Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது

Featured Replies

இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மார்ச், 2014 - 12:53 ஜிஎம்டி
 

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது.

 
  •  

இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.

12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.

இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது.

பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது.

அதனால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.

ஆனால், பொதுவான பட்ஜெட்டிலிருந்து இலங்கை விவகாரத்துக்கான தனியான நிதி ஒதுக்கப்படும் என்று ஆணையத்தின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை தாமதப்படுத்துவதற்கான கோரிக்கையை ஏற்க முடியாது என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியது. வாக்களிப்பின் மூலமே நாடுகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும் என்றும் அமெரிக்கா கூறியது.

மற்ற இணை அனுசரணை நாடுகளும் நிதிவளம் இல்லை என்ற வாதத்தை எதிர்த்துக் கருத்து வெளியிட்டன.

இறுதியாக தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேலதிக தகவல்களை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் எதிர்பாருங்கள்...

 

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/03/140327_geneva_voting.shtml

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்.. சரியான ஆரம்பம்.. 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நல்ல செய்தி தர்மமே ஈற்றில் வெல்லும்

 

இதற்காக  உழைத்த

அனைவரையும் கரம் கூப்பி வணங்குகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி; எதிர்ப்பு தெரிவித்த இந்தியா வாக்களிக்கவில்லை!

 

ஜெனிவா: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் 23 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேறியது.

ஜெனிவாவில் நடைபெற்ற  ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்கத் தீர்மானம் மீதான விவாதம், இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இலங்கை அரசைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க கோரி பல நாடுகளிடம் பேசியதை கண் கூடாக பார்க்க முடிந்தது. 

 

இந்தியா எதிர்ப்பு

இதனிடையே இலங்கை மீதான தீர்மானம் தொடர்பாக பல நாடுகள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்த நிலையிலும், இந்த தீர்மானம் தொடர்பாக இந்தியா எந்த நிலைபாட்டை எடுக்கும் என்பது இன்றுவரை சஸ்பென்ஸ் நீடித்தது. இந்நிலையில் இந்தியா தனது தரப்பில் வாதத்தை முன்வைத்து பேசிவிட்டு, அதே சமயம் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல்  புறக்கணித்தது.

 

Geniva.jpg

 

இந்தியா தரப்பில் பேசிய பிரதிநிதி, இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாகவும், இத்தீர்மானம் நிறைவேறினால் இலங்கை மேற்கொண்டு வரும் பணிகள் பாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் 13வது சட்ட திருத்தத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும். அண்டை நாடு என்ற முறையில் இலங்கையில் வளர்ச்சி பணிகளை இந்தியா மேற்கொள்கிறது. வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் நடத்தப்பட்டதை இந்தியா வரவேற்கிறது என்றும் தெரிவித்தார்.

 

இலங்கை பதில்

முன்னதாக அமெரிக்க தீர்மானம் குறித்து இலங்கை பிரதிநிதி பதிலளிக்கையில், ''அமெரிக்காவின் தீர்மானம் எங்களின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது. சர்வதேச விதிகளுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

மேலும், அமெரிக்க தீர்மானத்தை உறுப்பு நாடுகளும் எதிர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

 ஆதரவு நாடுகள்

அதே சமயம்  இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக பேசின. அதே வேளை சீனா,பாகிஸ்தான்,கியூபா இன்னும் பிற இலங்கை ஆதரவு நாடுகள் தீர்மானத்தின் பத்தாவது குறிப்பை அகற்ற சொல்லி கோரின.

பத்தாவது குறிப்பில்," இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை, இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக கண்காணிக்க வேண்டும்,இதுதொடர்பாக ஐ.நா.சபைக்கு 28 வது மனித உரிமைக் கூட்டத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றையே இலங்கை ஆதரவு நாடுகள் அகற்றச் சொல்லி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வாக்கெடுப்பில் வெற்றி

இந்நிலையில் விவாதத்தின் முடிவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 23 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. அதே சமயம் தீர்மானத்தை எதிர்த்து 12 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் ஒட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

- ஜெனீவாவிலிருந்து மகா.தமிழ்ப்பிரபாகரன்

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=26216

Edited by பிழம்பு

பத்தாவது குறிப்பில்," இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை, இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக கண்காணிக்க வேண்டும்,இதுதொடர்பாக ஐ.நா.சபைக்கு 28 வது மனித உரிமைக் கூட்டத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

28வது மனித உரிமை கூட்டத்தொடர் 2015 செப்டம்பரிலைதான் நடக்கும். அதுக்கும் முன் மிச்ச இடங்களும் சிங்களமயப்படுத்தலாகீடும் உள்ள தமிழ்பொம்பிளையளும் சிங்கள ஆமிக்காரனை கட்டி கலப்பினமாகீடும் பிறகென்ன.

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 

இணைப்பு 2

Sri%20Lanka%20Vote_CI.jpg

 ஐநா சபையின் மனித உரிமைப் பேரவையின் 25ஆவது அமர்வுகளில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. வாக்கெடுப்பில் 12 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

சீனா, ரஷ்யா, கொங்கோ, அல்ஜீரியா, கென்யா, மாலைதீவுகள், பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசுவேலா, வியட்நாம், கியூபா, ஆகிய நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.

இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா, கஸ்கஸ்தான், குவைத், மொராக்கோ, நமீபீயா, பிலிப்பைன்ஸ், புர்கினா பாசோ, காபோன், எதியோப்பியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை..

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104833/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா தீர்மானம் தொடர்பில் இந்திய சொக்கத்தங்கம் சோனியா அனுப்பிய பிரதிநிதியின் கருத்து: <<<இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஏற்கவில்லை என இந்திய பிரதிநிதி தெரிவித்தார். >>>

என்ன டெசோ.. கூட்டம் போட்ட தீர்மானத்தை சொக்கத்தங்கம் காதிலையே போடேல்லப் போல..??! இறுதி வரைபோடு வந்த ஐநா தீர்மானம்.. சிங்களவனை கொஞ்சம் கடுப்பேத்தும் என்றிட்டு.. சொக்கத்தங்கம் நடுநிலை வகிச்சிட்டா. போன முறை சிங்களவனுக்கு வலிக்காத தீர்மானம் என்றிட்டு.. ஆதரவு தந்திச்சினமே. எதுஎப்படியோ.. நடுநிலை வரை போக உழைத்த தமிழக சொந்தங்கள்.. நாம் தமிழர்.. மே 17 இயக்கம்.. மாணவர்கள்.. மற்றும் அரசியல்வாதிகளுக்கும் நன்றி. !!!!

சென்றமுறை இந்தியா எதோ  கில்மாசம் காட்டி இறுதியில் ஆதரவு கொடுத்தது ..........இம்முறை கில்மாசம் செய்யமுடியாமல் எதிர்த்து ..........கோழைத்தனமாக ஒதுங்கி விட்டது ..........எப்பிடித்தான் ,சீனா ,பாகிஸ்தானுக்கு முகம் கொடுக்கப்போகுது ...........ஐயோ ஐயோ .......... :lol:
 
[கில்மாசம் என்றால் என்ன எண்டு மட்டும் கேட்டிடாதீங்க .]....... :D
இரவு பகலாக அயராது உழைத்த பல்வேறு அமைப்புக்களை பிரதிநித்துவம் செய்த இளம் தமிழ் தலைமுறைக்கும், நவநீதம்பிள்ளை அம்மாவுக்கும், உறவு நாடுகளிடம் ஆதரவு தேடிய பிரித்தானிய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கும், தமிழ்நாட்டு உறவுகளுக்கும் மற்றும் அனைத்து மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும் உருக்கமான நன்றிகள். 
வாக்களிப்பில் கலந்து ஆதரவளித்த நாடுகளுக்கும் நன்றிகள்.
 
 

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருடங்களில் நிகழ்ச்சி நிரல்களில் என்னென்ன மாற்றங்கள்?

 

  • போர் முடிவுக்கு வந்தவுடன் கனடா இலங்கையின் குற்றங்கள் தொடர்பாக கொண்டுவந்த பிரேரணை இந்திய ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டது.
  • அதே சூட்டுடன் இந்தியா இலங்கையைப் பாராட்டி (பயங்கரவாதத்தை அழித்துவிட்டார்களாம்) ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து அசத்தியது.. :D
  • இன்று அதே இந்தியா ஒதுங்கி முனகிக்கொண்டுள்ளது. :wub:

சிங்களவனின் அடுத்த கட்ட நடவடிக்கை.. ஐநா வரவைத் தடுத்தல், இராணுவப் புரட்சி.. :huh:

ஐந்து வருடங்களில் நிகழ்ச்சி நிரல்களில் என்னென்ன மாற்றங்கள்?

 

  • போர் முடிவுக்கு வந்தவுடன் கனடா இலங்கையின் குற்றங்கள் தொடர்பாக கொண்டுவந்த பிரேரணை இந்திய ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டது.
  • அதே சூட்டுடன் இந்தியா இலங்கையைப் பாராட்டி (பயங்கரவாதத்தை அழித்துவிட்டார்களாம்) ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து அசத்தியது.. :D
  • இன்று அதே இந்தியா ஒதுங்கி முனகிக்கொண்டுள்ளது. :wub:

சிங்களவனின் அடுத்த கட்ட நடவடிக்கை.. ஐநா வரவைத் தடுத்தல், இராணுவப் புரட்சி.. :huh:

 

இடையில் போன  வருடம் பிரேரணையை உப்புச் சப்பில்லாமல் ஆக்கி பின் அதற்கு இந்தியா ஆதரவு வழங்கி இருந்தது. இம் முறை ஒதுங்கிக் கொண்டுள்ளது.

 

 

அமெரிக்க பிரேரணையின் இறுதி வடிவம் இதோ!
e7c9c022d2836035351ddc86c13230ad.jpg

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனைத்து மனித உரிமைகள் மற்றும் அதன் முழு மக்கள் தொகையில் சகலரது அடிப்படை சுதந்திரங்களை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு நாடுகளினதும் பொறுப்பு.

பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைகளின் போதும், சர்வதேச சட்டம், குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம், என்பவற்றின் அடிப்படையில் நாடுகள் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்,

அமைதியான மற்றும் ஒன்றுபட்ட தேசத்தில், மதம், நம்பிக்கை அல்லது இன ரீதியான மனித உரிமைகள் உட்பட சகல மனித உரிமைகளுக்கும் இலங்கையில் மதிப்பளிக்கப்பட வேண்டும்.

சில விடயங்களில் இலங்கை கணிசமான அளவு முன்னேற்றமடைந்துள்ளது.

உட்கட்டமைப்பு, கண்ணி வெடி அகற்றுதல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல் உட்பட பெரும்பாலான நடவடிக்கையில் இலங்கை அரசு முன்னேற்றமடைந்துள்ளது.

எனினும் நல்லிணக்கம், நில பயன்பாடு மற்றும் உரிமை, பொதுமக்களின் வாழ்க்கையை சகஜ நிலையை மீண்டும் ஏற்படுத்துவது. இந்த முயற்சிகளுக்கு சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் உட்பட உள்ளூர் மக்கள், முழு பங்கை வகிக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

21 செப்டம்பர் 2013 அன்று மாகாண சபை தேர்தல்களை நடத்தியது வரவேற்கப்பட வேண்டியது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஆணையர் வருகையை எளிதாக்கியமை மற்றும் திறந்த அணுகுமுறையை வழங்கி அவர் சுதந்திரமாக செயற்பட அனுமதித்தமை.

மற்றும் ஆகஸ்ட் 2013 ல் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்தை வரவேற்பதுடன் அவரது முயற்சிகள் மற்றும் இலங்கை அரசின் ஒத்துழைப்புகள் பாராட்டத்தக்கவை.

கவலை தரும் விடயங்கள்

அவரது வருகையின் போது ஆணையாளரை சந்தித்து தகவல்களை வழங்கியவர்கள் உட்பட அவரை சந்தித்தவர்கள் உட்பட மனித உரிமைகள் வழிமுறைகளில் ஈடுபட்ட மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் எதிரான பதிலடி நடவடிக்கைள் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளன.

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், காணாமற்போதல், நீதிக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் கருத்து சுதந்திரம், ஒன்று கூடுதல் மற்றும் அமைதியான கூட்டங்களை நடத்தும் உரிமை, நீதித்துறை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்கள் உட்பட இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து வரும் செய்திகள் தீவிர கவலை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்தின் ஆட்சி, மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிரான பழிவாங்கல், சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அடக்குமுறை.

இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட இலங்கையில் சிறுபான்மை மத குழுக்கள், உறுப்பினர்கள் மீது தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டின் சகல மக்களுக்கான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் முழு உறுதி செய்யும் ஒருங்கிணைந்த அரசியல் அதிகாரம், அதிகார பகிர்வுக்கு உட்பட , அதன் பொது உறுதிமொழிகளை இலங்கை அரசு வழங்க வேண்டும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க இலங்கை ஆணைக்குழு, அதன் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் ஊடாக இலங்கை அர்த்தமுள்ள தேசிய நல்லிணக்க செயன்முறைகளில் அதன் சாத்தியம் பங்களிப்பு வழங்க வேண்டும்.

நம்பத்தகுந்த, சட்டத்துக்கு புறம்பான கொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் பரந்த அளவில் விசாரணைகளட நடத்தப்பட வேண்டும்.

இலங்கையின் வடக்கு இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், காணி பிரச்சினைகள் தொடர்பில் உரிய பாரபட்சமற்ற தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

தடுப்பு கொள்கைகள், சுயாதீன சிவில் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் உட்பட ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை, நினைவுகூர்ந்து மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு அரசியல் தீர்வு அடைய, மேம்படுத்த மற்றும் அனைத்து நபர்கள் கருத்து சுதந்திரம் உரிமை பாதுகாக்க சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க இலங்கை அரசின் ஆணைக்குழு மற்றும் அதன் பொறுப்புகள் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆணைக்குழு பரிந்துரைகளை பதில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு பரிந்துரைகளை அமுல்படுத்த தேசிய நடவடிக்கை திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

தேசிய நடவடிக்கை திட்டம் போதுமான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆணைக்குழு ஆக்கபூர்வமான பரிந்துரைகளை அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில், அறிக்கையில் அனைத்து கூறுகளையும் செயற்படுத்தும் திட்டத்தின் நோக்கம் விரிவுபடுத்த இலங்கை அரசுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை பதிலளிக்காத பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட வழக்குகள், இழப்பீட்டு தொகைகள், உண்மையை கண்டறியும், நிறுவன சீர்திருத்தம், பொது துறை ஊழியர்கள் உட்பட சட்ட மற்றும் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகள், முழு வீச்சில் சேர்த்துக்கொள்வதன் இடைக்கால நீதிக்கான ஒரு விரிவான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வுகளையும் வழங்குதல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் , பாதுகாப்பு அமைப்புகளின் சுயாதீனமான செயற்பாடுகளை உறுதிப்படுத்துதல், அரச நிறுவனங்கள் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் ஏற்ப சட்டத்தின் ஆட்சி ஊக்குவிக்குவித்தல், சர்வதேச மனித உரிமைகள் சட்டம், மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை தடுத்தல்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூலம் அவ்வாறான கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் வடிவங்கள் குறித்து நீதித்துறை மூலமான விசாரணை நடத்தி உண்மையை தேடும் செயல்முறைகள் நிறைவு செய்யலாம் என வலியுறுத்தப்படுகிறது.

சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களாகவுள்ள சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பாரிய மீறல்கள் பொறுப்பானவர்கள் மீது குற்ற விசாரணை நடத்தும், நாடுகளின் பொறுப்பை நினைவுகூர்ந்துள்ளது.

மேலும் தேசிய பொறிமுறைகளை தொடர்ந்து உண்மையை நிறுவ மற்றும் நீதி நிறைவேற்ற தவறிவிட்டது என்ற மனித உரிமை ஆணையாளரின் முடிவு.

மற்றும் அவரது பரிந்துரையை மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பில் விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்,

அப்படியான உள்நாட்டு ரீதியான பொறுப்பு கூறும் செயல்முறைகள் கண்காணிக்கவும் தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்ட உதவிகளை பெற மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் ஒத்துழைப்பை அதிகரிக்க இலங்கை அரசுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது.

போன்ற விடயங்கள் அமெரிக்கா சமர்பித்துள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=259982790627211784#sthash.yTFoko2v.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

1510947_10151983161777944_1946042855_n.j

 

இன்றைய அமெரிக்க தீர்மானத்தின் முக்கிய பிரிவாக சொல்லப்படும்.. பிரிவு:10 கொண்டிருக்கும் வாசகங்கள் இவை. இது சிறீலங்காவில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு ஐநா மனித உரிமைகள் பேரவையை இட்டுச் செல்லும் என்பது தான் முக்கியம் என்று கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி 

 

ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மான வாக்கெடுப்பு திருப்தி அளிக்கின்றது – அரசாங்கம்:-

Maki_CI.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதச விசாரணை நடாத்துமாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக ரீதியான நல்லிணக்க முனைப்புக்களையே முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தை நிராகரிப்பதாகவும், தீர்மானம் நல்லிணக்க முனைப்புக்களை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தினால் தளர்ந்து விடப் போவதில்லை எனவும், தொடர்ந்தும் நல்லிணக்க முனைப்புக்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மான வாக்கெடுப்பு திருப்தி அளிக்கின்றது – அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வாக்கெடுப்பு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள் வாக்களிக்கத் தகுதியுடையவை என்ற போதிலும், 23 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

12 நாடுகள் எதிராகவும், 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமை வரவேற்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது அரசாங்கம் உறுப்பு நாடுகளில் 24 நாடுகளை திருப்தி அடையச் செய்துள்ளது என தெரிவித்துள்ளது.

எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வாக்கு வித்தியாசம் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104838/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சென்றமுறை இந்தியா எதோ  கில்மாசம் காட்டி இறுதியில் ஆதரவு கொடுத்தது ..........இம்முறை கில்மாசம் செய்யமுடியாமல் எதிர்த்து ..........கோழைத்தனமாக ஒதுங்கி விட்டது ..........எப்பிடித்தான் ,சீனா ,பாகிஸ்தானுக்கு முகம் கொடுக்கப்போகுது ...........ஐயோ ஐயோ .......... :lol:
 
[கில்மாசம் என்றால் என்ன எண்டு மட்டும் கேட்டிடாதீங்க .]....... :D

 

 

 

தர்மம் வென்றே தீரும்.

எல்லாவழிகளிலும் ஒழித்து விளையாடி இனி முடியாது என்றநிலையில் தற்பொழுது தான் இந்தியா தனது உண்மை முகம் காட்டத்தொடங்குகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-2(55).jpg

மகிழ்ச்சி, இந்த இந்த வெற்றிக்கு உழைத்த நாடுகளுக்கும் , மக்களுக்கும் நன்றி. அடுத்த கட்ட நகர்வுகள் தொடரவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பம்பு என்ற கணக்கில் தான் இது உள்ளது. இனப்பிரச்சனை என்பது தொடர்பான வாக்கியங்களைக் காணமுடியவில்லை. மதப் பிரச்சனைகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. மேலும் நடந்த குற்றங்கள் மட்டும் ப்றறியே சிந்திக்க முயல்கின்றதே தவிர, மனித உரிமைகளுக்கான தீர்வு தொடர்பான எந்த வரையறையோ எதுவுமே இதில் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர் தரப்பு நாம் போதுமானளவு முயற்சி எடுக்கவில்லையோ எனத் தோன்றுகின்றது. இனப்பிரச்சனை என்பதில் இருந்து ரெம்பவே தூரமாகிப் போய்க் கொண்டிருக்கின்றோம்....

  • கருத்துக்கள உறவுகள்

1(4162).jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன. 47 நாடுகளை கொண்ட இந்த கவுன்ஸிலில் 12 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. 

நாடுகளின் பட்டியல்கள்

ஆதரவு

1.     ஆஜர்ன்டினா
2.      ஒஸ்ரியா 
3.      பெனின்
4.      பொட்ஸ்வானா
5.      பிரேஸில்
6.      சிலி 
7.      கொஸ்டாரிகா
8.      கோர்டிவோரின்
9.      செக்குடியரசு
10.    எஸ்தோனியா
11.    பிரான்ஸ்
12.    ஜேர்மன்
13.    அயர்லாந்து
14.    இத்தாலி
15.    மெக்சிகோ
16.    மொன்டிநீக்ரோ
17.    பெரு
18.    கொரியா 
19.    ருமேனியா
20.    மாக்கடோனியா
21.    சியாரா லியோ
22.    பிரித்தானியா
23.    அமெரிக்கா

எதிர்

1.    அல்ஜீரியா
2.    சீனா
3.    கொங்கோ
4.    கியூபா
5.    கென்யா
6.    மாலைத்தீவு
7.    பாகிஸ்தான்
8.    ரஷ்யா
9.    சவூதி அரேபியா
10.   ஐக்கிய அரபு இராஜ்ஜியம்
11.   வெனிசூலா
12.   வியட்னாம்

நடுநிலை

1.    புருக்கினோ பாசோ 
2.    எத்தியோபியா
3.    காபன்
4.    இந்தியா
5.    இந்தோனேஷியா
6.    ஜப்பான்
7.    கஸகிஸ்தான்
8.    குவைத்
9.    மொரோக்கோ
10.   நமீபியா
11.   பிலிப்பைன்ஸ்
12.   தென்னாபிரிக்கா

ஐ.நா மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கம் நாடுகளின் புவியியல் பரம்பல் விகிதம்

ஆபிரிக்க நாடுகள்                                                                   13
ஆசிய பசுபிக் நாடுகள்                                                          13
இலத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள்        8
மேற்கு ஐரோப்பிய நாடுகள்                                                 7
கிழக்கு ஐரோப்பிய நாடுகள்                                                6

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/104716-2014-03-27-13-00-55.html

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியது - இலங்கை

 

 

நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகித்தே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றியதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும் என சில நாடுகளை அமெரிக்கா எச்சரி;த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சில நாடுகள் மாற்று வழியின்றி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் சில நாடுகள் மிகச் சிறந்த பொருளாதார உறவுகளைப் பேணி வருவதாகவும் இதனால் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் எனவும் உள்நாட்டில் தேர்தல்கள் மூலம் செய்ய முடியாதவற்றை சர்வதேச ரீதியில் மேற்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தீர்மானத்தில் குறைபாடுகள் காணப்படுவதனாலேயே இந்தியா வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடி பணியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தின் 10ம் பந்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளதாகவும், இந்த பந்தி நீக்கப்பட வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவனீதம்பிள்ளை நேர்மையான முறையில் பக்கச்சார்பற்ற தன்மையுடன் விசாரணை நடாத்துவார் என எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்திற்கு ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் கூடுதலாக ஆதரவளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், உள்ளக பொறிமுறைமை ஒன்றின் மூலம் விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104843/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தராத நாடுகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான நாடுகள் அல்ல. அரசுக்கு அரசு அனுசரணை வழங்கியிருப்பதும், தாங்கள் விரும்பாத நாடுகளின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தமையுமே அங்கு வாக்கெடுப்பில் நிறைவேறியுள்ளது. ஆனால் இவற்றில் எந்தநாடுமே தமிழர் உரிமைப்போராட்டம் தவறானதென்று இதுவரை அறிக்கைகள் வெளியிட்டதாகத் தெரியவில்லை. அதரவு அளித்த நாடுகளும் போராட்ட முறைகளை சாடியிருப்பதையும் கவனத்தில் கொண்டு சிங்களத்தின் கொடூரப்பிடியிலிருந்து விடுபட, வரும் காலத்தில் ஐநா மேற்கொள்ளும் செயற்பாடுகளைத் தமிழர் சாதகமாகப் பயன்படுதிக்கொள்ளுதல் வேண்டும்.

நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகித்தே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றியதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

இப்படிச்சொன்னால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் காரம் குறையுமா?

சீனா, பாக்கிஸ்தான் போண்ற நாடுகளால் இராஜதந்திர முறையில் ஏற்படுத்த பட்ட இருவேறு வகையான தடைகளை தாண்டி இந்த தீர்மானம் வெற்றி ஈட்டி இருக்கிறது...

தமிழர்களுக்கு இதனால் பெரும் பயன் ஏதும் இல்லை எண்றாலும் வெற்றிக்கான நல்லதொரு துவக்கமாக இதை பயன் படுத்த முடியும்... தமிழர்களுக்கு வெற்றி இல்லையே தவிர சிங்கள அரசுக்கு நிச்சயமாக தோல்வியே... !!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது

 

பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது.

அதனால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.

 

ஆனால், தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை தாமதப்படுத்துவதற்கான கோரிக்கையை ஏற்க முடியாது என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியது. வாக்களிப்பின் மூலமே நாடுகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும் என்றும் அமெரிக்கா கூறியது.

 

சபாஷ்... மிக்க‌ மகிழ்ச்சியான செய்தி. :)

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.