Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்ற கொள்கையுடன் ஒன்றுபட வழி உண்டா?

Featured Replies

blogger-image--1479590893.jpg TNA

இலங்கை தீவானது உலக வல்லரசுகளின் கழுகு பார்வையில் உள்ள ஒரு அழகான தீவு பல்லின மக்கள் வாழும் தீவில் என்றுமே எதிரிகளாக தமிழரும் சிங்களவரும் இதனால் சிவப்பாகிய ஈழம் இன்றுவரை அதன் சிவப்புக்கறை போகவில்லை சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற தமிழர்களின் போராட்டம் இந்த மணித்துளி வரை நடந்துகொண்டே இருக்கிறது.
இந்த போராட்டத்தில் உன்னத உயிர்களையும் எண்ணிலடங்கா உடைமைகளையும் இழந்தும் விடுதலைப் பற்று என்னும் நெருப்புடன் தமிழ் சமூகம் இன்றுவரை விழ விழ எழுவோம் என்பதற்கிணங்க தமது ஈழ விடுதலை போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றார்கள்.
அகிம்சை போராட்டம் பலனில்லாமல் போக ஆயுதப் போராட்டம்  வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டது வெற்றியின் உச்சத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் தொட்டனர். தரைப்படை,கடற்படை அத்துடன் விமானப்படையையும் அடைந்து சிங்களப்படைகளுக்கு பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்தனர். தமிழீழம் என்ற தனிநாடு மலரும் தருவாயில் பக்கத்து வல்லரசு, உலக வல்லரசு, உலக நாடுகள் இலங்கையில் இரண்டு ஆதிக்க சக்திகள் இருப்பதால், அதாவது தமிழீழ அரசு மற்றும் சிங்கள அரசு என இரண்டு இருப்பதால் தங்களின் ஆதிக்க நலனைக்கருதி தமிழீழ அரசை அழிக்க திட்டம் தீட்டி தமிழீழ நிழல் அரசை உலக நாடுகளின் துணையுடனும் இந்திய நேரடிக்கள முன்னெடுப்புடனும் சிங்கள கூட்டுடன் அழித்தன.  தமிழர்களின் பலத்தை முள்ளிவாக்காலில் துடைத்து அழித்தது.
 ஆனால் முள்ளிவாய்க்காலில் தமிழர் போராட்டம் முடியவில்லை என்பதை தமிழர்கள் இன்றுவரை நடத்தும் ஜனநாயக வழி போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களின் ஜனநாயக வழிப்போராட்டம் உலக அரங்கில் உத்வேகம் அடைந்து வீறுநடை போடுகின்றது.

blogger-image--1222050336.jpg ANANTHY

ஈழத்தில் விடுதலைப்புலிகளின் மௌனத்தின் பின் தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழீழ மக்களுக்கு தங்களின் ஜனநாயக அமைப்பாக தேசிய தலைவரால் சுட்டிக்காட்டப்பட்ட அமைப்பு என்ற ஒரு காரணத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் தங்களின் ஜனநாயக விடுதலை அமைப்பாக கருதுகின்றனர்.
இதனால் கூட்டமைப்பு விடுதலை புலிகளின் மௌனத்தின் பின் தமிழ் மக்களின் விடுதலைக் குரலாக மாறியது. தமிழ் மக்களின் விடுதலைக் குரலாகவும் ஜனநாயக அமைப்பாகவும் இருக்கும் கூட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்திய வல்லரசு முயல்கின்றது. அதாவது தனது கைப்பொம்மை போல் பாவித்து தான் போடும் தாளத்திற்கேற்ப ஆட்டுவிக்கும் முயற்சியில் இறங்கியது. அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள் என்பதே உண்மை. அந்த வெற்றி கூட்டமைப்பின் சில பழுத்த அரசியல் வாதிகளின் அனுசரணையோடு பெற்றுக்கொள்ளப்பட்டது.
முன்னைய காலங்களில் விடுதலைப்புலிகளை தங்களின் ஆதிக்க நலன்களுக்கு பயன்படுத்த முயன்று தோற்றுப்போன இந்தியா விடுதலைப்புலிகளின் வளர்ச்சி பொறுக்கமுடியாமல் சிங்கள பேரினவாத அரசுக்கு தனது ஆதரவை வழங்கி தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தது.
தற்பொழுது கூட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குக் கூட்டமைப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் தடைக்கல்லாக இருப்பதாலும் மற்றும் அவர்கள் விடுதலைப்புலிகளை நேரடியாக பிரநிதித்துவப்படுத்துவதோடுஅவர்கள் புலிகளின் கொள்கையுடன் தற்பொழுதும்இருக்கிறார்கள் என்பதாலும் அவர்களை கூட்டமைப்பில் இருந்து அகற்ற முடிவெடுத்தது. இதில் முதல் பலியானவர்கள் பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன்  இவர்களுடன் சேர்த்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற சிறந்த தமிழ் தேசியவாதிகள். 
"இவர்கள் தமிழ்த்தேசியம் பேசுவார்கள்,  விடுதலைப்புலிகளின் கொள்கையை கடைப்பிடிப்பார்கள், இவர்களை கூட்டமைப்பில் இருந்து நீக்குங்கள்" என்ற இந்தியாவின் கட்டளைக்கு அமைய பத்மினி சிதம்பரநாதன்,செல்வராஜா கஜேந்திரன் போன்றவர்களை கூட்டமைப்பின் தலைமை 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில் போட்டி இடுவதற்கு கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தாமல் தவிர்த்தது. இதனால் இவர்களுடன் சேர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். அதாவது இவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
 இந்தியாவின் கட்டளைக்கு அமைய கூட்டமைப்பின் தலைமை தமிழ்தேசிய  பற்றுள்ள விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு ஏற்றாற்போல் நடக்கும் அல்லது புலிகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை  கூட்டமைப்பில்  இருந்து சாதூரியமாக  விலக்கியது.
அதாவது விடுதலைப்புலிகள், தமிழீழம் போன்ற அடையாளங்களை தமிழர்களிடம் இருந்து பிரித்தெடுக்க உலக அரங்கில் நடக்கும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமே இந்த நடவடிக்கைகள். அதேபோல் விடுதலைப்புலிகளின் வவுனியா மற்றும் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக கடமையாற்றி இறுதி யுத்தத்தில் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த எழிலன்(சசிதரன்) அவர்களின் மனைவி அனந்தி  சசிதரன் அவர்களின் இடைநிறுத்தமும் இதனையே தெளிவாக்குகின்றது.
கூட்டமைப்பின் வாக்கு பலத்தை அதிகரிக்க வடமாகாண சபைதேர்தலில் விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் செய்வதற்கு அனந்தி  சசிதரனை பாவித்த கூட்டமைப்பு தற்பொழுது அவருடைய வளர்ச்சி கண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவரை புறந்தள்ள வேண்டும் என்ற இந்திய அறிவுறுத்தலுக்கு அமைய தற்பொழுதே நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து வேறுபடுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூட்டமைப்பினர் வரும் தேர்தலில் முன்னர் விட்ட தவறுகளை சரி செய்து தமிழ் தேசிய உணர்வாளர்களையும் இணைத்து, அவர்களையும் வரும் பொதுதேர்தலில் கூட்டமைப்பின் சர்ப்பாக நிறுத்துவதன் மூலம் கூட்டமைப்பானது தமிழர் தேசத்தில் அதிகளவு பிரதிநிதிகளை தெரிவு செய்ய வழிசமைத்து கொடுக்க முன்வரவேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு போன்றன இணைவதோடு, அனந்தி சசிதரன் அவர்களுக்கும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கி பொதுத்தேர்தலை சந்தித்தால், 3 தொடக்கம் 4மேலதிக  உறுப்பினர்கள் தெரிவை தமிழர் கூட்டமைப்பு பெற்றுகொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும். வல்லரசுகளை  மக்கள் பலத்தின் மூலம் தமிழர்களாகிய எங்களின் கொள்கைக்கு வரவைப்போம். 
தாயகம் ,தேசியம், சுயநிர்ணயம் என்ற கொள்கைகளோடு தமிழர்கள் யாவரும் இணைந்து செயற்படுங்கள். ஒற்றுமையே விடுதலையைப் பெற்றுத்தரும்.

சரவணை மைந்தன்

Read more: http://www.vivasaayi.com/2015/01/saravanai-mainthan.html#ixzz3PewJOlys

  • கருத்துக்கள உறவுகள்

மனமிருந்தால் ஒற்றுமைக்கும், நல்வாழ்விற்கும் வழியுண்டு..!

மனமிருக்கா? :(

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த தேசியவாதிகள் என்று இங்கு அடையாளப்படுத்தப்பட்டிருப்பவர்கள் தமது அரசியலை முன்னெடுப்பதற்கு தொடர்ந்தும் கூட்டமைப்பை தளமாக நாடவேண்டிய அவசியம் என்ன? மக்கள் சக்தி உங்கள் பக்கம் உண்டா என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து மற்றவர்களுடன் ஒன்றுசேர்ந்து வாழ முயலுங்கள், வழிவிடுங்கள் அல்லது விலகிப்போங்கள். நீங்கள் பெரும்பான்மை ஈழத்தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுவீர்கள் என்பது நிச்சயமானால் உங்களுக்கென்று தனியான தளம் அமைத்துக் கொள்வதும் தப்பாகாது. அதற்காக பிரதேசவாதத்தை முன்னெடுத்து மக்கள் சக்தியை பிரிக்க முயலவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சனம் அங்க தண்ணிக்கே அல்லாடுதுகள் இவருக்கு தாயகம் தேசியம் சுயநிர்ணயம் .

  • கருத்துக்கள உறவுகள்

சனம் அங்க தண்ணிக்கே அல்லாடுதுகள் இவருக்கு தாயகம் தேசியம் சுயநிர்ணயம் .

சோத்துக்காக சுதந்திரத்தை விடவேண்டுமென்றால் பேசாமல் டக்ளஸுடன் சேர்ந்து இணக்க அரசியலைச் செய்திருக்கலாமே.. இப்ப வரும் கருத்துக்களைப் பார்த்தால் முன்னாள் தேசியவாதிகள் இணக்க அரசியலுக்கு ரெடி என்றுதான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த தேசியவாதிகள் என்று இங்கு அடையாளப்படுத்தப்பட்டிருப்பவர்கள் தமது அரசியலை முன்னெடுப்பதற்கு தொடர்ந்தும் கூட்டமைப்பை தளமாக நாடவேண்டிய அவசியம் என்ன? மக்கள் சக்தி உங்கள் பக்கம் உண்டா என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து மற்றவர்களுடன் ஒன்றுசேர்ந்து வாழ முயலுங்கள், வழிவிடுங்கள் அல்லது விலகிப்போங்கள். நீங்கள் பெரும்பான்மை ஈழத்தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுவீர்கள் என்பது நிச்சயமானால் உங்களுக்கென்று தனியான தளம் அமைத்துக் கொள்வதும் தப்பாகாது. அதற்காக பிரதேசவாதத்தை முன்னெடுத்து மக்கள் சக்தியை பிரிக்க முயலவேண்டாம்.

இன்றையநிலையில்

தலைக்கனம்

தமிழினத்துக்கு ஆகாது..... :( 

கானல் நீரில் குளிக்கமுடியாது.... :( 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் தேசியக் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறமை கொண்ட மக்கள் கூட்டம் என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார்களா? அப்படி வெளிப்படையாக அறிவித்தால் அவர்களும் தமிழர்களால் நிராகரிக்கப்படுவார்கள். அதனால்தான் தமிழர்களுக்கு தேசியக் கதைகளையும், மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இணக்க அரசியல் கதைகளையும் கூட்டமைப்பு சொல்லுகின்றது.

முள்ளிவாய்க்காலில் நடந்தது இனவொழிப்பு என்று கூட்டமைப்பு ஜெனிவாவில் சொல்லாது. ஆனால் பாராளுமன்றத் தேர்தல் வந்தால் வாக்குவேட்டைக்காக ஊரூராகச் சொல்லும்.

உண்மை கிருபன்

எந்தவொரு   தாயகத்தமிழரும்

இன்றையநிலையில் தமது உள்ளக்கிடக்கைகளை வெளியில் சொல்லமுடியாதநிலை.

இதை வைத்துக்கொண்டு

கற்பனைகளை புகுத்துவது

அதையே நிஐம் என புகுந்துவிளையாடுவது சரியன்று.

அமைதி  காத்தலே இன்றைய தேவை

அத்துடன் ஒற்றுமை

அத்துடன் ஒரு வாக்குக்கூட  

எமது அடிதடிகளால் பிரிந்துவிடக்கூடாது என்பதே எனது விருப்பம்..

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் டக்கி இவ்வளவு காலமும் செய்தது இணக்க அரசியலா? இன்டைக்கு சனம் என்ன கேட்குது என்று பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் டக்கி இவ்வளவு காலமும் செய்தது இணக்க அரசியலா? இன்டைக்கு சனம் என்ன கேட்குது என்று பார்க்க வேண்டும்.

இணக்க அரசியல் இல்லாவிட்டால் சரணாகதி அரசியல் என்று சொல்லலாம்! வித்தியாசம் அதிகமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தேசிய முன்ணணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்ததும் இதனாலேயே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 3 மாதத்தில் தெரிந்துவிடும், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பது. அதை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது, “இதற்காகத்தான் வாக்களித்தார்கள்” என்று ஏதாரவது காரணம் கண்டுபிடிக்கலாம்.

Edited by sabesan36

மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள்,எதற்கு வாக்களிக்கிறார்கள் என்று ஆளுக்கு ஆள் வியாக்கியானம் கொடுக்க  முன்பு இப்படிபட்ட பாடலை ஒலிக்கவிட்டு வாக்கு தேடவேண்டிய அவசியம் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் என்பதை சிந்திக்கவேண்டிய அவசியம் உண்டு. ஏனெனில் இந்த சாந்தனின் பாடல் கடந்த மாகாண சபை தேர்தலில் சம்பந்தர் கூட்டமைப்பால் வாக்கு வேட்டைக்காக ஒலிக்கவிடப்பட்டது.

தன்மானத் தமிழா நீ தலை நிமிர்ந்து வாடா
ஈழ மண்மீது அரசாழ உனக்கென்ன தடையா

சங்கிலியன் குளக்கோட்டன் அரசாண்ட மண். எங்கள் பண்டாரவன்னியன் பகைவென்ற மண்

வங்க கடல் போல வரவேண்டும் தமிழனமே

வென்று களமாடி தமிழர் வீரர் புகழ்பாடி எழவேண்டும் தமிழரசே  ( கொழும்பில் சிங்கள ஒலிவாங்கிகளில் முன்பு பயங்கரவாதிகள் என்று கூறுவது)

வீழ்ந்தாலும் விதையாகி எழுகின்றவன். அவன் வீட்டிற்கு உரமாகி விரிகின்றவன்

பாடலுக்கு சம்பந்தர், விக்கினேஸ்வரன், சுமந்திரன் வீரநடை போடுகிறார்கள். ஆகவே இப்படிபட்ட உணர்ச்சி அரசியலை தேர்தல் காலத்தில் மேற்கொள்வதை கூட்டமைப்பு கைவிடவேண்டும். வாக்கு வேட்டைக்கு தாயகம்,தேசியம், சுயநிர்ணயம் என்ற வாரத்தை தேவை தேர்தலின் பின்னர் அந்த சொல்லை சொல்பவர் கட்சியில் இருந்து ஒதுக்கபடுவர்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சனம் தெளிவாகதான் இருக்குது....இல்லாவிடில் 77 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை அந்த உரிமைக்காக குரல் கொடுத்து கொண்டு இருக்காது......கருத்தாளர்களும் ,பந்தி எழுத்தாளர்களும் தான் குழம்பி போய் இருக்கினம்...

  • கருத்துக்கள உறவுகள்

இதொரு பொிய பிரச்சனைதான்.சோறா சுதந்திரமா என்பது.ஆனால் அடிப்படைத் தேவைகள் முக்கியம் இல்லையா.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன் வீரநடை போட்ட வீடியோவிற்கே பாடலை இணைத்திருக்கிறார்கள். ஆனந்தசங்கரியும் ........

தாயகம், தேசியம், உரிமை சுயணிர்னயம்.

இதிலெல்லாம் யாரும் யாருக்கும் குறைவில்லை அனால் அதன் அலகு மற்றும் அளவுகளில் தான் பிரச்சனை.

தனினாடு அதிகூடிய அலகு, 13வது திருத்தசட்டம் குறைவானது, அதிலும் பிரதேச சபை அடிமட்டம்.

இதொரு பொிய பிரச்சனைதான்.சோறா சுதந்திரமா என்பது.ஆனால் அடிப்படைத் தேவைகள் முக்கியம் இல்லையா.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

சோறு, சுதந்திரம் இரண்டும் இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவசியமானது. நாய் , பூனை, குதிரை, யானை கழுதை எல்லாம் உணவுடன் சுதந்திரத்தையும் சேரத்தே விரும்புகின்றன. மிருகங்களே இதில் தெளிவாக இருக்க ஆறறிவு கொண்ட மனிதர்கள் தான் சோறா? சுதந்திரமா?என்ற தேவையற்ற கேள்வியை கேட்டு தன்னைத்தானே குழப்பிக்கொள்ளுகிறான்.
  • கருத்துக்கள உறவுகள்

இதொரு பொிய பிரச்சனைதான்.சோறா சுதந்திரமா என்பது.ஆனால் அடிப்படைத் தேவைகள் முக்கியம் இல்லையா.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

உண்மைதான்..

தூர இடத்திற்குப் பயணம் போகிறோம்.. வழியில் பசிக்கிறது என்றால் நிறுத்தி உணவை அருந்துகிறோம்.. பிறகு பயணத்தைத் தொடர்கிறோம். அட அடுத்த வேளையும் பசிக்கத்தானே போகிறது என்று உணவு விடுதியிலேயே நின்று விடுவதில்லை.

இந்த பசி  என்பது பலவற்றை தீர்மானிக்கும்  காரணியாக அமைந்துவிடுகிறது

உலகில் இதை வைத்தே பல போராட்டங்கள் நசுக்கப்பட்டுள்ளன

சிறுபான்மை

மற்றும் வலிமை குறைந்த மக்களை

இதன் மூலம் அடிமைப்படுத்துவது காலம் காலமாக நடந்தேறுகிறது

இதைத்தடுக்க என்றே காலம் காலமாக

சர்வதேச ரீதியில் அமைப்புக்கள் ஒருவாக்கப்பட்ட போதும்

அவையும் இதற்குள் அமிழ்ந்து போகின்றன(அவர்களுக்கும் பசிக்கிறது போலும்)

ஆனாலும் புலிகள் வலுவாக இருந்தவரை

இதை சமாளிக்க பலவழிகளிலும் முயன்றார்கள்

இதனை வைத்து தம்மை மடக்க முடியாதபடி முன் ஏற்பாடுகளையும்

உடனடி மாற்றுவழிகளையும் கண்டார்கள் (நெல் உற்பத்தி, மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி, 3 போக உற்பத்திகள்,  மண்ணைண்ணையில் வண்டிகள்,  சைக்கிள் வலிப்பில்  மின்சாரம்,,,......என)

ஆனால் இன்று.......??

உடம்பை குறைப்பதற்காக பசியைத்தேடுபவன் நான்.

பசியின் கொடுமை நானறியேன்.

எனவே அதைப்பற்றி  பேசும் தகுதியை இழக்கின்றேன்.

Edited by விசுகு

பசியை இங்கே இலங்கையில் தாராளமாக பார்க்கலாம்.

நான் ஒரு பள்ளிக்கூடத்துடன் தொடர்புபட்டு உள்ளேன். 8 மணி முதல் 2.30 வரை வகுப்பு. மதிய உணவுக்கு 1 ரோல்ஸ் கடையில் வாங்கிவரும் பிள்ளைகள் அதிகம். 12-ம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு 1 ரோல்ஸ். அதற்கு மேல் பெற்றோர்களால் கொடுத்துவிட முடியாது.  இந்த பள்ளியில் மட்டும் சான்ட்விச் கொடுப்பதற்கு அவுஸ்திரேலிய சேர்ச் ஒன்றுடன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன். அடுத்த 4 மாதத்துக்கு கொடுப்பார்கள். பிறகு நீடிக்கலாம். ஆனால், இப்படி எத்தனை பள்ளிகள்? (இதுக்கே நாலு கிண்டல் வரும், கனடா பென்சன்காரருக்கு ரோல்ஸூக்கே வழியில்லையோ என்று. Poor guys)

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்..

தூர இடத்திற்குப் பயணம் போகிறோம்.. வழியில் பசிக்கிறது என்றால் நிறுத்தி உணவை அருந்துகிறோம்.. பிறகு பயணத்தைத் தொடர்கிறோம். அட அடுத்த வேளையும் பசிக்கத்தானே போகிறது என்று உணவு விடுதியிலேயே நின்று விடுவதில்லை.

உணவு விடுதியில் தங்காது நீங்கள் பயணத்தை தொடர்ந்தால்....

உங்களைபோன்ற ஒரு பயங்கரவாதி இந்த உலகிலேயே இல்லை.

இப்போ மக்களுக்கு என்ன வேண்டும் என்று பாருங்கள்.

இனியாவது விட்டுகொடுப்பு அரசியலை புரிந்து  கொள்ளுங்கள்.

வன்னி காடுகளில் நிறைய மான் மரை பன்றிகள் நிற்பதை மறந்து இங்கு பலர் கருத்து வைக்கிறார்கள். மக்கள் நாடில் ஊர்களில் வாழ்வதால் எத்தனைகளை இழந்து வாழ்கிறார்கள் என்பதை இனியாவது தேசியவாதிகள் புலம்பெயர் புண்ணியவான்கள் புரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்..

தூர இடத்திற்குப் பயணம் போகிறோம்.. வழியில் பசிக்கிறது என்றால் நிறுத்தி உணவை அருந்துகிறோம்.. பிறகு பயணத்தைத் தொடர்கிறோம். அட அடுத்த வேளையும் பசிக்கத்தானே போகிறது என்று உணவு விடுதியிலேயே நின்று விடுவதில்லை.

தூர இடத்திற்கு பயணிக்கும் போது கூட பயணித்தவர்களை இழந்து கொண்டு வந்தால் அந்த பயணத்தை இடைநிறுத்தினால் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூர இடத்திற்கு பயணிக்கும் போது கூட பயணித்தவர்களை இழந்து கொண்டு வந்தால் அந்த பயணத்தை இடைநிறுத்தினால் என்ன?

தொடங்கிய பயணத்தை விட முடியாது.  ஆனால், அடுத்த ரெஸ்ட்ரோடன்ட் வரும்போது சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடரலாமே.. This is policy issue / Ce est question de politique

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

தூர இடத்திற்கு பயணிக்கும் போது கூட பயணித்தவர்களை இழந்து கொண்டு வந்தால் அந்த பயணத்தை இடைநிறுத்தினால் என்ன?

மிகவும் நல்ல சிந்தனை ....

பிறப்பவர்கள் எல்லோரும் இறப்பதால் ...

பிள்ளை பெறுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.