Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இந்திய தமிழனின் உள்ளத்தில் இருந்து....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இந்திய தமிழனின் உள்ளத்தில் இருந்து....

Saranya Charu

2 மணிகள் ·

இந்தியாவின் மிகப்பெரிய பீடைகள் இலங்கை அகதி நாய்கள்

இந்த நாய்களுக்கு உணவு,உடை,இருப்பிடம்னு பல ஆயிரம் கோடி செலவு

திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையறாப்பல வந்து தங்கிக்கறானுக.

தனி இந்தியா கேட்டாலும் கேப்பானுக.,நாய்களை நம்ப முடியாது

Thanks FB

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய கருத்து. :wub:

பாவித்த பதங்களைப் பார்த்தால் 'க்ரீமி லேயர்' குழாமை சேர்ந்தவர் போல் தெரிகிறது.

அதே சமயம், யாழ் களத்திலும் தமிழக தமிழர்களைப் பற்றி மோசமான வார்த்தை பிரயோகங்களை சில ஈழத்தமிழர்களால் வீசப்பட்டுள்ளதை வாசித்துள்ளேன். :(

அப்பு சுண்டல் யாரோரு ஒரு பரதேசி எழுதியதை யாழில் போட்டிருக்கீறிர்கள்.தமிழகத்தில் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கு. அதுசரி இந்தியாவுக்கு வார அகதிகளைப் பற்றிக் கருத்து எழுதும் போது கவலைப்படும் அவுஸ்திரெலியாவுக்கு அகதியாக முன்பு வந்த சுண்டல், தான் வாழும் அவுஸ்திரெலியாவுக்கு அகதி வந்தால் அவங்களைத் கட்டாயம் திருப்பி அனுப்புத்தான் வேண்டும் என்று கருத்து எழுதுவது என்பது என்ன நியாயம். ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி சுண்டல்.

இப்படிப்பட்ட பரதேசிகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. அதைப்போய் இந்திய தமிழனின் உள்ளதில் இருந்து என்று தலையங்கம் இட்டது சரியானதல்ல சுண்டல்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில இந்தியாவிற்கு பதிலா ஆஸ்திரேலியா என போட்டா, சுண்டல் எழுதினமாதிரிதான் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பு சுண்டல் யாரோரு ஒரு பரதேசி எழுதியதை யாழில் போட்டிருக்கீறிர்கள்.தமிழகத்தில் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கு. அதுசரி இந்தியாவுக்கு வார அகதிகளைப் பற்றிக் கருத்து எழுதும் போது கவலைப்படும் அவுஸ்திரெலியாவுக்கு அகதியாக முன்பு வந்த சுண்டல், தான் வாழும் அவுஸ்திரெலியாவுக்கு அகதி வந்தால் அவங்களைத் கட்டாயம் திருப்பி அனுப்புத்தான் வேண்டும் என்று கருத்து எழுதுவது என்பது என்ன நியாயம். ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி சுண்டல்.

நானும் அவர் சொன்னத தான் கேக்குறான் இப்பிடி ஒரு அகதி வாழ்வு தேவையா என்று......

மற்றது எந்த லூசு சொன்னது நான் aust ல அசைலம் அடிச்சனான் என்று?

மற்றது அடிக்கடி உங்க பெயர மாத்திட்டு வராமல் ஒரு பேர்ல வரலாமே.....:

நானும் அவர் சொன்னத தான் கேக்குறான் இப்பிடி ஒரு அகதி வாழ்வு தேவையா என்று......

மற்றது எந்த லூசு சொன்னது நான் aust ல அசைலம் அடிச்சனான் என்று?

மற்றது அடிக்கடி உங்க பெயர மாத்திட்டு வராமல் ஒரு பேர்ல வரலாமே.....:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோடா நம்மள கலாசிட்டாராம்.......

சற்றே சிந்தித்து பாருங்கள்...

 உங்களது கணவர் உங்களை வீட்டை விட்டு துரத்திவிடுகிறார் என்று வைத்துகொள்வோம் ( மன்னிக்க பேச்சிற்கு )

அனாதரவாக விடப்பட்ட நீங்கள் உங்கள் தாயின் வீட்டிற்கு செல்கிறீர்கள்.

வருத்தப்பட்டு வரும்  உங்களது பரிதாப நிலையை பார்த்து கவலையுற்று உங்கள் தாய் உங்களுக்கு வேண்டிய ஆதரவு தருவார்.. அது மனித இயல்பு தாய்மையின் இயல்பு

அஃதில்லாமல் உங்கள் அன்னை  " இந்த சனியன் ஏன் இங்க வருது ? " என்று திட்டினால் உங்கள் மனநிலை எப்படியானதாக இருக்கும்...? அவ்வாறனதே உங்கள் பதிவை கடந்து செல்லும் ஒவ்வொரு ஈழத்தமிழரது மனநிலையும்...

"மரணம் மகத்தானது எனினும் உயிர் வாழ்தல் அதனினும் மகத்தானது
அன்றேல் அகதி பயணங்கள் ஏன் மேற்கொள்ளப்படுகின்றன ?"
- ஈழத்துக்கவிஞர் வ.ஐ.ச.ஜெய பாலன்... இந்த வரிகளை உங்களால் புரிந்து கொள்ள முடியுமானால் நீங்கள் உங்கள் பதிவு குறித்து மன்னிப்பு கேட்பீர்கள்....

 ```` அந்த பதிவை பார்த்து இப்படி கருத்து எழுதி அதை பதிவிடுவதற்குள்  அவர் தனது பக்கத்தை முடக்கிவிட்டார்,

ஆனால் அந்த பதிவிட்ட பெண்ணுக்கும் உங்களுக்கும் மன நிலை ஒன்றுதான் போலுள்ளது....

 

 

"மரணம் மகத்தானது எனினும் உயிர் வாழ்தல் அதனினும் மகத்தானது
அன்றேல் அகதி பயணங்கள் ஏன் மேற்கொள்ளப்படுகின்றன ?"
  - இது உங்களுக்கானதும்

Edited by ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுவித உயிர் அச்சிருத்தலும் இல்லாமல் கள்ளத்தனமா ......ஓடி வாறவைக்கு இது பொருந்தாது என்று நினைக்கிறன்.......

ஆஸ்திரேலியா அரசு விசாரணைகளில் கள்ள படகு அகதிகள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வந்தவர்கள் அல்ல என்று பொருளாதார நோக்கம் கொண்டு வந்தவர்களாகவே தெரிய வந்திருக்கு......

நீங்க போய் இறங்கேக்க வெள்ளை சும்மா இருந்ததால தானே இப்ப அங்கின இருந்து கூவ முடியுது. இல்லாட்டி இப்பவும் சிங்களவனிட்ட சாத்து வாங்கி கொண்டு இருந்திருக்க வேண்டும்.   :lol:
அது சரி..அது என்ன கள்ள அகதி? நாளைக்கு அகதியா வாறாவன் மைத்திரிட்டையும் ரணிலிட்டையும் இருந்து அனுமதி பத்திரம் வாங்கி கொண்டு வரவேணும் என்டு சொன்னாலும் சொல்லுவாங்க. 
  • கருத்துக்கள உறவுகள்

laughing-smiley2.gif#laughing%20smiley%2சுண்டல், சொந்தச் செலவிலை... சூனியம் வைத்து விட்டார்.animated-laughing-smiley-emoticon.gif

எதுவித உயிர் அச்சிருத்தலும் இல்லாமல் கள்ளத்தனமா ......ஓடி வாறவைக்கு இது பொருந்தாது என்று நினைக்கிறன்.......

ஆஸ்திரேலியா அரசு விசாரணைகளில் கள்ள படகு அகதிகள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வந்தவர்கள் அல்ல என்று பொருளாதார நோக்கம் கொண்டு வந்தவர்களாகவே தெரிய வந்திருக்கு......

 

பொருளாதார வாய்ப்பை நோக்கி வரும் கள்ள அகதிகள்  இந்தியாவிற்கு ஏன் வருவானேன் ? இந்திய பற்றை காட்டும்  அந்த பெண் வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவி இந்திய குடிமக்களாகவே மேற்கு வங்கத்தில் வாழும்  20 லட்சம் முசுலிம்களை துரத்தி விட்டு பிறகு 1.5 லட்சம் ஈழ தமிழர்களை துரத்தலாமே ? 

 

அவர்களுக்கு குடியுரிமை வழங்கிய அதே இந்திய அரசு தான் தமிழர்களை இருபது வருடங்களாக அகதிகளாகவே வைத்துள்ளனர் சிறப்பு முகாம்களிலும், அகதி முகாம்களிலும். தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ? 120 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் 1.5 லட்சம் மக்கள் நிரந்தர குடிகளாக ஆக்கப்படுவதினால்  உள்ள சிக்கல் என்ன ?

 

இங்கு அகதிகளாக பதிந்தவர்கள் யாரும் இங்குள்ள இன்னல்களை சுகமாக ஏற்று கொண்டு வாழ்கிறவர்கள் இல்லை வேறு வழியின்றியே வாழ்கிறார்கள்...  தங்கள் வாழ்வாதாரத்திர்க்கான உறுதியான தீர்வுகள் கிடைக்க பெறும்போது  நிற்சயம் தங்கள் பூர்வீக இடத்திற்கு திரும்பி விடுவார்கள்...

 

வேண்டுமானால் அவுசில் அசைலம் அடித்த கள்ளத்தோணி பொருளாதார அகதிகளை துரத்துவதற்க்கான நடவடிக்கைகளை டோனி அபோர்டுடன் இணைந்தது முன்னெடுங்கள் சுண்டல் அண்ணா... :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திறத்த தொடங்கினதால தானே கள்ள அகதிகள் படகுகள் இந்த பக்கம் வாரதில்ல.....:D

பசுபிக் பெருங்கடலில் துரத்த துடங்கி இப்ப இந்திய பெருங்கடல் வரை துரத்தி வந்து நிக்குறியலாக்கும்? :lol:   திரும்பி போகைக்கே கவனம், கள்ள தோணியில் அவுசுக்கு கள்ள அகதி வாராங்கோ  எண்டு கரையில சுண்டல் அண்ணன் காட்டி கொடுத்திட போறார் :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட பரதேசிகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. அதைப்போய் இந்திய தமிழனின் உள்ளதில் இருந்து என்று தலையங்கம் இட்டது சரியானதல்ல சுண்டல்.

 

ஒருமுறை

இந்தியப்பிரதமரே (பெயர் வருகுதில்லை)

வைகோ அண்ணையிடம் கேட்டாராம்

இந்தியாவிலிருந்து போன தமிழர்கள் எதற்கு அங்கு நாடு  கேட்கிறார்கள் என்று....

 

எனவே இந்த அப்பாவித்தமிழரை வைது என்ன பயன்??

அவர் இந்தப்பதிவை இட்டதன் மூலம் சில பதில்களையும்

வரலாறுகளையும் கிடைக்கப்பெற்றிருப்பார்.

எல்லாம் தெரிந்த மனிதரில்லை

சந்தர்ப்பம் கிடைக்கும் போது புரியவைக்கப்படணும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் முக நூல் கணக்கையே மூடிவிட்டு ஓடிவிட்டார்..... தேங்க்ஸ் டு சுண்டல் உலகம் எல்லாம் இதை வெளிக்கொண்டு வந்ததுக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளைப் பற்றிய இப்படி ஒரு பதிவு சுண்டலிடம் இருந்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் முக நூல் கணக்கையே மூடிவிட்டு ஓடிவிட்டார்..... தேங்க்ஸ் டு சுண்டல் உலகம் எல்லாம் இதை வெளிக்கொண்டு வந்ததுக்கு :D

 

இதைத்தான் நான் உங்களுக்கு எழுதப்பார்த்தேன்.....

திரியின் பின்னரான போக்கு

அதற்கு அனுமதிக்கவில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சுண்டல் யாரோரு ஒரு பரதேசி எழுதியதை யாழில் போட்டிருக்கீறிர்கள்.தமிழகத்தில் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கு. அதுசரி இந்தியாவுக்கு வார அகதிகளைப் பற்றிக் கருத்து எழுதும் போது கவலைப்படும் அவுஸ்திரெலியாவுக்கு அகதியாக முன்பு வந்த சுண்டல், தான் வாழும் அவுஸ்திரெலியாவுக்கு அகதி வந்தால் அவங்களைத் கட்டாயம் திருப்பி அனுப்புத்தான் வேண்டும் என்று கருத்து எழுதுவது என்பது என்ன நியாயம். ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி சுண்டல்.

 

 

இப்படிப்பட்ட பரதேசிகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. அதைப்போய் இந்திய தமிழனின் உள்ளதில் இருந்து என்று தலையங்கம் இட்டது சரியானதல்ல சுண்டல்.

 

அப்ப நான் உங்க நிக்கட்டோ இல்லாடி விட்டுட்டு போகட்டோ ?  :mellow:

அப்பவும் சொன்னனான் நான் கெட்டா ..... அது உங்களாலதான் எண்டு

 

கண்டவை நிண்டவை எல்லாம் வந்து இப்பிடி நாக்கு வளைக்க்கிறதை என்ர அம்மா அறிஞ்சா ....

உந்த பக்கம் வர விடாம கால் அடிச்சு முறிச்சுப் போடுவா :huh:

 

உலக நீதி

ஆசிரியர்: உலகநாதர்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே ----1

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்

மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே ----2

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்

மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்

தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்

தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்

சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்

சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்

வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே ----3

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்

கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்

மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே ----4

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்

மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்

வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்

தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே ----5

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்

வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்

சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்

திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே ----6

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்

கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்

பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்

பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்

இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்

எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்

குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்

குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே ----7

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்

செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்

உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்

பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்

வாராரும் குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே ----8

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்

மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்

கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்

காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்

புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்

புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே ----9

மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்

திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்

தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்

குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்

குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே ----10

அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்

அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்

தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி

சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி

மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி

இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை

ஏதெது செய்வானோ ஏமன்றானே ----11

கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்

கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்

துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்

வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்

மாறான குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே ----12

ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி

அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி 

ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்

உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி

காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்

கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு

போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்

பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே ----13

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இந்தியர் போல பலர் இருக்கலாம். அதற்காக அதுவே மொத்தத் தமிழகத்தின் கருத்தென்று நாம் வாதிடுவது தவறானது.

 

ஈழத்திலிருந்து எதற்காக தமிழ் அகதிகள் தமிழகத்தை நோக்கி வந்தார்கள் என்கிற சரியான புரிதல் இல்லாமல் இப்படியானவர்கள் எழுதுகிறார்கள். அதற்காக அவர்களைக் குறை கூறுவதில் என்ன பயன்.

 

தமிழகத்தில் கூட எமது போராட்டம், அதனால் ஏற்பட்ட அழிவுகள், இடப்பெயர்வுகள், இனவழிப்பு என்பன பற்றிய சரியான விளக்கம் இதுவரை இல்லையென்றால் அவரைக் குறை கூறிப் பயனில்லை.

 

சுண்டலின் ஆஸி வரும் அகதிகள் தொடர்பான கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவர் கூறும் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்கிறேன். இங்கே அகதிகள் என்று வருவோரில் பொருளாதார அகதிகளும் இருக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இவர்கள் ஒருமுறை இருமுறையல்ல, பலமுறை முயல்கிறார்கள். இப்படியானவர்களை நான் ஒவ்வொரு நாளும் நான் வாழும் பகுதிகளில் கண்டிருக்கிறேன். அவர்கள் அகதிகள் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

அதேவேளை உண்மையாகவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, உறவுகளை இழந்து, இன்னும் ஊரில் தவித்துக்கொண்டிருக்கும் மனைவி பிள்ளைகளுக்கு மாதம் மாதம் கஷ்ட்டப்பட்டு பணம் அனுப்பும் அகதிகளையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் போன்றவர்களுக்காக ஆவது ஆஸி அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தனியொரு மனிதனது 'கருத்து'... தாய்த் தமிழகத்தின் கருத்தாக நோக்கப்படுவது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை!'

 

அகதிகள் பிரச்சனை என்பது 'மனிதாபிமான' கோணத்தில் அணுகப்பட வேண்டிய ஒன்று! அவ்வாறு தான் மேலை நாடுகள் எமது பிரச்னையை அணுகின!

 

அவுஸ்திரேலியா மட்டும் 'விதி' விலக்கல்ல! எனினும்.. சில 'சுயநலவாத ஊடுருவல்களினால்' அது 'பக்கச்சார்பான முடிவுகளை' அண்மையில் எடுத்திருந்தது!

 

அந்த 'ஒத்தூதிய' அரசியல் வாதியின்... நாட்கள் இப்போது எண்ணப்படுகின்றன!  :D

 

வருகின்ற செவ்வாய்க் கிழமையுடன்.  அவரது 'அரசியல்' அஸ்தமிக்கும் என்பது எனது 'அனுமானம்'!

 

இந்தியாவைப் பொறுத்தவரையில்.. அது 'ஈழத்து' அகதிகளுக்காகச் செய்தது எதுவுமே இல்லை!

 

ஏதோ எட்டுப் பிள்ளைகளுடன்.. ஒன்பதாவது பிள்ளை வளர்வது போலவே அதன் நடவடிக்கைகள் இருந்தனவே அன்றி...வேறு எதுவும் செய்யவில்லை!

 

ஆனால் இந்தியாவுக்கு.. மனிதாபிமானக் கடப்பாடு மட்டுமல்ல... தார்மீகக் கடப்பாடும் உண்டு!

 

புரிந்து கொள்பவர்கள் ... நான் கூறுவதைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் அவர் சொன்னத தான் கேக்குறான் இப்பிடி ஒரு அகதி வாழ்வு தேவையா என்று......

மற்றது எந்த லூசு சொன்னது நான் aust ல அசைலம் அடிச்சனான் என்று?

மற்றது அடிக்கடி உங்க பெயர மாத்திட்டு வராமல் ஒரு பேர்ல வரலாமே.....:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.