Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எனது பிறமத கொண்டாட்டங்கள் வாழ்த்துக்கள் சொல்வதோடு சரி...
 
வீட்டில் வைத்து கொண்டாடியதில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன்.
 
  • Replies 140
  • Views 16.8k
  • Created
  • Last Reply

சிவனை வழிபட்டமையால் சைவம் என்ற பெயர் வந்தது. சிந்து வெளி நாகரீகத்தின் சமயம் எதுவென்பது எனது முடிவல்ல. அது பாடசாலைக் கல்வியிலும், வாசிகசாலையிலும் பின் இணையத் தேடலிலும் கிடைத்த அறிவு.
 
தமிழ் அடையாளத்தை சைவத்துக்குள் அடக்க வேண்டும் என்பது என்னுடைய வாதம் அல்ல. 
 
தமிழன் மதம் அற்றவன் என்பதை நிராகரிக்க ஆதி த‌மிழன் வாழ்ந்த சிந்து வெளி நாகரீகத்தில் நிலவிய சமய வழிபாட்டை ஆதாரம் காட்டினேன்.
 
சிந்து வெளியை ஆராய்ந்தவர்கள் அங்கு சிவழிபாடு நிகழ்ந்திருப்பதாகக் கூறிய படியால் ஆதி தமிழன் சைவன் என்று சொன்னேன்.
 
கடவுள் மதத்தைப் படைத்தார் என்பதை நான் நம்பவில்லை. கடவுளோ அல்லது கடவுள் சார்ந்த எவருமே இந்த பூமிக்கு வந்ததாகவும் எனக்கு நம்பிக்கை இல்லை. 
 
அதே நேரம் தமிழரல்லாதோர் தம்முடைய மதத்தையும் தம்முடைய கலாச்சாரத்தையும்
 
"ஏய் தமிழா.. உனக்கேதடா மதம்...எங்களுடையதையும் சேர்த்தே பின்பற்று!!
 
உனக்கு நீ பேசும் மொழி மட்டும் தானடா அடையாளம். வேறொன்றும் இல்லையடா மூடா!!"  
 
என்று
 
அவர் சொல்ல....
 
நான் கேட்க.....
 
நாங்கள் என்ன இளித்த வாயர்களா ??
 
இந்த இளித்த வாய்த்தனத்தின் அடையாளம் தான் தமிழனுக்கு மொழியைத் தவிர வேறெந்த அடையாளமும் இல்லை என்பது.
 
அப்படியானால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் பின்பற்றிய சமய கலாச்சாரம் எங்கே??
 
ஆயிரம் ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் எம்மன்னர்கள் கட்டிய கோவில்கள் எல்லாம் என்ன குப்பை மேடா ??
 
எம் அடையாள அம்சங்களைச் சுருக்கியது அன்னியர் தம் அடையாளங்களை எமக்குள் சொறுகுவதற்கே !!
 
.

ஈசன் நீங்கள் கூற விழையும் விடயங்களை நான் உணர்கிறேன்.
 
தமிழர்கள் எந்த சமயத்தையும் பின்பற்றவில்லை என்று யாரும் கூற முடியாது. வரலாற்று ஆசிரியர்கள் யாரும் அப்படி கூறவும் இல்லை. ஆயிரம் வருடங்களாக வானை முட்டி நிற்கும் கோபுரங்களே அதற்க்கு சாட்சி.  
 
பண்பாடு(கலாச்சாரம் - வட மொழி)  என்பது மொழி, கலை, இலக்கியம், உடை, மதம், இசை, நாட்டியம், சமையல்  என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. அதில் மதம் என்பது ஒரு சின்னப் பகுதியே... அது மட்டுமே ஒரு இனத்தை குறிக்கும் குறியீடு கிடையாது.
 
நேற்று சைவர்களாக இருந்தவர்கள் இன்று கிறித்துவர்களாகவோ, இசுலாமியவர்கலாகவோ இருக்கிறார்கள். நாளை இதுவும் மாறக் கூடும்.  மானுட வாழ்க்கை முறை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. அடுத்த சில நூற்றண்டில் இந்த மதங்களும் வழிபாட்டு முறையும் இருக்குமா என்பதே பெரிய கேள்விதான்!! தமிழ் மொழியைப் போல எல்லா மாற்றங்களையும் உள்வாங்கி கொண்டு தொடர்ந்து பயனப்படுவதுதான் தமிழ் இனக் குழுவின் சிறப்பு...  !!
 
நம்முடைய விவாதம் திரியின் தலைப்புக்கு அப்பால் செல்வதால் மற்றவருடைய பண்டிகைகளை கொண்டாடுவதும் தமிழ் இனக்குழுவின் ஒரு சிறப்பு என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் மன்னிக்கோணும்! யாழை விட்டுப் போக நினைச்சது முட்டாள்தனம். எனக்கு வெக்கம் சூடு சொரணை கொஞ்சம் கம்மி. நீங்கள் நான் சொன்னதுகளை வைச்சு என்னைப் பகிடி பண்ணினாலும் பரவாயில்லை. நான் திரும்பி வந்திட்டன். மதம் பற்றி யார் என்ன திரி பத்த வைச்சாலும் இனிக் கிட்டவும் வரமாட்டான் இந்தச் சிங்கன்! :D

பாவி வைத்தியரே

நான் இந்த திரியில் மட்டும் தான் விலகுகின்றீர்கள் என நினைத்தேன்...

எல்லாத்திரியிலும் எழுதி வாங்கிக்கட்ட வாழ்த்துக்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

பாவி வைத்தியரே

நான் இந்த திரியில் மட்டும் தான் விலகுகின்றீர்கள் என நினைத்தேன்...

எல்லாத்திரியிலும் எழுதி வாங்கிக்கட்ட வாழ்த்துக்கள் ...

ஆகா விசு அவர்களே! உங்களுக்குத் துணையாக ஒருவர் வந்துவிட்டார் என்ற ஆனந்தமோ.!! :D  :lol: .

Edited by Paanch

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் மன்னிக்கோணும்! யாழை விட்டுப் போக நினைச்சது முட்டாள்தனம். எனக்கு வெக்கம் சூடு சொரணை கொஞ்சம் கம்மி. நீங்கள் நான் சொன்னதுகளை வைச்சு என்னைப் பகிடி பண்ணினாலும் பரவாயில்லை. நான் திரும்பி வந்திட்டன். மதம் பற்றி யார் என்ன திரி பத்த வைச்சாலும் இனிக் கிட்டவும் வரமாட்டான் இந்தச் சிங்கன்! :D

நான் அப்பவே மூஞ்சூறு புடிக்கிற நாயை மூஞ்சையிலை பாக்க தெரியுமெண்டு நினைச்சுப்போட்டு பேசாமல் இருந்திட்டன்  :D  :lol:

Spoiler
சும்மா பகிடிக்குத்தான் எழுதினனான்..பிறகு மூஞ்சையை நீட்டுறேல்லை... :) ..
  • 1 year later...

என்னப்பா யாராவது, கிறீஸ்தவர்கள் அல்லாதவர்கள் இந்தமுறையும் கிரீஸ்மஸ் வாழ்த்து சொல்லுற ஐடியா இருக்குதா. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டில் மரம் வைத்து பரிசுப் பொருட்கள் வைத்துள்ளோம் பரிசுப் பொருட்களுக்குரியவர்களில் இருவர் தவிர்த்து மற்றவர் அனைவரும் சைவப்பழங்கள், வீட்டிற்கு வெளியேயும் அலங்கரித்துள்ளோம். மகன் தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் கொடுத்துள்ளார். அயலவர்களுக்கும் வாழ்த்து அட்டைகள் திங்கள் முதல் கொடுக்கப்படும்.

வெள்ளை சீலை, வேட்டி கட்டி பொங்கினால் வரவேற்கும் நாம் இதனை......????

நான் வேலை செய்யும் நிறுவனத்திலும் கிறிஸ்துமஸ் பார்ட்டி, Secret Santa எல்லாம் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். இவ்வளவுக்கும், எமது நிறுவனத்தில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ மதத்தை சாராதவர்கள். :unsure:  ஆனாலும் எல்லோரும் மகிழ்வுடன் கலந்துகொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Surveyor said:

என்னப்பா யாராவது, கிறீஸ்தவர்கள் அல்லாதவர்கள் இந்தமுறையும் கிரீஸ்மஸ் வாழ்த்து சொல்லுற ஐடியா இருக்குதா. :unsure:

வாழ்த்து சொல்வதற்கும்

சிரித்து சந்தோசமாக இருக்கவும்

ஏதப்பா மதமும் வித்தியாசமும்....???

அதுவும் அவன் தேசத்தில் வாழ்ந்தபடி????

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலர் விலாங்கு மீன்களாக வாழ்வதற்கே ஆசைப்படுகின்றனர். அவர்களிடம் வாதிடுவது குட்டிச்ச்சுவரில் முட்டுவது போன்றதுதான்.

இம்முறை முகநூலை அவதானித்தால் கிறிதவர்கள் ஒரு வாழ்த்துப் பதிவு போட்டால் அல்லாதவர் ஒன்பது தடவை கிறிஸ்மஸ் வாழ்த்துப் பதிவு போடுகின்றனர். இவர்களை எலாம் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது.

மீண்டும் சொல்கிறேன் நான் கிறித்தவத்துக்கு எதிரானவள் அல்ல

On 17/12/2016 at 3:24 PM, விசுகு said:

வாழ்த்து சொல்வதற்கும்

சிரித்து சந்தோசமாக இருக்கவும்

ஏதப்பா மதமும் வித்தியாசமும்....???

அதுவும் அவன் தேசத்தில் வாழ்ந்தபடி????

அப்போ உங்கள் பிள்ளைகள் ஒரு இஸ்லாமியப் பெண்ணையோ அல்லது ஆணையோ திருமணம் முடிக்கப் விரும்பினால் அவர்கள் சந்தோசத்துக்காக ஏற்றுக்கொள்ளும் முன்னுதாரண அப்பாவாக உங்களை பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்போ உங்கள் பிள்ளைகள் ஒரு இஸ்லாமியப் பெண்ணையோ அல்லது ஆணையோ திருமணம் முடிக்கப் விரும்பினால் அவர்கள் சந்தோசத்துக்காக ஏற்றுக்கொள்ளும் முன்னுதாரண அப்பாவாக உங்களை பார்க்கலாம்

வாழ்த்து சொல்வதற்கும்

சிரித்து சந்தோசமாக இருக்கவும் என்று எழுதியதை எனது மக்களின் திருமணத்துடன் முடிச்சு  போடுகிறீர்கள்..

அதையெல்லாம் நானே தாண்டியாச்சு....

எனது மனைவியே எனது மதமல்ல..

அடுத்தது

எனது பிள்ளைகளின் திருமணம்

அவர்கள் விருப்பப்படி தான்.

ஆனால் எனக்கு மதவாதிகளை பிடிக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஒரு இந்து அரபு நாட்டில் வேலைக்குச் சென்றால் அங்கு தன் வீட்டிலும் ஈட்டைக் கொண்டாடவேண்டும் என்கிறீர்களா ??

On 17/12/2016 at 2:06 PM, Surveyor said:

நான் வேலை செய்யும் நிறுவனத்திலும் கிறிஸ்துமஸ் பார்ட்டி, Secret Santa எல்லாம் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். இவ்வளவுக்கும், எமது நிறுவனத்தில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ மதத்தை சாராதவர்கள். :unsure:  ஆனாலும் எல்லோரும் மகிழ்வுடன் கலந்துகொண்டனர்.

உங்கள் நிறுவனம் இந்து அல்லது இஸ்லாம் நிறுவனமா ???

On 17/12/2016 at 0:38 PM, MEERA said:

எங்கள் வீட்டில் மரம் வைத்து பரிசுப் பொருட்கள் வைத்துள்ளோம் பரிசுப் பொருட்களுக்குரியவர்களில் இருவர் தவிர்த்து மற்றவர் அனைவரும் சைவப்பழங்கள், வீட்டிற்கு வெளியேயும் அலங்கரித்துள்ளோம். மகன் தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் கொடுத்துள்ளார். அயலவர்களுக்கும் வாழ்த்து அட்டைகள் திங்கள் முதல் கொடுக்கப்படும்.

வெள்ளை சீலை, வேட்டி கட்டி பொங்கினால் வரவேற்கும் நாம் இதனை......????

அயலவர்களுக்கு வாழ்த்து அட்டை கொடுப்பதும் வாழ்த்துவதும் ஒரு பிரச்சனையே அல்ல மீரா. மரம் எதற்காக வைக்கவேண்டும்?? உங்கள் பிள்ளை மகிழ்கிறான் என்பதற்காக அவனுடன் படிக்கும் பிள்ளை ஒரு இஸ்லாமியனாய் இருந்தால் உங்கள் வீட்டில் ஈகைப் பெருநாளையும் கொண்டாடுவீர்களா ??

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப ஒரு இந்து அரபு நாட்டில் வேலைக்குச் சென்றால் அங்கு தன் வீட்டிலும் ஈட்டைக் கொண்டாடவேண்டும் என்கிறீர்களா ??

உங்கள் நிறுவனம் இந்து அல்லது இஸ்லாம் நிறுவனமா ???

எங்கையாவது இந்து நிறுவனம், கிறிஸ்டியன் நிறுவனம், இஸ்லாம் நிறுவனம் எண்டு உண்டோ? 

நான் வேலை செய்யும் நிறுவனம் லண்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஒரு மத்திய கிழக்கை சேர்ந்த மல்டி நேஷனல் நிறுவனம். 40கு மேற்பட்ட நாடுகளில் 70கு  மேற்பட்ட கிளைகளுடன் செயல்படுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிறுவனம் எதையும் செய்யலாம். அது எவரையும் பாதிக்காது. ஆனால் ஒரு இனத்தின், தனிமனிதர்களால் செய்யப்படும் செயல்களால் எம் எதிர்காலச் சந்ததியை மாற்ற முடியும் என்பது கூடத் தெரியாமல் நீங்கள் இருக்கமாட்டீர்கள்

22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு நிறுவனம் எதையும் செய்யலாம். அது எவரையும் பாதிக்காது. ஆனால் ஒரு இனத்தின், தனிமனிதர்களால் செய்யப்படும் செயல்களால் எம் எதிர்காலச் சந்ததியை மாற்ற முடியும் என்பது கூடத் தெரியாமல் நீங்கள் இருக்கமாட்டீர்கள்

நிறுவனம் நிகழ்வை ஏற்பாடு செய்தாலும், அதில் பங்குபற்றுபவர்கள் அவர்களது சொந்த விருப்பப் படியே பங்குபற்றுகின்றர்கள். ஒருவரையும் வற்புறுத்தி கூப்பிடவில்லை.

ஒரு மதத்தின் நிகழ்வுகளில் பங்குபற்றுவதால்  ஒருவரும் தமது மதத்தை விட்டுவிட்டு அந்த மதத்துக்கு மதம் மாறிப் போகவில்லை. ஒரு மதத்தின் மீதான மரியாதை/எதிர்ப்பு, மத வெறியாக (அந்த மதத்துக்குள் ஆதரவான அல்லது எதிரான) மாறாதவவரை ஒரு பிரச்சினையும் இல்லை. 

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப ஒரு இந்து அரபு நாட்டில் வேலைக்குச் சென்றால் அங்கு தன் வீட்டிலும் ஈட்டைக் கொண்டாடவேண்டும் என்கிறீர்களா ??

உங்கள் நிறுவனம் இந்து அல்லது இஸ்லாம் நிறுவனமா ???

அயலவர்களுக்கு வாழ்த்து அட்டை கொடுப்பதும் வாழ்த்துவதும் ஒரு பிரச்சனையே அல்ல மீரா. மரம் எதற்காக வைக்கவேண்டும்?? உங்கள் பிள்ளை மகிழ்கிறான் என்பதற்காக அவனுடன் படிக்கும் பிள்ளை ஒரு இஸ்லாமியனாய் இருந்தால் உங்கள் வீட்டில் ஈகைப் பெருநாளையும் கொண்டாடுவீர்களா ??

நிச்சயமாக கொண்டாடுவோம் ஓர் இஸ்லாமிய நாட்டில் இருந்தால், ஆனால் நோன்பு இருக்கப்போவதில்லை. இவ்வாறு செய்வதால் எமது மதத்தை விடப்போவதில்லை. இது ஒரு வகையான களியாட்டமே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதவாதத்திற்கும் இனவாதத்திற்கும்  இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ நாடுகளில் குடியேறி இருப்பவர்கள் என்பதால் எமது சந்ததியினர் மேற்கு நாடுகளின் அடிப்படைக் கலாச்சாரங்களை பின்பற்றுவது நல்ல விடயமே. கிறிஸ்மஸ் மரம் வைத்து பரிசுப் பொருட்களைப் பரப்பி, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும் மகிழ்வான தருணங்களையும் பகிர்வது யாருக்கும் பிரச்சினைகளைத் தந்ததாக நான் அறியவில்லை. இதேபோல் தீபாவளிக்கும், தைப்பொங்கலுக்கும், சித்திரை வருட பிறப்புக்கும் கொண்டாட்டங்கள் நடாத்துவதும் அவற்றினைப் பகிர்வதும் நடக்கின்றதுதானே.

12 hours ago, குமாரசாமி said:

மதவாதத்திற்கும் இனவாதத்திற்கும்  இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன?

மதவாதம் - ஏதாவது ஒரு மதத்தை மையப்படுத்தி கட்டியெழுப்பப்படும் இனொரு மதத்துக்கு ஏதிரானகருத்து. 

இனவாதம் -  ஏதாவது ஒரு இனத்தை  மையப்படுத்தி கட்டியெழுப்பப்படும் இனொரு இனத்துக்கு  ஏதிரானகருத்து.

மதவாதம் பெரும்பாலும் மதக்கலவரங்களிலும் இனவாதம் இனக்கலவரங்களிலும் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு நிறுவனம் எதையும் செய்யலாம். அது எவரையும் பாதிக்காது. ஆனால் ஒரு இனத்தின், தனிமனிதர்களால் செய்யப்படும் செயல்களால் எம் எதிர்காலச் சந்ததியை மாற்ற முடியும் என்பது கூடத் தெரியாமல் நீங்கள் இருக்கமாட்டீர்கள்.

பாவம் சுமே

பிள்ளைகளின் எதிர்காலத்தை ( திருமணம் உட்பட) முடிவுகளை 

தான் தனது இனம் சார்ந்து எடுக்கலாம் என இன்னும் நினைக்கிறார் போலும்

நானறிய தற்பொழுது தாயகத்திலேயே

பெற்றோர்கள் அதை முடிவு செய்யும் நிலை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Sheep Behaviour என்று ஒன்று உள்ளது. இதை பரிசோதனைகள் மூலம் நிரூபித்துள்ளார்கள். பெரும்பான்மையானவர்கள் செய்யும் ஒரு விடயத்தை நாமும் செய்துவிட்டால் ஒரு தவறும் ஏற்படாது என்கிற சிந்தனை. அதன்படி, ஆங்கிலம், கிறிஸ்மஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லாம் நடைபெறுகின்றது. :unsure: (இந்தத் திரியை பின்னால் போய் வாசித்துப் பார்த்தால் பல அடிபிடிகள் நடந்துள்ள விடயம் தெரிய வருகிறது.. :D: )

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்டா சாமி நான் முக நூலிலும் வாழ்த்த வில்லை புதிய ஆண்டுக்கும் வாழ்த்த போவதில்லைtw_blush:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, முனிவர் ஜீ said:

நல்ல காலம்டா சாமி நான் முக நூலிலும் வாழ்த்த வில்லை புதிய ஆண்டுக்கும் வாழ்த்த போவதில்லைtw_blush:  

யோவ் முனி புத்தாண்டு மதம்சார்ந்தது இல்லை. பொதுவானது.

49 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யோவ் முனி புத்தாண்டு மதம்சார்ந்தது இல்லை. பொதுவானது.

எப்படி?

தமிழ்/ இந்து புத்தாண்டு ஏப்ரல் 13/14 இவ் அல்லவா? சனவரி 1 இல் புத்தாண்டு வாழ்த்து சொல்வதிலும் கிறிஸ்தவம் மற்றும் அதையொட்டிய மத நம்பிக்கைகள் இருக்கு அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.