Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பார்த்த, முதல் சினிமா படம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=7LEknWMRpDI

 

சிறுவனாக இருக்கும் போது.....  அப்பா, அம்மாவுடன்,

யாழ். வெலிங்டன் தியேட்டரில் பார்த்த முதல் படம் தான்..... "லவகுசா." :)

நீங்கள் பார்த்த, முதல் படம் உங்களுக்கு இப்போதும்..... ஞாபகம் உள்ளதா? :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • Replies 66
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என் நினைவிற்கு வர, நான் பார்த்த முதல் படம், மதுரை 'தேவி' திரையரங்கில், ஜெய்சங்கர், பத்மினி நடித்த "பெண் தெய்வம்" 1970ல் வெளி வந்தது..

 

http://youtu.be/F9oo8_YwtHY

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இன்று நாளை

  • கருத்துக்கள உறவுகள்

சுவரில்லா சித்திரங்கள்...  வீடியோ கசட் வடிவில் இருந்தவற்றில்.. வீட்டில் போட்டுப் பார்த்ததே..  இந்த முதல் படம். கதை எல்லாம் புரியல்ல.. அப்படி ஒரு வயசில பார்த்தது.. இப்ப நல்லா புரியுது. :):lol:

 

 

இதை பதிவிட்ட பின் பிபிசியில் ஒரு கண்ணோட்டம் விடச் சென்ற போது இது சிக்கியது.. பழைய நினைவுகளை கிளறிய.. இரண்டு விடயங்கள்.. ஒரே சமயத்தில்..

How do video and DVD rental stores still survive?

(இணைப்பில் காணொளி உள்ளது.)

 

http://www.bbc.co.uk/news/magazine-30953306

 

யாழ் நகரில்.. நியூவிக்ரேர்ஸ்.. (அங்கு தான் முதன் முதலில்.. ரிவி கேம்... விளையாடினது.. 1 ரூபா குத்தி போட்டு விளையாடனும்) நல்லூரில்.. ஒரு கடை ரெம்ப டீசென்ட்..  வாடகைக்கு.. வீடியோ தருபவர்கள். இப்ப அவர்கள் இருக்கினமா..?! :lol::)

 

நன்றி தமிழ்சிறீ அண்ணா மற்றும் பிபிசி.. பழைய சிறுவயது வாழ்கைக்குள் கொண்டு போய் விட்டமைக்கு. :icon_idea::)

Edited by nedukkalapoovan

நினைவில்  நிக்கும்  முதல்  படம்  இதுவாத்தான்  இருக்க வேணும்  என்று  நினைக்கிறேன்  பக்கத்துவீட்டில் போட்டார்கள் பார்த்த  நினைவு ..

 

Siva.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பார்த்த முதல் சினிமாப்படம் வசந்தமாளிகை......வெலிங்டன் தியேட்டரிலை.....செக்கன்ட் கிளாசுக்கு ரிக்கற் எடுத்து கலரியிலை இருந்து பார்த்தனான் duh4uw0_zpsbf692c1b.gif ....இன்ரவலுக்கு பிறகு நிலத்திலை இருந்து பார்த்தன்.....இருந்த இடத்தை விட்டுட்டன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பாட்சா...! ஒருத்தரும் நம்புறீங்கள் இல்லைப் போல கிடக்கு...! :lol:

 

 

சரி சரி...," கணவனே கண் கண்ட தெய்வம்" என்று  ஞாபகம்...! மனோகரா தியேட்டரில் பார்த்தது.  :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனாக இருக்கும் போது.....  அப்பா, அம்மாவுடன் யாழ்ப்பாணத்தில் திரையரங்கு சரியாக ஞாபகம் இல்லை லிடோ என்று நினைக்கின்றேன் பார்த்த திரைப்படம் ''கலாட்டா கல்யாணம்'' 

 

கலாட்டா கல்யாணம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. -
//"லவகுசா" 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராம்ராவ், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.//
 

~~~~~~~~~~
 

எனக்கு, அந்தப் படம் உள்ள தியேட்டருக்கு பெற்றோருடன் போனது நல்ல ஞாபகம். ஆனால்.... கதை ஞாபகமில்லை. 
தியேட்டரில்... விளக்கை அணைத்து படம் ஆரம்பிக்கும் போது.....
இருட்டைப் பார்த்து.... நான்,  கத்திக் குழறியாதாக, அம்மா அடிக்கடி பகிடி பண்ணுவார். :D 
 

அதற்குப் பிறகு.... அம்மா, ஒரு படமும் பார்க்கவில்லை. அவவிற்கு...படம் பார்க்கும் ஆசையும் இருந்ததில்லை.
இலங்கையில் இருக்குமட்டும், மொத்தமாக 15 படம் தான்... பார்த்திருப்பேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதிலேயே படங்கள் பார்க்கத்தொடங்கியபடியால்

முதல் படம் எதுவென்று ஞாபகம் வருகுதில்லை..

(வளர்ந்த பின் பெரும் பாலான படங்களை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கின்றேன்)

 

ஒரு அளவுக்கு தெரியும் வயது வந்ததும் பார்த்தபடம்

தெய்வம் படமாக இருக்கலாம்..

 

 

 

இதில் வரும் மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலை 

உரத்த குரலிலும் மூச்சவிடாமலும் பாடுவது வல்லவன் யான்..

 

 

அடுத்து

ராணித்தியேட்டரில்

ரஞ்சன் நடித்த நீலமலைத்திருடன்

 

 

 

அதில் வரும் இந்தப்பாடல் மறக்கமுடியாதது

 

 

 

 

Edited by விசுகு

நான் முதன் முதலாக பார்த்தபடம்  நிறம் மாறாத பூக்கள் :) கதை விளங்கவில்லை  :wub:  - விளங்கிக்கொள்ளும் வயதாகவும் இருக்கவில்லை.....ஆனால் காரில் அக்கா அத்தாருடன் தியேட்டருக்கு போன ஞாபகமும்,  ராதிகாவும் சுதாகரும் இரு பறவைகள் மலை முழுவதும் ..... என்ற பாடலுக்கு வெள்ளை உடையணிந்து ஓடி வருவதும் , ஆயிரம் மலர்களே மலருங்கள்....... என்ற பாடலும் இன்றும் நினைவில் பசுமையாக  இருக்கின்றது.. :D

 

https://www.youtube.com/watch?v=xgnIpGxn3dc

https://www.youtube.com/watch?v=bxkQh1tWSkA

நான் முதல் முதல் பார்த்த படம் ..கண்டிப்பான  என் அப்பா 13 வயதில் உறவினர்களுடன் தியேட்டருக்கு கூட்டிச்செல்ல அனுமதித்த நாள் .............................இந்தப்படம் பார்த்தபின் ஊரில் எல்லோரும் என்னைப்பற்றியே பேச்சு ..............என்னில் காதல் முத்தக்காட்சிகள் வந்ததும் என் முகத்தை நான் திருப்பிவிட்டேணாம் ..........................போச்சடா ,,,,ரிவைஸ் ................நம்பமுடியல இல்ல ....உண்மை  :D  :D

 

 

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில்.... பதிவிட்ட, அனைவருக்கும், முதலில் நன்றி. :) 
பெரும்பாலானவர்கள்... நான், பார்த்த படங்களையும் குறிப்பிட்டது அதிசயமாக உள்ளது.
சில நாட்களின் பின்... ஒவ்வொரு பதிவிற்கும் மேற்கோள் காட்டி பதில் தருவேன்.

அங்கு தான்..... கிளைமாக்ஸ் உள்ளது. :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா அம்மாவுடன் பார்த்த முதல் படம் சரஸ்வதி சபதம். நெல்லியடி லக்ஸ்மி தியேட்டரில் பார்த்த ஞாபகம். கதை விளங்கி பார்த்த படம் கண்டி ஓடியன் தியேடரில் அவன்தான் மனிதன். இதில் வரும் சகல பாடல்களும் சூப்பர் ஹிட்ஸ். இதில் வரும் ஆட்டுவித்தால் யார் ஒருவர் ..... பாடல் எனக்கு பிடித்தது

வீடியோ வந்த காலங்களில் எங்கள் ஊரில் முதல் முதல் போட்ட படங்கள் நேற்று இன்று நாளையும், அண்ணன் ஒரு கோயிலும்

நான் சிறுவனாக இருந்த போது MGR இன் ரசிகன் இல்லை. ஆனால் வளர்ந்த பின்பு அவரின் பாடல்களில் நல்ல ஈர்ப்பு.

இதில்.... பதிவிட்ட, அனைவருக்கும், முதலில் நன்றி. :) 

பெரும்பாலானவர்கள்... நான், பார்த்த படங்களையும் குறிப்பிட்டது அதிசயமாக உள்ளது.

சில நாட்களின் பின்... ஒவ்வொரு பதிவிற்கும் மேற்கோள் காட்டி பதில் தருவேன்.

அங்கு தான்..... கிளைமாக்ஸ் உள்ளது. :D  :icon_idea:

 

ஒவ்வொருவரினதும் வயதை கணிக்கப்போகின்றீர்களா சிறி அண்ணா???? பதிவை போடும் போதே நினைச்சன் :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரினதும் வயதை கணிக்கப்போகின்றீர்களா சிறி அண்ணா???? பதிவை போடும் போதே நினைச்சன் :D:lol::icon_idea:

இனி கணிச்சென்ன விட்டென்ன
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரினதும் வயதை கணிக்கப்போகின்றீர்களா சிறி அண்ணா???? பதிவை போடும் போதே நினைச்சன் :D:lol::icon_idea:

 

அப்படி இலகுவில் கணிக்க முடியாது. எங்க காலத்தில தியேட்டர்களுக்கு மூடுவிழா. இருந்தும் வீடியோக்களில்.. தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புக்களில்.. (யாழ் நகரை அண்டி இவை அதிகம் இருந்தன ஒரு காலத்தில்..) பார்ப்பதே அதிகம். அதிலும் பழைய படங்களுக்கு வாடகை காசு குறைவு.புதுப்படங்களுக்கு அதிகம். அதனால் பலர் பழைய படங்களை அதிகம் முதலில் பார்த்திருப்பர். அப்படி.. தான்.. பார்க்கிறது. இன்றைய இளசுகள் கூட 1980 களில் வந்த கலர் படங்களை யு ரியுப்பில்.. விரும்பிப் பார்க்கினம். அதுக்காக அவைட வயதை அது சொல்லாது. தியேட்டர் போய் பார்த்தவை மாட்டுப்பட வாய்ப்புள்ளது. பழைய படங்களை தியேட்டரில் திரையிடுவது  குறைவு. வரலாற்றுப் படங்கள்.. தவிர. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான பதிவு. மலரும் நினைவுகளை மீட்டியதிக்கு நன்றி தமிழ் சிறி. பதிந்த அனைவருக்கும் நன்றி. இலங்கையில் தொலைக் காட்சி அறிமுகப் படுத்தபட்ட 70 களின் இறுதியில், எங்கள் ஊரில் நடராசா மாஸ்டர் அவர்களின் வீட்டில் மட்டும்தான் கருப்பு வெள்ளை தொலைக் காட்சி பெட்டி இருந்தது. வாரத்தில் ஒரு முறை இந்திய தூரதர்சனில்(ரூபவாகினி அப்போ இல்லை) வரும் தமிழ்ப் படம் வெளி முற்றத்தில் வைத்து போடுவார்கள். டியூஷன் முடிந்து அவர்கள் வீட்டுக்கு போக அரைவாசி படம் ஓடி விடும். அப்படி பார்த்த படங்கள் தான்; வாழ்கை படகு, புதிய பறவை, நிறம் மாறாத பூக்கள் இன்னும் பல.(படம் பார்க்க வந்தவர்கள் அவர்களின் முற்றத்து செடிகளை நனைச்சது வேற கதை )

born-free-1.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன்... என்ன சொல்ல வாறார்....look.gif
ஓ...... அவர்,  மௌன விரதம் போலுள்ளது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜூன்... என்ன சொல்ல வாறார்....look.gif

ஓ...... அவர்,  மௌன விரதம் போலுள்ளது. :)

 

அண்ணை முதல் பாத்த  படமே இங்கிலிசு படமாம்.... :icon_mrgreen:  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை முதல் பாத்த  படமே இங்கிலிசு படமாம்.... :icon_mrgreen:  :icon_idea:

 

ஓ... அதனால் தானோ....

அவருக்கு, சர்வதேச தலைவர்களுடன் , நெருங்கிய  தொடர்பை... ஏற்படுத்தி வைத்திருக்கலாம், என்று நம்புகின்றேன்.

நானும்... ரீகல், தியேட்டறிலை, இரண்டு.... இங்க்லீஸ் படம் பார்த்திருக்கலாம், பிழை விட்டுட்டன்.

ஹ்ம்ம்ம்ம்ம்.... இனி, பெரு மூச்சு விட்டு, என்ன செய்யிறது.  விதி. தலை விதி. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குத்துவிளக்கு என்று நினைக்கிறேன். ஆனால் படத்தில் ஒரு காட்சியும் நினைவில் இல்லை.

ஆனால் இது ஒரு இலங்கைத் தயாரிப்பு என்பது நினைவில் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ... அதனால் தானோ....

அவருக்கு, சர்வதேச தலைவர்களுடன் , நெருங்கிய  தொடர்பை... ஏற்படுத்தி வைத்திருக்கலாம், என்று நம்புகின்றேன்.

நானும்... ரீகல், தியேட்டறிலை, இரண்டு.... இங்க்லீஸ் படம் பார்த்திருக்கலாம், பிழை விட்டுட்டன்.

ஹ்ம்ம்ம்ம்ம்.... இனி, பெரு மூச்சு விட்டு, என்ன செய்யிறது.  விதி. தலை விதி. :icon_idea:

 

220px-Kalidas_1931_Songbook.JPG

 

எண்டாலும் அவர்  தான் முதல்லை இந்தப்படத்தை பாத்தனான் எண்டு சொல்லாதவரைக்கும் எனக்கு நாய் பேய் சந்தோசம்... :lol:  :D  :D  :lol:

Edited by குமாரசாமி

Pattanathil-Bhootham.jpg



முதல் தமிழ் படம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.