Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் 24

கிணற்றடியில் பல்லை மினுக்கியபடியே பொன்னம்மாவீட்டை எட்டிப்பார்த்தான். பொன்னமக்காவின் அழகில் மயங்கியதுண்டு.தோட்டது மரக்கறிகளை கொடுத்து பொன்னம்மாவை ரசித்தான்.அவளுக்கு எதுவும் தெரியாது.அவன் பொன்னமாவை ரசிக்க 

 

 

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என்று கண்டபின்பும். அந்தப் பூட்டியும் பூட்டனும் புதிய துணையோடு புதுவாழ்வைத் தொடங்குவதையும் மேலைநாட்டுச் சமூகம் மகிழ்வோடு வரவேற்றுக் கொண்டாடுகிறது. எங்கள் தமிழ் சமூகத்திலும் அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால் என்ன? என்ற சிந்தனை புத்தனைத் தூண்டுவதுபோல் தெரிகிறது. இது வரவேற்கப்படுமா? வறுத்தெடுக்கப்படுமா? உறவுகளின் கருத்துகளிலும் பதம் காண முடியும். மேலும்; சொந்த மண்ணுக்கு மீண்டும் அழைத்துவந்து அதன் வாசனையை நுகரவைத்த திறன்கண்டு வாழ்த்துக்கள்!!   :rolleyes:  :rolleyes:
  • Replies 256
  • Views 22.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் எழுத்து உண்மையில் பழைய விடயங்களை கிளறி விட்டது உண்மை. எத்தனையோ ஆண்டுகளாக மறந்துபோய் இருந்த விடயங்கள் நினைவில் வந்து போயின. தொடருங்கள் புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொஞ்ம் வாசித்து பாத்தேன்.முடியிற மாதிரி கானலை கையை விட்டுட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொஞ்ம் வாசித்து பாத்தேன்.முடியிற மாதிரி கானலை கையை விட்டுட்டன்

 

ஆரம்பமானது சுமேரியரால் அது ஆடி அடங்குவதும் சுமேரியரால். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் மாத்தயா, எலக்கிரி கத்தா, அபி ஒக்கம எக்காய், சின்ஹ கொடிய எக்கட அல்லமு.... :lol:  :D

 

யாராவது ஒரு முஸ்லீம் பெண்ணை கதையில் இணையுங்கள் அப்பா! ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் ஒன்றாக வாழலாம்.  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் மாத்தயா, எலக்கிரி கத்தா, அபி ஒக்கம எக்காய், சின்ஹ கொடிய எக்கட அல்லமு.... :lol:  :D

 

யாராவது ஒரு முஸ்லீம் பெண்ணை கதையில் இணையுங்கள் அப்பா! ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் ஒன்றாக வாழலாம்.  :D  :icon_idea:

 

நாங்கள் இணைந்தாலும் அவையள் இணையமாட்டினமே ......மனித உரிமைகள மதிக்கப்பட்டால் ஒன்றாக வாழலாம் இல்லையென்றால் புலிகள்,சிங்கங்கள்,ஒட்டகங்கள் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இணைந்தாலும் அவையள் இணையமாட்டினமே ......மனித உரிமைகள மதிக்கப்பட்டால் ஒன்றாக வாழலாம் இல்லையென்றால் புலிகள்,சிங்கங்கள்,ஒட்டகங்கள் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது.

 

 

அவர் நாலில் ஒன்றாக  இருந்துவிட்டுப்போகலாம் என்கிறார்.....

இது தனிப்பட்ட முடிவா

இனத்தக்கான முடிவா  என்பது தான்  சிக்கல்... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கதைக்குள் வாறம்  என்று நினைக்கும் அளவுக்கு நிறைய விடையங்களை திணித்து எழுதப்படுவதனால் வாசிப்பவர்களுக்கு வோர் அடிக்குது..தப்பாக சொல்லவில்லை..எழுதுவதோடு உங்கள் பங்கு முடிந்து விட்டது படிச்சால் என்ன விட்டால் என்ன என்று இருக்க கூடாது..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தப்பாகச் சொல்லவில்லை..யாயினி அவர்களே!.. "யாராவது ஒரு முசுலீம் பெண்ணை கதையில் இணையுங்கள் அப்பா!" என்று கொழும்பன் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளனர். அதற்கு நீங்கள் ஏன் மொட்டாக்குப் போட்டு முகத்தை மூடவேண்டும்? தப்பாகச் சொல்லியிருந்தால் அடியேனை மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கதைக்குள் வாறம்  என்று நினைக்கும் அளவுக்கு நிறைய விடையங்களை திணித்து எழுதப்படுவதனால் வாசிப்பவர்களுக்கு வோர் அடிக்குது..தப்பாக சொல்லவில்லை..எழுதுவதோடு உங்கள் பங்கு முடிந்து விட்டது படிச்சால் என்ன விட்டால் என்ன என்று இருக்க கூடாது..

 

உங்கள் கருத்து கவனத்தில் எடுக்கப்படுகிறது......பகிர்வுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தப்பாகச் சொல்லவில்லை..யாயினி அவர்களே!.. "யாராவது ஒரு முசுலீம் பெண்ணை கதையில் இணையுங்கள் அப்பா!" என்று கொழும்பன் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளனர். அதற்கு நீங்கள் ஏன் மொட்டாக்குப் போட்டு முகத்தை மூடவேண்டும்? தப்பாகச் சொல்லியிருந்தால் அடியேனை மன்னிக்கவும்

 

நான் உங்கள் கருத்தையோ இல்லை மற்றவர்களின் கருத்தையோ பார்த்துட்டு என் கருத்தை எழுதவில்லை,அப்படி எழுதுபவளும் அல்ல..தவறாக கருதிக் கொள்ள வேண்டாம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் வேகமாக நகர்ந்த கதை இப்போது ஆமை வேகத்தில் செல்கின்றது. மதுரனையும் நிலாவையும் மீண்டும் ஊருக்கு அனுப்பி வைத்தால்(நாடு கடத்தல் :lol: ) கதை சுவாரசியாமாகச் செல்லும் என நினைக்கின்றேன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி நானும் நீண்ட நாள் எழுதவில்லை. விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ஒரு கூட்டு முயற்சி எடுப்பம் கவலை வேண்டாம்

 

  • கருத்துக்கள உறவுகள்

சரி நானும் நீண்ட நாள் எழுதவில்லை. விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ஒரு கூட்டு முயற்சி எடுப்பம் கவலை வேண்டாம்

சுபம்  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டமில்முரசு அவுஸ்ரேலியா ........................................................................................................................................................................................................................திரும்பிப்பார்க்கிறேன் -- முருகபூபதி -வரலாற்றுப்பதிவாளர் சிட்டி சுந்தரராஜன் . இணைந்திருந்து இயங்கிய இலக்கிய வரலாற்றுப்பதிவாளர் சிட்டி சுந்தரராஜன் தமிழக இலக்கிய முன்னோடிகளுடன் நெருக்கமான உறவைப்பேணியவர் ஆக்க இலக்கியப்படைப்புகளை இருவர் அல்லது மூவர் அல்லது நால்வர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் இணைந்து எழுதமுடியுமா? இம்முயற்சியை பரிசோதனையாகவே மேற்கொண்ட சிலரின் படைப்புகள் குறித்து அறிந்திருக்கின்றோம். பல வருடங்களுக்கு முன்னர் எஸ்.பொன்னுத்துரை - இ.நாகராஜன் குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம் - சு.வேலுப்பிள்ளை கனகசெந்திநாதன் - முதலானோர் இணைந்து மத்தாப்பு என்ற நாவலை படைத்தனர். பின்னர் எஸ்.பொன்னுத்துரை - வ. அ. இராசரத்தினம் - எம்.ஏ. ரஹ்மான் - சாலை இளந்திரையன் ஆகியோர் இணைந்து சதுரங்கம் என்ற நூலை எழுதினார்கள். 1970 களில் வீரகேசரி வாரவெளியீட்டில் அருண். விஜயராணி -தேவமனோகரி - மண்டூர் அசோக்கா - தாமரைச்செல்வி ஆகியோர் இணைந்து நாளைய சூரியன் என்ற தொடர்கதையை எழுதினார்கள். அதேபோன்று புலோலியூர் இரத்தினவேலோன் மற்றும் கோகிலா மகேந்திரன் இருவரும் இணைந்து நெடுங்கதையொன்றை எழுதியிருக்கிறார்கள். தற்பொழுது ஐரோப்பா - கனடா அவுஸ்திரேலியா - முதலான நாடுகளைச்சேர்ந்த பல எழுத்தாளர்கள் இணைந்து ஒரு தொடர்கதையை எழுதத்தொடங்கியிருக்கிறார்கள். படைப்பு இலக்கியமும் கரு - உருவம் - உள்ளடக்கம் சார்ந்ததுதான். ஒரு குழந்தையை ஒரு பெண்மாத்திரம்தான் கருவில் சுமந்து பெற்றெடுக்கமுடியும். அதுபோன்றதே படைப்பு இலக்கியமும். எனவே இருவரோ பலரோ இணைந்து ஒரு ஆக்க இலக்கியத்தை சிருஷ்டிக்க முடியாது என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். பேராசிரியர் கைலாசபதியும் அவரது மனைவி சர்வமங்களம் கைலாசபதியும் இணைந்து செஞ்சீனம் பற்றிய ஒரு பயண இலக்கியத்தை எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கியமான விமர்சகர் எஸ். வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்தும் சில விமர்சன நூல்களை எழுதியுள்ளனர். இவ்வாறு தனது இலக்கிய சகாக்களுடன் இணைந்து சில நூல்களை எழுதியிருக்கும் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் அவர்களைப்பற்றிய இந்தப்பதிவினை எழுத முற்படுகையில் அவர் - கு.ப.ரா.வுடன் இணைந்து எழுதிய – பாரதியை மகாகவியாக நிரூபிக்க முயலும் கட்டுரைகள் கொண்ட - கண்ணன் என் கவி - தி.ஞானகிராமனுடன் இணைந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி - சோ.சிவபாத சுந்தரத்துடன் இணைந்து எழுதிய தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் மற்றும் தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி ஆகியனவும் பெ.சு.மணியுடன் இணைந்து எழுதிய அதிசயப்பிறவி வ.ரா. என்பனவும் நினைவுக்கு வருகின்றன. பல வருடங்களுக்கு முன்பு 1975 காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன். நானும் மல்லிகை ஜீவாவும் கொழும்பு பாமன்கடையில் அப்பொழுது வசித்துக் கொண்டிருந்த சுந்தா சுந்தரலிங்கம் அவர்களைப் பார்க்க ஒரு மாலைவேளையில் சென்றோம். அங்கு சுந்தா - எம்மிடம் காண்பித்த சில ஒளிப்படங்களில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. சற்று வித்தியாசமான படம். சுந்தா தவில் வித்துவானாகவும். பரராஜசிங்கம் நாதஸ்வரக் கலைஞராகவும் இருவருக்கும் மத்தியில் தீட்சண்யமான கண்களுடன் ஒருவர் தாளம் தட்டியவாறும் காணப்பட்டனர். சுந்தாவிடம் கேட்டேன் ---- யார் இவர்? அவருடைய கண்களில் தீட்சண்யம் ஒளிர்கிறதே...? சுந்தாவை முந்திக் கொண்டு ஜீவா சொன்னார் - அவர்தான் சிட்டி. சிறந்த இலக்கிய விமர்சகர். சிட்டி புனைபெயர். இயற்பெயர் சுந்தரராஜன். பல ஆண்டுகாலமாக அயராமல் எழுதிக் கொண்டும் இலக்கியம் பேசிக் கொண்டுமிருந்த சிட்டி தமது 96 ஆவது வயதில் இறந்து விட்டதாக தமக்கு மின்னஞ்சல் கிடைத்துள்ளதாக – சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தொலைபேசியூடாக எனக்கு தகவல் சொன்னார். சிட்டி எப்பொழுதுமே நகைச்சுவையுணர்வுடன் எழுதியும் பேசியும் வந்தவர். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு பராசக்தி அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் - க்யூவில் தம்முடன் நின்ற பலர் தமக்கு முன்பே போய் விட்டதாகவும்.... தான் இன்னமும் க்ய+விலேயே நின்று கொண்டிருப்பதாகவும் --- வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறார். வரவிருக்கும் மரணத்தையும் நகைச்சுவையுடன் நயக்கும் சிட்டி தன்னை- I Am A Chronicler of Literature - என்றே அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பியவர். எனது வாழ்வில் சிட்டி அவர்களை மூன்று தடவைதான் சந்தித்து உரையாடியிருக்கிறேன். 1984 இல் சென்னையில் தீபம் காரியாலயத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பிலும் அதே ஆண்டு மயிலாப்பூரில் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இடம்பெற்ற இலக்கியச் சிந்தனை விழாவிலும் - பின்னர் 1990 ஆம் ஆண்டு அடையாறில் நண்பர் ரங்கநாதன் இல்லத்தின் மொட்டை மாடி கீற்றுக் கொட்டகையில் நடந்த மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுக நிகழ்வுக் கூட்டத்திலும் சிட்டியுடன் பேசியிருக்கிறேன். பச்சையப்பன் கல்லூரியில் சி.என்.அண்ணாத்துரையின் சக மாணவ நண்பனாக திகழ்ந்த சிட்டி - இலக்கிய உலகில் - வ.ரா. - கு.ப.ரா. புதுமைப்பித்தன் - சி.சு.செல்லப்பா - தி.ஜானகிராமன் உட்பட பல முன்னணி படைப்பாளிகளுடனும் இலங்கையர்களான சோ.சிவபாதசுந்தரம் - சுந்தா சுந்தரலிங்கம் ஆகியோருடனும் நெருக்கமான நட்பை பேணியவர். சுந்தா - அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்பும் தமது தொடர்பை கடிதங்கள் மூலம் பேணியவர். மேலே குறிப்பிடப்பட்ட அனைவரும் சிட்டியுடன் கியூ வில் நின்றவர்கள்தான். அனைவரும் முன்பே போய்விட இவர் சற்றுத் தாமதமாக 96 வயதில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சிட்டி குறிப்பிடும் Chronicler என்ற ஆங்கிலப்பதத்திற்கு தமிழில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரலாற்றுப்பதிவாளர் என அர்த்தம் கொள்ளலாம். பல சிறுகதைகளும் நாடகங்களும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் ஆய்வுகளும் எழுதியிருக்கும் சிட்டி அந்திமந்தாரை (சிறுகதைகள்) சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்) என்பனவும் எழுதியுள்ளார். வித்தியாசமான படைப்பாளி. தமது பலத்தையும் பலவீனத்தையும் வெளிப்படையாகச் சொன்னவர். ஏன் இவ்வாறு மற்றொருவருடன் இணைந்து சில முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறீர்கள்? என்று நாடகக்கலைஞரும் பொதுசன ஊடகவியலாளருமான பரீக்ஷா ஞாநி - ( இந்த ஞாநிதான் இம்முறை நடந்த இந்திய பாராளுமன்றத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டிருப்பவர்) சிட்டியிடம் கேட்டபொழுது - அதற்குக் காரணம் என் சோம்பல்தான். என்னால் பொறுமையாக உட்கார்ந்து நிறைய எழுத முடியாது. ஆனால் தகவல்களைத் திரட்டுவது ஒழுங்குபடுத்திப் பிரிப்பது பிறகு கோர்வைப்படுத்தி அதன் அடிப்படையில் டிக்டேட் செய்வது எல்லாம் எனக்கு சுலபம் - எனச் சொல்லியிருக்கிறார். (ஆதாரம்: சுபமங்களா நேர்காணல் - மே-1992) புதுமைப்பித்தனின் சில கதைகள் குறித்து இவர் சொன்ன கருத்துக்களினால் வெகுண்டெழுந்த – புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரும் - புதுமைப்பித்தனின் வரலாறு எழுதியவருமான தொ.மு.சி.ரகுநாதன் - மிகவும் காட்டமான குரலில் சுபமங்களாவில் சிட்டியை கடுமையாக விமர்சித்தார். அத்துடன் நின்றுவிடாமல் - புதுமைப்பித்தன் - விமர்சனமும் விஷமத்தனங்களும் என்ற விரிவான நூலையும் அவசர அவசரமாக எழுதி வெளியிட்டார். இவ்வாறு கண்டனங்களுக்குள்ளான சிட்டி - சோ.சிவபாதசுந்தரத்துடன் இணைந்து தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் (1989) எழுதி வெளியிட்ட பின்பு ஈழத்து எழுத்தாளர்களின் கடும் சீற்றத்துக்கும் ஆளானார். தெளிவத்தை ஜோசப் - எழுதிய மலையக சிறுகதை வரலாறு நூலிலும் சிட்டி விமர்சிக்கப்பட்டார். இலங்கை எழுத்தாளர்களை மிகவும் நேசித்தவர் சிட்டி. ஈழத்து இலக்கியப்படைப்புகளை தேடிப்பெற்று வாசிக்கும் இயல்பு கொண்டவர். எனினும் சரியான தகவல்கள் அவருக்கு உரிய வேளைகளில் கிட்டாமல் போனதனால் - அந்தப் பதிவுகளில் பலவிடயங்கள் விடுபட்டுப்போயிருக்கக் கூடும். 1984 இல் தீபம் காரியாலயத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பில் நண்பர் தி.க.சிவசங்கரன் (தி.க.சி) என்னை அறிமுகப்படுத்திப் பேசும்போது – எனது முதலாவது கதைத் தொகுதியான சுமையின் பங்காளிகள் தொகுப்பை கையில் வைத்துக்கொண்டே வந்திருந்தவர்களுக்கு காண்பித்துப் பேசினார். அச்சந்திப்பில் தொ.மு.சி.ரகுநாதன் - ராஜம்கிருஷ்ணன் - அசோக மித்திரன் - சிட்டி - சோ.சிவபாதசுந்தரம் - ஜெயந்தன் -சா.கந்தசாமி - இலங்கை எழுத்தாளர்களான மு.கனகராஜன் - காவலூர் ஜெகநாதன் - கணபதி கணேசன் - க.நவம் (தெணியானின் தம்பி) உட்பட பலர் கலந்து கொண்டனர். சிட்டியும் - சோ.சி.யும் எழுதிய நூலில் எனது கதைகள் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் இருந்தது. இதுபற்றி சுமையின் பங்காளிகள் - இரண்டாவது பதிப்பில் குறிப்பிட்டுள்ளேன். சிட்டியின் எழுத்துலக வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்வையும் விரிவாக எழுதியுள்ளார் நரசய்யா. 2002 இல் வெளியான சாதாரண மனிதன் என்ற இந்நூலை சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. இந்நூலையும் பெ.சு.மணியுடன் சி;ட்டி இணைந்து எழுதிய அதிசயப்பிறவி வ.ரா.என்னும் நூலையும் சிட்டி தனது குடும்ப நண்பரான – அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வசித்த சுந்தா சுந்தரலிங்கத்தின் மனைவிக்கு சில வருடங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தார். திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் குறிப்பிட்ட இந்த இரண்டு நூல்களையும் எனக்குப்படிக்கத் தந்திருந்தார். இரண்டுமே அருமையான தகவல் சுரங்கங்கள். பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம் எழுதிய வீரகேசரி பத்திரிகை தொடர்பான வரலாற்று நூலான ஒரு நாளிதழின் நெடும் பயணம் என்ற நூலில் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியரான வ.ரா.பற்றி குறிப்பிடும் பொழுது சிட்டி – பெ.சு.மணி இணைந்து எழுதிய நூலையும் ஆதாரமாக பதிவு செய்துள்ளார். பல இலக்கிய ஆய்வாளர்களுக்கு ஆதாரமாகத் திகழ்ந்த சிட்டி பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியில் பலவருடங்கள் சேவைபுரிந்தவர். நிறைய வாசித்தவர். யாத்ரீகனாக அலைந்து தகவல்கள் திரட்டி எழுதியவர். ஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப்பிரதமரினால் கௌரவிக்கப்பட்டவர். தீரர் சத்தியமூர்த்தி பற்றி அறிந்திருப்பீர்கள் அகில இந்திய காங்கிரஸின் மூத்த தமிழகத்தலைவர். அவரது பெயரில்தான் தமிழ்நாட்டில் சத்தியமூர்த்திபவன் காங்கிரஸின் தமிழக தலைமையகமாக இயங்குகிறது. சத்தியமூர்த்தியின் மகள் லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி சென்னை வாசகர் வட்டம் என்ற பதிப்பகத்தை தொடங்கி பல சிறந்த நூல்களை வெளியிடுவதற்கு சிட்டி சுந்தரராஜனே பின்னணியிலிருந்து இயங்கியவர். 1970 களில் வாசகர் வட்ட வெளியீடுகள் இலக்கியவட்டாரத்தில் தனித்துவமானதாக பேசப்பட்டது. ஒரே ஒரு முகப்பு ஓவியம்தான்; அனைத்து நூல்களுக்கும் அட்டைப்படமாக இருக்கும். ஆனால் அவற்றின் உள்ளடக்கத்திலிருக்கும் நாவல்கள் மற்றும் படைப்புகள் மிகவும் தரமாகவும் காலத்தையும் வென்று வாழ்வதாகவும் அமைந்திருக்கும். இலங்கை தமிழகம் மலேஷியா சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்ட அக்கரை இலக்கியம் - தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் இந்திரா பார்த்தசாரதி கி.ராஜநாராயணன் சார்வாகன் முதலானோரின் குறுநாவல் தொகுப்பு அறுசுவை சிட்டியும் ஜானகிராமனும் இணைந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி உட்பட பல நூல்களை வாசகர் வட்ட வெளியீட்டிலிருந்தே படித்திருக்கின்றேன். நூறு வயதை எட்டுவதற்கு நான்கு ஆண்டுகள் இருக்கும் வேளையில் - தமக்கு முந்திக் கொண்டு ஓடியவர்களைத் தேடி நிதானமாக நடந்து சென்றுள்ளார். எழுத்திலும் பேச்சிலும் நிதானமாகத் திகழ்ந்த சிட்டியின் மறைவும் பதட்டமற்ற நிதானமானதே. 1910 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி பிறந்த சிட்டி 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி 96 வயதில் மறைந்தார். பிற்குறிப்பு: மணிக்கொடி கால எழுத்தாளர்களான சிட்டி சுந்தரராஜன் மற்றும் ந. சிதம்பர சுப்பிரமணியன் நினைவுக்கூட்டம் கடந்த மே 10 ஆம் திகதி சென்னையில் மயிலாப்பூரில் நடைபெற்றது. தகவல்: ஜெயமோகன் வலைப்பதிவு.

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை ஒருத்தரும் எழுதிறதக் காணேல்லை
புத்தன் மட்டும் எத்தனைமுறை கிறுக்கிறது
பரியாரியும் முடிஞ்சளவிலை பத்து வைச்சிருக்கிறன்
பிடிச்சாச் சொல்லுங்கோ தொடரலாம்
கொஞ்ச நாளைக்கு மதுரனும் நிலாவும் தள்ளி இருக்கிறது நல்லதாம்
சாத்திரி சொன்னது உண்மையோ தெரியேல்லை  
எல்லாம் இறைவன் சித்தம் :D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ! பரியாரி சுக்கானைக் கையில் எடுத்து மிகவும் லாகவமாய் கப்பலைச்  செலுத்துகின்றார் , நன்றாக உள்ளது...! :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...பரியாரியார் !

 

சுவியர் சொன்னது போல, கப்பல் சரியான பாதியிலேயே நகர்ந்து செல்கின்றது!

 

வாழ்த்துக்கள்!

எல்லோரும் எழுதி முடியுங்கள். முழுமையான கருத்தை முன்வைக்கிறேன் கருத்து வைக்கவில்லை என்றால் வாசிக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டாம். தனித்தனியான கருத்தைத் தரவில்லை என்று நண்பர்கள் யாரும் எண்ணவேண்டாம் உங்கள் தொடர் முழுமைபெற்ற பிற்பாடு ஒவ்வொருவரின் படையலைப்பற்றியும் எனது பார்வையை எழுதுகிறேன். :rolleyes:  :icon_idea:

 

 

என்ன சொல்லப் போறா மடம் ???????

 

நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கிறது

:lol:  :lol:

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

பரியாரியார் தொடருங்கோ எல்லோரும் சொல்வது போல கப்பல் சரியான பாதையில் தான் போகுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரோ தெரிஞ்ச பரியாரிதான். ஆனாலும் நல்லா எழுதிறியள். வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் வேகத்தைக் காட்டுங்கள். :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

பரியாரியார் உங்கடை மருந்து நல்லா வேலைசெய்யுது. ஒரு முறை பாவித்த உடனேயே பலபேருடைய நோய் பறந்துபோய்விட்டது தெரிகிறது தொடருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

பரியாரியார் தொடர் சூப்பர் ....தொடரை தொங்கவிடாமல் தொடருங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊக்கம் தரும் உறவுகளுக்கு நன்றி
நான் தனியே எழுதுவதில் சுவாரஸ்யம் இல்லை.
மாறி மாறி எழுத வேண்டும்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதைப் பக்கம் இன்னும் ஒருவரும் வரேல்லை.வேலைக்கு முடிக்கத்தான் வேணும் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.