Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் வாங்க பேசலாம் - 7 - பேய் பிசாசு தெரிவு முடிந்து பிரச்சாரம் ஆரம்பம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலிருந்து வரும் செய்திகள் 

மற்றும் அறிக்கைகள்

அனேகமாக அனைத்துமே மைத்திரியை ஏற்றுக்கொள்வதாகவே வருகிறது.

இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்

எந்த முடிவாகினும் அதை அங்குள்ளவர்களே எடுக்கணும்

என்றுமே நாம் அதற்கு பக்கபலமாக இருக்கணும் என்பதே எனது நிலைப்பாடு...

போராடுபவனுக்கும்

பிரச்சினைக்கு நேரே முகம் கொடுப்பவனுக்கும் தான் தீர்மானிக்கும் உரிமையும்  பொறுப்பும்  தகுதியுமுண்டு.

அந்தவகையில் 

யாழ் பல்கலைக்கழக பீடம்

வடமாகாணமுதலமைச்சர்

மற்றும் கூட்டைமைப்பு ஆகியவற்றின் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளமுடிகிறது..

ஆனால் எனக்கு ஒருவிடயம் இடிக்கிறது

இதில் எவரும் மகிந்தவுக்கு எதிராகவோ

அல்லது மைத்திரிக்கு ஆதரவாகவோ தமது நிலைகளை மக்களுக்கு தெளிவாக அறிவித்தது வரவேற்கத்தக்கது.

ஆனால் ஒருவரை ஆதரித்து பிரச்சாரம் எதற்கு...???

வேண்டாப்பெண்டாட்டி நிலையுள்ள தமிழர்கள் மேலும் தம்மை தாழ்த்திக்கொள்ள தலைவர்கள் முயல்வது ஏன்??

இரண்டுமே  குப்பைகள் என்றபின்

துப்பரவாக்க வெளிக்கிட்டவர்கள்

குப்பையை ஊர்முழுக்க காவித்திரிவதேன்...??

எனக்கு  தெரியும் ஒரு ஆபத்து என்னவெனில்

இந்த பிரச்சாரம் மூலம் மைத்திரி வென்று விட்டால்

அவர் இனிச்செய்யப்போகும் அநியாயங்களை இவர்களே மறைக்கவேண்டிய சூழ்நிலை பொறிக்குள் இவர்களே மாட்டிக்கொள்கிறார்கள் என்பதே..

அதே போன்று யாழிலும்

மைத்திரிக்கு வக்காலத்து வாங்குவோர்

இனி  அங்கு நடப்பவை பற்றி நாம் என்ன எழுதினாலும் அவற்றை மூடி மறைக்க வேண்டிவரும்

வருவர்...

இது சிங்களத்தின் அநியாயங்களை வெளியில் வராது சில வருடங்களாவது தடுக்கும்... :(  :(  :( 

பொறுத்திருந்து பாருங்கள்.

உங்கள் கருத்துக்களையும் பார்க்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

மூடி மறைக்கவேண்டி வராது. சென்ற தேர்தலில் மோடியை ஆதரித்த வைகோ ஐயா பிறகு திட்டித் தீர்க்கவில்லையா?? :o

  • தொடங்கியவர்

அவரது கூட்டுக்களுக்கு அப்பால்

வை.கோ ஐயா அவர்கள் மிகவும் நேர்மையான அப்பழுக்கற்ற அரசியல்வாதி.... :icon_idea:

அவரை இங்கு ஒப்பிடுவது சரியா எனத்தெரியவில்லை இசை.....

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்க முடியாதா ஒன்று! ஆனால் மாற்றம் ஒன்றே அவசியம்!!

  • கருத்துக்கள உறவுகள்

பிரதான பிரச்சனைனையாக இங்கு பார்க்கப்படுவது ஜனாதிபதியிடம் குவிந்து இருக்கும் அதிகாரங்களை இல்லாதொழிப்பதுதான். இதற்க்காகதான் பல அரசியல் கட்சிகளும் வேறுபாடுகளை களைந்து ஒன்றினைய வைத்துள்ளது. எம்மை பொறுத்தவரை (தமிழரை) ஒருவரிடத்தில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களால் என்மினம் பலவற்றை அனுபவிக்வேண்டி வந்தது. இதன் மூலம் பாரளுமன்றத்தின் வலுவை  வலிமையாக்கி கொள்வதன் மூலம் பாரளுமன்றத்திற்க்கு கட்டுப்பட வேண்டிய சுழல் உருவாக்கப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஒரு பொது தேர்தல் இடம் பெற்று அதில் அமையும் பொது அரசாங்கத்தின் ஊடாக பல பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இனியும் ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. 

அதே போன்று யாழிலும்

மைத்திரிக்கு வக்காலத்து வாங்குவோர்

இனி  அங்கு நடப்பவை பற்றி நாம் என்ன எழுதினாலும் அவற்றை மூடி மறைக்க வேண்டிவரும்

வருவர்.... :lol: 

இந்த ஜனாதிபதி தேர்தலில் எந்த அடிப்படையில் எதிரணி உருவாகியது என்பது மிக முக்கியம் .பின்னர் கூட்டமைப்பும் ,முஸ்லிம் காங்கிரசும் எப்படி அவர்களுக்கு ஆதரவு அழிக்க முன் வந்தார்கள் என்பது அதைவிட முக்கியம் .மகிந்தா மாதிரி மைத்திரி தனி அதிகாரம் கொண்ட ஒருவராக மாற சந்தர்ப்பமே இங்கு இல்லை .மைத்திரி என்ற ஒருவர் இந்த தேர்தலுக்கு மட்டும்தான் . :o 

ஒரு நாளைக்கு ஒரு கருத்தும், ஒழித்து மறைத்து அரசியல் செய்பவர்களுக்கும் தான் உங்கள் கருத்து பொருந்தும் .வெளிப்படையாக எழுதுபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை . :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

நான் "ஒக்கம வேசியோ ஒக்கம ரஜவரு" என்னும் கட்சிக்கு வாக்களிக்க உள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

----

மகிந்தா மாதிரி மைத்திரி தனி அதிகாரம் கொண்ட ஒருவராக மாற சந்தர்ப்பமே இங்கு இல்லை .மைத்திரி என்ற ஒருவர் இந்த தேர்தலுக்கு மட்டும்தான் . :o 

----

Chanthirika-mahinda.jpg

என்னைப் பொறுத்த வரையில்....

மைத்திரி வென்ற பின், மெதுவாக.... சந்திரிக்காவின் ஆதிக்கம் அங்கு ஆரம்பித்து.....

தன்னை அவமானப் படுத்திய, மகிந்த குடும்பத்தை ஒரு வழி பண்ணுவார் என்றே நினைக்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தை.... தவற விட்டால், தனது தகப்பன் பண்டார நாயக்காவினால் ஆரம்பிக்கப் பட்ட சுதந்திரக் கட்சியையே காணாமல் போக செய்து விடுவார் மகிந்த என்பது... சந்திரிக்காவுக்கு புரிந்தே இருக்கும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அதே போன்று யாழிலும்

மைத்திரிக்கு வக்காலத்து வாங்குவோர்

இனி  அங்கு நடப்பவை பற்றி நாம் என்ன எழுதினாலும் அவற்றை மூடி மறைக்க வேண்டிவரும்

வருவர்.... :lol: 

இந்த ஜனாதிபதி தேர்தலில் எந்த அடிப்படையில் எதிரணி உருவாகியது என்பது மிக முக்கியம் .பின்னர் கூட்டமைப்பும் ,முஸ்லிம் காங்கிரசும் எப்படி அவர்களுக்கு ஆதரவு அழிக்க முன் வந்தார்கள் என்பது அதைவிட முக்கியம் .மகிந்தா மாதிரி மைத்திரி தனி அதிகாரம் கொண்ட ஒருவராக மாற சந்தர்ப்பமே இங்கு இல்லை .மைத்திரி என்ற ஒருவர் இந்த தேர்தலுக்கு மட்டும்தான் . :o 

ஒரு நாளைக்கு ஒரு கருத்தும், ஒழித்து மறைத்து அரசியல் செய்பவர்களுக்கும் தான் உங்கள் கருத்து பொருந்தும் .வெளிப்படையாக எழுதுபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை . :icon_mrgreen: 

பிசாசுகள் கூடி இருந்தால் என்ன ..... கூட்டமாய் இருந்தால் என்ன .... தனித்து இருந்தால் என்ன ?
ஊருக்கு ஊழ்வினைதானே செய்யும்.
 
கூடி இருக்கிறார் 
தனித்து இருக்கிறார் 
என்ற வாதம் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? 
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கூட்டம் 3வது முறை வந்தால் அது பெரிய அழிவில் கொண்டு போய் தள்ளம். அதுமட்டுமல்ல நீண்ட காலத்துக்கு மகிந்த இராஜதந்திர பாதுகாப்புக்குள் இருப்பார். ஆகவே அவர் தோற்டிக்கப்பட வேண்டியவர். iமைத்திரியும் தமிழர்களுக்கு எதுவும் செய்யப் போவதுமில்லை.எதுவும் செய்ய அவர் சேர்ந்துள்ள இனவாத கூட்டு அனுமதிக்கப் போவதுமில்லை. ஆகவே அவருக்காக கூட்டமைப்பு பிரச்சாரம் செய்வது வரலாற்றுத் தவறு.நாளை இதே மைத்திரிக்கு எதிராக கூட்டமைப்பு முடிவெடுக்க வேண்டிய நிலை உருவாகும். கூட்டமைப்பு இந்தத்தேர்தலை தமிழ்மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கான வாக்கெடுப்பாக மாற்றத் தவறி விட்டது.மக்களைச் சயமாக வாக்களிக்கவாவது விட்டிருக்கலாம்.ஒருபக்கச்சரர்பெடுத்தத மட்டுமல்லாது பிரச்சாரமும் செய்வது இந்த மண்ணுக்கே விலைமதிப்பற்ற உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கும்,மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூடி மறைக்கவேண்டி வராது. சென்ற தேர்தலில் மோடியை ஆதரித்த வைகோ ஐயா பிறகு திட்டித் தீர்க்கவில்லையா?? :o

நன்றி  இசை கருத்துக்கும்  நேரத்துக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்க முடியாதா ஒன்று! ஆனால் மாற்றம் ஒன்றே அவசியம்!!

தாயகத்திலிருந்து  எழுதுகின்றீர்கள்

மதிக்கின்றேன்

பிரதான பிரச்சனைனையாக இங்கு பார்க்கப்படுவது ஜனாதிபதியிடம் குவிந்து இருக்கும் அதிகாரங்களை இல்லாதொழிப்பதுதான். இதற்க்காகதான் பல அரசியல் கட்சிகளும் வேறுபாடுகளை களைந்து ஒன்றினைய வைத்துள்ளது. எம்மை பொறுத்தவரை (தமிழரை) ஒருவரிடத்தில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களால் என்மினம் பலவற்றை அனுபவிக்வேண்டி வந்தது. இதன் மூலம் பாரளுமன்றத்தின் வலுவை  வலிமையாக்கி கொள்வதன் மூலம் பாரளுமன்றத்திற்க்கு கட்டுப்பட வேண்டிய சுழல் உருவாக்கப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஒரு பொது தேர்தல் இடம் பெற்று அதில் அமையும் பொது அரசாங்கத்தின் ஊடாக பல பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இனியும் ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

நல்லதொரு கருத்து...

நன்றி  ஐயா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதே போன்று யாழிலும்

மைத்திரிக்கு வக்காலத்து வாங்குவோர்

இனி  அங்கு நடப்பவை பற்றி நாம் என்ன எழுதினாலும் அவற்றை மூடி மறைக்க வேண்டிவரும்

வருவர்.... :lol: 

இந்த ஜனாதிபதி தேர்தலில் எந்த அடிப்படையில் எதிரணி உருவாகியது என்பது மிக முக்கியம் .பின்னர் கூட்டமைப்பும் ,முஸ்லிம் காங்கிரசும் எப்படி அவர்களுக்கு ஆதரவு அழிக்க முன் வந்தார்கள் என்பது அதைவிட முக்கியம் .மகிந்தா மாதிரி மைத்திரி தனி அதிகாரம் கொண்ட ஒருவராக மாற சந்தர்ப்பமே இங்கு இல்லை .மைத்திரி என்ற ஒருவர் இந்த தேர்தலுக்கு மட்டும்தான் . :o 

ஒரு நாளைக்கு ஒரு கருத்தும், ஒழித்து மறைத்து அரசியல் செய்பவர்களுக்கும் தான் உங்கள் கருத்து பொருந்தும் .வெளிப்படையாக எழுதுபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை . :icon_mrgreen: 

உங்களது கருத்துக்கு ஒரு பச்சை போட்டேன்

முதல்முதலாக எனது திரிக்குள் வந்து

புலிகளை  இழுக்காது ஒரு கருத்தை பதிந்ததற்காக

உங்களிடமிருந்து யாழ்களம் இதைத்தான் எதிர்பார்க்கிறது..

ஆனால்  உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்துண்டு

மைத்திரி  வந்தால் அரசு பலமிளக்கும்

தமிழர்களது உறுப்பினர்களுக்கு வலு கிடைக்கும் என்ற புலிக்குரலின் கருத்தை  ஏற்கின்றேன்

ஆனால் பிரதமராக ரணில் தான் வருவார்

எமக்கு எதையும் தரார்

அத்துடன் இவர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு

(எல்லாக்கட்சிகளும் ஒற்றுமையாக பாராளுமன்ற தேர்தலில் நிற்காது)

மீண்டும் மகிந்தவின் வருகைக்கு அடி கோலுவர்...

மகிந்த மீண்டும் பலமாக காலூன்றுவார்....

அதன் பின் தமிழர் நிலை....???

இந்தியாவில் காங்கிரசின் தோல்விகளுக்கு பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் (மோடி தவிர்ந்து)

காங்கிரசை வலுப்படுத்தின...

இது வரலாறு.....

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியாக மைத்திரி வந்தாலும் பிரதமர் ஆக ரணில் வந்தாலும் அங்கே பின்புலத்தில் நிற்பது மேற்குலக நாடுகள் இந்த மேற்குலக நாடுகளி்ன் வலுவான உந்துதல் சக்தி இல்லாமல் பொது அணி உருவாகியிருக்கபட மாட்டது என்பது நிச்சயம்!! சர்வதேசத்தில் பல மட்டங்களிலும் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் இலங்கையை அவற்றில் இருந்து விடுபட வைக்கும் ஆயுதம் தமிழருக்கான தீர்வு ஆகவே உள்நாட்டில் தீர்வினை வழங்க புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கம் தள்ளப்படும் இதனை எம்மவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவும் பதவிக்கு வரும்போது ரொம்ப பவ்வியமாகத்தான் வந்தாரு, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று...! ( அப்போது பசில், நாமல் , கோத்தபாய இருந்தார்களா என்ன...) ஆனால் பால் சட்டியையும் தூக்கிக் கொண்டு ஓடும்போது பால் சுரந்த  கொங்கையையும் அறுத்ததை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மைத்திரியும் வரும்போது  ஜனாதிபதி அதிகாரங்களைக் குறைப்பேன் என்று  குரைப்பார். ஆனால் வானலாவிய அதிகாரங்கள் கொண்ட அந்த அட்சய பாத்திரத்தை உடைக்க அவர் என்ன முட்டாளா...! மகியும் அப்படிச் சொல்லி வந்தவர், இப்பவும் அதையும் மறக்காமல் சொல்கிறார். ( மைத்திரிக்கும் நாலு சகோதரர்கள், மச்சான், மாமன் இருந்தால் இப்ப கூட நின்று கும்மியடிக்கும் சந்திரிகா எல்லோரும் வன்வே டிக்கட்டில் மூக்கைச் சிந்திக் கொண்டு விமானத்தில் ஏற வேண்டியதுதான்.) அவவுக்கு சொந்தக் கௌரவப் பிரச்சனை மகிந்தாவை இறக்குவது. 

யு.என்.பி . இருக்கோ தெரியேல்ல . அவர்கள் கம்மென்டு ஓரமா பாயைப் போட்டுக் கொண்டு கிடக்க வேண்டியதுதான். மெல்லவும் முடியாமல் ,விழுங்கவும் முடியாமல். சிரஞ்சீவியாய் இருப்பேன் என்று ஜே.ஆர். போட்ட சிம்மாசனம்தானே இது...!

இந்தியாவுக்கும் மகிந்தா மாறவேண்டிய தேவை உள்ளது. தமிழர்களுக்காக அல்ல, அங்கால புற்றுநோய்  போல்  சீனா சிறிலங்காவுக்குள் அக்டோபஸ்மாதிரி அத்தனை கால்களையும் விட்டுக் குடைந்து கொண்டிருக்கு. றோவெல்லாம் தமிழர்களுக்குத்தான் தீண்டும் பாம்பு, சீனனுக்கு தின்னும் பாம்பு, பல்லுக் குத்திக் கொண்டு போயிட்டே இருப்பான்.

தமிழர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், இப்ப இருக்கிறது அந்த உரிமைதான் , அதுவும் இல்லையென்டால் நாயும் சீன்டாது. அனால்  வழக்கம்போல் ஒரேயடியாய் ஒரே பக்கம் சாயாமல் ஏழாத்துப் பிரிவுல போற வள்ளத்தில பயணிப்பதுபோல்  பயணிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகத்திலிருந்து வரும் செய்திகள் 

மற்றும் அறிக்கைகள்

அனேகமாக அனைத்துமே மைத்திரியை ஏற்றுக்கொள்வதாகவே வருகிறது.

இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்

எந்த முடிவாகினும் அதை அங்குள்ளவர்களே எடுக்கணும்

என்றுமே நாம் அதற்கு பக்கபலமாக இருக்கணும் என்பதே எனது நிலைப்பாடு...

போராடுபவனுக்கும்

பிரச்சினைக்கு நேரே முகம் கொடுப்பவனுக்கும் தான் தீர்மானிக்கும் உரிமையும்  பொறுப்பும்  தகுதியுமுண்டு.

அந்தவகையில் 

யாழ் பல்கலைக்கழக பீடம்

வடமாகாணமுதலமைச்சர்

மற்றும் கூட்டைமைப்பு ஆகியவற்றின் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளமுடிகிறது..

ஆனால் எனக்கு ஒருவிடயம் இடிக்கிறது

இதில் எவரும் மகிந்தவுக்கு எதிராகவோ

அல்லது மைத்திரிக்கு ஆதரவாகவோ தமது நிலைகளை மக்களுக்கு தெளிவாக அறிவித்தது வரவேற்கத்தக்கது.

ஆனால் ஒருவரை ஆதரித்து பிரச்சாரம் எதற்கு...???

வேண்டாப்பெண்டாட்டி நிலையுள்ள தமிழர்கள் மேலும் தம்மை தாழ்த்திக்கொள்ள தலைவர்கள் முயல்வது ஏன்??

இரண்டுமே  குப்பைகள் என்றபின்

துப்பரவாக்க வெளிக்கிட்டவர்கள்

குப்பையை ஊர்முழுக்க காவித்திரிவதேன்...??

எனக்கு  தெரியும் ஒரு ஆபத்து என்னவெனில்

இந்த பிரச்சாரம் மூலம் மைத்திரி வென்று விட்டால்

அவர் இனிச்செய்யப்போகும் அநியாயங்களை இவர்களே மறைக்கவேண்டிய சூழ்நிலை பொறிக்குள் இவர்களே மாட்டிக்கொள்கிறார்கள் என்பதே..

அதே போன்று யாழிலும்

மைத்திரிக்கு வக்காலத்து வாங்குவோர்

இனி  அங்கு நடப்பவை பற்றி நாம் என்ன எழுதினாலும் அவற்றை மூடி மறைக்க வேண்டிவரும்

வருவர்...

இது சிங்களத்தின் அநியாயங்களை வெளியில் வராது சில வருடங்களாவது தடுக்கும்... :(  :(  :( 

பொறுத்திருந்து பாருங்கள்.

உங்கள் கருத்துக்களையும் பார்க்கலாம்....

மைத்திரி புதுசாய் செய்வதற்கு அநியாயம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. ஏற்கனவே எல்லா அநியாயமும் செய்யப்பட்டுவிட்டது. முன்பு இருந்த எல்லா ஜனாதிபதிகளையும் விட மைத்திரி நல்ல பெயர் எடுப்பதற்கே வாய்ப்புக்கள் அதிகம். ஏனென்றால் போர் முடிவடைந்துவிட்டது. இனி மீண்டும் குண்டு வெடிப்புக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் குறைவு. எல்லா கெட்ட பெயரும் மகிந்தவுக்கு போய்விட்டது. இதனால் ஒன்றும் செய்யாமல் பதவிக்காலம் முடியும்வரை சும்மா இருந்தாலும் மைத்திரி நல்லபிள்ளையாய் பெயர் எடுப்பது இலகு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெல்லப்போகின்றார் என்பதை வட கிழக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள்  தீர்மானிக்கப்போவதில்லை. இதுவும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

சிங்கள மக்களே எப்போதும் தங்கள் அடுத்த தலைவரைத் தேர்தல் மூலம் தங்கள் வாக்குகளால் தெரிவு செய்திருக்கின்றார்கள்.

இதற்குள் கூட்டமைப்புத் தங்கள் ஆதரவை மைத்திரிக்குத் தெரிவித்ததன் மூலம் சர்வதேச தரத்தில் சிங்கள அரசு  தமிழர்களுக்கு இழைத்த அனைத்து வன்முறைகளையும் மூடி மறைப்பதற்கு உதவி செய்திருக்கின்றார்கள்.

மைத்திரியின் தலைமையில் புதிய அரசு வரும் பட்சத்தில் அந்த அரசு சர்வதேச அரங்கில் ஜனநாயக முக மூடியை அணிந்து கொண்டு பல இழுத்தடிப்பு வேலைகளைச் செய்ய முயற்சிக்கும்.

சர்வதேசமும் புதிய அரசிற்கு மீண்டும் கால அவகாசம் அளித்துக் காலத்தைக் கழித்து விடும்.
இதற்குள் தங்கள் அரசியல்  தேவைகளையும் பெற்றுக்கொள்வார்கள்.

மைத்திரி அரசோ மகிந்தவை மீண்டும் ஒரு வெற்றி வீரனாகவே இலங்கையில் வைத்துக் கொள்வார்கள்.

மகிந்த மீது உள் நாட்டு விசாரணை கூட ஒரு நாடகமாக நடத்துவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.

தமிழர்கள் மீண்டும் அண்ணாந்து வானத்தைப் பார்க்கும் நிலை உருவாகும்.
 
அடுத்து மகிந்தவிற்கு அவருடைய ஊடக பலமும் ராணுவ பலமும் சிங்கள மக்களின் ஆதரவும் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.

அவருடைய தோல்விக்குக் காரணமாக இருக்கப் போவது சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மைத்திரிக்கு எத்தனை வீத வாக்குகள் அந்தச் சுதந்திரக்  கட்சியில் இருந்து கிடைக்கப் போகின்றது என்பதே.

சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் சிதறினால் மட்டுமே மகிந்த தோல்வி அடையச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

அதையும் மீறி மகிந்த வென்று தனது ராணுவ ஆட்சியைத் தொடர்ந்து நடத்தும் போது மட்டுமே சர்வதேசம் இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்து மனித உரிமை மீறல் யுத்தக் குற்றம் எனத் தனது பாணியில் மகிந்தவை அடக்க முயலும். அப்போது கூட மகிந்த சர்வ தேசத்துடன் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வார்.  

அழிந்து கொண்டிருக்கும் சுதந்திரகட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெளிநாடுகளில் இருக்கும் தனது பிள்ளைகளை களமிறக்க எடுத்த முயற்சி நன்றாக வெற்றியழித்துள்ளது.

மைத்திரி வென்றால் அடுத்து ஜக்கிய தேசியக்கட்சியை எப்படி அப்புறப்படுத்துவது என்பதை ஏற்கனவே திட்டம் போட்டிருப்பார்.இனிவரும் காலம் பதில் சொல்லும்.ரணில் ஒட்டிக் கொண்டே இருந்தால் அதை உடைக்கவே தேவையில்லாமல் போய்விடும்.

மந்திரி பதவிகளால் தமிழரையும் உடைக்க வாய்ப்புண்டு(ஓஓஓஓ உடைக்க என்ன இருக்கு என்கிற மாதிரி இருக்கு)

இதுவே மகிநத வென்றால் தமிழுக்காக செயற்பட்ட வெள்ளை வான் இனி சிங்களத்துக்காக செயற்படும்.

(இதைத் தான் நான் ரொம்பவும் எதிர் பாரப்பது)

மைத்திரி நல்லவர் என்பதற்காக அல்ல மகிந்த மிகவும் கெட்டவர் என்பதற்காக தமிழர்கள் மைத்திரியை ஆதரிக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

நான் பல பதிவுகளில் சொன்னது போல மக்கள் ஆணைக்கு மதிப்புத் தராமல் மாவட்ட அபிவிருத்திக் குழுவை டக்ளஸ் தலைமையில் சீர்குலைத்தல் கடற்கரைப் பகுதிகள் உள்ளீட்ட தமிழர் சொத்துக்களை தமது சொந்த உடமையாக்குதல் உள்ளிட்ட சில விடயங்களில் தமிழர்களுக்கு சில நன்மைகள் கிடைக்கலாம்.

அவ்வளவு தான். ஆனால் அதுவே இப்பொழுது பெரிய விடயம் ..

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியாக மைத்திரி வந்தாலும் பிரதமர் ஆக ரணில் வந்தாலும் அங்கே பின்புலத்தில் நிற்பது மேற்குலக நாடுகள் இந்த மேற்குலக நாடுகளி்ன் வலுவான உந்துதல் சக்தி இல்லாமல் பொது அணி உருவாகியிருக்கபட மாட்டது என்பது நிச்சயம்!! சர்வதேசத்தில் பல மட்டங்களிலும் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் இலங்கையை அவற்றில் இருந்து விடுபட வைக்கும் ஆயுதம் தமிழருக்கான தீர்வு ஆகவே உள்நாட்டில் தீர்வினை வழங்க புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கம் தள்ளப்படும் இதனை எம்மவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

உங்களுடைய கருத்தை எதிர்ப்பதோ அவமதிப்பதோ எனது எண்ணம் இல்லை.
ஆனாலும் எந்த ஆதாரமும் அற்ற நிலையில் இப்படி ஒரு விடயத்தை எவாறு நம்புகிறீர்கள்?
சும்மா பேய்கதை பிசாசு கதைபோல ....
மேற்கு உலகு 
சர்வதேசம் ..
என்று எழுதாதீர்கள். எதயும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வியோடு பாருங்கள் உங்களுக்கு வரும் சிந்தனைகளை எம்மோடும் பகிருங்கள்.
 
அமெரிக்காவே இப்போது வெறும் 12  பணக்காரர்களின் கையில்தான் இருக்கிறது. அவர்களோடு யார் சேருகிறார் விலகுகிறார் என்பதை பொறுத்து ஆட்சி அமைகிறது. ஆட்சி ஆளர்களை அவர்கள் பல மில்லியன் டொலர் செலவில் களம் இறக்குகிறார்கள்.
என்ன சிரமதான வேலையா அவர்கள் செய்கிறார்கள்? அவர்களது பணத்தை உரிய இடங்களில் முதலீடு செய்கிறார்கள். உகந்த ஆட்சி தற்கு தேவை.
 
 supply & demand    தான் பொருட்களின் விலையை நிர்ணயிக்கிறது ....
இப்போது 3 மாதத்தில் பெட்ரோல் விலை 50% மேலாக வீழ்ச்சி அடைகிறது. எங்காவது 150% பெட்ரோல் உற்பத்தி உலகில் நடந்ததா? அல்லது பெட்ரோலில் ஓடிய கார்கள் கடந்த 3 மாதமாக தண்ணீரில் ஓடுகிறதா?
 
எல்லாம் அவர்களே தீர்மானிக்கிறார்கள்.
யார் அவர்கள் ???  
  • கருத்துக்கள உறவுகள்

பேசலாம் வாங்கோ என விசுகு அண்ணா கூப்பிடுவார்.வந்து எதாவது அதில் கேள்வி கேட்டால் பதில் பேசாது மெளனமாக அதை கடந்து போய் விடுவார்.ஏன் நேர்த்தை வீணாக்குவான் (

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தாவும் பதவிக்கு வரும்போது ரொம்ப பவ்வியமாகத்தான் வந்தாரு, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று...! ( அப்போது பசில், நாமல் , கோத்தபாய இருந்தார்களா என்ன...) ஆனால் பால் சட்டியையும் தூக்கிக் கொண்டு ஓடும்போது பால் சுரந்த  கொங்கையையும் அறுத்ததை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மைத்திரியும் வரும்போது  ஜனாதிபதி அதிகாரங்களைக் குறைப்பேன் என்று  குரைப்பார். ஆனால் வானலாவிய அதிகாரங்கள் கொண்ட அந்த அட்சய பாத்திரத்தை உடைக்க அவர் என்ன முட்டாளா...! மகியும் அப்படிச் சொல்லி வந்தவர், இப்பவும் அதையும் மறக்காமல் சொல்கிறார். ( மைத்திரிக்கும் நாலு சகோதரர்கள், மச்சான், மாமன் இருந்தால் இப்ப கூட நின்று கும்மியடிக்கும் சந்திரிகா எல்லோரும் வன்வே டிக்கட்டில் மூக்கைச் சிந்திக் கொண்டு விமானத்தில் ஏற வேண்டியதுதான்.) அவவுக்கு சொந்தக் கௌரவப் பிரச்சனை மகிந்தாவை இறக்குவது. 

யு.என்.பி . இருக்கோ தெரியேல்ல . அவர்கள் கம்மென்டு ஓரமா பாயைப் போட்டுக் கொண்டு கிடக்க வேண்டியதுதான். மெல்லவும் முடியாமல் ,விழுங்கவும் முடியாமல். சிரஞ்சீவியாய் இருப்பேன் என்று ஜே.ஆர். போட்ட சிம்மாசனம்தானே இது...!

இந்தியாவுக்கும் மகிந்தா மாறவேண்டிய தேவை உள்ளது. தமிழர்களுக்காக அல்ல, அங்கால புற்றுநோய்  போல்  சீனா சிறிலங்காவுக்குள் அக்டோபஸ்மாதிரி அத்தனை கால்களையும் விட்டுக் குடைந்து கொண்டிருக்கு. றோவெல்லாம் தமிழர்களுக்குத்தான் தீண்டும் பாம்பு, சீனனுக்கு தின்னும் பாம்பு, பல்லுக் குத்திக் கொண்டு போயிட்டே இருப்பான்.

தமிழர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், இப்ப இருக்கிறது அந்த உரிமைதான் , அதுவும் இல்லையென்டால் நாயும் சீன்டாது. அனால்  வழக்கம்போல் ஒரேயடியாய் ஒரே பக்கம் சாயாமல் ஏழாத்துப் பிரிவுல போற வள்ளத்தில பயணிப்பதுபோல்  பயணிக்க வேண்டும்.

இதை விட இந்த திரிக்கு நல்ல பதில்கருத்து வராது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்றே சுவாசிக்க
பிராணவாயு தேவை.
வி்ட்டு விலகுவதை அப்புறமாய் பார்ப்போமே.
ஆத்மார்த்தமான அவசிய தேவை இப்போது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் "ஒக்கம வேசியோ ஒக்கம ரஜவரு" என்னும் கட்சிக்கு வாக்களிக்க உள்ளேன்

ஐனநாயகநாட்டில்

எவருக்கும் வாக்களிக்கும் உரிமையுண்டு

இவ்வாறு ஒரு கட்சி  இருந்தால்

கிடைத்தால் நீங்கள் வாக்களிப்பது தங்கள் உரிமை

நன்றி  சகோதரா

நேரத்துக்கும்  கருத்துக்கும் 

என்னைப் பொறுத்த வரையில்....

மைத்திரி வென்ற பின், மெதுவாக.... சந்திரிக்காவின் ஆதிக்கம் அங்கு ஆரம்பித்து.....

தன்னை அவமானப் படுத்திய, மகிந்த குடும்பத்தை ஒரு வழி பண்ணுவார் என்றே நினைக்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தை.... தவற விட்டால், தனது தகப்பன் பண்டார நாயக்காவினால் ஆரம்பிக்கப் பட்ட சுதந்திரக் கட்சியையே காணாமல் போக செய்து விடுவார் மகிந்த என்பது... சந்திரிக்காவுக்கு புரிந்தே இருக்கும்.

எனக்கும் இதில் மாற்றுக்கருத்து இல்லை சிறி

காலம் பதில் சொல்லட்டும்

நன்றி  சிறி

நேரத்துக்கும்  கருத்துக்கும் 

மகிந்த கூட்டம் 3வது முறை வந்தால் அது பெரிய அழிவில் கொண்டு போய் தள்ளம். அதுமட்டுமல்ல நீண்ட காலத்துக்கு மகிந்த இராஜதந்திர பாதுகாப்புக்குள் இருப்பார். ஆகவே அவர் தோற்டிக்கப்பட வேண்டியவர். iமைத்திரியும் தமிழர்களுக்கு எதுவும் செய்யப் போவதுமில்லை.எதுவும் செய்ய அவர் சேர்ந்துள்ள இனவாத கூட்டு அனுமதிக்கப் போவதுமில்லை. ஆகவே அவருக்காக கூட்டமைப்பு பிரச்சாரம் செய்வது வரலாற்றுத் தவறு.நாளை இதே மைத்திரிக்கு எதிராக கூட்டமைப்பு முடிவெடுக்க வேண்டிய நிலை உருவாகும். கூட்டமைப்பு இந்தத்தேர்தலை தமிழ்மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கான வாக்கெடுப்பாக மாற்றத் தவறி விட்டது.மக்களைச் சயமாக வாக்களிக்கவாவது விட்டிருக்கலாம்.ஒருபக்கச்சரர்பெடுத்தத மட்டுமல்லாது பிரச்சாரமும் செய்வது இந்த மண்ணுக்கே விலைமதிப்பற்ற உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கும்,மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

நன்றி புலவர்

இது தான் எனது நிலைப்பாடும்......

இன்று யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசியில் கதைத்தேன்

உறவுகள் மகிந்தவின் ஆட்சி போதும் என 

அவரை வீட்டுக்கு அனுப்ப நாளைவரை காத்திருக்கின்றோம் என்றனர்....

மக்களின் இந்த விடயத்தை

எல்லா மக்களுக்கும் கொண்டு செல்வது கூட்டமைப்பின் கடமை என வாதிட்டால்..........??

நன்றி  சகோதரா

நேரத்துக்கும்  கருத்துக்கும் ...

மகிந்தாவும் பதவிக்கு வரும்போது ரொம்ப பவ்வியமாகத்தான் வந்தாரு, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று...! ( அப்போது பசில், நாமல் , கோத்தபாய இருந்தார்களா என்ன...) ஆனால் பால் சட்டியையும் தூக்கிக் கொண்டு ஓடும்போது பால் சுரந்த  கொங்கையையும் அறுத்ததை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மைத்திரியும் வரும்போது  ஜனாதிபதி அதிகாரங்களைக் குறைப்பேன் என்று  குரைப்பார். ஆனால் வானலாவிய அதிகாரங்கள் கொண்ட அந்த அட்சய பாத்திரத்தை உடைக்க அவர் என்ன முட்டாளா...! மகியும் அப்படிச் சொல்லி வந்தவர், இப்பவும் அதையும் மறக்காமல் சொல்கிறார். ( மைத்திரிக்கும் நாலு சகோதரர்கள், மச்சான், மாமன் இருந்தால் இப்ப கூட நின்று கும்மியடிக்கும் சந்திரிகா எல்லோரும் வன்வே டிக்கட்டில் மூக்கைச் சிந்திக் கொண்டு விமானத்தில் ஏற வேண்டியதுதான்.) அவவுக்கு சொந்தக் கௌரவப் பிரச்சனை மகிந்தாவை இறக்குவது. 

யு.என்.பி . இருக்கோ தெரியேல்ல . அவர்கள் கம்மென்டு ஓரமா பாயைப் போட்டுக் கொண்டு கிடக்க வேண்டியதுதான். மெல்லவும் முடியாமல் ,விழுங்கவும் முடியாமல். சிரஞ்சீவியாய் இருப்பேன் என்று ஜே.ஆர். போட்ட சிம்மாசனம்தானே இது...!

இந்தியாவுக்கும் மகிந்தா மாறவேண்டிய தேவை உள்ளது. தமிழர்களுக்காக அல்ல, அங்கால புற்றுநோய்  போல்  சீனா சிறிலங்காவுக்குள் அக்டோபஸ்மாதிரி அத்தனை கால்களையும் விட்டுக் குடைந்து கொண்டிருக்கு. றோவெல்லாம் தமிழர்களுக்குத்தான் தீண்டும் பாம்பு, சீனனுக்கு தின்னும் பாம்பு, பல்லுக் குத்திக் கொண்டு போயிட்டே இருப்பான்.

தமிழர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், இப்ப இருக்கிறது அந்த உரிமைதான் , அதுவும் இல்லையென்டால் நாயும் சீன்டாது. அனால்  வழக்கம்போல் ஒரேயடியாய் ஒரே பக்கம் சாயாமல் ஏழாத்துப் பிரிவுல போற வள்ளத்தில பயணிப்பதுபோல்  பயணிக்க வேண்டும்.

நன்றியண்ணா

குமாரசாமியண்ணா எழுதியது போல்

மிக ஆழமாக எழுதியுள்ளீர்கள்

அடிக்கடி வாருங்கள்

அரசியல் பகுதிகளில் காணமுடிவதில்லையண்ணா..

உங்கள் அனுபவமும் நீங்கள் பிரான்சில் தாயகத்துக்காக ஆற்றிய பணிகளும் அறிந்தவன் என்றவகையில் கேட்கின்றேன்.

நன்றி  அண்ணா

நேரத்துக்கும்  கருத்துக்கும் 

மைத்திரி புதுசாய் செய்வதற்கு அநியாயம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. ஏற்கனவே எல்லா அநியாயமும் செய்யப்பட்டுவிட்டது. முன்பு இருந்த எல்லா ஜனாதிபதிகளையும் விட மைத்திரி நல்ல பெயர் எடுப்பதற்கே வாய்ப்புக்கள் அதிகம். ஏனென்றால் போர் முடிவடைந்துவிட்டது. இனி மீண்டும் குண்டு வெடிப்புக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் குறைவு. எல்லா கெட்ட பெயரும் மகிந்தவுக்கு போய்விட்டது. இதனால் ஒன்றும் செய்யாமல் பதவிக்காலம் முடியும்வரை சும்மா இருந்தாலும் மைத்திரி நல்லபிள்ளையாய் பெயர் எடுப்பது இலகு.

இது தான் சிக்கலே

இனி சிறீலங்கா நல்லபிள்ளையானால்

தமிழரின் நிலை....???

நன்றி  

நேரத்துக்கும்  கருத்துக்கும் 

இந்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெல்லப்போகின்றார் என்பதை வட கிழக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள்  தீர்மானிக்கப்போவதில்லை. இதுவும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

சிங்கள மக்களே எப்போதும் தங்கள் அடுத்த தலைவரைத் தேர்தல் மூலம் தங்கள் வாக்குகளால் தெரிவு செய்திருக்கின்றார்கள்.

இதற்குள் கூட்டமைப்புத் தங்கள் ஆதரவை மைத்திரிக்குத் தெரிவித்ததன் மூலம் சர்வதேச தரத்தில் சிங்கள அரசு  தமிழர்களுக்கு இழைத்த அனைத்து வன்முறைகளையும் மூடி மறைப்பதற்கு உதவி செய்திருக்கின்றார்கள்.

மைத்திரியின் தலைமையில் புதிய அரசு வரும் பட்சத்தில் அந்த அரசு சர்வதேச அரங்கில் ஜனநாயக முக மூடியை அணிந்து கொண்டு பல இழுத்தடிப்பு வேலைகளைச் செய்ய முயற்சிக்கும்.

சர்வதேசமும் புதிய அரசிற்கு மீண்டும் கால அவகாசம் அளித்துக் காலத்தைக் கழித்து விடும்.

இதற்குள் தங்கள் அரசியல்  தேவைகளையும் பெற்றுக்கொள்வார்கள்.

மைத்திரி அரசோ மகிந்தவை மீண்டும் ஒரு வெற்றி வீரனாகவே இலங்கையில் வைத்துக் கொள்வார்கள்.

மகிந்த மீது உள் நாட்டு விசாரணை கூட ஒரு நாடகமாக நடத்துவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.

தமிழர்கள் மீண்டும் அண்ணாந்து வானத்தைப் பார்க்கும் நிலை உருவாகும்.

அடுத்து மகிந்தவிற்கு அவருடைய ஊடக பலமும் ராணுவ பலமும் சிங்கள மக்களின் ஆதரவும் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.

அவருடைய தோல்விக்குக் காரணமாக இருக்கப் போவது சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மைத்திரிக்கு எத்தனை வீத வாக்குகள் அந்தச் சுதந்திரக்  கட்சியில் இருந்து கிடைக்கப் போகின்றது என்பதே.

சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் சிதறினால் மட்டுமே மகிந்த தோல்வி அடையச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

அதையும் மீறி மகிந்த வென்று தனது ராணுவ ஆட்சியைத் தொடர்ந்து நடத்தும் போது மட்டுமே சர்வதேசம் இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்து மனித உரிமை மீறல் யுத்தக் குற்றம் எனத் தனது பாணியில் மகிந்தவை அடக்க முயலும். அப்போது கூட மகிந்த சர்வ தேசத்துடன் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வார்.  

தமிழர்கள் மீண்டும் அண்ணாந்து வானத்தைப் பார்க்கும் நிலை உருவாகும்.

உண்மைதான் வாத்தியார்

ஆனால் மகிந்தவின் ஆட்சியின் கொடூரங்களை  தாங்கும் சக்தி இனி தாயக மக்களுக்கு இருக்கிறதா?

நாளை தெரியும்...

நன்றி  தம்பி

நேரத்துக்கும்  கருத்துக்கும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழிந்து கொண்டிருக்கும் சுதந்திரகட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெளிநாடுகளில் இருக்கும் தனது பிள்ளைகளை களமிறக்க எடுத்த முயற்சி நன்றாக வெற்றியழித்துள்ளது.

மைத்திரி வென்றால் அடுத்து ஜக்கிய தேசியக்கட்சியை எப்படி அப்புறப்படுத்துவது என்பதை ஏற்கனவே திட்டம் போட்டிருப்பார்.இனிவரும் காலம் பதில் சொல்லும்.ரணில் ஒட்டிக் கொண்டே இருந்தால் அதை உடைக்கவே தேவையில்லாமல் போய்விடும்.

மந்திரி பதவிகளால் தமிழரையும் உடைக்க வாய்ப்புண்டு(ஓஓஓஓ உடைக்க என்ன இருக்கு என்கிற மாதிரி இருக்கு)

இதுவே மகிநத வென்றால் தமிழுக்காக செயற்பட்ட வெள்ளை வான் இனி சிங்களத்துக்காக செயற்படும்.

(இதைத் தான் நான் ரொம்பவும் எதிர் பாரப்பது)

சரியான பார்வை ஈழப்பிரியன்...

தாயக மக்கள் மூச்சுவிட முயல்கின்றனரா??

நாளை தெரியும்..

மூச்சுவிட விடுவார்களா?

அல்லது வந்தவர்கள் தமக்குள் நடக்கும் குத்தப்பாட்டை திசைதிருப்ப

தமிழர்களை மேலும் நசுக்குவார்களா??

காலம் பதில் தரும்

நன்றி  சகோதரா

நேரத்துக்கும்  கருத்துக்கும் 

மைத்திரி நல்லவர் என்பதற்காக அல்ல மகிந்த மிகவும் கெட்டவர் என்பதற்காக தமிழர்கள் மைத்திரியை ஆதரிக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

நான் பல பதிவுகளில் சொன்னது போல மக்கள் ஆணைக்கு மதிப்புத் தராமல் மாவட்ட அபிவிருத்திக் குழுவை டக்ளஸ் தலைமையில் சீர்குலைத்தல் கடற்கரைப் பகுதிகள் உள்ளீட்ட தமிழர் சொத்துக்களை தமது சொந்த உடமையாக்குதல் உள்ளிட்ட சில விடயங்களில் தமிழர்களுக்கு சில நன்மைகள் கிடைக்கலாம்.

அவ்வளவு தான். ஆனால் அதுவே இப்பொழுது பெரிய விடயம் ..

டக்லசு மாமா இப்பவே அடுத்த அணிக்கு தாவ தயார்

இதில் மாற்றம் எப்படி வரும்???

மகிந்தவுக்காவது உழைத்தது  போதும் என வந்திருக்கும்

இவர்கள் புதியவர்கள்

அதிலும் பலபேர்....??

பார்க்கலாம்

நன்றி  தம்பி மணிவாசகர்..

நேரத்துக்கும்  கருத்துக்கும் 

உங்களுடைய கருத்தை எதிர்ப்பதோ அவமதிப்பதோ எனது எண்ணம் இல்லை.
ஆனாலும் எந்த ஆதாரமும் அற்ற நிலையில் இப்படி ஒரு விடயத்தை எவாறு நம்புகிறீர்கள்?
சும்மா பேய்கதை பிசாசு கதைபோல ....
மேற்கு உலகு 
சர்வதேசம் ..
என்று எழுதாதீர்கள். எதயும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வியோடு பாருங்கள் உங்களுக்கு வரும் சிந்தனைகளை எம்மோடும் பகிருங்கள்.
 
அமெரிக்காவே இப்போது வெறும் 12  பணக்காரர்களின் கையில்தான் இருக்கிறது. அவர்களோடு யார் சேருகிறார் விலகுகிறார் என்பதை பொறுத்து ஆட்சி அமைகிறது. ஆட்சி ஆளர்களை அவர்கள் பல மில்லியன் டொலர் செலவில் களம் இறக்குகிறார்கள்.
என்ன சிரமதான வேலையா அவர்கள் செய்கிறார்கள்? அவர்களது பணத்தை உரிய இடங்களில் முதலீடு செய்கிறார்கள். உகந்த ஆட்சி தற்கு தேவை.
 
 supply & demand    தான் பொருட்களின் விலையை நிர்ணயிக்கிறது ....
இப்போது 3 மாதத்தில் பெட்ரோல் விலை 50% மேலாக வீழ்ச்சி அடைகிறது. எங்காவது 150% பெட்ரோல் உற்பத்தி உலகில் நடந்ததா? அல்லது பெட்ரோலில் ஓடிய கார்கள் கடந்த 3 மாதமாக தண்ணீரில் ஓடுகிறதா?
 
எல்லாம் அவர்களே தீர்மானிக்கிறார்கள்.
யார் அவர்கள் ???  

ஒரு காலத்தில் வன்னியை நோக்கி பார்த்தோம்

தற்பொழுது வானத்தை அண்ணாந்து பார்க்கும் நிலையுள்ள தமிழருக்கு....?? :(  :(

நன்றி  சகோதரா..

நேரத்துக்கும்  கருத்துக்கும் 

பேசலாம் வாங்கோ என விசுகு அண்ணா கூப்பிடுவார்.வந்து எதாவது அதில் கேள்வி கேட்டால் பதில் பேசாது மெளனமாக அதை கடந்து போய் விடுவார்.ஏன் நேர்த்தை வீணாக்குவான் (

எங்கே அவ்வாறு செய்தேன் ரதி??

பொதுநலம் சார்ந்து

வலை விரிப்புக்களில் கொஞ்சம் கவனமாக இருப்பேன்

அவ்வளவு தான்..

நன்றி  சகோதரி

நேரத்துக்கும்  கருத்துக்கும் 

இதை விட இந்த திரிக்கு நல்ல பதில்கருத்து வராது.

நன்றியண்ணா

சற்றே சுவாசிக்க

பிராணவாயு தேவை.

வி்ட்டு விலகுவதை அப்புறமாய் பார்ப்போமே.

ஆத்மார்த்தமான அவசிய தேவை இப்போது.

நன்றி  யாழிவன்..

அந்த மக்கள் தான் தீர்மானிக்கணும்

வலிகளைத்தாங்குவோர் அவர்களே..

நன்றி  சகோதரா

நேரத்துக்கும்  கருத்துக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.