Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாலிப வயதுக் குறும்பு. பாகம் 4

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பத்தாவது தேறியதும். தொடரந்து படிப்பைத் தொடர்வதற்கு என் குடும்பப் பொருளாதாரம் இடம்தர மறுத்தது. விவசாயத் துறையில் பயின்று அதில் முன்னேற முயன்ற எனக்கு ஒரு கூட்டுத்தாபன ஆலையில் இயந்திரங்களை இயக்கும் வேலை. மாமாவின் சிபாரிசு மூலம் கிட்டியது. என் மகனும் உத்தியோகம் பார்க்கிறான்...! என்ற மகிழ்ச்சியும், பெருமையும் அம்மாவின் முகத்தில் பிரகாசித்தது. இவன் சாதகத்துக்கு தண்ணீர் வாய்காலைத் தாண்டும் யோகமும் இல்லை. ஆனையிறவையும் தாண்டமாட்டான்...! என்று அம்மாவுக்கு யோசியன் சொல்லிய அடுத்த மாதமே, ஆனையிறவோடு மகாவலி கங்கையையும் தாண்டி மட்டுநகர் சென்றுவிட்டேன். சமுத்திரமும் தாண்டிப் புலத்திற்கு வந்ததும், குழந்தைப் பாக்கியமே இல்லை என்ற யோசியத்தையும் மீறி மூன்றுக்கு மேல் வேண்டவே வேண்டாம் என்று கட்டுப்படுத்தப் பட்ட சிரமமும் வேறுகதை. மாதத்தின் நடுவிலே வேலை தொடங்கியதால் வேலைசெய்த நாட்களுக்குரிய சம்பளமே முதலில் கிடைத்தது. முதன் முதல் உழைத்த பணம்! ஆகா! நானும் சம்பாதிக்கிறேன்! என்னிடமும் எனக்கென்று பணம் உள்ளது. பிறர் தயவில் வாழ்ந்து ஆசைப்பட்டதை எல்லாம் உண்ண முடியாமலும், வாங்க முடியாமலும் ஆதங்கப்பட்ட ஆத்மாக்கள்தான் அந்தச் சந்தோசத்தையும், ஆனந்தத்தையும் அனுபவிக்க முடியும். என் உழைப்பில் வந்த முதல்பணம் நாற்பத்து ஒன்பது ரூபா ஐம்பது சதம். உணவுச்சாலையில் சாப்பிட்ட செலவு, தங்கிய அறை வாடை., விரும்பி வாங்கிய ரெர்லின் சேட், ஆலையில் அறிமுகமாகிப் பிடித்த நண்பர்களுடன் கற்பகதருவின் பானக அமுதத்துடன் கும்மாளம் போட்ட செலவும் போகப் பதினைந்து ரூபா அம்மாவுக்கு மணிஒடர் அனுப்பியபோது கிடைத்த இன்பம் அதைச் சொல்வதற்கு தமிழிலும் வார்த்தையில்லை.       
 
மாற்று வேலை. அதுமுடிய அனேகமாக ஆலைக்குச் சொந்தமான பிரமச்சாரிகள் விடுதியில் ஒன்றுகூடுவோம். பிரசித்திபெற்ற 304 காட்சு விளையாட்டுக்கு உற்சாகம் ஊட்டும் 'மென்டிசு பெசல் சாராயம்.' அந்தச் சாராய பானகம், சட்டையைப் பிடித்து உதை கொடுத்தும், வாங்கவும் நண்பர்களைப் பணித்தாலும், என்போன்ற நிதானம் தவறாதவர்களால் மீண்டும் நண்பர்களிடையே ஒற்றுமை மேலோங்கிவிடும். குடும்பத்தவர்களும் ஓரிருவர் எங்களுடன் இணைந்து கொள்வதும் வழக்கம். அவர்களின் துணைவிகள் வீட்டில் பொரித்த. அவித்த, முட்டை, மீன், கிழங்கு வகையறாக்கள் மேலும் சுவையூட்ட 304 காட்சு விளையாட்டின் இறுக்கமான சட்டங்களும் இளகிப்போய் விட்டுக்கொடுப்புகளுடன் அங்கு பாசமும் மழை பொழியும். 
 
அன்று புதிதாக வேலைக்குச் சேர்ந்த வசந்தனும் எங்களுடன் வந்து இணைந்தான். ஆனால் அவன் குடிப்பதில்லை. சோடா மட்டும்தான். "கொஞ்சம் எங்களுக்காக" என்றோம். "அண்ணிக்குப் பிடிக்காது" என்றான். "அண்ணி ஊரில்தானேடா" என்றோம். "அம்மாபோல் அண்ணியும் என் நெஞ்சிலே இருக்கிறா" என்றான். ஆனாலும் மறுநாள் அவன் சாராயத்துக்குத் தித்திப்பூட்டும் பின்னூட்ட வகைகள் சிலவற்றைக் கொண்டுவந்தான். அவை பலநாட்கள் பழுதடையாது இருக்கும் தன்மைகொண்டவை. காரமும், தித்திப்பும் அபாரம். அண்ணி செய்துதந்ததாகக் கூறினான். தொடர்ந்த நாட்களில் அவன் அண்ணிபுராணம் பாடாத நாட்களே இல்லை. அவனுடன் பேசியதில் அவன்  எனக்குத் தூரச் சொந்தமாகவும் வந்துவிட்டான். என்னைவிட வயதில் குறைந்தவன் ஆனாலும் "மச்சான், டேய்" என்றே அழைத்துப் பழகினோம். பெற்ற தாயைவிடவும் அவன் அண்ணியைபற்றிப் போற்றியது அவன் அண்ணிமேல் எங்களுக்கும் ஒரு பக்தியை ஏற்படுத்தியது. மூன்று பெண்பிள்ளைகள் இருந்தாலும், ஆறு ஆண்களைப் பெற்றெடுத்த இறுமாப்பு அவன் தந்தையைக் கவலையற்ற குடிகாரனாக்கியதோடு, தந்தைக்கு அடுத்ததாக வருமானம் கொண்டுவரும் மூத்த மகனையும் அது பற்றிக் கொள்ளவே குடும்பம் நொடித்தது. சில வேளைகளில் ஒருவேளை சோற்றுக்கே திண்டாடும் நிலைகூட ஏற்பட்ட வேளையில்தான் தரகர் தங்கராசா கொண்டுவந்த சம்பந்தம் மூத்தமகனுக்கு நிறைவேறியது. 
 
மருமகள் வந்த முகூர்த்தம், மூத்தமகன் தன் மனைவியைக் கேளாது பாலும் குடிப்பதில்லை என்றானது. மாமனோ! இளநீரும் குடிப்பதற்கும் மருமகள் அனுமதிவேண்டித் தவங்கிடக்கும் நிலை வந்தது. குடும்பம் மறுபடி செழித்து மகிழ்ச்சியில் மூழ்கியது. வீட்டில் அனைவருக்கும் அண்ணி அன்போடு அடுப்படியில் ஆக்குவதை எண்ணினாலே வாயில் எச்சில் சுரந்து வழியும். மாமிக்கோ தனக்கு இன்னொரு மகளே பிறந்து வந்ததுபோன்ற ஆனந்தம். தன்கண்ணே பட்டுவிடுமோ...! என்ற பயத்தில் அடிக்கடி திருட்டி சுற்றிப் போடுவார். அன்பு என்னும் வார்த்தைக்குப் பொருளான தன் அண்ணியை வசந்தன் போற்றுவதில் வியப்பில்லை அல்லவா. அவன் அண்ணியைப் பார்க்கும் ஆவல் மேலிட்டது. வசந்தன் என்னைப்பற்றி உயர்வாக அண்ணியிடம் உண்மையைத்தான் கூறியிருக்க வேண்டும்! அவருக்கும் என்னைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது தெரியவந்தது. வருடங்களும் உறுண்டோடி அந்த ஆவலும், விருப்பமும் நிறைவேறுமுன் எங்கள் வாழ்க்கைப் பாதை தடம்மாறியது.  
 
சிங்களத்தில் சித்தி பெறாவிட்டால் சம்பள உயர்வு இல்லை, பதவி உயர்வும் இல்லை என்ற எழுதாத சட்டம்! ஆலையில் நிலையானபோது! நிலம் துறந்து புலம் அடைந்த காலம்.... 83 கலவரமும் ஏற்படவே குடும்பமும் சொந்தம் பந்தம் பிரிந்து என்னிடம் வந்துவிட்டனர். வசந்தனைத் தவிர மற்ற அனைவருமே கனடா சென்றுவிட்டதாக அறிந்தேன். காலம் உருண்டோடியது. பிள்ளைகள் தமிழைத் தொடர்ந்து படிப்பதற்காக, வார இறுதியில், இங்கு உருவாக்கப்பட்ட தமிழாலயத்திற்கு எங்கள் பிள்ளைகளைக் கூட்டிச்செல்வது வழக்கமாகியது. அங்கு வரும் பிள்ளைகளின் பெற்றோருடன் அறிமுகமாகும் சந்தற்பமும் ஏற்பட்டது. அப்படி அறிமுகமான இளம் தாய் ஒருவர்தான் வந்தனா. வசந்தனின் தங்கை என்று அறிந்ததும் அறிமுகம் நெருக்கமானது. வசந்தனும் தற்போது கனடா வந்துவிட்டதாக தெரிந்தவுடன் அவனை  மீண்டும் என்னுடன் தொடர்புபடுத்த தொலைபேசியும் அடிக்கடி அழைத்தது. அண்ணி எப்படி என்றேன். காதல் கல்யாணம் என்றால் வந்தனா இங்கு எங்களுடன் கனடாவிலேயே இருந்திருப்பாள். அண்ணியின் வளர்ப்பு, அவளுக்கு அதெல்லாம் தெரியாது. குறிப்பு சாதகம் பார்த்துச் செய்ததால் அது அவளைக் குடிபெயர்த்து நீ இருக்கும் நாட்டிற்கு கொண்டுவந்து விட்டது என்றான். "மச்சான் எனக்கு இன்னமும் கனடா கடவுச்சீட்டுக் கிடைக்கவில்லை நீ உன் குடும்பத்துடன் இங்கு வந்துபோகலாம் தானேடா என்றான்". அண்ணியின் வளர்ப்பு என்றதும் வந்தனாவிடம் இனம்புரியாத ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. 
 
கனடாவில் தன் குடும்பத்துடன் இருந்த என் சகோதரியும் பலதடவைகள் என்னை அழைத்ததால் பிள்ளைகளின் பள்ளிக்கூட விடுமுறையில் கனடாவுக்கு விமானமேறினோம். அற்புதமான நயாகரா நீர்வீழ்ச்சி, உயர்ந்த தொலைக்காட்சிக் கோபுரம், இன்னோரன்ன பிறவும் பார்த்து மலைத்து, ஒரு கோவிலில் கூண்டில் இருந்த காக்காவுக்கும் சனிதோசம் போக சோறூட்டி மகிழ்ந்திருந்த நேரத்தில், வசந்தன் ஞாபகம் ஏற்படவே தொடர்பு கொண்டேன். அடுத்த நிமிடமே வீட்டிற்குப் பறந்து வந்துவிட்டான். வீட்டில் அவனை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அவனைக் கண்டவுடனேயே "வசந்தனா அண்ணி எப்படி இருக்கிறா?" எனது தமைக்கையாரின் முதல் கேள்வியே அப்படி இருந்தது. "இவர்களைத் தெரியுமா?" என்று அக்காவிடம் வியந்து கேட்டேன். "தெரியும் அப்படி ஒரு அண்ணி கிடைக்க இவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றும் வாழ்த்துக் கூறியதோடு "இவர்கள் எங்களுக்குத் தூரச்சொந்தமடா" என்றும் கூறினார். வசந்தனோடு நட்பு ஏற்பட்ட கதையை தேனீரோடு அனைவரும் சுவைத்தனர். "நாளைக்கு நீங்கள் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும். மதியச்சாப்பாடு அங்குதான்" வசந்தன் கூறினான். மறுநாள் வசந்தன் வீட்டில் எங்களுக்கு வரவேற்பு தடல்புடலாக இருந்தது.
 
மதிய உணவிற்கு நேரமிருந்ததால் முதலில் பலகாரமும் தேனீரும் பிள்ளைகளே பரிமாறினார்கள். தமிழ் அவர்களிடம் கொஞ்சி விளையாடியது ஆச்சரியமாக இருந்தது. ஏன் என்றால்! கனடா பிள்ளைகளுக்கு அனேகமாக தமிழ் என்றால் அலேர்யியாம்!! கனடாவுக்கு நாங்கள் வந்ததிலிருந்து அங்கு தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் பேசுவதை, எனது அக்காவீட்டிலும் சரி கேட்டதில்லை!! "எல்லாம் எனது மூத்த மருமகளின் பயிற்சி" வசந்தனின் அப்பாவின் முகம் பெருமையில் பூரித்தது. அண்ணியைக் காணும் ஆவல் அதிகமாகியது. மதிய உணவு தாயாரித்து முடிவதற்கிடையில் நாங்கள் வந்துவிட்டதால் அண்ணியும் அவர் மாமியாரும் வெளியேவர சிறிது தாமதமாகியது. அக்கா வந்ததுமே நேராக அடுக்களைக்குள் சென்றுவிட்டதால் அவர்கள் அந்நியோன்னியத்தின் ஆழம் தெரிந்தது. சிறிது நேரத்தில் அவர்கள் எங்களை நோக்கி வந்தனர். வசந்தனின் அண்ணியைச் சந்திக்க வேண்டுமென்ற நீண்டநாள் ஆசை அன்று நிறைவேறப் போகிறது! ஆவல் அலைமோதியது! முதலில் வந்தது வசந்தனின் அம்மாவாக இருக்கவேண்டும். அடுத்தது எனது அக்கா. பின்னால் தேவதைபோன்ற கரு கரு என்ற கூந்தலுடன்! அதுதான் அண்ணியாக இருக்கவேண்டும். "வணக்கம்!" என்றேன்... ம்.. என்று இறுதிச் சொல்லில் மூடிய எனதுவாய், திறந்து! "கெளசல்யா! நீ.....யா.! நீங்களா...!!" என்று என்னை அறியாது கேட்டுவிட்டது. ஆச்சரியத்தில் நிலைகுத்திய கண்கள் நகரவில்லை...!! 
 
"மச்சான் அண்ணியை உனக்குத் தெரியுமாடா?" என்றான் வசந்தன். நினைவுலகத்திற்குத் திரும்பிய நான். தடுமாறி, நாங்கள் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்றேன். எல்லோரும் ஆச்சரியத்துடனும் ஆனந்தத்துடனும் ஆரவாரப்பட்டார்கள். "உலகம் எங்கெங்கெல்லாம் கொண்டுசென்று ஆட்களை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது." கெளசல்யாவின் மாமனார் அதிசயத்தை வெளியிட்டார். சிறிது பிரமை நீங்கிக் கெளசல்யாவைப் பார்த்தேன். பேயறைந்த முகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அன்று அவள் முகத்தில் பார்த்தேன். ஒரு நொடிப்பொழுதுதான் சட்டென்று முகம் தாழ்ந்துவிட்டது. உடம்பு தடுமாறியது சற்றுத் தெரிந்தாலும் அது உள்ளூர நடுங்கியதை நான்மட்டுமே உணர்ந்தேன். "எனக்கு உங்களைத் தெரியாது, ஞாபகமில்லை." என்ற மெல்லிய வார்த்தை அங்கு அனைவரையும் கடந்து எனக்கும் கேட்டது. 'எவர் மனமும் என்னால் நோகக்கூடாது என்ற எண்ணத்துடன் வாழ்பவன் நான். உன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டேன். உன்னைத் தெரியும் என்று நான் அடித்துச் சொல்லியபோது நீ தெரியாது என்றால் அது எனக்கு அவமானமல்லவா!' என் பார்வையில் அவள் அதனைப் புரிந்து கொண்டது தெரிந்தது, ஆனாலும் "உங்களைத் தெரியாது" என்று மீண்டும் அவள் சொல்லியபோது! அதனை இயல்பாகவே கேட்பவர் எண்ணும்படி சொல்லி அமைதியானாள். அவள் அமைதியானாலும் பூனை நுளைந்த கூண்டில் உள்ள கிளியைப்போன்று நடுங்கி அங்கிருந்து வெளியேறப் படபடத்தது எனக்கு மட்டுமே தெரிந்தது. 
 
"சிலவேளை கெளசல்யா சாடையில் வேறு யாரையாவது நீங்கள் பார்த்திருக்கலாம்! எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தீர்கள்?" கெளசல்யாவுடைய மாமியாரின் கேள்வியை வளரவிடாமல், "வசந்தன் உனக்கு எப்போ கடவுச்சீட்டுக் கிடைக்கும்" கதையை மாற்றினேன். அது உடனே பலன் தந்தது. 'கெளசல்யா நீ நினைப்பதைப் போன்றவன் நானில்லை. என்னால் எவருக்கும் துன்பம் நேரக்கூடாது என்ற எண்ணத்துடன் வாழ்பவன். நீ எந்தப் பயமும் கொள்ளத் தேவையில்லை' என்று அவள் பயத்தைப் போக்குவதற்காக, அவளைத் தனியே சந்திப்பதற்கு நான் எடுத்த முயற்சிகள் எதுவுமே சாத்தியப் படவில்லை. ஆனால் அவள் என்னை அறிந்துகொண்டாள் என்பதை வந்தனா எனக்கு பின்பு உணர்த்தினாள். தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் என்னைக் கண்டதும் அங்கிள் என்று அவள் குழந்தை என்னைவந்து கட்டிக்கொள்ளும்போது மலரும் அவள் முகம் இப்போது மலர்வதில்லை. அங்கிள் என்று கனிவோடு அவளும் அழைக்கும் வழக்கமும் அடியோடு நின்றுபோனது. கெளசல்யா என்னைப்பற்றி! எதை! எப்படிச் சொன்னாளோ! யாருக்குத் தெரியும்!! வசந்தனின் தொடர்புமட்டும் வழமைபோல் தொடர்ந்தது ஆறுதல் அளித்தது. கனடாவில் எனக்குத் தன் முகம்காட்ட மறுத்த கெளசல்யா! 5ம் பாகத்தில் உங்களுக்குக் காட்ட முன்வருவாளா!! நம்பிக்கை உண்டு. பார்க்கலாம்.....          
 
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணி உங்கட முன்னால் காதலியா பான்ஞ் :D

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல, பாஞ்சின் ' பாய்ச்சல்' நன்றாகவே உள்ளது!

 

அண்ணியின் செயலிலும் ஒரு நியாயம் இருக்கின்றது என்றே நினைக்கிறேன்!

 

ஒரு தேன்கூட்டின் ராணித் தேனியானது, தனது ஆழுமையை இழக்கும்போது, தேன்கூடே கலைந்து விடும் சாத்தியங்கள் தான் அதிகம்! :o

 

அதனால் அடக்கி வாசித்திருக்கலாம்! அப்படியே அதனை விட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்வதே எல்லோருக்கும் நல்லது! :D

 

எனக்குச் சிங்களத்தில், ஓ லெவெலில் 'கிரெடிட்' என்று நான் சொன்னால் நம்பவா போகின்றீர்கள், பாஞ்ச்? :icon_idea:

 

குறும்புகள் தொடரட்டும்!

நல்லா இருக்கு கதை போகும் விதம் .,

பீம்சிங்கின் படம் விரும்பி பார்ப்பீர்களோ :D .

  • கருத்துக்கள உறவுகள்

'பாஞ்சு'வின் ஆட்டோகிராப் இடையில் விலகி( தண்ணி சமாச்சாரம் :wub: ) முடிவில் மனதை தொட்டது.

 

இளமையில் கஷ்டப்பட்டவர்களே முதுமையில் அமைதியுடன் வாழ்வது கண்கூடு.

 

வாழ்க வளமுடன், நலமுடன் பாஞ்சு! betende-smilies-0003.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணி உங்கட முன்னால் காதலியா பான்ஞ் 

 

என்னை அறிந்த நாள்முதல், என் அம்மாவின் ஆசசைப்படியும், என் இதயத்தில் புகுந்தது ஒரே ஒரு காதலிதான். அவர் இப்போது என் மனைவி. :wub:
 

 

ஒரு தேன்கூட்டின் ராணித் தேனியானது, தனது ஆழுமையை இழக்கும்போது, தேன்கூடே கலைந்து விடும் சாத்தியங்கள் தான் அதிகம்! 

 

அதனால் அடக்கி வாசித்திருக்கலாம்! அப்படியே அதனை விட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்வதே எல்லோருக்கும் நல்லது! 

 

எனக்குச் சிங்களத்தில், ஓ லெவெலில் 'கிரெடிட்' என்று நான் சொன்னால் நம்பவா போகின்றீர்கள், பாஞ்ச்? 

 

குறும்புகள் தொடரட்டும்!

 

ஆழுமை இழந்த ஒரு ராணித் தேனி, தேன்கூடு ஒன்றைக் கட்டியெழுப்பிய உண்மைக் கதைதான் இது. ராணித் தேனி ஆழுமை இழக்கக் காரணமாக இருந்த சந்தற்பங்களை அறியத் தவறியவர்களும் அறிந்து அவற்றைத் தொடரக்கூடாது என்பதை வலியுறுத்தப் பதிவைத் தொடரவுள்ளேன். :rolleyes:   
 
 

நல்லா இருக்கு கதை போகும் விதம் .,

பீம்சிங்கின் படம் விரும்பி பார்ப்பீர்களோ .

 

வித்துவான் வேந்தநாயரிடம் படித்த தமிழ். யாழில் எழுதத் தமிழ் சிறி அவர்கள் தந்த ஊக்கம்..! இவர்கள் என்னை இங்கு எழுவைத்தார்கள்!!. அந்தக் குருவானவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்!! :)  :) 
 
"வணக்கம் பஞ்ச்,
உங்க‌ளை... அன்புட‌ன் யாழில் வ‌ர‌வேற்கின்றேன்.
உங்களது பதிவுகளைப் பார்த்தேன்... நன்றாக இருந்தது. உங்களிடம் நல்ல, எழுத்தாற்றல்... உள்ளது.
யாழ் அறிமுகப் பகுதியில்... உங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு... நிறைய எழுதலாமே...
அன்புடன்,
-தமிழ் சிறி-"
 

 

'பாஞ்சு'வின் ஆட்டோகிராப் இடையில் விலகி( தண்ணி சமாச்சாரம்  ) முடிவில் மனதை தொட்டது.

 

இளமையில் கஷ்டப்பட்டவர்களே முதுமையில் அமைதியுடன் வாழ்வது கண்கூடு.

 

வாழ்க வளமுடன், நலமுடன் பாஞ்சு! 

 

தமிழினம் இன்னமும் முதுமை அடையவில்லையா.?  அமைதியடைய..??  :o
 
தண்ணி அடிப்பது! அது! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! அதனால் அளவு மிஞ்சுவதில்லை. :D  :lol:  
 
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்....நல்ல தொடர்போலகிடக்கு .....தொடரட்டும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி புத்தன் அவர்களே! என் வாசகர்களில் ஒருவராகக் கண்டதில் மகிழ்ச்சி. :D

  • கருத்துக்கள உறவுகள்

வாலிப வயதுக் குறும்பு ...சுவாரசியமாக   செல்கிறது மேலும் தொடருங்கள். :D

அனுபவங்களை அழகாக கொண்டு செல்கிறீர்கள். மனசில் பட்டத்தை அப்படியே எழுதுகிறீர்கள். தொடருங்கள் ...

 

அண்ணியை பற்றிய மர்மம் நீடிக்கும்போதே இப்படி ஏதாவது இருக்கும் என்று தோணியது. பல இடங்களில் அண்ணியை புகழ்ந்தும், காண துடித்ததையும் எழுதும்போதே உங்களுக்கு அவவின் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் அன்பும் தெரிகிறது. :) 

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சு !  பஞ்ச மாதாக்களில் ஒருவராக அண்ணியும் வருகிறார்...!  அண்ணி அது ஒரு உன்னதமான ஸ்தானம் , நான் முன்பு  "அண்ணியும் ,அண்ணியாகிய நானும்" என்று ஒரு கதை எழுதினேன் இப்ப எங்க கிடக்கோ தெரியவில்லை...! :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கதை எழுதிவதினால் அண்ணி குடும்பத்தில சில குழப்பங்கள் வந்தாலும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் இம்முறை அனுபவபகிர்வில் கைதேர்ந்த எழுத்து நடை கைவந்திருக்கிறது உங்களுக்கு. அண்ணி நிச்சயம் ஒருகாலத்தின் நாயகியாக இருந்திருப்பா. வாசகரை அடுத்த தொடருக்காக காத்திருக்க வைத்த எழுத்து.....தொடருங்கள்....

 கெதியில எழுதி முடீச்சா நாங்களும் வாசிச்சு முடிப்பமெல்ல. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது எழுத்துக்கும் அங்கீகாரம் அளிக்கும் உறவுகளான நிலாமதி, பகலவன், சுவி, கந்தப்பு, சாந்தி அனைவருக்கும் என் நன்றிகள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கதை எழுதிவதினால் அண்ணி குடும்பத்தில சில குழப்பங்கள் வந்தாலும் வரலாம்.

 

எனது இந்த அனுபவப் பகிர்வு 90 சதவிகிதம் உண்மையானாலும்.! 10 சதவிகிதம் கற்பனையானது..!! ஒரு பெரு மரத்திலிருந்து பெறப்பட்ட சிறிய குச்சி, தீக்குச்சியாகி அந்த மரத்தையே எரித்துச் சாம்பலாக்கி விடுவதுபோலவே, எனது கற்பனை அந்த உண்மையைச் சம்பவங்களின் கதாநாயக, நாயகியர்களைச் சாம்பலாக்கிவிட்டுள்ளது. நீங்கள் யாராவது அண்ணியைத் தேட முயன்றாலும்..! தோடுடைய செவியன் தேவாரம் படித்து, சுடலைப் பொடியைத்தான் பூசமுடியும்.! பின்பு எப்படிக் குடும்பத்தில் குழப்பங்கள் வரும்...?? கந்தப்பு அண்ணை! நீங்கள் அர்யுன்னையும், ராசவன்னியரையும் துணைக்குச் சேர்த்துத் தலைகீழாக நின்றாலும்..... கண்டுபிடிக்க முடியாது!!!. :D:lol::o

  • 1 month later...

கதைக்கு வாழ்த்துக்கள் பாஞ்சு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.