Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கத்தின் 87 ஆவது பிறந்ததினம் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை.. ஒரு அரசுக்கு எதிராக அரசு நடத்தியவர் படை நடத்தியவர் என்று... கோத்தபாயவே புகழ்ந்திருக்கிறார். வியந்திருக்கிறார். தமிழீழம் கேட்ட.. அமிர்தலிங்கம்.. எங்க..??! :lol::D

  • Replies 67
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குதான் அர்யூன் அண்ணா வேண்டும் என்பது. செல்வா டட்லி, பண்டா ஒப்பந்தங்கள் இந்திய மத்தியதுடன் நடந்ததாய் நெடுக்கர் அளக்கிறார் உண்மையா அண்ணா?

இலங்கை -இந்தியா என்ன நடந்தது என்று தெரியாமல்  வழக்கம் போல அவரவர் கதை அளக்கின்றார்கள் .

அமீர் உட்பட அனைத்து தலைவர்களின் அனுமதியுடன் தான் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது தனது அறியாமையினாலும் இந்தியாவின் பலம் தெரியாததாலும் பிளேட்டை மாற்றியது பிரபாகரன் தான் .

எல்லாரையும் சுற்றி ஏக பிரநிதியாக தமிழ் ஈழம் பெற கனவு கண்டார் .கனவு காண்பதில் பிழையில்லை அதன் சாத்தியம் பற்றி தெரியாதவரை .மற்ற தலைவர்களுக்கு ஓரளவு சர்வதேச அரசியல் தெரிந்திருந்தது தான் உண்மை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் தங்கள் அறிவிற்கும் தங்களுக்கு தெரிந்தவற்றையும் எழுத முடியும் .

அமிர் பல உலக நாடுகள் சென்று சர்வதேச புகழ் பெற்ற ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர் ,அவர் எதிர்கட்சியில் இருக்கும் போது சமர்பிக்கபட்ட பட்ஜெட் பற்றி அவர் ஆற்றிய உரை பல ஆழும் கட்சி அங்கத்வர்களாலேயே பாராட்டப்படப்பட்டது .

தை பொங்கலுக்கு தமிழ் ஈழம் என்று அமீர் பேசவில்லை தமிழ் ஈழம் தான் தீர்வு என்று பேசினார் .

செல்வா டட்லியின் ஒப்பந்தத்துடன் காலாவாரியாகிவிட்டார் .

அமிரும் பிழை விடாத மனிதர் அல்ல ஆனால் மிக சிறந்த அரசியல் தலைவர் .

சுந்தரத்தை பிராபாவை கொண்டு போடா வைத்தவர் இவர்தான் என்றும் கதையிருக்கு  .

வடலிக்கு பின் போவர்களுக்கு டாய்லட் பற்றி தெரியாது . :icon_mrgreen:

ஒரு நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு வெளிநாடுகள் செல்ல அரசியல் ரீதியாக செல்ல அதிகாரமும் வாய்ப்புகளும் உண்டு. இதை அதிகம் படித்த தமிழர்தரப்பு அரசியல் ரீதியாக பயன்படுத்தவேயில்லை.கும்மாளம் போட்டதுதான் மிச்சம்.அமிருக்கு காண்டிபனை நினைச்சுத்தான் ஒரே கவலையாய் இருந்ததாம்.உந்த விசயத்திலை வி என் நவரத்தினம் வலு கெட்டிக்காரன்.விடுதலை கூட்டணியெல்லே

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் தரத்தை தானே பார்க்கிறமே கடந்த 27 ஆண்டுகளாக..???!

இதில பிரபாகரன் தானாம் விளக்கம் குறைவாக இருந்தவர். இப்ப ஒரு முன்னாள் நீதியரசரே.. உதென்ன மாகாண சபை உப்புச் சப்பில்லாது இருக்கிறது என்று  குற்றச்சாட்டும் அளவுக்கு.. இருக்குது.. ஒப்பந்தம்.

இலங்கை நீதிமன்றத்தால்.. அவமதிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தமாகவும் இது உள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது கூட போலி நாடகம். அதனை அன்றே வெளிக்கொணர்ந்தவர்.. பிரபாகரன். அவருக்கு.. விளக்கம் குறைவுப் பட்டம். நல்லா வருவீங்க.. இப்படி மக்களை ஏய்க்கும் அரசியல் செய்யப் போய் தான் காணாமல் போனனீங்க. இன்னும் அதில இருந்து திருந்தேல்ல. :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jram_zpsd00d9af5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

jram_zpsd00d9af5.jpg

இதில அமிர்தலிங்கத்தின் இடத்தை நிரப்புவதே சம்பந்தனின் இன்றைய குறிக்கோள். மிக விரைவில்..  ஹிந்தியாவின் எடுபிடியில்.. இந்த வட்ட மேசைக்கு மீண்டும்.. நாடக அரங்கு திறக்கப்பட இருக்கிறது. அதற்கான முஸ்தீபுகள் பலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மாவையின் ஒளிப்பு மறைப்பு இராஜதந்திரத்தில்.. இதுவும் அடக்கம். :lol::D

நன்றி கு.சாண்ணா. எங்க இருந்து தான் இவற்றைப் பிடிக்கிறீங்களோ. :)

  • கருத்துக்கள உறவுகள்

87ல் இந்தியபடைகள் நாட்டில் நிக்க, சிங்களப் படைகள் முகாமில் முடங்கியிருக்க, அமிர் தலைமையில் ஒரு வடக்கு-கிழக்கு மாகாணசபை அமைந்திருந்தால் அது வலுவானதாய் இருந்திருக்கும். தெற்கே ஜேவிபி பலம் மேலும் கூடியிருக்கும்.

நீதிமன்ரு மூலமோ வேறுவழிலிய்லோ மாகாண அரசை நீர்த்து போக இந்தியா விட்டிராது. மீறி இலங்கை செயல்பட்டால் இந்தியாவே இலங்கையை துண்டாடியும் இருக்க கூடும்.

இந்த eventuality கிரகிக்கும் ஆற்றல் அதற்க்கேற்ப காய்நகர்த்தும் ஆற்றல் அமிருக்கு இருக்க வாய்ப்புகள் உண்டு.

ஆனால் பிரபாவுக்கு இந்த game plan ஏ புரியவில்லை. புரிந்திருந்தால் அவர் அப்படி நடந்திருக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீ.ஜீ பொன்னம்பலம்,செல்வநாயகம்,அமிர்தலிங்கம் அரசியல் செய்த பிறகுதான் விடுதலைப்போராளிகள் தோன்றினார்கள்.ஏன் எதற்கு எப்படி எதனால்??????

கேட்கின்ற மாதிரி கேட்டுப்பார்த்தோம் சரி வரவில்லை இனி சாத்துதான் என முடிவெடுத்தார்கள் .போரட்டவடிவங்களின் மாற்றம் என்பது அதுதான் .

(ஜெர்மன் பிரான்ஸ் கனடா என்று புலம்பெயர்ந்தவனை ஏன் முதலே கனடா போகவில்லை என கேட்பது போல்தான் இதுவும் .)

அக புற சூழல்கள் தான் போரட்ட வடிவத்தை நிர்ணயிக்கின்றது .

குறிப்பு -பிரபாகரனின் ஈழ ஆசையும் போரட்ட குணத்தையும் நான் குறைத்து எடை போடவில்லை ஆனால் அதை இந்திய பின்தளம் ,இந்திய ஆயுதங்கள் ,இந்திய பயிற்சி ,இந்திய பணம் இல்லாமல் செய்திருந்தால் இந்தியாவின் தலையீட்டை தவிர்த்திருக்கலாம் .அவ்வளவையும் அவர்களிடம் இருந்து பெற்று விட்டு அவர்கள் சொல்வதை கேட்க மாட்டேன் என்றதில் தான் பிரச்சனயே ஆரம்பம் .

87ல் இந்தியபடைகள் நாட்டில் நிக்க, சிங்களப் படைகள் முகாமில் முடங்கியிருக்க, அமிர் தலைமையில் ஒரு வடக்கு-கிழக்கு மாகாணசபை அமைந்திருந்தால் அது வலுவானதாய் இருந்திருக்கும். தெற்கே ஜேவிபி பலம் மேலும் கூடியிருக்கும்.

நீதிமன்ரு மூலமோ வேறுவழிலிய்லோ மாகாண அரசை நீர்த்து போக இந்தியா விட்டிராது. மீறி இலங்கை செயல்பட்டால் இந்தியாவே இலங்கையை துண்டாடியும் இருக்க கூடும்.

இந்த eventuality கிரகிக்கும் ஆற்றல் அதற்க்கேற்ப காய்நகர்த்தும் ஆற்றல் அமிருக்கு இருக்க வாய்ப்புகள் உண்டு.

ஆனால் பிரபாவுக்கு இந்த game plan ஏ புரியவில்லை. புரிந்திருந்தால் அவர் அப்படி நடந்திருக்க மாட்டார்.

மாகான சபையிலை இந்தியாவுக்கு நம்பிக்கை இருந்து இருந்தாலோ இல்லை அமிர்தலிங்கம் தலைவராக வரவேணும் எண்டு நினைச்சு இருந்தால்  ஏன் அண்ணை புலிகளிட்டை ஆயுதங்களை வாங்கி கொண்டு ENDLF ஐ ஆயுதங்களோடை இந்தியா சுத்த வைத்தது...?? 

முதலமைச்சர் வரதர் மூலம்  சின்ன பெடியளை எல்லாம் பிடிச்சு கொண்டு போய்  TNA  எண்ட கட்டாய ஆள்பிடிப்பு இராணுவத்தை ஏன் அண்ணை இந்தியா உருவாக்கினது...?? 

முதலிலை வரலாறுகளை இருந்து நிதானிச்சு  ஞாபகத்திலை கொள்ளுங்கோ...   அர்சுண் மாதிரி அரை வேக்காடு தனமான பினாத்தாமல் இருந்தாலே பெரிய புண்ணியம்... 

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கின்ற மாதிரி கேட்டுப்பார்த்தோம் சரி வரவில்லை இனி சாத்துதான் என முடிவெடுத்தார்கள் .போரட்டவடிவங்களின் மாற்றம் என்பது அதுதான் .

(ஜெர்மன் பிரான்ஸ் கனடா என்று புலம்பெயர்ந்தவனை ஏன் முதலே கனடா போகவில்லை என கேட்பது போல்தான் இதுவும் .)

அக புற சூழல்கள் தான் போரட்ட வடிவத்தை நிர்ணயிக்கின்றது .

குறிப்பு -பிரபாகரனின் ஈழ ஆசையும் போரட்ட குணத்தையும் நான் குறைத்து எடை போடவில்லை ஆனால் அதை இந்திய பின்தளம் ,இந்திய ஆயுதங்கள் ,இந்திய பயிற்சி ,இந்திய பணம் இல்லாமல் செய்திருந்தால் இந்தியாவின் தலையீட்டை தவிர்த்திருக்கலாம் .அவ்வளவையும் அவர்களிடம் இருந்து பெற்று விட்டு அவர்கள் சொல்வதை கேட்க மாட்டேன் என்றதில் தான் பிரச்சனயே ஆரம்பம் .

உங்களுக்கு தலைக்குள்ளதான் ஒன்றுமில்லை என்றால்

நெஞ்சுக்குள்ளேயும் ஏதுமில்லை..

தமிழருக்கு என்ன  கொடுக்க இருந்தார்கள்

அதில் எவற்றை புலிகள் மறுத்தார்கள் என்று முதலில் எழுதுங்கள்

விளக்கம் தாருங்கள்

சரி  என்றால் எற்றுக்கொள்ளத்தயாராக  இருக்கின்றோம்

அதைவிடுத்து

சும்மா சொறிய  மட்டும்  வருவதென்றால் தொடருங்கள்

எல்லோரும் மனிதர்களே...

பின்னர் அழுது புலம்பித்திரியவேண்டாம்........... :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

87ல் இந்தியபடைகள் நாட்டில் நிக்க, சிங்களப் படைகள் முகாமில் முடங்கியிருக்க, அமிர் தலைமையில் ஒரு வடக்கு-கிழக்கு மாகாணசபை அமைந்திருந்தால் அது வலுவானதாய் இருந்திருக்கும். தெற்கே ஜேவிபி பலம் மேலும் கூடியிருக்கும்.

நீதிமன்ரு மூலமோ வேறுவழிலிய்லோ மாகாண அரசை நீர்த்து போக இந்தியா விட்டிராது. மீறி இலங்கை செயல்பட்டால் இந்தியாவே இலங்கையை துண்டாடியும் இருக்க கூடும்.

இந்த eventuality கிரகிக்கும் ஆற்றல் அதற்க்கேற்ப காய்நகர்த்தும் ஆற்றல் அமிருக்கு இருக்க வாய்ப்புகள் உண்டு.

ஆனால் பிரபாவுக்கு இந்த game plan ஏ புரியவில்லை. புரிந்திருந்தால் அவர் அப்படி நடந்திருக்க மாட்டார்.

நீங்கள் இவ்வளவுக்கு இந்தியாவை நம்பியிருக்கின்றீர்களா?சிறிலங்காவை இந்தியாவுடன் இணைத்திருக்கும் ஒரு நாளும் துண்டாடியிருக்காது....இந்தியாவின் மாஸ்டர்பிளானே அதுதான்....

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு தலைவர் .சிறுபான்மை இனத்தில் இருந்து இனி ஒருவர் எதிர்கட்சி தலைவராக வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை .எமது பிரச்சனையை பட்டி தொட்டி எல்லாம் கொண்டுபோனது மாத்திரம் இல்லாமல் சர்வதேசத்திற்கும் கொண்டு போனவர் .

அரசியல் தலைவராக இருந்தால் தூற்று வாங்குவது வெகு சகஜம் .

அரசியல் தலைவராகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை தூற்று வாங்குவதற்கு...நீங்கள் தானே விடிந்தால் பொழுதுபட்டால் திரு பிரபாகரனின் தூற்றுகிறீர்கள் ......அப்போது... அவர் அரசியல் தலைவராக...

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் இந்தியாவை நம்பி , நான் அப்படிச் சொல்லவில்லை. தொடர்ந்து இந்திய படைகள் வடகிழக்கில் நின்றிருந்தால், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து கட்டாயம் பாரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கும். ஜேவிபி, முஸ்லீம்கள் மூலம் பாகிஸ்தானின் உதவியுடன் இந்திய படைகள் மீது ஒரு கெரிலா யுத்தம் கூட வெடித்திருக்கலாம்.

87-89 இல் திருமலையில் சிங்கள மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அங்கு வாழ்ந்த யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்.

விபி சிங் அரசு வந்தபோது, புலிகளும் எம்மை வெளியேறச்சொல்குகிறார், பிரேமதாசாவும் சொல்கிறார், பங்காளியான கருணாநிதியும் சொல்கிறார் - ஏலவே நல்ல மனிசரான சிங் உடனடியே படைகளை வாபஸ் பெறுகிறார்.

இதையே மாற்றி யோசித்துப் பாருங்கள், புலிகளும், ஏனைய தமிழரும் கருணாநிதியும் இந்திய படைகள் வேண்டும் என்கிறனர், புலிகள் இந்தியா சண்டை நடக்கவில்லை, அமிர் முதல்வராகி ராஜதந்திர நெருக்கடி கொடுக்கிறார்.

சிங்கள அடிப்படைவாதம் இந்திய படைகள் மீது திரும்ப எவ்வளவு காலம் எடுத்திருக்கும் ( ஏற்கனவே ஜேவிபி மைசூர் பருப்பு புறக்கணிப்பு, சீலை எரிப்பு எல்லாம் தொடங்கியாச்சு).

இந்த அற்புதமான வாய்ப்பு குறைந்தபட்சம் சுயாட்சி அல்லது தனிநாட்டை கூட தமிழர்க்கு தந்த்ஹிருக்கலாம்.

களத்தில் நின்றவர்கள்

கலாம் போடமுடியாது

ஆம்

அல்லது இல்லை

இரண்டு முடிவே..

இன்று ஆம் போட்டவர்களாலும் முடியவில்லை என்பதே  கள  யதார்த்தம்.. :(  :(  

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா, உங்களுக்கு இந்த scenario appraisal, future trend analysis, risk assessment, cost benefit graph, கருவாடு, கம்பாயம் எல்லாம் புரியும் என்று எழுதும் போதே நான் எதிர்பார்க்கவில்லை. ஆக உங்கள் பதிலில் ஒரு வியப்பும் இல்லை.

என் ஆதங்கமெல்லாம் - இந்தியாவை அடிப்போம் என்று முடிவெடுத்த போது கிட்டு மூலம் கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு ஆலோசனை ஆம்/இல்லை என்று முடிவெடுப்பவருக்கு சொல்லப்பட்டதாம்.

கொஞ்சம் பொறுப்பமண்னை என்றும், இப்ப அடிப்பம் எண்டுறவன் எல்லாம் நாளைக்கு ஓடிடுவான், ஆனால் நான் உங்களோடு நிப்பேன் என்று கிட்டு சொன்னதாயும் நான் கேள்விப்பட்டதுண்டு. எல்லாம் செவிடன் காதில் சங்காகிப் போனதுதான் சோகம்.

அண்ணமாரெ நடந்தது எல்லாம் கறுப்பு வெள்ளையாக வெளிவந்து விட்டது ,இப்பவும் மற்றவனுக்கு எதுவும் தெரியாது என்ற புலி சொன்னதை சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள் .

தமிழருக்கு என்ன கொடுக்க இருந்தார்கள் -----      இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை வாசிக்கவும் .அந்த அளவு அதிகாரங்கள் ,உரிமைகள்  இனி எடுப்பது கஷ்டம்  என்பது எனது எண்ணம் .

ஆரம்பத்தில் சிறிலங்காவில் நம்பிக்கை இல்லை இந்தியா நடுநிலைமை வகித்தால் சரி என்றார்கள்  காரணம் ஜே ஆர் இறங்கிவரமாட்டார் என்று முற்று முழுதாக நம்பினார்கள் ஆனால் இந்தியா ஜே ஆர் ,சிங்கள பேரினவாதிகளை  பயமுறுத்தி ஒப்பந்தம் கைசாத்து இடப்போகின்றார்கள் என்ற நிலை வந்ததும் அதை குழப்பதொடங்கினார்கள் .

புலிகளின் தீர்வு தமிழ் ஈழம் தான் அதை அடையலாம் என்று பிரபா முற்றுமுழுதாக நம்பினார் .அதனால் தான் இவ்வளவு அழிவும் தமிழனுக்கும்  வந்தது புலிகளுக்கும் வந்தது . .

புத்தன் இந்தியாவை நம்பி , நான் அப்படிச் சொல்லவில்லை. தொடர்ந்து இந்திய படைகள் வடகிழக்கில் நின்றிருந்தால், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து கட்டாயம் பாரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கும். ஜேவிபி, முஸ்லீம்கள் மூலம் பாகிஸ்தானின் உதவியுடன் இந்திய படைகள் மீது ஒரு கெரிலா யுத்தம் கூட வெடித்திருக்கலாம்.

87-89 இல் திருமலையில் சிங்கள மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அங்கு வாழ்ந்த யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்.

விபி சிங் அரசு வந்தபோது, புலிகளும் எம்மை வெளியேறச்சொல்குகிறார், பிரேமதாசாவும் சொல்கிறார், பங்காளியான கருணாநிதியும் சொல்கிறார் - ஏலவே நல்ல மனிசரான சிங் உடனடியே படைகளை வாபஸ் பெறுகிறார்.

இதையே மாற்றி யோசித்துப் பாருங்கள், புலிகளும், ஏனைய தமிழரும் கருணாநிதியும் இந்திய படைகள் வேண்டும் என்கிறனர், புலிகள் இந்தியா சண்டை நடக்கவில்லை, அமிர் முதல்வராகி ராஜதந்திர நெருக்கடி கொடுக்கிறார்.

சிங்கள அடிப்படைவாதம் இந்திய படைகள் மீது திரும்ப எவ்வளவு காலம் எடுத்திருக்கும் ( ஏற்கனவே ஜேவிபி மைசூர் பருப்பு புறக்கணிப்பு, சீலை எரிப்பு எல்லாம் தொடங்கியாச்சு).

இந்த அற்புதமான வாய்ப்பு குறைந்தபட்சம் சுயாட்சி அல்லது தனிநாட்டை கூட தமிழர்க்கு தந்த்ஹிருக்கலாம்.

மிக மோசமான பேரளிவை சந்தித்த பின்னர் இன்றய காலகட்டத்தில் இவ்வாறு சிந்திக்கத் தோன்றுகின்றது. ஆனால் இந்தியப் படைகள் காலத்தில் இவ்வாறு சிந்திக்கும் அளவுக்கு எதுவித சூழலும் இருந்திருக்கவில்லை. இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்தபின்னரே இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழரின் முதுகில் குத்தியது. அப்போதிருந்த சூழல் தமிழர்களுக்கு இரண்டு எதிரிகள் ஒன்று இந்தியா என்ற பெரிய எதிரி இரண்டாவது சிங்களம். இதுதான் அன்றய யதார்த்தம். பெரிய எதிரியை அகற்றுவது பின்னர் சிங்களத்துடன் போரிடுவது என்ற நோக்கமே அன்றய காலகட்டத்தின் நிலையாக இருந்தது.

ஒருவகையில் அது அற்புதமான வாய்ப்பாக கருதினாலும் அதை பயன்படுத்தும் அளவுக்கு எந்தச் சூழலும் சாத்தியக் கூறுகளும் இருந்திருக்கவில்லை.

ஒருவன் 100 ருபாய் பேசி ஒரு வேலையை செய்தான். அவனுக்கான 100 ருபாய் நியாயமான பணத்தை வாங்குவதற்காக போராடினான்.

75 ருபாய் தரலாம் 50 தரலாம் இல்லை 10 தரலாம. தரவே முடியாது. வேணுமானால் தட்டை எடு பிச்சையாக ஏதாவது போடுகின்றோம். அவனெட்ட போயிருந்தால் 100 ருபாயையும் வாங்கியிருக்கலாம் இவனெட்ட போயிருந்தால் 50 எண்டாலும் வாங்கியிருக்கலாம். கடசி இங்க போயிருந்தால் தட்டில் கொஞ்சம் சில்லறையாவது விழுந்திருக்கும்.

மேற்சொன்னபடிதான் சுதந்தித்துக்கான விடுதலைப்போராட்டம் அணுகப்படுகின்றது. இதுதான் ஈழத்தமிழரின் புத்தியீவித எல்லையும் சிந்தனை முறையும். இவ்வாறான சூழ்நிலையானது அடிமைத்தனத்தை துறக்க முடியாத நிரந்தர அடிமைத்தனத்தை அடிப்படையில் ஏற்றுக்கொண்டு அதற்குள்ளாக தாம் வாழ்வதற்கான உரிமைகள பெற முற்படும் நிலையே. பாரம்பரியமாக பழக்கப்பட்ட சாதிய அடிமைச் சமூகங்கள் இந்த நிலையில் இருந்தே எந்த ஒன்றையும் அணுகும். அவ்வாறே இது அணுகப்படுகின்றது.

இச் சூழலுக்கு அப்பால் பட்டு இவற்றைக் கடந்து செல்ல முற்பட்ட ஆயுதப்போராட்டம் இச்சூழலுக்குள் திரும்ப வந்து நிற்கின்றது. இச் சூழல் அன்றும் இன்றும் என்று நிலையாய் இருப்பது. இதில் ஆயுதப்போராட்டம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆயுதப்போராட்டத்துக்கு முன்னர் "பார்த்து ஏதாவது போடுங்கையா" என்பதை இப்போதும் எப்போதும் தொடரவேண்டியதுதான்.

இது தான்  உண்மை

நன்றி  ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சண்டமாருதன் அப்போதே இந்த சந்த்ஹர்பத்தை தவறவிடக்கூடாது என்று நினைத்த பலர் சிவில் சமூகத்தில், யாழ் பல்கலையிலும் இருந்தார்கள்.

புலிகளின் ஆயுத ஒப்படைப்பு கண்துடைப்பு என்பது நாடறிந்த உண்மை. இந்தியா இஎண்டிஎலெப் பை இறக்கியதும் உண்மை.

புலிகள் இந்தியாவை பேய்க்காட்ட, இந்தியா புலிகளை பேய்க்காட்ட முடிவில் யுத்தம் வந்தது.

இதை பிரபா சரிய்யாக கையாண்டிரிந்தால் இஎண்டிஎலெப் இன் இடத்தில் புலிகள் இருந்திருக்கலாம். யாரோ ஒரு தமிழர் முதல்வரச்யிருக்கலாம்.

கொஞ்சம் நெளிவுசுளிவு இருந்த்ஹால் போதும்.

இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்தபின் - சாண்டமாருதன் எந்த உலகில் இருக்கின்றார் .புலிகள் தரப்பில் இந்தியாவுடன் பேச்சில் ஈடுபட்டவர்கள் யாரவது இருந்தால் உண்மையில் என்ன நடந்து என்று கேட்டு அறியுங்கள் .

பல தரப்பிலும் இருந்து பேச்சுக்களில் பங்கு பற்றிய பலர் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் .புலிகள் இந்தியாவின் சொல் கேட்க  முடியாது என்றபின்னர் தான் அழிக்க நினைத்தார்கள் .

இந்தியா எதிரி அல்ல எதிரியாக ஆக்கினார்கள் என்பது தான் உண்மை .

இந்தியாவுக்கு என்று ஒரு மரபு இருக்கின்றது. அது ஆயிரமாண்டுகளாகக் கட்டப்பட்ட மரபு. சமுகங்களை பிரித்து சிதைத்து தேசீய இனங்களை பிரித்து முரண்பாடுகளை நிரந்தரமாக்கி ஆழ்வதே இந்திய மரபு. சாதீயம் வருணாசிரம தர்மம் ஆன்மீகம் கடவுள் அனைத்தும் இந்த மரபை நெறிப்படுத்தவே பாவிக்கப்பட்டது. இன்று இந்தியாவின் அனைத்து தேசீய இனங்களும் பலவீனப்பட்ட நிலையில் இந்தியா என்று ஒரு தேசம் அழப்படுகின்றது. எந்த ஒரு தேசீய இனமும் சுய அதிகாரம் பெறுவது இந்திய மரபுக்கு முரணானது. அந்தவகையில் தமிழகத்தோடு பிணைந்த கடலால் மட்டும் பிரிந்த தமிழினம் சுய அதிகாரம் பெறுவதும் இந்திய மரபுக்கு முரணானது.

இந்தியா தனது மரபுக்கு உட்பட்டு ஒரு தேசீய இனத்தை எவ்வாறு பலவீனப்படுத்த முடியுமோ அவ்வாறு பிரித்தாளும் தந்திரத்தால் இயக்கங்களை பிரித்து ஈழத்தமிழ் இனத்தையும் போராட்டததையும் பலவீனப்படுத்தியது. புலிகள் இதிலிருந்தும் நீட்சிகண்டார்கள். இந்திய மரபும் தனது நீட்சியை முள்ளிவாய்க்கால் வரையும் இனியும் காலம் உள்ள வரையும் தொடரும்.

பல தேசீய இனங்களை சிதைத்து பலவீனப்படுத்தியே இந்திய தேசீயம் நிலைகொள்கின்றது. ஈழத்தமிழினம் சுய அதிகாரம் பெறுவது அடிப்படையில் இந்திய தேசீயத்துக்கு விரோதமானது. ஈழத்தமிழினம் சுய அதிகாரம் பெறுவது தமிழ்த்தேசீயம் பலம் பெறுவது என்பதெல்லாம் அடிப்படையில் இந்திய மரபுக்கும் இந்திய தேசீயத்தின் இறையாண்மைக்கும் நூறுவீதம் எதிரானது.ஈழத்தமிழினத்துக்கு இந்தியாவால் விமோசனம் கிடைக்கும் என்ற சிந்தனையானது இன்றுவரை எந்த அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. இனி எப்படி என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டம் ஈழத்தமிழரின் சமூக முரண்பாடுகளை மேவி இனத்தேசீயமாக பலம் கொண்டு இந்திய மரபுகளையும உடைத்து சிங்களபேரினவாதத்திலிருந்தும் விடுதலை பெறுவதை குறிக்கின்றது. இதில் வெற்றி பெறுவது என்பதை விட இப்படியான சூழலிலும் ஒரு சுதந்திரத்துக்கான முயற்சி நடந்தது என்ற திருப்தியுடன் மண்டையை போட வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இந்தியாவின் நிலை என்று தெள்ள தெளிவாக தெரிந்ததும், பிரபா முன்னிருந்த தெரிவு

1) இந்தியாவுடன் இணங்கி தேசிய சுயநிர்ணயத்தை கைவிட்டு, அடுத்த நிலைக்கு உடன் படுவது

2) இந்த்ஹியாவை பகைத்து, தேசிய சுயநிர்ணய போரை முன்னெடுப்பது.

அவர் இரண்டாவதை தேர்ந்தார் - rest, as they say is history. இதுதான் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு என்று ஒரு மரபு இருக்கின்றது. அது ஆயிரமாண்டுகளாகக் கட்டப்பட்ட மரபு. சமுகங்களை பிரித்து சிதைத்து தேசீய இனங்களை பிரித்து முரண்பாடுகளை நிரந்தரமாக்கி ஆழ்வதே இந்திய மரபு. சாதீயம் வருணாசிரம தர்மம் ஆன்மீகம் கடவுள் அனைத்தும் இந்த மரபை நெறிப்படுத்தவே பாவிக்கப்பட்டது. இன்று இந்தியாவின் அனைத்து தேசீய இனங்களும் பலவீனப்பட்ட நிலையில் இந்தியா என்று ஒரு தேசம் அழப்படுகின்றது. எந்த ஒரு தேசீய இனமும் சுய அதிகாரம் பெறுவது இந்திய மரபுக்கு முரணானது. அந்தவகையில் தமிழகத்தோடு பிணைந்த கடலால் மட்டும் பிரிந்த தமிழினம் சுய அதிகாரம் பெறுவதும் இந்திய மரபுக்கு முரணானது.

இந்தியா தனது மரபுக்கு உட்பட்டு ஒரு தேசீய இனத்தை எவ்வாறு பலவீனப்படுத்த முடியுமோ அவ்வாறு பிரித்தாளும் தந்திரத்தால் இயக்கங்களை பிரித்து ஈழத்தமிழ் இனத்தையும் போராட்டததையும் பலவீனப்படுத்தியது. புலிகள் இதிலிருந்தும் நீட்சிகண்டார்கள். இந்திய மரபும் தனது நீட்சியை முள்ளிவாய்க்கால் வரையும் இனியும் காலம் உள்ள வரையும் தொடரும்.

பல தேசீய இனங்களை சிதைத்து பலவீனப்படுத்தியே இந்திய தேசீயம் நிலைகொள்கின்றது. ஈழத்தமிழினம் சுய அதிகாரம் பெறுவது அடிப்படையில் இந்திய தேசீயத்துக்கு விரோதமானது. ஈழத்தமிழினம் சுய அதிகாரம் பெறுவது தமிழ்த்தேசீயம் பலம் பெறுவது என்பதெல்லாம் அடிப்படையில் இந்திய மரபுக்கும் இந்திய தேசீயத்தின் இறையாண்மைக்கும் நூறுவீதம் எதிரானது.ஈழத்தமிழினத்துக்கு இந்தியாவால் விமோசனம் கிடைக்கும் என்ற சிந்தனையானது இன்றுவரை எந்த அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. இனி எப்படி என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டம் ஈழத்தமிழரின் சமூக முரண்பாடுகளை மேவி இனத்தேசீயமாக பலம் கொண்டு இந்திய மரபுகளையும உடைத்து சிங்களபேரினவாதத்திலிருந்தும் விடுதலை பெறுவதை குறிக்கின்றது. இதில் வெற்றி பெறுவது என்பதை விட இப்படியான சூழலிலும் ஒரு சுதந்திரத்துக்கான முயற்சி நடந்தது என்ற திருப்தியுடன் மண்டையை போட வேண்டியதுதான்.

இந்தியாவை நம்பியிருக்கும் அனைவருக்கும் ஓர் நல்ல விளக்கம்

சண்ட மாருதன் நீங்கள் அடிக்கடி களத்தில் உங்கள் பதிவுகளை இடவேண்டும் என விரும்பும் பலரில் நானும் ஒருவன் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.