Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும்

Featured Replies

141121144857_maithripala_sirisena__640x3

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2014/11/8ca6b0df_profileofmaithripalasirisena_141121_maithripala_profile_au_bb.mp3

பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.
 
உள்ளூர் பள்ளிக்கூடமொன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார்.
 
அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத்தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார்.
1971-ம் ஆண்டில் ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் மைத்திரிபால சிறிசேனவும் இருந்துள்ளார்.
 
மாணவர் பருவத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர் இளைஞர் அணி செயற்பாட்டாளராக இருந்துள்ள மைத்திரிபால சிறிசேன,
1970களில் இறுதியில் அந்தக் கட்சியின் தீவிர உள்ளூர் அரசியல் குழுக்களில் அங்கம் வகித்துள்ளார். அதன் பின்னர், 1980களின் தொடக்கத்திலிருந்தே கட்சியின் தேசிய மட்ட அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகிக்கத் தொடங்கினார்.
இதில் 1982-ம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் அணித் தலைவராகவும் பின்னர் கட்சியின் பொலிட் பீரோவிலும் உறுப்பினரானார்.
 
1989-ம் ஆண்டில், 38வது வயதில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவனார்.
அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றதுக்கு வந்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.
 
பின்னர், சந்திரிகா பண்டாரநாயக்க 1994-ம் ஆண்டில் அமைத்த அரசாங்கத்தில் துணை நீர்ப்பாசனத்துறை அமைச்சராக நியமனம் பெற்ற மைத்திரிபால, மூன்று ஆண்டுகளில் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதிவியொன்றுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைச் செயலாளராகவும் வளர்ச்சி கண்டார்.
பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்சியின் துணைத் தலைவராக நியமனம் பெற்ற சிறிசேன. 2004-ம் ஆண்டில் சந்திரிகா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமனம் பெற்றார்.
 
அதன்பின்னர், மகிந்த ராஜபக்ஷவின் தலைமைக் காலத்திலும் அதே பதவிநிலையில் நீடித்துவந்த மைத்திரிபால, விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அதன் பின்னர், விவசாயம் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் மைத்திரிபால, 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் படி, சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உச்சகட்டத்தைத் தொட்டிருந்த காலத்தில் 2008-ம் ஆண்டில் கொழும்பின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலையில் மைத்திரிபால சிறிசேன தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் திகதி நடக்கவுள்ள நிறைவேற்று ஜனாதிபதிக்கான அடுத்த தேர்தலில், மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக, எதிரணிகள் சேர்ந்து களமிறக்கின்ற பொது வேட்பாளர் தான் என்று இன்று வெள்ளிக்கிழமை மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
63 வயதான மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மனைவியான ஜயந்தி புஸ்பா குமாரி தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • தொடங்கியவர்

மகிந்த ராஜபக்ஷ- மைத்திரிபால சிறிசேன: ஓர் ஒப்பீடு

இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் கட்சிக்குள்ளிருந்தே அவருக்கு எதிரான பொது வேட்பாளர் உருவாகியிருப்பது இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில்,
 
*இலங்கை அரசியலில் மைத்திரிபால சிறிசேன என்பவர் யார்?
 
*மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து மைத்திரிபால சிறிசேன எந்த இடத்தில் வேறுபடுகின்றார்?
 
*ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்த ராஜபக்ஷவின் பின்புலத்துக்கும் மைத்திரிபால சிறிசேனவின் பின்புலத்துக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவும் உள்ளதா?
 
*ஆளும் சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்ற செல்வாக்கையும் மீறி மைத்திரிபாலவால் அந்தக் கட்சிக்குள் ஆதரவைத் திரட்ட முடியுமா?
 
*2010-இல் சரத் பொன்சேகா மகிந்தவுக்கு எதிரான பொது வேட்பாளராக களமிறங்கிய சந்தர்ப்பத்திலும் பார்க்க, இப்போது மைத்திரிபாலவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கின்றது?
 
*சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு மைத்திரிபாலவுக்கு எந்தளவுக்கு கிடைக்கும்?
 
*இம்முறைத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் தீர்க்கமான சக்தியாக அமைய வாய்ப்பு உள்ளதா?
 
*மகிந்தவுக்கு போட்டியாக அவரது கட்சிக்குள்ளிருந்தே தான் ஒருவரை களமிறக்க வேண்டியிருக்கின்றது என்கின்ற நிலைமை இலங்கை அரசியலில் எதனை உணர்த்துகின்றது?
 
*நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு பாதுகாப்பாக அமைய முடியுமா?
 
உள்ளிட்ட கேள்விகள் தொடர்பில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான என். வித்யாதரன் பிபிசி தமிழோசைடன் நடத்திய ஆய்வுக் கலந்துரையாடலை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

100 நாட்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போறாராம்.. chuckling-gesture-smiley-emoticon.gif

  • கருத்துக்கள உறவுகள்

100 நாட்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போறாராம்.. chuckling-gesture-smiley-emoticon.gif

100 நாட்களில்... ஆங்கிலம்,  ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் கற்க முடியுமானால்....

இதுவும் சாத்தியமே.....JC_hurrah.gif

141121144857_maithripala_sirisena__640x3

இவருக்கு, ஜனாதிபதிக்குக்குரிய முகவெட்டு உள்ளதா?

கொஞ்சம்... சந்தேகமாக உள்ளது. :D

100 நாள் ஜனாதிபதிக்குரிய முகவெட்டு உள்ளது தமிழ்சிறி.

இவருக்கும் தற்கொலை தாக்குதல் நடந்திருக்கு . :o  எவரையும் விட்டுவைக்கவில்லை போலிருக்கு .

புலிகளுக்கு உப்பு காண்டம் யார் வந்தாலும்  தொடரும் போல .

இவருக்கும் தற்கொலை தாக்குதல் நடந்திருக்கு . :o  எவரையும் விட்டுவைக்கவில்லை போலிருக்கு .

புலிகளுக்கு உப்பு காண்டம் யார் வந்தாலும்  தொடரும் போல .

எங்க அடிபட்டாலும் நீங்கள் ஒரே காலைத்தான் தூக்குறிங்களே அது ஏன்? 

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் திகதி நடக்கவுள்ள நிறைவேற்று ஜனாதிபதிக்கான அடுத்த தேர்தலில், மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக, எதிரணிகள் சேர்ந்து களமிறக்கின்ற பொது வேட்பாளர் தான் என்று இன்று வெள்ளிக்கிழமை மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
63 வயதான மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மனைவியான ஜயந்தி புஸ்பா குமாரி தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுதான் மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமாம்

https://m.facebook.com/profile.php?id=365053451326

  • கருத்துக்கள உறவுகள்

எங்க அடிபட்டாலும் நீங்கள் ஒரே காலைத்தான் தூக்குறிங்களே அது ஏன்? 

அது, அவர்களின் குணம்.

நாய்வாலை,  நிமிர்த்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அது, அவர்களின் குணம்.

நாய்வாலை,  நிமிர்த்த முடியாது.

மாற்றம் என்ற ஒன்றைத் தவிர....எதுவுமே நிரந்தரமில்லை! :D

- யாழ் களத்தின் தத்துவவாதி ஒருவரின் கருத்திலிருந்து பொறுக்கியது !

100_0323.jpg

100 நாட்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போறாராம்.. chuckling-gesture-smiley-emoticon.gif

அதுக்கு அவர் முதல்ல ஜனாதிபதியாக வரவெல்லோ வேணும். பொன்னர் அல்லது அம்மையார் நின்றிருந்தால் கட்டு காசாவது மிஞ்சியிருக்கும்.  மைத்திரி பாலாவை போட்ட சிங்களவனின் அறிவோ அறிவு . சிங்கள மோடையா என்று  சும்மாவா சொன்னாங்கள்.  :D  :D  :D

அதுக்கு அவர் முதல்ல ஜனாதிபதியாக வரவெல்லோ வேணும். பொன்னர் அல்லது அம்மையார் நின்றிருந்தால் கட்டு காசாவது மிஞ்சியிருக்கும். மைத்திரி பாலாவை போட்ட சிங்களவனின் அறிவோ அறிவு . சிங்கள மோடையா என்று சும்மாவா சொன்னாங்கள். :D:D:D

பொன்சேகாவும் மைத்திரிபாலவுக்கு ஆதரவு

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சும் அம்முவும் நிக்க சட்டப் பிரச்சினை விடாது. மோடயர்கள் சிங்களவர்கள் மட்டுமில்லை ;)

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர், நகைச்சுவை நடிகர் சுந்தர்ராஜனைப் போல சிரிக்கும்
இவர் அரசியலில் நகைச்சுவையாகவே இருப்பார் :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் தற்கொலை தாக்குதல் நடந்திருக்கு . :o  எவரையும் விட்டுவைக்கவில்லை போலிருக்கு .

புலிகளுக்கு உப்பு காண்டம் யார் வந்தாலும்  தொடரும் போல .

மைத்திரியும் தனது மகளின் காதலனை வாகனத்தால் அடித்து கொன்றவராம் (80 களில்) கேள்விப்பட்டீர்களோ?? :unsure:  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இவர் மீது  தாக்குதல்  நடாத்தியிருக்கிறார்கள் என்றால்....

இவர் தமிழருக்கு எதிராக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது

எனவே ஆட்சிக்கு வந்தால் தமிழருக்கு எதிராக தனது பலத்தை சிங்களமக்களுக்கு காட்ட மும்மரமாக முனைவார்..

பூனைக்கு விளையாட்டு

உயிர் போவது தமிழருக்குத்தானே.. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஹம்பாத்தோட்ட.....சிங்கள கடும் போக்காளர்கள் போலவே பொலநறுவை சிங்களவர்களும் மிகவும் கடும்போக்கானவர்களே.....இதில் மகிந்த ராஜபக்சவிற்கும் மைத்திரிபாலவிர்க்கும்....தமிழர்களை அடக்கி ஆளும் விடையத்தில் பெரிய வித்தியாசம் இருக்க போறதில்லை....என்னை பொறுத்த வரை மீண்டும் மகிந்த வந்தால் தான் சர்வதேசத்தை வைத்து தமிழர் தரப்பு தங்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்.....புதிய ஆட்சிக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேசமே தமிழர் தரப்பை இன்னும் ஒரு 10 வருடங்கள் காத்திருக்க செய்யும்.....

மகிந்த ,மீண்டும் வெல்வது கிட்டத்தட்ட முடிவானதொன்று. தேர்தலுக்கு பிறகு சந்திரிக்கா திரும்பவும் வெளிநாடு போயிடும். கட்சிமாறின ஆட்களெல்லாம் காணாமல் போடுவினம் உவர் மைத்திரி மந்தியாகலாம்.

எல்லாத்துக்கு பிறகு குள்ளநரி ரணில் திரும்ப தலையெடுக்கும். 

எப்பிடிப்பார்த்தாலும் யாரையும் ஆதரிப்பதில்லை என்பதே கூட்டமைப்பின் முடிவாகவும் வரவேண்டும்.

மகிந்தவின் ஆதிக்க

பண மற்றும் படை பலம் பற்றியும் தமிழருக்கு தெரியும்

ஆனால்......?

எனக்கு இவை எல்லாம் மகிந்த குடும்பத்தின் நரிவேலைகள் போலவே தெரிகிறது

ஒருவேளை

இறுதி நேரத்தில் மைத்திரி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவிப்பார் என்று ஒரு கணக்கு எனக்குண்டு...

கடைசி நேரத்தில், விசுகு சொன்னமாதிரியும்.... நடக்க சந்தர்ப்பம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபால நான் அறிஞ்சவரையில் இலங்கையின் இன்னுமொரு மூன்றாந்தர அரசியல்வாதி. தாராளமான ஊழல், nepotism, cronyism எல்லாம் நிறைந்த ஒருவர். முதன் முதலில் சிரசவில் கொடுத்த நேர்முகத்தில் பல கேள்விகள் கேட்டார்கள். "நான் 47 வருடம் சு.கவில் பொது செயலாளராக இருந்தேன்" என்றதைத் தவிர factual ஒரு ஆன பதிலும் மைத்திரிபால கொடுக்கவில்லை! சு.க என்ற குண்டர் கூட்டத்தை ஏதோ ஹாவார்ட் பல்கலைக்கழகம் மாதிரித் தான் இந்த மனுஷன் நினைச்சுக் கொண்டிருக்குது பாவம்! மகிந்த நித்திரை கொண்டாலும் உவர் வெல்லப் போவது இல்லை! :D

கடைசி நேரத்தில், விசுகு சொன்னமாதிரியும்.... நடக்க சந்தர்ப்பம் உண்டு

தமிழ் படமா எடுக்கின்றார்கள் .

மகிந்தா அண்ட் கோ வில் இருந்து நாட்டை காக்கவேண்டும் என்று அவர்கள் தமது எதிர்கால அரசியலை உயிரை பணயம் வைத்து எடுத்த முடிவு இது .இலங்கை என்ற நாட்டை பற்றிதான் அவர்கள் கவலை .

மைத்திரிபால தான் அநேகமாக வெல்லுவார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.