Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையை மறுதலிக்கும் ஹரி ஆனந்தசங்கரி இளையோரைக் தாக்க முயற்சி!

Featured Replies

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் தாயகத் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து தமிழீழத்தில் சிங்கள அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை ஒரே குரலாக எடுத்துரைக்க முற்பட்டவேளையில், கனடாவில் வசித்துவரும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையிலான ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் இனப்படுகொலை எனும் பதத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஏனையோருக்கு பாரியளவில் அழுத்தம் கொடுத்திருந்தனர்.

hari_anandasankari1.JPG

இதன்போது ஐ.நா.வில் உரையாற்ற வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களும் பல அழுத்தங்களை திரு. கரி ஆனந்தசங்கரியினால் எதிர்நோக்கியிருந்தார்.

hari_anandasankari2.JPG

இதுபற்றி அண்மையில் கனடா சி.ரி.ஆர். வானொலியில் திருமதி. அனந்தி சசிதரன் அவர்கள் நேயர்கள் கேள்வி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி அவர்களின் கேள்விக்குப் பதிலளித்திருந்தார்.

hari_anandasankari3.JPG

அதில், நேயர் ஒருவரால், 'கனடாவில் இருந்து சென்ற திரு. கரி ஆனந்தசங்கரி அவர்களால் நீங்கள் இனப்படுகொலை என்ற சொற்பதத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என்று அழுத்தங்கொடுக்கப்பட்டதாக அறிகின்றோம். அது உண்மையா?' எனக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அனந்தி அவர்கள், 'ஆம். தான் அழுத்தம்கொடுக்கப்பட்டது உண்மையே. அது ஒரு துரதிஸ்டவசமானது' எனத் தெரிவித்திருந்தார்.

hari_anandasankari4.JPG

இது கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அடுத்த கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக லிபரல் கட்சியின் வேட்பாளர் தகுதிபெறும் உட்கட்சித் தேர்தலில் மக்கள் ஆதரவை வேண்டி வாக்குச் சேகரித்துவரும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் மீது எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தமிழ் மக்கள் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்களின் உண்மை முகத்தினைத் தெரிவிக்கும் வகையில் அவர் போட்டியிட உத்தேசித்துள்ள தொகுதியில் மக்களுக்கு விளக்கப் பிரசாரம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.

hari_anandasankari5.JPG

இதன்போது மூன்று ஜீப் வண்டிகளில் தனது அடியாட்களுடன் வந்திறங்கிய திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள், அங்கு பிரசாரம் செய்துகொண்டிருந்த இளையோர்களைத் தாக்க முற்பட்டதுடன் கொலை அச்சுறுத்தலையும் விடுத்திருந்தனர்.

அதன்போது, அவர்களை நோக்கி 'சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல. அங்கு நடைபெற்றது வெறும் போர்க்குற்றம் மட்டுமே. உங்களை இங்குள்ளவர்கள் இனப்படுகொலை என்று சொல்லித் தவறாக வழிநடத்துகின்றார்கள். இளையோர்கள் உங்களுக்கு இனப்படுகொலை என்றால் என்ன என்று தெரியுமா? இனப்படுகொலை என்பதன் விளக்கம் தெரியாமலே எவ்வாறு சிறிலங்கா அரசு தமிழர் மீது இனப்படுகொலை செய்தது என்று சொல்கிறீர்கள்' எனக் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.

இதேபோன்ற தாக்குதல்களே தமிழீழத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும் மக்கள் மீதும் சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த குண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இன்று கனடா, ஸ்காபரோவில் நடைபெற்ற இந்நிகழ்வும் தாயகத்தில் நடைபெறும் இவ்வாறான தாக்குதல்களையே தமக்கு நினைவூட்டியதாக அங்கு நின்றிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள், சிங்கள அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக இயங்கிவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. ஆனந்தசங்கரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது சுய அரசியல் அடித்தளத்துக்காகவே தமிழர் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்துவதாக தன்னைக் காட்டிக்கொள்வதுடன் இங்கு இயங்கும் தமிழர் அமைப்பொன்றினைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து செயற்பட்டு வருகிறாரோ என்று மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

http://www.pathivu.com/news/32022/57//d,article_full.aspx

கரி ஆனந்தசங்கரி  v.ஆனந்தசங்கரி போல் பேசுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கிடையே  ஆன  இது பொன்ற  திரிவுகளும்

பிளவுகளும்  எம்மை மேலும்  மேலும்  பலயீனப்படுத்தும்....

சம்பந்தப்பட்டவர்கள்

இரு பக்கமும் தொடர்பிலுள்ளோர் இதை உணர்ந்து உடனே  செயற்படணும்

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இன அழிப்பை.... இனப்படுகொலை.. என்று.. உச்சரிப்பதற்குக் கூட அழுத்தம் கொடுக்கும்.. ஓர் கேடு கெட்ட இனம் என்றால் அது தமிழர்கள் தான். இத்தனை அழிவுகளும் போதாதா... இன்னும் இன்னும்.. ஏன் இந்தக் கீழ்த்தரமான சிந்தனைகளும் அணுகுமுறைகளும்..!

இன அழிப்பு என்பதை உச்சரிக்க மறுப்பவர்களின்... அகதி அந்தஸ்தையும்... குடியுரிமையையும் பறித்துவிட்டு அவர்களை சிறீலங்காவுக்கே அனுப்பி வைக்கலாம் தானே. அங்க தானே அவைக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே. அப்புறம் எதுக்கு அகதி அந்தஸ்தும் கனடியா பிரஜா உரிமையும். அதுக்கு மட்டும் இனப்படுகொலை என்பதை உச்சரிப்பார்கள் போலும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் செய்கிறோம் என்கிற பெயரில் பொய் சொல்லித் திரிகிறார்கள். இவர்கள் அது ஒரு இனக்கொலை அல்ல என்று சொன்னால் அமெரிக்க இராஜதந்திரிகளே உள்ளுக்குள் சிரிப்பார்கள்.. :D

கரியும் 20 வருடங்களாக திட்டம் போட்டு அரசியல் இலக்கை அடையும் தறுவாயில் இருக்கிறார்.

இவர் பல குழப்படிகளை வெளியில் எடுத்து மற்றும் நற்சாட்சி கடிதம் கொடுத்து தனது இளையோர் குழுவில் வைத்திருக்கிறார்.

அவர்கள் தம் நண்பருக்கு உதவும் அவசரத்தில் ஆவேசபட்டிருக்கலாம்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம். இந்த செய்தி பதிவு என்ற இணையத்தளத்தில் வந்துள்ளது. செய்தியின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு கருத்து சொல்வதே முறை. பதிவு, லங்காபுவத்தின் மறுவடிவம் என்பதை அண்மைய அவர்களின் செய்திகள் காண்பிக்கின்றன.செய்திகளை தனக்கு ஏற்றபடி திரப்பது, தனக்கு பிடிக்காதவர்களை செய்திகள். மூலம் வசை பாடுவது. யதார்த்த்திற்கு புறம்பாக அரசியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவது பதிவு தளத்தின் அண்மைக்கால ஸ்ரைல்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

கரி ஆனந்தசங்கரி  v.ஆனந்தசங்கரி போல் பேசுகிறார்

சுமேந்திரனும் இதை இனப்படுகொலை என்று சொல்வதை தவிர்க்க சொல்கிறார். விக்னேஸ்வரனும் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்று சொல்லுங்கள் இனப்படுகொலை என்பதை தவிருங்கள் என்கிறார். ஏன் இவர்கள் இப்படி சொல்கிறார்கள்? இவர்கள் எல்லோரும் சட்டத்தரணிகள். நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் கூட இனப்படுகொலை என்று எவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை ஆனால் நாம் அப்படி ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் ஆனால் எப்படி செய்வது என்று மக்களை கேட்கிறார். இனப்படுகொலை என்று உறுதியாக நிற்பவர்களில் அறியப்பட்டவர்கள் எவராவது சட்டத்தரணிகளா? கஜேந்திரன் பொன்னம்பலம் சட்டத்தரணி. அவர் தவிர ஆனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோரே இப்படி முன்னிற்கிறார்கள்.

சொந்த இன அழிப்பை.... இனப்படுகொலை.. என்று.. உச்சரிப்பதற்குக் கூட அழுத்தம் கொடுக்கும்.. ஓர் கேடு கெட்ட இனம் என்றால் அது தமிழர்கள் தான். இத்தனை அழிவுகளும் போதாதா... இன்னும் இன்னும்.. ஏன் இந்தக் கீழ்த்தரமான சிந்தனைகளும் அணுகுமுறைகளும்..!

அரசியல் செய்கிறோம் என்கிற பெயரில் பொய் சொல்லித் திரிகிறார்கள். இவர்கள் அது ஒரு இனக்கொலை அல்ல என்று சொன்னால் அமெரிக்க இராஜதந்திரிகளே உள்ளுக்குள் சிரிப்பார்கள்.. :D

நீங்கள் உணர்வுபூர்வமாக எழுதுகிறீர்கள். அறிவுபூர்வமாக பார்த்தால் இலங்கையில் பாராளுமன்றத்தில் விஜயகலா தமிழில் திட்டிதீர்க்கிறார். சிறிதரன் தமிழில் உலகறிய மக்களின் பாதிப்புகளை அறிவிக்கிறார். அனைத்தும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அவரவர் தெரிவுக்கு ஏற்ப உடனுக்குடன் மொழிபெயர்க்க படுகிறது.

மாணவர்கள் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழில் கற்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாலை நேரத்தில் நடக்க இடமில்லாத படி தமிழ் சனம் பெருகி வழிகிறது.

இனப்படுகொலை நடத்திருந்தால் இவை எல்லாம் எப்படி நடக்கும்? என்று அமெரிக்க அரசில் உயர் அதிகாரிகளாக இருக்கும் யூதர்கள் கேட்கிறார்கள். அவர்கள் பெற்றோர் பாட்டன் காலத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதை தான் இனப்படுகொலைக்கு உதாரணமாக கொள்கிறார்கள். நாசி ஜெர்மனியில் யூதன் என்ற சாயல் இருந்தாலே சாம்பலாகி போனவர்கள் அவர்கள். அவர்களுக்கு எப்படி யாழ்ப்பாணத்தை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று விளங்கபப்டுத்துவீர்கள்?

Edited by Jude

பதிவு இணைய தளத்தில் இருந்து வரும் குப்பைகளை இணைப்பதை யாழ் நிர்வாகம் தடுக்குமா? பதிவு ஒரு அடிமட்ட செய்தித்தளம்...

கரியும் 20 வருடங்களாக திட்டம் போட்டு அரசியல் இலக்கை அடையும் தறுவாயில் இருக்கிறார்.

இவர் பல குழப்படிகளை வெளியில் எடுத்து மற்றும் நற்சாட்சி கடிதம் கொடுத்து தனது இளையோர் குழுவில் வைத்திருக்கிறார்.

அவர்கள் தம் நண்பருக்கு உதவும் அவசரத்தில் ஆவேசபட்டிருக்கலாம்.

இதை நான் சொன்னபோது கனடா உறவுகள் சிலர் அவருக்கு ஆதரவாக எழுதினார்கள்.  இவர் எமது பிரச்சனையில் எப்போதும் மதில் மேல் பூனைபோல்தான் இருந்தார்.  தனது கனேடிய அரசியல் லாபத்திற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையே செயலிழக்கச் செய்தவர்.  இவர் கனேடியத் தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகமே.  

சுமேந்திரனும் இதை இனப்படுகொலை என்று சொல்வதை தவிர்க்க சொல்கிறார். விக்னேஸ்வரனும் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்று சொல்லுங்கள் இனப்படுகொலை என்பதை தவிருங்கள் என்கிறார். ஏன் இவர்கள் இப்படி சொல்கிறார்கள்? இவர்கள் எல்லோரும் சட்டத்தரணிகள். நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் கூட இனப்படுகொலை என்று எவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை ஆனால் நாம் அப்படி ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் ஆனால் எப்படி செய்வது என்று மக்களை கேட்கிறார். இனப்படுகொலை என்று உறுதியாக நிற்பவர்களில் அறியப்பட்டவர்கள் எவராவது சட்டத்தரணிகளா? கஜேந்திரன் பொன்னம்பலம் சட்டத்தரணி. அவர் தவிர ஆனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோரே இப்படி முன்னிற்கிறார்கள்.

நீங்கள் உணர்வுபூர்வமாக எழுதுகிறீர்கள். அறிவுபூர்வமாக பார்த்தால் இலங்கையில் பாராளுமன்றத்தில் விஜயகலா தமிழில் திட்டிதீர்க்கிறார். சிறிதரன் தமிழில் உலகறிய மக்களின் பாதிப்புகளை அறிவிக்கிறார். அனைத்தும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அவரவர் தெரிவுக்கு ஏற்ப உடனுக்குடன் மொழிபெயர்க்க படுகிறது.

மாணவர்கள் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழில் கற்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாலை நேரத்தில் நடக்க இடமில்லாத படி தமிழ் சனம் பெருகி வழிகிறது.

இனப்படுகொலை நடத்திருந்தால் இவை எல்லாம் எப்படி நடக்கும்? என்று அமெரிக்க அரசில் உயர் அதிகாரிகளாக இருக்கும் யூதர்கள் கேட்கிறார்கள். அவர்கள் பெற்றோர் பாட்டன் காலத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதை தான் இனப்படுகொலைக்கு உதாரணமாக கொள்கிறார்கள். நாசி ஜெர்மனியில் யூதன் என்ற சாயல் இருந்தாலே சாம்பலாகி போனவர்கள் அவர்கள். அவர்களுக்கு எப்படி யாழ்ப்பாணத்தை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று விளங்கபப்டுத்துவீர்கள்?

ஐ.நா.வின் சட்டங்களில் இதற்கான இடமுண்டு.   ஐ.நா.வின் சட்டதிட்டங்களை அறிந்தவர்கள் பலர் உண்டு.  உங்களைக் கேள்வி கேட்பவர்கள் சர்வதேசச் சட்டத்தை அறிந்திருக்கவில்லை என நினைக்கிறேன்.  இதற்கான விடை இன்னும் சில வருடங்களில் சாதாரண மக்களுக்கும் தெரியவரும்.  

இதனை மக்களுக்கு மறைத்துத் தானும் தனது அமைப்பும் சார்ந்து மட்டுமே ஹரி ஆனந்தசங்கரி செயற்பட்டு வந்தார்.  தனது அரசியல் லாபத்திற்காக அந்த அமைப்பையே கையகப்படுத்திக் கொண்டார்.  அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் விலை போய் விட்டனர்.  ஆனால் மக்களை அதிக நாட்கள் யாரும் ஏமாற்றிவிட முடியாது.  அவர்களது ஏமாற்று வேலைகளுக்கு கனேடியத் தமிழ் மக்கள் விரைவில் பதில் கொடுப்பார்கள்.

என்னை பொறுத்த மட்டில் கனடாவில் (தற்போது போட்டியிடும்) எந்த தமிழரும் பதவிகளுக்கு வரகூடாது....எல்லாரும் hidden agenda வில் இருப்பதால்...இவர்களின் தில்லு முள்ளு ஒட்டு மொத்த தமிழருக்கும் தலைகுனிவு தான்......

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை நடத்திருந்தால் இவை எல்லாம் எப்படி நடக்கும்? என்று அமெரிக்க அரசில் உயர் அதிகாரிகளாக இருக்கும் யூதர்கள் கேட்கிறார்கள். அவர்கள் பெற்றோர் பாட்டன் காலத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதை தான் இனப்படுகொலைக்கு உதாரணமாக கொள்கிறார்கள். நாசி ஜெர்மனியில் யூதன் என்ற சாயல் இருந்தாலே சாம்பலாகி போனவர்கள் அவர்கள். அவர்களுக்கு எப்படி யாழ்ப்பாணத்தை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று விளங்கபப்டுத்துவீர்கள்?

Genocide என்றால் யூதர்களுக்கு நடந்தது  மட்டும் தான் என்று சொல்ல யூதர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதைக் கேட்கிறவன் எல்லாம் "அப்படியா? அப்ப சரிங்கண்ணா!" என்று சொல்ல வேண்டும் எதிர்பார்க்க யூதருக்கும் உங்களுக்கும் எவருக்கும் உரிமை இல்லை! 9/11 இற்கு முன்னர் அப்பாவி மக்களைக் கொன்றவன் மட்டும் தான் பயங்கரவாதி, அதற்குப் பிறகு அப்பாவி மக்களைப் பாதுகாக்க ஆயுதம் தூக்கினவனும் பயங்கர வாதி தான். இப்படி வரைவிலக்கணங்கள் வரலாற்று ஓட்டத்தில் மாறும்! மாற்ற வேண்டியது பாதிக்கப் பட்ட நாங்கள் தான்! அதுக்குத் தான் இளையோரும் சரி உருத்திர குமாரும் சரி திரும்பத் திரும்ப்ப முயற்சிக்கிறார்கள். இதை உணர்ச்சி இல்லாமல் எப்படி செய்வது? கரி ஆனந்த சங்கரியின் பார்லிமென்ற் சீற் பற்றிப் பேச உணர்ச்சி தேவையில்லை, ஆனால் ஒரு லட்சம் மக்களின் கொலையில் இருந்து எப்படி உணர்ச்சியை விலக்கி விட்டுப் பேசுவது எண்டு ஒருக்கா உங்கள் யூத அமெரிக்க நண்பர்களிடமே கேட்டுச் சொல்லுங்கோ! ஆன் பிரான்ங் டயரியை கொப்பிகள் அடித்து இலவசமாக வினியோகித்தது தொடங்கி கல்யாண வீட்டில் கிளாஸ் மிதிப்பது வரை உணர்ச்சி இல்லாமலா யூதர்கள் தங்கள் பேரிழப்பை வெளிக்கொணர்ந்தார்கள் எண்டும் ஒருக்காக் கேட்டுச் சொல்லுங்கோ! :)

அமெரிக்கா ஈராக்கில் கொன்றவர்கள் இனபடுகொலையின் கீழ் வரமாட்டார்கள், ஆனால் ISIS ஆல் கொல்லப்படுபவர்கள் இன படுகொலையின் கீழ் வரும்.....

(இஸ்ரேலால் கொல்லப்படும் பலஸ்தீனியர்களும் உலக நாடுகளின் கண்களில் இன்னும் இனபடுகொலையாக வரவில்லை)

ஒரே கொன்புசியன்

துல்பென் கூறியது போல் நம்பக தன்மையை விசாரிக்கவேண்டும்.

லிபரல் கட்சி பத்திரிக்கை டொரோண்டோ ஸ்டாரே ஜெனோசைட் என்று செய்தி போட்டுவிட்டது. கரி மறைக்க அங்கு ஒன்றும் இல்லை.

Sri Lanka’s hidden genocide

http://www.thestar.com/news/world/2013/11/04/sri_lankas_hidden_genocide.bb.html

  • கருத்துக்கள உறவுகள்

சுமேந்திரனும் இதை இனப்படுகொலை என்று சொல்வதை தவிர்க்க சொல்கிறார். விக்னேஸ்வரனும் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்று சொல்லுங்கள் இனப்படுகொலை என்பதை தவிருங்கள் என்கிறார். ஏன் இவர்கள் இப்படி சொல்கிறார்கள்? இவர்கள் எல்லோரும் சட்டத்தரணிகள். நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் கூட இனப்படுகொலை என்று எவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை ஆனால் நாம் அப்படி ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் ஆனால் எப்படி செய்வது என்று மக்களை கேட்கிறார். இனப்படுகொலை என்று உறுதியாக நிற்பவர்களில் அறியப்பட்டவர்கள் எவராவது சட்டத்தரணிகளா? கஜேந்திரன் பொன்னம்பலம் சட்டத்தரணி. அவர் தவிர ஆனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோரே இப்படி முன்னிற்கிறார்கள்.

நீங்கள் உணர்வுபூர்வமாக எழுதுகிறீர்கள். அறிவுபூர்வமாக பார்த்தால் இலங்கையில் பாராளுமன்றத்தில் விஜயகலா தமிழில் திட்டிதீர்க்கிறார். சிறிதரன் தமிழில் உலகறிய மக்களின் பாதிப்புகளை அறிவிக்கிறார். அனைத்தும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அவரவர் தெரிவுக்கு ஏற்ப உடனுக்குடன் மொழிபெயர்க்க படுகிறது.

மாணவர்கள் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழில் கற்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாலை நேரத்தில் நடக்க இடமில்லாத படி தமிழ் சனம் பெருகி வழிகிறது.

இனப்படுகொலை நடத்திருந்தால் இவை எல்லாம் எப்படி நடக்கும்? என்று அமெரிக்க அரசில் உயர் அதிகாரிகளாக இருக்கும் யூதர்கள் கேட்கிறார்கள். அவர்கள் பெற்றோர் பாட்டன் காலத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதை தான் இனப்படுகொலைக்கு உதாரணமாக கொள்கிறார்கள். நாசி ஜெர்மனியில் யூதன் என்ற சாயல் இருந்தாலே சாம்பலாகி போனவர்கள் அவர்கள். அவர்களுக்கு எப்படி யாழ்ப்பாணத்தை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று விளங்கபப்டுத்துவீர்கள்?

அமெரிக்கா இனப்படுகொலையை சற்றலைட் படம் மூலம் எடுத்து ஆதாரமாக வைத்துள்ளது. சில படங்கள் 2009 ல் இணையத்தில் உலாவியது. யாழ்களத்திலும்  இணைக்கப்பட்டிருந்தன.
சனல்4 ல் எடுக்கப்பட்ட படங்கள், காணொளிகள், சாட்சியங்கள் முள்ளிவாய்க்காலில்  என்ன நடந்தது என எண்ணுகிறீர்கள்??
யாழ்ப்பாணம் இராணுவகட்டுப்பாட்டில் பல காலம் இருந்தது. வன்னி தான் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது,. அங்கு தான் இறுதி யுத்தம் நடந்தது. அங்கு புலிகளுடன் இருந்த மக்களும் போரை சாட்டி எவ்வளவு மக்களை கொல்ல முடியுமோ அவ்வளவையும் கொன்று அழித்தது இலங்கை அரசு. அமெரிக்கர்களுக்கு தெரியாது என கதை விடாமல் ஹரன் பாக்கரும் ஒரு அமெரிக்கர் தான். அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்கா ஈராக்கில் கொன்றவர்கள் இனபடுகொலையின் கீழ் வரமாட்டார்கள், ஆனால் ISIS ஆல் கொல்லப்படுபவர்கள் இன படுகொலையின் கீழ் வரும்.....

(இஸ்ரேலால் கொல்லப்படும் பலஸ்தீனியர்களும் உலக நாடுகளின் கண்களில் இன்னும் இனபடுகொலையாக வரவில்லை)

ஒரே கொன்புசியன்

ஐ ஆர் ஏ பயங்கரவாத அமைப்பு இல்லை. ஆனால் புலிகள் பயங்கரவாத அமைப்பு. எனக்கும் ஒரே கான்வியூசன் தான் பாருங்கோ. :huh:  :huh:

சுமேந்திரனும் இதை இனப்படுகொலை என்று சொல்வதை தவிர்க்க சொல்கிறார். விக்னேஸ்வரனும் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்று சொல்லுங்கள் இனப்படுகொலை என்பதை தவிருங்கள் என்கிறார். ஏன் இவர்கள் இப்படி சொல்கிறார்கள்? இவர்கள் எல்லோரும் சட்டத்தரணிகள். நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் கூட இனப்படுகொலை என்று எவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை ஆனால் நாம் அப்படி ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் ஆனால் எப்படி செய்வது என்று மக்களை கேட்கிறார். இனப்படுகொலை என்று உறுதியாக நிற்பவர்களில் அறியப்பட்டவர்கள் எவராவது சட்டத்தரணிகளா? கஜேந்திரன் பொன்னம்பலம் சட்டத்தரணி. அவர் தவிர ஆனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோரே இப்படி முன்னிற்கிறார்கள்.

நீங்கள் உணர்வுபூர்வமாக எழுதுகிறீர்கள். அறிவுபூர்வமாக பார்த்தால் இலங்கையில் பாராளுமன்றத்தில் விஜயகலா தமிழில் திட்டிதீர்க்கிறார். சிறிதரன் தமிழில் உலகறிய மக்களின் பாதிப்புகளை அறிவிக்கிறார். அனைத்தும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அவரவர் தெரிவுக்கு ஏற்ப உடனுக்குடன் மொழிபெயர்க்க படுகிறது.

மாணவர்கள் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழில் கற்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாலை நேரத்தில் நடக்க இடமில்லாத படி தமிழ் சனம் பெருகி வழிகிறது.

இனப்படுகொலை நடத்திருந்தால் இவை எல்லாம் எப்படி நடக்கும்? என்று அமெரிக்க அரசில் உயர் அதிகாரிகளாக இருக்கும் யூதர்கள் கேட்கிறார்கள். அவர்கள் பெற்றோர் பாட்டன் காலத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதை தான் இனப்படுகொலைக்கு உதாரணமாக கொள்கிறார்கள். நாசி ஜெர்மனியில் யூதன் என்ற சாயல் இருந்தாலே சாம்பலாகி போனவர்கள் அவர்கள். அவர்களுக்கு எப்படி யாழ்ப்பாணத்தை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று விளங்கபப்டுத்துவீர்கள்?

பலஸ்தீனத்திலை  யூதர்கள் இனப்படுகொலையிலை ஈடுபடவில்லை எண்டதை நம்பும் யூதர்களிட்டை போய்  எங்கட மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் எண்டு சொல்லுறது உங்களுக்கு கஸ்ரமாக தான் அண்ணை இருக்கும்...

காரணம் பாருங்கோ உங்கட மன நிலையும் அவர்களின் மனநிலையும் ஒண்டுதான்...

இனப்பிரச்சினைக்கும் தீர்வு கேக்கிற  சுமத்திரனுக்கும் , சம்பந்தனுக்கும் விக்கியருக்கும்  இனப்பிரச்சினை காரணமாக கொலைகள் நடந்தது  எண்டதை விளக்கமாக விளங்காதது கூட  ஆச்சரியம் இல்லை பாருங்கோ... 

தங்களை எப்பவும் தலைமையிலை வைச்சிருக்க வேண்டி விரும்புறவர்களிட்டை இதை விட வேறை எதை எதிர்பார்க்க முடியும் எண்டுறிர்கள்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை இரானுவத்தால் படுகொலை செய்ய பட்டார்கள் என்பதை உலகின் பெரும்பாலான நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் எந்த சந்தேகமும் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால் தான் போர்க்குற்ற விசாரணை நடக்கிறது.

ஆனால் இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுவதை நிருபிக்க வேண்டுமானால் ஏன் இன்னமும் தமிழர்கள் அங்கு பல்கலைக்கழகம் முதல் பாராளுமன்றம் வரை குறிப்பிடத்தக்க உரிமைகளுடன் வாழ்கிறார்கள் என்பதை விளங்கப்படுத்த வேண்டும். இனப்படுகொலை செய்யும் அரசு அந்த இனத்தை முழுமையாக அந்த நாட்டில் இருந்து அழிக்கும். தமிழர்கள் அப்படி அழிக்க படாமல் பல உரிமைகளுடன் வாழ்கிறார்களே? எப்படி இது சாத்தியம்? இதை விளங்கப்படுத்துவதில் எமது சட்டத்தரணிகள் சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

நாம் பல்லாயிரம் முறை இனப்படுகொலை என்று சொன்னாலும் ஐக்கிய நாடுகள் அப்படி ஏற்றுக்கொள்ளாத வரை, இனப்படுகொலை என்று பிரகனப்படுத்துவதால் கிடைக்க கூடிய நன்மைகள் கிடைக்காது. ஆகவே நான் இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்கிறேனா அல்லது நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்று பார்க்காமல் உலக நாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையையும் எப்படி ஏற்றுக்கொள்ள வைப்பது என்று பார்க்க வேண்டும். ஆகவே இந்த பிரச்சினையை உங்கள் முன் கொண்டு வரும் எங்களை திட்டுவதில் உங்கள் ஆற்றலை செலவிடாமல் மேற்படி கேள்விக்கு பதிலை கண்டுபிடிப்பதில் செலவிடுங்கள். இனப்படுகொலை என்று நிரூபிப்பதில் பங்களித்தவர் ஆவீர்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கும் தீர்வு கேக்கிற  சுமத்திரனுக்கும் , சம்பந்தனுக்கும் விக்கியருக்கும்  இனப்பிரச்சினை காரணமாக கொலைகள் நடந்தது  எண்டதை விளக்கமாக விளங்காதது கூட  ஆச்சரியம் இல்லை பாருங்கோ... 

தங்களை எப்பவும் தலைமையிலை வைச்சிருக்க வேண்டி விரும்புறவர்களிட்டை இதை விட வேறை எதை எதிர்பார்க்க முடியும் எண்டுறிர்கள்...??

நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது பற்றி யார் அக்கறைப்பட்டார்கள்? அந்த தலைவர்களால் மக்கள் ஆறுதல் அடைகிறார்கள். உங்களால் அவர்களுக்கு என்ன பயன்? உங்கள் கருத்து பயனற்றது.

அமெரிக்கா ஈராக்கில் கொன்றவர்கள் இனபடுகொலையின் கீழ் வரமாட்டார்கள், ஆனால் ISIS ஆல் கொல்லப்படுபவர்கள் இன படுகொலையின் கீழ் வரும்.....

(இஸ்ரேலால் கொல்லப்படும் பலஸ்தீனியர்களும் உலக நாடுகளின் கண்களில் இன்னும் இனபடுகொலையாக வரவில்லை)

ஒரே கொன்புசியன்

எனக்கும் கொன்புயுசன் தான் நான் தான்.

இந்த பட்டியலில் சேகுவாரா அரசியல் கைதிகளை நிறுத்தி வைத்து கொத்தாக இராக்கி ஐசிஸ் போல் படுகொலை செய்ததது வருமா?

இனக்கொலை என்னும் பதம் சரியில்லை... தற்கொலை என சொன்னால் சாலப்பொருந்தும்.

நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது பற்றி யார் அக்கறைப்பட்டார்கள்? அந்த தலைவர்களால் மக்கள் ஆறுதல் அடைகிறார்கள். உங்களால் அவர்களுக்கு என்ன பயன்? உங்கள் கருத்து பயனற்றது.

எனக்கு என்ன எண்டது நண்றாக விளங்குது...   

என்னாலை எந்த பனும் இல்லை உங்களாலை மட்டும் தான் வெட்டி முறிக்க முடியும் என்டுறீயள்...  !!  சரி செய்யுங்கோவன் யார் வேண்டாம் என்டது... 

என்னாலை எந்த பயனும் இல்லை எண்டால் எதுக்கு இதுக்கை நிண்டு ************** எண்டதை மட்டும் சொல்லிப்போட்டு போங்கோவன்... !!! 

Edited by nunavilan

அதில், நேயர் ஒருவரால், 'கனடாவில் இருந்து சென்ற திரு. கரி ஆனந்தசங்கரி அவர்களால் நீங்கள் இனப்படுகொலை என்ற சொற்பதத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என்று அழுத்தங்கொடுக்கப்பட்டதாக அறிகின்றோம். அது உண்மையா?' எனக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அனந்தி அவர்கள், 'ஆம். தான் அழுத்தம்கொடுக்கப்பட்டது உண்மையே. அது ஒரு துரதிஸ்டவசமானது' எனத் தெரிவித்திருந்தார்.

அம்மணி வாங்கின காசுக்கு நால்லாகத்தான் குரைக்கின்ரா ?மற்றவங்கள் அழுத்தம் கொடுப்பதற்கு இவ பால்குடி வவா தானே ?

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணி வாங்கின காசுக்கு நால்லாகத்தான் குரைக்கின்ரா ?மற்றவங்கள் அழுத்தம் கொடுப்பதற்கு இவ பால்குடி வவா தானே ?

பச்சைத்தமிழன் (பச்சோந்தி அல்ல)சுமந்திரன்,ஹரி போன்றோரின் அறிவுரைகளை அனந்தி கேட்டிருக்கவேணும்.அப்போது குழந்தையை போல் அழுதுவிட்டு,இப்போது மாட்டிவிடக்கூடாது...ஆமா எவ்வளவு வாங்கினா உங்ககிட்டயிருந்து

எங்களுக்கே இங்க கோப்பி குடிக்க காசில்லை.

சும்மா வாயால் வடையை மட்டும் சுட்டு கொண்டிருக்கிறோம்.

பச்சைத்தமிழன் (பச்சோந்தி அல்ல)சுமந்திரன்,ஹரி போன்றோரின் அறிவுரைகளை அனந்தி கேட்டிருக்கவேணும்.அப்போது குழந்தையை போல் அழுதுவிட்டு,இப்போது மாட்டிவிடக்கூடாது...ஆமா எவ்வளவு வாங்கினா உங்ககிட்டயிருந்து

டொலர் /இலங்கை ரூபாவில் சொல்லவேண்டுமா ?கனடா உ த வில் உள்ள நேரு ,முரசொலி mr Rich போன்றோரின் அறிவுரையை கேட்டுத்தான் கனடா சனம் நடுத்தெருவில் நிக்குது.

பரிசோதனை எலி என்று ஆனந்தியை சண் தவராசா சொன்னதை ஆனந்தியின் செயற்பாடுகள் நிரூபிக்கின்றன .

ஆனந்தி கனடா வரும்போது நேரடியாக ஆதாரங்களுடன் கேட்பேன் ,அப்பொழுது கனடாவில் உள்ள யாழ்கள உறுப்பினர்களும் விரும்பினால் பங்குகொள்ளலாம் .

ஆனந்திதான் பச்சோந்தித்தனமாக இருக்கின்றது ,ஜெனிவாவில் ஒரு கதை ,யாழில் வேறோருகதை ,கனடா CTR இல் இன்னொரு கதையாக கதையளக்கின்றா .

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.