Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கேதீஸ்வரத்து எலும்புகளுடன் ஓர் இதயம்...!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருக்கேதீஸ்வரத்து எலும்புகளுடன்
ஓர் இதயம்...!

 
எஸ். ஹமீத்.
 
**மன்னார் குடாவை
   மரணக் குழியாய் மாற்றிய
   மா பாதகர் யார்...?
 
 
**மாந்தை வயல்களில்
  மனிதர்களை விதைத்த
  மனசாட்சியற்றோர் யார்..?
 
 
**சிவ தலத்தை
  சவ தளமாய் ஆக்கிய
  சண்டாளர் யார்..?
 
 
**அது ஒரு காலம்...
 
 
**தோண்டத் தோண்ட
  மாணிக்கங்களும் இரத்தினங்களும்
  மரகதங்களும் வைரங்களுமாய்.
 
 
**இப்போதெல்லாம்...
   பல்லாங்குழியாடப்
   பள்ளம் தோண்டினாலும்
   பல்லிளித்தபடித் தெரிகின்றன
   மனிதக் கூடுகள்...!
 
 
**உச்சக்கட்டத்தில் கண்டுபிடிப்புகள்
   உலகெங்கும் நிகழ்கின்றன...
  
 
**மருத்துவத்தில்-தொழில் நுட்பத்தில்
   விண்வெளியில்-விவசாயத்தில்
   தொடர்பாடலில்-இடர் முகாமையில்
   பிரயாணங்களில்-பிற ஞானங்களில்
   உச்சக்கட்டத்தில் கண்டுபிடிப்புகள்
   உலகெங்கும் நிகழ்கின்றன...
 
 
**இலங்கையிலோ
  இரவு பகலாய்
  இறந்த உடல்களைக்
  கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்...!
 
 
**இதுவரை எழுபதென
   எண்ணிச் சொல்கின்றார்...
   இன்னும் எழுநூறோ ஏழாயிரமோ
   யாரறிவார்...?
 
 
**உன் அப்பாவோ அம்மாவோ-
  அண்ணனோ- தம்பியோ-
  அவன் மாமனோ-மச்சானோ-
  மாலை சூட்டி மார் தழுவிய
  மனைவியோ-அவள் மழலையோ-
  என் நண்பனோ-தோழியோ-
  தோழியின் அக்காவோ-தங்கையோ-
  அந்த
  எண்ணிக்கையில் ஒருவராய்
  இருக்கலாமோ...?
 
 
**அந்த
   பாடல் பெற்ற தலத்தில்
   பாடை ஏறாமலேயே
   புதைக்கப்பட்டோருக்கு
   இரங்கல் பாடல் இயற்ற
   என்னிடத்தில் சக்தியில்லை...
 
 
**அந்தத் திருத் தலத்தில்
   உக்கிப் போன
   எலும்புகளுடன்
   எனது இதயமும்...!

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஆக்கம். வாழ்த்துக்களுடன் நல்வரவு ஹமீத்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் அன்புக்கு நன்றி இசைக்கலைஞன் ...!

-எஸ்.ஹமீத்.

  • கருத்துக்கள உறவுகள்

**அந்த

   பாடல் பெற்ற தலத்தில்

   பாடை ஏறாமலேயே

   புதைக்கப்பட்டோருக்கு

   இரங்கல் பாடல் இயற்ற

   என்னிடத்தில் சக்தியில்லை...

 
 
**அந்தத் திருத் தலத்தில்

   உக்கிப் போன

   எலும்புகளுடன்

   எனது இதயமும்...!

 

 

ஹமீது இந்த இடத்தில் உங்கள் இதயத்துடன் எங்கள் இதயமும் கலந்துவிடுகின்றது. இந்த நிகழ்வு உங்கள் இதயத்தினை எவ்வளவு பாதித்திருக்கின்றது என்பதை கடைசி வரிகளில் உணரமுடிகின்றது.

 

வரவுக்கு நன்றி. தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்! :)

நல்லதொரு கவிதை ஹமீத். தொடர்ந்து மேலும் மேலும் எழுதுங்கள்.

 

நன்றி

நாளை கல்முனையிலும் இவையெல்லாம் நடந்தேறுமுன்னம் கண்விழித்திருக்கிறாய் சகோதரனே!

உங்கள் சகோதர எண்ணம் எண்ணி மனதால் நிறைகின்றேன் இன்று. உங்கள் வரிகளில் தெரிகிறது மனிதாபிமானம்.

தொடரட்டும்............. ! வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றிகளும்!!!! :)

 

Edited by கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்வாலி,நிழலி, கவிதை......தங்கள் அன்புக்கு நன்றி 

 

-எஸ்.ஹமீத்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே அசத்தலாக  உள்ளது உங்கள் மனிதாபிமான உணர்வுக்கு  என் பாரா ட்டுக்கள் மேலும் பல பதிப்புக்கள் தந்து  யாழ களத்தில் சிறக்க வேண்டும்

ஆரம்பமே அசத்தல்... தொடரட்டும் உங்கள் படைப்புகள்....

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். :)

 

யாழ் களத்திற்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி, மணிவாசகன், மற்றும் துளசி ஆகிய அன்புள்ளங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஹமீத்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் இன்னமும் உயிரோடு இருக்கிறது என்பதை சில மனிதர்கள் அங்காங்கே நிரூபிக்கத் தவறுவதில்லை. இந்தக் கவிதைமூலம் மனிதம் உங்களிடமிருந்தும் வெளிப்பட்டுள்ளது. எஸ். ஹமீத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! வரவு நல்வரவாகுக! படைப்புகள் தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளாடி இராணுவ முகாமைக் கடந்து போன வேளையில்.....

 

நீலப் பட்டாடையை,

நிலவுக்குக் கடன் கொடுத்துவிட்டு,

நிர்வாணமாய்க் கிடந்தாள் கடல் மகள்!

 

விடிகின்றதே பொழுதென்ற அவசரத்தில்,

ஆடைகளை மெல்லப் பறித்தெடுக்கும் காலை!

 

நிர்வாணத்தின் வாசனை,

என்னையும்  ஊருக்கு ஒருதரம்,

அழைத்துப் போனது!

 

அவளைப்போல,

நிலமகளும் தனது ஆடை களைந்தால்,

எவ்வளவு உண்மைகள் வெளிவரும்?

 

அல்லைபிட்டி, செம்மணி,.........

எழுவான் கரை, படுவான் கரை...

இரக்கமில்லாத அரக்கர்களின்,

கோரப் பற்களின் நீளம் தெரியவரும்!

 

இரை தேடும் ஓநாய்களுக்கு,

அணிலுக்கும், ஆட்டுக்குட்டிக்கும்,

வேறுபாடு தெரிவதில்லை!

 

கறை படிந்து விட்ட,

இறை தூதனின் வார்த்தைகளுக்குத்,

தூசு தட்டுகின்றாய் சகோதரனே!

சகோதரத்துவம் எனும் வார்த்தைக்குச்,

சாணை பிடித்து 'மழுங்கு' நீக்கியிருக்கிறாய்!

 

அடிக்கடி வா,

எனது சகோதரனே! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரன் புங்கையூரான் அவர்களே,

 

தங்களின் கருத்துக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்..!

 

''அராஜகத்தின் வேர்களில் அமிலமழை பொழியட்டும்...
இதயமற்றோர் தலைகளில் இடிகள்பல வீழட்டும்..
கொலைகாரர் மாளிகைகள் கொழுந்து விட்டெரியட்டும்...
கொடுங்கூற்றம் சுழன்றெழுந்தேயவர்
கொடுங்கோலைச் சாய்க்கட்டும்...

 

வலிசுமந்து நிலம் புதைந்தவெம்
சொந்தங்களுக்கு சொர்க்கமே கிடைக்கட்டும்...
அந்த அப்பாவிகளின் ஆன்மாக்களை  
அமைதியும் சாந்தியும் தழுவட்டும்...!''

 

மற்றும் நந்தன், paanch, ammaa  ஆகியோருக்கும் என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும்...!

 

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் உறவே

கவிதைதனில்

தமிழ் இனம் சுமந்த

வலி  சொல்லி  நிற்கின்றீர்

 

வருந்தக்கூடிய  நிகழ்வுகள்

மறக்கப்படணும்

தயாரா தமிழினம்??

 

 

எதிரி

எம்மைவிட வேகமாய்

மண்ணிலும்

மக்களுக்குள்ளும் பரவியபடி..........

 

வேறுபட்டு  நிற்பது

எம்மை  

நாமே மலீனப்படுத்துவதாய்....

எதிரிக்கு

வலிமை தருவதாய்

உணர்வோமா  நாம்..............

 

சிறுபான்மை இனம் நாம்

சிதறுண்டு கிடப்பது

சிறுகச்சிறுக அழித்துவிடுமே எம்மை...

 

ஒன்றாவோம் என்றுரைத்தீர்

நன்றி ஐயா

 

காத்துக்கிடக்கின்றோம்

கை கோர்த்து

தமிழனின் விடுதலை நோக்கி  நடக்க........

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி விசுகு...!

 

தமிழ்த் தளத்தில்
ஜனனித்தவர்கள் நாம்...
 

தமிழ்த் தடத்தில்
பயணித்தவர்கள் நாம்...
 

தமிழ்த் தரையில்
சயனித்தவர்கள் நாம்...

 

எனில்,
தமிழால் இணையத்
தடையேதும் உண்டோ...?

 

அவ்விதம்-
இணையும் படைக்கு
இணையேதும் உண்டோ...?

நன்றாக இருக்கிறது ஹமீத் உங்கள் கவிதை.

 

தமிழால் ஒன்றுகூடி யாழை மலரச்செய்வோம்.

 

கவிதைகளால் சிந்து பாடி மனங்களை மலரச் செய்வோம். 

 

தங்கள் புதுவரவை உறவுடன் வரவேற்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி சகோ.மல்லையூரன் அவர்களே..! இதயங்களால்  இணைவோம்...இனிதே வாழ்வோம்..!!

  • கருத்துக்கள உறவுகள்
எஸ். ஹமீத் கவிதைக்கு நன்றி.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எஸ். ஹமீத் கவிதைக்கு நன்றி.

மிக்க நன்றி nunavilan...!

  • கருத்துக்கள உறவுகள்

ஹமீத் உங்கள் கவிதைகளில் தமிழ் மக்களின் இன்னல்கள் உணர்வுகளால் பின்னப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. மொழியால் மட்டுமன்றி.. மனிதமும்... மண்வாசமும் ஊட்டிய அந்த சொந்தத்தின் விளைவாக இது இருக்க வேண்டும்.

 

உங்களை அனைத்துப் படைப்புக்களுக்கும் பாராட்டுக்களும் நன்றியும்.

 

தொடர்ந்து எழுதுங்கள். :)

சிக்கனமான வரிகள் ஆனால் சிந்திக்க வைக்கும் வரிகள் ..

 

வாழ்த்துக்கள் ஹமீத் இணைத்து இருங்கள் யாழுடன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹமீத் உங்கள் கவிதைகளில் தமிழ் மக்களின் இன்னல்கள் உணர்வுகளால் பின்னப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. மொழியால் மட்டுமன்றி.. மனிதமும்... மண்வாசமும் ஊட்டிய அந்த சொந்தத்தின் விளைவாக இது இருக்க வேண்டும்.

 

உங்களை அனைத்துப் படைப்புக்களுக்கும் பாராட்டுக்களும் நன்றியும்.

 

தொடர்ந்து எழுதுங்கள். :)

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி,nedukkalapoovan.

சிக்கனமான வரிகள் ஆனால் சிந்திக்க வைக்கும் வரிகள் ..

 

வாழ்த்துக்கள் ஹமீத் இணைத்து இருங்கள் யாழுடன் .

கருத்துக்கு மிக்க நன்றி, அஞ்சரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.