Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Featured Replies

  • தொடங்கியவர்

அரச ஊழியர்கள் தபால் மூல வாக்குகளை ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவாகபயன்படுத்த வேண்டும் 

6865_content_ariam.jpg

எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உத்தியோகபூர்வமான அறிவிப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா விரைவில் அறிவிப்பார்.   இருந்தபோதும் எதிர்வரும் 23,24ம் திகதி தபால்மூலமாக வாக்களிக்கவேண்டிய எமது அரசஅதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள்,அரசஊழியர்கள், அதிபர்,ஆசிரியர்கள்,உட்பட அனைத்து தபால்மூல வாக்களிக்கவுள்ள தமிழ்பிரமுகர்கள் அனைவரும் இந்ந தேர்த லில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்ககூடாது என்பதை தீர்மானித்திருப்பீர்கள் என்ப தில் மாற்றுக்கருத்துக்கள் இருக்காது அதன் அடிப்படையில் ஆட்சி மாற்றம்ஒன்றுக்காகவாக்களிக்கவேண்டுமஎன்பதை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகடசியின் ஊடகத்துறை செயலாளருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்

: http://thinakkural.lk/article.php?local/aoibclowro61817873b66ca119227raa2zd39eb8603c467fa05cfe86tgvvp#sthash.RRoYEa1M.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

1) யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானோர் மகிந்தவுக்கு வாக்களிக்க போவதில்லை (2010 இல் இருந்து யாழில் வசிப்பதால் தெரியும்)

2) பலர் மெனக்கெட்டு வாக்குச் சாவடிக்கு போக மாட்டார்கள். போனால், மைத்திரிக்கு வாக்களிப்பார்கள்.

3) இது மகிந்தவுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

4) அதனால், தேர்தலை புறக்கணிக்கும்படி ஏதாவது கட்சி சொன்னால், (முன்பு போல) மகிந்தவிடம் இருந்து காசு கிடைக்கும்.

5) அதற்காக கஜேந்திரன்ஸூக்கு பெரிதாக காசு கிடைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரன்ஸ் தமக்கு வாக்களிக்க சொன்னபோதே அதை கேட்டு யாரும் வாக்களிக்கவில்லை. பகிஸ்கரியுங்கள் என்று சொன்னால் இவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்து மக்கள் கேட்கவா போகிறார்கள். கிடைத்தால், சுமாரான அளவில் காசுதான் கிடைத்திருக்கும் (சில லட்சங்கள் மட்டும்)

6) உதயன் சரவணபவனுக்கு மைத்திரி வந்தால் பலன் அதிகம். இதனால், யாழின் பிரபல பத்திரிகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மைத்திரிக்கு வாக்களிக்கும் பிரச்சாரம் இருக்கும்.

7) கடைசி நேரத்தில் கூட்டமைப்பு “மைத்திரிக்கு வாக்களியுங்கள்” என்று சொன்னால், அது மகிந்தவுக்கு சூப்பர் அதிஷ்டம். கூட்டமைப்பு சொல் கேட்டு மைத்திரிக்கு கிடைக்கும் வாக்குகளைவிட, ‘தமிழ் ஈழம் அமைக்க த.தே.கூ. - மைத்திரி ரகசிய ஒப்பந்தம்’ என்று தெற்கே சொல்லி வாக்குகளை அள்ளலாம். அந்த உதவியை கூட்டமைப்பு செய்தால், மகிந்தவின் ‘கவனிப்பு’ பலமாக (சில கோடிகள்) இருக்கும்.

8) உங்கள் இஷ்டப்படி வாக்களியுங்கள் என த.தே.கூ. சொன்னால், வடக்கே வாக்குச் சாவடிக்கு செல்பவர்கள் (பலர் போக மாட்டார்கள். maybe 40% வாக்காளர்கள் வாக்களிக்க போகலாம்) மைத்திரிக்கு வாக்களிப்பார்கள். ஆனால் மகிந்தவிடமிருந்து கூட்டமைப்புக்கு காசு கிடைக்காது.

9) இரு வேட்பாளர்களும் ஏதும் செய்யப் போவதில்லை என்பதால், கிடைத்தவரை ஆதாயம் என உள்ளது, மகிந்த கொடுக்கும் காசுதான் என கூட்டமைப்பு யோசிக்கலாம். (மகிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் முடிவை எடுத்தால், கூட்டமைப்பு கட்சியும் அழியாது. யுத்தம் புரியாத அதன் தலைவரும் உயிரை விட வேண்டிய நிலை ஏற்படாது. தைரியமாக முடிவு எடுக்கலாம்)

10) தனிப்பட்ட முறையில் நான் மைத்திரிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளேன்.

கனடாவில் இருப்பவர்களும் வாக்களிக்கலாமா?

Edited by trinco

இது இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் மட்டுமே .

இங்கு நாம் தமிழர்கான தீர்வு பற்றி அலட்டிக்கொள்ளதேவையில்லை .ஆனால் தமிழர்களின் வாக்கால் ஜனாதிபதியை நிர்ணயிக்க முடியுமாயின் நிட்சயம் மைத்திரிபாலாவிற்கே அவர்கள் வாக்கு இடவேண்டும் .மகிந்த அண்ட் கோ அரசியலில் இருந்து அகற்றப்படவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள் .இலங்கையில் இப்போ நடப்பது மகிந்த குடும்ப ஆட்சி அதைவிட மூன்றாவது தடவை ஒருவர் ஜனாதிபதியாவதை நிற்பாட்டவேண்டும் .இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிட்சயம் மக்களுக்கு சொல்லவேண்டும் .தேர்தலை பகஸ்கரிப்பதோ மௌனமாக இருப்பதோ புத்திசாலித்தனம் இல்லை .தமிழ் மக்களை குழப்பத்தில் விடாமல் இன்னாருக்கு வாக்கு அழிக்கச்சொல்லி ஒரு முடிவை கட்டாயம் அறிவிக்க வேண்டும் .

இவர்களின் அறிவிப்பை வைத்து மகிந்தா அரசியல் செய்து சிங்கள மக்களின் வாக்குகளில் கடைசி நேரத்தில் அள்ளி குவிக்கபோவதில்லை .

அதைவிட எமக்கு பிடிக்காதவர்கள் வீதியில் வரவேண்டும் என்று தமிழன் கனவு காண்பது  வழக்கம்.கருணா ,பிள்ளையான் இருவருக்கும் அந்த நிலைக்கு வரலாம் வரவேண்டும் ஆனால் டக்கிளசுக்கு அது நடக்கபோவதில்லை .  நேற்று ஐங்கரநேசனின் தம்பியுடன் பேசிக்கொண்டு இருந்தேன் டக்கிலசின் ஆட்கள் மட்டுமல்ல  அண்ணர் ஆட்களும் போத்தல் தூக்கி பிழையாகத்தான் நடந்துகொண்டார்கள்  என்று சொன்னார் .

டக்கிலஸ் பல நல்ல வேலைத்திட்டங்களை செய்துள்ளார் என்பது அங்கு இருக்கும் மக்களை கேட்டால்  தெரியும் ஆனால் தேர்தல் என்று வரும்போது தமிழர்கள் தேசிய கூட்டமைப்புக்குத்தான் வாக்கு அழிப்பார்கள் காரணம் எமக்கு ஒரு அரசியல் தீர்வு அவசியம் தேவை .

Edited by arjun

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் இருப்பவர்களும் வாக்களிக்கலாமா?

இலங்கைப் பிரஜாவுரிமை இருந்தால் வாக்களிக்கலாம் என நினைக்கிறேன். ஒட்டாவாவில் உள்ள தூதரகத்தில் விசாரித்துப் பார்க்கவும். பெரும்பாலும் வசதி செய்து தருவார்கள்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

1510873_10154977334180068_51035960178947

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1510873_10154977334180068_51035960178947

இருவருடைய body languageம் சூப்பர். அதுவே பல கதை கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

83a9d3ba27515544f567b0bd34c8bf98.jpg

gaddhafi_tony_blair_masonic_handshake.jp

:D

  • கருத்துக்கள உறவுகள்

து இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் மட்டுமே .

இங்கு நாம் தமிழர்கான தீர்வு பற்றி அலட்டிக்கொள்ளதேவையில்லை .ஆனால் தமிழர்களின் வாக்கால் ஜனாதிபதியை நிர்ணயிக்க முடியுமாயின் நிட்சயம் மைத்திரிபாலாவிற்கே அவர்கள் வாக்கு இடவேண்டும் .மகிந்த அண்ட் கோ அரசியலில் இருந்து அகற்றப்படவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள் .இலங்கையில் இப்போ நடப்பது மகிந்த குடும்ப ஆட்சி அதைவிட மூன்றாவது தடவை ஒருவர் ஜனாதிபதியாவதை நிற்பாட்டவேண்டும் .இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிட்சயம் மக்களுக்கு சொல்லவேண்டும் .தேர்தலை பகஸ்கரிப்பதோ மௌனமாக இருப்பதோ புத்திசாலித்தனம் இல்லை .தமிழ் மக்களை குழப்பத்தில் விடாமல் இன்னாருக்கு வாக்கு அழிக்கச்சொல்லி ஒரு முடிவை கட்டாயம் அறிவிக்க வேண்டும் .

இவர்களின் அறிவிப்பை வைத்து மகிந்தா அரசியல் செய்து சிங்கள மக்களின் வாக்குகளில் கடைசி நேரத்தில் அள்ளி குவிக்கபோவதில்லை .

அதைவிட எமக்கு பிடிக்காதவர்கள் வீதியில் வரவேண்டும் என்று தமிழன் கனவு காண்பது  வழக்கம்.கருணா ,பிள்ளையான் இருவருக்கும் அந்த நிலைக்கு வரலாம் வரவேண்டும் ஆனால் டக்கிளசுக்கு அது நடக்கபோவதில்லை .  நேற்று ஐங்கரநேசனின் தம்பியுடன் பேசிக்கொண்டு இருந்தேன் டக்கிலசின் ஆட்கள் மட்டுமல்ல  அண்ணர் ஆட்களும் போத்தல் தூக்கி பிழையாகத்தான் நடந்துகொண்டார்கள்  என்று சொன்னார் .

டக்கிலஸ் பல நல்ல வேலைத்திட்டங்களை செய்துள்ளார் என்பது அங்கு இருக்கும் மக்களை கேட்டால்  தெரியும் ஆனால் தேர்தல் என்று வரும்போது தமிழர்கள் தேசிய கூட்டமைப்புக்குத்தான் வாக்கு அழிப்பார்கள் காரணம் எமக்கு ஒரு அரசியல் தீர்வு அவசியம் தேவை .

அண்ணை  வணக்கம்

இது சிறீலங்கா ஐனாதிபதி தேர்தல்

நமக்கெதுக்கு என்கிறீர்கள்??

அப்பறம் மகிந்த அகற்றப்படணும் என்கிறீர்கள்?

ஏன் புலி  கொண்டுவந்ததாலா....?? :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவோ, ரணிலோ, சந்திரிக்காவோ அல்லது மைத்திரிபாலவோ யார் வந்தாலும் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். இத்தேர்தல் சிங்களவர்களுக்குரிய தேர்தல். நான் இலங்கையை விட்டு வெளியேறி 25 வருடங்களாகிவிட்டது. அங்குள்ளவர்கள் தான் முடிவெடுக்கவேண்டும். எனக்கு வாக்குரிமை இருந்தால் வாக்களிப்புக்கு சென்று செல்லாதவாக்கினைப் பதிவேன். நான் வாக்களிக்கவிட்டால் சிலவேளை கள்ளவாக்குகாக வேறு ஒருவர்(அரசு சார்பான ஒருவர்) எனது வாக்கினை வாக்களிக்கலாம்.

இன்று சென்ற கூட்டத்தில் பேசிய சிலர் கருத்துக்கள் மிக முக்கியமாக எனக்கு பட்டது .

ஒருவர் அரசியல் ஆய்வாளர் கீத-பொன்கலன்,மற்றவர் சரிநிகர் விக்கினேஸ்வரன் .

யுத்தவெற்றிக்கு பிறகு மகிந்தா அண்ட் கோ இலங்கையின் எப்படி அரசியல் பொருளாதாரம் சிறுபான்மை இப்படியான விடயங்களை கையாண்டார்கள் என்று ஓரளவு புள்ளிவிபரங்களுடன் சொன்னார்கள் .

தமிழர்களுக்கு உருப்படியான அரசியல் செய்பவர்கள் எவரும் இல்லாதது  .கூட்டமைப்பு தமிழர்களின் ஒரே பிரதிநிதிகளாக இருந்தாலும் கபடமானது கையாலாகத்தனமாது என்பதில் எவருக்கும் மாற்றுகருத்து இல்லை

இவர்கள் வெளிப்படை அரசியல் செய்யாமல் எல்லாவற்றையும் ஒழித்து இராஜதந்திரம் என்பது மிக மிக அபத்தம் (இதை ஐங்கரநேசனின் தம்பி அடித்து சொன்னார் )

பலரின் ஒருமித்த கருத்து எமக்கு எதுவும் லாபம் இல்லை என்றாலும் மாற்றாம் கட்டாயம் தேவை .

  • கருத்துக்கள உறவுகள்

1510873_10154977334180068_51035960178947

83a9d3ba27515544f567b0bd34c8bf98.jpggaddhafi_tony_blair_masonic_handshake.jp:D

இந்தப் படங்கள் ஏன் இணைக்கப்பட்டுள்ளன? தலைப்புக்கும் படங்களுக்கும் என்ன தொடர்பு? :o
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்கள் ஏன் இணைக்கப்பட்டுள்ளன? தலைப்புக்கும் படங்களுக்கும் என்ன தொடர்பு? :o

தொடர்பு என்னவென்றால் ஒருவர் இன்னொருவருக்கு கை கொடுப்பதால் அவரை ஆதரிப்பவர் ஆகிவிடமாட்டார் என்கிற பொதுவான செய்தி. மரியாதை நிமிர்த்தம் கைகொடுப்பதை உள்ளர்த்தத்துடன் பார்க்க வேண்டியதில்லைதானே.. :o

  • கருத்துக்கள உறவுகள்

ஓக்கே உங்கள் விளக்கம் புரிகின்றது. நுணாவின் படத்துக்கு இணைத்துள்ளீர்கள்.

எனது கேள்வி இதுக்குள்ளே ஏன் பாரதிராஜா குதித்தார் என்பது?

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிராஜா, டக்ளஸ் அங்கிளைச் சந்திப்பதற்கும் கயேந்திரன் குழுவினர் தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவதற்குமான தொடர்புப் புள்ளி யாது?

இது இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் மட்டுமே .

இங்கு நாம் தமிழர்கான தீர்வு பற்றி அலட்டிக்கொள்ளதேவையில்லை .ஆனால் தமிழர்களின் வாக்கால் ஜனாதிபதியை நிர்ணயிக்க முடியுமாயின் நிட்சயம் மைத்திரிபாலாவிற்கே அவர்கள் வாக்கு இடவேண்டும் .மகிந்த அண்ட் கோ அரசியலில் இருந்து அகற்றப்படவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள் .இலங்கையில் இப்போ நடப்பது மகிந்த குடும்ப ஆட்சி அதைவிட மூன்றாவது தடவை ஒருவர் ஜனாதிபதியாவதை நிற்பாட்டவேண்டும் .இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிட்சயம் மக்களுக்கு சொல்லவேண்டும் .தேர்தலை பகஸ்கரிப்பதோ மௌனமாக இருப்பதோ புத்திசாலித்தனம் இல்லை .தமிழ் மக்களை குழப்பத்தில் விடாமல் இன்னாருக்கு வாக்கு அழிக்கச்சொல்லி ஒரு முடிவை கட்டாயம் அறிவிக்க வேண்டும் .

இவர்களின் அறிவிப்பை வைத்து மகிந்தா அரசியல் செய்து சிங்கள மக்களின் வாக்குகளில் கடைசி நேரத்தில் அள்ளி குவிக்கபோவதில்லை .

அதைவிட எமக்கு பிடிக்காதவர்கள் வீதியில் வரவேண்டும் என்று தமிழன் கனவு காண்பது  வழக்கம்.கருணா ,பிள்ளையான் இருவருக்கும் அந்த நிலைக்கு வரலாம் வரவேண்டும் ஆனால் டக்கிளசுக்கு அது நடக்கபோவதில்லை .  நேற்று ஐங்கரநேசனின் தம்பியுடன் பேசிக்கொண்டு இருந்தேன் டக்கிலசின் ஆட்கள் மட்டுமல்ல  அண்ணர் ஆட்களும் போத்தல் தூக்கி பிழையாகத்தான் நடந்துகொண்டார்கள்  என்று சொன்னார் .

டக்கிலஸ் பல நல்ல வேலைத்திட்டங்களை செய்துள்ளார் என்பது அங்கு இருக்கும் மக்களை கேட்டால்  தெரியும் ஆனால் தேர்தல் என்று வரும்போது தமிழர்கள் தேசிய கூட்டமைப்புக்குத்தான் வாக்கு அழிப்பார்கள் காரணம் எமக்கு ஒரு அரசியல் தீர்வு அவசியம் தேவை .

இன்றைக்கு உங்களுக்கு என்ன நடந்தது? இப்படி ஒரு யதார்த்தமான கருத்தை சொல்லுரிங்க? 

தூக்கம் கலைகிறது.

பாரதிராஜா, டக்ளஸ் அங்கிளைச் சந்திப்பதற்கும் கயேந்திரன் குழுவினர் தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவதற்குமான தொடர்புப் புள்ளி யாது?

தேர்தலை பகீஷ்கரிக்ககூறுபவர்களும் இந்த பிரபஞ்சத்தில் பூமி என்ற கிரகத்தில் வாழும் மனிதர்கள். இங்கு கை கொடுப்பவர்களும் பூமியில் வாழும் மனிதர்கள். இதுவே தொடர்பு புள்ளி.

Edited by tulpen

ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவன் என்று சொல்லுற மைதிரியை ஆதரிப்பதே நல்லது , அதைவிட்டுட்டு தமிழுக்கு ஒண்ணுமே அறிக்கையில் இல்லை எண்டு சொல்லுறது முட்டாள் தனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவன் என்று சொல்லுற மைதிரியை ஆதரிப்பதே நல்லது , அதைவிட்டுட்டு தமிழுக்கு ஒண்ணுமே அறிக்கையில் இல்லை எண்டு சொல்லுறது முட்டாள் தனம்.

சந்திரிக்காவும் ஜனாதிபதி கதிரையை தூக்குவன் உடைப்பன் எண்டு சொல்லிக்கொண்டுதான் கதிரையிலை குந்தினவ....
மகிந்தரும் உதுக்கு மேலையும் சொல்லிக்கொண்டுதான் கதிரையை குடும்பத்தோடை கட்டிப்புடிச்சுக்கொண்டு நிக்கிறார்...
வாறவருக்கும் உதே கதிதான்......எங்களுக்கும் இதே கதிதான். :icon_idea:

அப்போ

கஜேந்திரகுமார்  துரோகி  என்கிறீர்கள்

நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும்

பாம்பின் கால் பாம்பறியும்..... :( 

திருகோணமலை தமிழ் மக்கள் கஜன் குழுவை துரோகியாகத்தான் கருதுகின்றார்கள் .

  • 3 weeks later...

இது இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் மட்டுமே .

இங்கு நாம் தமிழர்கான தீர்வு பற்றி அலட்டிக்கொள்ளதேவையில்லை .ஆனால் தமிழர்களின் வாக்கால் ஜனாதிபதியை நிர்ணயிக்க முடியுமாயின் நிட்சயம் மைத்திரிபாலாவிற்கே அவர்கள் வாக்கு இடவேண்டும் .மகிந்த அண்ட் கோ அரசியலில் இருந்து அகற்றப்படவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள் .இலங்கையில் இப்போ நடப்பது மகிந்த குடும்ப ஆட்சி அதைவிட மூன்றாவது தடவை ஒருவர் ஜனாதிபதியாவதை நிற்பாட்டவேண்டும் .இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிட்சயம் மக்களுக்கு சொல்லவேண்டும் .தேர்தலை பகஸ்கரிப்பதோ மௌனமாக இருப்பதோ புத்திசாலித்தனம் இல்லை .தமிழ் மக்களை குழப்பத்தில் விடாமல் இன்னாருக்கு வாக்கு அழிக்கச்சொல்லி ஒரு முடிவை கட்டாயம் அறிவிக்க வேண்டும் .

இவர்களின் அறிவிப்பை வைத்து மகிந்தா அரசியல் செய்து சிங்கள மக்களின் வாக்குகளில் கடைசி நேரத்தில் அள்ளி குவிக்கபோவதில்லை .

அதைவிட எமக்கு பிடிக்காதவர்கள் வீதியில் வரவேண்டும் என்று தமிழன் கனவு காண்பது  வழக்கம்.கருணா ,பிள்ளையான் இருவருக்கும் அந்த நிலைக்கு வரலாம் வரவேண்டும் ஆனால் டக்கிளசுக்கு அது நடக்கபோவதில்லை .  நேற்று ஐங்கரநேசனின் தம்பியுடன் பேசிக்கொண்டு இருந்தேன் டக்கிலசின் ஆட்கள் மட்டுமல்ல  அண்ணர் ஆட்களும் போத்தல் தூக்கி பிழையாகத்தான் நடந்துகொண்டார்கள்  என்று சொன்னார் .

டக்கிலஸ் பல நல்ல வேலைத்திட்டங்களை செய்துள்ளார் என்பது அங்கு இருக்கும் மக்களை கேட்டால்  தெரியும் ஆனால் தேர்தல் என்று வரும்போது தமிழர்கள் தேசிய கூட்டமைப்புக்குத்தான் வாக்கு அழிப்பார்கள் காரணம் எமக்கு ஒரு அரசியல் தீர்வு அவசியம் தேவை .

ஜஸ்டினுக்கா தேடி அலைந்து ஒரு பதிவை  பிடித்துவிட்டேன்  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.