Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசிக்கிறேன் :D

  • Replies 122
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசிக்கிறேன்  :D 

  • கருத்துக்கள உறவுகள்

நானும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்து ஊக்கம் கொடுத்த விசுகு அண்ணா, புத்தன், நந்தன், மற்றும் மனதுக்குள் கருத்துக்களைப் பதிந்த எண்ணற்ற அன்பர்களுக்கும் நன்றிகள்..!  :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 15:

அடுத்தநாள் மேல்மருவத்தூர் பயணம். சென்னையில் இருந்து அதிக தூரம் இல்லை. ஒரு ஒன்றரை மணிநேரத்தில் சென்றடைந்துவிட்டோம் என நினைக்கிறேன்.

 

54591027.jpg

 

உள்ளே சென்று நான் அவசர அவசரமாக எனது சாமி வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டேன். பெண்மணி "அம்மா"வுக்கு பாதபூசை செய்ய வேண்டும் என்று உள்ளேயே தங்கிவிட்டார். 

 

ஒரு ஒரு மணி நேரத்தின்பின் வெளியே வந்த பெண்மணியின் முகமெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு. ஒரு கண்ணாடி குவளை முழுவதும் தீர்த்தம் கொண்டு வந்திருந்தார். என்னையும், வாகன ஓட்டுநரையும் குடிக்கச் சொன்னார். தீர்த்தம்தானே.. போய்ட்டுப் போகுது என்று குடித்துவைத்தேன். பிறகுதான் தெரிந்தது, அது "அம்மா"வின் பாதங்களைக் கழுவிய நீர் என்று.  :blink:  :( ஏதோ இரும்பு மனம் அமையப் பெற்றதால் வில்லங்கமாக எதுவும் நடக்கவில்லை. அந்த ஓட்டுனரோ மிகவும் மகிழ்வாக குடித்த திருப்தியில் இருந்தார்.  :huh:

 

மீண்டும் சென்னைக்குத் திரும்பியதும் அன்றைய இரவுப்பயணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். முன்னதாக சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் ஏறியபோது ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டிருந்தது. எனது முகச்சவரம் செய்யும் உபகரணங்கள், களிம்புகள், மீசை வெட்டும் கத்தரிக்கோல் என்பவற்றை தவறுதலாக கைப்பையினுள் (Hand luggage) வைத்துவிட்டேன். நல்லவேளையாக கத்திரிக்கோலைத்தவிர மீதி எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். கத்திரிக்கோலையும் விட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் அது பாகிஸ்தானில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். :icon_idea: வட இந்திய பாதுகாப்பு அதிகாரி அதை என்னிடம் காண்பித்து 'பாகிஸ்தானில் செய்யப்பட்டுள்ளது' என்றார். ஆனாலும் என்ன.. $18 கத்தரிக்கோல் போயேபோச்சு.. :blink: அது பாகிஸ்தானில் செய்யப்பட்டிருந்தாலும் அதை அவர் குப்பையில் போடவில்லை. :huh:

 

அந்த அனுபவத்தினால், இந்த முறை எல்லா அழகுசாதனப் பொருட்களையும் :D கவனமாக பயணப் பொதியினுள் (luggage) போட்டு மூடினேன்.

 

*******************************************

 

இரவு பத்துமணி.. விடுதியின் வாடகை காரைப் பிடித்து விமான நிலையம் சென்றடைந்தோம். வாசலில் இருந்து வழக்கமான பரிசோதனைகள். பொதிகளின் எடையும் சரியாக இருந்தது. குடியகல்வு பிரிவில் கடவுச் சீட்டுகளையும், ஆவணங்களையும் பூதக்கண்ணாடி உபயோகிக்காத குறையாக பரிசோதித்தார்கள்.

 

ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டுமணிநேர காத்திருப்பின்பின் விமானத்தினும் ஏறி அமர்ந்துகொண்டோம். விமானம் வழக்கம்போல் இந்த வழித்தடத்துக்கு உண்டான தகைமையுடன் இருந்தது. குறுகலான இருக்கைகள், கால் நீட்ட வசதிக்குறைவு போன்றவை. இந்தியர்கள் அதிகம் முறைப்பாடு செய்யமாட்டார்கள் என்பதாலா அல்லது, அதிக பிரயாணிகள் செல்லும் வழித்தடம் என்பதாலா என்று தெரியவில்லை.

 

பெண்மணிக்கு இதுதான் முதல் நீண்டதூரப் பயணம். அதனால் விமானத்தை நாம் பாவிக்க வேண்டிய முறைகள் பற்றி வாய்மொழியாகவே சொல்லிக் கொடுத்தேன். பயணத்தின்போது சிரமப்பட்டார்.

 

நான் வழக்கம்போல திரைப்படங்கள் பார்ப்பதில் நேரத்தை செலவழிக்கத் திட்டம் போட்டேன். முதலாவதாக கிராவிடி (Gravity) படத்தைப் போட்டேன். சின்னத் திரையில் பார்ப்பது சற்று சிரமம் என்றாலும் எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது.

 

அடுத்ததாக ஒரு நகைச்சுவைப் படத்தைப் போட்டேன். அதில் சில பலான காட்சிகள் தெரிய ஆரம்பிக்கவே நிறுத்திவிட்டேன்.. :D அருகில் இருந்த பெண்மணி கண்டுவிட்டால் பேஜாராகிவிடுமே என்கிற முன் ஜாக்கிரதை உணர்வுதான் காரணம்.  :wub:

 

இவ்வாறாக, பலமணிநேரப் பயணத்தின்பின் ஒருவழியாக ஃபிராங்க்ஃபர்ட் விமானநிலையத்தை வந்தடைந்தோம், வரப்போகும் சத்தியசோதனையை அறியாமல். :blink:

 

(தொடரும்.)

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்து ஊக்கம் கொடுத்த விசுகு அண்ணா, புத்தன், நந்தன், மற்றும் மனதுக்குள் கருத்துக்களைப் பதிந்த எண்ணற்ற அன்பர்களுக்கும் நன்றிகள்..!  :D  :lol:

 

அந்த... அன்பர்களில், நானும் ஒருவன்.

 

பாகம் 15:

------

முன்னதாக சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் ஏறியபோது ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டிருந்தது. எனது முகச்சவரம் செய்யும் உபகரணங்கள், களிம்புகள், மீசை வெட்டும் கத்தரிக்கோல் என்பவற்றை தவறுதலாக கைப்பையினுள் (Hand luggage) வைத்துவிட்டேன்.

------

*******************************************

------

இவ்வாறாக, பலமணிநேரப் பயணத்தின்பின் ஒருவழியாக ஃபிராங்க்ஃபர்ட் விமானநிலையத்தை வந்தடைந்தோம், வரப்போகும் சத்தியசோதனையை அறியாமல். :blink:

(தொடரும்.)

 

"நோட் த பாயின்ட்", உறவுகளே.....

இசைக்கலைஞன்.... மீசை வளர்ப்பவர் என்று, கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. :D

 

##########

 

ப்ளீஸ்... இசை, அடுத்த பகுதியை... இன்று வாசிக்காமல் நித்திரைக்குப் போக மாட்டேன்.

கூடிய வரையில்... இன்றே பதிய, முயற்சி எடுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ! அது தானாகவே வளர்கிறது , இசை அதை பாகிஸ் கத்தரியால் கத்தரித்து கட்டுப் படுத்துபவர்...! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 16:

 

ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையம் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும் இந்தமுறை சற்று கூடுதலாக அவதானிக்க முடிந்தது. குறிப்பாக வட அமெரிக்காவின் ஆண்களுக்கான ஒண்டுக்கூடமும், :D ஜேர்மனியில் அதன் வடிவமைப்பும் வித்தியாசமாக இருந்தது. என்னைக் கேட்டால் ஜேர்மன்வாலாக்கள் ஒவ்வொரு சிறு விடயத்திலும் நன்றாக அலசி ஆராய்ந்து வடிவமைப்பார்கள்போல் தெரிகிறது. ஆண்களுக்கான ஒண்டுக்குப் போற சட்டியை அவர்கள் வடிவமைத்திருந்த விதம் 'கீழே சிந்தவேமாட்டாய் கண்மணியே' என்று சொல்வதுபோல் இருந்தது..  :wub:

 

ஆனால் விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் அவ்வளவு மனிதம் கொண்டவர்கள்போல் தெரியவில்லை. குடியேற்றவாசிகள் போல் இருந்த அவர்களில் சிலர் விறைச்ச கட்டைகள்போல் இருந்தார்கள். உதவி என்று கேட்டாலும் விறைச்சகட்டைகள்போல் பதில் தந்தார்கள்.  :huh:

 

ஒருவழியாக, எனது அடுத்த விமானம் புறப்படும் இடத்தை அடைந்தேன். விமானம் புறப்படும் நேரம் நெருங்குகிறது. ஆனால் எவரையும் கூப்பிடுவதுபோல் தெரியவில்லை. பெண்மணிக்கு அவதியாகிவிட்டது. 'கூப்பிடுவாங்களோ?', அங்கை போய் கேட்டுப் பார்க்கலாமோ..', 'இங்கை ஏறுகினம்போல இருக்கு..' என்று இருக்கிற குழப்பத்தை அதிகரித்துக்கொண்டிருந்தார். :huh:

 

மக்கள் அவதிப்படுவதை உணர்ந்துகொண்டு விமான நிறுவன ஊழியர்கள் ஜேர்மன் மொழியில் ஒரு அறிவித்தல் செய்தார்கள்.. 'உத்திஷ்ட ஹைமன்' என்று ஏதோ கேட்டதுமாதிரி ஞாபகம் இருக்கு...  :lol:

 

ஒருவழியாக ஆங்கிலத்திலும் அறிவித்தார்கள். அவர்களது விமானிகள் வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டார்களாம். அதனால் தாமதமாகும் என்று பொறுமை காக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். இதைக்கேட்டு நான் என்னையறியாமலே முழியை வம்புக்கு உருட்டினேன். அதைக் கண்டுவிட்டு ஒரு ஜேர்மன்காரரும் முழியை உருட்டி சிரித்தார்.  :D

 

திடீரென்று இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார்கள். எல்லோரும் தங்கள் கடவுச்சீட்டையும், விமானச் சீட்டையும் கொண்டுவந்து பரிசோதனைக்கு உள்ளாக்கும்படி. நானும் போய் கொடுத்தேன். என்னுடையது எல்லாமே சரி. பெண்மணியின் கடவுச்சீட்டைப் பார்த்தாள் அந்த ஊழியம் செய்யும் பெண்.

 

"இதனுடன் ஒரு கடிதமும் வந்திருக்க வேண்டுமே..?"

 

எனக்கு குழப்பமாகிவிட்டது. இவள் என்னத்தைக் கேட்கிறாள்? கைப்பையைத் திறந்து அதில் இருந்த கோப்பு ஒன்றை எடுத்துக் கொடுக்கிறேன். அதில் பல முக்கிய கடிதங்களும், ஆவணங்களும் இருந்தன. அவற்றை எல்லாம் புரட்டிப் பார்த்தவள்..

 

"இவற்றுள் அந்தக் கடிதம் இல்லையே.." என்றாள்.

 

"இதுக்கு மேல் வேறு எதுவும் இல்லை..."

 

"இல்லை. கண்டிப்பாக வந்திருக்கும். படமும் ஒட்டியிருக்கும்.."

 

"இல்லை. இவ்வளவுதான் வந்தது என எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.."

 

அருகில் இருந்த ஆடவனிடம் பேசினாள். அந்த ஆடவனும் அந்த அத்தாட்சி உங்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டும் என்றான்.

 

ஆகா.. என்னமோ சிக்கிக்கிச்சே என்று யோசனை வந்தது. அடுத்த கிழமை வாக்கெடுப்புக்கு வரப்போகும் அமெரிக்க தீர்மானமும் கண்முன் நிழலாடியது.

 

சற்றுநேரம் எல்லாவற்றையும் பரிசோதித்த மங்கை, போனால்போகுது என்று ஓகே செய்துவிட்டாள். அப்பாடா என்று இருந்தது. ஆனாலும், இது முதல்கட்ட சோதனைதான் என்று தோன்றியது.

 

நேரடியாக பெண்மணியிடம் சென்றேன்.

 

"இதைவிட வேறு ஏதாவது ஆவணம் அனுப்பி வைத்திருந்தார்களா?"

 

"ஓம்.. இப்பதான் ஞாபகம் வருது. ஒரு எட்டு மாசத்துக்கு முன்னம் வந்தது. மறந்துபோய் வேறு இடத்தில் வைத்துவிட்டேன். அதனால் கொண்டுவர மறந்துவிட்டேன். அதாலை ஏதும் பிரச்சினையே..?" பெண்மணி கலவரமானார்.

 

"என்னது.. பிரச்சினையாவா?"

 

எனக்கு தலை சுற்றியதில் விமான நிலையத்தின் எல்லாப் பக்கமும் தெரிந்ததுபோல் இருந்தது. :huh: இதென்னப்பா சோதனை என்று தோன்றியது. பெண்மணிக்கும் இரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது போல் இருந்தது. தலையை ஆட்டி உச்சுக்கொட்டி தன்னைத்தானே நொந்தபடி இருந்தார். என்னுடைய உற்சாகம் எல்லாம் காற்றுப்போன பலூன்போல் ஆகிவிட்டிருந்தது. :blink:

 

(தொடரும்.)

 

  • கருத்துக்கள உறவுகள்

"நோட் த பாயின்ட்", உறவுகளே.....

இசைக்கலைஞன்.... மீசை வளர்ப்பவர் என்று, கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மீசை இல்லாமலும் தமிழ் ஆண்கள் இருக்கிறார்களா? மீசைதானப்பு தமிழனுக்கு அழகு..! :)

அது இல்லையெனில் வடக்கத்தியான் மாதிரி ஆணா, பெண்ணா என இனம் காண்பது அரிதாகிவிடுமே?

  • கருத்துக்கள உறவுகள்

மீசை இல்லாமலும் தமிழ் ஆண்கள் இருக்கிறார்களா? மீசைதானப்பு தமிழனுக்கு அழகு..! :)

அது இல்லையெனில் வடக்கத்தியான் மாதிரி ஆணா, பெண்ணா என இனம் காண்பது அரிதாகிவிடுமே?

 

நாமெல்லாம்... மீசை வளர்ப்பதில்லை. வன்னியன்.

எம்மைப் பார்த்தால், உங்களுக்கு... ஆணாக தெரியவில்லையா?

வேணுமென்றால்.... திறந்து, காட்டவும்.... ரெடி. :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நாமெல்லாம்... மீசை வளர்ப்பதில்லை. வன்னியன்.

எம்மைப் பார்த்தால், உங்களுக்கு... ஆணாக தெரியவில்லையா?

வேணுமென்றால்.... திறந்து, காட்டவும்.... ரெடி. :D  :lol:  :icon_idea:

 

ஓ..இன்றைக்கு வெள்ளிக்கிழமை என்பதை ஞாபகப்படுத்துகிறீர்கள்!  :D

'பாலினம்' காண அது உதவும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்..

நீங்கள் கூறுவது, கலவரம் ஏற்பட்டால் அறிய உதவும் யுக்தி. :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் கவனம் இன்றைக்கு வெள்ளிக்கிழமை

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் கவனம் இன்றைக்கு வெள்ளிக்கிழமை

 

தகவலுக்கு... நன்றி நந்தன்.smiley_gentleman.gif

நான்.. இதை, மறந்தே போனன்.smiley_fish.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 17:

 

ஃபிராங்க்ஃபர்ட்டில் இருந்து எயர் கனடா விமானம். 777 விமானம் சும்மா கும்மென்று இருந்தது. கால நீட்ட நல்ல வசதி., இருக்கையும் அகலம். போதாக்குறைக்கு மூன்றுபேர் அமரும் ஒரு வரிசையில் நானும், பெண்மணியும் மட்டுமே. ஆயிரம் இருந்தும் என்ன.. முக்கியமான ஆவணத்தை விட்டுவிட்டு வந்த விடயம் வாட்டி எடுத்தது.

 

விமானப் பணிப்பெண்கள் கொண்டு வந்த உணவு எதையும் இருவருமே எடுத்துக்கொள்ளவில்லை. இடையிடையே தோடம்பழச்சாறு, தேனீர், தண்ணீர் என்று குடித்ததோடு சரி. படங்கள் பார்க்கும் மனநிலையும் இல்லை. பெண்மணி அந்தப்பக்கம் இருந்து உச்சுக்கொட்டியபடியே இருந்தார். என்னால் ஆனமட்டும் ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தேன்.

 

*********************************

 

ஒருவழியாக, பலமணிநேரப் பயணத்தின் பின்னர் ரொராண்டோ விமானநிலையத்தை அடைந்தோம். இதயத்துடிப்பு இன்னும் அதிகமாகி விட்டிருந்தது. குடிவரவாளர்களை மூன்றாகப் பிரித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். தொடர்ச்சியாக அமெரிக்கா பயணிப்பவர்களுக்கு ஒரு வரிசை. கனேடியப் பிரசைகள் தானியங்கி முறையில் வெளியேற இன்னொரு வரிசை. ஏனையவர்களுக்கு இன்னொரு பெரிய வரிசை.

 

ஏனையவர்களுக்கான வரிசையில் போய் நின்றுகொண்டோம். எமது முறையும் வந்தது. குடிவரவு அதிகாரியிடம் சென்று கடவுசீட்டையும் ஆவணங்களையும் கொடுக்கிறோம். அவற்றைப் பரிசோதித்தவர், இன்னொரு பகுதிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

 

அங்கு சென்று குடிவரவு அதிகாரிகளை சந்தித்தேன். ஆவணங்களை வாங்கியவர் தொடர்ந்தார்.

 

"இத்துடன் ஒரு கடிதம் வந்திருக்க வேண்டுமே.."

 

"அதை பிழையாக விட்டுவிட்டு வந்துவிட்டோம்.." :( என்றேன்.

 

"அடடா.. அது முக்கியமான கடிதமாயிற்றே.. எங்கே உள்ளது அது? அதை எடுக்க முடியுமா?"

 

"முடியும்"

 

"அப்படியானால், ஒரு மாதம் இந்தப் பெண்மணியை இங்கே தங்குமாறு செய்து தருகிறேன். நீங்கள் அதை எடுப்பித்துவிட்டு, நாட்டை விட்டு வெலீயேறி, மீண்டும் வாருங்கள்.." என்றார். ஏற்கனவே 22 மணித்தியாலம் பயணித்ததுக்கு இதுவா மிச்சம் என்பதுபோல் இருந்தது.

 

"எந்த நாட்டுக்குப் போய் வரலாம் இந்தப் பெண்மணி?" கேட்டு வைத்தேன்.

 

"அருகில் உள்ள அமெரிக்காவுக்குச் சென்று வரலாம்." சொன்னவர் சற்று யோசித்தார்.

 

"சில நிமிடங்கள் பொறுத்திருங்கள். இதோ வருகிறேன்.." என்றவர் தன்னுடைய மேலதிகாரியிடம் சென்று விசாரித்தார். திரும்பி வந்தவர் தொடர்ந்தார்.

 

"அந்த ஆவணங்களை இணையத்தின் மூலம் பெறமுடியுமா எனப் பார்க்கிறேன்.."

 

அப்பாடா.. புண்ணியவான் இப்பிடி ஏதாவது செய்து தந்தால் பரவாயில்லை என்று சற்று ஆறுதலாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேர காத்திருப்பின்பின், பெண்மணியை அழைத்துச் சென்றார். உள்ளே சென்று புகைப்படம் எடுத்துவிட்டு சில ஆவணங்களையும் கையில் தந்து அனுப்பி வைத்தார்கள் பெண்மணியை.. நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

 

என்ன இருந்தாலும், இந்த அதிகாரிகளின் நடத்தை மிகவும் மெச்சத்தக்கது. மிகவும் புரிந்துணர்வுடனும், உதவிகரமாகவும் இருக்கக்கூடியவர்கள். மற்ற நாடுகளின் அதிகாரிகளுடன் எனக்கு இவ்வாறான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை. 

 

பயணப்பொதியை எடுத்துக்கொண்டு வெளியேற முற்படும்போது, சுங்கத் தீர்வையாளர் பக்கம் திருப்பிவிட்டார்கள். அடக் கண்றாவியே.. இவங்கள் வேறை போட்டு உருட்டப்போகிறார்களா என்று ஆயாசமாக இருந்தது. வரிசையில் எனது முறைக்காகக் காத்திருந்தேன். பயணப் பொதியை பூட்டிவிட்டு சாவி தொலைந்துவிட்டது என ஒரு பெண் சொல்லிக் கோடிருந்தாள். தயவு தாட்சண்யமே இல்லாமல் பெரிய அளவு குறடு ஒன்றை வைத்து பூட்டை வெட்டி எடுத்தார்கள்.

 

எனது முறையும் வந்தது.

 

"ஆயிரம் டொலர்கள் பெறுமதிக்கு என்ன எடுத்து வருகிறீர்கள்..?" கேள்வியைத் தொடுத்தாள் சுங்கப் பாவை. :D

 

"சில துணிமணிகள் வாங்கி வந்துள்ளேன். ஆனால் அவ்வளவு பெறுமதி வராது."

 

"நீங்கள்தான் இந்தப் படிவத்தில் ஆயிரம் என நிரப்பியுள்ளீர்களே.."

 

"மெல்லிய காற்றில் இருந்து அந்த எண்ணைப் பிடுங்கிப் போட்டிருந்தேன்.. (plucked out of thin air.) " என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். :blink:

 

இரண்டு வாரத்துக்குள் திரும்பி வந்தால் $800 ஐ தாண்டக்கூடாது என்றவள் எதையோ எழுதி வைத்துவிட்டு போய் வாருங்கள் என வழியனுப்பி வைத்தாள். :huh:

 

ஒரு வழியாக எல்லாத் தடைகளையும் தாண்டி வெளியே வந்தபோது மனைவியும், பிள்ளையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.. பெண்மணியைக் கண்ட அம்மணி கட்டியணைத்தார்.

 

"அம்மா..!" :(  :D

 

வீட்டுக்குச் சென்று பல கதைகள் பேசி உறக்கத்துக்குச் செல்ல வெகுநாழிகை ஆகிவிட்டிருந்தது. அடுத்த நாள் அதிகாலையில் கெல்லி, பில்லி, மாயா என்று கனவு வருமோ என்கிற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.  :rolleyes:

 

*****************************************

 

அடுத்த சில நாட்களில் அமெரிக்க தீர்மானம் நிறைவேறிய செய்தி வெளிவந்தது. சர்வதேச விசாரணையை உள்ளடக்கியதால் எதிர்ப்பு நிலை எடுப்பார்களோ என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முடிவு நடுநிலைமை வகிப்பது என மாற்றப்பட்டிருந்தது. :huh: 25 வருடங்களாக இந்தியாவின் சுமையாக இருந்த பெண்மணியை அகற்றியதற்கான பிரதியுபகாரமே அதுவல்லாது வேறென்ன?  :lol:

 

(முற்றும்.)

 

*****************************************

 

இத்தனை நாட்களாக இந்த அறுவையைப் பொறுத்துக்கொண்டு, வாசித்தும், கருத்துக்களைப் பதிந்தும், பச்சைகளைக் குத்தியும் ஊக்கம் கொடுத்த அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி சாதித்து விட்டீர்கள். :D

மிகவும் சுவாரிசமான பதிவு...பாராட்டுக்கள் இசையண்ணா. பயணம் வெற்றியில் முடிந்தது மகிழ்ச்சி :)

 

  • கருத்துக்கள உறவுகள்

சுபம்...! :)

தொடரின்  நடுப்பகுதியிலேயே  அந்தப் பெண்மணி " அம்மா " என்று என்னால் ஊகிக்க முடிந்தது :D . உங்களை குழப்பாது விட்டு விட்டேன். கதைக்கு வாழ்த்துக்கள் டங்கு :) .

  • கருத்துக்கள உறவுகள்

யாரடா அந்தப் பெண்மணி எண்டு மண்டையை உடைக்க வைத்துவிட்டேர்கள் வாசிக்கும் போது. இதே வேகத்தோட எங்கடை கதையையும் எழுதலாம் மனம் இருந்தால் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் விரும்பி படிப்பவனல்ல....ஏனோ தெரியவில்லை நாட்டமுமில்லை. அப்படியிருந்தும் இசைக்கலைஞனின் எழுத்துநடை என்னை கவர்ந்துள்ளது.
தம்பட்டமில்லாத அப்பட்டமான எழுத்துநடை.thumbup1_zps850b96f6.gif
அம்மா என்று கதையை முடித்ததும் என் நெஞ்சு ஈரமாகியது.
இன்னும் எழுதுங்கள். :)
  • கருத்துக்கள உறவுகள்

பயணக்கதையை முடித்த விதம், அருமை! :D

 

எழுதிய விதம்.... இசையின் பிரத்தியேக 'கங்னம்' ஸ்டையில்!

 

நாற்காலியின் ஓரத்திலிருந்து வாசித்து முடித்த தொடர்!

 

நன்றிகள், இசை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி சாதித்து விட்டீர்கள். :D

அன்றொருநாள் பெண்மணியின் மகளை கட்டும்போதே சாதிச்சிட்டமில்ல...!? :icon_idea:

மிகவும் சுவாரிசமான பதிவு...பாராட்டுக்கள் இசையண்ணா. பயணம் வெற்றியில் முடிந்தது மகிழ்ச்சி :)

நன்றி தமிழினி.. மூன்று கிழமை விடுமுறை அலைச்சலில் கழிந்ததுதான் ஒரே சோகம்.. :(:D

சுபம்...! :)

அது போகப்போகத்தான் தெரியும்.. :huh::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடரின் நடுப்பகுதியிலேயே அந்தப் பெண்மணி " அம்மா " என்று என்னால் ஊகிக்க முடிந்தது :D . உங்களை குழப்பாது விட்டு விட்டேன். கதைக்கு வாழ்த்துக்கள் டங்கு :) .

நன்றி.. :D சிஐடிக்களை சுழிக்கிறது கஷ்டம்தானே.. :o:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரடா அந்தப் பெண்மணி எண்டு மண்டையை உடைக்க வைத்துவிட்டேர்கள் வாசிக்கும் போது. இதே வேகத்தோட எங்கடை கதையையும் எழுதலாம் மனம் இருந்தால் :D

அந்தக் கதை கனதூரம் போய்விட்டுது.. :( இப்பத்தான் விட்டுக் கலைக்கிறன்.. :huh:

நான் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் விரும்பி படிப்பவனல்ல....ஏனோ தெரியவில்லை நாட்டமுமில்லை. அப்படியிருந்தும் இசைக்கலைஞனின் எழுத்துநடை என்னை கவர்ந்துள்ளது.

தம்பட்டமில்லாத அப்பட்டமான எழுத்துநடை.thumbup1_zps850b96f6.gif

அம்மா என்று கதையை முடித்ததும் என் நெஞ்சு ஈரமாகியது.

இன்னும் எழுதுங்கள். :)

நன்றி குமாரசாமி அண்ணை.. இதை வாசிக்க இன்னும் எழுதலாம்போலை இருக்கு.. :D

பயணக்கதையை முடித்த விதம், அருமை! :D

எழுதிய விதம்.... இசையின் பிரத்தியேக 'கங்னம்' ஸ்டையில்!

நாற்காலியின் ஓரத்திலிருந்து வாசித்து முடித்த தொடர்!

நன்றிகள், இசை!

நன்றி புங்கைசாமி.. :wub: இதை மினக்கட்டு நீங்கள் எல்லாரும் வாசித்தது மகிழ்ச்சியா இருக்குது.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.