Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய தமிழ் பாடகி ஜெசிக்கா எஸ்.பி பாலசுப்பிரமணியத்துடன் நிற்கும் காட்சி.

Featured Replies

  • Replies 159
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜெஸிக்கா தன் பரிசை இந்தியாவிலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அனாதைப் பிள்ளைகளுக்கும் பாதி பாதி கொடுக்கிரா, சூப்பர்ப்!

அப்புறம்

உங்க மலையாளிகள் கொடுப்பர்களா....?? :(  :(

நம்ம இரத்தம் ராசா...

ஸ்பூர்த்தி முதலாம் இடம்,

ஜெசிக்கா இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

ஜெசிக்காவிற்கு நீண்ட பயணம் மைல்கள் தாண்டி. இரண்டாம் இடம் பெரிய விடயம். படிப்பிலும் கவனம் செலுத்தி நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்!

சரியான கருத்தும்

ஊக்குவிப்பும்......

  • கருத்துக்கள உறவுகள்

கொடுப்பதர்க்கெல்லாம் ஜெசிக்கா குடும்பம்போல பெரிய மனசுவேண்டும். ஜெசிக்காவுக்கு கிடைத்த பரிசுத்தொகை முழுவதையும் ஆதரவு அற்றோருக்கு குடுக்கப்போவதாக ஜெசிக்காவின் அப்பா கூறி  ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்த்துவிட்டார்கள் ஜெசிக்கா குடும்பத்தினர்.

அந்தவகையில் நானும் ஒரு ஈழ தமிழன் என்ற வகையில் பெருமை அடைகின்றேன்.  :)    

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா..!

Hi Friends, Thank you so much for your love and support. Thanks for making my super singer journey so memorable. I am glad that i made everyone proud. Love you all. Thanks again. smile உணர்ச்சிலை smile உணர்ச்சிலை smile உணர்ச்சிலை

10177358_860011410709002_118357154778681

கொடுப்பதர்க்கெல்லாம் ஜெசிக்கா குடும்பம்போல பெரிய மனசுவேண்டும். ஜெசிக்காவுக்கு கிடைத்த பரிசுத்தொகை முழுவதையும் ஆதரவு அற்றோருக்கு குடுக்கப்போவதாக ஜெசிக்காவின் அப்பா கூறி  ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்த்துவிட்டார்கள் ஜெசிக்கா குடும்பத்தினர்.

அந்தவகையில் நானும் ஒரு ஈழ தமிழன் என்ற வகையில் பெருமை அடைகின்றேன்.  :)    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thanush இன் கண்களையும் கலங்கடித்து

இந்த மக்கள் வெள்ளத்துக்கு மட்டுமல்ல

உலகெல்லாம் எமது வேதனையை விதைத்த யெசிக்காக்கு தமிழினம் நன்றி சொல்லணும்

Thanush சொன்னது போல் அவருக்கே தெரியாது

எவ்வளவு பெரிய விடயத்தை அவர் செய்து முடித்திருக்கிறார் என்பது..

முக்கிய காலகட்டத்தில் பிரான்சிலிருந்து

பிரேம் கோபால்

பிரேமினி  இருவரும் எம்மை அடையாளம் காட்டி அந்தவேளை தமது கடமையைச்செய்தார்கள்

இன்று யெசிக்கா

எமக்குக்கிடைக்கும் மேடைகளில் எம்மால் 

எம்மினத்தின் அழிவுகளை மறக்காமல் பதிவிடுவோம் என பதிந்து தனது கடமையைச்செய்துள்ளார்

எந்த துரும்பாயினும் அதை எம்மவர் பயன்படுத்தணும் என்பதே எனது வேண்டுகோள்..

வணக்கம் விசுகர்! எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
யெசிக்காவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்..!!
 
புலம்பெயர்ந்து வந்தவர்கள் பயின்ற பண்பாடுகளில் ஒன்று யெசிக்கா குடும்பத்திலும் தெரிகிறது. தனது மகள் என்றாலும் அவரிடம் கேட்டுச் சம்மதம் பெற்றபின்பே கிடைத்த பரிசுத்தொகையை ஆதரவு அற்றோருக்கு வழங்க  தான் முன்வந்ததாக யெசிக்காவின் அப்பா கூறினார். இந்தச் செயற்பாட்டை ஈழத்தில் அன்றித் தமிழ் நாட்டிலும் காண்பதரிது. இது ஒரு நாகரீகமான பண்பாடு. இதேபோன்ற பண்பாடுகளை தமிழர்கள் எங்கிருந்தாலும் பின்பற்றி வாழ வகைசெய்தல் வேண்டும். 
 
  • கருத்துக்கள உறவுகள்
இசை மேல் உள்ள தீராத காதலால் நான் கேட்கும், பார்க்கும் நிகழ்சிகளில் இதுவும் ஒன்று.
வியாபார நோக்கு, பாரபட்சம் இந்த நகழ்ச்சிக்கு கூட விதி விளக்கு அல்ல. 
ஜெசிக்காவுக்குதான் அதிகபட்சமான வாக்குகள் விழுந்ததாகவும் பின்னர் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூட ஒரு செய்தி அடி படுகின்றது. 
 
என் அனுமானிப்பின் படி அவர் முதல் 3 பேருக்குள் வந்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. 
ஜெசிக்கா தனக்கு தரப்பட்ட பாடலை அல்லது தேர்ந்தெடுத்த பாடலை வெறுமனே பாடி விட்டு போகும் தன்மை கொண்டவரல்ல. அதனை நன்கு புறிந்து, பாடலுக்குரிய (B)பாவங்கள் (எசன்ஸ்) அனைத்தையும் கிரகித்து வெளிப்படுத்தும் ஒரு பாடகி. தவிர இசையில் உண்மையான பற்றுதல் கொண்டவர் என நினைக்கிறன்.
ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தன் பாடல் பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட விதம் ஆச்சரியப் படக்கூடியது. இது நன்கு அவதானித்தால் புறியும்.
 
எது எப்படியோ இந்த வெற்றி மிகவும் சந்தோசம் தருகிறது. இவர் தொடர்ந்தும் படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்தி மேன் மேலும் முன்னெர  வாழ்த்துக்கள்.
 
இவருக்கு கிடைத்த பரிசுதொகை குறைந்த பட்சம் $53,000 கனேடியன் டாலர்ஸ்.
இவ்வளவு பரிசுத் தொகையையும் சமனாக பங்கிட்டு  தமிழகத்திலும், ஈழத்திலும் இருக்கும் பாதிப்படைந்த, மற்றும் நலன் குறைந்த குழந்தைகளுக்கு நன்கொடை செய்துள்ளார்.
இந்த மனது எல்லாருக்கும் வருமா? ஏன் எனேக்கே வருமா தெரியவில்லை? 
 
இங்கு கனாடாவில் இவர்கள் ஒன்றும் கோடீஸ்வரர்கள் அல்ல, சாதாரண தமிழ் குடும்பம். நாங்கள் படும் அணைத்து கஷ்டங்களும், நஷ்டங்களும் இவர்களுக்கு உண்டு. எனவே இது மிக மிக போற்றத்தக்க செயல்.
நாம் அனைவரும் பெருமை கொள்ளகூடிய தருணம். இவரால் நன்மை அடையப்போகும் குழந்தைகளின் ஆசீர்வாதம் இவருக்கும் இவரின் குடும்பத்தாருக்கு என்றும் கிடைக்கும்.
 
சகட்டு மேனிக்கு இந்த திரியிலும் (ஜெசிக்கா சூப்பர் சிங்கர் தெரிவிலும்) அரசியல் எழுதியவர் இங்கே உண்டு.
உங்களால் யாருக்கு என்ன லாபம்? ஜெசிக்கவால் அவள் குடும்பத்தால் 40 பிள்ளைகள் கொஞ்ச காலத்துக்கு சந்தோசமாக இருப்பார்கள். அதுவே போதும்... மற்றும் படி நீங்கள் அண்ணாந்து பார்த்து அதிக அதிகமாக காரி துப்புங்கள் ...தாங்குவது என்னவோ உங்கள் முகங்கள்  தானே.
 
ஸ்ரீஷா முதல் மூன்றுக்குள் வராதது ஆச்சர்யமே...
 
Jessica we are so proud of you and your family !!! 

நன்றி  ஐயா....

எனது கருத்தும் அதுவே..

ஒரு கிலோ  தங்கத்தின் பெறுமதி எனக்குத்தெரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thanush இன் கண்களையும் கலங்கடித்து

இந்த மக்கள் வெள்ளத்துக்கு மட்டுமல்ல

உலகெல்லாம் எமது வேதனையை விதைத்த யெசிக்காக்கு தமிழினம் நன்றி சொல்லணும்

Thanush சொன்னது போல் அவருக்கே தெரியாது

எவ்வளவு பெரிய விடயத்தை அவர் செய்து முடித்திருக்கிறார் என்பது..

முக்கிய காலகட்டத்தில் பிரான்சிலிருந்து

பிரேம் கோபால்

பிரேமினி  இருவரும் எம்மை அடையாளம் காட்டி அந்தவேளை தமது கடமையைச்செய்தார்கள்

இன்று யெசிக்கா

எமக்குக்கிடைக்கும் மேடைகளில் எம்மால் 

எம்மினத்தின் அழிவுகளை மறக்காமல் பதிவிடுவோம் என பதிந்து தனது கடமையைச்செய்துள்ளார்

எந்த துரும்பாயினும் அதை எம்மவர் பயன்படுத்தணும் என்பதே எனது வேண்டுகோள்..

d5554c26f1d5653cdd16bbd71e18f14a

  • கருத்துக்கள உறவுகள்

நான் சுப்பர் சிங்கரோ பார்ப்பது இல்லை.ஜெசிக்கா,விபூசிகா இருவருவரும் எமது மண்ணிண் பிள்ளைகள்.விபூசிகாவின் துயரத்தில் பங்கு கொள்ளும் அதே வேளை எமது இன்னொரு பிள்ளை தனது திறமையை வெளிக்காட்டுவது பாராட்டத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தனது பரிசுத்தெகையை ஏதிலியாக்கப் பட்டிருக்கும் குழநதைகளுக்குக் கொடுத்திருப்பதே மிகவும் போற்றத்தக்க விடயம். அவரை அப்படி வளர்த்த பெற்றோர்கள் பாரட்டத்தக்கவர்கள்.

அவர் இசையில் மட்டமல்லாது தனது படிப்பிலும் கவனம் செலுத்தி ஈழத்தின் ஒரு சிறந்த பெண்ணாக வர வேண்டும்.

உண்மையாக சுப்பர் சிங்கர்4 நிகழ்வில் என்ன தான் நடந்திருக்கும் மக்களின் கருத்துக்களை டிவிட்டரில் பார்வையிட கீழுள்ள படத்தை அழுத்துங்கள்

http://www.supersinger.in/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=021Xl8_I24M

10363250_10205994751932016_2338287487777

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10363250_10205994751932016_2338287487777

ஐயா,

மேலே தமிழினி ஒரு வீடியோ இணைத்து இருக்கின்றார். அதில் ஜெசிக்காவும், அவரது தந்தையாரும் தெளிவாக தமது எண்ணங்களை கூறி உள்ளார்கள். 

தயவு செய்து தொடர்ந்தும் இந்தப்போட்டி சம்மந்தமான முடிவுகள் பற்றி இங்கு காவித்திரியாதீர்கள். 

ஒரு பதின்நான்கு வயது சிறுமி தனக்கு விருப்பமான துறையில் தனது கவனத்தை செலுத்துகின்றார். அதற்கு அவர் பெற்றோர் பக்கபலமாக இருக்கின்றார்கள். 

நாம் ஜெசிக்காவின் பாடல்களை கேட்பதோடு இந்த விடயத்தை இனி விட்டுவிடலாமே.

தேவையில்லாத விமர்சனங்களுடன் இந்த உரையாடலும் நிர்வாகத்தினால் லாக் செய்யும் நிலைக்கு வருவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் உருவாக்க வேண்டாம்.

இங்குள்ள வித்துவான்கள் தமது தர்க்கவியல் திறமையை காட்டுவதற்கும், உருண்டு பிரள்வதற்கும் கருத்துக்களத்தில் ஏனைய பல பகுதிகள் உள்ளனதானே. இந்த உரையாடலில் அவை இனி வேண்டாம்.

நிம்மதியாய் இரண்டு பாடல்களை மட்டும் இங்கே கேட்டுவிட்டு செல்வதற்கு வழிவிடுங்கள். நன்றி!

தாங்கவே முடியவில்லை இதையும் ஒருக்கால் போய் பாருங்கோ

http://ta.newstig.com/single-standard.php?pid=12957

தமிழ் மகளே நீ வாழ்க!!

சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் TVI நடாத்திய போட்டியில் பங்குபற்றி முதல் பரிசை வென்ற ஜெசிக்கா...

https://www.youtube.com/watch?v=4f3zdhMvlLk

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்புக்கு நன்றி தமிழினி,
முதல் இணைப்பில் ஜெசிக்காவின், மற்றும் அவரது தந்தையாரின் பேட்டியில் அவர்களது எளிமையான , உண்மையான கனவு வெளிப்படுகிறது. ஜெசிக்காவின் இனிய தமிழுக்கு ஒரு சபாஸ். 
 
விஜய் டீ.வியின் போட்டி முடிவு பற்றி கேட்ட கேள்விகளில் அவரின் தந்தையாரின் பெருந்தன்மை கூட வெளிப்படுகிறது. தன்னுடைய மகளை விட திறமை சாலிகள் இருகிறார்கள், அவர்களும் இனிவரும் காலங்களில் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அவர் சொல்வது அருமை.
 
ஜெசிக்காவின் கனேடிய பாடல் போட்டி இணைப்பில்  அவர் பாடிய பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிட்டியது..
அந்த ஜெசிக்காவா .... இந்த ஜெசிக்கா? ... ஆச்சர்யம் .
மிகக் குறுகிய காலத்தில் எப்படி தன்னை வளர்த்துக்கொண்டு உள்ளார்...!!
 
தமிழ் உச்சரிப்பு... சரியான ஸ்ருதி, தாள லயத்தில் நின்று பாடுவது, மூச்சு அடக்கி (breath control)..இதற்கும் அப்பால் பாடலை நன்கு புரிந்து அதற்கு தேவையான உணர்வுகளை வெளிக்காட்டுவது... 
இது ஜெசிக்கா இசை மேல் தீராத ஆர்வம் கொண்டவர் என்பதை நன்கு வெளிப்படுத்துகிறது.
ஆனந்த் வைத்தியநாதனின் இன்னும் ஒரு கைவண்ணம்... ஜெசிக்கா.  
 
தமிழகத்தில் இருந்து  ஆயிரம் ஸ்பூர்திக்கள், ஸ்ரீஷாக்கள், அனுசியாக்கள், பரத்துக்கள், அனல் ஆகாஷுக்கள் வரலாம்,
வந்து கொண்டு தான் இருகிறார்கள். எமக்குள் இருந்து ஒரு அத்தி பூத்தால் போல் இவள் ...
ஜெசிக்கா திறமையை வெளிக்காட்டி வந்து இருக்கிறாள். இது நமக்கும் பெருமை.
 
ஜெசிக்கா குறித்த இணையதள வாத விவாதங்கள் பூட்டிவிடுவதில் பயன் ஒன்றும் இல்லை.
வழமை போல  இனி தமிழர்களாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் பல உள்ளன ... எதை இவ்வளவு காலமும் செய்தோமோ அதிலும் நாங்கள் அக்கறை கொண்டு செயல்படுவோம்.
(வாய் சொல்லில் வீரராய் இல்லாமல்)
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்சிங்கர்-4 நிகழ்ச்சி ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம். <_<  

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்சிங்கர்-4 நிகழ்ச்சி ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம். <_<  

மீண்டும் சொல்கின்றேன்

புலம் பெயர் தமிழரின் இந்த பலத்தை எவருமே கணிக்கவில்லை

விஜய் டீ.வி உட்பட....

இந்த புலம் பெயர் பலத்தை 

ஒற்றுமையை 

பல ஆக்கபூர்வமான காரியங்களில் நாம் நகர்த்தவில்லை என்பதே உண்மை.

இனியாவது அதை அறிந்து இந்த பலத்தை நாம் பாவிக்கணும் என்பதே எனது வேண்டுகோள்...

Edited by விசுகு

 Toronto ல்  ( திருவையாறு ) கடந்த வருடம்  நடைபெற்ற  ஜெசிக்காவின் இசைக்கச்சேரி...

https://www.youtube.com/watch?v=lP4PIpLkl_8

Edited by தமிழினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.