Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வந்தது யாழ்தேவி !

Featured Replies

jaffna%20train%208745449.jpg

24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அறிவிக்கப்பட்டபடி பரீட்சார்த்தமாக இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயில் வெள்ளளோட்டம் இடம்பெற்றது. கடந்த 15ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு ரயில்சேவை இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஏற்கனவே அறிவித்திருந்தார்.
 
யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையாததால் அறிவிக்கப்பட்டபடி ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவுற்று பரீட்சார்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்தமாத முற்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, யாழ்தேவி இந்த வருட இறுதியில் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று இடம்பெற்ற யாழ்தேவி ரயில் வெள்ளோட்டத்தை ரயில்பாதை நெடுக்கும் மக்கள் நின்று பார்வையிட்டதையும் காணமுடிந்தது. அத்துடன் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தில் 500க்கும் அதிகமான பொதுமக்கள் யாழ்தேவியை வரவேற்க மணிக்கணக்காகக் காத்து நின்றனர்.
 
jaffna%20train%208745452.jpg
 
jaffna%20train%208745450.jpg
 
jaffna%20train%208745448.jpg
 
jaffna%20train%208745446.jpg
 
jaffna%20train%208745445.jpg
 
jaffna%20train%208745451.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம்!. :icon_mrgreen:

மழை பெய்தால் ஒருத்தரும் இரயில் நிலைய நடை மேடையில் நிற்க முடியாது போல தெரியுது. மேற்கூரை இன்னமும் சற்றே தாழப் படர்ந்து பெட்டிகளுக்கு அப்பாலும் இருந்தால் நன்றல்லவா? :o

இலங்கையில் எல்லா இரயில் நிலையங்களும் இப்படித்தான் உள்ளது. பெட்டிகளுக்கான வரிசை எண்களின் அறிவிப்பு பலகை மேற்கூரையிலிருந்து தொங்கவிடபட்டால் பயணிகளுக்கு சுலபமாக இருக்குமே..! :)

  • தொடங்கியவர்

train%20jaffna.jpg
-யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ் தேவியின் உத்தியோகபூர்வ பரீட்சார்த்த புகையிரத சேவை திங்கட்கிழமை(22) இடம்பெறவுள்ள நிலையில் யாழ் தேவி புகையிரதம் வெள்ளோட்டமாக ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் யாழ்ப்பாணத்துக்குவருகை தந்தது.
jt2.jpg

jt3.jpg

jt4.jpg

jt5.jpg

jt7.jpg

http://tamil.dailymirror.lk/--main/127954-2014-09-21-11-42-45.html

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் நவீன மயமாகிக்கிட்டு இருக்குது. இது இன்னமும் அரசியல் மயமாகிக்கிட்டே போகுது..????! :icon_idea::o

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்,

ஒண்டு சொல்லுறன் கோவியாதேயுங்கோ.

முதல்ல உங்க ஊரில இருக்கும் மக்களுக்கு வீட்டுக்கு ஒரு மலசல கூடம் கட்டிக்கொடுங்கோ அப்புறம் எங்களுக்கு ரெயில்வே ஸ்டேசனுக்கு கூரை எப்படி போடுவது என்று வகுப்பெடுங்கோ :)

இந்த கூரையை வேய்ந்ததே உங்கள் பாரத மணித்திரு நாட்டினர் தானுங்கோ :)

நெடுக்குவுக்கு வந்தால் புல்லட் ட்ரைன் வரணும்..இல்லை என்றால் ஒன்றுமே வரக்கூடாது.. :)

தலைவருக்கு ஏற்ற தொண்டன்....

ராசவன்னியன்: கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை...இது ஒரு டிரையல் ரன்...ஆகவே கட்டுமான பணி முடிந்தவுடன் மழை ஈரத்தில் இந்த இடம் அழகாக இருக்கும்.... மழையில் நனைவதும் ஆனந்தமே...இந்தியா மாதிரி ரயிலை தவறவிட்டுவிட்டு யாரும் இரயில் நிலையத்தில் இருக்கபோவதில்லை...ஆகவே செலவை குறைக்க மிக தேவையான குறைந்தளவான வேலைகளே நடக்குது ....மற்றது பழைய நிலையத்தை தானே மீள் நிர்மாநிகிரார்கள்...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

நான்தான் -சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாப் போச்சு :)

நான்தான் -சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாப் போச்சு :)

பின்..வேறு என்ன சொல்லுவது...அங்கு மக்கள் படும் பாடு..மக்களின் ஆர்வம் ரயில் நிலையத்துக்கு வந்த மக்களை பார்க்கவே தெரிகிறது...நல்லூர்..கோயில் திருவிழாக்களை பார்க்க மக்களின் நாளாந்த வாழ்வும் தெரிகிறது...அனால் அது எல்லாம் ஒரு சிலருக்கு மட்டும் "மாயை" மாதிரி இருக்கிறது :)

முதல்ல உங்க ஊரில இருக்கும் மக்களுக்கு வீட்டுக்கு ஒரு மலசல கூடம் கட்டிக்கொடுங்கோ 

கோசான்,
 
வன்னியிலும், கிழக்குமாகாணத்திலும், யாழ்ப்பாணத்திலும் கணவனை இழந்த பல பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள். கொழும்பு விபச்சார விடுதிகளிலும் வேலை செய்கிறார்கள்.
 
மிஞ்சியவன் கொடுப்பதற்கும் பெயர் தானம் அல்ல.
 
இல்லாதவன் கொடுப்பதும் தானம் அல்ல. அதற்கும் மேல்.

நெடுக்குவுக்கு வந்தால் புல்லட் ட்ரைன் வரணும்..இல்லை என்றால் ஒன்றுமே வரக்கூடாது.. :)

தலைவருக்கு ஏற்ற தொண்டன்....

ராசவன்னியன்: கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை...இது ஒரு டிரையல் ரன்...ஆகவே கட்டுமான பணி முடிந்தவுடன் மழை ஈரத்தில் இந்த இடம் அழகாக இருக்கும்.... மழையில் நனைவதும் ஆனந்தமே...இந்தியா மாதிரி ரயிலை தவறவிட்டுவிட்டு யாரும் இரயில் நிலையத்தில் இருக்கபோவதில்லை...ஆகவே செலவை குறைக்க மிக தேவையான குறைந்தளவான வேலைகளே நடக்குது ....மற்றது பழைய நிலையத்தை தானே மீள் நிர்மாநிகிரார்கள்...

வன்னியன் கூறியது நிர்மாணிக்கப்பட்ட கூரையைப் பற்றியது. மற்றும்படி இந்தியாவுடனான ஒப்பீடு அல்ல!

பெரும்பாலும் ஜேர்மன் புகையிரத நிலய கூரைகள் இவ்வாறுதான் உள்ளன. இது வருடத்தில் பெரும்பகுதி பனி பொழியும் நாட்டிற்கு பொருந்தும்.

ஆனால் பெரும்பகுதி மழை பொழியும் நாட்டிற்கு இவ்வாறான கூரையால் பயன் குறைவு, அழகைத் தவிர!!

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் உண்மைதான் அவர்களுக்கு நாம் எல்லோரும் எம்மாலானதை செய்யவேண்டும். செய்தாலும் சொல்லிக்காட்டாமல் இருக்கவேண்டும்.

இந்தியா கொடுத்திருக்கும் தானம் என்று இதை நீங்கள் நினைத்தால் 48 இல் இருந்து இந்தியாவின் இலங்கை நிலைப்பாட்டை கிஞ்சித்தும் அறியாதவர் என்றே பொருள்.

இது தானமில்லை, பஸ்ஸில் துண்டு போட்டு சீட்டு பிடிக்கும் இந்திய ராஜதந்திரம். சீனா துண்டை போடமுன் தாங்கள் போட்டிருக்கீனம். அவ்வளவே.

எத்தனையோ சனம், சோத்துக்கு சிங்கி அடிக்க - செவ்வாய்க்கு ராக்கெட் விடீனம் பாருங்கோ - அப்படி ஒரு வெத்து வேட்டுத்தனம்.

இதற்கு நாம் ஒன்றும் நன்றி பாராட்ட தேவையில்லை. எமக்கு இந்தியா தந்த அழிவுகளின் முன்னால் இந்த ரயில்பாதை ஒரு ஜுஜுபி.

ஆனால் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் அது மட்டும் போதும்.

இலங்கை தமிழன் இப்போ ரொம்பச் சுட்டி. யாருக்கும் அவன் நன்றியாய் இருக்கப் போவதில்லை. யாருக்கும் அடிமைச்ச்சேவகம் செய்யவும் போவதில்லை.

தரும் உதவிகளை எல்லாம் பெறுவோம். யாரையும் பககைக்கோம். காலநிலைக்கேற்ப காய்நகர்த்தி (வேண்டுமானால் இந்தியா சீனாவை சிண்டு முடிந்தும்) எம் உரிமைகளை அடையப் பார்ப்போம். இது தான் இப்போ அங்கே மக்களின் ராஜதந்திரம், வாழ்க்கை அறம்.

புலம் பெயர்ந்த உதவியாளர்களுக்கும் இது பொருந்தும்.

இது நாம் தக்கண பிழைக்கும் காலம்.

அதுசரி யாழ்ப்பாணம் என்ன சிரபுஞ்சியா அல்லது வட்டவளையா? ஏதோ ரெண்டு மாதம் மாரி வரும், மீதம் பத்துமாதமும் வெயில் காச்சோ காச்செண்டு காச்சும். தவிர உள்ள கொங்ரீட் கட்டிடம் எல்லாம் இருக்கு மழை வந்தா ஒதுங்க.

ரெயின் கூட காலயில் ஒரு யாழ்தேவி, இரவில் ஒரு மெயில் மிஞ்சிப்போனால் மதியம் ஒரு இண்ட்டர்சிட்டி அவ்வளவே. அதுக்கு இதுவே ஓவர் :)

Edited by goshan_che

உங்கள் இந்த கருத்துக்கு நூறு பச்சை போடலாம். ஆனால் போட பச்சை கைவசம் இல்லை. மனதால் ஆயிரம் பச்சை போடுகிறேன். நன்றி

ராசவன்னியன்,

ஒண்டு சொல்லுறன் கோவியாதேயுங்கோ.

முதல்ல உங்க ஊரில இருக்கும் மக்களுக்கு வீட்டுக்கு ஒரு மலசல கூடம் கட்டிக்கொடுங்கோ அப்புறம் எங்களுக்கு ரெயில்வே ஸ்டேசனுக்கு கூரை எப்படி போடுவது என்று வகுப்பெடுங்கோ :)

இந்த கூரையை வேய்ந்ததே உங்கள் பாரத மணித்திரு நாட்டினர் தானுங்கோ :)

கோசான்! தமிழக உறவு ராசவன்னியன் இப்படி இருந்தால் நல்லாக இருக்கும் என்று உரிமையுடன் நல்ல நோக்குடன் நேர்மறையாகவே தனது கருத்தை தெரிவித்தார். பாரத நாடு போல் ராஜதந்திரமாக உதவுவதுபோல் நடிக்கவில்லை. நீங்கள் தவறாக அவரை புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவி யாழ்ப்பாணம் வருவது நல்ல விடயம் தானே?? மக்களின் அரசியல் பிரச்சனைகளைப்போல அன்றாடப் பிரச்சினைகளும் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்பதுதானே எமது அவா?? அப்படியிருக்க யாழ்தேவி யாழ்ப்பாணம் வருவது எதிர்க்கப்படக் கூடியதொன்றல்லவே?? ஆனால், இதைப்போலவே எமது அரசியல் பிரச்சினைக்கும், இழந்துபோன அரசியல் உரிமைகளுக்கும், கொல்லப்பட்ட மக்களுக்கான நீதிக்கும் யாரும் ஆவன செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதால் மட்டுமே இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதென்பதை அரசு உலகிற்குக் காட்ட  முனைகிறதென்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிகிறது. ஆகவே அன்றாடப் பிரச்சினைகளை வரவேற்கும் அதேவேளை அரசியல் பிரச்சினைக்கும் தீர்வை கேட்பது தொடர்ந்தும் செய்யப்பட வேண்டும்.

இறுதியாக ராஜவன்னியனிடம் நக்கல் வேண்டாம். இன்றுவரை அகதிகள் என்று தமிழகம் செல்வோரை அரவணைத்துக் காப்பது அவரைப் போன்ற தமிழர்கள்தான். அவர்கள் செய்த உதவிக்கு நன்றியாக இருக்கவேண்டும், அதைவிடுத்து உங்களுக்கு கக்கூசுக் கட்டிக்கொள்ளுங்கள், பிறகு எங்கள் கூரையைப் பற்றிப் பேசலாம் என்கிற மேதாவித்தனம் நன்றாகப் படவில்லை. எங்கள் மேல் அக்கறையில்லையென்றால், எதற்காக அவர் இங்கே கருத்தெழுதிக் கொண்டிருக்கிறார் என்கிற யோசனை எமக்குத் தேவை. உங்கள் வழியில் பேசுவதென்றால், இன்னும் எதிரிகளை உருவாக்க வேண்டாமே !

ஈசன் உண்மைதான் அவர்களுக்கு நாம் எல்லோரும் எம்மாலானதை செய்யவேண்டும். செய்தாலும் சொல்லிக்காட்டாமல் இருக்கவேண்டும்.

இந்தியா கொடுத்திருக்கும் தானம் என்று இதை நீங்கள் நினைத்தால் 48 இல் இருந்து இந்தியாவின் இலங்கை நிலைப்பாட்டை கிஞ்சித்தும் அறியாதவர் என்றே பொருள்.
இது தானமில்லை, பஸ்ஸில் துண்டு போட்டு சீட்டு பிடிக்கும் இந்திய ராஜதந்திரம். சீனா துண்டை போடமுன் தாங்கள் போட்டிருக்கீனம். அவ்வளவே.

எத்தனையோ சனம், சோத்துக்கு சிங்கி அடிக்க - செவ்வாய்க்கு ராக்கெட் விடீனம் பாருங்கோ - அப்படி ஒரு வெத்து வேட்டுத்தனம்.

இதற்கு நாம் ஒன்றும் நன்றி பாராட்ட தேவையில்லை. எமக்கு இந்தியா தந்த அழிவுகளின் முன்னால் இந்த ரயில்பாதை ஒரு ஜுஜுபி.

ஆனால் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் அது மட்டும் போதும்.

இலங்கை தமிழன் இப்போ ரொம்பச் சுட்டி. யாருக்கும் அவன் நன்றியாய் இருக்கப் போவதில்லை. யாருக்கும் அடிமைச்ச்சேவகம் செய்யவும் போவதில்லை.

தரும் உதவிகளை எல்லாம் பெறுவோம். யாரையும் பககைக்கோம். காலநிலைக்கேற்ப காய்நகர்த்தி (வேண்டுமானால் இந்தியா சீனாவை சிண்டு முடிந்தும்) எம் உரிமைகளை அடையப் பார்ப்போம். இது தான் இப்போ அங்கே மக்களின் ராஜதந்திரம், வாழ்க்கை அறம்.

புலம் பெயர்ந்த உதவியாளர்களுக்கும் இது பொருந்தும்.

இது நாம் தக்கண பிழைக்கும் காலம்.

அதுசரி யாழ்ப்பாணம் என்ன சிரபுஞ்சியா அல்லது வட்டவளையா? ஏதோ ரெண்டு மாதம் மாரி வரும், மீதம் பத்துமாதமும் வெயில் காச்சோ காச்செண்டு காச்சும். தவிர உள்ள கொங்ரீட் கட்டிடம் எல்லாம் இருக்கு மழை வந்தா ஒதுங்க.

ரெயின் கூட காலயில் ஒரு யாழ்தேவி, இரவில் ஒரு மெயில் மிஞ்சிப்போனால் மதியம் ஒரு இண்ட்டர்சிட்டி அவ்வளவே. அதுக்கு இதுவே ஓவர் :)

அப்படியும் எழுதுகிறீர்கள், இப்படியும் எழுதுகிறீர்கள், உங்களைப் புரிந்துகொள்ளவே கஷ்ட்டமாக இருக்கிறதைய்யா ! ஆனால் கருத்துடன் உடன்படாமல் இருக்கமுடியவில்லை, அதனால் ஒரு பச்சை !
 
பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அடுத்த முறை யாழ்தேவியில தான் யாழ் பயணம். 
சிலருக்கு ரயில் வந்து மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பினால் சந்தோசம்.
சிலருக்கு சிலிப்பர் கட்டையை புடுங்கி பங்கர் அடிச்சால் சந்தோசம். 

ஈசன் உண்மைதான் அவர்களுக்கு நாம் எல்லோரும் எம்மாலானதை செய்யவேண்டும். செய்தாலும் சொல்லிக்காட்டாமல் இருக்கவேண்டும்.

இந்தியா கொடுத்திருக்கும் தானம் என்று இதை நீங்கள் நினைத்தால் 48 இல் இருந்து இந்தியாவின் இலங்கை நிலைப்பாட்டை கிஞ்சித்தும் அறியாதவர் என்றே பொருள்.

இது தானமில்லை, பஸ்ஸில் துண்டு போட்டு சீட்டு பிடிக்கும் இந்திய ராஜதந்திரம். சீனா துண்டை போடமுன் தாங்கள் போட்டிருக்கீனம். அவ்வளவே.

எத்தனையோ சனம், சோத்துக்கு சிங்கி அடிக்க - செவ்வாய்க்கு ராக்கெட் விடீனம் பாருங்கோ - அப்படி ஒரு வெத்து வேட்டுத்தனம்.

இதற்கு நாம் ஒன்றும் நன்றி பாராட்ட தேவையில்லை. எமக்கு இந்தியா தந்த அழிவுகளின் முன்னால் இந்த ரயில்பாதை ஒரு ஜுஜுபி.

ஆனால் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் அது மட்டும் போதும்.

இலங்கை தமிழன் இப்போ ரொம்பச் சுட்டி. யாருக்கும் அவன் நன்றியாய் இருக்கப் போவதில்லை. யாருக்கும் அடிமைச்ச்சேவகம் செய்யவும் போவதில்லை.

தரும் உதவிகளை எல்லாம் பெறுவோம். யாரையும் பககைக்கோம். காலநிலைக்கேற்ப காய்நகர்த்தி (வேண்டுமானால் இந்தியா சீனாவை சிண்டு முடிந்தும்) எம் உரிமைகளை அடையப் பார்ப்போம். இது தான் இப்போ அங்கே மக்களின் ராஜதந்திரம், வாழ்க்கை அறம்.

புலம் பெயர்ந்த உதவியாளர்களுக்கும் இது பொருந்தும்.

இது நாம் தக்கண பிழைக்கும் காலம்.

அதுசரி யாழ்ப்பாணம் என்ன சிரபுஞ்சியா அல்லது வட்டவளையா? ஏதோ ரெண்டு மாதம் மாரி வரும், மீதம் பத்துமாதமும் வெயில் காச்சோ காச்செண்டு காச்சும். தவிர உள்ள கொங்ரீட் கட்டிடம் எல்லாம் இருக்கு மழை வந்தா ஒதுங்க.

ரெயின் கூட காலயில் ஒரு யாழ்தேவி, இரவில் ஒரு மெயில் மிஞ்சிப்போனால் மதியம் ஒரு இண்ட்டர்சிட்டி அவ்வளவே. அதுக்கு இதுவே ஓவர் :)

இந்த உபகண்டம் மட்டுமல்ல அமெரிக்க, ரஷ்ஷிய, சீன, முஸ்லீம் உலக நிலவரங்களையும் அரசியல் நிலமைகளையும் தொடர்ந்து அவதானிப்பவன் என்ற ரீதியில் என் சிற்றறிவிற்கு புரிந்தது, ஈழம் என்ற தனி நாட்டை உருவாக்கக் கூடிய சர்வதேச அரசியல் சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்பதே.
 
இந்நிலையில் அடுத்த தெரிவாக எமக்குரிய ஆகக் கூடிய அதிகாரத்தையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். உலகில் எந்த நாடும் தமிழருக்கு அதிகாரத்தைக் கொடுங்கள் என்று கிடையாய் கிடக்கவில்லை. மோடி பல தடவை தமிழருக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரின் இந்த நிலை இந்திய இலங்கை உறவுக்கு நல்ல தாக இல்லை. அவர் தமிழர் பற்றிக் கதைக்காமல் சீனா இலங்கைக்கு கொடுக்கும் நிதியில் ஒரு பகுதியைக் கொடுத்தே இலங்கை இந்திய உறவை பலப்படுத்த முடியும். 
 
முழு இலங்கையையும் சிங்கள மயமாக்குவதற்கு எதிரிக்கு வேண்டியது எமக்கு ஒரு அரசியல் அங்கீகாரத்தை இல்லாமற் செய்வதே. இதற்கு, எமக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பு  ஒரு பெரும் இடைஞ்சலாக இருக்கும். பல வழிகளில் அவர்கள் இதை உடைக்க‌ முயன்றும், தமிழ் நாடு இருக்கும் மட்டும் இது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
 
பல நாடுகளின் நட்பு நமக்கு முக்கியம். இந்தியாவின் நட்பு மிக முக்கியம். இந்தியா எமக்கு அழிவுகளைக் கொடுத்தது என்பது மிகைப்படுத்தப் பட்டது. 
 
ஆயுதப் போராட்டம் ஓரளவிற்கு மேல் போகும் போது அங்கீகரிக்கப்பட்ட நாடான இலங்கை எவரிடம் இருந்தும் உதவிகளைப் பெற்று அதனை ஒடுக்கலாம். எப்படியும் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டே தீரும். ஆனால் அதன் விலை, ஏனைய நாடுகள் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் நிலையை ஏற்படுத்தும். இந்த நிலமையையே நாம் இப்போது பார்க்கிறோம். ( This is exactly what we are seeing now.) இதில் இந்தியாவின் பிழை என்ன இருக்கிறது ?
 
இந்திய சீன யுத்தம் ஒன்று வரப் போவதில்லை. முறுகல் நிலைகள் வரலாம். 
இது தனி நாடு பிரிவதற்கு உதவப் போவதில்லை. உண்மையில் இந்த முறுகல் நிலமை தான் ஆயுதப் போராட்டத்தையே அழித்தது.
 
அதே நேரம்  இந்தியாவின் ஈழத்திற்கு எதிரான "கொள்கை" சில சூழ்நிலைகளில் மாற்றப்படலாம். உதாரணமாக வரதராசப் பெருமாளின் சுதந்திரப் பிரகடனம். இதற்கு இந்தியாவை நாம் பகைக்கும் விதமான கொள்கைகள் எந்த விதத்திலும் உதவப் போவதில்லை.
 
.

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

அது நண்பர் ராஜவன்னியனை சீண்டுமாப்போல் எழுதிய கருத்தில்லை. தமிழக மக்கள் எமக்கு வழங்கிய உணர்வுசார் உதவிகளையும் நான் மறுப்பதற்கில்லை.

ஆனால் பலசமயங்களில் ஒரு பெரியண்ணன் தனமாக, ஆலோசனை சொல்லும் தொனியில் ராசவன்னியன் அவர்கள் ஒண்டுபடுங்கப்பா, பழசை மறவுங்கப்பா, ஒழுங்கா கூரை வேயுங்கப்பா எண்டு சவுண்டு விடுவது எரிச்சலை ஏற்படுத்துவது வாஸ்தவம்தான்.

ஆனால் இன்னொரு வகையில் பார்த்தால் - நாம்தான் இப்போ இளகிய இரும்பாச்ச்சே - எல்லோரும் தூக்கி தூக்கி அடிக்கத்தான் செய்வர். நீங்களும் நானும் சொன்னபடி - நண்பர்களையும் எதிரிகளாக்காமல் சும்மா இருப்பதே உத்தமம் என்றும் படுகிறது.

நான் அப்படி இப்படி கதைக்கவில்லை. என்னை பொறுத்த மட்டில் நான் ஒரு

1) இன அபிமானி - இலங்கையில் தமிழர்க்கு தீங்கு நடக்கிறது என்று நம்புகிறேன். எம் அடையாளம் கருவறுக்கப்படுகிறது என்பதை உணர்கிறேன்.

2) மனிதாபிமானி - ஒரு சிங்களவராக பிறந்த்ஹிருந்தாலும் தமிழர் தரப்பு நியாயத்தை ஏற்றுக்கொண்டிருப்பேன்.

3) தமிழ் ஈழம் - நடைமுறைசாத்தியம் இல்லாதது மட்டுமில்லாமல் தமிழர் நலனை மேலும் ஒடுக்க இனவாதிகளுக்கு வாய்த நல்ல ஆயுதம், ஒரு counter productive demand என்று நம்புகிறேன்.

4) புலிநீக்கம் - 2009 க்கு பின் மிக அவசியமானது - சர்வதேசத்தை கொஞ்சம் ஏனும் திருப்ப்தி படுத்த -விரும்பியோ விரும்பாமலோ இதைச்செய்தே ஆக வேண்டும் என நினைக்கிறேன்.

5) முடிந்தளவவு ராஜதந்த்ஹிர அரசியல் செய்து 13,13பிளஸ் சமஸ்டி என்று போவதே நம்முன் உள்ள ஒரே தெரிவு என்று நம்புகிறேன்.

6) கூட்டமைப்பு மனோ, விக்கிரமபாகுவை இணைத்து தெற்க்கிலும் ஒரு பிடியை ஏற்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியிலும் எம் நியாயத்தை அல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

7) இந்தியா - வை தாண்டி எந்த கொம்பனும் நமக்கு உதவ போவதில்லை எனவே அவர்களை திருப்திபடுத்தும் வகையில் நடப்பதே உசிதம் எண்டு எண்ணுகிறேன்.

8) சிவாஜிலிங்கம் போன்றோரின் கோமாளித்தனத்தை வெறுக்கிறேன். சுரேசின் உண்மைதன்மை மீது பாரிய சந்தேகம் உடையேன். மாவை போன்றோரின் உசுப்பேத்தல்கள் வெறும் அரசியல் ஜம்பம் என்று உணர்கிறேன். உள்ளவர்களில் சம்பந்தர், விக்கி, சுமந்திரன், அனந்தி ஓரளவுக்கு செயல்திறனுடையவர்கள் என எண்ணுகிறேன்.

9) பணத்தை வாரிக் கொட்டிவிட்டோம் என்பதற்க்காக நிலத்து மக்களின் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளாக தம்மை வரித்துகொள்ளும் உணர்சி மிலி புலம்பெயர்ந்தோரை கண்டு சினக்கிறேன். புலியின் பணத்தை கொள்ளை அடித்து அதில் பங்கு கொடுக்க வருமோ எனும் பயத்தில் மேலும் வன்முறையை தூண்டும் புலத்து பிணயாவாரிகளை அடியோடு வெறுக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

...ஆனால் பலசமயங்களில் ஒரு பெரியண்ணன் தனமாக, ஆலோசனை சொல்லும் தொனியில் ராசவன்னியன் அவர்கள் ஒண்டுபடுங்கப்பா, பழசை மறவுங்கப்பா, ஒழுங்கா கூரை வேயுங்கப்பா எண்டு சவுண்டு விடுவது எரிச்சலை ஏற்படுத்துவது வாஸ்தவம்தான்...

அது ஆலோசனை அல்ல. ஆதங்கமே..

அடித்துகொண்டு எப்படியும் போங்கள்..

உங்களின் மனநிலையை புரிந்துகொள்ள வைத்தமைக்கு மிக்க நன்றி..

வணக்கம்.

ராசவன்னியன்,

ஒண்டு சொல்லுறன் கோவியாதேயுங்கோ.

முதல்ல உங்க ஊரில இருக்கும் மக்களுக்கு வீட்டுக்கு ஒரு மலசல கூடம் கட்டிக்கொடுங்கோ அப்புறம் எங்களுக்கு ரெயில்வே ஸ்டேசனுக்கு கூரை எப்படி போடுவது என்று வகுப்பெடுங்கோ :)

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அது ஆலோசனை அல்ல. ஆதங்கமே..

அடித்துகொண்டு எப்படியும் போங்கள்..

உங்களின் மனநிலையை புரிந்துகொள்ள வைத்தமைக்கு மிக்க நன்றி..

வணக்கம்.

நன்றி

இந்தியாவுக்கும், தமிழகத்துக்குமிடையே வேறுபாட்டை பார்க்க விரும்பாத பலர் எம்மிடையே இன்னுமிருக்கிறோம். என்ன செய்வது ?

  • கருத்துக்கள உறவுகள்

இது தலைப்புக்குப் பொருத்தமில்லாவிட்டாலும் எழுதுகின்றேன். தமிழக மக்கள் மீது எனக்குள் கோபம் இருந்தாலும் தனி ஒரு மனிதராக வன்னியன் சார் மீது மதிப்பு வைத்திருக்கின்றேன். எம் மக்கள் மீதும் எமது விடுதலையின் மீதும் அவர் கொண்டுள்ள அக்கறை அப்பளுக்கற்றது. சில சொல்லாடல்களும் கருத்துக்களும் தவறாக விளங்கிக்கொள்ளப்படலாம். ஆனால் நம் விடயத்தில் அவர் நேர்மையானவர் என்பதே என் துணிபு!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரயில் பாதை அமைத்ததில்..... ராஜவன்னியனின் வரிப்பணமும் அடங்கும்.
ஆதலால் அவருக்கு, அதனைப் பற்றிய குறை நிறைகளை சொல்லக்கூடிய முழு உரிமையும் உள்ளது.
அதனை...கோசான் போன்ற, கணணி தட்டச்சு வீரர்கள் கேவலப் படுத்தாமல் இருப்பதே... நல்லது.

இந்தியாவுக்கும், தமிழகத்துக்குமிடையே வேறுபாட்டை பார்க்க விரும்பாத பலர் எம்மிடையே இன்னுமிருக்கிறோம். என்ன செய்வது ?

இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு விளங்கி கொண்டதாலேயே ராஜவன்னியன் அவர்கள் மீது எரிந்து விழுகிறார்கள். இதே ராஜவன்னியன் சக தமிழக உறவு என்ற ரீதியில் அல்லாது இந்திய அரசின் தூதுவராக அல்லது உயர் அதிகாரியாக இதே கருத்தை சொல்லியிருந்தால் பணிவுடன் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்! தமிழக உறவு ராசவன்னியன் இப்படி இருந்தால் நல்லாக இருக்கும் என்று உரிமையுடன் நல்ல நோக்குடன் நேர்மறையாகவே தனது கருத்தை தெரிவித்தார். பாரத நாடு போல் ராஜதந்திரமாக உதவுவதுபோல் நடிக்கவில்லை. நீங்கள் தவறாக அவரை புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இது தான் எனது கருத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் அண்ணா.. யாழ் தேவி வருவதற்கு இங்கு யார் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்..????! எதிர்க்கப்படுவது போல ஒரு தோற்றத்தை சில பேர் பேண விரும்பி.. அதனை தங்களின் விருப்ப சிந்தனைகளோடு.. எதிர்ப்பது போல (அதாவது எதிர்ப்பை தங்களின் சாதுரியமான சிந்தனையால் சமாளிக்கினமாம்... ) தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள். அவ்வளவே..!!! அது அவர்களின் சிறுபிள்ளைத்தனமான.. கருத்தாடல் பாணி. அது பற்றி அதிகம் அலட்டிக்கத் தேவையில்லை. :lol:

ஒரு சாதாரண போக்குவரத்து ஊடகமான.. யாழ் தேவி வருகை கூட அரசியல் மயமாவதும்.. நவீனப்படுத்தப்படக் கூடிய சூழல்களும்.. சந்தர்ப்பங்களும் உள்ள நிலையில்.. அதனைச் செய்யாத திட்டமிடல்களும்.. நடவடிக்கைகளும்.. அவை அரசியல் குறுகிய நோக்கங்கள்.. மற்றும் நிதி மோசடிகளை நோக்கிப் போய் கொண்டிருப்பதும் தான்.. பேசப்படுகின்றன. இவை போக்குவரத்து ஊடகம் ஒன்றுக்கான வருகையை எதிர்ப்பது என்றாகாது. அதன் பின்னணியில் நிகழும்.. அரசியல்.. பிரழ்வுகள்.. சார்ந்தது..! மக்களை தெளிவூட்ட சொல்லப்படுவது.

(அண்மையில் விக்கி ஐயா சொன்ன விடயம்.. அபிவிருத்தி என்ற போர்வையில்.. வெளிநாட்டு உதவிகளை நிதிகளை தாங்களே கையகப்படுத்தி.. தங்களின் அரசியல்.. மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு (அதாவது சிங்கள அரசு) பாவிக்கிறது. அந்த நிதியை நேரடியாக வெளிநாடுகள் மாகாண அரசிடம் கையளித்தால்.. நாம் அந்த நிதியை இன்னும் சிறப்பாக எமது மக்களுக்கு என்று தரப்படுவதை.. தரமாகப் பாவிப்போம் என்று. இதனை தான் இங்கும் வலியுறுத்துகிறார்கள். இதனை தான் புலிகளும் அன்று வலியுறுத்தினார்கள்.)

அதனை புரிந்து கொள்ளக் கூடிய அளவில் சில கருத்தாளர்கள் இல்லை..!! அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களின் வரவின் நோக்கம் வேறு. அது பற்றி அதிகம் அலட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Capture.jpg

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நன்றி SLR,  இந்தியா மற்றும் IRCON. பல வருடங்களின் பின்னர் இந்தியா எமக்கு செய்த உருப்படியான ஒரு விடயம். இந்த போக்குவரத்து வசதிகளைப் பாவித்து சுற்றுலாத்துறை, வர்த்தக, உற்பத்தி, ஏற்றுமதி நடவடிக்கைளை கட்டியெழுப்ப வேண்டும்.  
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.