Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேஸ் (Case) படிப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

BusinessSchool-298x149.jpg

 

எம்மவர்கள்.. புலம்பெயர் வாழ்வில்.. பல்வேறு சமூக.. பொருண்மிய.. குடிவரவு குடிபெயர்வுச் சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

கடந்த காலங்களில் எதிர்கொள்ளப்பட்ட வழக்குகள் அல்லது கேஸ் படிப்புகள்...(Case study)..மற்றவர்களுக்கு பாடமாக அமையும் என்பதால்.. சட்ட நிறுவனம் ஒன்றின் கையேட்டி வெளியாகியுள்ள எம்மவர் கேஸ் படிப்புக்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

 

இதில் வரும் கேஸ் படிப்புக்கள்.. யாரையும் தனிப்பட அடையாளப்படுத்தவோ.. தண்டிக்கக் கோரவோ அல்ல. மேலும்.. ஒரு சமூகத்தின் மீது குற்றம்பிடிக்கவோ பதியப்படவில்லை. மாறாக.. தவறுகள் மீள நிகழாமல்.. தவறுகள்.. தந்திரங்களுக்குள் சிக்காமல் எமது மக்கள் நீதியான நியாயமான சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான செளகரியமான வாழ்வை வாழ வழிகாட்டுவதே நோக்கமாகும்.

 

இது தொடராக வரும். உங்கள் அனுபவங்களையும்.. அபிப்பிராயங்களையும் எழுதலாம்.

 

கேஸ் படிப்பு 1.

 

எம்மவர்கள் பலர் தாயகத்தில் இருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வந்திருந்தாலும்.. அங்கிருந்து.. பிற ஐரோப்பிய நாடுகளுக்குள் இடம்பெயரும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

 

அப்படியான ஒருவர் பிரித்தானியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனை சார்ந்த கேஸ் படிப்பு இது.

 

Mr. AB அகதியாக ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில் தஞ்சம் அடைகிறார். அவருக்கு அகதி அந்தஸ்தும் கிடைக்கிறது. அவருக்கு நீரிழிவு நோயும் உள்ளது. அத்தோடு உயர் குருதி அழுத்தம் மற்றும் இதய பாதிப்பும் உள்ளது.

 

இந்த நிலையில் அவர் 2000 ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் பிரித்தானியாவுக்குள் நுழைகிறார். EEA (The European Economic Area (EEA) கூட்டமைப்பு நாட்டுப் பிரஜை என்ற வகையில் இந்த நுழைவு அனுமதிக்கப்படுகிறது. வந்தவர் திடீர் என்று சுகவீனம் அடைகிறார்.  பின் பிரித்தானியாவில் சிகிச்சைக்கு ஆளாகிறார். பின் சுயாதீனமாக வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட வேலை தேடுவோருக்கான அரச நிதிச் சலுகை (Jobseekers allowance) நோக்கி விண்ணப்பிக்கிறார். அதேவேளை செய்யக் கூடிய வேலைகள் தொடர்பிலும் முயற்சிக்கிறார்.  இந்த இடைப்பட்ட காலத்தில் மீண்டும் வலுவான நோயில் வீழ்கிறார். நாட்டை விட்டு வெளியேறி வந்த நாட்டுக்கு போகவும் முடியாத சூழல்.

 

முன்னைய விண்ணப்பத்துக்கு மேலதிகமாக.. தன்னை கவனித்துக் கொள்ள நிதிக்காக அரச வேலை மற்றும் உதவி நிதியம் ( Employment and support allowance) பெறவும் விண்ணப்பிக்கிறார்.

 

இவை அவர் EEA பிரஜை என்ற காரணம் காட்டி நிராகரிக்கப்படுவதோடு அவர் incapacity benefit எடுக்கவும் தகுதி அடையவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையில் அவர் வங்கியில் செலுத்த முடியாத அளவு கடனாளி ஆகிறார். உறவினர்களிடம் கடன் வாங்கி கடன் சுமை தலைக்கு மேல் போய் விடுகிறது.

 

இப்போது அவர் சட்ட உதவி நாடி வருகிறார். அவருக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரகாரம் பலத்த போராட்டத்தின் மத்தியில் அரசு நிதி நிராகரிப்புக்கு எதிராக மனுச் செய்யப்படுகிறது. அந்த மனுவின் பிரகாரம்.. விசாரணையின் முடிவில் அவருக்கு Employment and support allowance கிடைக்க வழி கிடைக்கிறது.

 

----------------

 

இந்த நிகழ்வின் பிரகாரம்.. EEA பிரஜைகளாக பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழைபவர்கள் எதிர்கொள்ளும் சட்ட..நிர்வாகச் சிக்கல்களை எம் மக்கள் உணர்ந்து கொள்வது அவசியம். உறவினர்கள் அழைக்கிறார்கள் என்று விட்டு கிளம்பி வந்து குந்திக்கொண்டு இருக்காமல்.. வர முன்னரும் வந்த பின்னரும் தகுந்த (இலவச) அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு குடியகழ்வு சட்ட ஆலோசனை வழங்கும்.. வல்லுனர்களை அணுகி உங்களை பிரித்தானியாவில்  EEA பிரஜைகளாக.. சட்டப்படி குடியேற அனுமதிக்கப்படுகிறீர்கள் என்பதை உறுதி செய்யும் வகைக்கு தரப்படும் பத்திரங்களை பெற்று உங்களின் வதிவிட உரிமையை அதுசார்ந்த பிற சமூக உரிமைகளை தக்க வைக்க முடியலுங்கள்..!! தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

 

மீண்டும் இன்னொரு கேஸ் படிப்பில்.. சந்திப்போம்..

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

தொடருங்கள்....

 

(எங்களை  நக்கல் அடித்தாலும்

தம்பி  எம்மையும் நட்டாற்றில் விடவிரும்பவில்லை :icon_idea: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்த நல்லதை.. தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது அந்தச் சமூகத்தை நல்வழியில் கொண்டு செல்வதில்.. சிறிய அளவில் என்றாலும் பங்களிக்கலாம்.

 

மற்றும்படி எம்மவர்கள் திருந்தனும்..என்பதற்காகவே நக்கல் அடிப்பே தவிர.. அவர்களை வெறுத்து ஒதுக்க அல்ல..!! அவர்கள் எங்கள் இரத்தம். அவர்களை நாம் தான் இயன்றவரை வழிகாட்டி நல்வழிப்படுத்தனும். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு ஞானம் வந்திட்டுது.சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி நெடுக்கு!!!!தொடருங்கள்.நானும் ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தவன் என்ற வகையில். நல்ல விடயங்களை எழுதுகிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேஸ் படிப்பு 2

 

Mr.CD இலங்கைப் பிரஜை. ஜேர்மனிக்கு அகதியாகச் சென்றுள்ளார். அவருக்கு 2000 ஆண்டுகளின் பிற்பகுதியில் ஜேர்மன் பிரஜா உரிமையும் கிடைத்துள்ளது. அதை அடுத்து 2010 களின் ஆரம்பத்தில் பிரித்தானியாவுக்குள் தனது மகள் குடும்பத்தோடு சேர்ந்து வாழ நுழைந்துள்ளார். பிரித்தானியாவில்.. ஆரம்பத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த அவர் பின்னர் உடல்நிலை மோசமாக வேலையை நிறுத்தி உள்ளார். அவருக்கு நிறைய உடல் உபாதைகள் இருந்துள்ளன. இந்த நிலையில் அவரை அவரின் மகளே பராமரித்து வந்துள்ளார். வயதைக் காரணம் காட்டியும்.. தொடர்ந்து மகளின் உதவியின் தங்கி இருப்பதையும் விரும்பாத நிலையில்.. அவர் பிரித்தானியாவில் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு (pension credit) விண்ணப்பித்துள்ளார். 

 

ஆனால் அவருடைய ஓய்வூதிய கொடுப்பனவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. காரணம் அவர் Habitual residence and right to reside test in the UK போன்றவற்றில் தகுதி காணவில்லை என்று.

 

இவரின் மீதான இந்த முடிவுக்கு எதிராக மனுச் செய்யப்பட்டது. அதில் இவர் இந்த நாட்டுக்குள் நுழைந்த காலத்தில் வேலை செய்தமையும் பின்னர் உடல்நிலை காரணமாக வேலை செய்ய முடியாமல் போனமையும் சுட்டிக்காட்டப்பட்டதோடு அவர் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கும் தருணத்தில் 2 வருடங்களை தொடர்ச்சியாக பிரித்தானியாவில் கழித்திருந்தார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

 

மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு.. விசாரணைத் திகதி பலத்த இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் வழங்கப்பட்ட போது.. துரதிஸ்டவசமாக மேற்படி விண்ணப்பதாரி உடல் உபாதைகள் காரணமாக இயற்கை எய்திவிட்டார்.

 

---------------------

 

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்:

 

வயதானவர்கள் நாட்டை விட்டு நாடு நகரும் போது புதிய நாட்டில்..சில சலுகைகளை எதிர்பார்த்து வரும் போது.. அவர்கள் நீடித்து வாழ்ந்த நாட்டில் உள்ள பல உரிமைகளை இழக்க நேரிடுகிறது. எனவே எதிர்காலத்தில் வயதான நிலையில் பிள்ளைகளை அண்டி வாழ விரும்பும்  பெற்றோர் தகுந்த குடிவரவு குடியகழ்வு சட்ட ஆலோசனைகளைப் பெற்ற பின் நாடு விட்டு நாடு நகர்வதே சிறந்ததாகும். இதற்கான இலவச குடிவரவு குடியகழ்வு ஆலோசனைகளை பல்வேறு அமைப்புக்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை பயன்படுத்திக் கொள்வது நல்லது. விடயம் தெரியாமல் நுழைந்து.. வயதான நேரத்தில் கஸ்டங்களோடு வாழ்வதை தவிர்க்க இவை உதவும்.

 

உள்ளூரில் உள்ள தன்னார்வ சட்ட உதவி அமைப்புக்கள் தவிர்த்து..  அரச உதவியில் இயங்கும் கீழ்ப்படி அமைப்புக்கள் மூலமும் இலவச ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிரித்தானியா வாழ் வாசிகளுக்கு இந்த வசதி அளிக்கப்படுகிறது.

 

Citizens Advice Bureau

 

http://www.citizensadvice.org.uk/

 

http://www.adviceguide.org.uk/england/about_this_site/get_advice.htm

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தரவுகள், தொடருங்கள் சட்டம்பியார் நெடுக்ஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார்.

 

நாங்க சட்டாம்பியார் எல்லாம் கிடையாது. :lol:  அறிஞ்சதை மக்களோடு பகிர்ந்து கொள்கிறோம். :)

 

சிந்திக்கவும்.. தெரிந்து கொள்வதும்.. அனைவரினதும் உரிமை அல்லவா. கவனத்தில் எடுப்பதும்.. விடுவதும்.. பாவிப்பதும் பாவிக்காததும்.. அவரவர் விருப்பம்.


மேலும் கருத்துச் சொன்ன..

 

விசுகு அண்ணா..

 

சுமே அக்கா.. (ஞானம் பிறக்கும் போது பிறந்திட்டு)

 

புலவர் அண்ணா எல்லோருக்கும் நன்றி.

 

ஊக்குவிக்கும் உறவுகளுக்கும் நன்றி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள் நெடுக்ஸ். முதல் சம்பவத்தில் ஏன் அந்த நோயாளி தனது நாட்டுக்கு திரும்பிப் போயிருக்க முடியாது??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள் நெடுக்ஸ். முதல் சம்பவத்தில் ஏன் அந்த நோயாளி தனது நாட்டுக்கு திரும்பிப் போயிருக்க முடியாது??

 

கூட இருந்தவர்கள்.. நீங்க அதெடுக்கலாம்.. இந்தக் காசு எடுக்கலாம் என்று கூட்டிக்குறையச் சொல்லி இருப்பார்கள். கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருப்போரே அதிகம். எம்மவர்கள் தானே எல்லாம் தெரியும் பேர்வழிகளாச்சே.

 

 

சட்ட.. நிர்வாக அறிவின்மையே இவற்றிற்கான மூல காரணம். அதை இந்தத் திரி குறைந்தளவேனும்.. தரும் என்று எதிர்பார்ப்போமாக. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் வாழ்ந்த பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை முன்னிறுத்தி பிரித்தானியா வந்தார்கள். அப்படி வந்த பல பிள்ளைகள் பிரித்தானியாவில் வைத்தியர்களாகவும் கணக்காளர்களாகவும் இன்னும் பல துறைகளிலும்  கொடிகட்டிப்பறக்கின்றனர்.

 

இப்படியானவர்களின் கேஸ் உங்கள் கண்களில் படுவதில்லையா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் வாழ்ந்த பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை முன்னிறுத்தி பிரித்தானியா வந்தார்கள். அப்படி வந்த பல பிள்ளைகள் பிரித்தானியாவில் வைத்தியர்களாகவும் கணக்காளர்களாகவும் இன்னும் பல துறைகளிலும்  கொடிகட்டிப்பறக்கின்றனர்.

 

இப்படியானவர்களின் கேஸ் உங்கள் கண்களில் படுவதில்லையா? :D

 

சுகதேகிகளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேலைன் ஏத்தனுன்னா சொல்லவாறீங்க வாத்தியார். நோயாளிகளை பற்றித்தான் வைத்தியசாலைகள் அதிக கவனம் எடுக்கும்..!!

 

அதேபோல்.. பிரச்சனைகள் எதிர்கொள்ள தெரியாமல் தவிப்பவர்களுக்கு தான் உதவி தேவை..! பிரச்சனைகளை வேறு பல மார்க்கங்களில் சமாளிப்பவர்களுக்கு தேவையில்லை..!!

 

நாங்க அறிய ஜேர்மனியில் இருந்து பிரித்தானியா வந்து ஆங்கில அறிவின்மையால் பிந்தங்கி நின்ற பிள்ளைகளையும் கண்டிருக்கிறோம். அவர்கள் முன்னேறி வர உதவிக்கரமும் கொடுத்திருக்கிறோம். அவர்களும் சவால்களை சந்திக்காமல்.. கொடிகட்டிப்பறக்கவில்லை..!!!!! :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கேஸ் படிப்போம்  நல்லதோர்  தொடர். மேலும் படிக்க ஆவல் தொடருங்கள்.  நம்மவர்கள் உறவினர் சொல்லலைக்     கேட்டபது கூட    அது சம்பந்தமானவர்களிடம்   ஆலோசை கேட்பது குறைவு ... ..இங்கும் (கனடா) இப்படி நடப்பதுண்டு .. :)

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல திரி. தொடர்ந்து எழுதுங்கள்.
 
எனக்கு தெரிந்த சிலர், இவ்வாறு இங்கிலாந்துக்கு வந்தார்கள், ஆனால் ஜெர்மனியே சிறந்தது எனக் கூறினார்கள். காரணம் ஒன்றிற்கு மேற்பட்ட வேலை செய்ய வேண்டிய நிலமை இங்கிலாந்தில். இதானால் குடுபம்பத்துடன் செலவழிக்க நேரம் இன்மை, ஜெர்மனியை விட இங்கிலாந்தில் வாழ்க்கை செலவு அதிகம் போன்றமை.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேஸ் படிப்பு 1 மற்றும் 2 இல் EEA பிரஜைகளாக உள்ளவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்த பின் சந்தித்த சில இடர்பாடுகள் தொடர்பான விடயங்களை பார்த்தோம்.

 

EEA பிரஜைகள் பிரித்தானியாவுக்குள் நுழைந்தாலும் அங்கு வாழ வதிவிட அட்டை அல்லது சான்றிதழ் பெற்ற EEA 1 விண்ணப்பமும்.. EEA பிரஜைகளை மணம் முடித்து அவர்களோட கூட வர விரும்பும்.. Non- EEA பிரஜைகள் EEA 2 விண்ணப்பமும் செய்ய வேண்டும். இதில் Non-EEA பிரஜைகளுக்கான EEA 2 விண்ணப்பம் செய்ய அவர்கள் சார்ந்துள்ள EEA பிரஜைகள் வேலை.. வதிவிடம்.. நிதி.. போன்ற முக்கிய அம்சங்களை பிரித்தானியாவில் கொண்டிருப்பதோடு குடும்ப உறவு நிலையை உறுதிப்படுத்தும் தகுதி பெற்றிருக்க வேண்டும். Non-EEA பிரஜைகளுக்கான EEA 2 விண்ணப்பம் என்பது அவர்கள் பிரித்தானியாவின் EEA பிரஜைகளுக்குரிய உரிமையை பெற மிக முக்கியமாகும். அது இன்றி அவர்கள் சட்டப்படி வேலை செய்வது.. தங்கி இருப்பது.. உட்பட பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

 

=============================+=============================+===========================

 

எனி.. குடும்ப நலன்சார் கேஸ் படிப்புகள் பற்றி பார்ப்போம்....

 

கேஸ் படிப்பு 3

 

ஈழத்தில் இருந்து திருமணமாகி.. புலம்பெயர் நாடுகளுக்கு வரும்.. குறிப்பாக பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய ஒரு கேஸ் படிப்பை இப்போ பார்ப்போம்..

 

MRS ED.. 2012 இல் பிரித்தானியாவில் அகதியாக பதிந்து வெற்றி பெற்று பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டு பிரித்தானியாவுக்குள் நுழைகிறார். ஆரம்பத்தில் எல்லாம் நல்லாவே போனாலும்.. பின்னர் கணவரால் சொந்த வீட்டில் ஒரு சிறு அறையில் குடியிருக்க மட்டும் அனுமதிக்கப்படுகிறார். வீட்டின் மீதி அறைகளை கணவர் இனந்தொரியாதவர்களுக்கு எல்லாம் வாடகைக்கு விடுவதோடு.. அதனை தட்டிக்கேட்கும் மனைவியை துன்புறுத்த ஆரம்பிக்கிறார். மனைவிக்கு தேவையான நிதி வசதிகளை கணவர் கொடுக்க மறுக்கிறார். குறித்த மனைவி குறிப்பிட்ட சில மாதக் கர்ப்பிணியாக வேறு இருக்கிறார்.

 

இந்த நிலையில் மனைவி சட்ட ஆலோசனை கோரி வருகிறார். அவருக்கு வீட்டு வன்முறைகள் தொடர்பில் அறிவுறுத்தப்படுகிறது. தனது கணவரோடு தான் சமாதானமாகவே வாழ விரும்புவதாகக் கூறிய அவர் கணவரோடு கலந்து பேச தனக்கு சந்தர்ப்பம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க கணவர் அழைக்கப்பட்டு ஒரு இணக்கப்பாடு வருகிறது.

 

அதன் கீழ் கணவர் வீட்டில் அறைக்கு ஒன்றாக வைத்திருக்கும் நபர்களை குறித்த கால அட்டவணையின் கீழ் வெளியேற்றவும்.. மனைவிக்கு தேவையான நிதி மற்றும் வாழிட வசதிகளை செய்து கொடுப்பதோடு.. கர்ப்பிணியாக உள்ள அவரை அன்போடு கவனிக்கவும் கேட்கப்படுகிறார். கணவரும் அதற்கு சம்மதிக்கிறார். எழுத்து மூலம் உத்தரவாதம் பெறப்படுகிறது.

 

சில வாரங்களின் பின் மீண்டும் MRS ED சட்ட ஆலோசனை கேட்டு வருகிறார். தனக்கு அளித்த உத்தரவாதம் எதுவும் அமுலாக்கப்படவில்லை என்றும்.. முன்னரை விட நிலைமை இப்போது மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். இந்த நிலையில் கணவருக்கு அறிவுறுத்தல் அனுப்பப்படுகிறது. அவர் அதற்கு மதிப்பளிக்காத நிலையில்.. விடயம் உள்ளூர் சமூக அக்கறை அமைப்புக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவர்களும் 3 -- 4 தடவைகள் விசிட் செய்துவிட்டு இந்த விடயத்தில் அக்கறையன்றி இருக்க.. விடயம் women refugee centre க்கு கொண்டு செல்லப்படுகிறது.

 

அவர்கள் இவரின் பின்னணிகளை ஆராய்ந்த பின்.. இவர் இலங்கை பிரஜை மற்றும் திருமண பந்த விசாவில் (spouse visa) உள்ளதைக் காரணம் காட்டி MRS ED க்கு உதவப் பின்னடிக்கிறார்கள். இந்த நிலையில்.. MRS ED கர்ப்பம் சார்ந்த பிரச்சனை காரணமாக வைத்தியசாலையில் சில வாரங்கள் தங்க நேரிடுகிறது. மீண்டும் women refugee centre இது தொடர்பில் அறிவுறுத்தப்பட அதன் பின் அவர்கள் MRS ED க்கு உதவ முன் வருகிறார்கள். அவர் கணவருடன் வாழ்ந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு பிறிதொரு பாதுகாப்பான இடத்தில் வாழ அனுமதிக்கப்படுகிறார். 

 

இந்த நிலையில் குழந்தை பிறப்பு நிகழ child benefit க்கு விண்ணப்பிக்கிறார். அது இவரின் விசா விரைவில் முடிவடைய உள்ளது என்ற காரணத்தைக் காட்டி நிராகரிக்கப்படுகிறது. அந்த நிராகரிப்புக்கு எதிராக மனு செய்யப்பட்டு அதன் முடிவில்.. அவருக்கு child benefit வழங்க முன்வருகிறார்கள்.

 

இன்னும் MRS ED இன் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. அவரின் விசாவும் விரைவில் தீர உள்ளதால்.. கணவனைப் பிரிந்து குழந்தையோடு தனிமையில் வாழ்கிறார் இந்த MRS ED. இத்தனைக்கும் அவர் பிரச்சனைக்குரிய கணவரை விவாகரத்துச் செய்ய மறுக்கிறார். இந்தச் சிக்கலான சூழலை இப்போது சட்ட நிறுவனங்கள் சமாளிக்க வேண்டிய பெரிய பொறுப்பில் உள்ளன.

 

--------------------------

 

இதில் இருந்து கற்றுக் கொள்ளும் பாடம்: வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்தம் கட்டி ஏத்தினம் என்று இல்லாமல்.. உங்கள் அன்புக்குரிய பிள்ளைகளின் வெளிநாட்டில் வாழும் வாழ்க்கை தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கட்டினம் ஏத்தினம் என்பதோடு உங்கள் கடமை முடியவில்லை. அவர்கள் மீது தொடர்ந்து அக்கறை செலுத்துங்கள்.

 

வீட்டு வன்முறை.. மற்றும்.. கணவர் வன்முறை.. மனைவி வன்முறை க்கு முகம் கொடுத்தால்.. பிரச்சனையுன் உண்மை வடிவத்தோடு.. சமூக..சட்ட ஆலோசனைகளை நேரகாலத்துக்கு பெற்றுக் கொள்வது நல்லது. விசா முடியும் கட்டத்தில் விழித்துக் கொள்வது.. பிள்ளை வயிற்றில் வளர்ந்த பின் அவதிப்படுவது.. போன்றவை கூடிய மன உளைச்சலை உண்டு பண்ணுவதோடு.. சில சட்ட விடயங்களை மேற்கொள்ள நீண்ட நேர கால தேவை ஏற்படும். அதனை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதால்.. வன்முறையாளர்கள் அதற்குள் தம்மை சுதாகரித்துக் கொண்டு தப்பிக் கொள்ள வாய்ப்புள்ளது.

 

மேலும்.. சிக்கலை தீர்ப்பது கடினம் என்றால் சில கசப்பான முடிவுகளை எடுத்தாவது பிரச்சனையில் இருந்து வெளிவர முயல வேண்டும். குறிப்பாக கட்டின கணவனே அடிச்சாலும் பிடிச்சாலும் கணவன் என்ற சென்ரிமெண்ட் எல்லாம்.. பார்த்தால் உங்கள் வாழ்க்கையில் நிம்மதி என்பது தொலைந்த ஒன்றாகவே இருக்கும். எனவே ஆணோ.. பெண்ணோ.. சுயமாக இல்லை என்றாலும்.. தகுந்த ஆலோசனைகளைப் பெற்ற பின் திடமான முடிவுகளை எடுப்பது.. சிக்கல்களை ஓரளவு விரைந்து தீர்க்க உதவுவதோடு.. உடல்.. உள உபாதைகள் ஏற்படுவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

 

மீண்டும் ஓர் கேஸ்படிப்போடு.. இன்னொரு தடவை சந்திக்கிறோம்..!!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இற்கு ஏன் நம்மாட்களைக் கண்டால் அலர்ஜி ஆகிறது என்பது இப்போது புரிகிறது.. :wub::icon_idea:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

MR  ED  சரியான கஞ்சப்பயல்  மட்டுமல்ல, தனக்கு  இலவசமாக ஒரு சமையல்காரியைக் கொண்டு வரலாம் என யோசித்துள்ளார் போல் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

----

MRS ED.. 2012 இல் பிரித்தானியாவில் அகதியாக பதிந்து வெற்றி பெற்று பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டு பிரித்தானியாவுக்குள் நுழைகிறார். ஆரம்பத்தில் எல்லாம் நல்லாவே போனாலும்.. பின்னர் கணவரால் சொந்த வீட்டில் ஒரு சிறு அறையில் குடியிருக்க மட்டும் அனுமதிக்கப்படுகிறார். வீட்டின் மீதி அறைகளை கணவர் இனந்தொரியாதவர்களுக்கு எல்லாம் வாடகைக்கு விடுவதோடு.. அதனை தட்டிக்கேட்கும் மனைவியை துன்புறுத்த ஆரம்பிக்கிறார்.

-----

 

ஒரு வீட்டில், வசித்துக் கொண்டு மற்றைய அறைகளை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதிலும் பார்க்க...

தெருத்தெருவாக.... பிச்சை எடுத்து, வாழ்வது மேல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப நலன் - பிள்ளைகள் மீதான வன்முறை

 

கேஸ் படிப்பு 4

 

Mrs EF ஈழத்தில் இருந்து பிரித்தானியாவின் செற்றிலான ஒருவரை திருமணம் செய்து..திருமண பந்தம் மூலம் பிரித்தானியாவுக்கு வந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிறார். ஏதோ விடயமாக அவர் அவரது மூத்த மகனுக்கு கன்னத்தில் அறைந்து விட்டிருக்கிறார். மகன் அதை அப்படியே வீட்டில் விட்டுவிட்டு.. பாடசாலையில் போய் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார். நண்பர்கள் விடயத்தை ஆசிரியரின் கவனத்துக்கு கொண்டு வர பாடசாலை நிர்வாகம் அதனை குறிப்பிட்ட கவுன்சிலின் கவனத்துக்கு கொண்டு போக.. குறித்த பிள்ளையும் அவனின் சகோதரியும் பெற்றோர் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்ற வகையில்.. social service ஆல் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படுவதோடு.. பெற்றோரின் நடத்தை தொடர்பில் பொலிஸ் விசாரணையும் கோரப்படுகிறது.

 

பொலிஸ் விசாரணையின் பின்னும் பிள்ளைகள் மீள பெற்றோரிடம் கையளிக்கப்படாத நிலையில்.. பெற்றோர் பிள்ளைகளை பார்வையிடவும் முடியாத நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் பெற்றோர் சட்ட ஆலோசனை கேட்டு வருகின்றனர். குறிப்பாக தாய் தன் பிள்ளைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று தவிக்கிறார். இந்த நிலையில் ஒரு குடும்ப சட்ட வல்லுனர் வைக்கப்பட்டு அவர் மூலம் விடயங்கள் நகர்த்தப்பட்டு பெற்றோர் பிள்ளைகளை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுக்கப்படுகிறது.

 

ஆனாலும்.. இன்னும் பிள்ளைகள் பெற்றோரிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. social service இனர் பெற்றோரின் நடவடிவைக்கைகளில் திருப்தி காணும் வரை பிள்ளைகள் மீள கையளிக்கப்பட முடியாது என்று கூறிவிட்டுள்ளனர். பெற்றோரின் நடத்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

 

--------------------------------

 

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்:

 

உங்கள் பிள்ளைகள் குழப்படி செய்தால்.. பெளதீக வன்முறையை நீங்கள் பாவிப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும். பெளதீக வன்முறை என்றால் அடிப்பது.. உதைப்பது.. தீயால் சுடுவது..காயம் ஏற்படுத்துவது... உள்ளிட்டவை. இவை சிறுவர்கள் மீதான மோசமான வன்முறைகளாக நோக்கப்படும். அதட்டுவதையும் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அயலவர்களுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் சத்தம் செய்வது உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் அயலவர்கள் செய்யும் முறைப்பாட்டால் பிரச்சனை வர வாய்ப்பை கொண்டு வரும்.

 

அதேவேளை அப்போ எப்படித்தான் பிள்ளைகளின் குழப்படியை குறைப்பது. படி என்றால் படிக்கிறானே/றாளே இல்லையே. என்ன செய்ய.. என்று நினைக்கும் பெற்றோர் பாடசாலையில் பிள்ளைகளுக்கு வழங்கும் தண்டனை முறையை அப்படியே வீட்டிலும் பின்பற்றலாம்.

 

பாடசாலைகளில் அடிப்பது இல்லை. பிள்ளைகள் உணரத்தக்க நிபந்தனை தண்டனைகள் மட்டுமே வழங்கப்படும்.

 

வீட்டில் படிக்கவில்லை என்றால்.. விளையாட்டு நேரத்தை குறையுங்கள். தொலைகாட்சி பார்க்கும் நேரத்தை குறையுங்கள். கணனியில் செலவிடும் நேரத்தை குறையுங்கள். அப்பிள் சாதனங்களோடு இருக்கும் நேரத்தை குறையுங்கள். அதுவும் முடியல்லைன்னா.. விளையாட்டு சாதனங்களை மற்றும் அவர்கள் அதிகம் அடிமைப்பட்டு பயன்படுத்தும் சாதனங்களை பிள்ளைகளிடம் இருந்து பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். படிப்பு முடித்தால் தான் விளையாட்டு என்று நிபந்தனை தண்டனை வழங்குங்கள்.

 

பிள்ளைகளுக்கிடையே குழப்படி என்றால்.. ஒருவரை மற்றவரிடத்தில் இருந்து குறிப்பிட்ட நேரம் பிரித்து வையுங்கள். மிகவும் குழப்படி என்றால்.. பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை. வெளியிடம் செல்ல முடியாது. நண்பர்களை பார்க்க குறுகிய கால அனுமதி இல்லை. விளையாட அனுமதி இல்லை. கடை தெருவுக்கு கூட்டிப் போகமாட்டேன். இதுபோன்ற பிள்ளைகள் உணரத்தக்க அவர்கள் உணர்ந்து திருந்திய பின் அவர்களுக்கு திருப்தி அளிக்கக் கூடிய சலுகைகள் வழங்கக் கூடிய மென் தண்டனைகளை வழங்குதல் சிறந்ததாகும்.

 

மீண்டும்.. இன்னொரு கேஸ் படிப்போடு சந்திப்போம்..

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேஸ் படிப்பு 5

 

Mrs.FG ஈழத்தில் இருந்து திருமண பந்தம் மூலம் பிரித்தானியாவுக்கு வருகிறார். வந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிறார். அதுவரை குடும்பம் பிரச்சனை இன்றி நகர்கிறது. இந்த நிலையில் Mr.FG மதுவுக்கு அடிமையாகிறார்.

 

வீட்டில் ஒரு தடவை Mr.FG க்கும் Mrs.FG க்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம். அயலவர்கள் பொலிஸுக்கு முறையிட பொலிஸ் வந்து.. Mr.FG ஐ கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மறுநாள் அதிகாலையில் வீட்டுக்கு போகக் கூடாது என்ற நிபந்தனையோடு பிணையில் விடுவிக்கிறது.

 

ஆனால் Mr.FG க்கு போக ஒரு போக்கிடமும் இல்லை. தெருவழிய சுத்தி திரிந்து விட்டு இரவானதும் வீட்டுக்கு போய் விடுகிறார். சம்பவ தினத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து.. காலையில் பொலிஸ் மீண்டும் வீட்டில் உள்ள மற்றவர்களிடம் விசாரணைக்கு வருகிறது. வந்த பொலிஸுக்கு அதிர்ச்சி. Mr.FG அங்கு காணப்படுகிறார். அவரை பிணை நிபந்தனைகளை மீறிய அடிப்படையில் மீண்டும் பொலிஸ் கைது செய்வதோடு.. விடயத்தை social service க்கும் கொண்டு செல்கிறது. social service வந்து நிலைமையை பார்த்துவிட்டு.. எனி Mr.FG வீட்டுக்கு வந்தால்.. பிள்ளைகள் இரண்டையும் அரச பொறுப்பில் எடுக்க நேரிடும் என்று Mrs.FG க்கு அறிவுறுத்திவிட்டுச் செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் Mrs.FG சட்ட உதவி நாடி வருகிறார். அவருக்கு அவருடைய கணவரின் நிலை.. பிணை நிபந்தனைகள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கணவருக்கு வீட்டுக்கு வர முடியாத நிலை உள்ளதால் அவருக்கு பிற இடத்தில் வதிவிட வசதியும் பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அத்தோடு கணவருக்கு சமூக நன்னடத்தை (probation) அமைப்பின் மூலம் நன்னடத்தை கற்பிக்க கோரப்படுவதோடு அவருக்கு நன்னடத்தை கற்பித்தல் திட்டம் அமுலுக்கு வருகிறது. இதனிடையே கணவர் தப்பித்தவறி வீட்டுக்கு வந்துவிட்டால் பிரச்சனை என்பதால்.. பிள்ளைகள் இரண்டும் தற்காலிகமாக அவர்களின் தாத்தா பாட்டி வீட்டில் இருக்க அனுமதி கோரப்படுகிறது. அத்தோடு கணவருக்கு மது அடிமைத்தனத்தில் இருந்து விடுபடவும்.. புனர்வாழ்வு அளிக்கவும் கோரப்பட்டு அதற்குரிய நிகழ்ச்சி திட்டங்களிலும் அவர் இணைக்கப்படுகிறார்.

 

---------------------

 

இதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்:

 

மது.. புகை.. போதை.. மாது.. இவை எல்லாம்.. சிறுகச் சிறுக மனிதனை ஆக்கிரமிக்க ஆரம்பித்து இறுதியில் அடிமைத்தனத்திலும்.. பிரச்சனைகளிலும் கொண்டு போய் மனிதனை தள்ளிவிடுகின்றன. வெளிநாட்டுக்கு வந்ததும்.. அரச கொடுப்பனவுகளும்.. கள்ள வழிகளிலும்.. நேர் வழியிலும் நிறைய காசு வருகுது என்பதற்காக.. இவற்றை தாராளமாக தேட பாவிக்க வெளிக்கிட்டால்.. வீட்டில் பிரச்சனைகள் தான் கூடும். அது சமூகத்தின் கதவை தட்டும் போது.. வீட்டுப் பிரச்சனையாக இன்றி சமூகப் பிரச்சனையாக மாறும் போது.. அதன் விளைவுகள் வீடுகளை பாதிக்கச் செய்யும். ஊர் போல.. தண்ணி அடிச்சிட்டு வீட்டில.. வீதியில கண்டபடிக்கு கத்திக் கொண்டு.. மனைவி பிள்ளைகளுக்கு.. அல்லது கணவன் பிள்ளைகளுக்கு அடிச்சுக் கொண்டிருக்க வெளிநாடுகளின் சமூக அமைப்புக்கள் இடமளிக்கா. அந்த வகையில்.. நீங்களாக மது.. போன்றவற்றை தேவைக்கு அதிகமாக பாவிப்பதை.. சுயநினைவிழக்காத வகைக்கு பாவிப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. அத்தோடு தனிமனித ஒழுக்கம்.. தனி மனிதனுக்குரிய சமூகப் பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து நடந்து கொள்வது அவசியம்.

 

இங்கிலாந்தில் குடியேறிய நம்மவர் பலரிடம்.. பிரிட்டிஷ் பாஸ்போட் உள்ளது. ஆனால் பிரிட்டனின் நடைமுறைகள் என்ன என்று எதுவும் தெரியாது. எப்படி தான் பாஸ்போட் பெற்றார்களோ தெரியவில்லை. எதுஎப்படியோ.. மது.. புகை.. போதை.. இவை உங்களுக்கும்.. உங்கள் வீட்டுக்கும்.. நீங்கள் சார்ந்த சமூகத்துக்கும்.. நாட்டுக்கும்.. பிரச்சனைகளை கொண்டு வருவதால்.. இவை தொடர்பில்.. நீங்கள் மிகவும் கட்டுப்பாட்டோடு செயற்படுதல் அவசியமாகும். அதன் மூலமே இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவரவும்.. மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை வாழவும் முடியும்.

 

சிந்தித்தித்துப் பாருங்கள்.. மதுவுக்கும்.. புகைக்கும்.. மாதுக்கும்... பிற தீய பழக்கங்களுக்கும்.. செலவு செய்யும் பணத்தை நீங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு அல்லது சுத்துமாத்து செய்து உழைக்க வேண்டி உள்ளது என்பதை. அப்படி அருமையாகக் கிடைக்கும் பணத்தை வீணடிக்காது.. உங்களின் எதிர்காலத்திற்கு சேமிக்கும் பழக்கத்தை உண்டு பண்ணிக் கொண்டால்.. அது வீட்டுக்கும்.. நாட்டுக்கும்... உங்களுக்கும் நன்மை பயக்கும்..!!

 

மீண்டும் ஒரு கேஸ் படிப்பில் சந்திப்போம்..

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்  தொடருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.