Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயூரன் சுகுமாரன் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Featured Replies

இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.   குற்றச்சாட்டப்பட்ட 9 பேரில் ஒருவரின் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

மேலும் செய்தி விரைவில்

http://www.pathivu.com/news/39625/57/8/d,article_full.aspx

  • Replies 60
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேஷியா: எட்டுபேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்; ஒருவருக்கு ஒத்திவைப்பு

இந்தோனேஷிய நீதிமன்றத்தால் போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எட்டுபேரின் மரணதண்டனையும் செவ்வாய்க்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும்படி சர்வதேச அளவில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, மத்திய ஜாவா தீவில் இருக்கும் சிறைக்குள் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பிறகு (புதன்கிழமை துவங்கிய சமயம்) இவர்களின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இவர்களுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது நபரான பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த மேரி ஜேன் வெலொசோ என்கிற பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

போதைமருந்தை கடத்துவதற்கான கருவியாக மேரி ஜேன் வெலொசோவை தான் பணியில் அமர்த்தியதாக கூறி பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்நிலையத்தில் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, மேரிக்கான மரணதண்டனை நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட எட்டு ஆண்கள் ஆஸ்திரேலியா, பிரேசில், நைஜீரியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள்.

தனது குடிமக்களான இருவர் மரணதண்டனையில் கொல்லப்பட்டால் அதற்கான எதிர்வினைகளுக்கு இந்தோனேஷியா முகம் கொடுக்கவேண்டி வரும் என்று ஆஸ்திரேலியா எச்சரித்திருந்தது. ஆனால் குற்றவாளிகளை தண்டித்து தடுப்பதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாக இந்தோனேஷியா தெரிவித்திருக்கிறது.
http://www.bbc.co.uk/tamil/india/2015/04/150428_indonesiaexecutions

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

மயூரன் சுகுமாரன் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும் ஏனைய அறுவருக்கும் சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.

thukku.JPG

ஐ.நா. உயரதிகாரிகள், அவுஸ். அதிகாரிகள், பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், உறவினர்கள், கருணை உள்ளம் கொண்ட மக்கள் என சர்வதேச அளவில் அனைவரும் இந்தோனேசிய அரசிடம் தண்டனையை ரத்து செய்யுமாறு கேட்டபோதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசாங்கம்.

எனினும் இவர்களுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது நபரான பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த மேரி ஜேன் வெலொசோ என்னும் பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

போதைமருந்தை கடத்துவதற்கான கருவியாக மேரி ஜேன் வெலொசோவை தான் பணியில் அமர்த்தியதாக கூறி பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்நிலையத்தில் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, மேரிக்கான மரணதண்டனை நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.

எனினும் பிலிப்பைன்ஸ் அரசு, இந்தோனேஷிய Attorney-General-க்கு மரண தண்டனையை தடை செய்யுமாறு ஒரு அவசர கடிதத்தை அனுப்பியமையை அடுத்தே இப்பெண்ணின் தண்டனை இறுதி நேரத்தில் தள்ளிப் போயிருக்கின்றது.

ஏனைய எண்மரும், அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை, இந்தோனேசியா, மற்றும் நைஜீரியா, பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள்  ஆவார்கள்.

தனது குடிமக்களான மயூரன் , மற்றும் சான் ஆகியோர் மரணதண்டனையில் கொல்லப்பட்டால் அதற்கான எதிர்வினைகளுக்கு இந்தோனேஷியா முகம் கொடுக்கவேண்டி வரும் என்று அவுஸ்திரேலியா எச்சரித்திருந்த போதிலும்  குற்றவாளிகளை தண்டித்து தடுப்பதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாக இந்தோனேஷியா தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

 

http://www.pathivu.com/news/39625/57/8/d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்
இதற்கு பதிலாக யாரவது இந்தோனேசிய பிரஜையை வேறு நாடுகள் 
தூக்கில் போடாது பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
அரசியல் விளையாட்டில் வீணாக மனித உயிர்கள் ..............
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் நிறைந்த இந்தோனிசியாவில் எத்தனை அரசியல்வாதிகளை.. அரச.. மற்றும் நீதித்துறை ஆட்களை.. இப்படி சுட்டுக்கொல்ல முன்வருவார்கள். போதைவஸ்தை விடக் கொடுமையானது.. மக்களின் பணத்தை திருடி மக்களை பட்டினி போட்டுக் கொல்லும் ஊழல். போதைவஸ்தில் இருந்து மீளலாம்.. ஆனால்.. ஊழலில் இருந்து மீள வழி இருக்கா..??!

 

இந்தோனிசியா போன்ற முஸ்லிம் காட்டிமிராண்டி நாடுகளை உலகில் நாகரிகம் விரும்பும் மக்கள் நிராகரிப்பதோடு அந்த நாட்டுக்கு உல்லாசப் பயணம் போவதை தவிர்க்க வேண்டும்.

 

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களிடம் காசு வாங்கிக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்குள் நுழையவிடும்.. இந்தோனிசியாவின் வண்டவாளம் உலகம் அறிந்ததே..! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்த்திரேலியா பொலிசார் கொடுத்த துப்புத் தகவலின்படிதானே பாலியில் இவர்களைப் பிடித்தார்கள். அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட உலகில் பல நாடுகளில் மரணதண்டனை அதியுச்ச தண்டனையாக இருக்கின்றது. அமெரிக்காவிலும், சீனாவிலும் பலர் ஒவ்வொரு வருடமும் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இவற்றினை எந்த மனிதவுரிமை அமைப்புக்களாலும் தடுத்து நிறுத்தமுடியுமா?

இந்தோனேசியாவில் ஊழல்கள், முறைகேடுகள் இருந்தாலும், அதனைக் காரணம் காட்டி தண்டனையை இரத்துச் செய்ய அழுத்தம் கொடுத்துத் தோல்வியடைந்ததுதான் அவுஸ்த்திரேலிய அரசுக்குப் பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா துப்பாக்கியால் ஆளப்படும் தேசம். வெளிப்பூச்சுக்கு தான் ஜனநாயகம் அங்கும். விசாரணைகள் இன்றியே கறுப்பினத்தவர்களை சுட்டுக்கொல்வதில் இருந்து அமெரிக்காவின் வண்டவாளம் உலகறியும்.

 

சீனா சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடக்குமுறைகளுக்கு மத்தியில் மக்களை வைத்திருக்க விரும்பும்.. அரசு முறை அங்கு.

 

ஐநா பாங்கி மூன் கேட்டும் தண்டனையை பிற்போடாத இந்தோனிசிய அரசு.. மணிலாவில் இருந்து வந்த ஒரு அழைப்பை அடுத்து ஒருவருக்கான தண்டனையை இடை நிறுத்தி உள்ளது. அதெப்படி... அதுவும்.. குறித்த பெண்மணி கருவி.. நான் தான் காரணம் என்று ஒருவர் மணிலா அரசிடம்.. சரணடைந்துள்ளாராம். அப்படி என்றால்.. இன்று மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு.. வழங்கப்பட்ட தீர்ப்புகள் நியாயமானவை தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்..????! :rolleyes::icon_idea: :icon_idea:

 

Filipina woman Mary Jane Fiesta Veloso was also due to be executed, but this was delayed after a request by the Philippine president, a spokesman from the attorney general's office told the BBC.

 

The request came after someone suspected of framing Veloso to carry heroin into Indonesia surrendered to police in the Philippines, the spokesman went on.

'A miracle'

Indonesia would give Veloso the chance to testify as a witness in the trial in the Philippines, the spokesman said.

Her mother described the last minute reprieve as a "miracle".

 

http://www.bbc.co.uk/news/world-asia-32501712

 

 

 

Edited by nedukkalapoovan

https://www.facebook.com/9NewsPerth/videos/1013033475375479/

 

 

There is no reprieve, no hope, for two Australians facing execution tonight. Bali Nine duo Andrew Chan and Myuran Sukumaran are now hours away from facing the firing squad.

Edited by BLUE BIRD

சட்டம்  தன்  கடமையை  செய்தது  வாழ்த்துக்கள்  வல்லரசுகளுக்கு  வளைந்து  கொடுக்காது  நின்ற இந்தனேசிய  ஜனாதிபதிக்கு ...

 

இறந்த  அனைவருக்கும் ஆழ்த்த இரங்கல்கள் .

 

 

 

 

 

அமெரிக்கா துப்பாக்கியால் ஆளப்படும் தேசம். வெளிப்பூச்சுக்கு தான் ஜனநாயகம் அங்கும். விசாரணைகள் இன்றியே கறுப்பினத்தவர்களை சுட்டுக்கொல்வதில் இருந்து அமெரிக்காவின் வண்டவாளம் உலகறியும்.

 

சீனா சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடக்குமுறைகளுக்கு மத்தியில் மக்களை வைத்திருக்க விரும்பும்.. அரசு முறை அங்கு.

 

ஐநா பாங்கி மூன் கேட்டும் தண்டனையை பிற்போடாத இந்தோனிசிய அரசு.. மணிலாவில் இருந்து வந்த ஒரு அழைப்பை அடுத்து ஒருவருக்கான தண்டனையை இடை நிறுத்தி உள்ளது. அதெப்படி... அதுவும்.. குறித்த பெண்மணி கருவி.. நான் தான் காரணம் என்று ஒருவர் மணிலா அரசிடம்.. சரணடைந்துள்ளாராம். அப்படி என்றால்.. இன்று மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு.. வழங்கப்பட்ட தீர்ப்புகள் நியாயமானவை தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்..????! :rolleyes::icon_idea: :icon_idea:

 

Filipina woman Mary Jane Fiesta Veloso was also due to be executed, but this was delayed after a request by the Philippine president, a spokesman from the attorney general's office told the BBC.

 

The request came after someone suspected of framing Veloso to carry heroin into Indonesia surrendered to police in the Philippines, the spokesman went on.

'A miracle'

Indonesia would give Veloso the chance to testify as a witness in the trial in the Philippines, the spokesman said.

Her mother described the last minute reprieve as a "miracle".

 

http://www.bbc.co.uk/news/world-asia-32501712

 

 

 

நெடுக்கர் அமெரிக்காவில் துப்பாக்கி இல்லாமல் பிழைக்க முடியாது.  :D
துப்பாக்கி வைத்திருப்பது ஒவ்வொரு அமெரிக்கனின் அடிப்படை பிறப்புரிமை.
அதனால் தான் இன்று அமெரிக்கன் வல்லரசாக இருக்கிறான். நாங்கள் எல்லாரிடமும் அடி வாங்கிகொண்டிருக்கிறம். :(
அமெரிக்கன் துப்பாக்கி வைத்திருந்தபடியால தான் சுதந்திர போரில் சாதரண விவசாயிகள் கொடுத்த கொரில்லா பாணி அடியில
ஆனானப்பட்ட இங்கிலாந்துகாரனே துண்டை காணம் துணியை காணம் என்டு ஓடினவன். :lol:
அமெரிக்கன் காந்தியை போல பிரிட்டிஷ்காரனிடம் சுதந்திரத்தை பிச்சையெடுத்து வாங்கவில்லை. :icon_idea:
அமெரிக்கன் பிரிட்டிஷ்காரனை ஓடோட அடிச்சு விரட்டி சுதந்திரத்தை பெற்றவன். :D
அதுதான் இன்று உலக வல்லரசாக இருக்கிறான். அமெரிக்கன் என்ன சொன்னாலும் உலக நாடுகள் எல்லாம் ஆமாம் சாமி போடுது.  :lol:
 
அமெரிக்காவில் கறுப்பன்களின் அடாவடி அந்தமாதிரி. அதனாலதான் காவல்துறை 
கறுப்பனுகளை பார்த்தும் பாராமலும் போட்டு தள்ளுறாங்கள். அது சரியென்று நான் சொல்ல வரவில்லை. 
அனால் நிலைமை அப்படி. இன்று பால்டிமோர் பத்தி எரியுது. கறுப்பு ஜனாதிபதியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 
 
பிலிப்பைன்ஸ் கைதியின் தண்டனை நிறுத்திவைத்தது அரசியல் சித்து விளையாட்டு நெடுக்கர். 
அவுசுக்கு ஆப்படிக்கவெண்டுமென்றெ இந்தோனேசியா இதை செய்தது. மயூரன் செய்ததை நான் 
நியாயப்படுத்தவில்லை. அனால் மயூரனுக்கு மரணதண்டனை கொடுக்கும் அருகதை இந்தோனேசியாவுக்கு கிடையாது.
இந்தோனேசியா ஒரு கேடு கேட்ட ஊழல் நிறைந்த தேசம். அதுக்குள்ளை இஸ்லாமிய சட்டம் வேறை. 
அமெரிக்காவிலை பல மாகாணங்களில் போதை பொருள் பாவிப்பது சட்ட பூர்வமானது. (Recreational). 
போதை பொருள் கடத்துவது மன்னிக்கமுடியாத குற்றம் அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. 
அதற்காக மரணதண்டனை கொடுக்கவேண்டுமா என்பது விவாதத்திற்குரியது. 
அப்படி பார்த்தால் புலிகளும் கூட போதை பொருள் கடத்தி கிடைத்த பெருமளவு பணத்தில்தான் 
ஆயுதங்களை வாங்கி போராட்டத்தை நடத்தினார்கள். அப்படியென்றால் புலிகளுக்குமல்லவா 
மரணதண்டனை கொடுக்க வேண்டும்? அனால் போதை பொருள் கசிப்பு பொன்ற விடயங்களுக்கு தமிழ் ஈழத்தில் 
புலிகள் கடும் தண்டனை வழங்கினார்கள். 

மயூரனின் மரணம் எப்படி…?? திடுக்கிடும் படங்கள்…!

 

இச் செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தயவு செய்து இதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள்….. ஏனெனில் யாராவது இவ்வாறான தவறு செய்து கொண்டிருப்பவர்கள் இதனைப் பார்வையிட்டால் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் அன்பு வாசகர்களே!!Majurn-03.jpg?resize=600%2C831Majurn-021.jpg?resize=600%2C361

அன்ரு சான் , மயூரன் சுகுமாறன் ஆகியோருக்கு இன்று இரவு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்த விஷயம் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது-

இன்று செவ்வாய் மாலை 2.00 மணிக்கு அவர்களுக்கு இறுதிவிடை கொடுப்பதற்க்கு அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர்கள் வேறாக்கப்பட்டு இன்று நள்ளிரவில் தண்டனை நிறைவேற்றப்படுவார்கள்.

பின்னர் சிறைக்கு வெளியே காத்திருக்கும் அவர்களது குடுபதினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.

அன்ரு சான் அவரது இறுதி மணித்தியாலங்களை அவரது குடும்பத்தினருடன் தேவாலயத்தில் கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.மயூரன் சுகுமாறன் தனது இறுதி மணித்தியாலங்களை ஓவியம் தீட்டுவதில் செலவிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு இதயத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அந்த சூட்டில் உயிர் பிரியாவிட்டால் தலையில் சுட்டு தண்டனை நிறைவேற்றப்படும்.

மயூரன் சுகுமாறன் தனது இதயத்தில் துளை விழுவது போல ஓவியம் தீட்டியுள்ளார்.

அவர்களுக்கான பேழைகள் தயார் செய்யப்படுவதை படத்தில் காண்கிறீர்கள்.

இந்த செய்தியைப் படிக்கும்போது எவ்வளவு வேதனையாக உள்ளது

இறுதி மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் ?

அவர்களது குடும்பத்தினர்களின் மனநிலை எப்படியிருக்கும் ?

8.3 கிலோகிராம் ஹீரோயின் போதைப் பொருளைக் கடத்த முயன்ற குற்றதிற்காக இவர்கள் இருவரோடு மேலும் ஏழு இளைஞர்களும் 2005 இல் கைது செய்யப்பட்டார்கள் . ஏனையோருக்கும் விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். இவர்கள் செய்த குற்றம் சமூகத்தைச் சீரழிக்கும் மோசமான குற்றம்தான் .

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சியில் இவர்களைப் பார்த்து பார்த்து , எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல ஆகிப்போனார்கள். எனக்கு ஆரம்பத்தில் இவர்கள்மீதிருந்த கோபம் தணிந்து இப்போதெல்லாம் அனுதாபம்தான் தோன்றுகிறது.

இந்த இளம் வயதில் மரணம் தேவையா ?

‘அறியாத வயதில் குற்றம் செய்துவிட்டார்கள் . ஆனால் இன்று முழுமையாகத் திருந்திவிட்டார்கள்.’ என்கிறார் இவர்களின் மத போதகர்.

(இவர்கள் சுடப்படும்போது சாட்சியாக உடன் இருக்கப் போகிறவர் . இவர் மயூரன் மற்றும் சானின் விருப்பத் தெரிவு )

எனக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது . இவர்களது குடும்பத்தினர் எப்படி ஜீரணித்துக் கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை .

சானுக்கு ஒரு காதலி இருக்கிறார் . அவர் கடந்த பத்து வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறார். சனின் காதலியும் , சகோதரனும் , தாயாரும் கடந்த பலமாதங்களாக இந்தோனேசியாவில் தங்கியிருக்கிறார்கள்.

சுகுமாரனின் தம்பி, தங்கை, தாயார் சுகுமறானைக் காப்பாற்ற படாத பாடு பட்டுவிட்டார்கள் . முடியவில்லை .

“அவனை சுட்டுக்கொன்ற பிறகு மீதமிருக்கும் காலங்களை நாங்கள் எப்படி கழிக்கப்போகிறோம் ? ” என்று தங்கை அழுகிறார்

மனிதவுரிமை அமைப்புகளும் அவுஸ்திரேலியாவும் எவ்வளவோ போராடிவிட்டன.ஒன்றுமே பலனளிக்க .இந்தோனேசியப் பிரதமரின் மனதை மாற்றுவதற்க்காக இந்த இறுதி மணித்தியாலங்களில் கூட அவுதிரேலியப் பிரதமர் ஒரு பிரதிநிதியை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் நம்பிக்கை 99.9 வீதம் குறைந்துபோய்விட்டது.

இந்த இறுதி மணித்துளிகளில் அவர்களதும், அவர்களைப் பெற்றவர்களது மனநிலைகள் எப்படியிருக்கும் ?

அவர்களின் மரணத்தின் பின்னால் பெற்றோர் உற்றாரின் மீதமுள்ள நாட்கள் எப்படிக்கழியும் ?

http://www.jvpnews.com/srilanka/106921.html

இவற்றைச் சிந்தித்தால் போதைப்பொருட்களை கையாள யாரும் சிந்திக்க மாட்டார்கள் .

தொடர்புடையவர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்க்காக இதைப் பதிவிடுகிறேன்.

சட்டம்  தன்  கடமையை  செய்தது  வாழ்த்துக்கள்  வல்லரசுகளுக்கு  வளைந்து  கொடுக்காது  நின்ற இந்தனேசிய  ஜனாதிபதிக்கு ...

 

இறந்த  அனைவருக்கும் ஆழ்த்த இரங்கல்கள் .

நீங்கள் சொல்லுறது உண்மைதான் அஞ்சரன். அப்படி பார்த்தால் புலிகள் கொழும்பிலை குண்டு வைக்கும் போது
சட்டம் தனது கடமையை செய்து அதனுடன் சம்பந்தப்பட்ட தமிழர்களை உள்ளை போடுவதிலும் தவறு இல்லையல்லவா?  :o
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுறது உண்மைதான் அஞ்சரன். அப்படி பார்த்தால் புலிகள் கொழும்பிலை குண்டு வைக்கும் போது

சட்டம் தனது கடமையை செய்து அதனுடன் சம்பந்தப்பட்ட தமிழர்களை உள்ளை போடுவதிலும் தவறு இல்லையல்லவா? :o

வெளிநாடு போக பாஸ்போர்ட்டில் தலை மாத்தின அஞ்சரனுக்கு சட்டம் தன் கடமையை செய்யுமா டண்டனக்கா?? :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த மட்டில், மயூரனும், அன்ரு சானும் அவர்கள் செய்த குற்றத்துக்கான தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள்!

 

போதைப்பொருள் கடத்துவதற்கான சராசரித் தண்டனை அவுஸ்திரேலியாவில் ஐந்து வருடங்கள்.. இவர்களிருவரும் ஏற்கெனவே பத்து வருடங்களை இந்தோனேசியச் சிறைகளில் கழித்து விட்டனர்!

 

அத்துடன் மயூரன் சிறையிலிருந்தே இளநிலைப் பட்டதாரிப் படிப்பை முடித்த ஒருவர்!

 

இங்கு பல யேசுநாதர்களின் கருத்துகளைப் படிக்கும் போது.. ஒரு போது குற்றம் செய்யாதவர்கள்.. முதலாவது கல்லை எடுத்து.. அந்தப் பெண் மீது வீசுங்கள் என்ற ஏசுநாதரின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன!

 

இந்தோனேசிய ஜனாதிபதி ' தனது' நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம்...மற்றும் படிக்கு.. இந்த மரணதண்டனைகள்.. வெறும் திட்டமிட்ட கொலைகள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் அல்ல!

 

நான் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை! அவர்கள் திருந்தி வாழச் சந்தர்ப்பமளிப்பதே.. மனிதம் எனக் கருதுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருள் கடத்துவதையும், அகதி அந்த்ஹஸ்துக்காக பாஸ்போர்ட்டில் தலை மாத்துவதையும், புலிகளின் போராடத்தையும் ஒரே தராசில் வைத்துப் பார்பவர்களை என்ன சொல்ல.

அவுசில் போதை பொருள் கடத்தினா 5 வருசம், கடத்தினா கிடைக்கிற காசோட ஒப்பிடூ செய்தால் cost benefit சமன்பாடு நல்லா வரும் எண்டு கணக்குப் போட்டுத்தான் கடத்தினவர் நம் அருமைத் தம்பி.

அவுஸ் பொலீசு ஆள் பாலியில் காட்டின மரண தண்டனை குற்றம் என்று தெரிந்தும் இந்தோனேசிய அரசுக்கு தகவல் சொல்லி மாட்டிவிட்டது. தம்பியின் Cost- benefit கணக்கு வட்டுக்க போட்டுது.

இப்ப நல்லா மாய்மாலம் போடுறார் அபொட்டு. தூதரை கூப்பிடுறாராம்.

அவுஸ் இந்தோனேசியாவோட ஒப்பிட்டா ஒரு சுண்டங்காய் நாடு. பத்து போட்டில அகதிய அனுப்பி வச்சா கதறிக்கொண்டு இந்தோனேசியாவின் காலில் போய் விழுவார்கள்.

கோத்தாவின் காலில் வீழ்ந்தது போல.

தூதுவரை திருப்பி அழைப்பது ஒரு ராஜதந்திர எதிப்பு. விரவில் மீண்டும் ஒரு தூதுவர் நியமிக்கப்படலாம்.

இருந்தாலும் இந்தொனெசியா ஊழல்களின் தலை நகரம். இச்லாமிய நரகம்.

சட்டம்  தன்  கடமையை  செய்தது  வாழ்த்துக்கள்  வல்லரசுகளுக்கு  வளைந்து  கொடுக்காது  நின்ற இந்தனேசிய  ஜனாதிபதிக்கு ...

 

இறந்த  அனைவருக்கும் ஆழ்த்த இரங்கல்கள் .

 

நேர்மையின் சின்னம் அஞ்சரன். அண்ணா. இவரு ஒரு தப்பும் பண்ணாத உத்தமன்.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகள் கண்டிக்கப்படவேண்டியவர்களே அன்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல...நாளாந்தம் ஓராயிரம் தவறுகள் நடந்து கொண்டு இருக்கும் நாடுகளில் இவர்களை கொண்டால் தான் நாடு திருந்துமா.....யாராக இருந்தாலும் மேலும் தவறுகள்  விடாது திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம்.தமிழ்மகன் ஒருவரும் இதற்குள் அடங்கி விட்டார் என்பது மிகுந்த கவலையான விடையம்.. :(

சட்டம்  தன்  கடமையை  செய்தது  வாழ்த்துக்கள்  வல்லரசுகளுக்கு  வளைந்து  கொடுக்காது  நின்ற இந்தனேசிய  ஜனாதிபதிக்கு ...

 

இறந்த  அனைவருக்கும் ஆழ்த்த இரங்கல்கள் .

குற்றமற்றவர், குற்றமுள்ளவர், சரி, தவறு என்பதற்கு அப்பால் ஒருவருடைய மரணத்தில் சுய இன்பம் கொள்வது எந்த மாதிரியான மனோபாவம் என்பது விளங்கவில்லை ????

 

Edited by ராஜன் விஷ்வா

இந்த ஒன்பது பேரும் யாராவது கடைசி நிமிடத்தில் எங்களை காப்பாற்றுவார்கள் என்ற நப்பாசையுடன் தான் இருந்திருப்பார்கள்.காரணம் பெரிய பெரிய இடங்கள் எல்லாம் தலையிட்டன.இதே மன நிலையில் தான் ஒன்றரைலட்சம் மக்களும் முள்ளி வாய்க்காலில் நம்பியிருந்திருப்பார்கள்.இவர்களுக்கு வெளியிடத்தொடர்புகள் இருந்தன அவர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். நம்பிக்கைகள் வீணடிக்கப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

மயூரன் சுகுமாரன் காத்திருக்கும் மரணம், கருணையற்ற அரசு ஜெயன் தேவா பொதுமன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில் எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில் பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடைசெய்யப்பட்ட கடற்கரையொன்றில் மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டுத் தனித்தனிக் கம்பங்களுடன் சேர்த்துக் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் பத்து மீற்றர் தூரத்தில் வைத்துத் தமது துப்பாக்கிகளை இயக்குவதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர். 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்தோனேசியாவின் பாலித் தீவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஹெரோயின் எனப்படும் போதைப் பொருளைக் கடத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் (பின்னர் ஒட்டுமொத்தமாகப் ‘பாலி 9’ என அழைக்கப்பட்டார்கள்) இவ்விருவரும் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டு இருவருக்கும் இந்தோனேசிய நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. ஆறு வருடங்களாக இந்தோனேசிய உயர் நீதிமன்றம்வரை சென்று போராடியும் இந்தோனேசிய ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பித்தும் பலன் கிடைக்காத நிலையில், இவர்கள் இருவரும் பாலியில் உள்ள சிறையில் மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள். மயூரன் இலங்கைவாழ் தமிழர்களான சுகுமாரன் - ராஜினி தம்பதிகளுக்கு மூத்த குழந்தையாக 1981இல் இங்கிலாந்தில் பிறந்தார். 1984இல் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து அங்கேயே கல்வி கற்று வளர்ந்தவர். குங்ஃபூ போன்ற கொரிய தற்காப்புக் கலையில் வல்லவரான மயூரன், சிட்னி நகரில் இளைஞர்களுக்கு அதைப் பயிற்சி அளித்தும் வந்தார். தவறான போதனைகளும் இளம் வயதிற்குரிய சவாலை எதிர்கொள்ளும் மனப்பாங்கும்தான் மயூரனையும் அவரது ஏனைய நண்பர்களையும் இவ்வாறானதொரு சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடவைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மயூரனது குடும்பப் பின்னணியோ வளர்ப்பு முறையோ அவரை இத்தகைய செயலில் ஈடுபடுத்தியிருக்க முடியாது. அவர்மீது இதுவரை அவுஸ்திரேலியாவில் ஒரு சிறிய குற்றம்கூடப் பதிவாகியிருக்கவில்லை. இன்று மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மயூரன் பாலித் தீவில் கைதுசெய்யப்படும்போது அவருக்கு வயது 24 மட்டுமே. 1973இலிருந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் முறை அவுஸ்திரேலியாவின் சட்டப் புத்தகத்தில் இருந்து முற்றாக நீக்கப்பட்டது. அத்துடன் மரண தண்டனைக்கு எதிரான தனது நிலைப்பாட்டைச் சர்வதேச மன்றங்களில் அவுஸ்திரேலியா தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளது. மரண தண்டனையைச் சர்வதேசரீதியாக இல்லாதொழிப்பதை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் 1990இல் ஏற்றுக்கொண்ட அவுஸ்திரேலியா, அத்தீர்மானத்தில் கையொப்பமிட்ட அனைத்து உறுப்பு நாடுகளும் தமது நீதி பரிபாலன முறையிலிருந்து மரண தண்டனையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வந்துள்ளது. 1990களில் போதைப் பொருட்களுடன் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்திரேலியர்கள் இருவருக்கு மலேசிய நீதிமன்றம் விதித்த மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு அளிக்கும்படி, அந்நாளில் பிரதமராயிருந்த பாப் ஹாக் மலேசிய அரசாங்கத்தை மிக உருக்கமாக வேண்டினார். அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு, பின்பு அவர்கள் தூக்கிலிடப்பட்ட செயலைக் “காட்டுமிராண்டித்தனம்” என அவர் வர்ணித்து மலேசியரின் கோபத்துக்கு ஆளானார். 2005இல், சிங்கப்பூரில் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட வான் ருவோங் ங்குயென் என்ற அவுஸ்திரேலியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவரை மன்னிக்கும்படி அவுஸ்திரேலியப் பாராளு மன்றம் நிறைவேற்றிய வேண்டுகோள் தீர்மானத்தையும் புறக்கணித்து சிங்கப்பூர் அரசாங்கம் அவரைத் தூக்கிலிட்டது. அப்போதைய அவுஸ்திரேலியப் பிரதமராயிருந்த ஜோன் ஹவர்ட் ஐந்துமுறைக்கு மேலாக சிங்கப்பூர் பிரதமருக்குத் தனிப்பட்ட முறையிலான மன்னிப்பு வேண்டுகோளை விடுத்திருந்தார். இந்தப் பின்னணியிலேதான் மயூரன் சுகுமாரன் உட்பட்ட அவுஸ்திரேலிய பிரஜைகள் ஒன்பது பேர் போதைப் பொருட்களைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் பாலியில் கைதுசெய்யப்பட்டனர். இந்தோனேசிய பொலிசாருக்கு அவுஸ்திரேலிய மத்திய பொலிசார் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரில் தமது பிரஜையை மன்னிக்கும்படி வேண்டுகோள் விடுத்த அதே வேளையில், இந்தோனேசியாவில் மரண தண்டனைக்கு உள்ளாவார்கள் எனத் தெரிந்திருந்தும் அவுஸ்திரேலிய அரசு தனது குடிமக்களை ஒரு வெளி நாட்டு அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்தது. மயூரனின் தங்கையான பிருந்தா சுகுமாரன் அவுஸ்திரேலிய வானொலிக்கு அளித்த பேட்டியில், “இதனால் இவர்கள் எதைச் சாதித்துவிட்டார்கள்? அவர்களுடைய குற்றத்தை ஏன் அவுஸ்திரேலியாவில் விசாரித்துத் தண்டனை வழங்கியிருக்கக் கூடாது? தமது குடிமக்கள் தூக்கிலிடப்படுவார்கள் எனத் தெரிந்திருந்தும் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார்கள்?” என வினவினார். 1970களில் வியட்நாமிய யுத்தம் முடிவுக்கு வரும் வேளைகளில் பல ஆசிய நாடுகளுக்கூடாகப் போதைப் பொருள் கடத்தப்படுவது அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனையை 1975இல் அறிவித்தன. இத் தண்டனை முறை உடனடியாகவே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பின்னர் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் (ஐரோப்பாவுக்கு மிக அண்மையில் இருப்பதால்) பரவியது. எனினும் இன்றைய நிலையில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆசிய நாடுகள் மரண தண்டனையைத் தமது சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றிவிட்டன. பிலிப்பீன்ஸ் மிக அண்மையாக - ஜூன் 2006இல்- மரண தண்டனையை இல்லாதொழித்ததால், 1200 வரையான மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த கைதிகள் உயிர் தப்பினார்கள். உலகிலேயே இன்று அதிகமான மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளாக சீனா, ஈரான், அமெரிக்கா, வியட்நாம், சூடான் ஆகியவை விளங்குகின்றன. உலகின் ஏனைய நாடுகளில் தூக்கிலிடப்படுவோரின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் சீனாவில் மட்டும் தூக்கிலிடப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருட்கள் அதிகமாகப் புழக்கத்தில் இருப்பதாகக் கருதப்படும் லத்தின் அமெரிக்காவின் பல நாடுகள் இன்று மரண தண்டனையை முற்றாக ஒழித்துவிட்டன. மார்ச் 2007இல் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சங்கத்தின் மூன்று வார மாநாட்டில், வன்முறை சம்பந்தப்படாத குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்ற வாதத்தைச் சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் வலியுறுத்தி, பிலிப் ஆல்ஸ்ரன் முன்வைத்தார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக இருந்த ஆல்ஸ்ரன், நீதிக்குப் புறம்பான, விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான மரண தண்டனைகளைக் கண்டறிவதற்கான ஐ.நா.சபையின் விசேடத் தூதுவராகவும் பணியாற்றினார். போதைப்பொருள் கடத்தல் போன்ற பொருளாதாரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை எதிர்த்து வாதிடுவதற்கான நல்ல சந்தர்ப்பம் அம்மாநாட்டில் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்திருந்தும், ஐ.நாவுக்கான அவுஸ்திரேலியப் பிரதிநிதி மரண தண்டனைக்கான தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதிலிருந்து விலகியே இருந்தார் என்றார் அவர். அதே காலப்பகுதியில் பதினொரு அவுஸ்திரேலிய பிரஜைகள் மரண தண்டனையை எதிர் நோக்கி வெளிநாட்டுச் சிறைகளில் காத்திருந்தனர். மரண தண்டனை என்னும் பெயரில் ஒரு மனிதனின் உயிரை அரசு பறிப்பதற்கான அதிகாரம் மிகவும் கொடூரமானது எனச் சமூக ஆர்வலர்களும் சிந்தனையாளர்களும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பிரச்சாரம்செய்து வருகின்றனர். ஒரு மனிதன் தவறிழைப்பதற்காகவே பிறப்பதில்லை எனவும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் அவன் தவறிழைத்துவிட்டால், அத்தவறை நினைத்து வருந்தி அவன் திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தைச் சமூகம் அவனுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வாதிடுகிறார்கள். “காட்டுமிராண்டித்தனமான ஒரு குற்றச்செயலைச் செய்த ஒருவரைத் தூக்கில் போடுவதன் மூலம், நாமும் பழிக்குப் பழி என்னும் காட்டுமிராண்டித்தனமான நிலைக்குத் தாழ்ந்துவிடுகிறோம்” என்கிறார் அவுஸ்திரேலிய அரசியல்வாதியான ஆண்ட்றூ பாட்லெட். அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவர், மன நிலை பிறழ்ந்தோர், நீதிமன்றத்தில் தம்மைச் சரியான முறையில் காப்பாற்றிக்கொள்ளப் பண வசதியற்ற ஏழைகள் போன்றவர்களே அதிகளவில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாகிறார்கள். ஈரானில் பிராயமடையாத சிறுவர், சிறுமியரும் மரண தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுக் கல்லெறிந்து கொலைசெய்யப்படுகிறார்கள். அண்மையில் 16 வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளம் பெண், கற்பு நெறிக்கான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறியதால் கல்லெறிந்து கொல்லப்படும் மரண தண்டனைக்குள்ளானாள். இங்கிலாந்தில் கொலைக் குற்றஞ் சாட்டப்பட்டு, 1953இல் பெருந் தொகையான மக்களது எதிர்ப்பின் மத்தியில் டெரெக் பெண்ட்லி தூக்கில் தொங்கவிடப்பட்டபோது அவருக்கு 19 வயது. அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தவறானது என்றும் ஆனால் குற்றச் செயலில் அவர் பங்கெடுத்தமைக்காக அவருக்குப் பகுதி மன்னிப்பு (இறந்த பின்பு) வழங்குவதாயும் 1993இல் (சரியாக 40 வருடங்களின் பின்) அப்போதைய உள்துறை அமைச்சர் அறிவித்தார். 1998இல் அப்பீல் நீதிமன்றம் பெண்ட்லி குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கியது. தவறான நீதிவழங்கலால் பறிக்கப்பட்ட உயிரை மீண்டும் கொண்டுவர முடியுமா? பிரிட்டனின் முன்னாள் உள்துறை அமைச்சரான மைக்கல் ஹவர்ட் பின்வருமாறு கூறுகிறார்: “நீதி விசாரணை என்பது தவறுகளின்றி, முற்று முழுதாகச் சரியானது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. அத்தகைய விசாரணையின் அடிப்படையில், அரசு ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”. ஹவர்ட் ஒரு தலைசிறந்த சட்ட வல்லுநரும்கூட. மரண தண்டனைக் கைதியாக இருந்த வால்மீகி முனிவர் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னரே இராமாயணத்தை எழுதினார் எனவும் அவர் தூக்கிலிடப்பட்டிருந்தால் இன்றுவரை வணக்கத்திற்குரியவராக உள்ள இராமபிரானின் கதை எமக்குத் தெரிய வந்திருக்க முடியுமா என வினவுவோர் உண்டு. ஒரு மனிதன் செய்த தவறுக்காக அவனை அழித்துவிடுவதன் மூலம், அவனிடமிருக்கக் கூடிய அனைத்து ஆளுமைகளையும் அழித்துவிடுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அவர்களுடைய வாதம். காலத்திற்கொவ்வாத, மனிதத்தன்மை சிறிதுமற்ற இத்தகைய தண்டனை முறையை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசியெறிய வேண்டும் என லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை தனது தலையங்கத்தில் வலியுறுத்தி இருந்தது. மயூரன் சிறைக்குள்ளே ஒரு முன்னுதாரணமான மனிதராக விளங்குகிறார் எனவும் அவர் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார் எனத்தாம் முழுமனதுடன் நம்புவதாகவும் அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் எனவும் பாலியின் கெரபொக்கான் சிறைச்சாலையின் பிரதமப் பொறுப்பதிகாரி இந்தோனேசிய உயர் நீதிமன்றத்தில் வேண்டினார். ஆறு வருடங்களாக மிக மோசமான சுகாதார நிலைமை உள்ளதாகக் கருதப்படும் பாலிச் சிறையில் அடைபட்டுள்ள மயூரன், சிறைச்சாலைக்குள் ஒரு குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கைதிகளின் நலன்களைக் கவனிப்பது, சீர்திருத்த வேலைகளைக் கவனிப்பது என்பவற்றுடன் சககைதிகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுக்கிறார்; தானும் ஓவியம் தீட்டுகிறார். பாலியின் தலைநகரத்தில் ஒரு ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்து சிறைக்குள் வரையப்பட்ட ஓவியங்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தில், போதைப்பொருள் பாவனையிலிருந்து மீள விரும்புபவர்களுக்கான உதவி நிலையம் ஒன்றை பாலியில் இயங்கச் செய்கிறார். “வாழ்க்கையின் நோக்கங்கள் எவை என்று புரிந்துகொள்ளாமல் வாழ்ந்தமைக்காக நான் கவலைப்படுகிறேன்; சிறை எனக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்துவிட்டது” என்கிறார் மயூரன். “எனது தவறுக்காக நான் இந்தோனேசிய மக்களிடமும் அவுஸ்திரேலிய மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்”. “அவரைத் தூக்கிலிடுவதன் மூலம் அவர் மட்டும் இறக்கப்போவதில்லை” என்கிறார் மயூரனின் தங்கை பிருந்தா சுகுமாரன். “அப்பா, அம்மா, நான், தம்பி மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் ஒரு நிரந்தரமான இழப்புடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம். அந்த இழப்பிலிருந்து எங்களால் என்றும் மீள முடியாது”. “என் மகனுக்குத் திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். அவன் செய்த தவறுக்காக அவனை மன்னித்துவிடுங்கள்” என்று மன்றாட்டமாக வேண்டுகிறார் மயூரனின் அம்மா ராஜினி. o ஜெயன் தேவா 1980, 90களின் மத்தியில் தமிழ்நாட்டிலும் இங்கிலாந்திலும் ஈழ அகதிகளின் நலன் தொடர்பாகப் பணியாற்றியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோது மறுமலர்ச்சி கழக வெளியீடான தளிர் சஞ்சிகையின் உருவாக்கத்தில் பங்குகொண்டிருக்கிறார். தற்போது லண்டனில் வசிக்கிறார். http://www.kalachuvadu.com/issue-144/page28.asp

  • கருத்துக்கள உறவுகள்

 

 புலிகளும் கூட போதை பொருள் கடத்தி கிடைத்த பெருமளவு பணத்தில்தான் 
ஆயுதங்களை வாங்கி போராட்டத்தை நடத்தினார்கள். அப்படியென்றால் புலிகளுக்குமல்லவா 
மரணதண்டனை கொடுக்க வேண்டும்? அனால் போதை பொருள் கசிப்பு பொன்ற விடயங்களுக்கு தமிழ் ஈழத்தில் 
புலிகள் கடும் தண்டனை வழங்கினார்கள். 

 

 

புலிகள் போதைப்பொருள் கடத்தினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கா..?! அதில் வந்த பணத்தில் தான் ஆயுதம் வாங்கினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்..?!

 

சும்மா சிங்களவனும் சில வல்லாதிக்க சக்திகளும் தங்களின் பயங்கரவாதக் கோசத்துக்கு வலுச் சேர்க்க சொல்லும் சோடிப்புக் கதைகளை எல்லாம் புலிகள் மீது கட்டக் கூடாது. புலிகளில் எவரும் போதைவஸ்துக் கடத்தி உலக நாடுகளில் சிறை இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் புளொட் ஒட்டுக்குழு ஆட்கள் அதில் பிரபல்யமாக இருந்து சிறைகளிலும் இருந்துள்ளனர். அதுபோல் கனடா ஐரோப்பாவிற்கு ஆட்கடத்தலில் (பின்னர் அவர்கள் அகதிகள் என்று சொல்லி தஞ்சம் அடைவது.) ஈடுபட்டதிலும் இந்த ஒட்டுக்குழு ஆட்களுக்கும் பணம் சம்பாதிக்க விரும்பிய பல தமிழர்களுக்கும் தொடர்புள்ளது. தமிழர்கள் என்பதற்காக அவர்கள் புலிகள் என்று எழுந்தமானமாக குற்றம்சுமத்தி விட முடியாது.

 

விடுதலைப்புலிகளின் நிர்வாகம் ஒரு போர்க்கால நிர்வாகம். அங்க எதிரிகளின் ஊடுருவல்கள்.. ஒட்டுக்குழுக்களின் ஊடுருவல்கள் பல வடிவங்களில் அமைந்திருந்தன. மேலும் சமூகச் சீர்கேடுகள் எதிரிகளின் இலக்குகளை இலகுவாக்க உதவின. அந்த வகையில் புலிகள் சில கடும் குற்றவாளிகளுக்கு பல எச்சரிக்கைகளின் பின் மரண தண்டனைகள் வழங்கி இருக்கின்றனர். அது மரண தண்டனைகளை எதிர்க்கும் எல்லோரினதும் எதிர்ப்பை சந்தித்தே நின்றது தான். புலிகள் அந்த மரண தண்டனைகளின் ஊடாக தங்களின் நிர்வாகத்தில் சமூக நடத்தையை மேம்படுத்தினார்கள். போதைவஸ்து பாவனையை இல்லாமல் செய்தார்கள். மேலும் தாங்களே மக்களின் முன் முன்மாதிரியாக நின்று காட்டினார்கள். மக்கள் அவர்களின் சமூக நன்னடத்தையை பின்பற்ற வேண்டிய சூழலை அவர்களின் நன்னடத்தை மக்களுக்கு இனங்காட்டியது.

 

புலிகள் ஊழலை இல்லாமல் செய்தார்கள். அரச ஊழியர்களின் நிர்வாக அசமந்தங்களை இல்லாமல் செய்தார்கள். பாடசாலைகளின் பின் கதவு அனுமதிகளை இல்லாமல் செய்தார்கள். சண்டியன் குழுக்களை இல்லாமல் செய்தார்கள். போதைப் பொருள் பாவனையை அடியோடு இல்லாமல் செய்தார்கள். அங்கீகரிக்கப்பட்ட குடிபான பாவனையையும் குறைக்கச் செய்தார்கள். புகைப்பிடித்தலை தாம் நிறுத்திக் கொண்டு மக்களை குறைக்க வலியுறுத்தினார்கள். இப்படி புலிகள் தாம் மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து கொண்டு தான் மக்களிடம் சமூக ஒழுங்கை ஒழுக்கத்தை எதிர்பார்த்தார்கள். அப்படி உலகில் எந்த அரசும் இன்று வரை நடந்து கொண்டதில்லை.

 

இருந்தாலும் புலிகள் வழங்கிய மரண தண்டனைகள்.. மரண தண்டனை எதிர்ப்பாளர்களிடம்.. மனித உரிமை அமைப்புக்களிடம் கடும் கண்டனங்களை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின் மரண தண்டனைகளின் எண்ணிக்கையை வெகுவாகவே புலிகளும் குறைத்திருந்தனர். மக்கள் புலிகள் இனங்காட்டிய நிர்வாக.. சமூக ஒழுக்கத்தைப் பின்பற்றி இருந்தால்.. தேசத்தை காட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால்.. மரண தண்டனைகள் என்பது புலிகளுக்கு செய்ய வேண்டிய ஒன்றாகவே இருந்திருக்காது.

 

ஏனெனில்... புலிகளின் தலைமையைப் பொறுத்த வரை முதலில் நான் நல்லவனாக நடந்து கொண்டு மற்றவனுக்கு அதனை இயலுமையை இனங்காட்ட வேண்டும் என்பது தான் கொள்கை.

 

உலகில்.. இந்தக் கொள்கையோடு எந்த நாட்டில் எந்த நிர்வாகம் இன்றுள்ளது..?! இந்தோனிசிய அரச நிர்வாகத்தில் இழைக்கப்படாத குற்றங்களையா இந்த குற்றவாளிகள் இழைத்துவிட்டார்கள்..?! அமெரிக்க ஜனாதிபதிகள் பதவியில் இருந்த போதே பல பொண்டாட்டி வைத்திருந்தார்கள்... திருமணத்துக்கு அப்பால். அவர்கள் செய்த குற்றங்களை விடவா சாமானிய அமெரிக்கன் அதிக குற்றம் செய்துவிட்டான்..?! புலிகளை இவர்களோடு கிட்டவும் ஒப்பிட முடியாது. உங்கள் ஒப்பீட்டின் அடிப்படையே தவறு. :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு குற்றத்திற்கும் மரணதண்டனை தீர்வாகாது.இந்தத் தண்டனையின் மூலம் எதிர்காலத்தில் குற்றங்கள் குறைந்துவிடும் அல்லது முற்றாக நின்று விடும் என்று சொல்ல முடியாது. மானுடத்திற்கு எதிரான கொடும் குற்றமாயினும் ஆயள்தண்டனைi கொடுப்பதே சிறந்தது.இப்போது காலம் கடந்து விட்டது மயூரன் உட்பட மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அ8 பேருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.குற்றங்களை இழைக்க நினைப்பவர்களுக்கு இதுவே கடைசி பாடமாக இருக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.