Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூல்களின் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு வெற்றி பெற வாழ்த்துக்கள் சுமே!

  • Replies 59
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புத்தகங்கள் எல்லாம் விற்றுத் தீர்த்து,புத்தக வெளியீடு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்...எனக்கு வரலாற்றில் எல்லாம் விருப்பமே இல்லாத படியாலும்,என் மதிப்பிற்குரிய நண்பர் நூல் வெளியீட்டு வரவில்லை என்பதாலும் என்னாலும் இதற்கு வர முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புத்தக வெளியீடு வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நம்ம தயா அண்ணை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதால்
நூல் வெளியீட்டு விழா தூக்கலாக இருக்கும் :D
வேண்டுமென்றே அவரை விமர்சகராகப் போடாமல் நிகழ்வுத் தொகுப்பாளராக நியமித்திருக்கிறீர்களா ? :rolleyes:

பரவாயில்லை தொகுப்பாளாராக வந்தாலும் இடைக்கிடை அவர் உங்கள் நூலைப் பற்றி விமர்சிக்காமல்

அவர்பாணியில் போட்டுத் தாக்குவார். :D:lol:

நூல் வெளியீட்டு விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10346297_10201728022715903_4322981861105

 

 

 

10527376_10201728023835931_7444607761303

 

 

10492263_10201728025035961_5430000100165

 

 

10477073_10201728025315968_7646096772274

 

 

10394594_10201728025675977_2187014904923

 

 

10400859_10201728026035986_7790758508065

 

 

 

10553514_10201728023555924_2317856534826

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வெளியீட்டு விழா சிறப்பாக நடந்திருக்கின்றது என்று தெரிகின்றது. வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தட்டிலை பலகாரமெல்லாம் பரிமாறப்பட்டிருக்கு போலை இருக்கு.....நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்..சுமேரியர்

 

தட்டிலை பலகாரமெல்லாம் பரிமாறப்பட்டிருக்கு போலை இருக்கு..

 

நான் பலகாரம் சாப்பிட வென்றே நூல் வெளியீடுகளுக்கு போறதுண்டு..:D

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. வீடியோ வை தான் போட முடியவில்லை. தொழில் நுட்பம் தெரியாதபடியால். மகளுடன் விடுமுறையைக் கழிக்க லண்டன் வந்த சாத்திரியும்  நந்தனும் இன்னும் இரு முகப்புத்தக நண்பர்களும் வெளியீட்டுக்கு வந்தது மகிழ்வாக இருந்தது. நந்தனுக்கு பலகாரம் கொடுக்கப்படவில்லை என்று முறைப்பாடு.

 

தயானந்தா தலைமை தாங்குவதாக இருந்தது முதலில். ஒரு வாரத்தின் முன்னர் ஏற்பட்ட விபத்தில் அவருக்குக் கால் உடைந்து நடக்க முடியாமல் போய்விட்டது. என்னடா இப்படித் தடையாக இருக்கே என்று எண்ணி சிலரை தலைமை தாங்கக் கேட்ட போது முதலிலேயே தமக்குச் செம்பு தரவில்லை என்று மறுத்துவிட்டனர். கடைசி நேரத்தில் என்ன செய்வது என யோசித்தபோது தினேஷ் தானே செய்கிறேன் என முன்வந்தார். அவர் சுமேரியர் பற்றிய விமர்சனம செய்வதாக இருந்தபடியால் வேறு ஒருவரை கதை விமர்சனத்தில் இருந்து மாற்றி சுமேரியர் பற்றிய விமர்சனத்துக்குப் போட்டுவிட்டு  எல்லாம் நின்மதி என்று இருந்தால் நான்கு மணிக்கு மண்டபத்தில் நிற்பதாகக் கூறிய திநேசை ஐந்து  ஆகியும் காணவில்லை. அவருக்குப் போன் செய்தால் பதிலே இல்லை. ஐந்து மணிக்கு ஆட்கள் வர ஆரம்பித்துவிட்டனர். எனக்கோ பதட்டம். ஐந்தே கால் வரையில் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு ராஜமனோகரன் அண்ணாவிடம் விடயத்தைக் கூறியபோது தான் இரண்டையும் செய்கிறேன் என்றார். நிகழ்வு ஐந்து மணிக்கு என்று கூறியது ஐந்து நாற்பத்தைந்துக்குத்தான்  ஆரம்பித்தது. சிறுகதைகள் பற்றி திரு முல்லை அமுதன், திரு யமுனா ராஜேந்திரன், திரு சாம் பிரதீபன் ஆகியோர் அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்தனர். சுமேரியரின் விமர்சனத்துக்குத்தான் சரியான ஒருவரும் வரவில்லை. தினேஷ் வந்திருந்தால் சுமேரியர் பற்றி தெளிவாக அலசியிருப்பார். அவரின் நண்பருக்கு ஏற்பட்ட திடீர் விபத்தினால் அவர் நண்பரை வைத்தியசாலையில் சேர்த்துவிட்டு அங்கு நின்றதனால் வரமுடியவில்லை என அடுத்தநாள் அறிவித்திருந்தார். 

 

இத்தனை தடைகளோடும் விழா சிறப்பாக நடைபெற்று  முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பருக்கு விபத்து என்றாலும் இடையில் ஒரு நிமிடத்தை ஒதுக்கி, நிலைமையை தெரியப்படுத்தி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மோசப்பதேமியாவில் இருந்து ஈழம் வரை தம் வரலாற்றை சாம்பாரில் நனைத்த தமிழர்

நிவேதா உதயராயனின் இருநூல்கள் இலண்டனில் வெளியிடப் பட்டது.அதே சமகாலகட்டத்தில் நானும் மகளும் இலண்டனில் நின்றிருந்ததால் புத்தக வெளியீட்டிற்கு செல்வதாக முடிவெடுத்திருந்தேன்.நிகழ்வு 5 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் நானும் மகளும் நாலரை மணிக்கே மண்டபத்திற்கு சென்று விட்டிருந்தோம்.நிகழ்வினை தயானந்தாவே தொகுத்து வழங்குவதாக முதலில் முடிவாகியிருந்தது.ஆனால் தயானந்தா நிவேதாவின் கதைகளை படித்ததினாலோ என்னவோ தடக்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விடவே அடுத்ததாக தொலைக்காட்சி அறிவிப்பாளர் தினேஸ் தொகுத்து வழங்குவார் என்று நிவேதா அறிவித்திருந்தார். அங்கு நின்றிருந்த என்னிடம் காரில் இருந்து புத்கங்கள் மற்றும் பொருட்களை இறக்குவதற்கு உதவும்படி கேட்கவே அவரிடம் கார் திறப்பை வாங்கிக்கொண்டுபோய் டிக்கியை திறந்ததும் மசாலா வாசனை முகத்தில் அடிக்கவே நிவேதா அறுசுவையும் கலந்து மசாலா புத்தகத்தை எழுதியிருக்கிறார் போலை படிக்காமலேயே இப்படி மணக்கிறது என்று நினைத்படி உள்ளே பார்த்தேன். அப்பதான் விசயம் விழங்கியது. புத்தகங்களை ஏற்றிவிட்டு வருகிற வழியில் உணவகத்தில் போய் சாப்பாடுகளையும் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்.சாம்பாரை வைத்தவன் அதனை சரியாக மூடாமல் புத்தகங்களிற்கு மேல் வைத்து விட்டிருக்கிறான்.இலண்டன் வீதியில் நிவேதாவின் வேகமான ஓட்டத்திற்கு ஈடுகுடுக்கமுடியாது டிக்கிக்குள் இருந்த சாம்பர் சட்டி கவிழ்ந்து மோசப்பதேமியாவில் இருந்து ஈழம் வரை தம் வரலாற்றை மறந்த தமிழர் என்கிற புத்தகங்களை நனைத்துவிட்டிருந்தது.ஒரு மாதிரி புத்தகங்களை எடுத்து துடைத்துக்கொண்டுபோய் மண்டபத்தில் அடுக்கும்போது அங்கு மைக் செட் காரர் மட்டும் அனாதையாய் நின்றபடி மைக் ரெஸ்ரிங் வண்.....ரூ......திறீ.....பாடமாக்கிக்கொண்டிருந்தார். நேரம் 5 மணியைத் தாண்டிக்கொண்டிருக்க புத்தக விமர்சனம் செய்பவர்களான. மாதவி சிவசீலன்.சாம் பிரதீபன்.யமுனா ராஜேந்திரன்.முல்லை அமுதன்.ராஜமனோகரன்.ஆகியோர் வந்திருந்தார்கள். புத்தக வெளியீடு பற்றிய அறிவிப்பில் இருந்தவர்களான பசில் அலி.அருட் தந்தை நவாஜி இருவரும் வரவில்லை.நேரம் 5.15 தண்டிக்கொண்டிருந்தது 50 பேரிற்கு மேல் சனங்கள் வந்துவிட்டிருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தினேசை காணவில்லை அவரது தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிவேதா புத்தகம் எழுதியபோது இருந்த பதைபதைப்பை விட அவருக்கு அந்த நேரம் திக்..திக்..நிமிடங்களாக நிச்சயம் இருந்திருக்கும். இப்போ நேரம் 5.30 தை தாண்டிக்கொண்டிருந்தது 5.மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் எண்டாயே இப்ப 5.30 ஆகிட்டுது ஏதாவது பிரச்சனையா??என்று மகள் என்னைப் பார்த்துக்கேட்டாள். எங்கடை நிகழ்ச்சிகள் சொன்ன நேரத்துக்கு தொடங்கினால்தான் பிரச்சனை பிந்தித் தொடங்கினால் எந்தப் பிரச்சனையும் இல்லை எண்டு சொன்ன என்னை மேலை கீழை பார்த்திட்டு வெளியே போய்விட்டாள்.இப்பொழுது நேரம் 5.45 .தமிழ் சினிமாவில் கடைசி நேர கிளைமாக்சில் மணமகள் மாலையோடு காத்திருக்க மணமகனை காணவில்லை என்கிற நிலைமை டக்..டக்..............டக்...டக்...இதயத்துடிப்பு..மேடையில் விமர்சகர்கள் அமர்ந்து விட்டார்கள். சனங்களும் 100 த் தாண்ட நான் கதிரைகளை மேலும் அடுக்கிக் கொண்டேயிருந்தேன். வெளியே போயிருந்த மகள் உள்ளே வந்து எட்டிப்பார்த்தாள். திடீர் தோசை. திடீர் இடியப்பம் .தாலி கட்டுவதற்கு வந்த மணமகன் ஓடிப்போய்விட்ட இடத்தி் திடீர் மணமகன் போல .ராஜமனேகரன் தான் திடீர் நிகழ்ச்சி தொகுப்பாளர்.அவரே விமர்சகர். நிறம் மாறும் உறவுகள் புத்தகம் பற்றிய விமர்சனத்தில் சாம் பிரதீபனும் .யமுனா ராஜேந்திரனும் சிறப்பாக தங்கள் விமர்சனத்தை வைத்திருந்தார்கள். முல்லையமுதன் ஏதோ கூப்பிட்டு கோலாவும் வடையும் குடுத்துக்காக புகழ்ந்து பேசியே ஆக வேணும் எண்டு நினைத்து புகழ்ந்தது போல இருந்தது.அடுத்தாக வரலாற்றை தொலைத்த தமிழர் மொசப்பத்தேமியவிலிருந்து ஈழம்வரை என்கிற புத்தகத்திற்கு மாதவி சிவசீலன்.விமர்சனங்களை வைத்தார்என்பதை விட முயற்சித்தார் என்று சொல்லலாம்.ஆனால் திடீர் மாப்பிள்ளையாகி் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த ராஜமனேகரன் சிறபபாக தொகுப்பை செய்திருந்தாலும். கடைசியில் அதிக நேரத்தையெடுத்து அறுத்ததது கொஞ்சம் கவலை .பலர் மண்டபத்தை விட்டு வெளியேறத் தொடங்கியிருந்தனர்.இறுதியாக நான் 163கதிரைகளை அடுக்கி வைத்து விட்டு நிமிர்ந்தபோது பல முன்னை நாள் ஆண் பெண் போராளிகள் என்னோடு நின்றவர்கள். பல இணையப் போராளிகள். என்னை போட்டுத்தள்ளவேண்டும் என்று எழுதிக்கொண்டிருக்கும் தீவிர போராளிகள் அனைவரும் அங்கிருந்து அகன்றுவிட மீதமிருந்த ஒரு தண்ணீர் போத்தலை எடுத்தபடி நான் இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத்தொடங்கியிருந்தேன்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10492263_10201728025035961_5430000100165

 

கனநேரமாய் கதவு நிலைக்கு மிண்டு குடுத்துக்கொண்டு நிக்கிறவர் ஆரப்பா?  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் சுமே..!  :) :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இனிதே நடந்த சுமேயின் புத்தக வெளியீட்டுக்கு பிந்திய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி நேர... திக், திக் அனுபவங்களுடன், இனிதே நிறைவேறிய புத்தக வெளியீட்டுக்கு வழ்த்துக்கள் சுமே.

10492263_10201728025035961_5430000100165

 

கனநேரமாய் கதவு நிலைக்கு மிண்டு குடுத்துக்கொண்டு நிக்கிறவர் ஆரப்பா?  :icon_mrgreen:

 

திரு.பொன். சத்தியசீலன்(?) தம் அடிக்க வசதியாய் கதவோரமாய் நின்றிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்நூல் வெளியீட்டில் அதனை எழுதிய நிவேதா மிகவும் அந்நியப்பட்டு நிற்பதுபோல்  நிழற்படங்கள் அமைந்துள்ளன. அரங்கில் விமர்சகர்களுக்கு அருகாமையில் அமராமல் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருப்பது... நூல் வழங்கும் இடத்தில் எட்ட நிற்பது ஏன் என்று விளங்கவில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

 

 

10492263_10201728025035961_5430000100165

 

 

 

 

 

நாங்க நினைச்சம்.. நூல் வெளியீடு என்றால்.. கோவில் திருவிழா போல.. நிறைய பிகருங்க வருமென்று.  நிலைமை இப்படியா இருக்கு.

 

நல்ல காலம்.. அதோட நேரச் சேமிப்பு.. வயசுப் பையங்க.. உதுகளுக்கு போகாமல் இருக்கிறது. :lol:

 

இருந்தாலும்.. சுமே அக்காவின் நூல் வெளியீடு சிறப்பாக நடந்ததை இட்டு மகிழ்ச்சி. :icon_idea:
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்து வாழ்த்திய உறவுகளுக்கும் கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகளுக்கும் நன்றி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ,
"வரலாற்றை தொலைத்த தமிழர்" என்னும் புத்தகத்தை...... ஜேர்மனியில் எங்கு வாங்கலாம்.

  • 2 weeks later...

இனிதே நடந்த சுமேயின் புத்தக வெளியீட்டுக்கு பிந்திய வாழ்த்துக்கள்




இவரையும் கூப்பிட்டிருக்கலாமே :)  :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமோ,

"வரலாற்றை தொலைத்த தமிழர்" என்னும் புத்தகத்தை...... ஜேர்மனியில் எங்கு வாங்கலாம்.

 

சிறி யேர்மனியில் என் அம்மாவிடம் நூல்கள் உள்ளன. உங்கள் விலாசத்தை தனிமடலில் தந்தீர்கள் என்றால் அம்மா அனுப்புவார்.

 

இனிதே நடந்த சுமேயின் புத்தக வெளியீட்டுக்கு பிந்திய வாழ்த்துக்கள்

இவரையும் கூப்பிட்டிருக்கலாமே :)  :icon_idea:

 

இவர் வருவதாக இருந்தது Gari. விசாக்குடுக்காததால் வர முடியவில்லை. :D

 

 

 

இவர் வருவதாக இருந்தது Gari. விசாக்குடுக்காததால் வர முடியவில்லை. :D

 

பாட்டை கேட்டிருந்தால்  யார் என்று புரிந்திருக்கும் . :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் Gari பாட்டைக் கேட்டபின்னரும் எனக்கு விளங்கவில்லை. யார் என்று நீங்களே கூறி விடுங்கள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.