Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரம்பிக்கப் போகிறது வடக்கின் போர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் கல்லுரி மாணவர்கள் யாழ்.நகர வீதிகளில் இசை வாத்தியங்களோடு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

01%2868%29.jpg

 

04%2832%29.jpg

 

03%2852%29.jpg

 

02%2868%29.jpg

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=542892713707566447#sthash.V9LwSHlP.dpuf
  • Replies 69
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூட்டிய கடைக்கு முன்னால் நிதி சேகரிப்பவர்கள் இவர்களாகத்தான் இருக்கும் ...உதயனுக்கும் இந்த பிக்மச் க்குமான கரள் உலக பிரசித்தம் ..

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுத்தண்ணிக்குக் காசு சேர்க்க வெளிக்கிட்டினம். இவர்களில் அரைவாசிக்குமேற்பட்டோர ஆனைக்கோட்டையில காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டில் ஒரு முடிவை காண்பதற்கு மூன்று நாள் ஆட்டம் நிச்சயாமாக தேவைப்படும். மார்ச் 18 முதல் 20 வரை நடைபெற இருக்கிறது.

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  பெயரை   மாத்துங்களப்பா......

தமிழனுக்கு இனி  இது வேண்டாம்...... :(  :(  :(

1097128_721086081256419_1468651897_o_zps

மேலதிக படங்களை இணக்க முடியவில்லை. கீழே உள்ள இணைப்பில் பாருங்கள்.

http://www.newjaffna.com/fullview.php?id=MzcwNTY%3D

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இது வடக்கின் குடிகாரர் ஆட்டம்.. என்ற நிலைக்கு மாறிக்கிட்டு இருக்குது. இந்த அவலை நிலை.. தொடராமல் இருப்பதை.. சமூக ஆர்வலர்கள் உறுதி செய்யனும். புலம்பெயர்ந்தவர்கள் தான்.. அங்க போய் இதனை இன்னும் மோசமாக்குகிறார்கள். :(:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது வடக்கின் குடிகாரர் ஆட்டம்.. என்ற நிலைக்கு மாறிக்கிட்டு இருக்குது. இந்த அவலை நிலை.. தொடராமல் இருப்பதை.. சமூக ஆர்வலர்கள் உறுதி செய்யனும். புலம்பெயர்ந்தவர்கள் தான்.. அங்க போய் இதனை இன்னும் மோசமாக்குகிறார்கள். :(:rolleyes:

 

புலம்பெயர்ந்தவர்கள் அப்படி மோசமான குடிகாரர்களா? :unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்கள் அப்படி மோசமான குடிகாரர்களா? :unsure:

 

 

மிக மோசமான குடிகாரர்கள். அதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை..! கணக்கெடுப்பு இல்லாததால் விவரம் தெரியல்ல.. எடுத்தால் தெரியும்.. எத்தினை பரலை குடிச்சுத் தள்ளுதுங்க என்று. அதுவும்.. அரசாங்கப் பிச்சைக்காசு எல்லாம்.. பியருக்காலும்.. புகைக்குள்ளாலும்.. சூதுக்குள்ளாகும் அதுக்கே திரும்பிப் போகுது. :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இருங்கடி! அமைச்சர் ஐங்கரநேசன்ர காதில போட்டு விடுறன்! :D


புலம்பெயர்ந்தவர்கள் அப்படி மோசமான குடிகாரர்களா? :unsure:
 

 

இருபது வருஷத்துக்கு முந்தின காலத்தில இந்த மட்சில அதிகப் படியா கள்ளுத் தான் புளங்கும் (அதுவும் களவாக, த.ஈ காவல் துறைக்கும் மாணவர் தலைவர்களுக்கும் ஒளிச்சு நடக்கும்). இப்ப புலம் பெயர் பணக்காரர்களான பழைய மாணவர்கள் பள்ளிக் கூடத்துக்குள்ளயே பெரிய சாமான்கள் எல்லாம் வாங்கிப் போட்டு நடத்தீனம். இதுக்கெண்டே ஊர் போற ஆக்கள் இருக்கீனம்!

  • கருத்துக்கள உறவுகள்

எலுமா எழாதா எலுமின்றால் பண்ணிப்பார் கொலிச் கொலிச் சென்ரல் கொலிச்

எலுமா எழாதா எலுமின்றால் பண்ணிப்பார் கொலிச் கொலிச் சென்ரல் கொலிச்

 

ஏலுமா ஏலாதா ஏலுமென்றால் பண்ணிப்பார் கொலிச் கொலிச் சென்ரல் கொலிச் :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எலுமா எழாதா எலுமின்றால் பண்ணிப்பார் கொலிச் கொலிச் சென்ரல் கொலிச்

 

என்ன..நக்கலா? எங்கட கல்லூரிக் கீதத்திலயே இருக்குது "சென்றல் கொடியென்றும் தாழ்வு பெறாது!" :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன..நக்கலா? எங்கட கல்லூரிக் கீதத்திலயே இருக்குது "சென்றல் கொடியென்றும் தாழ்வு பெறாது!" :D

 

நீங்கள் மத்திய கல்லூரியா..??! :)

 

இந்துக்கல்லூரி மத்திய கல்லூரிக்குத்தான் தார்மீக ஆதரவு நல்குவது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன..நக்கலா? எங்கட கல்லூரிக் கீதத்திலயே இருக்குது "சென்றல் கொடியென்றும் தாழ்வு பெறாது!" :D

 

வேகமாக தட்டெச்சு செய்யும்போது தவறுகள் நிகழ்ந்துவிட்டது. நான் மத்திய கல்லூரிக்குத் தான் ஆதரவு. எனது தகப்பனார் கல்விகற்ற பாடசாலை. கடைசியாக 90ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியைப் பார்த்திருந்தாலும் எனக்குப் பிடித்த போட்டி 82, 83களில் நடைபெற்ற போட்டிகள்தான். அப்பொது மத்தியகல்லூரியில் உமாசுதன், போல் பிரகலாதன், தோமஸ், சுதர்சன் போன்றவர்கள் விளையாடியிருக்கிறார்கள். பரியோவான் கல்லூரியில் விளையாடிய விக்னபாலன் கனடாவில் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

 

SJC - 2013

வேகமாக தட்டெச்சு செய்யும்போது தவறுகள் நிகழ்ந்துவிட்டது. நான் மத்திய கல்லூரிக்குத் தான் ஆதரவு. எனது தகப்பனார் கல்விகற்ற பாடசாலை. கடைசியாக 90ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியைப் பார்த்திருந்தாலும் எனக்குப் பிடித்த போட்டி 82, 83களில் நடைபெற்ற போட்டிகள்தான். அப்பொது மத்தியகல்லூரியில் உமாசுதன், போல் பிரகலாதன், தோமஸ், சுதர்சன் போன்றவர்கள் விளையாடியிருக்கிறார்கள். பரியோவான் கல்லூரியில் விளையாடிய விக்னபாலன் கனடாவில் இருக்கிறார்.

சுதர்சனும் தோமசும் கனடாவில் இருக்கின்றார்கள் ,போல் லண்டன் .இரண்டு வருடங்களுக்கு முன் கனடாவில் மத்திய கல்லூரி மிக பெரிய அளவில் Big Match  வைத்தார்கள் .உலகெங்கும் இருந்து பலர் வந்திருந்தார்கள் .

Big Match ,சிற்றி பேக்கரி பாணும் பருப்பும் ,புது ஸ்கோர் போர்ட் கட்டி மகேந்திரன் அடித்த சென்றசூரி மறக்க முடியாத நாட்கள் . :icon_mrgreen: .

ஆயிரம் தான் வாழ்த்தினாலும் வெல்லப் போவது என்னமோ என் பரியோவான் கல்லூரிதான்.  எங்கள் சுண்டிக்குளி அழகிகள் வானளாவ வாழ்த்த வெற்றி வாகை சூடப் போவது நாங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் தான் வாழ்த்தினாலும் வெல்லப் போவது என்னமோ என் பரியோவான் கல்லூரிதான்.  எங்கள் சுண்டிக்குளி அழகிகள் வானளாவ வாழ்த்த வெற்றி வாகை சூடப் போவது நாங்கள் தான்.

 

ஓமோம்! இந்த சுண்டுக்குழி அழகிகளின் வானளாவின வாழ்த்துப் பற்றி எனக்கும் அனுபவம் இருக்கு. 1993 போட்டியின் போது சுண்டுக்குழி அழகிகளையும் வேம்படிப் பேரழகிகளையும் தம்பர் மண்டபத்தின் இரு வேறு மாடிகளில் அமர வைத்து போட்டியைக் காண வைத்தோம். சுண்டுகள் இருந்த மாடியில் இருந்து தொடர்ந்து கச்சான் பொதிகளும் கசக்கிய பேப்பர்களும் கீழே நின்றிருந்த மத்திய கல்லூரிப் பெடியள் மீது வந்து விழுந்து கொண்டே இருந்தன. திடீரெண்டு எனக்குப் பக்கத்தில் ஒரு தும்புக் கட்டை வந்து விழுந்தது. கோட்டையில இருந்து வாற செல்லுக்கே படுக்காத நான் பதறிப் போனன். அடுத்த நாள் ஆட்டத்துக்கு சுண்டுக் குழி மகளிர் எல்லாரையும் "பொடி செக்கப்" பண்ணித் தான் உள்ள விட்டனாங்கள்! :icon_mrgreen:

 

ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மாபெரும் போர்.
 

 

வடக்கிலுள்ளவர்களை மட்டுமல்ல இலங்கையின் அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்த மக்களையும் புலம்பெயர் வாழ் தமிழர்களையும் யாழ்ப்பாணத்தின் பக்கம் கவர்ந்திழுக்கும் வடக்கின் மாபெரும் போர் பெருந்துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையிலே பழமையான துடுப்பாட்டப்போட்டிகளில் ஒன்றான வடக்கின் 'மாபெரும் போர்' துடுப்பாட்டப் போட்டியில் மோதும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் இவ்வருடம் 108 ஆவது தடவையாக மோதவுள்ளன.

மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்களையுடைய இந்த வடக்கின் மாபெரும் போர் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

1904 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் இதுவரையிலும் நடைபெற்று முடிந்த 107 வடக்கின் மாபெரும் போர்களில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 33 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், 39 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகளின் முடிவுகள் தெரியாத நிலையிலும் ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையிலும் இருக்கின்றன.

வடக்கின் மாபெரும் போரின் கடந்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற இரு போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்திருந்ததுடன், அதற்கு முந்திய 5 போட்டிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தொடர் வெற்றிகளைப் பெற்றிருந்தது.

வடக்கின் மாபெரும் போர் இதுவரையும் கடந்து வந்த 107 போட்டிகளில் ஒரு இனிங்ஸில் அதிகப்படியான ஓட்டங்களை 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 354 ஓட்டங்களை 9 இலக்குகள் இழப்பிற்கு பெற்றிருக்கின்றது. அத்துடன், துடுப்பாட்ட வீரர் பெற்ற அதிக ஓட்டங்களாக 1990 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரன் எஸ்.சுரேஸ்குமார் 145 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இம்முறை நடைபெறவுள்ள 108 ஆவது போரில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி பி.துவாரகசீலன் தலைமையிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி கே.ஜுனியஸ்கனிஸ்ரன் தலைமையிலும் களமிறங்கவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இவ்வருடம் (2014) இதுவரையிலும் இரண்டு நாட்கள் கொண்ட மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்கள் கொண்ட போட்டிகளில் 10 அணிகளுடன் மோதியிருக்கிறது. இதில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியினை 127 ஓட்டங்களாலும், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணியினை இனிங்ஸ் மற்றும் 124 ஓட்டங்களாலும், கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினை இனிங்ஸ் மற்றும் 97 ஓட்டங்களாலும், சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியினை 5 இலக்குகளாலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியினை 177 ஓட்டங்களாலும், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினை இனிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களாலும், சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணியினை 142 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது.

அத்துடன், மாத்தளை சென்.தோமஸ் கல்லூரி அணி மற்றும் காலி தேவபத்திராஜா கல்லூரி அணி ஆகியவற்றுடனான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இருந்தும், குருநாகல் இப்ராஹமுவ மத்திய கல்லூரியுடனான போட்டியில் 30 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

10 போட்டிகளில் பெற்ற அனுபவத்தினையும் வடக்கின் மாபெரும் போரில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு எதிராக பிரயோகிக்க யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி காத்திருக்கின்றது. அத்துடன், மொத்த வெற்றி எண்ணிக்கையினை சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை விட அதிகம் பெறவேண்டும் என்ற உத்வேகத்துடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இவ்வருடம் களமிறங்கவுள்ளது.

இதேபோல் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இவ்வருடம் (2014) இரண்டு நாட்கள் கொண்ட மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங் கொண்ட போட்டியில், 12 அணிகளுடன் மோதியிருக்கிறது. இவற்றில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 197 ஓட்டங்களாலும், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியுடனான போட்டியில் 10 இலக்குகளாலும், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 188 ஓட்டங்களாலும், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 369 ஓட்டங்களாலும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியினை இனிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களாலும், மாத்தறை சென்.தோமஸ் அணியுடனான போட்டியில் 25 ஓட்டங்களாலும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியுடனான போட்டியில் 161 ஓட்டங்களாலும், சிலாபம் சென்.மேரிஸ் கல்லூரியுடன் 54 ஓட்டங்களாலும், கோட்டை ஆனந்த சஸ்ராலய அணியுடன் 198 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தது.

அத்துடன், மவுண்டன் லவினியா சென்.தோமஸ் கல்லூரி அணி மற்றும் கண்டி ரினிற்றி கல்லூரி அணியுடனான போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தது.

இருந்தும் கொழும்பு றோயல் கல்லூரி அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 131 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

12 போட்டிகளிலும் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினை வீழ்த்தி 8 வருடங்களாக பெறாமல் இருக்கும் வெற்றியினை பெறுவதற்காகக் காத்திருக்கின்றது. (இறுதியாக 2004 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றிருந்தது).

வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியென்றால் இரு அணி ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் நிறைந்ததாகவே இருக்கும். இரு பாடசாலைகளையும் சேர்ந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழைய மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்கள், வடக்கின் மாபெரும்; போர் துடுப்பாட்டப் போட்டிகளைக் காண்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு இந்தக் காலப்பகுதியில் படையெடுப்பார்கள்.

துடுப்பாட்ட ரசிகர்களுக்கு விருந்தாகவிருக்கின்ற இந்த வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்ட போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் தங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் அதேவேளை தங்கள் அணியினையும் வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயற்படுவார்கள் என்பது மட்டும் நிஜமானது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/102942-2014-03-12-07-16-30.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைத்தேன் நம்ம சென்ட்ரல் பசங்க இந்தமுறை அப்படியும் இப்படியும் என்று..பார்த்த்தால் நல்ல டீம்போலத்த்தாதான் இருக்க்கு ..காலேஜ் காலேஜ் சென்ட்ரல் காலேஜ் ...நன்றி நவீனன் இணைப்பிற்க்கு ..

  • கருத்துக்கள உறவுகள்

போடுடா மச்சான் பொல்லுப் பறக்க ,

 

அடியடா மச்சான்  பவுன்றி சிக்சர் ...! :D:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.