Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடைசி தலைமுறை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி தலைமுறை...

 

1.அலை பேசிக்கு முன்னாடி வந்த பேஜர் என்னும் கருவியை உபயோகித்த ஒரே தலைமுறை நம்மளாதான் இருக்கும்

2.சைக்கிளில் குரங்கு பெடல் ஓட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்

3.தாவணி அணிந்த பெண்களை சைட் அடித்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்

4. தெருவில் பம்பாய் மிட்டாய் வாங்கி அதை கையில வாட்ச் மாதிரி கட்டிக்கிட்டு,கன்னத்தில கொஞ்சம் ஒட்டிவிட்ட மிட்டாய சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்

5. அம்புலிமாமாவும், ராணி காமிக்சும், பாலமித்ராவும் படிச்ச கடைசித் தலைமுறைனும் சொல்லிக்கலாம்.

6. டிவி சரியா வரவில்லை என்று ஆண்டனாவை திருப்பிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்

7.ரோட்டில சைக்கிள் டயர் ஓட்டின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்

8. டெண்ட் கொட்டாய்ல படம் பார்த்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்

9. நலம், நலம் அறிய ஆவல் என கடிதம் எழுதிய கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்

10. வீடியோ கேசட்ல படம் பார்த்ததும்,ஆடியோ கேசட்ல பாட்டுக்கேட்ட கடைசி தலைமுறையினர் நம்மளாதான் இருக்கும்

11. அடுத்த வீட்டு ஜன்னல் வழியா டிவி பார்த்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்

12. ஆறு, குளம், குட்டின்னு தண்ணீர் பார்த்த,,குளித்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்

13. பொங்கல் வாழ்த்து தபால் கார்டு அனுப்பிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்

14. மரத்துல ஊஞ்சல் கட்டி விளையாடின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்

15. நண்பனிடம் பேனாவின் ஒரு துளி மையினை கடன் வாங்கி எழுதியது.காயத்துக்கு எருக்கஞ்செடி பால் விட்டு உடனே விளையாடப்போன, தாவணி போட்டவங்கள பார்த்தது,சீதா பழத்த தவிட்டுல போட்டு பழுக்கவச்சது  நம்மளாதான் இருக்கும்

16. நொண்டி, கபடி, கிட்டிப் புல், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி போன்ற பலவிதமான விளையாட்டுகளுக்கும் கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்

17. மாட்டு வண்டியில் பயணம் செஞ்ச., ஐஸ் வண்டி பின் ஒடிய....பைண்டிங் செஞ்ச புத்தகம் பார்த்த.,.சிறுவர் மலர்க்காக வெள்ளி கிழமை வரை காத்திருந்த,.,பாட்டீ தாத்தாவிடம் கதை கேட்ட,..கிணற்றில் தண்ணீர் பார்த்த,.,தட்டான் பொன்வண்டு பிடித்து.,தெருவில் விளையாடிய...கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்...

 

 

http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=79276&url=oldtamilculture.blogspot.com/2014/07/3.html

 

 

இணையத் தேடலில் ரசித்தது...

 

நீங்கள் இழந்தவைகளையும் இங்கே பட்டியலிடுங்கள்...

 

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றில்.... பலவற்றை, எனது பிள்ளைகள் அனுபவிக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது.

 

18. சனிக்கிழமை உடம்பு முழுக்க.... கொதிக்க வைத்த ஆனைக்கோட்டை நல்லெண்ணை பூசி,
அவித்த, சீயாக்காயை... அம்மியில் பக்குவமாக அரைத்து.... கண் எரிய, எரிய....

கிணத்தடியில் முழுகிய...  கடைசி தலைமுறை  நாமாகத் தான் இருக்கும்.

Edited by தமிழ் சிறி

போனவருடம் ஒருவருட அம்புலிமாமா அனுப்புவையுங்கள் என்று 30 அமெரிக்க டாலர் சாந்தா பணம் கட்டினேன் ராசவன்னியன்.
 
இரண்டே இரண்டு அம்புலிமாமா மட்டும் அனுப்பி விட்டு மீதிக்கு எனைக்கு அம்புலிமாமா காட்டிவிட்டார்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் சைக்கிள் ஓட்ட பழகும்போது பிரேக் பிடிக்க மறந்துவிட்டு மரத்தில் மோதில் நெஞ்சில் காயம்பட்டது..

 

தட்டான், முயல், கரட்டான்டி பிடிக்க காடுகளில் அலைந்தது..

 

கிராமத்திற்கு தினமும் ஒரே முறை வரும் அக்கால பேருந்து பின்னல் சக தோழகளுடன் அரை ட்ரவுசரை பிடித்துக்கொண்டு ஓடியது...

மர புல்லாக்குச்சி, கோலிக் குண்டு, குத்துப் பம்பர விளையாட்டு...

 

தெருவில் விளையாடிய சகதோழியின் சடையை பின்னல் விசுக்கென இழுத்துவிட்டு சந்து மறைவில் ஒளிந்துகொண்டு சிரித்தது...

பொட்டிக் கடைகளில் 5 பைசாவிற்கு 3 துண்டு சினிமா பிலிம்களை வாங்கி சேகரித்து, கூட்டாளிகளுக்கு சூரிய ஒளியில் படம் காட்ட பயாஸ்கோப் தயாரித்தது...

 

சிறுவயதில் ஊர்க்குளத்தில் நேரகாலம் தெரியாமல் கூட்டாளிகளுடன் நீச்சலடித்து கலக்கையில், கரையில் இருக்கும் எம் ஆடைகளை ஊர்பெருசுகள் ஒளித்துவைத்து எம்மை அழ வைத்தது..

 

விநாயகர் சதூர்த்தியன்று களிமண்ணில் சொந்தமாக குழைத்து செய்த பிள்ளையார் சிலையை அலங்கரித்து நண்பர்களுடன் வீடு வீடாக சென்று பாட்டுப் பாடி காசு வசூலித்து முடிவில் பிள்ளையாருக்கு பூஜை செய்து ஊர்க்குளத்தில் அமிழ்த்துவது...


ம்..எல்லாம் கிராமத்தின் அழியாத கோலங்களில் சில...

  • கருத்துக்கள உறவுகள்

உண்டியலில் சில்லறை சேர்த்து  உடைத்துக் கொட்டி எண்ணிய ,  வேலிக்கு மேலால்  பறக்கும் சேவலை திரத்திப் பிடித்த பரம்பரையும்  நாங்கள்தான்...! :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்
இவற்றில்.... பலவற்றை, எனது பிள்ளைகள் அனுபவிக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது.
 
19, வீட்டுக்கு தெரியாமல் கடலில் குளித்து பூவரசம் தடியால் வெறும் மேலில் அடிவாங்கியது தழும்புகளுடன் பாடசாலைக்கு சென்றது கடைசி தலைமுறை  நாமாகத் தான் இருக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வானோலியில் ஒலிமஞ்சரி, பூவும் பொட்டும் மங்கையர், நீங்கள் கேட்டவை, இசையும் கதையும், போன்றவை கேட்க வீட்டுக்கு வீடு வானொலிப்பெட்டிக்கு ஆவலுடன் காத்திருந்த கடைசி தலைமுறை  நாமாகத் தான் இருக்கும்

ஆசை ஆசையாக கடிதம் எழுதியதும், அதை பல காலம் பாதுகாப்பாகச் சேர்த்து வைத்திருந்ததும் நாமதான் சார்!

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி தலைமுறை...

 

எனது  காலத்தில் கடைசியாய்த்தொலைத்தது

 

20- மச்சாள்மார்களிடம் வழிந்தது

        எங்கு கண்டாலும் கிள்ளி நுள்ளி உச்சி  முகர்ந்து (வேறு மாதிரி  எழுதினால் வெட்டு விழும் :icon_mrgreen: )....

 

அந்த சந்தோசம் இப்பொழுது இல்லை

ஏற்கிறார்களில்லை

மச்சாள் என்று நாங்கள் பகிடி செய்தால்

சகோதரி  என்கிறார்கள் :(

 

இனிமையான இளமை பதிவு ஆனால் பல விடயங்கள் எமக்கு பொருந்தவில்லை .

 

தமிழ்நாட்டு மக்களின்  விகற்பம் இல்லாத தன்மை எம்மவரிடம் இல்லை ராஜவன்னியன் .

வாழ்க்கையை அனுபவிக்க மறுத்த ஒரு இனம் குறிப்பாக யாழ்பாணத்து தமிழ் இனம் .இலக்கியம், சினிமா, வானொலி ,விளையாட்டு எங்கும் எதிலும் கட்டுப்பாடு . 

 

புத்தகம் வாசித்தது இங்கு எத்தனை பேர்கள் என்று கேட்டு பாருங்கள் .ஜெயகாந்தனையும் சுஜாதாவையும் ஜெயராஜையும் மணியன் செல்வனையும் சுரதாவையும் கவிக்கோவையும் பலருக்கு தெரியாது .

 

கே எஸ் ராஜாவையும் அப்துல் ஹமீத்தையும் தமிழ் நாட்டு மக்கள் ரசித்த அளவிற்கு நாங்கள் இல்லை . 

 

யாழ்பாணத்தில் தாவணி ? ஏதும் கோயில் திருவிழா அதுவும் மிக சிலர் .

 

உங்கள் பதிவில் பல இல்லாவிட்டாலும் எமக்கான வித்தியாசமான பல  இளமை அனுபங்கள் எமக்கும் இருக்கு .

பின்னர் எழுதுகின்றேன் . 


ஒரு உதாரணத்திற்கு "திருஸ்யம்" படம் எப்படி என்று கேளுங்கள் .

எம்மில் பலருக்கு அது என்னவென்றே தெரியாது ஆனால் அது தெரியாமல் தமிழ் நாட்டில் எவரும் இருக்கமாட்டார்கள் என்று நம்புகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

feather.jpg

 

புத்தகத்திற்குள்..... மயிலிறகை வைத்து,
அது, குட்டி போடுதா என்று.... மெல்லமாக  நடு இரவில் எழும்பி, 

திறந்து பார்த்த, கடைசி தலை முறை நாமாகத்தான் இருக்கும். :D

 

டிஸ்கி: அதற்காகத் தன்னும்.... இவன், புத்தகத்தை  திறந்து பார்த்தானே.... என்று சந்தோசப் படுங்க, ராசா. :lol:

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

35mm_Fuji_Superia_200_1.jpg

இதில் படம் எடுத்து முடிக்கும்வரை காத்திருந்து, பிரதி எடுத்தபின் பார்த்து மகிழ்ந்தும்.. ஏமாந்ததும் நமது தலைமுறைதான்.. :huh:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கேற்றில் ஏறி நின்று கொண்டு அதை ஒத்தக் காலால் திறந்து,மூடிவது:D:lol:

கொய்யா மரத்தில் அணில்,கிளி கடித்த பழங்களை சாப்பிட்டது

அதிகாலையில் எழும்பிப் போய் விளாம்பழம் மரத்தால் விழ,விழ பொறுக்கினது

வீட்டுக் கூரை மேல் ஏறி இருந்து கொண்டு கள்ள தம் அடிச்சது:lol:

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

5e33.jpg

மாட்டு வண்டிலில் சவாரி செய்த கடைசி தலைமுறை நாங்களாகத்தான் இருக்கும்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

கேற்றில் ஏறி நின்று கொண்டு அதை ஒத்தக் காலால் திறந்து,மூடிவது :D:lol:

கொய்யா மரத்தில் அணில்,கிளி கடித்த பழங்களை சாப்பிட்டது

அதிகாலையில் எழும்பிப் போய் விளாம்பழம் மரத்தால் விழ,விழ பொறுக்கினது

வீட்டுக் கூரை மேல் ஏறி இருந்து கொண்டு கள்ள தம் அடிச்சது :lol:

 

ரதியை.... பார்க்க. பொம்பிளை ரவுடி போல் உள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

கேற்றில் ஏறி நின்று கொண்டு அதை ஒத்தக் காலால் திறந்து,மூடிவது :D:lol:

கொய்யா மரத்தில் அணில்,கிளி கடித்த பழங்களை சாப்பிட்டது

அதிகாலையில் எழும்பிப் போய் விளாம்பழம் மரத்தால் விழ,விழ பொறுக்கினது

வீட்டுக் கூரை மேல் ஏறி இருந்து கொண்டு கள்ள தம் அடிச்சது :lol:

 

 

இவற்றை  தற்பொழுதும் செய்யமுடியும் ரதி......

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இருக்கும் மூத்தவர்கள் தங்கள் அரும்பெரும் சொத்தை காக்கக் கட்டிய சஸ்பென்ரரை மறந்துவிட்டார்கள் போலிருக்கே! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இருக்கும் மூத்தவர்கள் தங்கள் அரும்பெரும் சொத்தை காக்கக் கட்டிய சஸ்பென்ரரை மறந்துவிட்டார்கள் போலிருக்கே! :icon_mrgreen:

 

இதை  நானும் எழுத நினைத்தேன்

முன்பெல்லாம் வீட்டில் தைத்து தருவார்கள்.

நான் வெட்கத்தில்

பக்கத்து வீட்டு அக்காவிடம் சொல்லி  தைத்துக்கொண்டேன்

(ஒழுங்கா நிற்குதில்லை என்று :icon_mrgreen: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிளகாய் கன்று,புகையிலை கன்றுகளுக்கு பட்டையால் தண்ணீர் ஊற்றி வளர்த்த  கடைசி சந்ததி நாமாகத்தானிருக்கும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வயது போன முதியவர்களுக்கு, தாய்மார்களுக்கு, இயலாதவர்களுக்குப் பஸ்ஸில் எழும்பி இடம் விட்ட, கடைசித் தலைமுறையும் நமதாகத் தான் இருக்கும்! :D

 

பொலிஸ் காரன் காத்தைத் திறந்து விடப் 'புறுபுறுத்த படி' வீடு வரை சைக்கிளை உருட்டிய தலைமுறையும் எம்முடையதாகத் தான் இருக்கும்! :o

 

ஒ லெவல் 'பாஸ்' பண்ணின பிறகு தான்... 'ரவுசர்' போட்ட கடைசித் தலைமுறையும் எம்முடையதே! :icon_mrgreen:

 

கஞ்சி போட்டுத் தோய்த்து... நீலத்தில் ஊற விட்டு..., 'சிரட்டைக்கரி' நிரப்பிய 'அயன் பொக்சால் 'அயன்' பண்ணின கடைசித் தலைமுறையும் நமதே!

 

நீராவிப் புகையிரதத்தில் பயணித்த கடைசித் தலைமுறையும் நமதே! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிமையான இளமை பதிவு ஆனால் பல விடயங்கள் எமக்கு பொருந்தவில்லை .

 

தமிழ்நாட்டு மக்களின்  விகற்பம் இல்லாத தன்மை எம்மவரிடம் இல்லை ராஜவன்னியன் .

வாழ்க்கையை அனுபவிக்க மறுத்த ஒரு இனம் குறிப்பாக யாழ்பாணத்து தமிழ் இனம் .இலக்கியம், சினிமா, வானொலி ,விளையாட்டு எங்கும் எதிலும் கட்டுப்பாடு . 

 

புத்தகம் வாசித்தது இங்கு எத்தனை பேர்கள் என்று கேட்டு பாருங்கள் .ஜெயகாந்தனையும் சுஜாதாவையும் ஜெயராஜையும் மணியன் செல்வனையும் சுரதாவையும் கவிக்கோவையும் பலருக்கு தெரியாது .

 

கே. எஸ். ராஜாவையும், அப்துல் ஹமீத்தையும் தமிழ் நாட்டு மக்கள் ரசித்த அளவிற்கு நாங்கள் இல்லை . 

 

யாழ்பாணத்தில் தாவணி ? ஏதும் கோயில் திருவிழா அதுவும் மிக சிலர் .

 

உங்கள் பதிவில் பல இல்லாவிட்டாலும் எமக்கான வித்தியாசமான பல  இளமை அனுபங்கள் எமக்கும் இருக்கு .

பின்னர் எழுதுகின்றேன் .

 

புரிதலுக்கு நன்றி, அர்ஜூன்.. :)

 

அக்கால இலங்கை வானொலியே எம்மை தினமும் இணைக்கும் உணர்வுப் பாலமாக இருந்தது.. அவற்றின் மூலமே ஈழத்தின் செய்திகள் எம்மை வந்தடைந்தன.

நீங்கள் தாய் தமிழகத்தை தெரிந்தளவிற்கு ஈழத்தின் வரலாறு எமக்கு சரியாக தெரியாது. இருபுறமுமுள்ள மக்களிடம், சம அளவில் செய்திப் பரிமாற்றமோ, கலாச்சார பரிவர்த்தனையோ இல்லையென்பது கண்கூடு.

 

ஆனால் ஈழத்தின் மற்ற பகுதிகளைவிட யாழ்ப்பாண மக்கள், சிறிது கர்வம் பிடித்தவர்கள் என்ற பரவலான அபிப்ராயம் இங்கே உண்டு. இது தவறாகக் கூட இருக்கலாம். :lol:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஈழத்தின் மற்ற பகுதிகளைவிட யாழ்ப்பாண மக்கள், சிறிது கர்வம் பிடித்தவர்கள் என்ற பரவலான அபிப்ராயம் இங்கே உண்டு. இது தவறாகக் கூட இருக்கலாம். :lol:

 

முற்றிலும் உண்மை ராசவன்னியன்... :)

கோவில் திருவிழாவில் டிறக்டர் பெட்டியை மேடையாக்கி வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை ரசித்த கடைசித் தலமுறை நாம தான்.
 
லவுட் ஸ்பீக்கர் பார்த்த கடசித் தலமுறையும் நாம தான்.
 
கலியாண வீட்டுக்கு "வெள்ளை" கட்டுறத பார்த்த கடைசித் தலமுறையும் நாம தான்.
 
"ஆசுசம்" என்ற உறவுமுறைய கேள்விப்படும் கடைசித் தலமுறையும் நாம் தான்.
 
மொறிஸ் ஒக்ஸ்போர்ட், ஒஸ்டின் கேம்பிறிட்ஜ் காரின் "டிக்கியை" திறந்து அதில இருந்து வாற பெற்றோல் வாசனையை ரசிச்ச கடைசித் தலமுறை..
 
 
வாட்டர் பம்முக்கு காபரேட்டரின் அடியில் ஒரு மூடியில் பெற்றோல் வாசம் காட்டி ஸ்டார்ட் அடிச்ச கடைத் தலமுறை
 
நாம்பன் இழுக்கும் செக்கைப் பார்த்த கடசித் தலமுறை.
 
பெற்றோல்மக்ஸ் வெளிச்சத்தில் இரவைக் கழித்த‌ கடசித் தலமுறை..

இனிமையான இளமை பதிவு ஆனால் பல விடயங்கள் எமக்கு பொருந்தவில்லை .

 

தமிழ்நாட்டு மக்களின்  விகற்பம் இல்லாத தன்மை எம்மவரிடம் இல்லை ராஜவன்னியன் .

 

எதை விகற்பம் என்று கூறுகிறீர்கள்.. யாழுக்கு வந்து ஒரு முத்தமிழ் விழாவில் பங்குபற்றிய 'கலைமகள்' கிவாஜ யாழ்ப்பாண தமிழுக்கு பிரத்தியேகமாக ஒரு தமிழ் அகராதி வேண்டும் என்று கூறியதைவிடவா விகற்பத்தைக் கண்டுவிட்டீர்கள். ஈழத் தமிழனுக்கு தெரிந்த அளவுடன் ஒப்பிடும்போது.. தமிழ்நாட்டு தமிழனுக்கு எவ்வளவு ஈழத் தமிழ் எழுத்தாளர்களையோ அல்லது கலைஞர்களையோ தெரிந்திருக்கிறது?!

 

வாழ்க்கையை அனுபவிக்க மறுத்த ஒரு இனம் குறிப்பாக யாழ்பாணத்து தமிழ் இனம் .இலக்கியம், சினிமா, வானொலி ,விளையாட்டு எங்கும் எதிலும் கட்டுப்பாடு . 

 

ஒரு நாட்டில் சட்டங்களின் வேலை என்ன... வாழ்க்கைக்கான அனுபவித்தலின் மறுப்பா.. தமிழகசினிமாவிலும் ஊடகங்களிலும் ஈழத்தமிழனை முன்னிறுத்தி எவ்வளவு சட்டங்கள் எழுதப்படாதனவாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியாதா?!

 

புத்தகம் வாசித்தது இங்கு எத்தனை பேர்கள் என்று கேட்டு பாருங்கள் .ஜெயகாந்தனையும் சுஜாதாவையும் ஜெயராஜையும் மணியன் செல்வனையும் சுரதாவையும் கவிக்கோவையும் பலருக்கு தெரியாது .

 

யாழ்ப்பாணத்தில் அன்று எத்தனை புத்தகசாலைகள் இருந்தன.. அவற்றில் எவ்வளவு வீதமானவை தமிழக தமிழ்ப் படைப்புகளாக இருந்தன.. நான் எஸெஸ்சி படிக்கும்போதே... கண்டேகரும், மு.வரதராசனாரும், அகிலனும், கல்கியும், சுஜாதாவும், பாலகுமாரனும், ஜெயகாந்தனும், இதயம் பேசுகிறது மணியனும்... அதற்கு முதல் அம்புலி மாமா.. மாயாவி கதைகள்... கல்கி, குமுதம், விகடன், கல்கண்டு, இதயம் என்று... இதற்கிடையே நம்மூர் மல்லிகை, சிரித்திரன், கலகலப்பு, மாணிக்கம், கதம்பம் மற்றும் வீரகேசரி பிரசுரங்கள் என்று என்னைப்போல எத்தனையோ வாசகர்கள் இருந்தார்கள். நீங்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு  தப்பான அபிப்பிராயங்களை கொட்டாதீர்கள்!

 

கே எஸ் ராஜாவையும் அப்துல் ஹமீத்தையும் தமிழ் நாட்டு மக்கள் ரசித்த அளவிற்கு நாங்கள் இல்லை . 

 

நல்லதொரு நகைச்சுவை! நான் எனது பள்ளி பருவத்தில் ஊரில் நிற்கும்போது, திருச்சி  வானொலியில் ஞாயிறுகளில் பிற்பகல் ஒலிபரப்பும் ஒரு மணித்தியால நாடகங்களை விரும்பிக் கேட்பதுண்டு.

 

யாழ்பாணத்தில் தாவணி ? ஏதும் கோயில் திருவிழா அதுவும் மிக சிலர் .

 

உங்கள் பதிவில் பல இல்லாவிட்டாலும் எமக்கான வித்தியாசமான பல  இளமை அனுபங்கள் எமக்கும் இருக்கு .

பின்னர் எழுதுகின்றேன் . 

ஒரு உதாரணத்திற்கு "திருஸ்யம்" படம் எப்படி என்று கேளுங்கள் .

எம்மில் பலருக்கு அது என்னவென்றே தெரியாது ஆனால் அது தெரியாமல் தமிழ் நாட்டில் எவரும் இருக்கமாட்டார்கள் என்று நம்புகின்றேன் .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ சோழி,

இருபுறமும் சம அளவில் பரிமாற்றமே இல்லையென எனது பதிவில் கூறியுள்ளேனே, இதற்கு ஏன் அவரை சடைக்கிறீர்கள்? :lol::):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.