Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரன் மகிந்தவை யாராலும் தோற்கடிக்க முடியாதாம்!

Featured Replies

மகிந்த ராஜபக்ச என்ற வீரனின் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ளது சிறிய இடைவெளி மாத்திரமே. இவ்வாறு கூறியுள்ளார் விமல் வீரவன்ச. நுகேகொடையில் நடந்துவரும் மகிந்த ஆதரவு கூட்டத்தில் உரையாற்றய போதே இதனை தெரிவித்தார்.

“1815இல் கண்டி மன்னன் ராஜசிங்கனை தோற்கடிப்பதற்கு இறுதியில் வெள்ளையர்கள் கைக்கொண்டது பிரச்சார உத்தி. மன்னனை பற்றி அவதூறு பரப்பி மக்களை நம்ப வைத்தனர். அதுபோலத்தான் கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை பற்றி இல்லாத பொல்லாததை சொல்லி, மக்களை நம்ப வைத்தனர். இந்த சூழ்ச்சியை உடைத்தெறிந்து மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம்.

இங்கு பல சுதந்திரக்கட்சிக்காரர்கள் வந்துள்ளனர். ஏனையவர்களையும் ஒன்று திரட்டுவது சிரமமான விடயமல்ல.

மகிந்தவிற்கு தற்பொது நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்து செல்கிறது. தற்போது தேர்தலொன்று நடத்தப்பட்டால், முன்னரைவிட 1 மில்லியன் வாக்குகள் அதிகமாக பெறுவார்.

மகிந்தவை சுற்றியிருந்து பிழையான பாதையில் நடத்தியவர்கள் எல்லோரும் கடந்த தேர்தலின் போது அவரை விட்டு ஓடிவிட்டார்கள். தற்போது அப்படியானவர்கள் இல்லாமல் அவர் பரிசுத்தமான நிலையில் உள்ளார். இந்தநிலையில் அவர் மீண்டும் அரசியலிற்கு வந்தால், நாட்டிற்கு தேவையான சுபீட்சத்தை அடையலாம்.

கடந்த கால தவறுகளை களைந்து புதிய ஆட்சியொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இங்கு பேசப்படும் விடயங்களை ஊடகங்கள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும். எனவே கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒவ்வொருவரும் இங்கு பேசப்பட்டவற்றை உங்கள் ஊர்களில் சென்று சொல்ல வேண்டும்.

மகிந்த ராஜபக்ச என்ற பெயர் தனிமனிதனின் பெயர் கிடையாது. அது நாட்டின் சொத்து. மகிந்த, கோத்தபாய போன்றவர்களின் கௌரவத்தை சீரழிக்க யாருக்கும் இடமளிக்க முடியாது” என்றார்.

இந்த கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், சுதந்திரக்கட்சியின் தடையுத்தரவையும் மீறி பல உறுப்பினர்கள் கலந்து கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

TodaysNugegoda_1-600x358.jpg TodaysNugegoda_2-600x360.jpg TodaysNugegoda_3-600x399.jpg TodaysNugegoda_4-600x451.jpg TodaysNugegoda_5-600x319.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/38139.html#sthash.JUEr5Io4.dpuf

மீண்டும் அரசியலுக்கு வருகிறார் மகிந்த – நுகேகொட கூட்டத்தில் சூளுரை FEB 19, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

mahinda-rajapaksa-300x200.jpgகடந்த மாதம் அதிபர் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குத் திரும்பப் போவதாக சூளுரைத்துள்ளதுடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வரும், கூட்டம் ஒன்று விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோரின் ஏற்பாட்டில் நுகேகொடவில் நேற்றுமாலை நடத்தப்பட்டது.

பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் திரண்ட இந்தப் பாரிய கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மகிந்த ராஜபக்ச பங்கேற்காவிடினும், அவர் அனுப்பிய செய்தியை, கலாநிதி தயான் ஜயத்திலக வாசித்தார்.

அந்தச் செய்தியில், ஆயிரக்கணக்கானோர் தான் மீண்டும் அரசியலுக்கு வருவதை விரும்புவதாகவும், அந்த விருப்பத்தை தன்னால் புறக்கணிக்க முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

அதிபர் தேர்தலில் தான் தோற்கடிக்கப்படவில்லை என்றும், அது ஒரு சூழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, நாட்டைப்பற்றி சிந்திக்கின்ற, நாட்டுக்காக அர்ப்பணிப்போரின் எதிர்பார்ப்புகளை என்னால் புறக்கணிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

mahinda-suport-nugegoda-1.jpg

mahinda-suport-nugegoda-2.jpg

mahinda-suport-nugegoda-3.jpg

“தோல்வியை தோல்வியாக ஏற்க நான் எப்போதும் பின் நிற்பதில்லை.

அவமானம் என்பது என பழக்கமில்லாத ஒன்றல்ல. சிறையும் எனக்கு பழக்கமானது. மக்களுக்காக நான் அனைத்தையும் அனுபவித்தவன் என்பதை அனைவரும் அறிவர்.

பலர் தோல்விகளுக்கு பழகி இருந்தாலும், நேர்மையான தலைவருக்கு மாத்திரமே கௌரவமான வெற்றியின் உரிமையாளராக முடியும் என்பது எனது நம்பிக்கை.

நான் அந்த மகந்தான வெற்றியையும் அனுபவிக்க சந்தர்ப்பத்தை பெற்றவன்.

புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை மரண அச்சத்தில் இருந்து காப்பாற்றினேன்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு உலக ஆச்சரியம் கொள்ள செய்யும் வெற்றியை பெற முடிந்தது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

சிறந்த நோக்கங்களுடனான கூட்டணிக்கு மாத்திரமே நாட்டுக்கும், மக்களுக்கும் மீண்டும் அப்படியான வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியும்.

அப்படியான வெற்றியான நோக்கை கொண்டுள்ள நுகேகொடையில் கூடியிருக்கும் மக்களின் கரங்களை இறுகப்பற்றி கொள்கிறேன்.

தோல்வியடையாத எமக்கு ஆட்சி அதிகாரம் இல்லாமல் போயிருந்தாலும் சகலரது படகும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே” என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/02/19/news/3814

  • தொடங்கியவர்

மகிந்த ஆதரவு கூட்டத்தால் பிரதேசசபை உறுப்பினர்கள் அடிதடி! 

நுகேகொடவில் இன்று நடந்த மகிந்த ஆதரவு பொதுக்கூட்டத்தால் காலியின் பெபே, போத்தல பிரதேசசபையில் உறுப்பினர்களிற்கிடையில் அடிதடி ஏற்பட்டுள்ளது. உறுப்பினர்கள் சட்டைகளை பிடித்துக் கொண்டு மல்லுக்கட்டிய போது எடுத்த படங்கள் இவை.

மகிந்தவிற்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக பிரதேசசபை அமர்வை ஒத்திவைக்குமாறு உறுப்பினர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சபையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், இருதரப்பாக பிரிந்து வாய்த்தர்க்க்பபட்டார்கள். வாய்த்தர்க்கம் முற்றி, உறுப்பினர்களிற்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது

7VgetXb.png 9VRayHv.png

- See more at: http://www.canadamirror.com/canada/38146.html#sthash.tcl9Mql2.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
wimal-weerawansa-200-news.jpg

நுகேகொடவில் இன்று மாலை இடம்பெற்ற மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், அங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட செய்தியும் வாசிக்கப்பட்டது. இந்தப் பாரிய கூட்டத்தினால் ஸ்ரான்லி திலகவர்த்தன மாவத்தையில் போக்குவரத்து முடங்கியது.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க ஆதரவு தெரிவிக்கும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிபி.ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட, கீதாஞ்சன குணவர்த்தன, சாலிந்த திஸாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, டிவி.உபுல், நிமல் லன்சா, தயான் ஜயதிலக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த பதவியில் இருந்தாலும் உண்மையில் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி என தெரிவித்தார்.

''பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அமரும் ஆசனத்திலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமர்கிறார். இதன் மூலம் தானே ஜனாதிபதி என்பதை ரணில் விக்ரமசிங்க காட்டுகிறார். ஆகவே இது சிறிசேனவின் ஆட்சியல்ல, ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி. மைத்திரிபாலவிற்குள் ஒழிந்து ரணில் பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டாலும் அவர் மஹிந்த பிரதமரான பின்னர், ரணில் வேறு ஒருவரை தேட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்க வேண்டும். ரணிலை விட மஹிந்த மேலானவர் என்பதை தற்போதைய ஜனாதிபதி அறிவார்.

பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கரில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பவுள்ள அகதிகள் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களில் அகதிகள் மாத்திரம் வருவதில்லை இந்திய றோவினால் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்ட புலனாய்வாளர்களும் குடியேற்றப்படுவர். ஆட்சி அமைக்க உதவிய இந்தியாவிற்கு ரணில் தலைமையிலான அரசாங்கம் சலுகைகளை வழங்கி வருவதுடன் மாருதி போன்ற இந்திய உற்பத்தி வாகனங்களுக்கு வரிகளை குறைத்து லஞ்சம் வழங்கியுள்ளதாக விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.

nugegoda-meeting-180215-seithy%20(1).jpg

nugegoda-meeting-180215-seithy%20(2).jpg

http://seithy.com/breifNews.php?newsID=126815&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
Nugegoda-meeting-200-news.jpg

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளராகக் களமிறக்க வேண்டும், அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என வலிறுத்தி நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் நேற்று மாலை பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பங்கேற்புடன் நடந்தது.

'வெற்றி கொண்ட நாடு அபாய கட்டத்தில்' என்ற தொனிப் பொருளின் கீழ் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் 'தாய் நாட்டைப் பாதுகாக்கும் கலைஞர்கள் சங்கம்' உள்ளிட்ட பல அமைப்புகளின் ஏற்பாட்டில் நுகேகொடையில் இக்கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான சீ.பி. ரத்னாயக்க, குமார வெல்கம, டி.பி. ஏக்கநாயக்க, மஹிந்த யாப்பா, மணுஷா நாணயகார, டிலும் அமுனுகம, கீதான்ஜன குணவர்தன, ஜயந்த கெடகொட, சாலிந்த திஸாநாயக்க, வை.ஜீ.பந்மசிறி, மேல்மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூட்டத்தில் பங்குபற்றிய மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார். இதனை கலாநிதி தயான் ஜயதிலக மக்கள் மத்தியில் வாசித்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அவற்றின் சாராம்சம் முற்று முழுதாக இனவாததைக் கக்குவதாக இருந்தன. "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் விருப்புக்கிணங்கவே மைத்திரி அரசு செயற்படுகின்றது. மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் தோன்றும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தெற்கு மக்கள் ஒருபோதும் கைகட்டிப் பார்க்கப்போவதில்லை. இந்நாட்டில் 30 வருட கொடிய போரை முடிவுக்குக் கொண்டு வந்த சிங்கள தலைவனை வடக்கு, கிழக்கு மக்கள் சேர்ந்து தோற்கடித்துள்ளனர். எனினும், சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் மஹிந்த ராஜபக்‌ஷவே தலைவன்" - என்று உணர்ச்சி வசப்படுத்தும் கருத்துக்கள் இந்தக் கூட்ட மேடையில் பேசப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டோர் தமிழ் - முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஏளன வார்த்தைகளைப் பிரயோகித்து கூச்சலிட்டனர். மேடையில் உரையாற்றியோரின் கருத்துக்களை நிகழ்வில் கலந்து கொண்டோர் வரவேற்றனர். நுகேகொடை கூட்டத்தை நடத்தியோரின் அரசியல் கொள்கை இனவாதமே என்பதனை பறைசாற்றும் வகையில் கடும் போக்கு சிங்கள அமைப்புகளான ராவண பலய, சிங்கள ராவய மற்றும் பொதுபலசேன அமைப்புக்களின் பிக்குகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

"நுகேகொடைக் கூட்டத்துக்கு 5 ஆயிரம் பேரையாவது சேர்த்துக் காட்டுங்கள் என அண்மையில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி சவால் விடுத்திருந்தார். இப்போது இந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த பின் என்ன பதில் கூறப்போகின்றார். அவர் தற்போது அரசியலில் செத்த பிணம்" - என்று மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

Nugegoda-meeting-190215-seithy%20(1).jpg

Nugegoda-meeting-190215-seithy%20(2).jpg

Nugegoda-meeting-190215-seithy%20(3).jpg

Nugegoda-meeting-190215-seithy%20(4).jpg

http://seithy.com/breifNews.php?newsID=126833&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடமுள்ள

வெல்லும் ஆயுதம் இது ஒன்றுதான்

அது இனியும் வெல்லும்..

அடுத்த பிரதமர்  மகிந்த தான்

நான் ஏற்கனவே எழுதியது தான்

எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்

முழு அதி உயர் அதிகாரத்துடன் பிரதமராக மகிந்த வந்து உட்காருவார்......

  • கருத்துக்கள உறவுகள்

நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது: சுசில் – அப்போ அடுத்து என்ன மீண்டும் மகிந்த யுகமா?

நுகேகொடையில் புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அக்கூட்டம் வெற்றிலையின் பலத்தை பிரதிபலித்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தனது கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் தனது கடமைகளை இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொருலாளராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.பி நாவின்னவும் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

நுகேகொடையில் புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த கூட்டத்துக்கு செல்வது தொடர்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டியிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116754/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நோமலாய் பாக்கப்போனால் சிங்கள மக்களிடம் மகிந்த தோற்கவில்லை.
 
சந்திரிக்கா அணில் மைத்திரி சம்பந்தன் கூட்டுக்கும் பெரிய வெற்றி எண்டில்லை.
 
 யாருமே அசைக்கேலாத அளவுக்கு மகிந்த மீண்டும் ஆட்சியேறுவா--. :icon_idea:

முழு அதி உயர் அதிகாரத்துடன் பிரதமராக மகிந்த வந்து உட்காருவார்......

ஆகா!!
 
அப்ப அம்புலிமாமா வேதாளம் மறுபடியும் முருங்கமரத்தில் ஏறப்போகின்றதா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கிந்த ராஜபக்ச என்ற வீரனின் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ளது சிறிய இடைவெளி மாத்திரமே. இவ்வாறு கூறியுள்ளார் விமல் வீரவன்ச. நுகேகொடையில் நடந்துவரும் மகிந்த ஆதரவு கூட்டத்தில் உரையாற்றய போதே இதனை தெரிவித்தார்.
“1815இல் கண்டி மன்னன் ராஜசிங்கனை தோற்கடிப்பதற்கு இறுதியில் வெள்ளையர்கள் கைக்கொண்டது பிரச்சார உத்தி. மன்னனை பற்றி அவதூறு பரப்பி மக்களை நம்ப வைத்தனர். அதுபோலத்தான் கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை பற்றி இல்லாத பொல்லாததை சொல்லி, மக்களை நம்ப வைத்தனர். இந்த சூழ்ச்சியை உடைத்தெறிந்து மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம்.
இங்கு பல சுதந்திரக்கட்சிக்காரர்கள் வந்துள்ளனர். ஏனையவர்களையும் ஒன்று திரட்டுவது சிரமமான விடயமல்ல.
மகிந்தவிற்கு தற்பொது நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்து செல்கிறது. தற்போது தேர்தலொன்று நடத்தப்பட்டால், முன்னரைவிட 1 மில்லியன் வாக்குகள் அதிகமாக பெறுவார்.
மகிந்தவை சுற்றியிருந்து பிழையான பாதையில் நடத்தியவர்கள் எல்லோரும் கடந்த தேர்தலின் போது அவரை விட்டு ஓடிவிட்டார்கள். தற்போது அப்படியானவர்கள் இல்லாமல் அவர் பரிசுத்தமான நிலையில் உள்ளார். இந்தநிலையில் அவர் மீண்டும் அரசியலிற்கு வந்தால், நாட்டிற்கு தேவையான சுபீட்சத்தை அடையலாம்.
கடந்த கால தவறுகளை களைந்து புதிய ஆட்சியொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இங்கு பேசப்படும் விடயங்களை ஊடகங்கள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும். எனவே கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒவ்வொருவரும் இங்கு பேசப்பட்டவற்றை உங்கள் ஊர்களில் சென்று சொல்ல வேண்டும்.
மகிந்த ராஜபக்ச என்ற பெயர் தனிமனிதனின் பெயர் கிடையாது. அது நாட்டின் சொத்து. மகிந்த, கோத்தபாய போன்றவர்களின் கௌரவத்தை சீரழிக்க யாருக்கும் இடமளிக்க முடியாது” என்றார்.
இந்த கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், சுதந்திரக்கட்சியின் தடையுத்தரவையும் மீறி பல உறுப்பினர்கள் கலந்து கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. 

இவர்கள் பாடம் கற்றுக்கொண்டது விடுதலைப்புலிகளிடம்....

விடுதலை புலிகள் பாடம் கற்றுக்கொண்டது மகிந்தாவிடம் தான் அதில் அவர்கள் பெருமைப்படுவதில் தவறில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
 
<நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ், முஸ்லிம் மக்கள் கலவரமடைய தேவையில்லை> இந்த நொடியில் என் மனதில்….(19/02/15) ......

நுகேகொடையில் மஹிந்தவாதிகள் நேற்று மாலை நடத்திய கூட்டம் நடைபெற்ற இடம் என் இல்லத்துக்கு மிக சமீபம். உண்மையில் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரும், நடைபெற்ற வேளையிலும் அந்த பகுதியை நெருங்க அனுமதிக்கப்பட்ட தூரத்தில், அடையாளம் தெரியாத முறையில் நான் வாகனத்தில் உலா வந்து, பிரதான உரைகளை நேரடியாக கேட்டேன். (எதிரி என்ன செய்கிறார் என்பதை இயன்ற வரையில் நேரடியாக தெரிந்து கொள்வது என் கூடப்பிறந்த இயல்பு....ஹஹா...!)

மஹிந்தவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் இடம்பெற்று உழைத்த எனக்கு இன்றைய நிலவரம் பற்றி மக்களுக்கு எடுத்து கூறும் கடமை இருக்கிறதாக நம்புகிறேன்.

அங்கே வந்த கூட்டம் அதிகபட்சம் சுமார் ஐந்து முதல் ஆறு ஆயிரங்களுக்கு இடையில் என்பது என் அனுமானம். ஊடக படங்களை கண்டு மிரண்டு விட வேண்டாம். நிழல் படங்களில் ஒரு ஆயிரம் பேர் பத்து ஆயிரமாகதான் தெரிவார்கள். இதை கண்டு மகிந்தவுக்கு எதிராக வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்கள், “மீண்டும் மகிந்த வந்து விடுவாரோ” என கலவரமடைய தேவையில்லை.

பெரும்பாலான மகிந்தவாதிகள் அங்கு வந்தனர். அத்துடன் கணிசமானோர், ஒரு பரபரப்பு ஆவலுடன், என்ன நடக்கின்றது என்பதை காணவும் வந்தனர் என்பது என் அபிப்பிராயம். இது போன்ற சந்தர்ப்பங்களில் வேடிக்கை பார்க்க கணிசமானோர் வருவது ஆச்சரியமானது அல்ல.

எது எப்படி இருந்தாலும் இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றின் உள்விவகாரம். இந்த கூட்டமைப்பில் அல்லது இந்த கட்சியில் ஒரு பிளவு ஏற்பட போவதை இது காட்டுகிறது. அது இந்த நாட்டின் முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு சாதகமானது.

மகிந்த மீண்டும் தலையெடுத்தால் அவரது "ஹிட்-லிஸ்டில்" முதல் மூன்று இடங்கள் (1)மைத்திரி, (2)சந்திரிக்கா (3)நிமல் சிறிபால சில்வா ஆகியோரே இருக்க போகிறார்கள். இது இவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எனவே இவர்கள் மகிந்த வருவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அது முடியாத நிலையில், கட்சி பிளவு படும். எனவே மகிந்தவை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, வேண்டாத வேலைகளை விட்டுவிட்டு, நாம் எமது வேலையை பார்ப்போம்.

இங்கே நான்;

நாம் என்று சொல்வது தமிழ், முஸ்லிம் மக்களை ஆகும்.

வேண்டாத வேலைகள் என்று சொல்வது, சிங்கள பெளத்த இனவாதிகளை தூண்டி விடும் கருத்துகளை சொல்லி காரியமாற்றுவதை தவிர்ப்பது ஆகும்.

எமது வேலை என்று சொல்வது எதிர்வரும் பொது தேர்தலின் போது அதிகூடிய வாக்குகளை பெற்று பலமடைய நாம் தயாராவது ஆகும்.

சிங்களவனிடமுள்ள

வெல்லும் ஆயுதம் இது ஒன்றுதான்

அது இனியும் வெல்லும்..

அடுத்த பிரதமர்  மகிந்த தான்

நான் ஏற்கனவே எழுதியது தான்

எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்

முழு அதி உயர் அதிகாரத்துடன் பிரதமராக மகிந்த வந்து உட்காருவார்......

தேர்தல் முடிய " நான் அப்பவும் எழுதினான் மகிந்தா இனி அரசியலில் தலையெடுக்கமுடியாது" என்று எழுதினான் என்று எழுதிவீர்கள் .சில வருடங்களாக இதுதான் நடக்குது . :lol:

மனோ கணேசனின் கருத்து மிக நிதர்சனமாதும் உண்மையானதும் கூட .

எங்கே  காட்டுங்கள்...

சும்மா எல்லாம் புலுடா விடக்கூடாது...

மக்களின் தீர்ப்பக்கு தலை வணங்கவதாகத்தான் எழுதினேன்.

மற்றும்படி

ஆட்சி  மாற்றம் எதையும் தரும் என நம்பவில்லை

அதேநேரம் தமிழருக்கு மூச்சுவிட நேரம் தருமாயின் அதையும் வரவேற்றேன்

அதேநேரம்

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் இறக்கும் போது சொன்ன வரிகளை நான் ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொள்வேன்

அதில் எந்த மாற்றமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மகிந்த வந்தால் தமிழருக்கு சர்வதேசம் போட்டி போட்டுககொண்டு தீர்வைத் தரும்.சோ கப்பி.

நாய்களுக்கு எங்கு உதைத்தாலும், ஏதோ ஒரு காலைத்தான் தூக்குமாம், அவ்வாறே அர்ஜுன் அண்ணாவும் சுத்திச் சுத்தி சுப்பற்ற்ரை கொல்லைக்குதான் வருவார்.. அர்ஜுன் அண்ணாவின் புலி வருத்தத்தை யாராவது மேற்குலக வைத்திய நிபுணர் மூலம் காண்பித்து சுகப்படுத்த உதவுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

<நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ், முஸ்லிம் மக்கள் கலவரமடைய தேவையில்லை> இந்த நொடியில் என் மனதில்….(19/02/15) ......

நுகேகொடையில் மஹிந்தவாதிகள் நேற்று மாலை நடத்திய கூட்டம் நடைபெற்ற இடம் என் இல்லத்துக்கு மிக சமீபம். உண்மையில் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரும், நடைபெற்ற வேளையிலும் அந்த பகுதியை நெருங்க அனுமதிக்கப்பட்ட தூரத்தில், அடையாளம் தெரியாத முறையில் நான் வாகனத்தில் உலா வந்து, பிரதான உரைகளை நேரடியாக கேட்டேன். (எதிரி என்ன செய்கிறார் என்பதை இயன்ற வரையில் நேரடியாக தெரிந்து கொள்வது என் கூடப்பிறந்த இயல்பு....ஹஹா...!)

நாம் என்று சொல்வது தமிழ், முஸ்லிம் மக்களை ஆகும்.

வேண்டாத வேலைகள் என்று சொல்வது, சிங்கள பெளத்த இனவாதிகளை தூண்டி விடும் கருத்துகளை சொல்லி காரியமாற்றுவதை தவிர்ப்பது ஆகும்.

எமது வேலை என்று சொல்வது எதிர்வரும் பொது தேர்தலின் போது அதிகூடிய வாக்குகளை பெற்று பலமடைய நாம் தயாராவது ஆகும்.

நீங்கள் அடையாளம் தெரியாமல் எதிரிகளை  உளவு பார்க்கும் வேளையில் சில தமிழ்த் தலைமைகள் எதிரிகளுடன் அடுத்த கூட்டணிக்குப் பஞ்சாயம் பார்த்திருப்பார்கள்.

நாம் பலத்துடன் இருக்க வேண்டும் என்றால் பல தமிழ்த்  தலைமைகளின்   தலைகள் உருளவேண்டுமே

நாய்களுக்கு எங்கு உதைத்தாலும், ஏதோ ஒரு காலைத்தான் தூக்குமாம், அவ்வாறே அர்ஜுன் அண்ணாவும் சுத்திச் சுத்தி சுப்பற்ற்ரை கொல்லைக்குதான் வருவார்.. அர்ஜுன் அண்ணாவின் புலி வருத்தத்தை யாராவது மேற்குலக வைத்திய நிபுணர் மூலம் காண்பித்து சுகப்படுத்த உதவுங்கள்.

அண்ணைக்கும் அடி அந்த மாதிரி போல  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மகிந்த வந்தால் தமிழருக்கு சர்வதேசம் போட்டி போட்டுககொண்டு தீர்வைத் தரும்.சோ கப்பி.

இங்கு

மகிந்தவால்

மைத்திரியால் லாப நட்டம் பற்றி பேசவில்லை...

மகிந்த மீண்டும் வருதற்கான சந்தர்ப்பங்களே அதிகம்

அதை கூட்டமைப்பும் அதன் பிரதிநிதிகளும் நன்றாகவே செய்து வருகிறார்கள்...

இன்னும் 5 வருடத்தில் போக இருந்த மகிந்த

குறைந்தது 15 வருடங்கள்   இருக்கப்போகின்றார்

பாவம் தமிழர்கள்

தேனை நக்கவும் நேரம் கிடைக்கவில்லை

தலையில் மீண்டும் மிளகாய்  அரைச்சாச்சு... :(  :(  :(

நீங்கள் சொல்வதுபோல மகிந்தவுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் இருக்கத்தான் செய்கிறது... பிரதமராக.

ஆனால், மீண்டும் பதவிக்கு வந்தால் அடுத்த முறை பெரிதாக ஆட்டம் போட மாட்டார். National Policyகளில் பெரிதாக கைவைக்க மாட்டார்.

அமெரிக்காவுக்கு இணங்கிப்போக பார்ப்பார்.

100 சதவீத அமெரிக்க ஆதரவு மைத்திரியைவிட, குறைந்தபட்சம் 70 சதவீத அமெரிக்க ஆதரவு மகிந்தாவை, வாஷிங்டனுக்கு பிடிக்கும்.

மகிந்த திரும்புவது மகிந்தவை விட இந்த அல்லக்கைகள் தான் அதிகம் விரும்புகின்றன.

இதெல்லாம் நடந்தால் பார்ப்போம்... அதுவரை வேடிக்கை பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

   திரும்பிப்பார்த்த இடமெல்லாம் கடன் வாங்கி, கிராமத்து ஏழை இளைஞர்களை பலிக்கடாவாக்கி, மக்களுக்கு இனவாதமெனும் போதை ஏற்றி, நாட்டை கடன் என்னும் கடலில் மூழ்கவிட்டு, எல்லா நாடுகளின் தயவில் சொந்த நாட்டு மக்களை வகை தொகை இன்றி கொன்றொளித்தவனை, தமிழனை அழித்த ஒரு காரணத்துக்காக எல்லாவற்றையும் மறந்துஅவர்கள் மாவீரன் எனப் பாராட்டுகிறார்கள்.    

அவர்களிடம் இருந்து பாடம் கற்கவேண்டும். காலாலை உதைச்சாலும், காலுக்கு செருப்பாய் இருப்போம் எண்டு அடம்  பிடிக்கும் சூடு, சொரணை கெட்டதுகளை என்ன செய்யலாம்? அதுக்கு விளக்கம் வேறை, தூ .......? இதுகள் என்ன இனம்? 

விடுதலைப்புலிகள் மீது சொல்லமுடியாத கோபத்தில் இருப்பவர்களுக்கு........

சிங்களவன் ஈழத்தமிழருக்கு என்ன அட்டூழியம் செய்தாலும்......

அவர்களுக்கு அது பாலாபிஷேகமாகத்தான் தெரியும்.

கந்தக வாசனையும் சந்தன வாசமாகத்தான் மணக்கும்.

அவர்கள் புலி எதிர்ப்பு/குறை குற்ற விடயத்தில் மாத்திரம் உயிர்ப்போடு இருப்பார்கள். :icon_idea:

ஆனால் ஈழம் சம்பந்தப்பட்ட இதர விடயங்களில் டோய்ங்ங்ங்ங்......

இடி விழுந்தாலும் குண்டூசி விழுந்த பீலிங்தான்  அவையளுக்கு வரும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

9VRayHv.png

சப்பாத்தன், சும்மாந்திரன் போன்ற.... தலைகளும்
இது, போன்று.... இறுக்கப் படும், நாள்  வெகு தொலைவில்  இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

9VRayHv.png

சப்பாத்தன், சும்மாந்திரன் போன்ற.... தலைகளும்

இது, போன்று.... இறுக்கப் படும், நாள்  வெகு தொலைவில்  இல்லை.

அவையள் சந்தோசமிகுதியிலை துள்ளி கட்டிப்பிடிக்கினம்...இதைப்போய் புலன்பெயர் தம்பிமார் சண்டை பிடிக்கிறமாதிரி மாத்தி கதைக்கினம் எண்டு.....எல்லாம் தெரிஞ்ச புலம்பெயர்ந்த அண்ணாமார் சொன்னாலும் சொல்லுவினம்.... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.