Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.ராஜா திரையரங்கில், 'மாறுதடம்' திரைப்படத்தை இடைநடுவில் நிறுத்திய பொலிஸார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளர் காடையர்களுடன் இருந்தவர்களுக்கு அதே குணமும் புத்தியும் இருப்பதில் வியப்பில்லை. இவர்களிடம் தமிழர்கள் ஆப்பிடாதது தமிழர்கள் செய்த புண்ணியம். ஒட்டுக்குழு என பெயர் வைத்தது 100% பொருத்தமானது.

  • Replies 73
  • Views 3.6k
  • Created
  • Last Reply

படத்தில் அவர்களுக்கு பிடிக்காத காட்சிகள் இருந்தால் விடமாட்டார்கள் தானே என்று சிறிலங்கா அரசிற்கு வக்காலத்து வாங்கியவர்கள் ஐனநாயகம்பற்றி பாடம் எடுக்கிறார்கள். இவ்வுலகில் எந்த அக்கிரமத்தையும் எதிர்க்க மாட்டேன் அதில் புலிகள் சம்பந்த்தபடாதவரை என்ற கொள்கையை தலையாக கொண்டவர் கள் இங்கு கருத்து என்ற பெயரில் தமது காழ்புணர்வு வக்கிரங்ளை கொட்ட யாழ் களம் என்ன இவர்களது குப்பை கூடையா? யாழில் அதிக திட்டும் கருத்துக்களை எழுதி யாழ்களத்தின் தரத்தை குறைப்பவர்கள் தம்மைத்தானே அறிவளிகள் என்று வேறு பீற்றிக கொள்கிறார்கள். இப்படியான அறிவிலிகளின் கருத்துக்களை புறக்கணித்து யாழ்களத்தின் சிறந்த தரமான ஆக்கபூர்வமான திசையில் பயணிக்க கள உறுப்பினர்களை பணிவன்புடன் வேண்டுகிறேன்.

அரசியல் வேறுபாடுகளை மறந்து எதிர்கால எமது மக்களின் சுதந்திரமான நல்வாழ்வு தொடர்பான சினேகிதபூர்வமான உரையாடல்களை வளர்த்து கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

...அரசியல் வேறுபாடுகளை மறந்து எதிர்கால எமது மக்களின் சுதந்திரமான நல்வாழ்வு தொடர்பான சினேகிதபூர்வமான உரையாடல்களை வளர்த்து கொள்வோம்.

 

வரவேற்க வேண்டிய கருத்து...

 

இனியும் காழ்ப்புணர்ச்சி வைத்துக்கொண்டிருந்தால், தம்மைத் தாமே இனத்தை அழிக்கும் நிலைதான் ஏற்படும்.. மற்றவர்கள் தேவை இல்லை!

 

வரவேற்க வேண்டிய கருத்து...

இனியும் காழ்ப்புணர்ச்சி வைத்துக்கொண்டிருந்தால், தம்மைத் தாமே இனத்தை அழிக்கும் நிலைதான் ஏற்படும்.. மற்றவர்கள் தேவை இல்லை!

நிச்சயமாக. இதைத்தான் நான் கூறினேன். பழைய பல்வேறு இயக்க பிரச்சனைகள் முடிந்து விட்டன. அந்த பழைய கால இயக்க வேற்றுமைகளோடு சம்பந்தப் பட்ட எந்த இயக்க தலைவரும் தற்போது இல்லா நிலையில் ,

அவற்றை இங்கு கொட்டி புதிய பிரச்சனைகளை உருவாக்க வேண்டிய அவசியம் தான் என்ன?

பழைய நல்ல விடயங்கள் பல இருக்க காழ்புணர்வுகளை மட்டும் கொண்டுவந்தால் யாருக்கு என்ன பிரயோசனம்.

அனைத்து இயக்கங்களிலும் நல்லவர்களும் கெட் டவர்களும் இருந்தது உண்மை. போராளிகளால் எமது இனத்திற்காக உருவாக்கப்பட்ட நல்ல விடயங்கள் பல இருக்க விரும்பத்தகாதவற்றை மட்டும் தூக்கி பிடித்து காழ்புணர்வுகளை மட்டும் ஊக்குவிக்கும் ஒருசில அறிவிலிகளின் கருத்துக்களை பெரும்பாலான யாழ்கள உறுப்பினர்கள் புறக்கணித்து ,அதற்கு பதில் எழுதி நேரத்தை வீணாக்காமல் புதிய சிநேகிதபூர்வமான உரையாடல்கள் மூலம் பலத்தை உருவாக்கி எமது இனத்ததை அழிக்க நினைக்கும் எதிரிகளை மட்டும் எமது இலக்காக கொள்ள வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.

Edited by tulpen

துல்பேன் சொல்லுவது மாதிரி முதலே இருந்திருக்கலாம்...இப்போதாவது ஏன் காழ்ப்புணர்ச்சி இன்னும் வலுக்கிறது என்றாவது யாராவது யோசிக்கலாம்....காழ்புணர்வு மறையவேண்டும் என்றால் இரு தரப்பும் பரஸ்பரம் மற்றவரை மன்னித்து ஏற்றுகொள்ளவேண்டும்....ஆனால் அது இங்கு ஒரு தரப்பிலும் இல்லை..ஒவ்வொரு தரப்பும் மற்ற தரப்பை கீழே விழுத்தி தங்களை நிலை நாட்டுவதிலே இருந்தால் எப்படி நட்புறவு வளரும்? இறுதிவரை போராடவேண்டும் :)

துல்பானின் கருத்து செமகொமடி ஏனெனில் தங்களுக்கு பிடிக்காதவர்களை போட்டு தாக்கும் போதும் சரி போட்டு தள்ளும் போதும் சரி இவர்கள் கண்களில் அது தெரிவதில்லை 

 

ஆனால் தமக்கு விருப்பமில்லாத அல்லது தான் சார்ந்தவர்களுக்கு எதிரார உண்மையை எழுதினால் கூட இவர்களுக்கு அது காழ்ப்பாகவும் வக்கிரமாகவும் தெரியுது .

 

ஆயிரம் உதாரணம் யாழில் நான் அதைக்கட்டத்தயார் அந்த பதிவுகள் வரும்போது துல்பான் எங்கிருந்தார் என்று அறிய ஆவல் . :(

துல்பன் எங்கிருந்தாலென்ன அதில் எவருக்கென்ன அக்கறை. இங்கு அதுவல்ல பிரச்சினை கடந்த கால கசப்பான இயக்க முரண்பாடுகளை வைத்து , அதில் சம்பந்தப் பட்ட எவருமே உயிருடன் இல்லாத சூழ்நிலையில், தற்போதும் காழ்புணர்வுகளை வளர்க்கப்போகிறோமா இல்லையா என்பதாகும். இல்லை என்பதுதான் எந்த படித்த பண்பான மனிதரதும் கருத்தாக இருக்கும். முன்பு அப்படி செய்தார்கள் ஆகவே நானும் அவர்களை திட்டி காழ்புணர்வை எமக்குள் வளரக்கப்போகிறேன் என்று கூறுவது சான்றோர் கருத்தாக அமையாது.

Edited by tulpen

யாழ் களத்தை நான் சீரியஸா எடுப்பதை நிறுத்தியதுக்கு இதுதான் காரணம். ஒரு காரணமும் இல்லாமல் சிங்கள பொலிசாரால் ஒரு தமிழ்படம் நிறுத்தப்பட்டிருக்கிறது.. ஆர்ப்பாட்டம் செய்யப்படவேண்டிய விடயம் இது...

இங்க என்னடாவெண்டா வழக்கம் போல ------- ------- பல்லாண்டுகளுக்கு முன்னர் முடிந்துபோய்விட்ட அரதபழசான கதையை எடுத்துவைத்து அரைச்ச மாவை அரை அரை எண்டு அரைத்து தங்கட தலையிலும் தப்பி வாரவன் போறவன் தலையிலும் தப்பி மகிழுதுகள்.. என்ன சொல்ல, சொல்லியும் வெளங்கவா போவுது.

Edited by நிழலி
தவிர்க்கப்பட வேண்டிய சொற்கள்

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! 

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வு 1--> ஒருவர் ஒரு செய்தியை இங்கு இணைக்கிறார். இதுதான் செய்தி .... யாழ்.ராஜா திரையரங்கில், 'மாறுதடம்' திரைப்படத்தை இடைநடுவில் நிறுத்திய பொலிஸார்!

 

நிகழ்வு 2--> கள உறவுகள் தங்கள் கருத்துக்களை எழுதுகிறார்கள்.
ஒரு கருத்தானது ஒரு சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்த "திரைப்படம் / திரையிடல் " சம்பந்தமான கருத்தை/ ஆதங்கத்தை பின்வருமாறு முன் வைக்கிறார் " சிங்களவர் எடுக்கும் இன விரோதப்  படங்களுக்கு மட்டும் முட்டிமோதி விமர்சனம் செய்யும்  எங்கள் விமர்சகர்கள் காதில் இந்தச் செய்தி இன்னும் எட்டவில்லை ... ஞாயமான ஆதங்கம் என நான் நினைக்கிறன். காரணம் இடப்பட்ட செய்தியோடு தொடர்புடையது இது போன்ற இன்னும் ஒரு நிகழ்வை மேல்கோள் காட்டி எழுதப்பட்டது.

 

நிகழ்வு 3--> தொடர்ந்தும் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன, அன்பு உறவு ஒருவர் பின்வரும் கருத்தை முன்வைக்கிறார்..."சங்குனி மங்குனி எல்லாம் போரட்டத்தை பற்றி கதைக்க லாயக்கில்லை" :)
குழம்பிப் போகிறேன் இங்கு சங்கினி, மங்கினி, கிங்கிணி, மற்றும் போராட்டம் எப்படி ஒன்றாய் பினையப்பட்டது புரியவில்லை. 'மாறுதடம்' திரை கருத்து உண்மையில் "தடம் மாறிப்" போனது.

 

நிகழ்வு 4--> கருத்துச்சமர் களத்ததுக்குள் வெடிக்க ... குத்திக் காட்டல்களும், சொரிந்த புண்ணை மீண்டும் மீண்டும் சொரியும் அற்ப சந்தோசங்களும் இனிதே நிறைவேறுகிறது!! (Grow Up people !!)

 

நிகழ்வு 5--> அன்பு உறவு ஒரு சந்தோசமான செய்தியை இங்கு இணைக்கிறார் "'மாறு தடம்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கும் சங்கடங்களுக்கும் பார்வையாளர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்த்துக் கொள்கிறோம். 'மாறு தடம்' திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
.... "ஆதலினால் இனி இந்த திரியில் எழுதுவதில் அர்த்தம் இல்லை . ."

சரியான கருத்து காலம் கடந்து வருகின்றது ஆனாலும் பரவாயில்லை என்ன வீண் விவாதங்கள், மன அழுத்தங்கள், காறிதுப்பல்கள் எல்லாம் பழகிப்போன நாம்... தமிழர்.

 

நிகழ்வு 6--> மீண்டும் ஒரு கருத்து விஷமா ? இல்லை விசமமா ? அவர்களுக்கே வெளிச்சம்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

 

என் பார்வையில்:
பாதகஞ் செய்பவரைக் கண்டால் (இனத்துவேசிகள், அரசியல் கபடதாரிகள்)   - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா! (தமிழர்)
மோதி மிதித்துவிடு பாப்பா!  (விடுதலை போராளிகள் அதை திறமையாக செய்தார்கள்) - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! ( யார் என்பதை முதல் வரியில் சொல்லி ஆயிற்று)

 

விஷம் ஆயின் ... அவதானம் தேவை (நமக்கு)
விசமம் ஆயின் உதவி தேவை... (அவர்களுக்கு)

 

 

Edited by Sasi_varnam

கடைசியில் உதைபட்டு போனது யாரென்றுனர்ந்து திருந்திவிடு பாப்பா..முட்டாள் தனமாக வீம்பு பிடிக்காதே பாப்பா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா!

மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! 

 

45வதிலை இந்தா போறன் எண்டமாதிரி இருக்கு....ஆனால் 59வதை எங்கையிருந்தோ கொண்டுவந்து ஒட்டியிருக்கிறியள்....அது சரி சங்கீதம் பாடினவன்ரை வாயும் சொறிசிரங்கு சொறிஞ்சவன்ரை கையும் சும்மா இருக்காதாம்.... :icon_mrgreen:

மிக மிக பதிவு சசி .மிகவும் தெளிவாக அழகாக வேறு எழுதி இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் .

 

இப்படியான ஆரோக்கியமற்ற விவாதங்கள் யாழில் மட்டும் அல்ல முகபுத்தகத்திலும்  ஆயிரத்தி எட்டு  வெவ்வேறு தலைப்புகளில் பின்னோட்டம் பின்னோட்டமாக முக்கிய அரசியல் இலக்கிய சினிமா ஆர்வலர்களுக்கு கிடையே நடந்து கொண்டே இருக்கு .

பல பிரபலங்கள் கூட தெரு சண்டியர்கள் போல நடந்துகொள்கின்றார்கள் (பெயர்கள் எழுத விரும்பவில்லை). 

 

ஒரு தலைப்பில் ஒன்றாக நின்று அடிபடுபடுபவர்கள் வேறு தலைப்புகளில் மாறி நின்றும் அடிபடுவார்கள் .சிலவேளைகளில் எல்லை மீறி மிக கீழ்த்தர நிலைக்கும் செல்வதுண்டு .அனேகம் பலர்   தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று நிற்பார்கள் ,அது அனைவரும் தெரிந்த விடயம் தானே .

 

பல வானொலி கலந்துரையாடல்ககளுக்கும் இதே நிலைதான் .( விஜெய் டி வி யில் நீயா ? நானா? பார்த்து பலர் மனம்  திருந்தினார்கள் என்றால் அது பச்சை பொய் )

 

இவை எல்லாமே ஒரு பொழுது போக்காகவே பலர் கருதுகின்றார்கள் . இதில் அனேக விடயங்கள்   எல்லாம் காற்றோடு கலந்துவிடும் .அதற்கிடையில் அடுத்த சூடான தலைப்பு வந்துவிடும் .

புதிதாக இணைபவர்களுக்கு என்னடா இது என்று இருக்கும் பின்னர் கால போக்கில் பழகிவிடும் .

 

 

சசி இந்த தலைப்பிற்கு எனது பின்னோட்டதிற்கான பதில் ,

 

ராஜா சினிமாவில் "மாறுதடம்" சினிமாவை திரையிடாமல் தடுத்தது இலங்கை அரசு .

1--தங்களுக்கு பாதகமான விடயங்கள் அந்த திரைப்படத்தில் இருந்தால் அதை திரையிட எந்த அரசும் அனுமதிக்க போவதில்லை . 

அதன் கருத்து இலங்கை அரசு நேர்மையான அரசு என்பதல்ல அர்த்தம் .

 

2.--அங்கு நடந்தது என்னவென்று தெரியாமலே அவனன் தனக்கு தெரிந்ததை எழுதிகொட்ட தொடங்கிவிட்டான் ,எள்ளு என்றால் எண்ணெய் ஆக்க இதற்கென்றே பல ஊடகங்களும் ஊடகவியலார்களும் இருக்கின்றார்கள் .ஊதி பெருப்பிப்பதுதான் அவர்கள் தொழில் .பல சம்பவங்கள் எழுதலாம் ராதிகாவின் இலங்கை விஜயம் போன்றவை .இவர்களில் அனேகமானவர்கள் முன்னாள் புலிகள் ஆதரவாளர்கள் நாட்டில் சமாதானம் வந்துவிடகூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் .

 

3-- இவர்கள் பார்வையில் இலங்கைக்கு யார் சென்றாலும் துரோகிகள் .

அது இலக்கிய கூட்டம் வைப்பார்கள் ,சினிமா படம் எடுப்பவர்கள் ,தொழில் செய்ய போனவர்கள் ,வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள் ,கலை நிகழ்ச்சி செய்பவர்கள், முள்ளிவாய்காலின் பின்னர் நாட்டிற்கு திரும்பி போய் போரால் பாதிக்க பட்டமுன்னாள்  போராளிகள் விதவைகள் ,குழந்தைகளுக்கு உதவுபவர்கள் ,  நாடு சற்று சுமுக நிலைக்கு திரும்புது என்பதை உலகிற்கு காட்ட கூடாது பின்னர் போர் குற்றங்களில் இருந்து தப்பி விடுவார்கள் என்பது அவர்கள் நிலைப்பாடு .

 

4-அதற்காக முன்னின்று துள்ளி குதிப்பவர்கள் யாரென்றால் நாட்டில் போராட்டம் என்றவுடன் ஓடிவந்து புலி போர்வை போர்வைக்குள் ஒளித்தவர்கள் தான் அதிகம் .புலிகள் செய்த பிழைகளை கூட நியாய படுத்தி தமது வயிறு வளர்த்தவர்கள் .சர்வதேசம் புலிகள் மேல் குற்றங்களை பட்டியலுக்கு மேல் பட்டியல் போட்டுக்கொண்டு வந்தார்கள் அந்த நேரம் இவர்கள் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை இன்று இலங்கை அரசு அதை செய்யும் போது குய்யோ முறையோ என்கின்றார்கள் .

 

இலங்கை அரசு அநியாயங்களை  வெளி  உலகிற்கு கொண்டுவரவேண்டியது எங்கள் அனைவரினதும் கடமை ஆனால் அதை விட அநியாயங்களுக்கு துணை போனவர்கள் வந்து பொய்வேசம் போடும் போது அதை கிழிக்க வேண்டிய தேவையும் எழுகின்றது .

அவர்களைத்தான் சங்குனி மங்குனிகள் என்று எழுதினேன் .

அனேக நான் சந்திக்கும் முன்னாள் போராளிகள் தாங்கள் விட்ட சரி பிழைகளை மனம் திறந்து கதைகின்றார்கள் ஆனால் வேஷம் போடும் இவர்கள் மாறவே மாட்டார்கள் .இவர்களில் யாரவது சகோதர யுத்தம் பிழை ,முஸ்லிம்களை துரத்தியது பிழை அமிர் ,நீலன் ,கேதிஸ் ,ராஜினி ,செல்வி கொலைகள் பிழை ,சிறுவர்களை பலாத்காரமாக பிடித்தது பிழை என்று எழுதட்டும் பார்ப்பம் .ஊகும் .

 

இந்த திரியில் கூட துல்பனும் சசியும் வந்து நான் சற்று காரமாக எழுதியதும் பழையவற்றை கிண்டி ருசி பார்ப்பதில் என்ன சுகம் என்று கேட்கின்றார்கள் ஆனால் எத்தனையோ திரிகளில் மாற்று இயக்கத்தவர்களை துரோகிகள் ,ஒட்டு குழு ,எலும்பு நக்கிகள் என்று எல்லாம் எழுதும் போது அவர்களை வந்து ஏன் இப்படி எழுதுகின்றீர்கள் என்று ஒரு கேள்வி கேட்கவில்லை .ஏனெனில் நீங்கள் கூட அவற்றை ரசித்திருக்கலாம் நான் புலிகளை பற்றி எழுதியதும் புட்டுக்கொண்டு வந்துவிட்டது .

 

முப்பது வருட தமிழர் போராட்டம்  விட்டு போனது இதுதான் உறவுகளே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சசி இந்த தலைப்பிற்கு எனது பின்னோட்டதிற்கான பதில் ,

 

ராஜா சினிமாவில் "மாறுதடம்" சினிமாவை திரையிடாமல் தடுத்தது இலங்கை அரசு .

1--தங்களுக்கு பாதகமான விடயங்கள் அந்த திரைப்படத்தில் இருந்தால் அதை திரையிட எந்த அரசும் அனுமதிக்க போவதில்லை . 

அதன் கருத்து இலங்கை அரசு நேர்மையான அரசு என்பதல்ல அர்த்தம் .

 

2.--அங்கு நடந்தது என்னவென்று தெரியாமலே அவனன் தனக்கு தெரிந்ததை எழுதிகொட்ட தொடங்கிவிட்டான் ,எள்ளு என்றால் எண்ணெய் ஆக்க இதற்கென்றே பல ஊடகங்களும் ஊடகவியலார்களும் இருக்கின்றார்கள் .ஊதி பெருப்பிப்பதுதான் அவர்கள் தொழில் .பல சம்பவங்கள் எழுதலாம் ராதிகாவின் இலங்கை விஜயம் போன்றவை .இவர்களில் அனேகமானவர்கள் முன்னாள் புலிகள் ஆதரவாளர்கள் நாட்டில் சமாதானம் வந்துவிடகூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் .

 

3-- இவர்கள் பார்வையில் இலங்கைக்கு யார் சென்றாலும் துரோகிகள் .

அது இலக்கிய கூட்டம் வைப்பார்கள் ,சினிமா படம் எடுப்பவர்கள் ,தொழில் செய்ய போனவர்கள் ,வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள் ,கலை நிகழ்ச்சி செய்பவர்கள், முள்ளிவாய்காலின் பின்னர் நாட்டிற்கு திரும்பி போய் போரால் பாதிக்க பட்டமுன்னாள்  போராளிகள் விதவைகள் ,குழந்தைகளுக்கு உதவுபவர்கள் ,  நாடு சற்று சுமுக நிலைக்கு திரும்புது என்பதை உலகிற்கு காட்ட கூடாது பின்னர் போர் குற்றங்களில் இருந்து தப்பி விடுவார்கள் என்பது அவர்கள் நிலைப்பாடு .

 

4-அதற்காக முன்னின்று துள்ளி குதிப்பவர்கள் யாரென்றால் நாட்டில் போராட்டம் என்றவுடன் ஓடிவந்து புலி போர்வை போர்வைக்குள் ஒளித்தவர்கள் தான் அதிகம் .புலிகள் செய்த பிழைகளை கூட நியாய படுத்தி தமது வயிறு வளர்த்தவர்கள் .சர்வதேசம் புலிகள் மேல் குற்றங்களை பட்டியலுக்கு மேல் பட்டியல் போட்டுக்கொண்டு வந்தார்கள் அந்த நேரம் இவர்கள் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை இன்று இலங்கை அரசு அதை செய்யும் போது குய்யோ முறையோ என்கின்றார்கள் .

 

இலங்கை அரசு அநியாயங்களை  வெளி  உலகிற்கு கொண்டுவரவேண்டியது எங்கள் அனைவரினதும் கடமை ஆனால் அதை விட அநியாயங்களுக்கு துணை போனவர்கள் வந்து பொய்வேசம் போடும் போது அதை கிழிக்க வேண்டிய தேவையும் எழுகின்றது .

அவர்களைத்தான் சங்குனி மங்குனிகள் என்று எழுதினேன் .

அனேக நான் சந்திக்கும் முன்னாள் போராளிகள் தாங்கள் விட்ட சரி பிழைகளை மனம் திறந்து கதைகின்றார்கள் ஆனால் வேஷம் போடும் இவர்கள் மாறவே மாட்டார்கள் .இவர்களில் யாரவது சகோதர யுத்தம் பிழை ,முஸ்லிம்களை துரத்தியது பிழை அமிர் ,நீலன் ,கேதிஸ் ,ராஜினி ,செல்வி கொலைகள் பிழை ,சிறுவர்களை பலாத்காரமாக பிடித்தது பிழை என்று எழுதட்டும் பார்ப்பம் .ஊகும் .

 

இந்த திரியில் கூட துல்பனும் சசியும் வந்து நான் சற்று காரமாக எழுதியதும் பழையவற்றை கிண்டி ருசி பார்ப்பதில் என்ன சுகம் என்று கேட்கின்றார்கள் ஆனால் எத்தனையோ திரிகளில் மாற்று இயக்கத்தவர்களை துரோகிகள் ,ஒட்டு குழு ,எலும்பு நக்கிகள் என்று எல்லாம் எழுதும் போது அவர்களை வந்து ஏன் இப்படி எழுதுகின்றீர்கள் என்று ஒரு கேள்வி கேட்கவில்லை .ஏனெனில் நீங்கள் கூட அவற்றை ரசித்திருக்கலாம் நான் புலிகளை பற்றி எழுதியதும் புட்டுக்கொண்டு வந்துவிட்டது .

 

முப்பது வருட தமிழர் போராட்டம்  விட்டு போனது இதுதான் உறவுகளே .

 

இதை வாசிக்கும் எல்லோரும் திருந்தி விடுவார்கள் அண்ணே!!!!
 
நீங்கள் தமிழினத்திற்கு கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம் அண்ணே!!

*


 

இதை வாசிக்கும் எல்லோரும் திருந்தி விடுவார்கள் அண்ணே!!!!
 
நீங்கள் தமிழினத்திற்கு கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம் அண்ணே!!

 

 

நாங்கள் காசு வந்தாலும் கத்துவோம் (ஒட்டுக்குழுக்களுக்கு இலங்கை அரசிடம் இருந்து..)....காசு நின்றாலும் (வெளிநாட்டு கலெக்சன்  :wub:  ) கத்துவோம்.....தெமிழேண்டா... :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்னர் மோகன் அண்ணா எழுதியது...

எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன் ...

 

 எவ்வளவு தூரம் உண்மை :(

 

 

சில வருடங்களுக்கு முன்னர் மோகன் அண்ணா எழுதியது...

எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன் ...

 

 எவ்வளவு தூரம் உண்மை :(

 

இதைப் போன்ற ஒரு மனநிலையில் தான் கடந்த சில நாட்களாக நானும் இருக்கின்றேன். இலக்குகள் எதுவும் எட்டப்படாமல், அப்படி எட்டப்படுவதற்கு குறுக்காக எம் கூட்டு மனநிலையே காரணமாக இருக்கும் போது, வெறுமனே யாழில் நேரத்தினையும் வளத்தினையும் செலவழிப்பது சரியான விடயமா எனக் கேள்விகள் அடிக்கடி எழும்புகின்றன. இக் கேள்விகள் சலிப்பையும், வெறுமையையும் தான் தந்து கழிகின்றன.

 

விரைவில் ஏதாவது முடிவு எடுக்கப்படல் வேண்டும்.

விரைவில் ஏதாவது முடிவு எடுக்கப்படல் வேண்டும்.

இது ஆரம்பத்தில் இருந்து விடப்பட்ட பிழை. எது விபரீத கருத்து, எது சார்க்கஸ கருத்து, எது ஜோசிக்க வைக்கும் கருத்து என்னும் வித்தியாசம் இல்லாமல் கத்துகுட்டி மட்டுருத்தினர்கள் சகட்டு மேனிக்கு உறுப்பினர்கள் time செலவளித்து எழுதிய கருத்துக்களை வேட்டித்தள்ளிவிடுவது போன்ற செயற்பாடுகள், யாழ் வாசகர்களை வடிகட்டி, யாழ், தீவிர புலி ஆதரவாளர்களும் புலி எதிர்பாளர்களுக்குமான கருத்து களமாக திரிபு பெற்று விட்டது. இதனால்தான் அரைத்தமாவு அரைக்கும் நிகழ்வு, ஆரம்பிக்கப்படும் எல்லத்திரிகளிலும் நடக்கிறது . திரிகளின் போக்கை மாற்றுவதும் எதிர்த்தரப்பை கூப்பிட்டு அழைத்து அரைத்த மாவு அரைப்பதும்.... மொத்தத்தில் யாழ்களம் நாசமாய் போய்விட்டது. தொடர்ந்து நடத்துவதை விட மூடி விடுவது எம் தேசியத்துக்கு ஆதரவாய் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
maruthadam-200-news.jpg

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மாறுதடம், திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட போது, அதனை இலங்கை காவல்துறையினரும், இராணுவத்தினரும் தடுத்து நிறுத்தியிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை யாழ். ராஜா திரையரங்கில் இந்த சம்பவம் நடைபெற்றது. சுவிட்சர்லாந்திலும், இலங்கையிலும் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ரமணா என்ற சத்தியநாதன் ரமணதாஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

  

வீடியோ திரைப்படமான இந்த திரைப்படத்தைத் திரையரங்கு ஒன்றில் திரையிடுவதானால், அதற்கான முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அந்த அனுமதி பெறாமல் யாழ்ப்பாணத்தில் திரையரங்கு ஒன்றில் புரொஜக்டர் ஒன்றைப் பயன்படுத்தி திரையிட்டபோதே, காவல் துறையினரும், இராணுவத்தினரும் வந்து இந்த திரைப்படத்தைத் தடை செய்ததாக ரமணதாஸ் குறிப்பிட்டார். இரண்டரை மணி நேர இந்தப் படத்தை காவல்துறையின் சில பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முழுமையாகப் பார்த்து அதில் திருப்தியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயினும் திரைப்படக் கூட்டுத்தாபனம் வீடியோ படம் ஒன்றைத் திரையரங்கில் திரையிடுவது தொடர்பிலான நடைமுறைகள் குறித்தோ அல்லது அவ்வாறு திரையிடப்படக்கூடாது என்றோ தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் காவல் துறையினரே இந்தப் படத்தை திரையரங்கில் திரையிடக் கூடாது என்று தடை செய்ததாகவும் அவர் கூறினார்.

மாறுதடம் படம் திரையரங்கில் திரையிடப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் நடைமுறை பின்பற்றப்படாததே காரணம் என்றும், அந்தப் படத்தில் அரசுக்கு விரோதமான எந்த விடயமும் இருக்கவில்லை என்றும் பிபிசிக்கு இதுபற்றி கருத்து வெளியிட்ட காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண கூறினார்.

இலங்கையின் நடைமுறைக்குமைவாக சட்டத்திட்டங்களுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுத்து இந்த திரைப்படத்தைத் திரையிட முயற்சிக்கப் போவதாக மாறுதடம் படத்தின் தயாரிப்பாளர் சத்தியநாதன் ரமணதாஸ் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=113976&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

"அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.

நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கும் சங்கடங்களுக்கும் பார்வையாளர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்த்துக் கொள்கிறோம். திரைப்படத்தை பிரத்தியேகமாகப் பார்வையிட்ட காவல்துறையினர் திரைப்படத்தை வெளியிட எந்தவித தடையுமில்லை என்றும் அதேவேளை அனுமதியைப் பெறுவதற்கு தற்போது விடுமுறை தினமாக இருப்பதனால் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அனுமதியை பெற்று மீண்டும் அதே திரையரங்கங்களில் வெளியிடலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியை எமக்குத் தெரிவித்தனர். எனவே 'மாறு தடம்' திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

அத்தோடு எமக்கு சகலவழிகளிலும் தங்களின் பங்களிப்பைச் செய்த திரைத்துறை நண்பர்களுக்கும், நேற்று திரையரங்கத்திற்கு வருகைதந்து ஒத்துழைத்த அத்தனை உறவுகளுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்."

அன்புடன் ஓசைபிலிம்ஸ்

 

 

மேற்குறிப்பிட்ட பகுதியில் சில முக்கிய விடயங்கள் விடுபட்டுவிட்டன (அல்லது வேண்டுமென்றே மறைக்கப்பட்டுவிட்டது).  

 

இந்த படத்தின் இயக்குனர் வேறொரு இணையத்திற்கு கொடுத்த பேட்டியை அவரின் முகநூலில் ஏன் இணைக்கவில்லை என்பது அவரிற்கே தெரிந்த உண்மை.

 

 இயக்குநர் திரு.ரமணதாஸ் அவர்களின் முழுமையான பேட்டி:

 

“யாழ். ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது ‘மாறு தடம்’ திரைப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கும் சங்கடங்களுக்கும் முதலில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். படத்தில் எந்த ஒரு அரசியல் சார்ந்த கருத்துக்களோ, அரசியல் சார்பு நிகழ்வுகளோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் அங்கு வந்த பொலீசாருக்கு தெளிவுபடுத்திய போதிலும், படத்தை திரையிடுவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கவில்லையென பொலீசாரினால் காரணம் கூறப்பட்டு படம் இடைநிறுத்தப்பட்டது.

 

வீடியோ பிலிம்மிக்கு (வீடியோ படத்திற்கு) அனுமதி தேவையில்லை என்பதை நாம் அவர்களிடம் சுட்டிக் காட்டிய போது, வீடியோ பிலிம்மிற்கு அனுமதி தேவையில்லை தான். அதாவது தனிப்பட்ட இடங்கள் மற்றும் மண்டபத்திலோ அல்லது சனசமூக நிலையங்கள் போன்றவற்றிலோ அதனைத் திரையிடுவதில் எந்தவித பிரச்சினையுமில்லை. ஆனால் பதிவு செய்யப்பட்ட சினிமா அரங்கில் திரையிடும் போது அதற்கான அனுமதியை பெறப்பட்டிருக்க வேண்டும் என பொலீசார் தரப்பில் சுட்டிக காட்டப்பட்டது.

 

... அதற்கான அனுமதியை பெற்று மீண்டும் அதே திரையரங்கங்களில் வெளியிடலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியையும் எமக்குத் தெரிவித்தனர். எனவே ‘மாறு தடம்’ திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்பதனை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

 

 

 

இதில் தவறு எங்கே நடந்தது என்றால் அனுமதி பெறுவதில். அனுமதி தேவையில்லை என்று ஒழுங்கமைப்பாளர்களின் நினைப்பால் வந்ததே இத்தனை சங்கடங்களும். இது தெரிந்து நிகழ்ந்ததா இல்லையா என்பது இறுதிவரை தெரியாமலே இருக்கட்டும். 

 

ஆனால் வழக்கம் போல் எமது அகில உலக ஊடக வல்லுனர்கள் தங்களின் கைவரிசை காட்டியதால் இந்த விடயம் சிறிலங்கா புலனாய்வுதுறையின் துரோகச்செயல் ஆகிவிட்டது. 

 

அதனை அடிப்படையாக வைத்து இந்த திரியில் ரத்த ஆறும் ஓடியாகிவிட்டது. 

 

அனுமதி பெற்று மீண்டும் திரையிடுவோம் என்று அவர்களே சொல்லியாகிவிட்டது. கடையை சாத்திட்டு போய் வேலைய பாருங்கப்பா :wub:

 

விஸ்பரூபத்தில தொடங்கின விளம்பர யுக்தி தீயா வேலை செய்யுது.  :D

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது தான்  பார்த்தேன்

 

இதில் அர்யூன்  அண்ணா  மற்றும் சசி  எழதியுள்ளவை  பற்றி  வேறு ஒரு இடத்தில்  விவாதிக்கலாம்

 

இந்த திரைப்படம்

மற்றும் அதன் தடை  பற்றி இங்கு முதல் கேள்வியை  எழுப்பியவன் என்ற ரீதியில்

ஆதாரம் இல்லாது  பேசவில்லை

அங்கு நடந்த சம்பவம் இந்த திரி  திறக்கப்படமுன்பே  எனக்குத்தெரியும்

ஏனெனில்  இந்த திரைப்படத்தின் உரிமையாளர் ரமணன் அவர்கள் எனது ஊரைச்சேர்ந்தவர்

அந்தவகையில் சில  ஊரவருக்கு அழைப்புக்கொடுத்திருந்தார் 

அவர்களும் சென்று

ஏமாந்து

வாதாடி 

மனமுடைந்து திரும்பியிருந்தனர்

 

பிரச்சினை  வெளியில் வந்ததும் தற்பொழுது பல காரணங்களை  சடையலாம்

ஆனால் அங்கு முதன் முதலில் சொல்லப்பட்டது என்ன  என்று தெரியும்

 

அத்துடன் மிக  முக்கியமானது

இங்கு  சிலர் சிங்களவனை  சந்தேகம்  படக்கூட  மாட்டார்கள்

எல்லாம் இவர்கள் சொறிந்ததால் வந்திருக்கும் என்ற அதே புலி வாந்தி  தான் காரணம்

இதற்கு மேல் எழதி  நேரத்தை வீணாக்கவிரும்பவில்லை

நாய் வாலை  நிமிர்த்துவதற்கு எனக்கு நேரமில்லை....

Edited by விசுகு

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா!

மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! 

உந்த அறிவு புலிக்கு பயந்து இந்தியாவுக்கும் ,லண்டனுக்கும்  தப்பி ஓடும் போதும்  எல்லாம் இருக்க இல்லையோ அண்ணை....  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

நிண்டு திரும்பி அடிச்சு அனியாயத்திலை இருந்து மக்களை காக்காமல் என்ன காலம் போன காலத்திலை உளறுகிறீர்கள்... ??? 

 

உங்கட வீரத்தை கண்டு நான் வியக்கேன்... !!!! 

 

இதை வாசிக்கும் எல்லோரும் திருந்தி விடுவார்கள் அண்ணே!!!!
 
நீங்கள் தமிழினத்திற்கு கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம் அண்ணே!!

 

இவர் உண்மையில் ஒரு அரும்பெரும் பொக்கிஷம் என்று கண்டுகொண்டேன் .........இதே திரியில் எனக்கு ஒரு பதில் தந்தார் .....................[அதை வைத்து .   நியாணி அதை தூக்கிவிட்டார்]  :D
 
 
 
 
 
 

அண்ணே எங்காவது சிறுவர் இணையம் இருந்தால் தேடிப்பாருங்க :icon_mrgreen:  :D 

 

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.