Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுவிக்கப்பட்ட வளலாய் கிராமத்தில் காடுகளை தவிர ஏதும் எஞ்சி இருக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுவிக்கப்பட்ட வளலாய் கிராமத்தில் காடுகளை தவிர ஏதும் எஞ்சியிருக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பில் இன்று வெள்ளிக்கிழமை வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவிலுள்ள 232 ஏக்கர் காணிகளை பார்வையிடுவதற்காக 272 குடும்பங்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் காலை பதிவுகளை மேற்கொண்ட மக்கள் பின்னர் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதியினை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 25 வருடங்களிற்கு மேலாக தமது கால்படாத மண்ணை அவர்கள் கண்ணீருடன் இன்று பார்த்தனர். பெரும்பாலும் எல்லைகள் அற்ற காணிகளும் கட்டடங்கள் அற்ற தரவையும் பற்றைகள் படர்ந்த காடுகளுமே அவர்களை வரவேற்றிருந்தது.

வெறுமனே காணிவிடுவிப்பு என்பதற்கப்பால் மீள்குடியமர்விற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டுமென்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.
  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117534/language/ta-IN/article.aspx

  • Replies 62
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சொந்தநிலத்தை ஆர்வமாக பார்வையிட்ட வளலாய் மக்கள்
9e129a8aa9a840418286a34e970e3d82.jpg
கடந்த கால யுத்தத்தில் 1990 ஆம்  ஆண்டு இடம்பெயர்ந்த வளலாய் மக்கள் 25 வருடங்களின்  பின்னர் தங்களுடைய இடங்களை மிகவும் ஆவலாய் பார்வையிட்டனர். 
 
IMG_8200.jpg
 
IMG_8199.jpg
 
IMG_8196.jpg
 
IMG_8197.jpg
 
 
3%28158%29.jpg
 
25 வருடகாலமாக உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு இராணுவத்தேவைக்கான கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளலாய் கிராமம் இன்று மக்கள்  பார்வைக்கு விடப்பட்டது. 
IMG_8179%281%29.jpg
 
புதிய அரசாங்கத்தினால் முதல்கட்டமாக 1000 ஏக்கர் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 
1%28222%29.jpg
 
அதனையடுத்து கடந்த புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்ற அமைச்சின்  தலைவர் ஹரின் பீரிஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் இன்று வளலாய்ப்பகுதிக்கு மக்கள்  சென்று தங்களுடைய இடங்களைப் பார்வையிட முடியும் என்றும் இம்  மாதம் இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவர் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
IMG_8185%281%29.jpg
 
அதற்கமைய இன்று காலை முதல் நண்பகல் வரை வளலாய்ப்பகுதியில் கோப்பாய் பிரதேச செயலரின்  மேற்பார்வையில் அலுவலகர்கள் காணி உரிமையாளர்களுக்கான பதிவினை மேற்கொண்டதுடன் மக்கள்  ஆர்வமாக தங்களுடைய நிலங்களைச் சென்று பார்வையிட்டனர்.
IMG_0654.jpg
 
IMG_0658.jpg
 
IMG_0664.jpg
 
IMG_0660.jpg
 
எனினும் தங்களுடைய நிலங்கள் விடுதலை செய்தமைக்கு நன்றிகளைக் கூறுவதுடன்  மகிழ்ச்சிகளையும் மக்கள்  வெளியிட்டிருந்தனர். 
IMG_0675.jpg
 
குறித்த பகுதிக்கு வடக்கு மாகாண சபையின்  உறுப்பினர் சர்வேஸ்வரன், வலி.வடக்கு தவிசாளர் சுகிர்தனும்  வருகை தந்திருந்தனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=847883915513386764#sthash.fjDBQBVO.dpuf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
IMG_0686.jpg
 
IMG_0683.jpg
 
எனினும்  மிகவும் பற்றைக்காடாக குறித்த பகுதி இருப்பதனால் எல்லைகளைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் வீடுகள் , கிணறுகள் அனைத்தும்  இடிக்கப்பட்டு தரைமட்டமாக உள்ளதாகவும் மக்கள்  கவலை வெளியிட்டுள்ளனர். 
IMG_0693%281%29.jpg
 
IMG_0690.jpg
 
IMG_0703%281%29.jpg
 
IMG_0709.jpg
 
IMG_0712.jpg
 
IMG_0717%282%29.jpg
 
IMG_0728.jpg

எதை எழுதுவது? நான் பிறந்தது முதல் வாழ்ந்த வீடு சிங்களவர்களால் எரியூட்டப்பட்டு ஒரே இரவில் வெளியெற்றப்பட்டேன். ஒரு பத்தாண்டுகள் கழித்து நான் வாழ்ந்த வீடு இருந்த காணிக்குச் சென்ற போது அது காடு பற்றிக் கிடந்தது. ஆனாலும் அந்த மண்ணில் கால் வைத்த போது ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது. அதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. இந்த மக்கள் எத்தகைய உணர்வுகளுக்கு ஆட்பட்டிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

யுத்தம் தந்த பரிசு .

 

யுத்தத்தை ஆதரித்தவர்களும் அதற்கு பணம் கொடுத்தவர்களுக்கும் சமர்ப்பணம் .

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் தந்த பரிசு .

யுத்தத்தை ஆதரித்தவர்களும் அதற்கு பணம் கொடுத்தவர்களுக்கும் சமர்ப்பணம் .

விமானம் ஏறி போராட போனவர்களுக்கு சமர்பணமில்லையோ?

யுத்தம் தந்த பரிசு .

யுத்தத்தை ஆதரித்தவர்களும் அதற்கு பணம் கொடுத்தவர்களுக்கும் சமர்ப்பணம் .

சிறீலங்கா உங்கள் தந்தையர் நாடு எம தாயகம் தமிழீழத்திற்கு தந்த பரிசு என்றும் கூறலாம்

யுத்தம் தந்த பரிசு .

 

யுத்தத்தை ஆதரித்தவர்களும் அதற்கு பணம் கொடுத்தவர்களுக்கும் சமர்ப்பணம் .

 
 
 
யுத்தம்  நிறைவடைந்து 6 வருடமாகிறது. உங்கள் சமாதானத்தின் மூலம் மக்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதங்களை  பட்டியலிட்டு காட்டுமாறு வேண்டி நிற்கிறேன். யோசித்து எழுதுவதற்கு நிறைய ஸ்காட்ச் விஸ்கியும் நிறைய ஐஸ் க்யுபும் தேவைப்படும். துணை உணவாக லோப்ச்ட்டர் எடுத்துக்கொள்ள மறந்துவிடாதீர்.
  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர்ந்து போகேக்க சீலையோட போன சனம் எல்லாம் சிங்களவர் போல், டீசேர்ட்டும், ஸ்கேர்டும், சட்டையுமா நிக்குது. சிலது பஞ்சாபி வேற.

ஐயகோ இது மூளைச்சலவை இல்லையா? இதை யாரும் கண்டிக்கமாட்டர்களா?

எங்க காணோம் சவுண்டுப் பாட்டிகளை :)

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் ஏறி போராட போனவர்களுக்கு சமர்பணமில்லையோ?

நாங்கள் படிச்சனாங்கள் .....

வாயால எப்படி வண்டி ஓட்டுவது என்பது எங்களுக்கு தெரியும்!

இங்கு எனக்கு ஒரு சீதன காணி இருக்கு ....எனக்கு காணியே தெரியாது

எங்கு போய் எல்லையை பிடிக்கிறதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

ஹிருணிக்காவுக்கு வளளாயில் ஏது காணி :)

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழைய காணி பிரச்சனை
அவளும் கனடாவிற்கு போய்விட்டாள்.....

எவளவு கைவேலை செய்தேன் செய்கூலி வேண்டாமா?
என்று ஒருமுறை கேட்டு பார்க்கவேண்டும்.

இது ஒரு பழைய காணி பிரச்சனை

அவளும் கனடாவிற்கு போய்விட்டாள்.....

எவளவு கைவேலை செய்தேன் செய்கூலி வேண்டாமா?

என்று ஒருமுறை கேட்டு பார்க்கவேண்டும்.

சேதாரம் அதிகமாக இருந்தால் செய்கூலி குறயலாம.

  • கருத்துக்கள உறவுகள்

அந்நிய நாட்டு இராணுவ ஆக்கிரமிப்பு என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை சொல்லுது.

 

இதே சிங்கள தேசமாக இருந்திருந்தால்.. இதே இடத்தில்.. ஜே வி பி ஆதரவாளர்கள்.. வாழ்ந்துவிட்டுப் போயிருந்தால்.. சிங்கள இராணும் இந்த அழிவுகளைச் செய்திருக்குமா...?!

 

இது ஒரு இன அழிப்பின்.. இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் அடையாளம். பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட சர்வதேச தரப்புக்களுக்கு காண்பிக்க வேண்டிய ஒன்று. நீதி கேட்க வேண்டிய ஒன்று. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சேதாரம் அதிகமாக இருந்தால் செய்கூலி குறயலாம.

காணிகளும் சீரளிந்துதானே கிடக்கு ....

அப்ப கணக்கு சரியா வரும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தம் தந்த பரிசு .

 

யுத்தத்தை ஆதரித்தவர்களும் அதற்கு பணம் கொடுத்தவர்களுக்கும் சமர்ப்பணம் .

 

சூடுசுரணை இல்லாதவர்களே இப்படி எத்தனை நாட்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றீர்கள்?
 
முடிந்தால் ஆகவேண்டியதை பாருங்கள். இல்லையேல் சுருட்டிக்கொண்டு படுத்திருங்கள்.... :icon_mrgreen:
 
புலி பூசணிக்காயென்று அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்காதீர்கள்.

அவர்கள்தான் தற்போது அங்கு இல்லையே......போய் புனருத்தாரணம் செய்யவேண்டியத்து தானே..

த்

 

சூடுசுரணை இல்லாதவர்களே இப்படி எத்தனை நாட்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றீர்கள்?
 
முடிந்தால் ஆகவேண்டியதை பாருங்கள். இல்லையேல் சுருட்டிக்கொண்டு படுத்திருங்கள்.... :icon_mrgreen:
 
புலி பூசணிக்காயென்று அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்காதீர்கள்.

அவர்கள்தான் தற்போது அங்கு இல்லையே......போய் புனருத்தாரணம் செய்யவேண்டியத்து தானே..

த்

 

யுத்தத்தின் வடு பற்றி எழுதினால் நீங்கள் புலி பூனை என்று ஒப்பாரி வைக்கின்றீர்கள் .உடனே போய் புனருத்தாரணம் செய்யும் அளவிலா அவர்கள் அரசியல் செய்துவிட்டு போயிருக்கின்றார்கள் .

தமிழர்களை சிங்கள அரசிடம் அடைவு வைத்துவிட்டு தொலைந்துவிட்டார்கள் .இனி இணக்கம் கண்டு மீள்கட்டுமானம் செய்யத்தானே இவ்வளவு பாடும் படுகின்றார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தத்தின் வடு பற்றி எழுதினால் நீங்கள் புலி பூனை என்று ஒப்பாரி வைக்கின்றீர்கள் .உடனே போய் புனருத்தாரணம் செய்யும் அளவிலா அவர்கள் அரசியல் செய்துவிட்டு போயிருக்கின்றார்கள் .

தமிழர்களை சிங்கள அரசிடம் அடைவு வைத்துவிட்டு தொலைந்துவிட்டார்கள் .இனி இணக்கம் கண்டு மீள்கட்டுமானம் செய்யத்தானே இவ்வளவு பாடும் படுகின்றார்கள் .

 

டக்ளஸ் சித்தார்த்தன் கடவுள்கருணா எல்லாரும் அங்கைதானே இருக்கினம்?

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் வடு பற்றி எழுதினால் நீங்கள் புலி பூனை என்று ஒப்பாரி வைக்கின்றீர்கள் .உடனே போய் புனருத்தாரணம் செய்யும் அளவிலா அவர்கள் அரசியல் செய்துவிட்டு போயிருக்கின்றார்கள் .

தமிழர்களை சிங்கள அரசிடம் அடைவு வைத்துவிட்டு தொலைந்துவிட்டார்கள் .இனி இணக்கம் கண்டு மீள்கட்டுமானம் செய்யத்தானே இவ்வளவு பாடும் படுகின்றார்கள் .

சங்கலி மன்னன்  பண்டாரவன்னியன் விட்டு போனதை சரி செய்யவே புலிகளுக்கு முப்பது வருடம் போச்சு.......
சங்கிலி மன்னனின் அரசியல் அறிவில்லாத போரால் புலிகள் அழிந்து போனார்கள். 

வளலாயிலிருந்து கொழும்பு மிரருக்காக ஜெரா

 

“இருபத்தைஞ்சு வருசத்துக்குப் பிறகு ஊர் பாக்கப் போறம், வீடு பாக்கப் போறம், தென்னம்மரங்களைப் பாக்கப்போறம், எங்கட கடலைப் பாக்கப் போறம்”என்கின்ற கதைகளுடன் மக்கள் வளலாய் என்கிற கிராமத்தின் வாசலில் அமர்ந்திருக்கின்றனர்.
 
வளலாய் – இலங்கையின் வடக்குப் பாகத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின், வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமம். இந்தக் கிராமத்தவர்கள் 1986 இல் ஓர் இடப்பெயர்வை சந்தித்து, 1987 இல் மீளவும் குடியேறினார்கள். மீளவும் 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் இணைந்து நடத்திய தாக்குதலில் வளலாய் கிராமம் முற்றாக அழிந்தது.

 

Valalai10.jpgஒன்றரை கிலோமீற்றர் பின்நகர்ந்திருக்கிறோம்

 

யாழ்ப்பாணத்தின் வட கடலின் ஓரமாக இருக்கும் பலாலி என்கின்ற பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இராணுவத்தினர் இந்தக் கிராமத்தைவிட்டும் மக்களை வெளியேற்றினார்கள். 1990 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 13 ஆம் திகதியிலிருந்து இன்று வரை வளலாயும் இலங்கை இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அடங்கியிருந்தது. அதற்குள் இராணுவம் மட்டுமே நிலைகொண்டிருந்தது.
 
இன்றைய நாள் வளலாய் கிராமம் தன் மக்களை சந்தித்தது. இனிய நினைவுகளுடனான அந்த சந்திப்புக்காகத்தான் பல தலைமுறையினரும் கிராமத்தின் வாசலில் குழுமியிருக்கின்றனர். வளலாயில் பிறந்தவர்கள், ஊரைவிட்டு வெளியேறிய பின் பிறந்தவர்கள், சொந்த ஊரையே அறிந்திராத பேரக்குழந்தைகள் எனப் பல தலைமுறையினரும் ஊருக்குள் நுழைவதற்காக, இன்று காலை தொடக்கமே காத்திருந்தனர்.
 

Valalai21.jpgஊர்போகக் காத்திருத்தல்

 

 

Valalai20.jpgகாத்திருக்கும் நேரத்தில் ஐயாவுக்கு சிறுபசி

 

 

 

Valalai18.jpgதலைமுறைகள் தாண்டிய ஊர் செல்லும் பதிவு

 

 

Valalai19.jpg

இனிப் பதிய இடமில்லை

 

ஊருக்குள் நுழைவதற்கான பதிவுகள், காலை 9.மணிக்கு ஆரம்பமாகிவிட்டது. நீண்டகால காத்திருப்பின் களைப்பிலும், இதுபோன்ற பதிவுகளினால் ஏற்கனவே பட்ட ஏமாற்றங்களினாலும் சலிப்புத்தனத்துடனேயே அந்தப் பதிவையும் அவர்கள் மேற்கொண்டார்கள். இந்த ஊருக்குள் நுழைவதற்காக எத்தனை போராட்டங்கள்…!
10.40 மணிக்கு உள்ளே செல்ல இராணுவம் அமைத்திருந்த கிராமத்துக்குள் நுழைவதற்கான தடைப்பொறியை திறந்துவிட்டது. அத்துடன், அந்த இடத்தில் இராணுவம் அமைத்திருந்த காவலரணையும் அகற்றியது. கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் ஜே/284 கிராம அலுவலர் பிரிவில் உள்ள 236 ஏக்கர் நிலத்துக்குள் மக்கள் பாதம் பட்டது.
 
“இந்த இடம்தான் என்ர வீடு..இல்ல இ்ல்ல இதுக்கு அங்கால தான் என்ர வீடு..இதுவுமில்ல..ஐயோ அடையாளத்தையே காணேல்லயே..அட வெறும் கும்பியா கிடக்கு” வீதிக்குள் இறங்கிய முதிர் பெண்ணொருவர் இப்பிடித்தான் வீட்டைத் தேடினார். இறுதியில் அவரது வீடு இடித்து நொருக்கி ஒரு ஓராமாக குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். அது பெரிய மலையளவு கற்கும்பல்..!
 
 

Valalai13.jpgஊருக்குத் திறந்துவிட்டாச்சு

 

 

Valalai17.jpgஜேஜே என்று ஊருக்குள் இறங்குகின்றோம்

Valalai14.jpg25 வருடங்களுக்குப் பின்னரான பிரவேசம்

 

Valalai15.jpgமிதிவெடி கவனம், கூட்டம்

 

கந்தையா என்கிற 74 வயது ஐயாவும் வீதியோரமாகத் தன் வீடு இருப்பதைக் கண்டார். இராணுவம் குடிகொண்டிருந்தமைக்கான சான்றுகள் அதனுள் உண்டு. அவர் அது தன்னுடையது என்று சொல்லி, ஆசையுடன் தொட்டுத் தடவிக்கொண்டிருக்கையில் இன்னும் சிலர் வந்தார்கள், “இது உங்கட வீடில்ல, …..அக்காவின் வீடு” என்றார்கள். 74 வயதான அவர் வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினார்.
 
”இந்த இடம் எல்லாம் ஒரே தென்னந்தோட்டம், மாடி வீடு என்ர”என்கிறவர் காட்டும் திசையில் வேட்டையாடத்தக்க பெருங்காடே முளைத்திருந்தது. அந்தக் காட்டுக்குள் வீடுகள், மதில்கள், அனைத்தும் அழிந்துவிட்டன. மறைந்துவிட்டன. யாராலும் நுழையமுடியவில்லை.
 
வீதியின் மறுபக்கம், பெரு வெளியாக சில ஏக்கர் நிலம் கிடக்கிறது. அதற்குள்ளும் மக்கள் இறங்கி தம் காணிகளை தேடுகின்றனர். தத்தம் காணிகளுக்கு எல்லை அடையாளமாக இருந்த மரங்களை, கோயில்களை தேடுகின்றனர். வறண்ட பற்றைக்காடுகளைத்தவிர எந்த அடையாளமும் இல்லை. காணிகளுக்கு எல்லையுமில்லை. காணிகளின் உறுதிகளை மட்டும் வைத்திருக்கின்றனர். ஆனால் காணியை காணவில்லை. ஒருவித ஐயப்பாட்டுடனேயே “இது என்ர காணி” என உரிமைகோருகின்றனர்.
 

Valalai12.jpgவேலியோரமாக நடந்தால் ஊர் வருமாம்!

Valalai6.jpgஊர் நோக்கிப் பயணித்தவருக்கு வயதில்லை

 

Valalai16.jpgதென்னந்தோட்டங்கள் இருந்த காணி

 

 

அவர்களுடன் பயணித்துக்கொண்டிருப்பவர்களில் வடக்குமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரனும் ஒருவர். “காணிகளுக்கு எல்லையே இல்ல, எப்பிடி காணிகள குடுக்கப்போறியள்?” என்றேன். ஓம். சனங்களிட்ட உறுதியள் இருக்கு. அதை வச்சிக்கொண்டு, காணி தொடர்பான உத்தியோகத்தர்கள் காணிகளக் கண்டுபிடிப்பினம்.
 
இனி அந்த நடவடிக்கைகள்தான் நடக்கும். இப்பிடியே விட்டால் இனி இங்க பெரும் பிரச்சினைதான் நடக்கும். சனம் இவ்வள நாளும் ஆமிட்ட இருந்து காணிகள எடுக்க போராடினதுகள். பிறகு எங்களுக்குள்ளயே காணிகளுக்காக போராடுங்கள். ”காணி இல்லாத ஆக்களுக்கு”- மறு கேள்வியையும் போட்டேன். அப்பிடி யாரும் இல்ல. இங்க இருந்து வெளியேறின ஆக்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு காணிகள் இருக்காதுதான். காணி கச்சேரிகள்தான் அதுக்கான ஒழுங்குகள பாக்க வேணும். வன்னிப் பக்கம் குடியேற்றங்கள செய்யலாம்.
 
“இதென்ன செவ்வகம் செவ்வகமா தொடர்ச்சியா காணியள பிரிச்சி வச்சிருக்கிறாங்கள்”, என்றார் ஒரு முதியவர். அந்தக் கேள்விக்கும் சர்வேஸ்வரனே பதில் சொன்னார். இது முதல் இருந்த அரசாங்கத்தின்ர ப்ளான். (மஹிந்த அரசு) வலி. வடக்கில் ஆயிரம் ஏக்கர் குடியேற்றம் எண்டு இதைத்தான் சொன்னவங்கள். அதாவது இந்தக் காணியள, நீங்கள் பாக்கிறமாதிரி இரண்டு இரண்டு பரப்பாகப் பிரிச்சு எல்லாரையும் இங்கயே குடியேத்திவிடுறது. இதுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிச்சித்தான், இப்ப வளலாய் பகுதிய விட்டிட்டாங்கள்” என்று பதிலளித்தார்.
 

Valalai9.jpgவேலிக்கு அந்தப் பக்கம் வீடு

 

Valalai8.jpgஇந்த மருதமரத்தடிக்கு அங்கால குளம்

 

Valalai7.jpgஅங்க இருக்கு காணி,..இங்க இருக்கும் காணி..!

 

Valalai1.jpgகாணி உரிமம் உண்டு

 

 

அந்தக் கதைக்கு மேலாக பயணிக்க பாதை நீளவில்லை. குறுக்காக கம்பிவேலியை அமைத்து இராணுவம் நிற்கிறது. இப்போது தடையாக மண் அணை போடவில்லை. வளலாயக் கிராமத்தின் எல்லையுடன் சேர்ந்து நீளமான முட்கம்பி வேலியை அமைத்திருக்கிறார்கள். அதற்கு மறுபக்கம் யாரும் செல்ல முடியாது. அதற்குள் அகப்பட்ட காணிகளுக்கு சொந்தமானவர்கள், முட்கம்பி வேலிக்கு இந்தப் பக்கமாக இருந்து காணிகளைத் தேடினர்.
 
“இந்த மரத்தடியில் பெரிய குளம் இருந்தது. குளத்தடியில ஒரு பிள்ளையார் கோயிலும் இருந்தது. மேய்ச்சல் தரையும் இருந்தது. கொஞ்சம் விட்டிருந்தால் நானும் என்ர வீட்டுக்குப் போயிருப்பன், சாகமுதல் காணியப் பாத்திருப்பன்” – மருதமரத்தடியில் கூடியவர்கள், அந்த வேலிக்கு அப்பாலான காணிக்கு போக முடியாதவர்களாக ஏமாற்றத்துடன் புலம்பிக்கொண்டிருந்தனர்.
 
வேலியோரமாகவே நடந்து, வேறு இடங்களுக்கு போக முடியுமா என்று சிலர் நடக்கத் தொடங்கினர். போன வேகத்தில் திரும்பி வந்தனர். மனிதர்கள் கடக்கவேமுடியாத முட்புதர்களாக அவர்களின் ஊர் மாறிவிட்டதாம்..! களைப்பையும், சோர்வையும், ஏமாற்றத்தையும் தாங்கிய அந்த மக்கள் இப்போது ஊரிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இனி அவர்கள் ஊர் திரும்பவேண்டும்.
 

Valalai2.jpgஅந்தப் பக்கம் என் காணி

 

Valalai31.jpgகாணியைத் தேடுகிறோம்

 

Valalai4.jpgஎங்கள் வீட்டுக் கிணறு மிஞ்சியது

 

 

Valalai11.jpg

காணியைக் கண்டுபிடிக்க முடியாத வெறுமை முகம்

 

 


http://www.colombomirror.com/tamil/?p=3538

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

 

சூடுசுரணை இல்லாதவர்களே இப்படி எத்தனை நாட்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றீர்கள்?
 
முடிந்தால் ஆகவேண்டியதை பாருங்கள். இல்லையேல் சுருட்டிக்கொண்டு படுத்திருங்கள்.... :icon_mrgreen:
 
புலி பூசணிக்காயென்று அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்காதீர்கள்.

அவர்கள்தான் தற்போது அங்கு இல்லையே......போய் புனருத்தாரணம் செய்யவேண்டியத்து தானே..

த்

 

கொடுக்கன் தனது அன்பைக் காட்ட முயன்றாலும் அதனால் கொட்டித்தான் காட்ட முடியும். விலகிச் செல்வதே நல்லது.

இடம்பெயர்ந்து போகேக்க சீலையோட போன சனம் எல்லாம் சிங்களவர் போல், டீசேர்ட்டும், ஸ்கேர்டும், சட்டையுமா நிக்குது. சிலது பஞ்சாபி வேற.

ஐயகோ இது மூளைச்சலவை இல்லையா? இதை யாரும் கண்டிக்கமாட்டர்களா?

எங்க காணோம் சவுண்டுப் பாட்டிகளை :)

விருந்து வைச்சு அழைக்கிறார்கள் போல. பொழுது போகல்லையா? பிறகு அவர்களுக்கு பதில் சொல்லும் சாக்கில் நீங்க சவுண்டு விடலாமெல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் வடு பற்றி எழுதினால் நீங்கள் புலி பூனை என்று ஒப்பாரி வைக்கின்றீர்கள் .உடனே போய் புனருத்தாரணம் செய்யும் அளவிலா அவர்கள் அரசியல் செய்துவிட்டு போயிருக்கின்றார்கள் .

தமிழர்களை சிங்கள அரசிடம் அடைவு வைத்துவிட்டு தொலைந்துவிட்டார்கள் .இனி இணக்கம் கண்டு மீள்கட்டுமானம் செய்யத்தானே இவ்வளவு பாடும் படுகின்றார்கள் .

 

புலிகளுக்கு முன் கையில் சிவப்புப்புத்தகமும் கூட்டமும்...

புலிகள் காலத்தில் விடுகிறார்களில்லை

இப்பொ 6 வருடமா  சாதாரணநிலை வரல..

 

எப்ப செயல்.....??

இம்மக்கள் தாங்கள் பிறந்து தவழ்ந்த வீட்டையும், விளையாடிய முற்றத்தையும், தண்ணீர் ஊற்றி வளர்த்த தென்னம்பிள்ளையையும், அணில் கொறித்த பழத்தைப் ஏறிப் பறித்த மாமரத்தையும் ஏக்கத்துடன் பார்த்து அங்கலாய்கிறார்கள். முகங்களில் உள்ள வெறுமை 25 வருட எதிர்பார்ப்பு ஒரு நொடியில் கானல் நீரானதை பிரதிபலிக்கின்றது. 
 
வேறு என்னத்தை சொல்ல. இதுவும் கடந்து போகும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தம் தந்த பரிசு .

 

யுத்தத்தை ஆதரித்தவர்களும் அதற்கு பணம் கொடுத்தவர்களுக்கும் சமர்ப்பணம் .

 

அது அப்போ

 

 

இது இப்போ

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.