Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் புதுமையான திருமண வைபவம்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் புதுமையான திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

மரங்களை அழித்து முற்றம் முழுவதும் சீமெந்திட்ட நிலையில் அழகிய யாழ்ப்பாணம் பங்குனி வெய்யிலால் கொளுத்துகிறது. இந்நிலையில் இன்று நடந்த திருமண நிகழ்வொன்றில் மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாக ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் விநியோகித்தமை புதிய சிந்தனையை தூண்டியுள்ளது.

 

நாச்சிமார் கோவிலில் நடந்த இத்திருமணத்தில் கொய்யாதேசி, மாதுளை, நெல்லி என பலவகை பயந்தரு மரக்கன்றுகள் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டன. திருமண நிகழ்விற்கு வந்தோர் மட்டுமன்றி வீதியால் சென்றோரும் இக்கன்றுகளை ஆர்வத்துடன் எடுத்துச்சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

 

மரக்கன்றுகள் ஒவ்வொன்றிலும் தயவு செய்து என்னையும் பலரையும் பயிரிட்டு பயன் பெறுங்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

 

மணமக்கள் வைத்தியர் மற்றும் பொறியியலாளர் என்பதுடன், இவர்கள் உயர்தரப்பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் முதல் நிலையும் அகில இலைங்கை ரீதியிலும் முன்னணி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேவையற்ற ஆடம்பர செலவுகள் செய்யும் ஏனைய திருமண வைபவங்களும் இவர்களது சிந்தனையை பின்பற்றினால் யாழ் மற்றும் அண்டிய பிரதேசங்களில் தற்போது நிலவும் வறட்சிக்கும், வெப்பநிலை உயர்விற்கும் ஓரளவேனும் தீர்வு காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இ்ச் செய்தியை நிச்சயம் நீங்கள் மற்றவர்களுக்கும் அறியச் செய்து மரம் நாட்டும் நடவடிக்கையை ஊக்குவியுங்கள் வாசகர்களே!!!

 

10003991_805110042905345_742568269566987

 

11108862_805110012905348_503391560164608

http://newtamils.com/fullview.php?id=15376

 

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள அன்பளிப்பு ...வாழ்க மணமக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க வாழ்க வைத்தியர்-பொறியியலாளர் தம்பதிகள்! கொம்பினேசன் நல்லா இருக்கு :D இப்பிடி நிறையப் பேர் இணையவேண்டும்! :rolleyes:

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலி கொப்டரில் மணமக்கள் வந்திறங்கும் திருமணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்,

உயர்தர விருந்துபசாரம் என்று 50´000 டொலர் செலவழித்து செய்யும் திருமணங்களை விட....
ஆயிரக் கணக்கான பயனுள்ள மரங்களை அன்பளிப்பு செய்த.... இந்தத் தம்பதிகளின் திருமணம் உள்ளத்தை தொட்டது.
நீடூழி வாழ்க...  மணமக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலி கொப்டரில் மணமக்கள் வந்திறங்கும் திருமணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்,

உயர்தர விருந்துபசாரம் என்று 50´000 டொலர் யூரோ செலவழித்து செய்யும் திருமணங்களை விட....

ஆயிரக் கணக்கான பயனுள்ள மரங்களை அன்பளிப்பு செய்த.... இந்தத் தம்பதிகளின் திருமணம் உள்ளத்தை தொட்டது.

நீடூழி வாழ்க...  மணமக்கள்.

 

  • தொடங்கியவர்

 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில், உயர்தர விருந்துபசாரம் 

ஐந்து நட்சத்திர ஹோட்டல் ல விருந்து சாப்பிடலாம் மீண்டும் அடுத்தநாள் பசிக்கும். அந்த பசியுடன் முதல்நாள் விருந்தும் மறந்து போகும். பிறகு எங்கை அந்த கலியாணம் ஞாபகத்தில் நிக்கும். ஆனால் இந்த கலியாணம் இந்த மரங்கள் உள்ளவரை நினைவு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான சிந்தனை..! மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

பசுமைப்புரட்சியாளர்களுக்கு வாழ்த்துக்கள்

 

மரங்களைக் கொண்டு சென்றவர்கள் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றி அவற்றைப் பராமரிக்கின்றார்களா எனவும் கண்காணிக்க வேண்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க மணமக்கள்...! நல்ல சிந்தனை...!! :)

  • தொடங்கியவர்

என்ன வாத்தியார், ஆடு, மாடு கடிக்காமல் பார்த்துக்கொள்ள தேவையில்லையா

சும்மா தமாசுக்கு :lol:

உங்கட மாணவர்களையும் ஊக்கிவியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வாத்தியார், ஆடு, மாடு கடிக்காமல் பார்த்துக்கொள்ள தேவையில்லையா

சும்மா தமாசுக்கு :lol:

உங்கட மாணவர்களையும் ஊக்கிவியுங்கோ

வாத்தியாரின் உண்மைத்தோற்றம் விக்கிலீக்சில் வெளியானதால் மாணவர்கள் அடங்கினம் இல்லையாம்.. :wub::D

  • கருத்துக்கள உறவுகள்

இதோட.. உவை இரண்டு பேரும்.. பிள்ளையைப் பெறாமல்.. தென்னம்பிள்ளையை வாங்கி வளர்த்தால்.. பின்னாடிக்கு பயன் தரும். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உயர்வான சிந்தனை. மணமக்கள் வாழ்வும் பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனியாக வாழ்த்துக்கள்!! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உதெல்லாம் எங்கடை சனங்களுக்கு சரியே வராது.......எங்கடை சனம் எப்பவும் கப்பல் நினைப்பிலை  காலத்தை கொண்டு போறசனம் கண்டியளோ.....
 
உப்புடித்தான் கனகாலத்துக்கு முந்தி மில்க்வைட் சோப் கனகராசா முதலாளியும் ஊர் ஊராய் பனங்கொட்டை குடுத்து பனைமர வளர்ச்சிக்கு பாடுபட்டவர். அப்ப அவரை பனங்கொட்டை பொறுக்கி எண்டு கேவலம் பண்ணின சனமும் இருக்கு.....ஏன் இப்பவும் வடலிக்கு பின்னாலை குந்தின சனம் எண்டு நக்கலடிக்கிறவை இஞ்சையும் இருக்கினம்தானே.
 
முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த பாரிவள்ளல் பரம்பரைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.