Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா?

 

ஆம்.... என்று, சொல்வேன் நான்.
இரண்டு, பிள்ளைகளை பெற்ற நான்...!?

மூன்றாவது, பிள்ளையையும்... பெற்றால்,  என் பொருளாதார நிலைமை, வீட்டில் இட வசதி இல்லாதது என்பதால்....  எனது மனைவி வயிற்றில் உருவாகிய...  (ஆறு கிழமை ஆன)  மூன்றாவது கருவை அழிக்க, வைத்தியர் உதவியை நாடினேன்.

 

அவர்களும்.... கருவில், உருவாகும் குழந்தையை அழிப்பது தவறு.
உங்களுக்கு, சில வழிகட்டுகின்றோம் என்று, இரண்டு மாதம், ஒவ்வொரு அலுவலகமும் ஏறி, இறங்கி வைத்து அன்பான... ஆலோசனையால் காலம் கடந்து......
மூன்று மாதம், ஆகி விட்டது.
 

இப்போ..... கருவை, கலைக்கத் தயார், என்று.....

அவர்கள் பச்சைக் கொடி காட்டிய போது....எங்களுக்கு, கொஞ்ச தயக்கம்,

அந்த இடத்திற்கு சென்ற, மனைவியின்... நடையை நினைத்தால்... மனம் இப்போதும் கலங்கும்.

 

சிறிது பேசியும், உற்சாகம் கொடுத்தும்....

கருக் கலைப்பு நிலையத்துக்குச் சென்று....
எல்லாச் சோதனைகளும், கேள்விகளும் முடித்து....
 

என்னை.... வெளியே... அனுப்பி,
ஊசி போட,  ஆரம்பிக்கும் போது...
ஊசியை.... தட்டி விட்டு, மனைவி....
பச்சை உடுப்புடன், என் முன் வந்து, நின்று,
நான்.... என், குழந்தையை கொல்ல... அனுமதிக்க மாட்டேன், என்று கத்தினார்........

 

(தொடரும்)

நல்ல ஒரு திரி. தொடருங்கள் தமிழ்சிறி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ,உங்கட கையிலதான் இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா... நடந்தது, என்று...
 

எனது, மனதில் உள்ள, பதட்டத்தை தணிக்க முடியாது,
அவளை... ஆலோசனை கேட்டேன்...

 

இது, சரி வராது. இவங்கள், என்னையும் பிள்ளையும் சேர்த்து கொல்லப் போறாங்கள்,
வாங்கோ..... வீட்டுக்குப் போவம். என்னும் போது....
 

மருத்துவர்களும், ஊழியர்களும் எம்மை... விநோதமாக பார்க்காமல்,

சிரித்துக் கொண்டே..... இது, இங்கு... வழமையாக நடப்பது தான்...
உங்களது.... மூன்றாவது, பிள்ளைக்கு வாழ்த்துக்கள் என்று கூறி...
ஒரு விசிடிங் கார்ட்டை, கையில் தந்து விட்டார்கள்.
 

அதில்..... "அப்பா, நீங்கதான்  கவன மாயிருக்கணும்."
என்ற மாதிரி...ஒரு வாசகமும் தொலை பேசி இலக்கமும்..
இது... என்ன, சிக்கலாய்.... என்று,

 

எதுக்கும்.... வீட்டை, போய்... யோசிப்பம் என்று விட்டு...
வாயில், புன்னகை பூத்த படி.... காரை ஸ்ரார்ட் பாண்ணினேன்.

 

(தொடரும்)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழ்சிறி...வாசிக்க ஆவல்

  • கருத்துக்கள உறவுகள்

எங்க எழுதிக் கொண்டு இருந்தவரைக் காணாம்.. :lol:.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற, வெள்ளிக்கிழமை தான்..... மிகுதி எழுதுவேன்.
அது வரை..... பொறுமை காக்கும் படி, உறவுகளை அன்பாக வேண்டுகின்றேன்.fahrrad.gif:D

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தடை சிகிச்சை தேவையற்றது என நினைக்கிறேன்..

 

சிந்தித்தால் வழிமுறைகளுமுண்டு,  ஐம்புலன்களையும் கட்டுப்பாடுடன் ஆள, வாழவும்  முடியும்.

மனமிருந்தால் மார்க்கமுமுண்டு, சிறப்பான வாழ்வுமுண்டு.

ஒரு நாள் கவனக் குறைவு கூட உங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளலாம் :)  ஆதலால் ஆண்களுக்கு கருத்தடை அவசியம்தான் !!

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி முடிந்து சனியும் வந்திட்டுது.இன்னும் தெளியவில்லையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் வயிற்றில் வளரும் கரு வளரட்டும்,
அதற்கிடையில் நானே.... கருத்தடை செய்வது என்று தீர்மானித்து,

அப்பாவிடம் ஆலோசனை கேட்டேன். அவர், இதனை ஆண்கள் செய்வது நல்லதல்ல என்று கூறி,

மூன்றாவது குழந்தை பிறக்கும் போது....ஆஸ்பத்திரியில் வைத்து,

மனைவிக்கு கரு உருவாகாமல், அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறியதை,

மனைவியிடம் சொல்ல... அவர் தயங்கினார்.

 

இது சரிவாரது.... "ஆறின கஞ்சி, பழங் கஞ்சி" என்று விட்டு,
அடுத்த நாள், அவர்கள் தந்த தொலை பேசி அட்டையில் உள்ள வைத்திய நிலையத்துக்கு தொலை பேசி எடுத்து,

எனக்கு... நேரம்  ஒன்றை ஒதுக்கி தரும் படி கேட்ட போது.....

அடுத்த நாள், தம்மை வந்து சந்திக்கும் படி, நேரம் ஒதுக்கி தந்தார்கள்.

 

பல் வைத்தியர், கண் வைத்தியர், காது வைத்தியரை சந்திக்க கிழமை கணக்கில் காத்திருக்க வேணும்,

வெட்டி எறியிறதுக்கு மட்டும்..... உடனை வரச்  சொல்லுறாங்களே....

என்று, எனக்கு கொஞ்சம் உள்ளூறப் பயம் வரத்தான் செய்தது......

 

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் அங்கு சென்ற போது....
எனது உடல் நிலையை சோதித்து விட்டு, "வாசெக்டமி" அறுவை  சிகிச்சை செய்ய.....  

உடல் தயாரான நிலையில் உள்ளதாக தெரிவித்து, சில படிவங்களில் கையெழுத்து இட வேண்டும்,

அதற்கு முன் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை கேளுங்கள் என்றார் வைத்தியர்.

 

அப்போ... நான் சிலவேளை..
எப்போதாவது, நாலாவது பிள்ளை பெற விரும்பினால்.... முடியுமா?
இதனை மீண்டும் சீரமைக்க முடியும். ஆனால்... 100% உத்தரவாதம் தர முடியாது என்று கூறினார்

 

இதனால்... எனது ஆண்மைக்கு, பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்டேன்.
அதற்கு அவர், ஆண்மைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
விதைப் பையிலிருந்து, விந்து அணுவை சுமந்து வரும் நரம்பை.....

இரு பக்கமும் வெட்டி, தைத்து விடுவோம். அதனால் விந்து வெளியேறுவதில் பாதிப்பு இல்லை.

வழமை போல் எல்லாம் இருக்கும்.ஆனால் கருத்தரிக்க முடியாது என்று கூறினார் வைத்தியர்.

 

எனக்கும் திருப்தி ஏற்பட்ட பின்... அவர்களது படிவங்களில்.... கையெழுத்து  இட்டு. 

அடுத்த கிழமை, ஒருநாள் சிகிச்சையை மேற்கொள்ள காலை எட்டு மணிக்கு, வரச் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பு... பொறுத்த இடத்தில கொண்டுவந்து கதையை நிப்பாட்டிப்போட்டு...! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிய மனப் போராட்டத்துடன்.... அடுத்த கிழமையும், வந்தது.
காலை எட்டு மணிக்கு அங்கு, சென்ற போது....
என்னை வரவேற்பறையில்... காத்திருக்கச் சொன்னார்கள்.
ஐந்து நிமிடத்தில்... எனது பெயரை அங்குள்ள, ஒலிபெருக்கியில் அறிவித்து....

இரண்டாம் இலக்க அறைக்கு, போகச் சொன்னார்கள்.

 

எனக்கு... இப்ப, நெஞ்சு பக்,பக் என்று அடிக்க தொடங்கிவிட்டது.
தேவையில்லாத வேலை பாத்திட்டனோ.... என்றும் யோசித்தேன்.
சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற படி, அவர்கள் குறிப்பிட்ட  அறையை நோக்கி சென்றேன்.

 

இரு அழகிய ஜேர்மன் பெண்கள், காலை வணக்கம் சொல்லி வரவேற்றார்கள்.
அட.. இது வேறையா... இவங்களா..... எனக்கு, ஆபரேஷன் பண்ணப் போறாங்கள் எண்டு யோசித்துக் கொண்டிருக்க.....

 

ஒரு சிறிய அறையை காட்டி, அதற்குள் என் ஆடைகளை கழட்டி விட்டு,

அவர்கள் தந்த ஆடையை அணிந்து வரும்படி கூறினார்கள்.
அதனை அணிந்து வந்த பின்.... அங்கிருந்த அறுவைச் சிகிச்சை கட்டிலில் என்னை, படுக்கும் படி கூறி.....
இரண்டு ஊசியை.... இரண்டு விதைப் பக்கமும் மெதுவாக ஏற்றிய போது...

"கட்டெறும்பு" கடித்த மாதிரி, சிறிதாக.... ஒரு வலி மட்டும் ஏற்பட்டது.

 

(தொடரும்)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

...

எனக்கு... இப்ப, நெஞ்சு பக்,பக் என்று அடிக்க தொடங்கிவிட்டது.

தேவையில்லாத வேலை பாத்திட்டனோ.... என்றும் யோசித்தேன்.

சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற படி, அவர்கள் குறிப்பிட்ட  அறையை நோக்கி சென்றேன்.

 

இரு அழகிய ஜேர்மன் பெண்கள், காலை வணக்கம் சொல்லி வரவேற்றார்கள்.

அட.. இது வேறையா... இவங்களா..... எனக்கு, ஆபரேஷன் பண்ணப் போறாங்கள் எண்டு யோசித்துக் கொண்டிருக்க.....

...

(தொடரும்)

 

என்னவாகுமோ என்ற பயம் குழப்பம் ஒரு நிச்சயமற்ற தன்மை... உங்கள் மனநிலையை உணர முடிகிறது.. சிறி!

 

சின்ன ஃப்ளாஷ் பேக்!

இரு வருடத்திற்கு முன் விடுப்பில் தமிழகம் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் போக, குடுமப்த்தினரின் வற்புறுத்தலுக்கிணங்க மருத்துவமனை சென்று சில பரிசோதனைகளை முடித்த பின், மருத்துவர் அறிக்கையை படித்துவிட்டு, என்னை மட்டும் அருகிலுள்ள அறைக்கு போகச் சொன்னார்கள். 'சரி, டாக்டர் உடம்பை பிடித்து பரிச்சோதனை செய்யப் போகிறார் போல' என எண்ணியவாறு படுக்கை மேடையில் அமர்ந்திருந்தேன்.

 

சிறிது நேரம் கழித்து ஒரு பெண் நர்ஸ், 'சார்.. உங்களுக்கு இந்த ஊசி போடவேண்டும் படுங்கள்' என கூறினார். 'இல்லம்மா.. நான் உட்கார்ந்து கொள்கிறேன், இதுவே வசதியாக இருக்கிறது' என முழுக்கை சட்டையின் கையை மடித்து காண்பித்தேன்.

பெண் நர்ஸ், 'ஹலோ சார், நீங்கள் பேன்ட்டை தளர்த்திவிட்டு திரும்பப் படுங்கள்' என்றவுடன் வெறுத்தே போய்விட்டது!

 

'இல்லம்மா.. நீ போய் ஆண் நர்ஸ்ஸை வரச் சொல்லு.. நான் அவரிடமே போட்டுக்கொள்கிறேன்' என்றவுடன், நர்ஸ் சிரித்துக்கொண்டே வெளியே நின்ற என் மனைவியை அழைத்து 'உங்களவருக்கு நீங்கள் சொல்லுங்கள்' என கூறிவிட்டு சென்றுவிட்டது..

வேறு வழி..?

பின்னர் வந்த அந்த பெண் நர்ஸ், பின்னாடி ஊசியை செலுத்திவிட்டு, 'இதெல்லாம் எங்கள் தொழிலில் சகஜம்' என் முன்முறுவலுடன் போய்விட்டது.

 

எனக்கு கூச்சமும், தர்மசங்கடமுமாகிவிட்டது.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
சிறிஅண்ணா முழுவதையும் அப்படியே பகிருங்கள்.
 
இப்படி ஒரு எண்ணம் எனக்கும் தோன்றி இருக்கிறது. சென்ற மாதம்தான் கூகிளில் தேடி சில விடயங்களை வாசித்தேன். உங்கள் அனுபவத்தை வாசிக்க ஆவலாக இருக்கிறது. 
 
 
ஒரு வாரம் மிகுந்த வலியாக இருக்கும் என்று வாசித்தேன். இந்த வலி பற்றிய அனுபவம் அறிய ஆவல். 
வேலைக்கு போக முடியாதா? 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில நிமிடங்களில்... வைத்தியர் வந்து, நலம் விசாரித்து விட்டு,
தாம் இப்போது... அறுவைச் சிகிச்சையை ஆரம்பிக்கப் போவதாகவும்,

பயப்பட வேண்டாம் என்று கூறிய போது, தாதியர்... எனக்கு, இடுப்பு பகுதி தெரியாதவாறு.... 

ஒரு பச்சை திரைச்சீலையால் மறைப்பு போட்டார்கள்.

 

அந்தப் பகுதிக்கு மட்டும், விறைப்பு ஊசி போட்டதால்...

எனக்கு என்ன செய்கிறார்கள் என்றே... தெரியவில்லை.

30 நிமிடம் அளவில்.... சிகிச்சை முடிந்து விட்டது, என்று வைத்தியர், திரைச்சீலையை அகற்றி... 

இரத்தப் போக்கு உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக....

இன்னும் கொஞ்ச நேரம் படுத்து இருக்கும் படி கூறி அவரும் செல்ல, தாதியரும் சென்று விட்டனர்.
 

இடையிடையே... தாதியர் வந்து பார்த்துச் சென்றதில்.....

அவர்களும் திருப்தியாக இருந்ததை, அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அவர்கள் இப்போ...என்னை, வீட்டில் இருந்து போட்டுக் கொண்டு வந்த கால்சட்டையை அணிந்து வரும்படி...

என்னை கட்டிலால் இறங்க உதவி செய்தார்கள்.
 

உடை மாற்றி வெளியே வந்த பின் வைத்தியர், உங்களை கூப்பிடும்  வரை,

வரவேற்பறையில் காத்திருக்கும் படி தாதியர் கூறினார்கள்.

 

(தொடரும்...)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

"இடையிடையே... தாதியர் வந்து பார்த்துச் சென்றதில்.....

அவர்களும் திருப்தியாக இருந்ததை, அவதானிக்கக் கூடியதாக இருந்தது"

 

எதைப்பார்த்து / வைத்து அவர்கள் திருப்திபட்டார்கள் என்று கூறுகின்றீர்கள்  :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்னெண்டால் அவங்கள் சரியாய் வெட்டவில்லைப் போலத் தோணுது.யாழ்க்களத்தின் கிளுகிளுப்பு மன்னர் சிறியர்தானே!!!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நல்ல விறுவிறுப்பையும் ஆவலையும் தூண்டி விட்டது சிறி. தொடருங்கள் மிகுதியை.


எல்லாத் துன்பத்தையும் பெண்கள் மட்டுமே அனுபவிக்க வேணுமோ ??? ஆனாலும் கருத்தடை செய்வதாயின் ஆண்களுக்குச் செய்வதே நல்லது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நேரத்தில், வைத்தியரும் அழைக்க.... அவரின் அறைக்குச் சென்றேன்.
அவர் என்னை அமரச் சொல்லி விட்டு, சத்திர சிகிச்சை எவ்வித சிக்கலும் இல்லாமல் முடிந்து விட்டது,

இப்போ அவ்விடத்தில்.... "பிளாஸ்ரர்" போடப்பட்டுள்ளது,

தண்ணீர் படாமல், கவனமாக இருக்கும் படியும்...

மூன்று நாளில், மீண்டும் வந்து சந்திக்கும் படியும் கூறி,

மருத்துவ விடுப்பு எழுதும் படிவத்தை எடுத்தார்.

 

இப்போ... ஏற்கெனவே, 10 மணியாகி விட்டதால்,

இன்றைய ஒரு நாளுக்கு மருத்துவ விடுப்பு எழுதி தரப் போவதாக கூறினார்.
அப்போ  நான், "ஷிப்ற்" வேலை செய்ததால்....

எனக்கு பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் வேலை ஆரம்பிக்கின்றது,

இன்று வேலைக்குப் போகலாமா என்று கேட்டேன்.

அவர் தனக்கு, ஆட்சேபனை இல்லை.
ஆனால்... அதிகம் நடக்கவோ, பாரம் தூக்கவோ.... வேண்டாம் என்று கூறி, வழியனுப்பி வைத்தார். 

 

எனது காரிலேயே... நானே வாகனத்தை ஓடிக் கொண்டு வீடு வந்து,

அழைப்பு மணியை... அடித்து, உள்ளே சென்ற போது...
மனைவி ஒன்றும், பேசாமல்.... கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.
(தொடரும்...)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கரைச்சலாய்.... இருக்கு என்று நினைத்துக் கொண்டு,

"ஏனப்பா அழுகிறீர்" என்று கேட்டேன்.
அவர்....  நான் அழவில்லை,  தனக்காக... நான் சத்திர சிகிச்சை செய்த,

உங்களின் பெருந்தன்மையை நினைக்க, ஆனந்தக் கண்ணீர் வந்தது என்று,

ஒரு கப்பில் பிழிந்து வைத்திருந்த தோடம்பழச் சாறை தந்தார்.

 

அதனை குடித்து விட்டு, எனது தேசிய உடையான சாறத்தை (லுங்கி) கட்டிக் கொண்டு,

சோபாவில் கால்நீட்டி அமர்ந்திருக்க, அந்த இடத்தில் சாதுவான நோ இருக்கிற மாதிரி தெரிந்தது.

ஆனால்... அது பாரதூரமாக  தெரியா விட்டாலும்,

விறைப்பு ஊசியின்.. வீரியம் குறைய இன்னும் அந்த வலி, அதிகரிக்குமோ என்ற அச்சம் இருந்தது.

இதற்குள் வைத்தியரிடம் இருந்து மருத்துவ விடுமுறைக்கான படிவத்தை பெற்றிருக்கலாமோ என்று யோசித்தேன்.

இனி ஒன்றும் செய்யமுடியாது.... வேலைக்குப்  போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிலைமை. 

 

மதிய உணவருந்தி விட்டு, வேலைக்குப் புறப்பட்ட போது...
மனைவி, "கவனமப்பா...... தட்டுப் படாமல் பாத்துக் கொள்ளுங்கோ...."

என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

 

அப்போது வேலை செய்த இடத்தில்.....

பல "வம்பன்கள்" வேலை செய்த படியால்....

இதனை தட்டுப் படாமல், எப்படி பாதுகாக்கலாம்? என்று யோசித்த படி வாகனத்தை ஓடிக் கொண்டிருந்தேன்.
 

(தொடரும்...) 

   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரைவில். இத் திரி முற்றுப் பெற உள்ளது.
அதற்கிடையில்.... வாசகர்களின் கருத்துக்கள், வரவேற்கப் படுகின்றது. :D

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து என பார்த்தால், 'ஏன் இவர் வம்பை விலைகொடுத்து வாங்குகிறார்?' என்றே தோன்றுகிறது.. :o

 

**** ல் விவரமானவர், சுய கட்டுப்பாட்டிலும் நிச்சயம் விவரமாக இருக்க வேண்டுமே! :)

 

ஏன் இல்லை? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.