Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தினை கைவிட்ட நிலையில் உலகத் தமிழர் பேரவை மீதான தடை சிறிலங்காவில் விலகும் சாத்தியம்! சிங்கள ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Global-Tamil-Forum.jpg

ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத்தினை கைவிட்டு விட்டதாக உலகத் தமிழர் பேரவை சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அந்த அமைப்பின் மீதான சிறிலங்காவின் தடை விலக்கப்படலாம் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் பரந்துபட்ட அதிகார பகரிர்வுடன் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு தாம் தயாரென சமீபத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகள் மற்றும் அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

சமீபத்தில் கிளிநொச்சி பயணத்தின் போது தனி ஈழத்தினை கைவிட்டு விட்டு வாருங்கள் என தமிழ் அரசியல் தலைமைகளுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பும் விடுத்திருந்தார்.

இந்நிலையில் உலகத் தமிழர் பேரவை தமிழீழத்தினை கைவிட்டு விட்டதான நிலைப்பாடு அவர்கள் மீதான சிறிலங்காவின் தடை விலகலுக்கு வழியமைத்துள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவரை உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சமீபத்தில் லண்டனில் சந்தித்து உரையாடியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவும் 13வது திருத்தச் சட்டத்துக்கு அமையவே தமிழர்களுக்கான தீர்வு திட்டம் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தடை விலகும் பட்சத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சிறிலங்காவுக்கு வருகை தர வாய்ப்பு உள்ளதாக அந்தச் சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

http://www.pathivu.com/news/34701/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவை எப்ப ஏற்றுக் கொள்ளினம்.. எப்படி கைவிடினம் என்று யாருக்குத் தெரியும்.

மக்கள் எதனையும் கைவிட்டதாகத் தெரியவில்லை..!! :icon_idea:

ரோட்டில நிண்டு கொடி பிடிக்கிற கூட்டம், நட்டு கழண்ட அரசு போன்றவை செய்ததை விட உலக தமிழர் பேரவை 100 மடங்கு வேலைகளை செய்துள்ளது. சம கால அரசியலுக்கு ஏற்றபடி கூட்டமைப்புடன் இணைந்து உலகதமிழர் பேரவை செயற்படுவது வரவேற்கத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

ரோட்டில நிண்டு கொடி பிடிக்கிற கூட்டம்,

ரோட்டில் நின்று கொடி பிடிப்பது மக்கள் கூட்டம் ..... கொடி பிடிக்காவிட்டால் உங்களை சியில் தள்ளுவோம் உணவு தரமாட்டோம் என்று எந்த அச்சுறுத்தலும் இல்லாத இடத்து. ஜனனங்கள் தமது உணர்வின் வெளிப்பாடாக அதை பிடிக்கிறார்கள். தமது ஆதங்கத்தை அச்சுறுத்தல் இன்றி வெளிக்கொணர கூடிய இடங்களில் வசிப்பவர்கள் தமது உணர்வை வெளிகொனருகிரார்கள். கொடிபிடிப்பதால் உலகிற்கு நிழல் வருகிறது எல்லோரும் வந்து உதுன்கி கொள்ளுங்கள் என்று ஏதாவது பிரச்சாரம் செய்கிறார்களா? அல்லது கொடிபிடிப்பதட்கு அந்ததந்த நாட்டு அரசுகள் வரிபணத்தில் தமக்கு சம்பளம் தர வேண்டும் என்று கோருகிறார்களா???
ஒரு ஜெனாயக போக்கை கூட பொறுக்க  முடியாத நீங்கள் அடக்குமுறை அரசுகளைவிட கேவலமானவர்கள்.

நட்டு கழண்ட அரசு போன்றவை செய்ததை விட

ஓவரு அமைப்பின் பாதையும் செயற்பாடும் வேறு பட்டவை. அதனால்தான் வேறு வேறு பெயர்களில்  இயங்குகிறார்கள். ஒரு அமைப்பின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்கலாம். மற்றது மறைமுகமாக இருக்கலாம். உங்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை அவர்கள் செய்யாது போய்  இருப்பின் அதை கோடிட்டு. சாதாரண ஆறறிவு மனிதர்கள் போன்று அதை எழுதலாம்.  கூட நிண்டு நட்டு களட்டியவர்களில் நீங்களும் ஒருவரா? மேலே உள்ள கருத்தில் நட்டு கழண்டு  உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஒன்றை உருவாக்க மூவர் கூடினால் .............. நட்டு கழட்ட என்று நாலுபேர் கூடும் இடத்து சில சிக்கல் இருக்கலாம்.

உங்கள் கருத்தை வைத்து பார்க்கும்போது. மிகுந்த ஆதாரம் உங்களிடம் இருக்கிறதுபோல் தெரிகிறது .... கூட நின்று நட்டுகளட்டிய வக்கிர எண்ணம் உங்களிடம் இருக்கும்போது. ஏன் நல்ல எண்ணத்துடன் கூடிய மூவரை இழுக்கிறீர்கள்??

உலக தமிழர் பேரவை 100 மடங்கு வேலைகளை செய்துள்ளது.

வேலை என்றால் என்ன வேலை என்பது முதலில் எழுதவேண்டும்.

கொஞ்சம் ஆட்கள் தொகை கூடி இருப்பவர்கள் பல்லு தீட்டுவது  கக்கா போவது முகம் கழுவது போன்ற வேலைகளையும் ஆட்கள் தொகை குறைந்த கூட்டத்தைவிட கூடுதலாகத்தான் செய்வார்கள். 
எந்த வேலையை 100 மடங்கு கூடுதலாக செய்தார்கள் என்பது குறிப்பிட்டு எழுதினால்தான். நீங்கள் எதை பற்றி எழுதுகிறீர்கள் என்பதை மற்றவர்களால் புரிய முடியும். எழுதாதவரை வெறும் அவதூறாக மட்டுமே இது இருக்கிறது. உங்களின் தற்போதைய வேலை அதுவா?? 

சம கால அரசியலுக்கு ஏற்றபடி கூட்டமைப்புடன் இணைந்து உலகதமிழர் பேரவை செயற்படுவது வரவேற்கத்தக்கது. 

சமகால அரசியலில் அப்படி என்ன சாதகம் இருக்கிறது .....?
கூட்டமைப்பு சமகாலத்தில் என்ன செய்கிறது ...? என்பவை பற்றி எழுதினால்தான் 
அதை வரவேற்கலாமா எனபதை பற்றி வாசிப்பவர்கள் ஒரு முடிவை கூற முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜிரிஎப் பிரிஎப் பல விடயங்களை நடத்தியுள்ளன என்பது உண்மையே.

தனிநாட்டை கைவிடும் அவர்களின் முடிவு மிகவும் வரவேற்பிற்க்குரியது.

புலயாவரிகளிடம் சிக்கவிடாமல் புலத்தவரையும் யதார்த வழியில் தொடர்ந்தும் வழிநடத்தட்டும்.

எதிர்க்கருத்தை சிறந்த முறையில் எதிர் கொண்டு மிக நாகரீகமாக விவாதத்திற்கு பதில் கூறிய தங்கள் முறை பாராட்டத்தக்கது. விவாதத்தில் கலந்து கொண்டு முன்வைக்க பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போது எதிர் கருத்து வைப்பவரை நக்கல் பண்ணுவது அவரின் மனதை நோகடிக்கும் கீழ்தர வேலைகளை  அறிவாளிகள் என்று தம்மை தாமே கூறுபவர்கள் பலர்  செய்து வரும்போது தாங்கள் இந்த விவாதத்தில் பதில் கூறிய பாங்கு பாராட்டதக்கது. நன்றி தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் 1977 இல் இருந்து தெளிவான ஆணையை வழங்கி வருகிறார்கள். சிங்களப் பேரினவாதக் கட்சிகளை தமிழ் மக்கள் என்றும் ஆதரித்ததில்லை.

தமிழ் மக்கள் 13.. 13+ ஆணை வழங்கியதில்லை. சுயநிர்ணயம்.. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்.. சமஸ்டி ஆட்சி முறைமை இதுதான் ஆகக்குறைந்த தீர்வாக தமிழ் மக்கள் முன்வைக்கின்ற விடயம். இது ஏலவே வலியுறுத்தப்பட்டு விட்டது.

இதற்கு கீழ.. ரணில் வந்து சொன்னார்.. மகிந்த வந்து விருந்து வைச்சார் என்று யார் சொல்லிக் கொண்டும்.. மக்கள் விருப்புக்கு எதிராக செயற்பட முனைந்தால் அவர்களை மக்கள் நிராகரிக்க அதிக நேரம் ஆகாது. அது இமானுவேல் அடிகளாக இருக்கட்டும்.. எவராகவும் இருக்கட்டும்..!!

தமிழீழம் என்ற ஒரு இலட்சியத்துக்காக இமானுவேல் உயிர்விடவில்லை. ஆனால்.. 50,000 போராளிகளும்.. 150,000 மக்களும் உயிர் விட்டிருக்கிறார்கள். அதை கைவிட.. இவர்களால் முடியலாம்.. அந்த போராளிகளை மக்களை பெற்ற உள்ளங்கள் நிச்சயம்.. கைவிடத் தயாராக இல்லை. அவர்களின் குரலை மக்கள் தான் ஆணித்தரமாக இங்கு பதிவு செய்தாகனும்..!! :icon_idea:

முதலில் இம்மனுவேல் அடிகளார் தமிழ் ஈழ கொள்கையை விடுவதாக எங்கேயாவது கூறினாரா? இது எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு சிங்கள ஊடகம் விடும் செய்தி, அதை ஆதரமாக வைத்து இம்மானுவேல் அடிகளாரை குறை கூறுவது சரியல்ல, மற்றையது புலிகள் கூட ஒஸ்லோவில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தானே தீர்வு காண போவதாக கூறினார்கள் அதற்காக அவர்களையும் குறை கூற போகின்றீர்களா ???

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் பரந்துபட்ட அதிகார பகரிர்வுடன் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு தாம் தயாரென சமீபத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகள் மற்றும் அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மேற்படி செய்தியின் பிரகாரம் தான் இங்கு கருத்துப் பகிரப்படுகிறது.

மேலும் விடுதலைப்புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டதாக எந்த அறிவிப்பையும் எப்போதும் செய்ததில்லை.

மாறாக தமிழீழத்துக்கு மாற்றீடு என்றால்.. அது தமிழர்களின் சுயநிர்ணய உரிமை.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம்.. சமஸ்டி ஆட்சி முறையிலான அரசு.. ஒரே நாடு இரண்டு அரசுகள் என்பதன் கீழ்தான்.. தீர்வு தேடப்பட முடியும் என்பதையும் வலியுறுத்தினார்கள்.

அவர்கள் எப்போதாவது தமிழீழத்தை கைவிட்டுவிட்டதாக அறிவித்தார்களா...???! தமிழீழத்தை கைவிடுவது என்று அறிவிப்பது வேறு அதற்கு மாற்றீடாக இன்னொரு திட்டத்தை மொழிந்து அதனை நிவர்த்திக்கக் கேட்பது வேறு. இரண்டுக்கும் பாரிய வேறுபாடு உண்டு. தமிழ் மக்கள் விரும்பும்.. மாற்றீட்டுத் திட்டம் அமுலானால்.. தமிழீழக் கோரிக்கை தானாக விடுபடும். யாரும் அதனை விடுகிறோம் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை..!!! :icon_idea:

அந்த  வகையில் மகிந்த ஐயா செய்ய வேண்டியது தமிழ் மக்கள் விரும்பும் தமிழீழத்துக்கு மாற்றீடான திட்டத்தை நிறைவேற்றி வைப்பதுதான். அதன் மூலம்.. தமிழீழக் கோரிக்கையை அவர் கைவிடச் செய்யலாம். அதை செய்யச் சொல்லட்டும்.. உலகத் தமிழர் பேரவை..!! அதைச் செய்யாமல்.. தமிழீழத்தை கைவிடுகிறோம் என்ற அறிவிப்பு செய்ய வேண்டிய எந்த அவசர தேவையும் தமிழ் மக்களுக்கு இல்லை..!!

Edited by nedukkalapoovan

இந்த செய்தியில் பெரிய அளவில் உண்மை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, இது வழக்கமா சிங்கள ஊடகங்களின் சித்து விளையாட்டு என்று தான் நினைக்கிறேன், எல்லாம் ஜரோப்பிய ஒன்றியத்தில் விழுந்த அடியின் தாக்கம் என்று தான் நினைக்கிறேன்

நீங்கள் சொல்வது தான் உண்மையாக இருக்கும். twitter இல் இப்படியான செய்தி எதையும் பகிர்ந்திருக்கவில்லை.

https://mobile.twitter.com/surendirans

https://mobile.twitter.com/GTFonline

ஜிரிஎப் பிரிஎப் பல விடயங்களை நடத்தியுள்ளன என்பது உண்மையே.

தனிநாட்டை கைவிடும் அவர்களின் முடிவு மிகவும் வரவேற்பிற்க்குரியது.

புலயாவரிகளிடம் சிக்கவிடாமல் புலத்தவரையும் யதார்த வழியில் தொடர்ந்தும் வழிநடத்தட்டும்.

 மிகப் பிழையான தகவல். பிரிஎப்  என் கொள்கை தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வு தமிழீழத் தனி அரசே. இதில் ஜிரிஎப் இன் கொள்கை என்ன என்பது பற்றி அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

பல தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பாகவே ஜிரிஎப் உருவாக்கப்பட்டது. ஆனால் சுரேன் தன்னிச்சையாக செயற்படத் தொடங்கிய பின் பிரிஎப் பகிரகங்கமாக பல அறிக்கைகள் விட்டு இவரின் நடவைக்கைகளைக் கண்ட்டித்து உள்ளது. ஒரு அமைப்பு தனி நபர்களின் விருப்பு, வெறுப்புக்கள் சுயநல நடவைக்கைகளுக்கு அப்பால் மக்களைன் விருப்பு வெறுப்புக்களையே பிரதிபலிக்க வேண்டும். அதற்க்கு அந்த அமைப்பி ஒரு ஜனனாயக அமைப்பாக இயங்க வேண்டும். ஜிடிஎப் அப்படி இயங்கவில்லை என்பதே பிரிஎபின் குற்றச் சாட்டாக இருந்து வந்துள்ளது. நாங்கள் எமது மக்களின் அபிலாசைகளையே பிரதிபலிக்க வேண்டும். ஆனால் ஜிடிஎப் சில அரசுகளின் பிரதினிதிகளாக அவர்களின் நலங்களைப் பிரதிபலிக்கும் ஒரு அரசிலயைச் செய்கிறது. இது அவர்களை தனிமைப்படுத்தி உள்ளது. இதனால் இவர்கள் மக்கள் சார்ந்து எந்த வித வேலைத் திட்டங்களையும் செய்ய முடியாது, அர்சுகளின் ஏவலாளர் போல் செயற்பட வைத்துள்ளது.

ஒரு விடயத்தை தெரியாமல் அரைகுறையாக எழுதி, குழப்பவுவதை கோசன் சே நிற்பாட்ட வேண்டும்.

பிரித்தானிய தமிழர் பேரவை பொதுச்செயலாளர் திரு ரவி அவர்கள் தீபத்தின் நிகழ்காலம் நிகழ்ச்சியில் உடன் யோகா தினேஷ்

Response to Times of India article: “Tamil body wants India help to find Lanka solution”

admin | Tuesday, August 26th, 2014 | No Comments »

BTF would like to state publicly that it has been misquoted by a Times of India correspondent in that newspaper’s recent article “Tamil body wants India help to find Lanka solution”, which appeared on its online edition dated Aug 26, 2014.

The article implies that Mr Nirmalan, representing BTF, said that “the diaspora can’t be an advocate for Eelam”; however, Mr Nirmalan refutes this allegation, which is in contradiction with BTF’s well-known and longstanding position in support of Tamil Eelam. Mr Nirmalan during his interview specifically mentioned that every Tamil’s dream is an independent Tamil Eelam, as was extensively reported by other media. All the democratic referendums conducted in the diaspora have overwhelmingly given support to an independent Tamil Eelam, and any diaspora organisation representing the wishes of the people cannot go against such a popular mandate of the Tamil people. Furthermore, BTF has stated on many occasions that the Tamils living on the island of Sri Lanka and those living around the world must be seen as part of a single community, whose wishes and aspirations must be considered as a whole.

We request that the Times of India amends its news report and publishes this objection with equal prominence to the original article.

http://tamilsforum.co.uk/2014/08/response-to-times-of-india-article-tamil-body-wants-india-help-to-find-lanka-solution/

Oru Paper: Is the BTF still a member organisation of Global Tamil Forum?

Ravi: Yes and we were always supportive of their projects implemented in consultation and agreement with BTF.
BTF is one of the founder member organisations of GTF. We see GTF as an important globally recognised institution representing the Diaspora and it should continue to play a vital role taking our struggle forward with the support of the grassroots organisations including BTF and others around the world.  We should not deviate from the founding principles of this global institution.  Individuals may change but this institution will continue to serve the people until we have the freedom and justice that our people deserve.

We feel that GTF could be reformed to be much more open and accommodating the views of country organisations.

Oru Paper: If you are still a member organisation, does BTF participate in GTF’s decision making process?

Ravi: Unfortunately the answer is “NO”. To answer this question it is important to go back to post Mullivaikkal period and recollect our memories so that how the need of a global Tamil institution gave birth to the formation of GTF and started spearheading our struggle in an atmosphere of defeatism. In fact, those who participated in the World Tamil conference held in London in March 2009 organised by BTF started the initiative after May 2009. In 2009 BTF as one of the largest Diaspora organisation was instrumental in bringing 14 country organisations together to form GTF. In the formation stage, the spirit binding many grassroots organisations together was overwhelming. GTF, according to the vision of the founding member country organisations and constitution is not a top down organisation. It doesn’t have an executive Presidency or any other office bearer to make his/her own decision. Each member organisation need to provide a Director representing the country organisation’s view in the GTF Board which will run the day to day business. Country Director has to consult with his organisation before giving his consent to any major decision or project.

This is not the case since 2010 onwards. We sincerely tried to resolve this matter within the GTF board without being outspoken or hindering their on-going initiatives. We are still trying to engage with existing country organisations in GTF, not just for BTF but to bring the original founder member organisations back in GTF. We believe in democratic principles and transparency. We very clearly understand the difficulties in decision making on diplomatic issues while upholding democratic values and transparency. This shouldn’t be a stifling issue for the accommodation of number of country organisations in the GTF umbrella. We want an inclusive GTF and operate in a more democratic manner. While saying that we’ll continue to work towards the unity of the Tamil diaspora.

Oru Paper: In an interview to Oru Paper, Suren Surendiran, your representative to the Global Tamil Forum has mentioned about coming to consensus amongst Tamils and Tamil speaking people through their political and non-political representatives in the Island and in the diaspora. In this context, we understand that GTF is going ahead with announcing a ‘Common Declaration’ next month. Assuming that you are aware about this move, can we ask you to tell our readers about this declaration?

Ravi: We want to clarify the matter of BTF representation to GTF at this point. BTF is a democratic body and its National Assembly members are elected by the people from every local forum. Assembly elects the executive committee and other representatives. Two of our senior members namely Raj Vakesan and Nad Mylvaganam were unanimously elected by the assembly to represent BTF at the GTF board, but the present board has failed to accommodate them. Any formal communication between BTF and GTF has to go through this arrangement.

BTF has not been officially approached by GTF Board of directors or any individual appointed on behalf of them to consult and agree on such consensus based declaration.

http://tamilsforum.co.uk/2013/01/we-firmly-believe-that-there-is-genocide-going-on-in-the-island-of-srilanka-against-tamil-nation-regardless-of-any-regime/

Oru Paper: Do you feel that it is fair to come up with a joint declaration involving Tamil political parties in the homeland, who are subject to all sorts of harassments from the oppressive regime, for expressing their views openly?

Ravi: We in the past and present always are supportive and accommodative to the objectives and projects of many diaspora initiatives of various organisations as long as they help to advance the struggle. We will always be honest and accountable to the people waging the struggle. We as BTF cannot comment on this as we are not included in this process.

Oru Paper: In the aftermath of Mullivaikal catastrophe, every Tamil group has beeni talking about democracy? As one of the grassroots organisations in the diaspora, does the BTF practice democratic principles? We are asking this because we see only a few leaders are taking serious decisions on behalf of the entire diaspora.

Ravi: I think I’ve explained how BTF operates and where it derives its mandate in one of your previous question.
It is on record that BTF is the very first organisation since May 2009, made a bold decision to restructure its decision making process by seeking democratic representations from local forums. We believe in the novel concept of “Participatory Democracy” which encourages our people not just to elect their representatives but to get involve in decision making process as well. It is a well structured democratic process. Decision making starts from the local forum representatives to National assembly members. Because this model impressed the European Tamil activists, they adopted a similar model and evolved their own constitutions to elect their representatives. Being the pioneers of institutionalising Democracy in Diaspora organisations we will work hard to impress GTF Board to move on this direction. We believe in democracy and collective decision making process. This will ensure to avoid any single point of failure.

Oru Paper: Although GTF is not implicitly spelling out the idea of a regime change; it appears that it is leaning towards forging alliances with pro west parties, such as TNA and UNP. Do you subscribe to the view that a regime change in the Island of Sri Lanka will be beneficial to the Tamils in meeting their political aspirations?

Ravi: We firmly believe that there is genocide going on in the Island of Srilanka against Tamil nation regardless of any regime. We’ve seen the history repeated since 1948. Beyond that the state and non-state institutions have become the vehicles of state genocide. When there is a need for a complete restructuring of the state and its institutions to bring real peace, true democracy and stability, we always have the question of how a regime change alone will help to bring peace and prosperity in the Island.

Our oppressed nation has always been cheated and humiliated by all the past and present regimes. We have the firm believe that we need to work with all people revolting against this tyrannical regime. Realising the importance of the civil society in the island of Sri Lanka, we advocated the dialogue with various civil society organisations to make them to understand our long standing grievances. Whoever competes to overthrow the Rajapaksa regime and replace themselves have to convince our oppressed nation what is their solution to the burning ethnic question and we expect them to have the courage to articulate now to their constituents before they approach us to form a grand coalition.

http://tamilsforum.co.uk/2013/01/we-firmly-believe-that-there-is-genocide-going-on-in-the-island-of-srilanka-against-tamil-nation-regardless-of-any-regime/

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழரின் அரசியல் பலம் இருக்கும் நிலையிலிருந்துகொண்டு தமிழீழம் சாத்தியமா என்கிற கேள்வியை நாம் எழுப்புதல் வேண்டும்.

எமது இறுதி இலக்கு தமிழீழமாக இருப்பதில் தவறில்லை, ஆனால் அதற்காக வேறு எதையுமே செய்யாமல் முரண்டுபிடிப்பதானாலும் எதுவும் ஆகப்போவதில்லை. இருக்கும் கொஞ்சத்தையாவது காப்பாற்றுவதற்கு எம்மாலானதைச் செய்வதில் தவறில்லையே?

தனிநாடு என்பது வேண்டும் வேண்டாம் என்ற முடிவுகளை எடுக்கும் அவசியம் அல்லது அதிகாரம் புலம்பெயர் அமைப்புகளுக்கு அடிப்படையில் இல்லை. சூழ்நிலை சார்ந்து இந்த அவசியமும் அதிகாரமும் தாயகத்தில் வாழும் மக்களுக்கே உண்டு.

தாயகத்தை துறந்து அந்நிய நாடுகளில் குடியுரிமைபெற்றவர்கள் எதற்காக தனிநாடு வேண்டும் வேண்டாம் என்ற முடிவுகளை எடுக்க முற்படுகின்றார்கள்? பணபலமும் பாதுகாப்பான இடங்களில் இருப்பதால் தாயக மக்களை நாட்டாண்மை செய்ய முற்படும் போக்கே இவ்வாறான பிதற்றல்கள்.

நேற்றுத் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தனிநாடு என்பது கொள்கையாக இருந்தது. இன்று அதனிலும் குறைந்த அதிகாரம் எதிர்பாரப்பாக இருக்கின்றது நாளை அழுத்தங்கள் நெருக்கடிகள் ஆக்கிரமிப்புகள் சார்ந்து தனி நாடு என்பது மீளவும் போராட்ட வடிவமாகலாம் இல்லாமலும் போகலாம்,  இவை முற்று முழுதாக தாயக மக்கள் சார்ந்ததும் அவர்களின் நூறு வீத முடிவும் சார்ந்தது.

தாயகத்தில் வாழும் மக்கள் என்ன முடிவெடுக்கின்றார்களோ அவர்கள் முடிவுகளுக்கும் அது சார்ந்த போராட்டங்களுக்கும் புலம்பெயர் அமைப்புகள் ஆதரவாக இருக்க முடியுமே தவிர அவர்கள் இடத்தில் இவர்கள் இருந்து அவர்களுக்காக எல்லாவற்றையும் முடிவு செய்ய எந்த அதிகாரமும் அவசியமும் கிடையாது.

தனி நாடு வேணும் வேண்டாம் என்ற எந்த முடிவையும் எடுக்கும் தகுதியோ யோக்கியதையோ இல்லை அதிகாரம் அவசியம் எதுவும் புலம்பெயர் அமைப்புகளுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

திபெத்தில் இருக்கவேண்டிய தலாய் லாமா புலம்பெயர்ந்து இந்தியாவில் இருக்கிறார். அவர் திபெத் விடுதலைக்குப் போராடுகிறார். அரசியல் முடிவுகளை எடுக்கிறார். உண்மையில் அவரும் திபெத் மக்களின் முடிவுக்குத்தான் கட்டுப்பட வேணும். ஏனென்றால் தர்க்க அடிப்படையில் அவரும் "புலம்பெயர்ந்துவிட்டார்". :icon_idea:

அவர் செய்யலாம் ஆனால் நாங்கள் ....ம்ம்......ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

தலய் லாமாவை திபெத்தியர்கள் கடவுள்கள் அனுப்பிய தமது வாழ்நாள் தலைவராக கொள்கிறனர். அவர் எங்கிருந்தாலும் சாகும் வரை அவர்தான் அவர்களின் பிரதிநிதி. தலைவர்.

இலங்கையில் அப்படியில்லை. நிலத்திலே மக்கள் தேர்தல் மூலம் கூட்டமைப்பை தேர்கிறார்கள். ஆக கூட்டமைப்பே அவர்களின் பிரதிநிதிகள். முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்கள்.

தலய் லாமாக்கும் புலம் பெயர்ஸுக்கும் இடையிலே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம். நமக்கு பெயர் வேணும் எண்டா புத்தன் எண்டு வைக்கலாம்.

ஆனால் தமிழ் மக்களின் இறைவனால் அனுப்ப பட்ட தலைவராக நினைப்பதெல்லாம் ஓவர் ;)

இங்கே மிகவும் வேடிக்கையான கருத்துக்கள் எழுதப்பட்டுளான, தனிநாட்டைக் கோரவில்லை என்றால் அதற்கு வரவேற்பாம், இல்லை என்றால் இவர்கள் யார் கோருவதற்காம்.

இவர்கள் யார் கண்டிப்பதற்கும் வரவேற்பதற்கும்? கூட்டமைப்பு சிரீலங்கா யாப்பினுள் நின்றே அரசியல் செய்கிறாது, அவர்கள் எப்படி தனிநாடு கோர முடியும். இது தெரிந்தே சிலர் வேண்டுமென்றே எழுதுகிறார்கள். ஒரு வாக்கெடுப்பின் மூலமே ஒட்டு மொத்த தமிழினம் எதைக் கோருகிறாது என்பதை அறீய முடியும். அதனையே பிரித்தானிய தமிழர் பேரவை கோருகிறாது.

இங்கே மையவாதாம் என்றூ  எதெற்கெடுத்தாலும் புலம்புபவர்கள் கடந்த அய்ந்து வருடங்களீல் செய்த எதாவது விழிம்பு நிலை அரசியல் நடவடிக்கை இருக்கிறாதா?.  இயங்குபவன் மீது மையவாதாம் என்றூ தூற்றீ எழுதுவதைத் தவிர உருப்படியான என்ன செயற்பாடு இருக்கிறாது?

  • கருத்துக்கள உறவுகள்

தலய் லாமாவை திபெத்தியர்கள் கடவுள்கள் அனுப்பிய தமது வாழ்நாள் தலைவராக கொள்கிறனர். அவர் எங்கிருந்தாலும் சாகும் வரை அவர்தான் அவர்களின் பிரதிநிதி. தலைவர்.

உங்களுக்கு எப்பிடி தெரியும்?? :wub: நோ விக்கிபீடியா பிளீஸ்.. :D சும்மா எழுந்தமானத்துக்கு அடித்துவிடவேண்டாம்.. சில திபெத்தியர்களை கேட்டால் சாய்பாபாதான் தென்னிந்தியர்களின் ஆன்மீகத் தலைவர் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.. நித்தியானந்தாவுக்கும் சான்ஸ் இருக்கு.. :wub: உங்களை மாதிரி நாலுபேர் அங்கயும் இருப்பினம்தானே.. :lol:

இலங்கையில் அப்படியில்லை. நிலத்திலே மக்கள் தேர்தல் மூலம் கூட்டமைப்பை தேர்கிறார்கள். ஆக கூட்டமைப்பே அவர்களின் பிரதிநிதிகள். முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்கள்.

தலய் லாமாக்கும் புலம் பெயர்ஸுக்கும் இடையிலே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம். நமக்கு பெயர் வேணும் எண்டா புத்தன் எண்டு வைக்கலாம்.

ஆனால் தமிழ் மக்களின் இறைவனால் அனுப்ப பட்ட தலைவராக நினைப்பதெல்லாம் ஓவர் ;)

தர்க்கம் இங்கே என்னெவென்றால் புலம்பெயர்ந்ததால் மக்கள் நில உரிமையை இழக்கிறார்களா என்பதே.. அதற்குள் மதத்தை திணிக்க வேண்டாம். பிறகு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லலாம். :huh:

புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் இரண்டாம் உலகப்போரின் பின் இஸ்ரேல் நிலத்துக்குத் திரும்பினார்கள். நில உரிமை இல்லாத புலம்பெயர்ஸ் யூதர்கள் திரும்பியது எவ்வாறு?? :wub: அது யூதன் இது மாறன் எண்டு கதையளக்க வேண்டாம்.. :lol:

ரோட்டில நிண்டு கொடி பிடிக்கிற கூட்டம்,

ரோட்டில் நின்று கொடி பிடிப்பது மக்கள் கூட்டம் ..... கொடி பிடிக்காவிட்டால் உங்களை சியில் தள்ளுவோம் உணவு தரமாட்டோம் என்று எந்த அச்சுறுத்தலும் இல்லாத இடத்து. ஜனனங்கள் தமது உணர்வின் வெளிப்பாடாக அதை பிடிக்கிறார்கள். தமது ஆதங்கத்தை அச்சுறுத்தல் இன்றி வெளிக்கொணர கூடிய இடங்களில் வசிப்பவர்கள் தமது உணர்வை வெளிகொனருகிரார்கள். கொடிபிடிப்பதால் உலகிற்கு நிழல் வருகிறது எல்லோரும் வந்து உதுன்கி கொள்ளுங்கள் என்று ஏதாவது பிரச்சாரம் செய்கிறார்களா? அல்லது கொடிபிடிப்பதட்கு அந்ததந்த நாட்டு அரசுகள் வரிபணத்தில் தமக்கு சம்பளம் தர வேண்டும் என்று கோருகிறார்களா???
ஒரு ஜெனாயக போக்கை கூட பொறுக்க  முடியாத நீங்கள் அடக்குமுறை அரசுகளைவிட கேவலமானவர்கள்.
 
கொடிபிடித்தால் சிறையில் தள்ளவேண்டும் என்று நான் சொல்லவில்லையே. இல்ல உங்கட வழக்கப்படி கொடி பிடிப்பவர்களை கட்டி வைச்சு மண்டையில போட வேணும் என்றும் நான் சொல்லவில்லை. கொடிபிடிக்கிற கூட்டமும் நட்டு கழண்ட அரசு செய்ததை விட உலக தமிழர் பேரவை 100 மடங்கு வேலை செய்துள்ளது என்ற கருத்தை தான் நான் முன்வைத்தேன். உங்களுக்கு ஒவ்வாத ஒரு கருத்தை வைப்பதால் நாங்கள் அடக்குமுறை அரசுகளைவிட கேவலமானவர்களா? ஒரு மாற்றுக்கருத்தையே ஏற்றுக்கொள்ள முடியாத நீங்களெல்லாம் ஜனநாயக போக்கைப்பற்றி பாடம் எடுப்பது தான் வேதனை.
 
நட்டு கழண்ட அரசு போன்றவை செய்ததை விட

ஓவரு அமைப்பின் பாதையும் செயற்பாடும் வேறு பட்டவை. அதனால்தான் வேறு வேறு பெயர்களில்  இயங்குகிறார்கள். ஒரு அமைப்பின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்கலாம். மற்றது மறைமுகமாக இருக்கலாம். உங்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை அவர்கள் செய்யாது போய்  இருப்பின் அதை கோடிட்டு. சாதாரண ஆறறிவு மனிதர்கள் போன்று அதை எழுதலாம்.  கூட நிண்டு நட்டு களட்டியவர்களில் நீங்களும் ஒருவரா? மேலே உள்ள கருத்தில் நட்டு கழண்டு  உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஒன்றை உருவாக்க மூவர் கூடினால் .............. நட்டு கழட்ட என்று நாலுபேர் கூடும் இடத்து சில சிக்கல் இருக்கலாம்.

உங்கள் கருத்தை வைத்து பார்க்கும்போது. மிகுந்த ஆதாரம் உங்களிடம் இருக்கிறதுபோல் தெரிகிறது .... கூட நின்று நட்டுகளட்டிய வக்கிர எண்ணம் உங்களிடம் இருக்கும்போது. ஏன் நல்ல எண்ணத்துடன் கூடிய மூவரை இழுக்கிறீர்கள்??
 
இவர்கள் இந்த அரசை உருவாக்கி தேர்தல்களை வைத்த போது நானும் ஏதோ வித்தியாசமாக செய்வார்கள் என்று நம்பினேன். அவர்களின் தேர்தல்களில் வாக்கும் அளித்தேன். ஆனால் 4 வருடங்களில் அவர்கள் கூடி சமோசா சாப்பிட்டதும் தங்களுக்குள்ள அடிபட்டதையும் தவிர ஆக்கபூர்வமா எதையும் செய்ததா காணேல. ஏதாவது கழட்டி இருந்தா தெரியப்படுத்தவும் அவர்கள் மீதான எனது எண்ணத்தை மாற்றிக்கொள்கிறேன். 

உலக தமிழர் பேரவை 100 மடங்கு வேலைகளை செய்துள்ளது.

வேலை என்றால் என்ன வேலை என்பது முதலில் எழுதவேண்டும்.

கொஞ்சம் ஆட்கள் தொகை கூடி இருப்பவர்கள் பல்லு தீட்டுவது  கக்கா போவது முகம் கழுவது போன்ற வேலைகளையும் ஆட்கள் தொகை குறைந்த கூட்டத்தைவிட கூடுதலாகத்தான் செய்வார்கள். 
எந்த வேலையை 100 மடங்கு கூடுதலாக செய்தார்கள் என்பது குறிப்பிட்டு எழுதினால்தான். நீங்கள் எதை பற்றி எழுதுகிறீர்கள் என்பதை மற்றவர்களால் புரிய முடியும். எழுதாதவரை வெறும் அவதூறாக மட்டுமே இது இருக்கிறது. உங்களின் தற்போதைய வேலை அதுவா?? 
 
இது விதண்டாவாதம். கருத்தெழுதி எனது நேரத்தை விரயப்படுத்த விரும்பவில்லை. பிரித்தானிய பிரதமரோட எமது பிரச்சனைகளைப்பற்றி விவாதிக்கும் அளவிற்கு அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றன. 
 
  • கருத்துக்கள உறவுகள்

தனிநாடு என்பது வேண்டும் வேண்டாம் என்ற முடிவுகளை எடுக்கும் அவசியம் அல்லது அதிகாரம் புலம்பெயர் அமைப்புகளுக்கு அடிப்படையில் இல்லை. சூழ்நிலை சார்ந்து இந்த அவசியமும் அதிகாரமும் தாயகத்தில் வாழும் மக்களுக்கே உண்டு.

  • அவசியம்  நாங்கள் அவசியமானதை மட்டும் செய்வதில்லை. எமக்கு விருப்பமானதையும் எமது வாழ்வுக்கு வளம் சேர்ப்பதையும் நாம் செய்வோம்.

  • அதிகாரம் எங்களால் செய்ய முடிந்த எதையும் நாம் செய்வதற்கு எமக்கு அதிகாரம் உள்ளது. 

  • தனிநாடு இலங்கையில் தனிநாடு தமிழருக்கு அமைவது எமக்கு விருப்பமானதும் பயனுள்ளதும் ஆகும். அதை அமைக்கும் பண பலமும், ராஜதந்திர அரசியல் பலமும் புலம்பெயர்ந்த தமிழர்களான எமக்கு உள்ளது. 

  • மக்கள் அங்கே உள்ள மக்கள் பணபலமோ அரசியல் பலமோ அற்றவர்கள். அவர்கள் அடிக்கு பயந்து வருமானத்துக்கு இரந்து வாழும் மக்கள். அவர்களின் அபிப்பிராயத்தை அறிவதும் கடினம். அதனை அறிந்து முடிவுகள் எடுக்க வேண்டிய தேவையும் எமக்கு இல்லை.

புலம்பெயர் அமைப்புக்களின் கொள்கை விளக்கத்தை புரியும் படியாக தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்.

-மேலும் உங்களுக்கு விருப்பமானவைகள் மற்றும் வளம் சேர்ப்பவைகள் என்னென்ன என்பதை விரிவாக்கம் செய்தால் இவற்றை அறியாத புலம்பெயர் மக்களும் சற்று வளம் சேர்க்க உதவியாக இருக்கும்.

- அதிகார வரையறுப்புக்கு கீழே செய்ய முடிந்த எதையும் செய்வோம் என்கின்றீர்கள். அந்த வகையில் உங்கள் அதிகாரப் பிரயோகத்திற்கு இடைஞ்சலானவர்களுக்கு புலம்பெயர் தேசத்திலும் மரணதண்டனை வழங்கப்படுமா?

- தனி நாடு என்ற கோட்பாட்டுக்கு கீழே பணபலம் ராஜதந்திர அரசியல் பலங்கள் குறிது சொல்லப்படுகின்றது. இந்த இரண்டையும் வைத்து போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு புனர்வாழ்வு தடைமுகாமில் இருந்து விடுவித்தல் வறுமைக்கு உதவுதல் காணாமல் போனவர்கள் மீதான விசாரணை போன்ற எதிலும் அதை பிரயோகிக்கவில்லையே அது ஏன்? உங்கள் ராசதந்திர அரசியல் பலங்கள் ஒன்லி பூசுவாக்களுக்கு மட்டுமானதா? மேற்தட்டு வர்க்கத்துக்கு மட்டுமானதா?

-மக்கள் குறித்த உங்கள் மேலான பர்வையில் அங்குள்ளவர்கள் அடிக்குப் பயந்தவர்கள் என்கின்றீர்கள். அடிக்குப் பயப்படாத நீங்கள் ஏன் அங்கு நிற்கமுடியவில்லை? உங்கள் புலம்பெயர்வு வருமானத்தை இலக்காகக் கொண்டதில்லை என்கின்றீர்களா?

அங்குள்ள மக்களின் அபிப்பிராயத்தை அறியவேண்டிய அவசியம் இல்லை என்கின்றீர்கள் அந்தவகையில் உங்களின் அபிப்பராயங்கள் முடிவுகளை ஏற்கவேண்டிய அவசியம் அங்குள்ள மக்களுக்கும் இல்லை என்பதே உண்மை.

சுருக்கமாக சிங்களப் பேரினவாதம் எவ்வாறு தமிழர்களை அவர்கள் விருப்பு வெறுப்பு அபிலாசைகளை கருத்துக்களை அலட்சியப்படுத்துகின்தோ அதையே தான் நீங்களும் பணபலம் ராஸதந்திரம் அரசியல் என்றவைகள் ஊடாக வெளிப்படுத்துகின்றீர்கள். பேரினவாதமும் மையவாதமும் தமிழர்களின் பொது எதிரிகள் என்பதை வெளிப்படையாக உணர்த்தும் உண்மையை பதிந்தமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய தமிழர் பேரவை - BTF உலகதமிழர் பேரவை - GTF. இரண்டும் வேறானவை.

  • கருத்துக்கள உறவுகள்

இசை இது உங்களுக்கு:

http://www.dalailama.com/biography/significance

இந்த சைட்டில் நீங்கள் மேலும் தேடினா நான் சொன்ன கருத்தின் ஆழம் புரிய வாய்ப்பிருக்கு.

தலய் லாமா ஒரு அரசியல்-சமய-ஆன்மீக தலைவர். கிட்டத்தட்ட கடவுளின் ஏஜெண்ட் மாதிரி. அப்படித்தான் பெரும்பாலான திபெத்தியர்கள் நம்புகிறார்கள் அல்லது நம்ப வைக்கப் படுகிறார்கள்.

ஆகவே தலய் லாமா எங்கிருந்தாலும் அவர்தான் அரசாங்கம், அவர் வச்சதுதான் சட்டம்.

புலம் பெயர்ஸுக்கு நிலத்து மக்கள் மேல் அப்படி ஒரு அதிகாரம் இருப்பதாக எனக்குத் தெதியாது.

இதுதான் தலய் லாமாக்கும் புலம் பெயர்ஸுக்கும் உள்ள வித்தியாசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.