மெயிலில் அனுப்பினால் [aruliniyan001@gmail.com] கண்டிப்பாக எனது தளத்தில் அது பிரசுரிக்கப்படும். அதே நேரம் தனி மனித தாக்குதல்களை சுமந்து வரும் மடல்கள் என்னால் நிட்சயமாக பிரசுரிக்க முடியாமல் போகும் அதற்காக அட்வான்ஸாகவே மனம் வருந்துகிறேன். வாருங்கள் நண்பர்களே திறந்த மனதுடன் பேசலாம். மூன்றாம் பாகம் இங்கே.

அன்புடன்

அருளினியன்.

புலிகள் உலகாளவிய ரீதியில் போதைப் பொருள் கடத்தியதாக பாகம் ஒன்றில் கூறியிருந்தீர்கள். எந்தெந்த நாடுகள் ஊடாக போதைப் பொருள் கடத்தல் நடை பெற்றது என விளக்க முடியுமா?

ஆசியாவில் ஏன் உலகிலேயே மலிவாகவும், இலகுவாகவும் போதைப் பொருட்கள் கிடைக்குமிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு ஏற்றுமதிக்கெனவே போதைப் பொருட்கனை பயிரிடுகிறார்கள். அமெரிக்க சோவியத் யூனியன் பனிக்கால யுத்தத்தின்போது ரஸ்ய இராணுவத்தினரிற்குள் பரப்புவதற்காக அமெரிக்க உளவமைப்பே இந்த போதைப் பொருள் உற்பத்தியினை ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்திருந்தனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கான் எல்லையாக உள்ள பாகிஸ்தான் கிராமங்களில் உற்பத்தியாகும் போதைப் பொருட்களிற்கும். இமய மலைச் சாரலில் இயற்கையாக விளையும் கஞ்சாவிற்கும் மேலை நாடுகளில் ஏகப் பட்ட கிராக்கி இருக்கிறது. அவற்றை தரை மற்றும் கடல் வழியாக மும்பைக்கு கொண்டு வரப் பட்டு அவை சரக்கு கப்பல்கள் மூலம் மேற்கு நாடுகளிற்கு பயணமாகும்.

எந்த வருடத்தில் இருந்து புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர்?

எண்பதுகளின் ஆரம்பத்திலேயே சிறிய அளவில் புளொட் அமைப்பும் புலிகளும் போதைப்பொருள் கடத்தலை தொடங்கியிருந்தாலும் 84 ம் ஆண்டு புலிகள் உறுப்பினர்கள் சிலர் மும்பையை மையமாக வைத்து கடத்தலை தொடங்கிய பின்னரே பரவலடைந்தது. சாதாரண கப்பல்கள் மூலமாக போதைப்பொருள் கடத்தலானது தொடங்கப்பட்டது. பின்னர் அவர்களே சொந்தமாக கப்பல்களை வாங்கி உலகளாவிய ரீதியில் செய்யத் தொடங்கியிருந்தனர்.

புலிகளின் இந்த போதைப் பொருள் வலையமைப்பை பொறுப்பாக நின்று வழி நடத்தியவர் யார்?

இது பல குழுக்களாக இயங்கியது. அதில் தெற்கு புன்னாலைக் கட்டுவனை சேர்ந்த சிறி என்பவர் முக்கியமானவராக நேபாளத்தில் இருந்து இயங்கினார். ஒரு தடைவை இந்திய எல்லைப் படையினருடன் நடந்த மோதல் ஒன்றில் கொல்லபட்டுவிட்டார் .

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இறந்த புலிகளுக்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டதா?

யாரிற்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அது மட்டுமல்ல ஆயுதக் கப்பல்கள் தாக்கப்பட்டு அதில் இறந்துபோனவர்கள், விபத்தில் மற்றும் கடுமையாக நோய்வாய் பட்டு இயற்கை மரணம் அடைந்த எவருமே முறையாகப் பெயர்கள் அறிவிக்கப்பட்டு மாவீரர்களாக கெளரவிக்கப்படவில்லை. விதிவிலக்காக கிட்டு சென்ற கப்பலில் இறந்தவர்களும் இறுதி சமாதான காலத்தின் போது தாக்கியழிக்கப்பட்ட ஒன்பது கப்பல்களில் இரண்டு கப்பல்களில் பயணித்தவர்களின் பெயர் விபரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு அவர்கள் மாவீரர்களாக கெளரவிக்கபட்டிருந்தனர்.

இப்படியாக எத்தனை பேர் இறந்து போயிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

நூற்றியிருபதிற்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பார்கள் என நினைக்கிறேன். புலிகளின் தலைமை அவர்களை மாவீரர்களாக அறிவித்திருக்காவிட்டாலும். புலிகளின் ஆயுதத் தேவைகளிற்காக போதைப் பொருள் வியாபாரத்திலும் ஆயுதக் கடத்தல்களிலும் ஈடுபடும்போது கடலில் இறந்து போனவர்களிற்காக அவர்களோடு சேர்ந்து இயங்கிய நண்பர்கள் சிலர் நிக்கோபர் தீவுக்கூட்டத்தில் மனிதர்களற்ற ஒரு சிறு தீவில் அவர்களிற்கு ஒரு நினைவிடம் எழுப்பி அதில் அவர்களது பெயர்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட புலிகளுக்கும், புலிகளின் தலைமைக்கும் இடையான உறவு எப்படி இருந்தது?

புலிகளின் தலைமைக்கு ஆயுதம் வந்து சேர்ந்தால் சரி என்கிற நிலைமை. அது எப்படி வந்தது எங்கிருந்து வந்தது என்ன வழியாக வருகின்றது என்று ஆராய்கின்ற அவசியம் எல்லாம் இருக்கவில்லை.

அவரைப்பொறுத்தவரை ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கவேண்டும் சண்டை நடந்துகொண்டிருக்கவேண்டும். அவரை நான் அடிக்கடி துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன் என்று சொல்வதுண்டு.

வெளிநாடுகளில் புலிகள் மீதான தடை ஏற்பட்டதற்கு, புலியெதிர்ப்பாளர்கள் மற்றும் மாற்றும் மாற்றுக் கருத்தாளர்களின் பங்கும் பெரியளவில் இருந்ததாக கருதுகிறீர்களா?

இல்லை. புலிகள் மீதான தடைக்கு இந்த மாற்றுக் கருத்தாளர்களின் பங்கு என்பது ஒரு சதவீதம் இருக்குமா என்பது கூட சந்தேகமேயாகும். இந்த மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது புலியெதிர்ப்பாளர்கள் எனப்படுவோர், புலிகளிடம் ஜனநாயகம் இல்லை, அவர்கள் வன்முறையாளர்கள், படுகொலை செய்கிறார்கள் என வெளிநாடுகளில் கூட்டம் போட்டு பேசியும். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியும், மனித உரிமை அமைப்புக்களிற்கு புகார் அனுப்பிக்கொண்டும் இருந்தார்கள். ஆனால், இவற்றால் புலிகள் மீதான தடை என்பது சாத்தியமாகவில்லை. ஏனெனில் இவர்களிற்கு புலிகள் அமைப்பினுள் என்ன நடக்கின்றது என்பது சரியாக தெரிந்திருக்கவில்லை. அதே நேரம் அனேகமான ஜரோப்பிய நாடுகள் புலிகள் மீது மென்மை போக்கை கடைப்பிடித்திருந்ததோடு பல தனிப்பட்ட அரச மட்ட தொடர்புகளும் புலிகள் அமைப்பு சுதந்திரமாக இயங்கவும் வழி வகுத்திருந்தது. ஆனால் இந்த மென்போக்கை புலிகள் அமைப்பும் அவர்களது வெளிநாட்டு பொறுப்பாளர்களும் சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை. வெளிநாடுகளில் பொறுப்பாக இருந்தவர்களிற்கிடையேயான போட்டிகளும், பொறாமைகளாலும் அவர்களே உள்ளே நடக்கும் இரகசியங்களை வெளிநாட்டு காவல் துறையினரிடம் போட்டுக் கொடுத்தார்கள். தாங்களே குட்டி நீதிமன்றம் போல் செயற்பட்டு வெளிநாடுகளில் தமிழர் பிரச்சனைகளிற்கு தீர்ப்பு கூறி தண்டனை கொடுத்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவன் காவல்துறையில் போய் புகார் கொடுக்கத் தொடங்கினான். இவை எல்லாவற்றையும் விட பெரிய எதிர்ப்பு புலிகளிற்கு எதிராக சர்வதேசத்தில் உருவாகக் காரணம் புலிகளின் கரும்புலி தாக்குதலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப் பட்டதும், தொடர்ந்தும் மக்களால் தேர்தெடுக்கப் பட்ட சிங்கள, தமிழ் ஆயுதம் தாங்காத அரசியல்வாதிகள் கொல்லப் பட்டதுடன், தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகளை புலிகள் தரப்பே குழப்பியதுமே மிகப் பாரதூரமான குற்றங்களாக சர்வதேசம் பார்த்தது. அது மட்டுமல்லஇறுதியாக நடந்த பேச்சு வார்த்தைகளின்போது இந்த தடைகளை நீக்கி சுதந்திரமாக பேச்சு வார்த்தையில் புலிகள் ஈடுபடுவதற்கு சர்வதேசமும் இந்தியாவும் இரண்டு விடயங்ளை நிறைவேற்றுமாறு புலிகளிடம் கேட்டிருந்தார்கள். அவையிரண்டையும் புலிகளின் தலைமை நிராகரித்து விட்டிருந்தது மட்டுமல்லாமல் காலையில் பேச்சுவார்த்தைகளின் போது மேசையில் புலிகள் தரப்பு தாங்கள் சமாதானத்திலும் பேச்சு வார்த்தையிலும் உறுதியாக இருக்கிறோம் வன்முறையில் எமக்கு விருப்பம் இல்லையென்று சர்வதேசத்திடம் கூறிவிட்டு, மாலையில் புலம்பெயர் தமிழர்களின் கூட்டங்களில் தமிழ்ச்செல்வன் உரையாற்றும் போது இனி வரப் போவதுதான் இறுதி யுத்தம். யுத்தம் மூலமே தீர்வு எனவே தமிழர்கள் அனைவரும் தாராளமாக நிதியை வழங்குங்கள் எமக்கு பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையில்லையென்று உரையாற்றுவார். அப்போது கை தட்டல் வானைப் பிளக்கும். இப்படிப் பேசவேண்டாம் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் இவற்றை பதிவு செய்யும் என்று பல தமிழ் பத்திரிகையாளர்கள் தமிழ்ச்செல்வனிடம் எடுத்தும் சொல்லியிருந்தார்கள். அதற்கு அவரின் பதில் 'அவங்கள் விசரங்கள் கிடக்கட்டும்' என்பதாகவே இருந்தது. இதனால்தான் சர்வதேசம் புலிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளவேண்டி வந்தது.

சர்வதேசமும் இந்தியாவும் புலிகள் மீதான தடையை எடுப்பதற்கு இரண்டு விடயங்களை முன் வைத்தாக கூறினீர்களே, அவை என்ன?

பேச்சு வார்த்தை காலத்தில் புலிகளோடு அதிகார பூர்வமாக சர்வதேச தரப்பில் ஒரு குழு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது இன்னொரு குழுவினர் புலிகளின் இன்னொரு வெளிநாட்டு பிரிவினருடன் இரகசியமாக நோர்வேயில் பேச்சு வார்த்தை ஒன்றையும் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் புலிகளிடம் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். முதலாவது கரும்புலிகள் அமைப்பை முற்று முழுதாக கலைத்து விடவேண்டும். இரண்டாவது வான் புலிகள் அமைப்பை கட்டியெழுப்பும் முயற்சிகளை தற்காலிகமாக கைவிடவேண்டும் என்பதே. இங்கு இன்னொன்றை கவனிக்க வேண்டும் உலக விடுதலைப் போராட்டக் குழுக்களிலேயே முதன் முதலாக வான் படையை கட்டியெழுப்பியவர்கள் புலிகள்அமைப்பு மட்டுமே. அதனால் வான் புலிகள் என்பதனை மிக பலம் பொருந்திய ஒன்றாகவே அதீத கற்பனைகளை கொண்டதாக அன்றைய காலத்தில் சர்வதேசமும் இந்தியாவும் நம்பியிருந்தனர் என்பதும் உண்மை. இந்த கோரிக்கைகளை புலிகளின் தலைமை மறுத்திருந்தது. பேச்சு வார்த்தை காலங்களில் மனிதவுரிமை அமைப்புக்களின் அழுத்தங்களிற்கு பணிந்து குழந்தைப்போராளிகள் பலரை பத்திகையாளர்களின் முன்னால் விடுவித்ததைப் போல கரும்புலிகள் அமைப்பை கலைக்காவிட்டாலும், ஒரு ஒப்புக்காகவேனும் பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்புக் குழுவினரின் முன்னால் ஒரு தொகை கரும்புலிகளை சாதாரண படையில் இணைத்து கரும்புலிகளை கலைத்து விட்டதாக புலிகளின் தலைமை அறிக்கையொன்றை விடச் சொல்லி பலர் வைத்த கோரிக்கையை புலிகளின் தலைமை கடுமையாக மறுத்து விட்டிருந்தது. அடுத்ததாக உலக நாடுகளில் இருந்து புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முதலாவதாக இந்தியா தனது தடையை நீக்கவேண்டும்.அதற்கு ராஜீவ்காந்தியின் கொலை ஒரு பெரும் தடையாகவும், இந்தியாவிற்கு பெரிய கெளரவ பிரச்சனையாகவும் இருந்தது. புலிகள் மீதான இந்தியாவின் தடையை நீக்குவதற்கு பொட்டம்மானை தம்மிடம் ஒப்படைத்து விடுமாறு இந்திய அரசு சார்பில் கோரிக்கை வைத்தார்கள். பொட்டம்மானை ஒப்படைத்ததன் பின்னர் தலைவர் பிரபாகரனை இந்தியத் தரப்பு கேட்கக் கூடாது என்று எழுத்து மூலம் தரவேண்டும் என்றும் பேச்சு வார்ததைகளில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த விபரங்களும் புலிகளின் தலைமைக்கு அறிவிக்கப் பட்டது. இந்தக் கோரிக்கையும் சுவரில் எறிந்த பந்தைப் போல புலிகளின் தலைமையால் நிராகரிக்கப் பட்டு திரும்பி வந்ததும் பெரும் பின்னடைவாக அமையக் காரணமாக அமைந்தது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தூண்களில் ஒருவரான பொட்டம்மானை, இந்திய அரசு சரணடையச் சொல்வதை எந்த விதத்தில் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழ் இனத்தின் விடுதலைக்காக ஆயிரக் கணக்கான இளம் சந்ததியினர் மாவீரர்களாகியும் தங்கள் பெயர்களே வெளி உலகத்திற்கு தெரியாமல் பல கரும்புலிகள் உயிரைக் கொடுத்தும் உள்ளனர். அதே இனத்தின் விடுதலைக்காக அந்த மக்களின் எதிர்காலத்திற்காக பல தடைகள் நீங்கி அதற்காக இன்னாரு பாதை திறப்பதற்காகவும் பொட்டம்மானை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைத்திருப்பதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன். அதே நேரம் பொட்டம்மானை இந்தியா உடனே தூக்கில் போட முடியாது. எனவே பல பிரபலமான வக்கீல்களை வைத்து வாதடியிருக்கலாம். எனவே மீண்டும் மீண்டும் பொட்டம்மானை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு வைத்த கோரிக்கை புலிகளின் தலைமையால் நிராகரிக்கப் பட்டிருந்தது இவையும் பேச்சு வார்தைகள் இறுக்கமடைய காரணமாக அமைந்தது.

புலிகளிற்கு ஆயுத வழங்கலில் முக்கியமாக ஈடு பட்டிருந்த உங்கள் நண்பரான கே.பி.(குமரன் பத்மநாதன்) என்பவர் உண்மையில் கைது செய்யப் பட்டாரா? அல்லது சரணடைந்திருந்தாரா?

கே.பி எனது நண்பர் என்பதைவிட நாங்கள் ஒரு அமைப்பில் இயங்கினோம் என்பதுதான் சரியானது. அதே நேரம் அவர் கைது செய்யப்பட்டதை செய்திகளில் அறிந்திருந்தேன். பின்னர் அவருடன் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தின் போதும் தான் கைது செய்யப் பட்டதாகவே என்னிடம் கூறியிருந்தார்.

கே.பி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்?

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 2001 ம் ஆண்டு புலிகளின் பெரு வெற்றிக்கு பின்னர் அதற்குள் எழுந்த அதிகார போட்டிகள் காரணமாக புலிகளின் தலைமையோடு அருகாகவும், நெருக்கமாகவும் தலைவரை புகழ்ந்து கொண்டு இருந்தவர்களின் கைகளிற்கு அதிகாரங்கள் கை மாறத் தொடங்கியிருந்தது. இந்தப் புகழ்ச்சியானது பிரபாகரன் என்பவர் தலைவர் என்பதைத் தாண்டி தேசியத் தலைவர் சூரியத்தேவன், முருகன் என்று கட்டவுட்டுகளாகவும் கவிதைகளாகவும் பாடல்களாகவும் வெளிவரத் தொடங்கியியுமிருந்தது. அதே நேரம் போராட்டத்தையும் மக்கள் விடுதலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தலைமைக்கு துதி பாடாமல் தூரமாக இருந்து இயங்கிக் கொண்டிருந்தவர்கள் பலரும் ஓரம் கட்டப் பட்டனர். அதன்போது கே.பியும் ஓரம் கட்டப் பட்டதோடு பரப்புரை. வர்த்தகம் .நிதி.வெளிநாட்டு அரசுகள் அமைப்புக்களுடனான தொர்புகள். ஆயுதபேரம்.வாங்குதல் .வழங்கல் .ஆவணங்களை தயாரித்தல்.மருத்துவம் மற்றும் மருந்து தொழில் நுட்ப உபகரண பிவு என பல குழுக்களாக இயங்கிய வெளிநாட்டு பிரிவுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதனை அனைத்துலக செயலகத்தின் கீழ் கொண்டு வந்து ஒரு நிறுவனமயமாக்கல் முறையாக்கி புலிகளின் முதுகெலும்பு என சொல்லக் கூடிய வானளாவிய அதிகாரங்கள் அனைத்தையும்.கஸ்ரோ பொறுப்பெடுத்திருந்தார்.

கே.பி நீக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன?

சொல்லப்பட்ட ஒரேயொரு காரணம், அதை நான் சப்பைக் காரணம் என்றே சொல்வேன். ஆயுதங்கள் வாங்கியதில் சரியாக கணக்கு காட்டவில்லையென்பதுதான். புலிகளின் மாதாந்த வருமானமே எவ்வளவு என்று தலைமைக்கே சரியாக தெரியாத போது கணக்கு சரியில்லையென்று கஸ்ரோ தலைமையிடம் வைத்த குற்றச்சாட்டும் அதனை தலைமை ஏற்றுக் கொண்டதும் நகைச்சுவையானது.

கே.பி கொம்பனியின் நீக்கம் நடைபெறாமல் போயிருந்தால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் முடிவு எப்படி இருந்திருக்கும்?

கே.பி கொம்பனி புலிகளின் தலைமையால் நீக்கப் படாது போயிருந்தால் புலிகள் நிலங்களை இழந்து பலவீனமடைந்திருந்தாலும், புலிகளிற்கு ஆயுதங்கள் தொடர்ந்தும் கிடைத்தபடியே இருந்திருக்கும்யுத்தம் நீண்டுகொண்டேயிருந்திருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் புலிகளின் தலைமை கூண்டோடு அழிந்து போகாமல் காப்பாற்றப் பட்டிருக்கும்.

கே.பியை தொடர்ந்து வெளிநாட்டு நிருவாகப் பொறுப்புக்கு தலைமையேற்ற காஸ்ட்ரோவின் செயற் பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு நாளின் 24 மணி நேரத்தில், சில நேரங்களில் 20 மணிநேரங்கள் விழித்திருந்து இயங்க வேண்டியதுதான் புலிகளின் வெளிநாட்டு பிரிவு. ஏனென்றால் புலிகளின் வெளிநாட்டு பிரிவுஅவ்வளவு முக்கித்துவம் வாய்ந்தது. ஆனால் ஒரு நாளைக்கு வெறும் அரை மணிநேரம் மட்டுமே எழுந்து உட்காரக் கூடிய கஸ்ரோவிடம் அனைத்துலக செயலக பொறுப்பு போய் சேர்ந்ததும், அவரின் கீழான அனைத்து பொறுப்பக்களும் புதியவர்களிடமும் புலிகள் அமைப்பால் வெளிநாடுகளிற்கு அனுப்பி கல்வி பயின்றவர்களிடமும் ஒப்படைக்கப் பட்டது. கணணித் தொழில் நுட்ப அறிவும், ஆங்கில அறிவும் இருந்தால் ஆயுதங்களை வாங்கி விடலாமென புதியவர்கள் நினைத்தார்கள். நவீன ஏவுகணைகள் வாங்குவதற்காக புதிய ஆயுத முகவர்களை தேடிப் போனார்கள். ஒரு காலத்தில் போலி மனிதர் என பழைய கட்டமைப்பினர் ஒதுக்கி வைத்திருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு பாதிரியாரையும் மீண்டும் தங்களுடன் இணைத்தார்கள். அவரும் பல ஆயுத முகவர்களை புதியவர்களிற்கு அறிமுகப் படுத்தினார். கஸ்ரோ தலைமையிலான புதியவர்கள் ஆயுத முகவர்கள் என நம்பி பேரங்கள் நடத்திய அனைவருமே வெளிநாட்டு உளவமைப்புளின் ஆட்களாக இருந்தனர். அவர்களால் இறுதியில் பணத்தையும் இழந்ததோடு, ஆயுதங்களை கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக புலிகள் தரப்பில் ஆயுத பேரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதாகி சிறைகளில் வாடுகிறார்கள்.

தொடரும்...

http://aruliniyan.blogspot.co.uk/2014/02/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் முக்கிய தூண்களில் ஒருவரான பொட்டம்மானை, இந்திய அரசு சரணடையச் சொல்வதை எந்த விதத்தில் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழ் இனத்தின் விடுதலைக்காக ஆயிரக் கணக்கான இளம் சந்ததியினர் மாவீரர்களாகியும் தங்கள் பெயர்களே வெளி உலகத்திற்கு தெரியாமல் பல கரும்புலிகள் உயிரைக் கொடுத்தும் உள்ளனர். அதே இனத்தின் விடுதலைக்காக அந்த மக்களின் எதிர்காலத்திற்காக பல தடைகள் நீங்கி அதற்காக இன்னாரு பாதை திறப்பதற்காகவும் பொட்டம்மானை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைத்திருப்பதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன். அதே நேரம் பொட்டம்மானை இந்தியா உடனே தூக்கில் போட முடியாது. எனவே பல பிரபலமான வக்கீல்களை வைத்து வாதடியிருக்கலாம். எனவே மீண்டும் மீண்டும் பொட்டம்மானை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு வைத்த கோரிக்கை புலிகளின் தலைமையால் நிராகரிக்கப் பட்டிருந்தது இவையும் பேச்சு வார்தைகள் இறுக்கமடைய காரணமாக அமைந்தது.

 

 

புலேந்திரன் , குமரப்பா போன்றவர்களுக்கு என்ன நடந்தது தெரிந்தும் இந்தியாவை எப்படி நம்மலாம் என நினைக்கிறீர்கள்??
பொட்டம்மானை கொடுக்காத காரனத்தால் அவ்வளவு ஆத்திரம் ஏற்பட்டு சற்றலைட்டின் உதவி மூலம் புலிகளின் அசைவுகளை சிறிலங்கா அரசுக்கு காட்டிக்கொடுத்ததா இந்தியா? புலிகளின் ஆயுத கப்பல்களையும் இந்தியா காட்டிக்கொடுத்ததே இந்தியா தஹதுஅனே? இப்படியானவர்களிடம் எந்த நம்பிக்கையில் பொட்டம்மானை ஒப்படைக்கலாம் என நினைக்கிறீர்கள்?
 
பேச்சுவார்த்தையில் எப்படி புலிகள் குழப்பினார்கள் அரசு நேர்மையாக நடந்தது என நினைக்கிறீர்கள்? அமெரிக்கா இடையில் நடுநிலை வகிக்க புகுந்து புலிகளை ஓரம் கட்டி தனிய சிறிலங்கா அரசை மட்டும் பேச்சுக்கு ஏன் அழைக்க வேண்டும்? இப்படியான நம்பிக்கையீனங்களும் சுத்துமாத்துக்களூம் தான் புலிகளுக்கு என்ன தமிழ் மக்களுக்கே  பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
 
அரசாங்கம் வேண்டெரிவிதுமென்றே போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி புலிகளை தீண்ட அரசியல் போராளிகளை தாக்குதல் என தொடங்கி நோர்வே காரருக்கு ஸெல் அடிப்பது வரை சென்றது. இதனை புலிகள் நோர்வேயிடம் தெரிவித்த போது பாராமுகமாக இருந்து கொண்டு படைகளின் தாக்குதல்களை தற்பாதுக்காப்புக்காக தடுத்த போது அரசு கொடுத்த புகார்களை நோர்வே பெரிதாக காட்டி தனது இரட்டை வேடத்தை காட்டியதையும் தமிழ் மக்கள் அறிவார்கள்.
 

 

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அம்மான் போராளிகள் சந்திப்பொன்றில் பல பல வருடங்கள் முதல் பகிர்ந்து கொண்ட கருத்திலிருந்து :-

ஒரு போராளியின் அனுபவத்திலிருந்து பெற்றுக் கொண்ட கருத்து இது :-

 

அதுவொரு கலந்துரையாடல் :- ஒரு இடத்தில் பொட்டுஅம்மான் அவர்கள் போராளிகளைப் பார்த்துக் கேட்கிறார்.

 

உங்களது எதிரி யார் ?

 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்களைச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன பதில்கள் எதுவுமே சரியானதானது இல்லையென்றார். எல்லோருக்கும் குழப்பம் ஏன் தங்கள் பதிலில் எதுவும் சரியானது இல்லையென்கிறார் என ஆளாளுக்கு தங்களுக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் கேட்டுக் கொண்டவர்கள் பொட்டு அம்மானின் பதிலுக்காக காத்திருந்தார்கள்.
 
மிகவும் சாதாரணமாகவும்  அமைதியாகவும் பொட்டு அம்மான் சொன்ன பதில்:-
' உங்கள் எதிரி உங்கள் வாய்தான்''
 
அதற்கான காரணங்களை விளக்கிக் கொண்டு போனபோது ஒவ்வொரு போராளியும் பொட்டு அம்மானின் கருத்தை அவரது ஆழுமையை ஆற்றலை மட்டுமன்றி அ ஒரு சிறந்த புலனாய்வுத்தளபதியையும் கண்டு கொண்டார்கள்.
அம்மான் கூறிய ''' உங்கள் எதிரி உங்கள் வாய்தான்''இந்த வார்த்தைகளுக்குள் இருந்த உண்மை காலங்கடந்தும் நிலைத்தே வாழ்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே

தலைவரையும் இந்தியா கேட்டது என்பதை பக்குவமாக மறைச்சாச்சு........

 

இத்தனை  கரும்புலிகள் உயரைக்கொடுத்த பின்

அவர் ஒருவரைக்கொடுத்துவிட்டு

தொடர்ந்தால் என்ன???

 

சீ

என்ன உலகமடா?

என்ன  நாக்கு....? :(  :(  :(  :(

கொடுக்காவிட்டாலும் எடுப்பார்கள் என்றது விளங்கவில்லை

சம்பந்தரை கேட்டால் தெரியும் இந்தியா (நாராயணன் ) என்ன கேட்டது என்று ?

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் பல வருடங்கள் நின்றவர்கள். ஏன் எடுக்கவில்லை??

இவைகளை வாசிக்கும்போது கருணாம்மான் செய்த துரோகம் பரவாயில்லை போல இருக்கு ...

 

உள்வீட்டில் இருந்து இவ்வளவு காட்டிகொடுப்பு செய்து இருக்கிறம் ...பங்கு பிரிக்கும்போது நமக்கும் எதாவது போட்டு தந்து இருந்தா பேசாமல் இருந்து இருப்பம் கிடைக்காத கடுப்பு போல :D :D

  • கருத்துக்கள உறவுகள்

எனது செவ்வியை உண்மையாக  படித்தும் சாத்திரியின் எழுத்துக்களை  நான் படிப்பதேயில்லை என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு  படிக்காமலேயே  கருத்து தெரிவித்தவர்களிற்கும். இரகசிய ஒப்பந்தங்களை  செய்து விட்டு இங்கு கருத்து வைப்பர்கள்  மற்றும் நான் அடிக்கிறது மாதிரி அடிப்பன்  நீ அழுகிற மாதிரி அழு என்று சொல்லி விட்டு எழுதுபவர்கள். யாழில் எதிர் கருத்து வைத்து விட்டு முக புத்தகத்தில் விரும்புகிறவர்கள் அனைவரும் தொடர்ந்தும் எனது பேட்டியோடு இணைந்திருங்கள். தனித்தனியாக பதில் தரமுடியாமைக்கு  வருந்துகிறேன்.அனைத்துமே வெளியில் வரும்.உங்கள் கேள்விகள்  அதற்கான  பதில்கள் . கருத்துக்களினூடாக ..   எனக்கு நானே எதிரி மற்றவர்கள் அல்ல.. :)

 

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.