Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித் தொழிலை எதிர்த்து போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் ஒரு பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முன்னெடுத்துள்ளது.

 

இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருகிறது

 

 

சட்டவிரோதமான வகையில் இடம்பெறும் மீன்பிடி நடவடிக்கைகளை இலங்கை நிறுத்த வேண்டுமென்று நான்கு ஆண்டுகளாக தீவிரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், அதை தடுத்து நிறுத்த இலங்கை காத்திரமான முன்னெடுப்புகளைச் செய்யவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைய மீன்பிடித் தொழிலில் ஈடுபடாத நாடுகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதில்லை எனும் கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியுடன் செயல்படுகிறது.

 

 

இதேவேளை இலங்கையுடன் சேர்ந்து இவ்வகையிலான மீன்பிடியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பெலீஸ், ஃபிஜி, பனாமா, டோகோ மற்றும் வனுவாட்டூ ஆகிய நாடுகள் வெற்றிகரமாக இப்பிரச்சினையை கையாள நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

 

 

கடுமையான தமது கொள்கைகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்று கூறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்சார் விவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் மரியா தமான்கி, சட்டவிரோத மீன்பிடிகளைத் தடை செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஐந்து நாடுகள் தமது பாராட்டுகளைப் பெறும் அதேநேரம், துரதிஷ்டவசமாக இலங்கை அப்படியான பாரட்டை பெறமுடியாத நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்துவது குறித்த தமது கவலைகள் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதை நீக்குவது தொடர்பில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வு தெரிவிக்கிறது என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் படகுகளைத் தடுத்து நிறுத்துவது அப்படியான தொழிலை நெறிமுறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவருவது, சர்வதேச மீன்பிடிச் சட்டங்களுக்கு உட்பட்டு தொழிலைச் செய்வது ஆகியவை தொடபில் நடவடிக்கை எடுக்காதது இலங்கையின் பலவீனத்தைக் காட்டுகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

இப்படியான காரணங்களாலேயே இலங்கை படகுகளால் பிடிக்கப்படும் மீன்களுக்கு தடை விதிக்க வேண்டிய நிலைப்பாட்டை தாங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

 

 

எனினும் வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்காத வகையில் இந்தத் தடை அடுத்த ஆண்டு ஜனவரி மத்தியிலிருந்து அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/10/141014_eubanonlankafish

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு சனிக்கிழமையும்.  தமிழ்க் கடைகளுக்கு வரும்....
ஃ பிரஷ்... விளை, ஒட்டி, ஓரா, பாரை, சுறா, திரளி,  நண்டு, கணவாய், இறால், திருக்கை....

சுவைப்பிரியர்களுக்கு ஆப்பு வருது.
அப்படியே... ஒரேஞ் பார்லி, நெக்ரோ, ஜிஞ்சர் பியர், லயன் லாகர், ஸ்ரவுட், மெண்டிஸ் ஸ்பெஷல் சாராயம்,

மஞ்சி, மலிபன், இஞ்சி, பிஸ்கட்டுக்களையும் தடை செய்ய வேண்டும்.
 

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, பாராட்டுக்கள். :) European-Union_180-animated-flag-gifs.gi

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு சனிக்கிழமையும். தமிழ்க் கடைகளுக்கு வரும்....

ஃ பிரஷ்... விளை, ஒட்டி, ஓரா, பாரை, சுறா, திரளி, நண்டு, கணவாய், இறால், திருக்கை....

சுவைப்பிரியர்களுக்கு ஆப்பு வருது.

அப்படியே... ஒரேஞ் பார்லி, நெக்ரோ, ஜிஞ்சர் பியர், லயன் லாகர், ஸ்ரவுட், மெண்டிஸ் ஸ்பெஷல் சாராயம்,

மஞ்சி, மலிபன், இஞ்சி, பிஸ்கட்டுக்களையும் தடை செய்ய வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, பாராட்டுக்கள். :)

European-Union_180-animated-flag-gifs.gi

நீங்கள் சொல்லும் அனைத்து வகை மீன்களும், இந்தியாவில் இருந்தல்லவா வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லும் அனைத்து வகை மீன்களும், இந்தியாவில் இருந்தல்லவா வருகிறது?

 

இங்கு தமிழ்க்கடையில், சிலோன் மீன் என்று சொல்லித்தான்... விற்கிறார்கள். :)

கச்சதீவு பக்கம், பிடித்த மீனாய் இருக்குமோ.... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தமிழ்க்கடையில், சிலோன் மீன் என்று சொல்லித்தான்... விற்கிறார்கள். :)

கச்சதீவு பக்கம், பிடித்த மீனாய் இருக்குமோ.... :D:lol:

அங்க, கடும் சண்டை நடக்கேக்க, போக்குவரத்தே நடக்காத போதே, மட்டுவில் கத்தரிக்காய் உங்க வித்தவையள்....

லண்டன் Billings Gate fish market ல frozen மீன் வாங்கி வெட்டி, pack பண்ணி, தங்கட sticker ம் போட்டு சிலோன் / இந்தியா மீன் எண்டு, விக்கினமே..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

"மொட்டைக்கருப்பன் அரிசி"

 

இந்தவகை அரிசி, பூநகரியிலும் வலிகாமத்தில் ஒருசில இடங்களிலும்(?) விளைகின்றது.

 

பூநகரியில் தொடர்ந்து ஏற்பட்ட இடப்பெயர்வுகளின் காரணமாகவும் முள்ளிவாய்க்கால் அவலத்தாலும் இந்த இன நெல் முற்றாக அழிந்தேபோய்விட்டதாக, பூநகரியில் வாழும் எனது அண்ணர் கூறுகிறார்.

 

வலிகாமத்தில் சண்டிலிப்பாய் அல்லது பண்டைத்தரிப்புப் பகுதியில் இவ்வினம் இருக்கு எனவும் அனால் தனது வயல்களில் விதப்பதற்காக இதுவரை மொட்டைக்கருப்பன் விதைநெல்லைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை என்கிறார்.

 

அப்படியிருந்தாலும் பூநகர் மொட்டைக்கருப்பன் நெல்போன்ற அந்த மண்ணுக்கே உரிய தரம் இருக்குமா என்பதில் சந்தேகம் எனவும் கூறுகிறார்.

 

எனது மூத்த, இரண்டாவது அக்காள்களின் பிள்ளைப்பெறுவுக்கு பூநகரி மொட்டைக்கருப்பன் அரிசியை மிகவும் அருந்தலாகவே அவ்வேளையில் வாங்கி பத்தியச் சாப்பாடுகொடுத்தது எனக்கு இப்போதும் நினைவிருக்கு. அக்காலம் கிட்டத்தட்ட 1975 க்கும் 1980 க்கும் இடைப்பட்டகாலமாகும். அந்தவேளைகளில் எனது அண்ணர் பூநகரியில் திருமணம் முடித்திருக்கவில்லை. ஆதலால் அள்ளுகொள்ளையாக மொட்டைக்கருப்பன் அரிசி வாங்குவதற்குரிய செல்வாக்கோ வசதியோ அப்போது எங்களுக்கு இருந்திருக்கவில்லை.

 

அப்படியிருக்கையில் புலம்பெயர் தேசத்துத் தமிழ்கடைகளில் பூநகரி மொட்டைக்கருப்பன் அரிசி கேட்பாரற்ருக்கிடக்கிறது வேரில் பழுத்த பலாப்பலம் என்பதுபோல் சீண்டுவாரற்றுக்கிடக்கு.

 

எவ்வளவுதூரத்துக்கு எங்களை எல்லாம் இந்திய மளிகைக்கடைகளில் கொட்டிக்கிடக்கும் இட்லி அரிசியை பூநகரி மொட்டைக்கருப்பன் என ஏமாத்துகிறார்கள்.

 

பருத்தித்துறைக்கே உரித்தான தட்டை வடையின் ருசியும் வல்லிபுரத்தாழ்வார் கோவில் தெருவோரத் தோசையின் சுவையும், பருத்தித்துறையில் மட்டுமே செய்யக்கூடைய மஞ்சள் போட்டு உப்புக்குறைத்துத் தயாரிக்கப்பட்ட கருவாட்டுச் சுவையும் எப்போதும் இனிமேல் திரும்பிவராது. அதுபோல் மழைகாலப் பன்னலைப்பாலத்து ஓராமின் சுவையும், பண்ணைக்களங்கட்டிக் கயல்மீன் சுவையும், தீவ்ப்பகுதியில் மாலைநேர அதள்மீன் சுவையும், நாகர்கோவில் பக்கத்து இழுவைமீன் சுவையும் நாம் அங்கு போனால்தான் மீண்டும் திரும்பவரும்.

 

ஒருபானை பூநகரி மொட்டைக்கருப்பன் சோத்துக்கு ஒருசோறு பதம்.

 

 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

எனி தான் எமது உள்ளூர் தமிழ் மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு வரும். இவ்வளவு காலமும்.. தமிழக மீனவர்களைச் சாட்டி.. சிங்கள ஆழ் கடல் மீன்பிடி எவ்வளவு மோசமா நடந்து கொண்டிருக்கு என்பதை இந்தத் தடை உறுதி செய்கிறது..!!!

 

டக்கிளசின் இன்னொரு போலி முகத்திரை கிழிந்து தொங்குது..!! :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மொட்டைக்கறுப்பன் பரவலாக எல்லா இடங்களிலும் பயிரிடப்படுகின்றது என நினைக்கின்றேன். பூநகரியான் அரிசியும் கிட்டத்தட்ட மொட்டைக்கறுப்பன் மாதிரியே இருக்குமென நினைக்கின்றேன். :rolleyes:
 
பூநகரியான்? :unsure:
மொட்டைக்கறுப்பன்? :unsure:
  • கருத்துக்கள உறவுகள்

புரேசன் மீனை இளக வைத்து பிரஷ் என்டு இனி விற்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

புரேசன் மீனை இளக வைத்து பிரஷ் என்டு இனி விற்க முடியாது.

 

தமிழ் கடைகளில்..

 

மீன் உறைஞ்சாலும் காசு.. இளகினாலும் காசு.

 

கோவா பூத்தாலும் காசு.. பூஞ்சணம் கட்டினாலும் காசு.

 

மல்ரி பக்.. ஒன்றா வித்தாலும் காசு.. பிரிச்சுப் போட்டு தனியத் தனிய வித்தாலும் காசு..

 

இப்படி தமிழ் கடைக்கு என்று பல வியாபார தந்திரங்கள் உள்ளது.

 

இங்கின அப்புறம் அண்ணங்கள் வந்து நெடுக்காலபோவனுக்கு தமிழ் கடை வெறுப்பு.. அங்கினை ஒரு பெட்டையை பார்த்து.. ஐ லவ் யு சொல்ல அவள் மாட்டன் என்றிட்டாள் (ஒரு பொடியன் என்றால் ஒரு பெட்டையை வைச்சு கதை கட்டினால் ஆளை அடக்கலாம் என்பது எம்மவரின் பழைய யுக்தி. அதெல்லாம் இப்ப ரெம்ப ரெம்ப பழகின பழசுங்க.. மாத்தி யோசிங்க).. அதுதான் புலம்பிறார் என்று புலம்ப ஆரம்பிச்சிடாதேங்க. இதாங்க கண்ணால் காணக் கூடிய யதார்த்தமாக உள்ளது. :lol::icon_idea:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கடைகளில்..

 

மீன் உறைஞ்சாலும் காசு.. இளகினாலும் காசு.

 

கோவா பூத்தாலும் காசு.. பூஞ்சணம் கட்டினாலும் காசு.

 

மல்ரி பக்.. ஒன்றா வித்தாலும் காசு.. பிரிச்சுப் போட்டு தனியத் தனிய வித்தாலும் காசு..

 

இப்படி தமிழ் கடைக்கு என்று பல வியாபார தந்திரங்கள் உள்ளது.

 

இங்கின அப்புறம் அண்ணங்கள் வந்து நெடுக்காலபோவனுக்கு தமிழ் கடை வெறுப்பு.. அங்கினை ஒரு பெட்டையை பார்த்து.. ஐ லவ் யு சொல்ல அவள் மாட்டன் என்றிட்டாள் (ஒரு பொடியன் என்றால் ஒரு பெட்டையை வைச்சு கதை கட்டினால் ஆளை அடக்கலாம் என்பது எம்மவரின் பழைய யுக்தி. அதெல்லாம் இப்ப ரெம்ப ரெம்ப பழகின பழசுங்க.. மாத்தி யோசிங்க).. அதுதான் புலம்பிறார் என்று புலம்ப ஆரம்பிச்சிடாதேங்க. இதாங்க கண்ணால் காணக் கூடிய யதார்த்தமாக உள்ளது. :lol::icon_idea:

 

 

இதையே வெள்ளையள் செய்தால்...சுத்தம்...சுகாதாரம் எண்டுவியள் போலை கிடக்கு :o  (அதைத்தான் செய்யுறாங்கள் :icon_idea: )

  • கருத்துக்கள உறவுகள்

லெமன் பப் சாப்பிட்டால் பிள்ளைத்தாச்சிக்கு...நல்லது சத்திவராது....மஞ்சள் கலரிலை பிள்ளையும் பிறக்கும் என்கிற எங்கடைசனத்துக்கு...சிலோன் விளையும்...பால் சுறாவும் வரவில்லையென்றல்...இன்னும் பிறசர் ஏறப்போகுது...ஆர் செய்த சதியெண்டு தெரியேல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

மனிதவுரிமை மீறலுக்கு வராத தடை இந்த மீன்உரிமை மீறலுக்கு வந்திருக்கு. மீன் மேல அவ்வளவு பாசம் ;-)

  • கருத்துக்கள உறவுகள்

லெமன் பப் சாப்பிட்டால் பிள்ளைத்தாச்சிக்கு...நல்லது சத்திவராது....மஞ்சள் கலரிலை பிள்ளையும் பிறக்கும் என்கிற எங்கடைசனத்துக்கு...சிலோன் விளையும்...பால் சுறாவும் வரவில்லையென்றல்...இன்னும் பிறசர் ஏறப்போகுது...ஆர் செய்த சதியெண்டு தெரியேல்லை...

சிலோனில் இருந்து பால்சுறாவிட நல்ல சுறா பிளிங்கேற்றில் பலற் பிரைஸ் 1kவிலை from£.75pence தான் அதுகளை சாப்பிடுவது சைனிஸ்களும் நம்மாட்களும்தான் வெள்ளை கறுப்பு நெருங்காதுகள் காரணம் சுறா மனிசனை சாப்பிடுவதாம்  அந்த 75பென்ஸ்தான் லோக்கல் தமிழ்கடைகளில் 7.5 விற்கினமுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுறா பிள்ளை பேறின் போது குடுக்கவிரும்புவர்கள் சைனிஸ் கடைகளில் 2-4பவுனுக்குள் எடுக்கலாம்.

இலங்கையில் இருந்து வரும் உணவு பன்டங்கள் அது மரகறியாக இருந்தாலும் மீனாக இருந்தாலும் அதி கூடிய இரசயான கலப்பை கொண்டுள்ளதாக அறிவிக்கபட்டிருக்கு. இதை நான் சொல்லவில்லை இங்கிலாந்தின் துறைமுக உணவு சோதனை பிரிவு சொல்லுது மல்லுக்கு வருபவர்கள் https://www.gov.uk/port-health-authorities-monitoring-of-food-imports இங்கு போனடிச்சு தெரிஞ்சு கொள்ளளாம் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின்  முரண்பாட்டு  நிலையை  இதன் மூலம் அறியமுடியும்

 

ஒரு பக்கம் புறக்கணிப்பு

மறுபுறம் தாயக மக்களின் அபிவிருத்தி

 

இரண்டும் இரு கண்கள்...............

 

மற்றும்படி

நான் தமிழ்க்கடைகளில் மீன் வாங்குவதில்லை

புறக்கணிப்பு  அத்துடன்  சுகாதாரம்  காரணம்.....

  • கருத்துக்கள உறவுகள்

558212143cartoon15102014.jpg

  • கருத்துக்கள உறவுகள்

558212143cartoon15102014.jpg

 

சுறா, என்னத்தை.... பாத்து பயப்பிடூது? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களில் கட்டாயமாக உற்பத்தியான நாடு பெயர் பொறிக்கப் பட்டிருக்க வேண்டும்.
 
A Product of India என ஆங்கிலத்திலும், தமிழில் சுத்தமான ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் (1 வடி) என்று போட்டு விக்கிறார்கள்.
 
ஒரு நாள் பகிடியாக கடைகாரரிடம் கேட்டேன்.
 
தயாரான பதில் வந்தது: அது கேரளாவில் ஆணைக் கோட்டை எண்ட இடத்தில இருந்து தான் வருகுதாம்....
 
சும்மா சிரிச்சு மழுப்பாம, சீரியசாக, நம்மள, கேனப் பயல் என்டு நினச்சு சொல்கிறாரே எண்டு அந்த கடைக்கு இப்ப போறதில்லை... :icon_mrgreen:  :blink:  :icon_mrgreen:

சுறா, என்னத்தை.... பாத்து பயப்பிடூது? :rolleyes:

 

சுறா பயப்பட வில்லை சிறியர்.
 
கிட்ட வா மவனே, சொல்லுறன்... இருக்கிடீ உனக்கு.... 
 
எண்டு சொல்லுற மாதிரி தான் எனக்கு புரியுது.   :o  :icon_idea:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருகிறது

 

ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ......மீனை சிலோனிலையிருந்து ஆபிரிக்காவுக்கு அனுப்பி.........அங்கையிருந்து அந்தமீன் ஐரோப்பாவுக்கு  வரும். வரும்.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருகிறது

 

ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ......மீனை சிலோனிலையிருந்து ஆபிரிக்காவுக்கு அனுப்பி.........அங்கையிருந்து அந்தமீன் ஐரோப்பாவுக்கு  வரும். வரும்.... :lol:

 

 

இந்தியாவில் இருந்து வரும் மாம்பலம், வெத்திலை, பூச்சி நாசினி அதிகம் என கூறி தடை செய்தார்கள். அதை இலங்கை அனுப்பி, இலங்கை பொருட்கள் என இறக்கி விப்பார்கள்.
 
அவர்களுக்கு (அரசுக்கு) என்ன வந்தது?
 
நாலு எழுத்தில் முதலில் கனடாவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் வந்த ஒரு brand.
 
இதன் மூன்று கொள்கலன்கள் துறைமுகத்தில் தடுக்கப் பட்டது. ஒவ்வொரு முறையும், மீடியாக்களில் தீடீர் விளம்பரம் கொடுத்து, அந்த செய்தி வராமல் பாத்துக் கொண்டனர்.
 
அந்த brand விளம்பரம் வந்தால், சரிதான், அடி பட்டு விட்டுது போல என்று நினைத்துக் கொள்வேன்.
 
மாசிக் கருவாடு விலை £2.49 ல் இருந்து £3.99 ஆகியது. அதை தடுத்துப் போட்டார்கள். களவாக வேற லேபல் ஒட்டி கொண்டு வந்து, இங்க லேபல் மாத்திரோம். கனக்க அப்படி கொண்டு வர ஏலாது. வாறது கொஞ்சம் எண்ட படியால் விலை கூடவாம்.
 
விசாரித்து பார்த்தல், அப்படி ஒரு தடையும் இல்லை. இது 'Price Fixing' (iilegal) ஐடியா வில் சொன்ன கதையாம்.
 
அட நாராயணா... நமது வாய் ருசியில் அவ்வளவு நம்பிக்கை.  :rolleyes:  :icon_idea:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மரபணு மாற்றம் (BT)காய்கறி என தாய்லாந்து பயத்தங்காய் பலாப்பழம் ஜரோப்பிய யூனியனால் தடை பன்ன நம்மாட்கள் இறக்குவதை நிற்பாட்டி விட்டார்கள் .

திடிரென தமிழ்முஸ்லீம் ஒருவர் அதேயிடத்து காய்கறிகளை தனது மலேசிய முஸ்லீம் நண்பர்கள் மூலமாக தாய் காய்கறிகளை தரைமார்க்கமாக மலேசியா கொண்டுவந்து மலேசியன் காய்கறி என லேபிள் போட்டு வெம்பிளியில் தமிழ்கடைகளில் சப்ளை .

 

சும்மா சொல்லக்கூடாது பலாப்பழ சக்கை கூட இனிக்கும் எல்லாம் மரபணு மாற்றத்தின் விளைவு ஊரை விட இங்கு புற்றுநோயில் விழும் நம்மவர் தொகை கூட இப்படியாண வியாபார முறைகளும் காரணம் நம்மவர்களுக்கும் விளங்கனும் இயற்கையாக விளைந்த காய்கனிகள் சிறிது அப்படி இப்படி டிசைன் மாறி கிடக்கும்.

அ,ஆ படிக்கேக்கிலை பார்த்த படத்தில் இருந்த முருங்கைகாய்தான் வேனும் என்றால் எல்லாமே பிரச்சினைதான். :D 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கருவாடும் கொண்டுவரமுடியாதா கு.சா அண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப கருவாடும் கொண்டுவரமுடியாதா கு.சா அண்ணே

 

 இதென்ன விசர்க்கேள்வி ராசா!!! மீன் ஆபிரிக்கா போய் ஐரோப்பாவுக்கு வர கணக்காய் கருவாடாகும் தானே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.