Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்க் காதலின் வலி எதுவரை ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலர் இதுபற்றி முன்னர் பேசியிருந்தாலும்கூட, எனக்கு இதுபற்றி இன்னும் தெளிவு பிறக்கவில்லை. இதுபற்றி எவர் என்ன சொல்லியும் மனது சமாதானமும் அடையவில்லை. அது நடந்து இன்றுடன் 25 வருடங்கள் ஓடிவிட்டபோதும் கூட அதன் நினைவுகள் பசுமையாகவும் அதேவேளை மிகவும் வேதனையாகவும் இன்றுவரை இருப்பது ஏனென்று எனக்குப் புரியவில்லை. அவ்வப்போது நான் கேட்கும் 80களின் இறுதிக் காலத்திலும், 90 களின் ஆரம்பப் பகுதிகளிலும் வெளிவந்த பாடல்களைக் கேட்கும்போது மனது அந்தக் காலத்தைத் தேடிப் போய் தனியே அழத் தொடங்குகிறது. 

அரும்பத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே அநியாயமாகப் பிரிக்கப்பட்டுப் போன எனது காதல் பற்றி இன்றும் நான் மனதினுள் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எவ்வளவோ சறுக்கல்களுக்கு மத்தியிலும் கூட அரும்பாமல் அரும்பிய அந்த உணர்வு எனது வீட்டாரின் வற்புறுத்தலினால் இடையிலேயே கருவறுக்கப்பட்டு எனது காதலி கண்ணீர் தோய்ந்த முகத்துடன் மட்டக்கள்ப்பு பஸ்நிலையத்தில் நான் பஸ் ஏறுவதைப் பார்த்திருக்க அவளை விட்டு நிரந்தரமாகப்  பிரிந்த எனது பயணம் தொடங்கியது. 

1990 இல் மட்டக்களப்பை விட்டு கொழும்பிற்கு வந்த நான், மட்டக்கள்ப்பிலிருந்து எவர் கொழும்பு வந்தாலும் முதல் கேட்கும் கேள்வி, அவளைப் பார்த்தீர்களா என்பதாகத்தான் இருக்கும். ஒரு சிலர், ஆம் பார்த்தோம், பாவமடா, நீ அப்படிச் செய்திருக்கக் கூடாது. நீ போன பிறகு பலமுறை உன்னிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா என்று எங்களிடம் கேட்டிருக்கிறாள். எங்களால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.....இப்படிப் பல பதில்கள். மனது கிடந்தழ அவற்றைக் கேட்டுவிட்டு மெளனமாக இருந்துவிட்டேன். இன்றிருக்கும் வலி அன்று எனக்குத் தெரியவில்லை. சிறிதுநாளில் மறந்துவிடுவேன் என்று நினைத்திருந்தாலும் கூட, தனிமையில் பலமுறை அழுதிருக்கிறேன். 

6 வருடங்களுக்குப் பின்னர், 1996 இல், பலகலைக் கழக மஹாபொல புலமைப் பரிசில் நிகழ்விற்காக மீண்டும் மட்டக்கள்ப்பு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அங்கு போய் இறங்கியதும் நான் செய்த முதல் வேலை, நண்பனின் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவளிருந்த வீட்டைப் பார்க்கச் சென்றதுதான். ஆனால் அங்கு யாருமில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு அவள் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. சிறிதுநேரம் அவளது வீட்டின் முன்னால் எதுவுமே செய்யத் தோன்றாது நின்றுவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். 

நண்பனின் வீடு வரும் வழியில் நானும் அவளும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் மாதா கோயிலில் மனது இறங்கிவிடத் துடிக்க, சிறிதுநேரம் உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன். எவர் கோயிலிக்குள் வந்தாலும் அவள் வருகிராளா என்று மனம் அங்காலாய்க்க திரும்பித் திரும்பிப் பார்த்தேன். அவளில்லை. 

  • Replies 76
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. மனம் செய்யும் விளையாட்டு இது.. உங்கள் வாழ்வில் இரண்டு பெண்கள் காட்சிக்குள் வந்துவிட்டதால் ஒப்பீடுகள் தாராளமாக நடைபெறலாம். குற்ற உணர்வாகவும் இருக்கலாம்..

என்னைப் பொறுத்தவரையில் காதல் செய்யக்கூடாது.. அப்படிச் செய்தால் அது திருமணத்தில் முடியவேண்டும்.. :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு நேரம் இருந்தேன் என்று தெரியவில்லை, எழுந்து நடக்கத் தொடங்கினேன். சற்றுத் தொலைவில் அவளது நண்பி, கையில் குழந்தையுடன் போவது தெரிந்தது. ஓடிப் போய் அவள்பற்றி விசாரிக்கலாம் என்று நான் ஆயத்தமாவதற்குள், அவளின் கனவன் அவளருகில் நிற்பதை அப்போதுதான் நான் பார்க்கிறேன். மனது ஏனோ வேண்டாம் என்றதும், பேசாமல் இருந்துவிட்டேன். 

நான் மட்டக்களப்பை விட்டுச் சென்ற அந்த 6 வருடங்களுக்குள் பல மாற்றங்கள். என்னுடன் படித்த, பழகிய எவரையுமே நான் அங்கிருந்த ஒரு வாரத்தில் காண்வில்லை. எவரையாவது சந்தித்து அவள் பற்றி அறியலாம் என்றால், எதுவுமே முடியவில்லை. ஒரேயொரு தகவல் மட்டும் கிடைத்தது, "நீ போனபிறகு, அவளும் வீட்டுக் காரரும் திருகோணமலையின் அவர்களின் சொந்த ஊரான சாம்பல்த்தீவுக்குப் போய்விட்டதாக யாரோ சொல்லக் கேள்விப்பட்டேன்" என்று ஒரு நண்பன் தொலைபேசியில் சொன்னான். அதுகூட உண்மையா என்று தெரியவில்லை. 

இன்றுவரை அவளின் நினைவு அடிக்கடி வரும். வரும்போது கூடவே நான் செய்த அநியாயமும் கூட வந்து மனதை உறுத்தும்.

இன்றுவரை அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக அந்த பரந்த மட்டக்களப்பு நகரெங்கும் வியாப்பித்து இருக்கின்றன. காலங்களால் அந்த நினைவுகளை நிச்சயம் அழிக்க முடியாதென்பது எனக்குப் புரிகிறது. நான் தெரிந்தே செய்த மிகப்பெரிய பாவம் அதுவென்று இன்றுவரை நான் நம்புகிரேன்.

இன்று எனது மனைவிகூட நான் காதலித்தவள்தான். அவளின்மேல் நான் வைத்திருக்கும் அன்பும் உண்மையானதுதான். ஆனால் எனது முதற்காதலின் வலி இன்னும் என்னை விட்டு அகலவில்லை.

நான் இன்றுவரை தேடிய தேடல்கள், அவளை மீண்டும் காதலிக்கவல்ல, மாறாக நான் செய்ததற்கு மன்னிபுக் கேட்கத்தான் என்று மனது சொல்கிறது. அவள் எப்படி இருக்கிறாள் என்று அறிய மனம் ஆசைப்படுகிறது. அவள் நன்றாக வாழ வேண்டும் என்று மனம் விரும்புகிறது. ஆனால் இதெல்லாம் நடப்பதற்கு அவள் உயிருடன் இருக்கிறாளா, இருந்தால் எங்கிருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. 

ஒன்றுமட்டும் நிச்சயம், இந்த வலி என்னுடன் கூடவே வரும், சாகும்வரை !

ம்ம்ம்.. மனம் செய்யும் விளையாட்டு இது.. உங்கள் வாழ்வில் இரண்டு பெண்கள் காட்சிக்குள் வந்துவிட்டதால் ஒப்பீடுகள் தாராளமாக நடைபெறலாம். குற்ற உணர்வாகவும் இருக்கலாம்..

என்னைப் பொறுத்தவரையில் காதல் செய்யக்கூடாது.. அப்படிச் செய்தால் அது திருமணத்தில் முடியவேண்டும்.. :o

இசை, நீங்கள் அறியாததா?? 16 வயதில் ஒரு காதலை அங்கீகரிக்கும் நிலையிலா எமது சமூகம் இருக்கிறது ? 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்
ஒன்றுமட்டும் நிச்சயம், இந்த வலி என்னுடன் கூடவே வரும், சாகும்வரை !

இது உண்மையானது. மனித மனம் தான் எத்தனை மென்மையானது!!!

  • கருத்துக்கள உறவுகள்

ரகு

உங்களது வலியை  உணரமுடிகிறது...

இந்த திரியின் தலைப்பை பார்த்ததும்

எனது காதலையும் எழதலாம் என ஓடிவந்தேன்

ஆனால் உங்களது வலி அதை எழுதவிடவில்லை......

இரண்டையும் ஒப்பீடு செய்து பார்த்தேன்

(எனதையும் உங்களதையும்)

எனது காதல்கள் சீரியசாக இருந்ததில்லை

அந்த பருவத்து உணர்வு மட்டுமே...

ஆனால் அவையும் தற்பொழுதும் எனது அடிமனதில் உண்டு

ஆனால் உங்களுக்கும் எனக்கும்உள்ளவேறுபாடு

அதை ஒரு உணர்வாக

அந்தநேர விளையாட்டாக நினைத்து நான் கடந்துபோகின்றேன்

கடந்து  போய்க்கொண்டிருக்கின்றேன்

நீங்கள் அதை ஒரு படிக்கு மேலாக நினைத்து  சந்தோசத்தை தொலைக்கிறீர்கள்

பருவங்களும்  பயணங்களும் வாழ்க்கையும் வெவ்வெறானவை

அவை நின்றுவிடுவதில்லை

தொடர்பவை......

அதன் ஓட்டத்தில் நாம் ஓடியாகணும்

நீங்கள் மட்டுமல்ல

நீங்கள் தேடும் நபரும் ஓடியாகணும்

யாருக்காகவும் எவரும் ஓட்டத்தை நிறுத்தமுடியாது

கிட்டத்தட்ட இந்த 25 வருடகாலத்தில் 

எல்லாமே மாறியிருக்கும்

எல்லாமே மறக்கப்பட்டிருக்கும்

எல்லாவற்றிற்குமே மாற்றுவழி கிடைத்திருக்கும்

அது நீங்கள் நினைப்பதைவிட பல மடங்கு சிறந்ததாகவும் இருக்கக்கூடும்..

எனவே மனக்கிலோசம் கலைத்து மகிழ்வுடன் வாழ்க்கையை  வாழுங்கள்

வாழ்க  வளமுடன்...

(ஆரம்பத்தில்  எனது காதல் பற்றி இங்கு எழுதலாம் என நினைத்து எழுதத்தொடங்கினேன். ஆனால் முடியவில்லை. காரணம் அவர்கள் இன்று  இன்னொரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறர்கள்.  என்னைப்பற்றி வேண்டுமானால் நான் எழுதலாம். ஆனால் இனி அவர்களைப்பற்றி  எழுத எனக்கென்ன உரிமையுண்டு?. அத்துடன் தேவையற்ற மனக்கிலேசங்களையும் புடுங்குப்பாடல்களையும் அவை தந்துவிடுமல்லவா??)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இசை, நீங்கள் அறியாததா?? 16 வயதில் ஒரு காதலை அங்கீகரிக்கும் நிலையிலா எமது சமூகம் இருக்கிறது ?

ஓ.. பதினாறு வயது ஆகக் குறைந்ததுதான்.. நீங்கள் 90 களில் பஸ் ஏறும்போது யாருக்கு 16 வயது? :unsure:

காதல் ஜெயித்தால் என்ன ஆகும்... !!?? கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகளோடு சாதாரண வாழ்க்கையாகி விடும்...சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதது... 
 
ஆனால் அந்தக் காதல் தோற்றால் அது காவியம் ....!!  நீங்கள் மரணிக்கும் வரை அந்த இனிய நினைவுகள் உங்களுடனே பயணிக்கும்.  உங்கள் உணர்வுகளை உயிர்பிக்கவும்...புதுப்பிக்கவும்...சோர்வு வரும்போது இளைப்பாறவும் அந்த நினைவுகள்  உங்களை தாங்கிப் பிடிக்கும் ...
 
ஆகையால் காதல் தோற்றால் கவலைப்பட தேவையில்லை... கடைசிவரை பயணப்பட அவளது நினைவு உள்ளது என்று சந்தோசம் கொள்ளுங்கள்...:)
 
எல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் அடையுங்க அண்ணே! :icon_mrgreen:  :D

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்றாலே அது ஒரு விதமான வலி தான்.அதிலே சின்னன் பெரிது என்று கிடையாது.

நானும் காதலித்தே திருமணம் செய்தேன்.சிறு வயதில் தொடங்கியது ஒன்பது வருடங்களின் பின் திருமணத்தில் சுபமாக முடிந்தது.

காதலிக்கும் போது எப்படி இருந்தோமோ

அப்போதும் அப்படியே இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்குள் இப்படியான வலிகள் நிறைந்த வேதனைகள் இருக்கும். காலம் எல்லாவற்றையும் ஆற்றும் மருந்து என்று சொன்னாலும் மாறாத காயங்களும் இருக்கத்தான் செய்யும். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சில விருப்பமில்லாத முடிவுகளை எடுக்கவைக்கின்றன. ஆனால் கடந்த காலத்தை நினைவில் கொண்டு எதிர்காலத்தைக் கட்டமைக்கவேண்டும் என்று நிற்காமலே நகர்ந்துகொண்டிருக்கப் பழகினால் எதையும் மனம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்....... எப்பிடி மறக்கிறது? அந்த வலி உயிர் மூச்சு அடங்கிற வரை இருக்கும்!

பெண்ணே!

இற்றை வரை

உன் நினைவு மீள்கையிலே

இறுதியாக - நீ

சொல்லிச் சென்ற எனக்கான

உன் மூன்றழுத்து முகவரிச் சொல்

முள்ளு வைத்துக்

என்னைக் குத்துகின்றது,

நெருப்பாகச் சுடுகின்றது!

சவுக்கெடுத்து அடிக்கின்றது!

காவாலி! - நான்

என்றும் உனக்குக் காவாலிதான்!

வானம் அது ஒன்றுதான்
வானில் நிலவொன்றுதான்
காதல் கலைந்தாலும் மனதில்
என் நினைவொன்றுதான்
 
https://www.youtube.com/watch?v=pnD_FBC6iEE
  • கருத்துக்கள உறவுகள்

ம்ஹும் ...இந்த திரி ரொம்ப Romantic ஆகவும் உணர்ச்சி பூர்வமாகவும் போகுது 
நெடுக்ஸ் அண்ணை இறங்கினால் தான் சரிப்படும் .....
நெடுக்ஸ் அண்ணை எங்கிருந்தாலும் உடனடியாக வரவும்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் எத்தனையோ தரம்.. விழுந்து எழும்புறம்.. காயங்கள் வருகுது.. சுகமாகுது. அவற்றையே மறந்து போகத் தெரிஞ்ச மூளைக்கு.. இதெல்லாம் யு யு பி. ஒன்றைப் பார்த்தமா.. பழகினமா.. கைவிட்டமான்னு.. வெற்றிகரமா செய்திட்டமுன்னா.. அப்புறம் அடுக்கடுக்கா... அதையே செய்திட்டு.. எந்த குற்ற உணர்வுக்கும் இடமில்லாமல்.. காயா வாழலாம்.

அண்ணன்களா.. கொட்டாவியையும் கனவையும்.. மனசில நினைச்சு வைக்க முடியாதில்ல. அப்படித்தான் காதலும். கண்டமா.. பழகினமா.. விட்டமான்னு.. மறந்திடனும். அதை எல்லாம் காவிக்கிட்டு திரியப்படாது. காதலும் பசியும் கொட்டாவியும் தும்மலும் விக்கலும் வரும் போகும். அதுக்காக எல்லாம் கவலைப்படக் கூடாது. ஓகே.

காதல்ல.. புனிதம்.. கினிதம் என்று ஒன்றுமில்ல. இரண்டு மனிசர் சம்பந்தப்படுற விசயத்தில.. ஒண்ணுக்குமே உத்தரவாதமில்ல. எப்ப யாரும் ஏமாற்றிட்டு போகலாம். போனும் சிம்மும் போல. காதலும்.. மனிசரும். சிம்முள்ள வரைக்கும் கொண்டாட்டம்.. சிம்மக் கழற்றி வீசிட்டா.. திண்டாடமுன்னு இருந்தோமுன்னு வையுங்க.. அது எங்க முட்டாள் தனமே தவிர.. காதல் சொல்லிச்சா தான் புனிதமுன்னு. இல்லை இல்ல. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ ஆசையா வாங்கிற உடுப்பு.. ஒரு நாள் கிழிஞ்சு போகேக்க.. தூக்கி வீசிட்டு அடுத்ததை வாங்கிறமா... இல்லை கிழிஞ்சதை கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைச்சுக்கிட்டு.. உடுக்காமலே வாழுறமா.... ?!

காதல்ல.. யாரும் தோக்கிறதும் இல்ல. அவரவர் தேவைக்கு பயன்படுத்தினம்.. அப்புறம் உதாசீனம் பண்ணிக்கிற ஒரு அற்ப விடயம்.. உணர்வு தான் காதல். :icon_idea::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. பதினாறு வயது ஆகக் குறைந்ததுதான்.. நீங்கள் 90 களில் பஸ் ஏறும்போது யாருக்கு 16 வயது? :unsure:

இசை,

நான் பஸ் ஏறியது 90 இல். அப்போது எங்களிருவருக்குமே வயது 17 தான். நான் காதலிக்கிறேன் என்பது தெரிந்ததும் எனது வீட்டார் (எனது தந்தையார் இல்லை, அவர் என்னைக் கைவிட்டு பலகாலம் ஆகிவிட்டது அப்போது) கேட்ட முதற்கேள்வி, "புத்தகம் தூக்கிற வயதில் உனக்குப் பிள்ளை தூக்க ஆசை வந்திட்டுதோ?" என்பதுதான். 

நான் எனது சிறுபராயத்திலிருந்து பல நிகழ்வுகளை மறந்துவிட்டேன். ஆனால் காதலித்த அனுபவங்களும், பட்ட அவமானங்களும் அப்படியே அச்சுப்பிழகாமல் , இன்னும் அதே பசுமையுடனும், ரணங்களுடனும் நினைவில் பதிந்திருக்கின்றன. அந்த நிகழுவுகளில் ஒரு சிறிதளவேனும் அழியவில்லை. கனவுகளில் நான் அழுவது எனக்குத் தெரிகிறது. ஆனால் வேறு எவருக்குமே அது தெரிந்திருக்குமா என்று எனக்குத் தெரியாது.

அவளது வீடு தேடி மனது கனவுகளில் அடிக்கடி சென்றுவரும், அவளைத் தேடும். ஒன்றில் அவள் அங்கில்லை, அல்லது அவள் மாறியிருப்பாள்.

இறுதியாக அவளை ஒரு மனநிலை குன்றிய நிலையில் வைத்தியசாலை ஒன்றில் பார்த்து கனவில் மனம் அழுதது. அந்தக் கனவின் தாக்கம் கலையவே நாட்கள் எடுத்தன.

என்னைப் போல வேறு எவருமே இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனாலும் பலர் இங்கே சொல்லியதுபோல, அந்த நினைவுகள் அவ்வப்போது சுகமாகவும் இருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

எவ்வளவோ ஆசையா வாங்கிற உடுப்பு.. ஒரு நாள் கிழிஞ்சு போகேக்க.. தூக்கி வீசிட்டு அடுத்ததை வாங்கிறமா... இல்லை கிழிஞ்சதை கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைச்சுக்கிட்டு.. உடுக்காமலே வாழுறமா.... ?!

காதல்ல.. யாரும் தோக்கிறதும் இல்ல. அவரவர் தேவைக்கு பயன்படுத்தினம்.. அப்புறம் உதாசீனம் பண்ணிக்கிற ஒரு அற்ப விடயம்.. உணர்வு தான் காதல். :icon_idea::lol:

அட போங்கைய்யா,

உங்களால் எப்படித்தான் இப்படி இருக்க முடிகிறதோ??

ஒருமுறை உண்மையாகக் காதலித்துப் பாருங்கள். காதலில் தோற்றும் பாருங்கள். அப்புறம் தெரியும் வலி. 

காதல் ஜெயித்தால் என்ன ஆகும்... !!?? கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகளோடு சாதாரண வாழ்க்கையாகி விடும்...சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதது... 
 
ஆனால் அந்தக் காதல் தோற்றால் அது காவியம் ....!!  நீங்கள் மரணிக்கும் வரை அந்த இனிய நினைவுகள் உங்களுடனே பயணிக்கும்.  உங்கள் உணர்வுகளை உயிர்பிக்கவும்...புதுப்பிக்கவும்...சோர்வு வரும்போது இளைப்பாறவும் அந்த நினைவுகள்  உங்களை தாங்கிப் பிடிக்கும் ...
 
ஆகையால் காதல் தோற்றால் கவலைப்பட தேவையில்லை... கடைசிவரை பயணப்பட அவளது நினைவு உள்ளது என்று சந்தோசம் கொள்ளுங்கள்... :)

ஆதித்திய இளம்பிறையன்,

மிக்க நன்றி. இதுதான் அந்த உணர்வு !!!! உங்களுக்குப் புரிகிறது.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகு

உங்களது வலியை  உணரமுடிகிறது...

இந்த திரியின் தலைப்பை பார்த்ததும்

எனது காதலையும் எழதலாம் என ஓடிவந்தேன்

ஆனால் உங்களது வலி அதை எழுதவிடவில்லை......

இரண்டையும் ஒப்பீடு செய்து பார்த்தேன்

(எனதையும் உங்களதையும்)

எனது காதல்கள் சீரியசாக இருந்ததில்லை

அந்த பருவத்து உணர்வு மட்டுமே...

ஆனால் அவையும் தற்பொழுதும் எனது அடிமனதில் உண்டு

ஆனால் உங்களுக்கும் எனக்கும்உள்ளவேறுபாடு

அதை ஒரு உணர்வாக

அந்தநேர விளையாட்டாக நினைத்து நான் கடந்துபோகின்றேன்

கடந்து  போய்க்கொண்டிருக்கின்றேன்

நீங்கள் அதை ஒரு படிக்கு மேலாக நினைத்து  சந்தோசத்தை தொலைக்கிறீர்கள்

பருவங்களும்  பயணங்களும் வாழ்க்கையும் வெவ்வெறானவை

அவை நின்றுவிடுவதில்லை

தொடர்பவை......

அதன் ஓட்டத்தில் நாம் ஓடியாகணும்

நீங்கள் மட்டுமல்ல

நீங்கள் தேடும் நபரும் ஓடியாகணும்

யாருக்காகவும் எவரும் ஓட்டத்தை நிறுத்தமுடியாது

கிட்டத்தட்ட இந்த 25 வருடகாலத்தில் 

எல்லாமே மாறியிருக்கும்

எல்லாமே மறக்கப்பட்டிருக்கும்

எல்லாவற்றிற்குமே மாற்றுவழி கிடைத்திருக்கும்

அது நீங்கள் நினைப்பதைவிட பல மடங்கு சிறந்ததாகவும் இருக்கக்கூடும்..

எனவே மனக்கிலோசம் கலைத்து மகிழ்வுடன் வாழ்க்கையை  வாழுங்கள்

வாழ்க  வளமுடன்...

(ஆரம்பத்தில்  எனது காதல் பற்றி இங்கு எழுதலாம் என நினைத்து எழுதத்தொடங்கினேன். ஆனால் முடியவில்லை. காரணம் அவர்கள் இன்று  இன்னொரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறர்கள்.  என்னைப்பற்றி வேண்டுமானால் நான் எழுதலாம். ஆனால் இனி அவர்களைப்பற்றி  எழுத எனக்கென்ன உரிமையுண்டு?. அத்துடன் தேவையற்ற மனக்கிலேசங்களையும் புடுங்குப்பாடல்களையும் அவை தந்துவிடுமல்லவா??)

நீங்கள் சொல்வது சரிதான் குகன்,

கால ஓட்டம் எல்லாவற்றையும் மாற்றும் என்றுதானிருந்தேன். ஆனால் அதுவுமே மாறவில்லை, மறையவில்லை.

அவள் எப்படியிருக்கிறாள் என்கிற அங்கலாய்ப்பே பாதி இரவுகளில் தூக்கத்தைக் கலைக்கிறது. 

அவள் நலமாக இருக்கவேண்டும் என்று சுயநலத்துடன் வேண்டுகிறது மனம். நான் செய்தத்தற்குப் பிராயச்சித்தம் தேட மனம் அலைகிறது. அந்தக் குற்றவுணர்வே இப்போது கனவுகளாகிவிட மனம் அலைந்துகொண்டிருக்கிறதென்று நினைக்கிறேன்.

ம்ம்ம்....... எப்பிடி மறக்கிறது? அந்த வலி உயிர் மூச்சு அடங்கிற வரை இருக்கும்!

பெண்ணே!

இற்றை வரை

உன் நினைவு மீள்கையிலே

இறுதியாக - நீ

சொல்லிச் சென்ற எனக்கான

உன் மூன்றழுத்து முகவரிச் சொல்

முள்ளு வைத்துக்

என்னைக் குத்துகின்றது,

நெருப்பாகச் சுடுகின்றது!

சவுக்கெடுத்து அடிக்கின்றது!

காவாலி! - நான்

என்றும் உனக்குக் காவாலிதான்!

காவாலி, அந்தக் காதலி இன்று உங்களின் மனைவியா??

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்றாலே அது ஒரு விதமான வலி தான்.அதிலே சின்னன் பெரிது என்று கிடையாது.

நானும் காதலித்தே திருமணம் செய்தேன்.சிறு வயதில் தொடங்கியது ஒன்பது வருடங்களின் பின் திருமணத்தில் சுபமாக முடிந்தது.

காதலிக்கும் போது எப்படி இருந்தோமோ

அப்போதும் அப்படியே இருக்கிறோம்.

ஈழப்பிரியன், உங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்தாய் எதுவும் எழுத தோன்றவில்லை. உண்மைக்காதலின் தைரியம் உங்கள் வாழ்வின் வெற்றியே. 
 
பலருக்கு காதல் பொழுது போக்கு சட்டைமாதிரியும் சிம்காட் மாதிரியும் கழற்றி விசிவிட்டு போகக்கூடியது. ஆனால் காதலை உணர்ந்து காதலித்தவர்களுக்கும் காதலிப்பவர்களுக்கும் காதல் கடவுளுக்கு நிகர்.
  • கருத்துக்கள உறவுகள்
ரகு அண்ணா,
உங்கள் பெயரில் ஒரு பகிர்வு இருந்ததை பார்த்தவுடன் வாசித்தேன். நிச்சயம் ஏதோவொரு விடயம் உங்கள் எழுத்தில் பேசப்படுமென்ற நம்பிக்கை.
 
இம்முறை முதல்காதல் பற்றி எழுதியிருக்கிறீங்கள். காதலால் உலகில் யாவையும் வெல்லும் சக்தி உண்டு என்பதனை இங்கே உணர்ந்தவர்கள் மிகச்சிலரே. ஏனெனில் காதல் பலரால் உணரப்படாத அனுபவிக்கப்படாத உணர்வு. உணராத யாராலும் காதலை அதன் வலிமையை புரிந்து கொள்ள முடியாது. 
 
உங்கள் உண்மையான நேசிப்பு மற்றவர்களால் மதிக்கப்படாது மிதிக்கப்பட்டு பிரிந்து போனீர்கள். எனினும் அதனை குற்ற உணர்வாக நீங்கள் நினைத்து வருந்தத்தேவையில்லை.உங்கள் காதலும் நேசிப்பும் உண்மையானது. காதலின் வலிமையே உங்களை இன்றுவரை அந்தக்காதலை நினைத்து கண்ணீர் சிந்த வைக்கிறது. உங்களால் காதலிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு சிறந்தகாதல் நீங்கள். 
 
காலங்கள் எத்தனை யுகங்களை கடந்து போயிருக்கலாம் ஆனால் உங்கள் காதலின் வலிமையை காதல் என்ற பெயரை ஒற்றைச் சொல்லாக கடந்து செல்வோரால் புரிந்து கொள்ள முடியாது.
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் போல வேறு எவருமே இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை

அச்சு அசலாக இருகிறேன்.. இடங்களையும் வயதையும் பிரிய நேரிட்ட சந்தர்ப்பத்தையும் மட்டும் சற்று மாத்தினால் பிரித்துபார்க்க முடியாத என் கதை இது.. வாசித்துவிட்டு சிறிது நேரமாக எதையும் எழுதமுடியவில்லை.. பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துபோகின்றன.. சில துளி கண்ணீரும்.. எனக்கும் சேர்த்து எல்லாவற்றையும் நீங்கள் எழுதிவிட்டீர்கள் ரகு அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

காவாலி, அந்தக் காதலி இன்று உங்களின் மனைவியா??

இல்லை அப்போது நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன். இன்னொருவருக்கு திருமணம் செய்துகொடுத்துவிட்டார்கள்!
  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பதன் போலி தோற்ற உணர்வைப் பற்றி இந்தக் கவிஞர் பாடியது போல எவரும் பாட முடியாது. பாடியும் என்ன இன்னும் காதலின் பெயரால்.. மனிதர்கள் தங்களை தாங்களே வருத்திக் கொள்வது படு முட்டாள் தனமானாலும் இன்னும் தொடரவே செய்கிறது. அது அவர்களின் மனப் பலவீனங்களிலும் தங்கி இருக்குமோ என்னமோ..!!! :):D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ரகு அண்ணா சாந்தி அடையட்டும். :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் போல வேறு எவருமே இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.

நிறையப்பேர் இருப்பார்கள் (நான் உட்பட). நீங்கள் வெளியே சொல்லி விட்டீர்கள் மற்றவர்கள் சொல்லவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகு அண்ணா,
உங்கள் பெயரில் ஒரு பகிர்வு இருந்ததை பார்த்தவுடன் வாசித்தேன். நிச்சயம் ஏதோவொரு விடயம் உங்கள் எழுத்தில் பேசப்படுமென்ற நம்பிக்கை.
 
இம்முறை முதல்காதல் பற்றி எழுதியிருக்கிறீங்கள். காதலால் உலகில் யாவையும் வெல்லும் சக்தி உண்டு என்பதனை இங்கே உணர்ந்தவர்கள் மிகச்சிலரே. ஏனெனில் காதல் பலரால் உணரப்படாத அனுபவிக்கப்படாத உணர்வு. உணராத யாராலும் காதலை அதன் வலிமையை புரிந்து கொள்ள முடியாது. 
 
உங்கள் உண்மையான நேசிப்பு மற்றவர்களால் மதிக்கப்படாது மிதிக்கப்பட்டு பிரிந்து போனீர்கள். எனினும் அதனை குற்ற உணர்வாக நீங்கள் நினைத்து வருந்தத்தேவையில்லை.உங்கள் காதலும் நேசிப்பும் உண்மையானது. காதலின் வலிமையே உங்களை இன்றுவரை அந்தக்காதலை நினைத்து கண்ணீர் சிந்த வைக்கிறது. உங்களால் காதலிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு சிறந்தகாதல் நீங்கள். 
 
காலங்கள் எத்தனை யுகங்களை கடந்து போயிருக்கலாம் ஆனால் உங்கள் காதலின் வலிமையை காதல் என்ற பெயரை ஒற்றைச் சொல்லாக கடந்து செல்வோரால் புரிந்து கொள்ள முடியாது.

நன்றி சாந்தி,

நீங்கள் நான் எழுதியதை மதித்து வந்ததற்கு நன்றிகள். நான் எழுதியவை என்னை இன்றுவரை பாதித்து ஏங்கவைக்கும் எனது முதற்காதலின் நினைவுகள். அவளது முகம் இன்றுவரை மனதை விட்டு அகலவில்லை. என்னை விட்டுப் பிரிய வேண்டாம் என்ற அவளது கெஞ்சள்களை மனம் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. உண்மையாகவே  எனக்காக ஏங்கிய ஒரு ஜீவன் இப்போது எங்கிருக்கிறது, எப்படியிருக்கிறதென்று அறிய பாழாய்ப்போன மனம் ஆசைப்படுகிறது.

எப்படி எனது தாயகத்தை விட்டு வெளியேறி நான் வாழ்ந்தாலும், அதன் நினைவுகள் என்னுடனிருக்குமோ, அப்படியே அவள் நினைவுகளும். நானிருக்கும்வரை அவை தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கும் !

அச்சு அசலாக இருகிறேன்.. இடங்களையும் வயதையும் பிரிய நேரிட்ட சந்தர்ப்பத்தையும் மட்டும் சற்று மாத்தினால் பிரித்துபார்க்க முடியாத என் கதை இது.. வாசித்துவிட்டு சிறிது நேரமாக எதையும் எழுதமுடியவில்லை.. பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துபோகின்றன.. சில துளி கண்ணீரும்.. எனக்கும் சேர்த்து எல்லாவற்றையும் நீங்கள் எழுதிவிட்டீர்கள் ரகு அண்ணா..

எனதருமை சுபேஸ்,

உங்களின்மேல் மிகப்பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன் நான் ! உங்களின் எழுத்து எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று, வாழ்த்துக்கள்!

உங்கள் வலியும் என்னைப்போன்றதே என்று கவலைப்படவா அல்லது மகிழவா என்று தெரியவில்லை.

ஆனால், தோல்வியினாலன்றி அந்த வலியின் மகத்துவம் எமக்குத் தெரிந்திருக்குமா என்றால் சந்தேகமே !

ரகு அண்ணா சாந்தி அடையட்டும். :lol::)

நெடுக்கு, 

நான் என்ன இறந்தா விட்டேன்?? எனக்கு எதற்குச் சாந்தி சொல்கிறீர்கள் ? ஓ...என மனதில் இருக்கும் வலியைச் சொல்கிறீர்களா?? அதை நான் சாந்தியடைய விடப்போவதில்லை !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.