Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் தமிழ்ப் பெண்ணைக் கட்டிவைத்து பாலியல் துஸ்பிரயோகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
cctv-200-news3.jpg

கனடா ரொறன்ரோ பிர்ச்மவுன்ட் பகுதியில் பின்ச் அவனியுவில் உள்ள தொடா்மாடிக் குடியிருப்புப் பகுதியில் 40 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவர் கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது தொடா்மாடிக் குடியிருப்புக்கு லிப்ட்டில் சென்று கொண்டிருக்கையில் அந்த லிப்டுக்குள் வந்த இளைஞன் ஒருவா் குறித்த பெண்ணைப் பின்தொடா்ந்து சென்று அப் பெண்ணின் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

   

அங்கு அப் பெண்ணை கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் அதனை தனது தொலைபேசியால் வீடியோ எடுத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் கடந்த வருடம் நவம்பா் 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த இளைஞன் இதன் பின்னா் பல தடவைகள் அப் பெண்ணை அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகத் தெரியவருகின்றது. குறித்த பெண் கணவனைப் பிரிந்து வாழ்பவா் எனவும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபா் அப் பெண்ணின் அருகே இருந்த இன்னொரு வீட்டில் வசித்து வந்த சீன யுவதியையும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த போதே பொலிசாருக்கு அப் பெண்ணால் முறையிடப்பட்டுள்ளது.

தற்போது குறித்த நபரைப் பொலிசார் கைது செய்வதற்காக முயற்சித்துள்ளனா். குறித்த நபா் அந்த தொடா்மாடிக் குடியிருப்புக்கு வந்து போனபோது சி.சி.ரீவி கமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பொலிசார் வெளியிட்டு பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனா். குறித்த பெண்ணின் வீட்டுக்கு அந்த இளைஞன் பல தடவைகள் வந்து போனது சி.சி.ரி.வி கமராவில் பதிவு செய்திருந்ததால் அப் பெண்ணை விசாரணை செய்தபோதே தன்னையும் அந்த இளைஞன் அச்சுறுத்தி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் வவுனியாவைச் சோ்ந்தவர் என்றும்1999 ஆம் ஆண்டு கனடா வந்து நிரந்தரமாக குடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

cctv-070115-seithy%20(1).jpg

 

 

cctv-070115-seithy%20(2).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=124166&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறையிடம் முன்னரே ஏன் தமிழ் பெண் முறையிடவில்லை என்று கேட்க்கக்கூடாது .... தூ ....

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தால் சீனாக்காரன் போல இருக்கு,அவ்வளவு பெரிசா இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறையிடம் முன்னரே ஏன் தமிழ் பெண் முறையிடவில்லை என்று கேட்க்கக்கூடாது .... தூ ....

 

தமிழரசு அவர்களே! அவர் தமிழ்ப்பெண். அச்சம், மடம், நாணம், பண்பாடு எனத் தடைகளைத் தாண்டிவரக் காலம் தேவைதானே?. 

  • கருத்துக்கள உறவுகள்

வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லம்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழ் பெண்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் போல. சாத்திரியோடும் ஓடுதுங்க.. இப்படியும் நடக்குது.. பூசாரி கூடவும் ஓடுதுங்க. :lol::icon_idea:

 

சிட்னியில் கைரேகை பார்க்க வருபவர்களைக் கண்டால் காவல்துறைக்கு முறைப்பாடு செய்யலாம்.

You should always be
Aware, Alert and Attentive!
 
Be Aware: There have been reports from individual community members, mainly
from those of the Indian sub-continent, living in the Holroyd Local Area Command
area that they have been approached, at shopping centre car parks, on the road side
pavement etc., by individuals offering to read their palms, predict their future fortunes
or perform rituals for gaining a happier life. Some of them have been reportedly seen
wearing long white gowns. Please be aware that these individuals could be tricksters
wanting to make some quick money by exploiting the vulnerability of others.
 
Be Alert: Usually they approach you by asking for directions to a particular
destination or wanting you to read a piece of paper with information written in
English, as they claim that they cannot read English well. After chatting with you for a
couple of minutes they offer to predict your future by reading your palm or face. They
may ask for various amounts of money, and could possibly offer to make a religious
statue at a large cost. They may also offer to help you perform some ceremonies to
solve your life problems. These methods could be a way to get to know your personal
details such as name and address or the places you frequent.
 
Be Attentive: Observe carefully any person approaching you under these
circumstances and also your surroundings. Make sure you are in the view of the public
and that there are other people near you. You do not have to respond to them. Please
report such incidents to 131 444 straight away or Crime Stoppers on 1800 333 000.
For more information you can contact your local police station or the Multicultural
Community Liaison Officer:
Holroyd Police on 9897 4899 or the MCLO on 9897 4870 or 0421 059 166
Parramatta Police on 9633 0799 or the MCLO 9633 0749 or 0411 484 315
Granville Police on 9897 4199 or the MCLO on 9897 4070
Blacktown Police on 9671 9199 or the MCLO on 9672 9051
 
 Boronia Multicultural Services Inc.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடி முடி தெரியாமல் இணையத்தில் வந்த துணுக்கு செய்தியை வைத்து தமிழ் பெண் மீது ஏன் இவ்வளவு குரோதமாகவும், காழ்ப்புணர்வுடனும், கருத்துக்கள் இங்கு எழுதப்படுகிறது? பாதிக்கப்பட்ட பெண் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றால் இப்படியெல்லாம் எழுதுவதற்கு மனச்சாட்சி இடம் கொடுக்குமா? மனிதாபிமானம் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேறியதுடன் செத்துவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

 மனிதாபிமானம் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேறியதுடன் செத்துவிட்டதா?

மனிதாபிமானம் நாட்டில் இன்னமும் மிச்சம் இருக்கிறதா? அது எங்கே இருக்கிறது அம்மா?. 2009ல் மனிதாபிமானத்தை நாட்டில் சாகடித்து அந்தியேட்டியும் முடித்துவிட்டோம். இப்போது நாங்கள் 6வது திவசம் கொடுப்பதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.   

 

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தால் சீனாக்காரன் போல இருக்கு,அவ்வளவு பெரிசா இல்லையே

பிரச்சனயை சொல்கிறீர்களா ??
 
பெண் விடுதலை விரும்பிகளே ..? அன்னாரை ஒருக்கால் என்ன என்று கேளுங்கள்.
பாலியல் பலாத்காரம் பெரிய விடயம் இல்லை என்கிறார்.
 
(எப்படி வாயால் உண்மை எடுப்பது என்று எனக்கு தெரியும்) 
  • கருத்துக்கள உறவுகள்

 

பிரச்சனயை சொல்கிறீர்களா ??
 
பெண் விடுதலை விரும்பிகளே ..? அன்னாரை ஒருக்கால் என்ன என்று கேளுங்கள்.
பாலியல் பலாத்காரம் பெரிய விடயம் இல்லை என்கிறார்.
 
(எப்படி வாயால் உண்மை எடுப்பது என்று எனக்கு தெரியும்) 

 

 

பெண் விடுதலைன்னு உசுப்பேத்தி உசுபேத்தி.. புருசனைட்ட இருந்து பிரிச்சு.. கயவர்களிடம் கையளிக்கிறது. கயவர்கள் என்ன கணவர்களா.. அவங்க வேலையை.. பலத்தை காட்டிட்டு போயிடுறாங்க. போட்ட கோசம்.. 1% க்கும் பயனில்லாமல்.. இறுதியில்.. எல்லாத்துக்கு பணிஞ்சு போய்.. மடியில கணத்தையும் சுமந்து.. அழிஞ்சு நாசமாக வேண்டியான். இறுதியில் எல்லாத்துக்கும் விடுதலை வாங்கிக்கிட்டு மேல போக வேண்டியான். பெண் விடுதலை என்ற கோசத்தின் பின்னால்.. இதுதான் நடந்துகிட்டு இருக்கு. ஆனால் பல பெண்கள்.. இது தெரிஞ்சு கோசம் போட்டாலும்.. புருசனை கைவிடுறதில்ல. அவர்களுக்கு தெரியும் இந்தக் கோசத்தின் பின்னால் உள்ள நாசம்.  :icon_idea:  :)  :lol:

தமிழரசு அவர்களே! அவர் தமிழ்ப்பெண். அச்சம், மடம், நாணம், பண்பாடு எனத் தடைகளைத் தாண்டிவரக் காலம் தேவைதானே?. 

 இதை யாரும் தப்பாக விளங்கக் கூடாது
 
கணவன் மனைவி பிரச்சனை என்று வரும்போது எங்கே போனது இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம்; வெளி நாடுகளில் எத்தனை பிள்ளைகள் ஐந்து நாள் அம்மாவுடனும் இரண்டு நாள் அப்பாவுடனும் களிக்கின்றார்கள் அந்தப் பிள்ளகளுக்கு என்ன தலைவிதி? வெளி நாடுகளில் ஆண்களும் படு மோசம் பெண்களும் மோசம் தான்.ஒருவரையொருவர் விட்டுகொடுத்து போகமாட்டார்கள் இவர்கள் வாயில் வருவதெல்லாம் பிரிந்து வாழுதல் விவாகரத்து.இதைவிட வேலை செய்யுமிடங்களில் பெண்களுடன் கதைத்து அவர்களின் குடும்ப வரலாற்றையே பெற்றுவிடுவார்கள்.வீட்டில் கணவன் மனைவி பிரச்சனைகள் வரும் போதெல்லாம் கூட வேலை செய்யும் நண்பரிடம் செல்லிடப்பேசி மூலமாக தகவல் தெரிவிப்பது இப்படிப்பல சம்பவங்கள்.அண்மையில் நான் கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று ஒரு ஆணும் பெண்ணும் திருமணமாகி பிள்ளைகளுடன் வாழ்பவர்கள்.எல்லா குடும்பங்களிலும் பிரச்சனைகள் வரும் அதை பேசித்தீர்த்துக் கொள்வார்கள்.இதுதான் இயல்பு.இந்தபெண் கொஞ்சம் வித்தியாசமாய் செயல்படுகிறார்.வேலையிலிருக்கும் ஒரு தெரிந்த ஆணிடம் போய் குடும்பப் பிரச்சனையைச் சொல்ல அவர் உனது கணவன் அறிவு கெட்டவன் உன்னை மாதிரி ஒரு பெண் எனக்கு மனைவியாய் வந்திருந்தால் கையில் ஏந்தி வைத்திருப்பேன்.என்று பில்டப் கொடுத்திருக்கின்றார்.இந்த அம்மா அவரின் பேச்சில் மயங்கி தன்னையே கொடுத்து இறுதியில் இரண்டு குடும்பமும் கந்தறுந்ததுதான் மிச்சம்.இப்போ அவர்களின் பிள்ளைகளின் கெதி என்ன? இவர்கள்ளுகெல்லாம் அச்சமா?இதை விட வெளி நாடுகளில் மாமியார் கொடுமை வேறு.சில ஆண்கள் வேலையால் வீட்டுக்கு வந்தால் ஏன் தான் வந்தோம் என்றிருக்குமாம். தமிழ்குடும்பங்களில் இந்திய நாடகங்களின் பங்களிப்பும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை
  • கருத்துக்கள உறவுகள்

அடி முடி தெரியாமல் இணையத்தில் வந்த துணுக்கு செய்தியை வைத்து தமிழ் பெண் மீது ஏன் இவ்வளவு குரோதமாகவும், காழ்ப்புணர்வுடனும், கருத்துக்கள் இங்கு எழுதப்படுகிறது? பாதிக்கப்பட்ட பெண் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றால் இப்படியெல்லாம் எழுதுவதற்கு மனச்சாட்சி இடம் கொடுக்குமா? மனிதாபிமானம் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேறியதுடன் செத்துவிட்டதா?

 

உங்கள் கருத்தை வரவேற்கின்றேன்

நானும் அப்படித்தான்  யோசித்தேன்...

 

கணவர் இல்லாத  பெண்கள் மீது இவ்வாறான எமது பார்வை சர்வசாதாரணமானது

அதேவேளை எமது பெண்கள் தமது நற்பெயர் கெட்டுவிடும் என சமூகத்துக்கு பயந்து

இது  போன்ற அடாவடிக்களுக்கு பலியாவது தொடர்ந்து நடந்தேவருகிறது

 

இங்கே எமது பெண்கள் தான் தம்மை இவற்றிலிருந்து மாற்றிக்கொள்ளணும்

போராடணும்.........

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எமது பெண்கள் தான் தம்மை இவற்றிலிருந்து மாற்றிக்கொள்ளணும்

போராடணும்.........

 

ஏன் ஆண்கள் தங்களை போராடாமலே மாற்றிக்கொள்ளலாமே..!

 

56268dfc-6d81-4164-b5d5-6c751be36b72_S_s

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிக்குள் வரவோ,எழுதவோ விரும்பின்றியே எழுதுகின்றேன்....ஆண்கள் சற்று யாழுக்குள் வந்து போகும் பெண்களை நினைத்தாவது நிதானமாக எழுதப் பழகுங்கள்.தமிழ் ஊடகங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அவற்றை பலவாறு திரித்து எழுதுவது வழமையாக நடக்கும் விடையம் தான்..அத்தோடு இவற்றை முற்று முழுதாக நம்பக் கூடிய விடையமாகவும் இல்லை..ஆளைக் கட்டும் வரைக்கும் அவா என்ன என்ன செய்து கொண்டு இருந்தார்.......விரல் சூப்பிற பாப்பாவா...
ஒருவர்,இருவர் பிழை விடுகிறார்கள் என்பதற்காக ஒட்டு மொத்த பெண்களையுமே இழுக்காதீர்கள்.ஆண்,பெண் இருபாலரும் தான் பிழை விடுகிறார்கள். இல்லை என்று சொல்லவே முடியாது. ஒரு பெண்ணை மிரட்டுவதிலிருந்து,பேசக் கூடாத வார்த்தைகள் எல்லாம் பேசுவதிலிருந்து அனைத்தும் செய்து  கொண்டு தான் இருக்கிறார்கள்...இவற்றை எல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்,ஒத்துக் கொள்ள மனசு இடம் கொடுக்காது..ஒன்றை  மட்டும் சொல்லி செல்ல விரும்பிறன் நீங்களும் ஒரு பெண்ணால் தான் இந்த உலகிற்கு பிரசவிக்கபட்டவர்கள்.கூடவே சகோதரிகளும் பிறந்திருக்கலாம்..பேசும் போது,எழுதும் போது நிதானம் தேவை..இவை எல்லாம் பல ஆண்டுகளாக பேசி,பேசி புளித்துப் போய் விட்ட விடையங்கள்..




 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதும் ஆண்கள் இலகுவாக ஆண்களின் தப்புத்தண்டாக்களை தவிர்த்துவிட்டு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை அசிங்கப்படுத்துவதை காணமுடிகிறது. ஒரு கேள்வி இதைப்போன்ற செய்தி உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பிகள் அல்லது ஏன் யாழ் இணைய நண்பிகளை வைத்து செய்தியாக வந்தால் உங்களால் இப்படி ஏளனமாக உரையாட முடியுமா? எப்போதுமே பொய்கள் உலாவருவதுபோல உண்மைகளால் உலா வரமுடியாது அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் தனித்து வாழும் பெண் என்றால் தரங் கெட்டவள் என்று நோக்கும் தன்மையை ஒவ்வொரு ஆண்மகனும் தங்களுடைய ஊனக்கண்களில் இருந்து அகற்ற வேண்டும். ஒரு பெண் துணையென்று எவரையும் நம்பாது தனித்து வாழ்வதற்கு ஆண்கள் மீதான நம்பிக்கை இன்மையே அதிக காரணமாக இருக்கும். வலிமையற்ற பெண்கள் தனித்து வாழ விளையும்போது நிறையவே புறநிலைச்சிக்கல்களுக்கு சாதுரியமாக ஆண்களால் மாட்டப்படுகிறார்கள். செய்திகளில் இல்லாத விடயங்களை அவதூறுகளாக எழுதும்போது ஒரு கணம் உங்கள் வீட்டுபெண்களை அவ்விடத்தில் நிறுத்தி பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதுவும் எழுதியிருக்கவில்லை என்பதை கனம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பெண்களுக்கு, அதுவும் தமிழ்ப் பெண்களுக்கு ஆதரவாகத்தானே எழுதினேன்...?  எதற்கும் பெண்ணைப்பற்றி சாண்டில்யன் அவர்களும் எழுதியுள்ளதுபற்றி ஒரு பதிவை விரைந்து பதிந்துவிடுகிறேன்.  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற அக்கா, யாழ் களப் பெண் யாருக்காவது இப்படி நடந்தால் அந்தப் பெண்ணை குற்ற்ச்சாட்டி,அவமானப்படுத்தி இல்லாத குறையெல்லாம் அந்த பெண் மீது சொல்லுவர்

அடி முடி தெரியாமல் இணையத்தில் வந்த துணுக்கு செய்தியை வைத்து தமிழ் பெண் மீது ஏன் இவ்வளவு குரோதமாகவும், காழ்ப்புணர்வுடனும், கருத்துக்கள் இங்கு எழுதப்படுகிறது? பாதிக்கப்பட்ட பெண் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றால் இப்படியெல்லாம் எழுதுவதற்கு மனச்சாட்சி இடம் கொடுக்குமா? மனிதாபிமானம் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேறியதுடன் செத்துவிட்டதா?

 

வேறு இனத்து பெண் என்றால் என்ன எழுதினாலும் பரவாயில்லையா? ஏன் இந்த பாகுபாடு.

 

இது ஒரு இக்கட்டான நிலை. 
பாவம் கணவனிடம் என்ன துன்புறுத்தலுக்கு ஆளானாலோ?
பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணிற்கு கவுன்ஸிலிங் உதவி கிடைக்க வேணும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.