Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தியை நீக்கவேண்டாம் வலிமேற்கு பிரதேச பொதுமக்கள் தமிழரசு கட்சிக்கு எச்சரிக்கை!

Featured Replies

இலங்கைத்தமிழரசுகட்சியின் தலைவர் அவர்களே!!

 தமிழ்மக்களாகிய நாம் வார்த்தைகளால் வர்னிக்கமுடியாத அளவு வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கி என்றோ ஒருநாள் எமது நியாயமான போராட்டம் வெற்றிபெறும் சுதந்திரக்காற்றினை நாமும் சுவாசிக்கலாம் என்று ஆவலோடும் ஒரு பாரிய எதிர்பார்ப்போடும் காத்திருக்கின்றோம்.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் தமிழர்களுக்காக பேசும் ஒரு சக்தியாகவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை மட்டுமே தமிழ்மக்கள் நம்புகின்றார்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்றால் அதன் அர்த்தம் என்ன?

அதற்கும் எத்தனை கட்சிகள் இருக்கின்றன அந்த கட்சிகளுக்குள் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி அடிமட்ட பாமர மக்கள் அறிந்திருக்கவில்லை ஆனால் தம்ழ்த்தேசியக்கூட்டமைப்பு எமது உரிமைக்காகப்போராடும் எமக்காக குரல்கொடுக்கும் என்பதில் மட்டும் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளனர் ஆனால் அந்த நம்பிக்கையினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் கேள்விக்குறியாக்கியுள்ளது இதனை மறுத்துவிட உங்களால் முடியாது மேலும் தற்போது தமிழரசுகட்சியில் இருந்து அனந்தி சசிதரன் அவர்களை நீக்கியுள்ளீர்கள் அதற்கான முக்கியமான காரணமாக அதாவது குற்றச்சாட்டாக நீங்கள் முன்வைப்பது கட்சியின் கட்டுப்பாட்டினை மீறினார் என்பதுதான், எனவே தமிழரசு கட்சியின் கட்டுப்பாடு என்பது தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி என்பதைப்பற்றி பேசக்கூடாது என்பதா?

காரணம் கடந்த ஜனாதிபதித்தேர்தலின்போது அனந்தி சசிதரன் அவர்கள் தான் தேர்தலை நிராகரிப்பதகவும் அதற்காக அவர் சில நியானமான கருத்தினையும் முன்வைத்திருந்தார் அது அவரது தனிப்பட்ட கருத்து .அவரது மனக்குமுறல் மன வேதனை நேரடியாக போரால்ப்பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண் எனவே அவர் இந்த சிங்கள ஆட்சியாளர்களால் நேரடியாக பல துன்பங்களை அனுபவித்திருக்கின்றார், இன்றுவரை அச்சுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார் எனவே அவர் பாதிக்கபட்டவள் என்ற முறையில் தனது தனிப்பட்ட கருத்தாக அதனை பதிவு செய்தாரே தவிர யாரையும் வாக்களிக்கவேண்டாம் என்று கூறவில்லை எனவே இதற்காக அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன?

இதன் அரசியல் பின்னனி என்ன? இது முற்றுமுழுதாக கட்சிக்குள் இருக்கும் ஒரு சிலரது விருப்பேயாகும் இரண்டொருவருக்குப்பிடிக்கவில்லை என்பதற்காக என்பதாயிரத்துக்கும் அதிகமான மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநியை வெளியேற்றுவது என்பது அந்த எண்பதாயிரம் மக்களின் முகத்திலே கரிபூசிவிடுவதற்கு சமனான ஒன்று மேலும் அனந்தி சசிதரன் அரசியலுக்கு வரமுன்பே காணமல்ப்போன உறவுகளுக்காக குரல் கொடுத்து வந்த ஒரு நபர் அவர் அரசியல் வாதி அல்ல அரசியல் செய்யவேண்டும் என்பது அவரது நோக்கம் அல்ல இதனை பொதுமக்களாகிய நாம் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளோம் வடமாகாணத்தில் தீவிரமாக வளர்ந்து வரும் அவரது வளர்சி சில சுயநலவாதிகளுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் எமக்கு தெளிவாகின்றது எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலினை இலக்காக வைத்தே அனந்தி சசிதரன் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளாரா? என்ற சந்தேகம் பொதுமக்களாகிய எமக்கு வலுவாக எழுகின்றது தமிழ்த்தேசியம் சுயநிர்னயம் என்பதைப்பற்றி தொடர்ந்து குரல்கொடுத்து வரும் அனந்தி சசிதரன் அவர்கள் வெளியேற்றப்படுவதை மொதுமக்களாகிய நாம் விரும்பவில்லை அதனை வன்மையாகக்கண்டிப்பதோடு அவரை கட்சியில் இருந்து நீக்கவேண்டம் என்று தமிழரசு கட்சியின் தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ்த்தேசியம் சுயநிர்னயம் என்றெல்லாம் சிங்கள ஆட்சியாளர்களிடம் கோரிக்கைகள் விடுத்து போராடிக்கொண்டிருக்கும் தமிழ்மக்களாகிய நாங்கள் இன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பிடம் தமிழ்த்தேசியத்திற்காக போராடவேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுமா என்று பயப்படத்தொடங்கிவிட்டோம்.

எமது விருப்பத்துக்கு மாறாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் இதுவரைகாலமும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராகப்போராடிய தமிழ் மக்கள் முதல் முறையாக தமிழரசுகட்சிக்கும் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராகவும் போர்க்கொடிதூக்குவோம் என்பதனை உறுதியாக கூறுகின்றோம்.

-நன்றி
வலிமேற்கு பிரதேச பொதுமக்கள்

 

http://www.pathivu.com/news/37070/57//d,article_full.aspx

  • Replies 53
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலி மேற்கில் எத்தனை சதவீதம் மக்கள் அனந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி தேர்தலை புறக்கணித்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் ஊடகங்களின் கோமாளித்தனம் சந்திசிரிக்கிறது.

வலிமேற்க்கோட ஏன் விட்டீனம்? உலகத் தமிழினம் எண்டு போட்டிருந்தா இன்னும் எடுவையா இருந்திருக்கும்.

இதையும் தூக்கிப் பிடிச்சு கருதெழுத இங்க ஆக்கள் வருவீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கடிதத்தோடு தமிழரசுக் கட்சியில் இருந்து அனந்தி துரத்தியடிக்கப் படுவது தவிர்க முடியாததாகக்கூடும்.

தொடர்ந்தும் கட்சிக்குள் கலகம் செய்வதை யாரும் ஏற்கப்போவதில்லை.

கஜேந்திரகுமாரை உசுப்பேத்தி ஒரு திறமையான தலைவரை ஆளில்லா டீக்கடைக்கு அனுப்பியது போல, இப்போ அனந்தியையும் அனுப்ப போகிறார்கள் புலம் பெயர் யாவாரிகள்.

மக்களோட சேர்ந்து அங்கிருக்கும் ராணுவமும் இப்ப அனந்தியை நீக்கவேண்டாம் என்ற போராட்டத்தில் குதித்துள்ளதாக எமது பதிவு செய்தி நிருபர் தெரிவித்துள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கடிதத்தோடு தமிழரசுக் கட்சியில் இருந்து அனந்தி துரத்தியடிக்கப் படுவது தவிர்க முடியாததாகக்கூடும்.

தொடர்ந்தும் கட்சிக்குள் கலகம் செய்வதை யாரும் ஏற்கப்போவதில்லை.

கஜேந்திரகுமாரை உசுப்பேத்தி ஒரு திறமையான தலைவரை ஆளில்லா டீக்கடைக்கு அனுப்பியது போல, இப்போ அனந்தியையும் அனுப்ப போகிறார்கள் புலம் பெயர் யாவாரிகள்.

புலம்பெயர்  வேடிக்கையாளர்களால் சொறி வாடிக்கையாளர்களால் அதை தடுத்து நிறுத்த முடியாதா ??

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் ஊடகங்களின் கோமாளித்தனம் சந்திசிரிக்கிறது.

வலிமேற்க்கோட ஏன் விட்டீனம்? உலகத் தமிழினம் எண்டு போட்டிருந்தா இன்னும் எடுவையா இருந்திருக்கும்.

இதையும் தூக்கிப் பிடிச்சு கருதெழுத இங்க ஆக்கள் வருவீனம்.

கட்டாயம் வருவினம் :D

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

இதோ வேடிக்கையான சொறி வாடிக்கையான குதர்க்க கேள்வியுடன் வந்தே விட்டர்கள். ரெண்டு மணத்தியாலமா கிருபன் சொன்னத நினச்சதெல்லாம் போயே போச்சு.

அனந்தி உங்கள் மூலமாக புலம்பெயர் யாவாரிகள் தமிழரசுக்கட்சியை ஹைஜாக் பண்ண பார்கிறார்கள். கவனமாய் இருங்கள் என்று சொல்லியும் கேளாமல் யாவாரிகளின் சதிக்கு பலியாகி, சச்சி போன்ற ஆசாமிகளுடன் சேர்ந்து, மகிந்தஹவுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்த அனந்தி தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டால் இப்பவும் இந்த விடயத்தை இப்படியே விட்டுவிடவே கட்சி விரும்புவதாக தெரிகிறது.

இல்லாமல் தொடர்ந்தும் லூசுத்தனமாக அறிக்கை கொடுத்து அரசியல் செய்ய வெளிகிட்டா, அவருக்கு பரிந்துரைக்க யாரும் இருக்கப் போவதில்லை, புலம் பெயர் வேடிக்கையாளர் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்

சோ இனி ஒன்னும் செய்ய முடியாதா ?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தஹவுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்த அனந்தி 

 

கற்பனை கடந்த சோதி.  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரே குத்தி முறியாத அளவுக்கு கோசாணங்கள் குத்தி முறிவதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. அனந்தியை வெளியேற்ற அல்லது உள்வாங்க 150 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.


புலம்பெயர் ஊடகங்களின் கோமாளித்தனம் சந்திசிரிக்கிறது.

வலிமேற்க்கோட ஏன் விட்டீனம்? உலகத் தமிழினம் எண்டு போட்டிருந்தா இன்னும் எடுவையா இருந்திருக்கும்.

இதையும் தூக்கிப் பிடிச்சு கருதெழுத இங்க ஆக்கள் வருவீனம்.

 

 

இதுக்குள்ள வெப் ஈழம்.கொம்மும் அடங்குதோ??

பாசல் மாநகரில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டுள்ளார் .

ஆனந்தி சசிதரன் அவர்களை தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கி உள்ளார்கள் .அவரை கட்சியிலிருந்து நீக்கியதற்கு நீதி கேட்டு மாவை சேனாதிராசா கலந்து கொண்ட முத்தமிழ் விழா மண்டபம் முன்பு முற்றுகைப் போராட்டம் அனைத்து மக்களும் கலந்து கொள்ளவும் .

விழ நடை பெறும் மண்டப முகவரி

காலம் : 17-01-2015

இடம் : Kultur- und sportzentrum

: obermatt str 13

: 4133 - pratteln

தகவல் :-

மனித நேய செயற்பாட்டாளர் கஜன் !!

-பிரான்சு

 

இது வேற நடக்குது எப்படி கொழுந்துகள் எல்லாரும் ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான்  பெரிய கேள்வி  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணி

எல்லா புலம்பெயர் காமெடி.காம் தளங்களையும் தான் சொல்கிறேன்.

மருது,

அனந்தி பகிரங்க மன்னிப்பு கேட்டால் ஏதும் நடக்க கூடும். ஆலோசனை கொடுத்துப் பாருங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் மரத்தில் கட்டி வைத்து அடித்த போது கருத்து எழுதாத ஆட்கள் புலத்தில் ஊர்வலம் என்றவுடன் பாய்ந்தடித்து கருத்து எழுதுவது ஏன்? சம்பந்தரினின் பரம ரசிகர்களோ? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் உண்மை பொய்க்கப்பால்....

இது ஒரு ஆபத்தான போக்கு..

இதற்கு காரணம் இன்றைய தலைவர்களின் பொறுப்பற்ற அவசர நடவடிக்கைகள்

 

இவை கை மீறிப்பொவது தமிழரின் ஒருமித்த குரலுக்கு ஆப்பு வைத்துவிடும்

சம்பந்தப்பட்டவர்கள் தமது தனிப்பட்ட அகங்காரங்களை தள்ளி  வைத்துவிட்டு

இனத்தின் எதிர்காலம் சார்ந்து சிந்திக்க தலைப்படணும்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி எழிலன் அவர்கள் குத்துமதிப்பாக எவ்வளவு காசு வாங்கியிருப்பார் எண்டு நீங்கள் நினைக்கிறியள்? ஆனால் ஒரு விடையம் உண்மை அனந்தி அவர்கள் அரசியலில் அரிவரிகூடத் தாண்டாதவர் எனபதை  அறியமுடிகின்றது. மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், தமிழர் கூட்டணியையும் அதன் சின்னமாகிய உதையசூரியனையும் நீதிமன்றத்தில் முடக்கிய ஆனந்தசங்கரி போன்றோரையே தங்கள்வசம் வைத்திருக்கும் கூட்டமைப்பை கொஞ்சம் சரிக்கட்டி உள்ளுக்காலை குறுக்குச்சால் ஓட்டி அரசியல் நடத்த இப்பெண்ணுக்கு புத்தியில்லாமல் போச்சு.

 

மைத்திரி ரெம்ப நல்லவராகத்  எல்லோருக்கும் தெரிந்தது, அனந்திக்கு மட்டும் மாறாகத் தெரிந்துபோட்டுது.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி காசு வாங்கியிருப்பார் என்று தோன்றவில்லை.

புலயாவாரிகள், சச்சி போன்ற தரகர்கள், நெடியவன் போன்ற புலிகளின் பணத்தை சுருட்டிய போலிப்புலிகளின் சதியில் சிக்கி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறுதான் முன்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாண, வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி-பின்னணி அமைப்புக்களின் பெயரால் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அறிக்கைகளை வெளியிட்டு இருந்தது.

சிறிலங்கா அரசுக்கும் இந்திய அரசுக்கு எதிராகவும் ஐ.நா.வுக்கு வேண்டுகோள் என்றும் அதே போன்று தலைவா போரைத் தொடங்கு! நாம் உனக்குப் பின்னாலும் முன்னாலும் இருப்போம் என்று எல்லாம் அறிக்கைகள் வெளிவந்து இருந்தன.

அப்போது அந்த அந்த மாவட்டங்களில் நீண்ட காலம் செயற்பட்டுக் கொண்டு இருந்த அமைப்புக்களிடம் ஏன் நீங்கள் எல்லாம் அறிக்கை வெளியிடவில்லை. உங்களுக்குப் பின்னர் வந்த அமைப்புக்கள் எல்லாம் அறிக்கைகள் வெளியிடுகின்றனவே என அந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த செய்தியாளர்கள் கேட்டபோது- அப்படி எந்த அமைப்பும் இல்லை. புலிகளே அவ்வாறு அமைப்பினை உருவாக்கி தமக்கு வேண்டியவர்களை நியமித்து- அதாவது, டம்மியாக அவர்களை வைத்துக்கொண்டு தாமே அறிக்கைகளை வெளியிடுகின்றனர் என்று தெரிவித்து இருந்தனர்.

தற்போது காட்சிகள் மாறிவிட்டன. இன்று தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் புலத்தில் இருந்தவாறு வடக்கு-கிழக்கு மக்களின் பெயரால் வெளியிட்டு வருகின்றனர் புலம்பெயர் அமைப்புக்களும் ஊடகங்களும்.

விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில் தமிழ்ச்;செல்வனின் ஆங்கில அறிவின்மையும் அரசியல் அறிவின்மையையும் பயன்படுத்தி தமிழ்நெட் ஊடகம் சில அறிக்கைகளை தமிழ்ச்செல்வனின் பெயரால் தாமே எழுதி வெளியிட்டுக் கொண்டு இருந்தனர். இதனை அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் கண்டு பிடித்து தமிழ்நெட் ஜெயச்சந்திரனை கிழி- கிழி என்று கிழித்தும் இருந்தார். இதன் பின்னர் சிறிது காலம் தமிழ்ச்செல்வனின் பெயரால் அறிக்கைகளை வெளியிடுவதனை நிறுத்தி இருந்த தமிழ்நெட் பாலசிங்கம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் மீண்டும் தனது வேலையினை தொடங்கியது.

இங்கே பலர், புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் மற்றும் அமைப்புக்கள் ஏதோ இன்றுதான் அங்கு உள்ள தலைவர்களை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றனர் என நினைத்து உரையாடுகின்றனர். இது அன்றே நடந்தது என்பதனை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ரணிலின் நரித்தன விளையாட்டு....முதலில் கருணா....இப்ப அனந்தி.....இது எமது இனத்தின் இருப்பையே அழிக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணி

எல்லா புலம்பெயர் காமெடி.காம் தளங்களையும் தான் சொல்கிறேன்.

மருது,

அனந்தி பகிரங்க மன்னிப்பு கேட்டால் ஏதும் நடக்க கூடும். ஆலோசனை கொடுத்துப் பாருங்களேன்.

அனந்தி அவர்கள் தேர்தலில் நின்ற நேரம் நான் எழுதிய கருத்து ஒன்று இருக்கிறது ....
அதை இங்கே பத்திந்தால் நானா இப்படி எழுதினேன் என்று நீங்களே யோசிக்கலாம்.
அனந்தி அவர்கள் தேர்தலில் நின்ற போதே அதை எதிர்த்து கருத்து வைத்தவன் நான். காரணம் அதன் 
முடிவு இப்படி இருக்கும் என்பது எனக்கு அப்போதே தெரியும். 
கூட்டமைப்பு இனி தமிழர்களுக்காக இல்லை. அது ஒரு தமிழ் பெயர் கொண்ட இந்திய அஜெண்ட் அவளவுதான்.
அதற்கு சம்மந்தரையோ மாவை ஐயாவையொ திட்ட முடியாது.
சுயநலத்தால் தமிழன் கண்ட மிச்சம் அதுதான். அது இப்போதும் 70 வீதமானவர்களுக்கு புரியவில்லை.
 
தமிழர்களுடைய அரசியல் பாதை என்பது இனி உணர்ச்சி பூர்வமானதாக இருக்க முடியாது. 
எழ எழ அவர்கள் அடிப்பார்கள்.
கூட்டமைப்பில் தன்னலமற்றவர்கள் என்று யாரும் இல்லை ....
தமிழர்கள் இனிதான் கொன்றாக் விலையில் அடிமைகளாக விற்கப்பட போகிறார்கள். 
 
தாயகத்தின் கல்வி வளர்ச்சியும் 
புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார வளர்ச்சியும் ஓரிடத்தில் சங்கமித்தால்.
நாம் விலைபேச வெளிக்கிடலாம். 
 
இருவரையும் பிரித்து வைக்க வேண்டும் என்பது சிங்களவனுக்கு நன்கு தெரியும் 
அதுதான் நெடியவன் கொடியவன் எல்லோரையும் பாதுகாப்பு செலவு பெ ரொல்லில்  வைத்திருக்கிறான். 
ஒருவேளை சிங்களவன் அதை மறந்து தூங்கினாலும் 
நீங்கள் உங்களை போன்றவர்கள் அதை தூக்கமின்றி செவனவே செய்வீர்கள்.
 
அனந்தி அவர்கள் தமிழரசு கட்சியில் நீடிப்பதால் எனக்கு தனிப்பட எந்த லாபமும் இல்லை.
உண்மையை சொன்னால் தற்போதைய தமிழரசு கட்சி நீடிப்பதால் கூட தமிழருக்கு எந்த லாபமும் இல்லை. 
சரியோ தவறோ .... நாம் அவர்களுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.
அதை கடமை என்று நினைக்கிறேன்.  

பெ ரொல்லில் = payroll

  • கருத்துக்கள உறவுகள்

வலி மேற்கு மட்டுமல்ல.. முழு வடக்குக் கிழக்குமே சம்பந்தனின் தற்போதை நிலையில் கூட்டமைப்பில்.. தமிழரசுக் கட்சியின்  எதேட்சதிகாரப் போக்கை வெறுக்க ஆரம்பித்துள்ளன. சாதாரண தமிழ் மக்களே  இதனை இப்போ பேசு பொருளாக்கி    இருக்கிறார்கள். கூட்டமைப்புக்கு முன்னர் விடுதலைப்புலிகள் காலத்தில்   இருந்த மக்கள் செல்வாக்கு சரிய ஆரம்பித்துவிட்டது. அதற்கு சம்பந்தன் மிகப் பெரிய பங்கு வகித்துள்ளார். மக்கள் மாற்று அரசியல் சக்திகளை  நம்பிக்கை மிக்க சக்திகள்     இனங்காட்டாமையால்  இன்னும் கூட்டமைப்பை  நம்புகிறார்களே தவிர சம்பந்தனின் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகளுக்கு மக்கள்  இப்போ ஆதரவளிக்கிறார்கள்   என்பது பொருளல்ல. :icon_idea:

Edited by nedukkalapoovan

அனந்தி
 
எல்லா அமைப்புக்களிலும் உள் ஜனநாயகம் என்று ஒன்று உண்டு. கூட்டமைப்பிலும்தான். தலைவர் சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அவ்வாறு இருந்தால் கூட்டமைப்பால் இத்தனை குழுக்களை உள்ளடக்கி வைத்து இருக்க முடியாது. அதுவும் பல முன்னால் ஆயுத போராளிக் குழுக்களை.
கருத்து வேறுபாடுகளை அமைப்புக்கு உள்ளே விவாதித்து முடிவுக்கு வரவேண்டும். பெரும்பாண்மை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட வேண்டும்.  பெரும்பாண்மை எடுத்த முடிவிற்கு எதிராக வெளியே விமர்சிப்பது என்பதை எந்த அமைப்பும் ஏற்றுக்கொள்ளாது (புலிகள் உட்பட). அனந்தி மீது ஒழுங்காற்று நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கையை நான் மனதார வரவேற்கின்றேன்.
 
இங்கு சிலர் இது சம்மந்தனின் முடிவு, மாவையின் முடிவு, சுமந்திரனின் முடிவு அல்லது இவர்கள் மூவரது முடிவு போன்று பதிவிடுகின்றார்கள். நிச்சயமாக இருக்கமுடியாது. அப்படி இருந்தால் கூட்டமைப்பின் தலைவர்களிற்கு எதிராக உறுப்பினர்களிடமிருந்து அனந்திக்கு ஆதரவான கருத்துக்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வரவில்லை. இவை அனந்தி தன்னிச்சையாக நடப்பதை உறுதிப்படுத்துகின்றது. 
 
நடவடிக்கை சரியானதே.
  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி மீதான நடவடிக்கை இருக்க... அதே கருத்தை வெளியிட்ட சிவாஜி மீது நடவடிக்கை இல்லை. அனந்தியோடு.. செய்தியாளர் மாநாடு நடத்திய தமிழரசுக் கட்சி மத்திய குழு   உறுப்பினர் சச்சி மீது நடவடிக்கை இல்லை.

 

அனந்தியும்.. சிவகரனும் மட்டும் மாவை.. சம்பந்தன் கண்ணுக்கு    உறுத்தலாக  இருக்க காரணம்   என்ன..???!

 

இதனை அனந்தி மீது நடவடிக்கைக்கு வக்காளத்து வாங்கி மனப்பூர்வ ஆதரவளிக்கும் பெருமக்கள் விளக்குவினமா..???! :lol::D:icon_idea:


Senior ITAK Central Committee Member and former UN consultant Ma'ravan-pulavu K. Sachithananthan addressed the press in Jaffna before the presidential election together with Mr Sivakaran and Ms Ananthy, clarifying their position on the SL presidential election.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37601

ஆனந்தியும் சிவகரனும் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் .சிவாஜிலிங்கம் TELO வை சார்ந்தவர் .சச்சி தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கிடையாது . இவர் ஸ்ரீலங்கா வந்ததிலிருந்து தமிழரசுக்கட்சியின் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடதிலை என்று கட்சி மட்டத்தில் விசாரித்த பொழுது சொன்னார்கள் .

சச்சிக்கு ஸ்ரீலங்கா வருவதற்கு தயக்கம் இருந்தது .டக்கி ,சந்திரகுமாரின் தயவிலைதான் ஸ்ரீலங்கா வந்தவர் இதற்கு ஆதாரமாக அவரின் நண்பர்கள் பல விடயங்களை சொன்னார்கள் அதில் 2013இல் மறவன்புலவில் இவர் நடாத்திய பொங்கல் விழாவுக்கு சந்திரகுமாரை பிரதம விருந்தினராக மாலை போட்டு வரவேற்பு செய்திருக்கின்றார் .

இங்குள்ளவர்களை போல் யூகத்தின் அடிப்படையில் அல்லது கூகிளில் தேடி கருத்து முன் வைப்பதில்லை .என்னுடைய கருத்துகளுக்கு ஆதாரங்கள் வைத்திருக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

சச்சி தமிழரசுக் கட்சி மத்திய குழு   உறுப்பினர்    என்று ஊடகங்கள் சொல்லுது. (இதனை தமிழரசுக் கட்சி    இதுவரை நிராகரிக்கல்ல. ஊடகச் செய்திகளை மறுக்கல்ல.). ஆனால்    யாழி்ல்   உள்ளவை விசாரிச்ச   இடத்தில்   அப்படி   இல்லையாம்.   :D   ஊடகங்களை விட  இவர்கள்   உள்வீட்டுக்கலகங்களுக்கு    அதிகம் உதவினம் போல.

 

மேலும் சிவாஜி டெலோ. டெலோ ஆக்களும் கொழும்பில்  சம்பந்தனுடன் கூட   இருந்தவை தானே.. அறிக்கை வாசிக்கேக்க.  அப்ப ஏன்   தமிழரசுக் கட்சி..   கூட்டமைப்பு சார்ப்பில்..  டெலோ.. சி்வாஜி மீது நடவடிக்கை எடுக்க பகிரங்கமாக கோரல்ல..????!  அனந்தி மீதான நடவடிக்கை நீதியானது என்றால்.. ஏன் இந்த தயக்கம்..??????!

 

டெலோவிடம்   உள்ள   கட்சி ஜனநாயகம்   கூட.. மிதவாதிகளுன்னு  சொல்லிக் கொள்ளும்...  தமிழரசுக் கட்சி   பாசிசவாதிகளிடம்   இல்லையா..??!  என்ற  இன்னொரு   கேள்வி புட்டுக்கிட்டு கிளம்புதே..???!   அதுக்கு  என்ன பதில் வைச்சிருக்கினமோ..???! :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.