Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வை சகாறாவின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு

Featured Replies

இசை அண்ணாவின் சிஷ்யனில் சிவகார்த்திகேயனின் சாயல் அடிக்கிறது. :D நல்ல எழுத்து நடை. நன்றாக எழுதியுள்ளீர்கள் தொடருங்கள்.

வல்வையின்.... கையில், ஒரு பிரசண்ட் கொடுத்த, பார்சல் ஒண்டு இருக்கு.....

அதற்குள் என்ன இருந்தது.... என்று அறிய, ஆவலாய் உள்ளது. :D

அதுவும் சகாறா அக்காவின் சாறி கலருக்கு மச் பண்ணுது. :lol:

  • Replies 152
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணாவின் சிஷ்யனில் சிவகார்த்திகேயனின் சாயல் அடிக்கிறது. :D .

:

 

ச்சே ...எங்கன்ட இளமைகாலத்தில் சிவகார்தி நடிக்க வரவில்லை வந்திருந்தால் நாங்களும் கிரோ ரேஞ்சில் இருந்திருப்போம்.....எங்கன்ட காலத்தில் கமல்,மோகன் போன்றோர் நடித்தபடியால் எங்களை ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை...:D......தம்பி விஸ்வா உங்கன்ட காட்டில மழை.....

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வாவின் எழுத்துநடை பிரமாதம். எதிர்காலத்தில் யாழ்களத்தில் இன்னும் பல எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. எத்தனையோ இடர்தாண்டி சகாராவின் நூல் வெளியீட்டில் கலந்துகொண்ட உங்களை பாராட்டியேஆக வேண்டும். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் விஷ்வா உங்கள் அனுபவத்தை வாசிக்க ஆவலாக உள்ளோம்.

நன்றாக சுவை பட எழுதியுள்ளீர்கள் விஷ்வா...வாழ்த்துக்கள்! அடுத்த அத்தியாயம் வாசிக்க நாங்கள் ரெடி :)

சகாறாக்காவின் நூல் வெளியீட்டில் கலந்து யாழ்களத்திற்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்
கவிதாயினி வல்வை சகாறாவே! உங்கள் வேண்டுதலுக்கு இணங்கி ஆடிமாதம் நானும் ஒரு கவிதை எழுதினேன் உங்களுக்கு மகள்கள் இருப்பது தெரியாமல்..... என்கவிதை ஆடி ஆடி வந்து சேருமுன்னே, பாவி ராசன் விசுவா ஒற்றறிந்து ஓடிவந்து உங்கள் அன்பைப் பெற்றுவிட்டானே! அணைப்பிலே சகோதர பாசம் பொங்கி வழிவது தெரிகிறது. அக்காவுக்குத் தம்பி மருமகனாவது தமிழ்நாட்டில் உண்டு. ஈழத்தில் இல்லையே....! இருந்தும் அந்தப் பயலைப் பார்த்ததும் என் மனமும் பரவசமடைகிறது! என் மகனைக் கண்டதுபோல்!! நிகழ்வுகளைப் பார்க்கும்போதும், அறியும்போதும் மனம் இன்பமடைகிறது. வாழ்த்துக்கள்!!. :rolleyes:  
 
  • கருத்துக்கள உறவுகள்

ஹய் விஷ்வா ! ஒரு சக கள உறவின் விழாவிற்கு பல சிரமங்களுக்கு இடையிலும் மறக்காமல் மலையாள குட்டிகளுக்கும் விஷ் பண்ணிக் கொண்டும் ஓடிப் போய் கலந்து கொண்டதற்கும் வாழ்த்துக்கள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

-------

காலம் : 2014 மாதம் மே

சாகாறா அக்கா நூல் வெளியீடு பற்றி தோராயமாக சொன்னார் ஒகஸ்ட் மாதம் இறுதியில் நிகழ வாய்ப்பிருக்காலாம் என்று. சரி தங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள் தமையன் வரவேற்க காத்திருக்கிறேன் என்டு.

-----

 

நீங்கள், சொல்வதைப் பார்க்க..... வந்தது, ஆன்ரி போல்... உள்ளது.

அது, உங்களுக்கு.... ஏமாற்றமா? சந்தோசமா?

அதை... முதல்ல சொல்லுங்கப்பு. :D  :lol:  :icon_idea:

 

10647149_10152470753151551_1481512064538

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பார்ரா ஒழுங்கா நூல் வெளியீட்டைப்பத்தி எழுத வந்த பெடியை இப்பிடி குடைஞ்சு குடைஞ்சு கேட்டே  ஓட்டிக் களைச்சிட்டாங்க போல இருக்கே..... :o :o :(:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பார்ரா ஒழுங்கா நூல் வெளியீட்டைப்பத்தி எழுத வந்த பெடியை இப்பிடி குடைஞ்சு குடைஞ்சு கேட்டே  ஓட்டிக் களைச்சிட்டாங்க போல இருக்கே..... :o :o :(:icon_mrgreen:

 

இதுக்கெல்லாம்..... கோயம்புத்தூர்காரன், அஞ்சுபவன் அல்ல.

எப்படியும், அவன் தன், அம்மாவையும்..... சமாளித்து, இன்று வருவான்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

10647149_10152470753151551_1481512064538

 

யாழ்கருத்துக்கள வாண்டூ..................... :wub::rolleyes:

இருவரையும் படத்தில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது... சகாரா அக்காவின் புத்தக வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன் விஸ்வாவுடன் தொலைபேசியில் உரையாடியபோது  வெறொரு விடயம் சம்பந்தமாக பேச்சு வருகையில் கொயம்புத்தூரில் இருந்து சென்னை செல்வது என்பது ஒரு நாள் பூரா செலவளிக்க வேண்டிய சிரமமான நீண்ட பயணம் என்று கூறியிருந்தான். நான் நம்பவில்லை அவ்வளவு சிரமங்களும் தாண்டி புத்தக வெளியீட்டுக்கு போவான் என்று.. 

1_zps1b01ffeb.png

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பார்ரா ஒழுங்கா நூல் வெளியீட்டைப்பத்தி எழுத வந்த பெடியை இப்பிடி குடைஞ்சு குடைஞ்சு கேட்டே  ஓட்டிக் களைச்சிட்டாங்க போல இருக்கே..... :o :o :(:icon_mrgreen:

 

இஞ்ச பார்ரா வல்வைக்கு வந்த ஆதங்கத்தை.  :(  :(  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பார்ரா வல்வைக்கு வந்த ஆதங்கத்தை.  :(  :(  :lol:

 

நம்ம வாண்டு எவ்வளவு சிரமப்பட்டு நிகழ்வுக்கு வந்து...அந்த நிகழ்வைப்பத்தி சும்மா பம்பலா எழுத ஆரம்பிச்சா.... பெடிக்கு இப்படியா கிலியை உருவாக்குவது??? :icon_mrgreen: :icon_mrgreen: :(

 

  • கருத்துக்கள உறவுகள்

10647149_10152470753151551_1481512064538

 

யாழ்கருத்துக்கள வாண்டூ..................... :wub::rolleyes:

 

பெடியின் முகத்தை உற்றுப்பாருங்கள். கிலியில் இப்படி ஒரு மலரச்சி வருமா..?? பெடி அடுத்து யாழை மீட்டும்போது தெரியும் அது கிலியா? புத்தொளியா என்று!!...  :D  :D

ரயிலை பிடித்தாயிற்று, கெளதம் மேனனின் படங்களை போல் அதிசயத்தக்க அழகிகள் இல்லாமால் பாலாவின் திரைப்படங்களை போல் பிச்சைகாரர்களும், வறியவர்களும், நாடோடிகளும், வித்தைகாரர்களுமாய் இயல்பாய் இருந்தது. மெல்ல சிந்தனையோடியது, ஒரு வாரத்திற்கு முன் வருவதாக சொல்லியதோடு சரி அதன்பின் பேசவில்லை, இன்னமும் படுபாவி புலவர் தொலைபேசி எண்ணை கொடுக்கவில்லை, எங்கே போய் யாரை சந்திப்பது என்ற அச்சம் வேறு புகுந்துகொண்டது. குமரனிருக்க இடமில்லையேல் குன்றிற்க்கு பெருமையில்லை, இசை இல்லையேல் பயணங்களுக்கு சிறப்பில்லை.

ஏதோ... மோகம்

ஏதோ... தாகம்

நேத்துவரை முளைக்களயே...

ஆசைவிதை விதைக்களயே...

சேதிதிதிதி....... என்னனன
.
.
.
.
.
.
வனக்கிளியே....!!!


ராஜாவின் பாடல்களால் சலனமடைந்த மனம் ஒருநிலைக்கு வந்தது. சென்னை நண்பனை அழைத்து ஒரு நிகழ்ச்சிக்கு உடன்வரும்படியும், விலாசத்தை சொல்லி இணையத்தில் போக வேண்டிய இடம், பேருந்து பற்றிய தகவல்களை பார்த்து வைக்க சொன்னேன். ரயில் சமிஞ்சைக்காக ஒரு மணி நேரம் காத்திருந்தது சென்னையின் புறநகர் பகுதியில், கடந்து சென்று கொண்டிருந்த மாநகர் உள்ளூர் சேவை ரயிலின் படிக்கட்டுகளில் ஆண்களும், பெண்களும், காதலர்களும் அநாயசமாக பயணம் செய்து கொண்டிருந்தனர். அதற்கு முந்தைய நிலையத்தில் ஏறிய ஒருவர் மதியம் இரண்டு மணியளவில் எல்.ஆர்.ஈஸ்வரியை "செல்லாத்தா செல்ல மாரியாத்தா" என்று கத்த விட்டு கொண்டிருந்தார்.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு போக போகிறோம் என்றேன். மேலும் கிழும் பார்த்தான். தலைநகரின் சுற்றாடல் மிக மிக மோசமாக இருந்த்து மெட்ரோ ரயில் பணிகளினால். எங்கும் புகை தூசி. நண்பனுடன் பேருந்தில் பயணபட தொடங்கினேன். கையில் அழைப்பிதழ் இல்லை, தொலைபேசி எண்ணில்லை ஒருவேளை உள்ளே நுழைய தடை போட்டுவிட்டால் எண்ண செய்வதென மனம் தரிகெட்டு பாய்ந்தது. இடையிடையே இரவு உணவு இருக்கு தானே என்று கேட்டு கொண்டிருந்தான். கனடாகாரர் கனக்க கவனிப்பினம் என்டு மனதில் நினைத்து அவனிடன் ஒம் ஒம் எல்லாம் இருக்கு என்று நம்பிக்கையூட்டி கொண்டிருந்தேன். ஊரிலிருந்து வரும்போதே உடனொருவன் வருவதாக சொல்லியிருந்தேன் அம்மாவிடம். அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது அவனிடமே கொடுத்து பேச சொன்னேன். அவனும் சமாளித்தான் இனி கவலையில்லை.

குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு முன்னதாகவே நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றாயிற்று. வரவேற்பரையில் ஊழியரிடம் நிகழ்வை பற்றிய விடயத்தை சொன்னேன், மேலே முதல் மாடியில் என்றார். வரவேற்பரையிலேயே ஒரு சிறு வண்ணமயமான கூட்டம் அகமகிழந்து எதையோ குடித்தபடி இருந்தனர். அதில் இரண்டு சிறிய பெரிய சிறுவர்களும் இருந்தனர். என் பயணத்தின் இலக்கானவர் மெதுவாக திரும்பி பார்த்து மீண்டும் காகித குவளைக்குள் மூழ்கிவிட்டார். மேலே போகனுமடா என்று திரும்பினேன் ஆளை காணோம். மேலே போவதா அவனை தேடுவதா இல்லை தமிழிடம் போவதா என்று மனம் ஊசலாடியது பெண்டுலத்தின் துணையில்லாமல். சரியென்று மேலே படிக்கட்டிற்கு போவதுபோல் சென்று ஒரு அரைவட்டமடித்து அவர் முன்னேபோய் நின்றேன்.

நிமிர்ந்து பார்த்தவரிடம் ராஜன் விஷ்வா என்றேன். ஒ ஒ ராஜன் விஷ்வாஆஆஆ வாங்கோ வாங்கோ வணக்கம் என்று புன்னகைத்தார். நான் சுதாகரிப்பதற்குள் ஏவுகணை வேகத்தில் சில சொல்லாடலை முடித்திருந்தார் யாழ்பாண தமிழில், என்ன சொன்னார் என்று யோசிப்பதற்குள் மீண்டுமொரு பல்முனை ஏவுகணை தாக்குதலை முடித்திருந்தார். பிறகு பிள்ளைகளை அறிமுகம் செய்தார் கணவரிடம் அறிமுகம் செய்தார் இவர் தான் யாழ்கள இசையின் சிஷ்யபிள்ளை கோவயமுத்தூரிலிருந்து வந்திருக்கிக்கிறார். ராமனுக்கு அணிற்பிள்ளை உதவிசெய்து பெருமையடந்தை போல் குருநாதருக்கு சிறுதுளி பெருமை சேர்த்து இந்த சிஷ்யபிள்ளை பிறவிப்பயனைடைந்தது. என்னை பார்த்திருக்கிறீர்களா என்றவரிடம் ஒம் விவசாயி விக் அண்ணாவின் சந்திப்பில் களைத்துப் போயிருந்த கள உறவுகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் தந்த பாரியின் படங்களை பார்த்திருக்கிறேன் என்றேன். முதலில் நான் சாகாறாவின் அண்ணன் என்று குழப்படி செய்து பார்த்தார். எதிரிலிருந்து கண்ணை சுழற்று சுழற்றி வெருட்டினார் பிறகு சில நிமிடங்கள் கனத்த மவுனம்.

இருவரும் நகர்ந்து விட்ட பின் நானும் பெரிய மகனருகில் அமர்ந்து கொண்டேன். மெதுவாக அவதானித்தேன் அவர்களை. குடும்பமே தமிழர் உடையில் மிடுக்காய் இருந்தது. சாரம் உடுத்தியிருந்தார் தந்தை. பெரிய பிள்ளை தாவணி பாவாடையிலும், ஆண் பிள்ளைகள் குர்தா மாதிரியான உடையிலிருந்தனர். அவர்களுக்கும் அக்கா சாரம் கட்டிவிட்டிருந்தால் இன்னும் அழகாயிருந்திருக்கும். பெரிய மகள் கையில் போட வேண்டிய மருதாணியை தலைமுடிக்கு போட்டிருந்தார். சிறிய மகள் அனார்கலி வடிவ சுடிதாரில் கொள்ளை அழகில் துடுக்குடன் இருந்தாள். சிறிய மகன் அமைதியின் வடிவாய் சாந்தமாயிருந்தான் நல்ல பண்பான சிறுவன்போல் தோன்றியது. பெரிய மகன் என்னிடம் பேச முயன்றவர்போல் இருந்தது. முதலில் பெயர் கேட்டவர் பிறகு முகப்புத்தக முகவரி வாங்கி குறித்து வைத்து கொண்டவர் அத்திட்டத்தை இன்று வரை கிடப்பில் போட்டுவிட்டார். என்ன வேலை செய்கிறீர் என்றவரிடம் அது அதுவந்து அதாவது என்டு இழுக்க எளிதில் புரிந்து கொண்டார் வேலையில்லா பட்டதாரியென்டு, திடிரென்று அம்மா இவருக்கு இருபத்திமூன்று வயதாம் என்டு கத்திவிட்டார்.

அருகில் வந்த அக்கா நலம் விசாரித்தவர். இந்த மடிக்கணினியால் படங்களையேற்ற முடியவில்லையென கவலைப்பட்டார். எனக்கும் தான் யாழில் படங்களை ஏற்ற தெரியாது என்டு வெகுளியாய் சொல்ல பிறகு இத்தனை நாள் என்ன அங்க குப்பையா கொட்டுறியள் என்று கடிந்தார். ( நியானி: கருத்துக்கள விதிகளை மீறி சக கள உறவை ஒருமையில் திட்டியதற்காக கள உறுப்பினர் வல்வை சகாறாவிற்கு மூன்று எச்சரிக்கை புள்ளிகளையும், ஒரு மாத தடையும் தாராளமாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ) தொலைபேசியில் தான் வருகிறேன் என தெரிந்ததும் வருத்தம் தெரிவித்தார். பிறகு கனாடாவிலும் நடைபெற உள்ள நிகழ்வு பற்றியும் பேசி கொண்டிருக்க ஆளை காணமென்று தேடப்பட்ட நண்பன் ஆளுடன் பேசி முடித்து வந்தான். அவனை அறிமுகப்படுத்த பிறகு ஒவியர் புகழேந்தி அங்கு நின்றிருந்தார் பின்னால், அவரை பற்றி சொன்னார் எனக்கு பிடிபடவில்லை. பல அரசு விருதுகளெல்லாம் வாங்கியவர் என்டு எனக்கு விளங்கவைக்க கடினமாக முயன்று தோற்றுவிட்டிருந்தார். ஞாபக மறதிக்கு அம்மா வாங்கி கொடுத்த ஞாபக சக்தி மாத்திரையையே சாப்பிட மறந்துவிடும் நினைவாற்றல் உடையவன் நான். வெகுநேரம் கழித்துதான் அவரது ஒவியங்களை யாழில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவர்தான் புத்தக அட்டைப்பட ஒவியம் வரைந்துள்ளார். விழாவிற்கு வர போகிறவர்களில் உன்னை மட்டும் தான் தெரியும் என்றபோது ஒருவேளை வராமல் போயிருந்தால் அவரிற்கு தனிமையுணர்வு எற்பட்டிருக்கலாம், தம்பி என்ற நிலையிலும் சக யாழ் கள உறுப்பினர் என்ற வகையிலும் அவர் சார்பாக கலந்து கொண்டது மனநிறைவை தந்தது. நண்பனுக்கு சூழல் புதியதாக இருக்க அவனை அழைத்து மேலே நிகழ்விடத்துக்கு சென்றுவிட்டேன்.

விழா நிகழ்விடம் எளிமையாக இருந்தது. சாகறா அக்கா சிரித்து கொண்டிருப்பது போல் ஒரு விளம்பரதட்டி அறிமுக புத்தக அட்டைப் படத்துடன் மேடைக்கு பின்புறம் தொங்கவிட்டிருந்தது. ஒரு பெரியவர் அவசரத்துடன் வருவதும் போவதுமாக இலங்கை தமிழிலும் தமிழக தமிழிலும் பேசி கொண்டிருந்தார். நாற்பது இருக்கைகள் வரை போடப்பட்டிருந்தது. அக்காவின் கணவர் சற்று கலவரத்துடன் காணப்பட்டார். முன்பே என்னிடம் விழாவிற்கு ஒப்பனை எதுவும் செய்யபோவதில்லை என்டு அக்க சத்தியம் சொன்னவர், சத்தியத்தை அப்பட்டமாக மீறியிருந்தார். உள்ளே வந்த சிறியவனை அழைத்து அருகில் அமர்த்தி எனது அதியுயர் ஆங்கில புலமையால் அவனது தமிழ் புலமையை சோதித்து கொண்டிருந்தேன். தமிழ் பட கதாநாயகிகளை போல ஒரளவு பேசினான்.

முதலில் வந்த கொளத்தூர் மணி அவர்கள் அப்போது தான் புத்தகத்தை எடுத்து ஆராய்ந்தார். பிறகு உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனும் ஒவியர் புகழேந்தியும் மற்றவர்களும் வர துவங்கினர். ஐய்யா பழ.நெடுமாறன் வந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். நெடுமாறன் ஐய்யாவும் மணி அவர்களும் தங்களது புதல்விகளுடன் வந்திருந்தனர். விழா ஆரம்பிக்க முன் அனைவருக்கும் பிரட் சான்ட்விச் பரிமாறப்பட்டது.

இலங்கை தமிழிலும், தமிழக தமிழிலும் பேசி கொண்டிருந்தவர் விழாவின் துவக்க உரை வழங்கினார். அவர் சாகறா அக்காவின் தந்தையின் வகுப்பு தோழனாகிய கவிஞர் வல்வை.குமரன். பிறகு தந்தை பழ.நெடுமாறன் ஐய்யா அவர்களின் கரங்களால் வல்வை சாகறாவின் "காவியத் தூது" "வேங்கையன் பூங்கொடி" ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டது. இது அவரது இலக்கிய வாழ்வின் ஒரு சிகரமாயிருக்கும் என்றும். மிகப்பெரும் சாதனையை சத்தமில்லாமல் செய்து தன் மண்ணுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

ஐய்யா பழ.நெடுமாறன் முதல் சில நிமிடங்கள் பேச கடினப்பட்டது உடல் நலனில்லாமல் இருப்பதை உணர்த்தியது. அவரது குரலும் சற்று தழுதழுத்திருந்தது. தமிழ் உள்ளளவும் சாகறாவின் புகழ் நிலைத்திருக்கட்டும், தொடர்ந்து இலக்கியங்களை எழுத வேண்டுமென உளமாற வாழ்த்தினார். தொடர்ந்து ஒவியரும், உணர்ச்சி கவிஞரும், கொளத்தூர் மணி அவர்களும், பத்மாவதி என்ற விரிவுரையாளரும் பேசினர்.

நிகழ்ச்சியினூடே அந்த கட்டிடத்தின் மைதானத்தில் வெட்டவெளி திரையில் வேலையில்லா பட்டாதாரி ஒடிக் கொண்டிருந்ததால் அதன் ஒலி அவ்வப்போது இடையூறாக இருந்தது. சத்தம் அதிகமாக வரும் போதெல்லாம் முன்வரிசையில் அமர்ந்திருந்த சிறிய மகனும் மகளும் ஒன்றாக திரும்பி பார்ப்பதுமாக இருந்தனர். விழா முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது உணவு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட நண்பன் கண்களால் கொலைமிரட்டல் விட்டு கொண்டிருந்தான். இடையிடையே நம்மைதான் பார்க்கிறார் அக்கா என்டு நான் அசட்டு சிரிப்பு சிரிப்பதும் முகத்தை அவா வேறுபக்கம் திருப்புவதும் வாடிக்கையாகிவிட்டிருந்தது. இறுதியில் நன்றியுரை சொல்ல வந்த நாயகி ஒரு அற்புதமான கவிதையொன்றை வாசித்தார். அதை பதிவிடும்படி தாழ்மையுடன் கேட்கிறேன். பிறகு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். என்னை அழைத்து நீயும் எனக்கு மகன் மாதிரி தானே என்டு சொல்லி பிள்ளைகளுடன் சேர்த்து படமெடுத்துக் கொண்டார். அவசரத்தில் வாங்கிய அன்பளிப்பை கொடுப்பமா வேண்டாமா என்ற குழப்பத்திலே கொடுத்துவிட்டு நூல்களை அவரது கையெழுத்தில் பெற்றுகொண்டபின் அன்புகளை பரிமாறிக் கொண்டதும் விடைபெற்று பேருந்து நிலையம் நோக்கி நடக்க தொடங்கியபடி நினைவுகளில் மூழ்கினேன்....

யாழ் களம் தான் எத்தனை எத்தனை அன்பானவர்களை அறிமுகம் செய்துள்ளது. இவர் ஏன் நண்பர்கள் சொந்தங்களை
இலக்கிய உலக சாதனையாளர்களை விடுத்து யாழ் உறவுகளின் வாழ்த்துக்களை தன் நூலில் அச்சேற்ற வேண்டும் ? அதிலும் என்னைபோன்ற சிறுவனின் எழுத்துக்களையும் கூட அச்சேற வாய்ப்பளித்துள்ளாரே...! எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை...


பேருந்து நிலையத்தை அடைந்தபோது மழை பொழிந்தது.

நல்லார் ஒருவர் காணும் புவிதனில் பெய்திடும் பூ மழை...!





எது எப்படியோ இன்று குருகுலத்தின் பெருமையை உலகறிய செய்த உளமகிழ்வு அடியேனுக்கு...
எல்லா புகழும் குருவிற்கே...
குருவே சரணம்...
சரணம்
சரணம் :D

Edited by ராஜன் விஷ்வா

இருதடவை பதியப்பட்டுள்ளது. எடிட் செய்து ஒன்றை நீக்கி விடுங்கள்.

நடைபெற்ற சம்பவங்களை கோர்த்து வர்ணனைகளுடன் சுவாரஸ்யமாக தந்தமைக்கு நன்றி. அப்படியே நாமும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வுடன் வாசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மகனாஆஆஆஆஆ...... வட போச்சே விச்சு

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் வர்ணிப்பும் எழுத்து நடையும் நன்றாக இருக்கின்றது விஷ்வா...! :)

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான எழுத்து நடை மற்றும் விவரணம். வாழ்த்துக்கள் விஷ்வா.. :D

இணையம் என்கின்ற ஒன்று எவ்வாறு மனிதர்களை ஒன்றிணைக்கிறது என்பது அதிசயம். அதுவும் உங்கள் விடயத்தில் ஒரு தெய்வத்துடன் இணைத்திருக்கிறதே.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விஷ்வா! நாமே போய் வந்த மாதிர் இருக்குது.


அருமையான எழுத்து நடை மற்றும் விவரணம். வாழ்த்துக்கள் விஷ்வா.. :D

இணையம் என்கின்ற ஒன்று எவ்வாறு மனிதர்களை ஒன்றிணைக்கிறது என்பது அதிசயம். அதுவும் உங்கள் விடயத்தில் ஒரு தெய்வத்துடன் இணைத்திருக்கிறதே.. :lol:

 

 

முடியல! மரச்சுவரில் தலையை முட்டினால் சுவர் தான் உடையும்! அடக்கிக் கொண்டேன்! :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அழகான நடையில் நூல் வெளியீட்டு விழாவை நேரடியாகப் பார்க்க வைத்துள்ளீர்கள் ராஜன் விஷ்வா!

இரவுச் சாப்பாட்டிற்கு இடியப்பமும், சம்பலும், சொதியும் ஓர்டர் பண்னாமல் விட்டுவிட்டார்கள். சாப்பாடு இல்லாத நூல் வெளியீடுகளை நான் பார்த்ததில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் விஷ்வா முதலில் என்னுடைய நன்றியும் தொடர்ந்து அந்நிகழ்வை இவ்வளவு கலகலப்பாகவும் எழுதமுடியும் என்று எழுத்தாணி வித்தையில் தேர்ச்சியுற்றமைக்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். சில கணம் நம்ம யாழ்கடிமன்னர்களின் பகிடிவதை தாங்காமல் அஞ்சிவிடுவீர்களோ என்று மனம் நினைத்ததுண்டு. இருப்பினும் ஒரு நம்பிக்கை நம்ம வாண்டுப்பயல் பின்னிற்கமாட்டான்பா என்று மனதைத்தேற்றியது. யாழ்க்கருத்துக்களகில்லாடிகளின் பரீட்சையிலும் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துக்கள். தமிழும் கவிதையும் சிறப்பாக அமையப்பெற்ற பேறுக்குரியவன் தொடர்ந்தும் எழுத்துத்துறையில் முத்திரை பதித்து யாழுடனான நட்புறவுடன் தொடர்திருக்க வாழ்த்துக்கள்.

 

மீண்டும் வரவிற்கும் எனக்குத் தந்த பரிசுப்பொருளுக்கும் நன்றி. இப்போது அந்தப்பரிசுப்பொருள் என்னுடைய கணனி மேசையில் அழகாக அமர்ந்திருக்கிறது.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் விஷ்வாவுடனான எனது சந்திப்பை இன்னொரு பொழுதில் இங்கு பதிவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சீண்டலுடனான நகைச்சுவை நடை அருமை.

 

யாழ்களம் பல விற்பன்னர்களை உருவாக, களம் அமைத்துக் கொடுக்கிறது என்பதற்கு விஷ்வாவின் வர்ணனை ஒரு சான்று.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.