Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்திற்கு முன்னர் பாலுறவு சரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு முன்னர் பாலுறவு சரியா?

சென்னை இளசுகளிடம் ஒரு கருத்துக்கணிப்பு. :huh:

https://www.youtube.com/watch?v=iEnh1R38Pi0

  • Replies 67
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. அதனை... ஏற்க, என்னால் முடியாது.
 
  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு முன் வேறு, ஆடவருடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணையோ... ஆணையோ....
என்னால்... மருமகனாகவோ, மருமகளாகவோ... ஏற்றுக் கொள்ள முடியாது.

காணொளியை இன்னும் நான், பார்க்கவில்லை.
அதை.... பார்த்தால், எனக்கு கட்டாயம் விசர் இன்று பிடிக்கும், என்பதால் தவிர்த்து விடுகின்றேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுக்கோப்பானவர்கள் கலாச்சாரத்தை கடைப்பிடிப்பவர்கள் திருமணத்திற்கு முன்னரான உடலுறவுகளை விரும்பமாட்டார்கள். இதில் நானும் அடக்கம்.... :)

உலக முன்னேற்றம் நாகரீக வளர்ச்சி என குத்திமுறிபவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு முன் வேறு, ஆடவருடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணையோ... ஆணையோ....

என்னால்... மருமகனாகவோ, மருமகளாகவோ... ஏற்றுக் கொள்ள முடியாது.

காணொளியை இன்னும் நான், பார்க்கவில்லை.

அதை.... பார்த்தால், எனக்கு கட்டாயம் விசர் இன்று பிடிக்கும், என்பதால் தவிர்த்து விடுகின்றேன். :)

சூப்பர் சிறியண்ணா!

ஆணும் பெண்ணும் வரம்பு மீறுவது என்றால் அது திருமணம் என்ற லைசன்ஸ் எடுத்தால் மட்டுமே நடைபெறவேண்டும். இதுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களைக் கண்டாலே எனக்கு விசர் வரும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவங்க தமிழ்நாட்டிலதான் இருக்காங்களா? :o

  • கருத்துக்கள உறவுகள்

மூத்தவர் சம்மதியில் வதுவை - முறைகள் பின்பு செய்வோம் - பாரதி

ஆமா வதுவை என்றால் கூடிவாழ்தல் அதுதாங்க லிவிங் டு கெதர் என்று பொருள் படுமாமே, மெய்யா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்க தமிழ்நாட்டிலதான் இருக்காங்களா? :o

எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்திச்சு அந்த1.55 நிமிசத்துக்கு அப்புறம் ஒறுத்தி வந்தாங்க பாருங்க....அவ்வளவுதா நமக்கு வாழ்க்கையே வெறுத்திடுச்சி... :(

இப்படியான கருத்துக்கணிப்பை 80 களில் நடத்தியிருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இது அபத்தமாக இருக்கின்றது

முன்னர் படித்து முடிய வேலை, அதன் பின் உடனடியாக திருமணம் என்று 25 இற்குள் அனைத்தும் நடந்துவிடக் கூடிய விதமாக வாழ்க்கையும் வசதிகளும் அமைந்து இருந்தன. ஆணுக்கு 25 இற்குள்ளும் பெண்ணுக்கு 20 களிலும் திருமணங்கள் நடந்தன. ஆனால் இன்று ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் படித்து, நல்ல நிரந்தர வேலை அமைந்து, வீடு வசதிகள் வாங்கக் கூடிய அளவுக்கு காத்திருந்து, வாழ்க்கையை நன்கு திட்டமிட்டு, 30 களின் பின் திருமணம் பற்றி ஆண்களும் 26 வயதின் பின் பெண்களும் சிந்திக்க தொடங்குகின்றனர். போட்டி நிறைந்த இவ் காலத்தில் ஒரு நல்ல நிரந்தர நிலைக்கு காலடி எடுத்து வைப்பதற்கே 30 வயதாகின்றது. அந்த 30 வரைக்கும் ஆணோ பெண்ணோ பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதற்கான தேவையோ அல்லது நிர்பந்தமோ இன்று இல்லை.

நாளை திருமண உறவில் இணைய மறுக்கும் தலைமுறைகளும் உருவாகும்.

முற்றிலும், தவறான தகவல். நிழலி அண்ணா....

இந்த, தகவல்களை...... எங்கிருந்து திரட்டினீர்கள். :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளலாமென சொல்பவர்களின் செகிளை திருப்பி நாலு சாத்து சாத்தலாமென கொலைவெறிதான் ஏற்படுகிறது.. :(

இந்த முறையற்ற உறவின் ஆபத்தால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவது, அதை உணராத சில பெட்டைகள், சமூக பாதுகாப்பற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு,மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறித்திளைத்தவர்கள் போல் அலட்சியமாக தமிங்லிஸில் சொல்வதைக் காண ஆத்திரமும், வேதனையுமே மிஞ்சுகிறது.. :wub:

சில பெண்களும், பையன்களும் பொறுப்போடு பதிலளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

Edited by ராசவன்னியன்

எனக்குதெரிந்த மட்டும் எல்லோரும் தங்களுக்கு பிடித்தவர்களுடன் சந்தர்ப்பம் கிடைக்கும்போது உடலுறவில் ஈடுபடுவர்கள். இதுதான் இப்போதைய உலகம்.

சில பேர், நிறைய வாய்ப்புக்கள் கிடைப்பதால் எல்லோருடனும் படுத்து கொண்டு திரிவார்கள்.

சில பேர், வாய்ப்புகள் எதுவுமில்லால், எதிர்பாலின் அணுக்கம் இல்லாமையினாலும், 50ம் ஆண்டு வாழ்வியலை காரணம் காட்டி தாங்கள் கலியாணம் கட்டும் வரை காத்திருப்பதாக தங்களை தாங்களே சமாதானபடுத்திக்கொள்ளுவர்கள்.

இப்போதைய உலகில் இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி சொன்னது முற்றிலும் தவறான தகவல் என்று எப்படி சொல்கிறீர்கள் தமிழ் சிறி. இது தவறான விடயம் என்பது எமக்கு தெரிகிறது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சில கசப்பான விடயங்களையும் பெற்றவர்கள் எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றவர்களுக்குத் தெரியாமல் பிள்ளைகள் செய்யும் பல விடயங்கள் பெற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாமல் மனநோயாளராகிய பல பெற்றவர்களையும் நாம் காண்கிறோம். நாம் எதிர் காலத்தில் இப்படி எத்தனையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விடயங்களை ஏற்றுக்கொள்ள எம்மைத் தயார்ப்படுத்தத்தான் வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம்.. அடுத்தவையிற்ற கேட்டுச் செய்யுற விசயம் இல்லை. உங்களுக்கு தேவை அவசியம் பாதுகாப்புன்னா செய்யுங்க இல்லை விட்டிட்டுப் போங்க. பின்வரும் விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பு என்பதால்.. அந்த விளைவுகளையும் தெரிந்து கொண்டு செயற்படுங்கள்.

அப்புறமா.. கன்னித்திரை கிழிஞ்சு போச்சுது அதை ஒட்டு.. இதை ஒட்டு என்று வரப்படாது.

தனிமனித ஒழுக்கம் என்பது பாலியல் சார்ந்தும் உள்ளது. அதைக் கடைப்பிடிக்க விரும்பிறவை கடைப்பிடிக்கலாம். அதைவிட்டிட்டு.. இதில கட்டுப்பாடுகள் எல்லாம் போடுறது என்பது பொய். ஓடிற மாடு.. அறுத்துக்கிட்டு ஓடும். வீட்டோட நிற்கிற மாடு கட்டி வைக்காமலே வீட்டோட நிற்கும்..! மாட்டிலையே இத்தனை வகை என்றால்.. மனிதனில்..?! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இரண்டுவிதமான கருத்தை பார்க்கின்றேன்

ஒன்று எமது விருப்பம் (ஆனால் நாங்கள் அப்படியல்ல)

இரண்டாவது நடைமுறை....

எமது விருப்பம் பற்றி பேசுவதென்றால் நான் ஒதுங்குகின்றேன்

ஏன் என்றால் அது என்னிலிருந்தே ஆரம்பிக்கும்.  ஆரம்பிக்கணும்

நடைமுறை என்பது எமது விருப்பமாக இருப்பதில்லை.

இருக்கவேண்டிய காலமும் அல்ல...

நாம் மாறியாகணும்

அல்லது மாற்றப்படுவோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான கருத்துக்கணிப்பை 80 களில் நடத்தியிருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இது அபத்தமாக இருக்கின்றது

முன்னர் படித்து முடிய வேலை, அதன் பின் உடனடியாக திருமணம் என்று 25 இற்குள் அனைத்தும் நடந்துவிடக் கூடிய விதமாக வாழ்க்கையும் வசதிகளும் அமைந்து இருந்தன. ஆணுக்கு 25 இற்குள்ளும் பெண்ணுக்கு 20 களிலும் திருமணங்கள் நடந்தன. ஆனால் இன்று ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் படித்து, நல்ல நிரந்தர வேலை அமைந்து, வீடு வசதிகள் வாங்கக் கூடிய அளவுக்கு காத்திருந்து, வாழ்க்கையை நன்கு திட்டமிட்டு, 30 களின் பின் திருமணம் பற்றி ஆண்களும் 26 வயதின் பின் பெண்களும் சிந்திக்க தொடங்குகின்றனர். போட்டி நிறைந்த இவ் காலத்தில் ஒரு நல்ல நிரந்தர நிலைக்கு காலடி எடுத்து வைப்பதற்கே 30 வயதாகின்றது. அந்த 30 வரைக்கும் ஆணோ பெண்ணோ பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதற்கான தேவையோ அல்லது நிர்பந்தமோ இன்று இல்லை.

நாளை திருமண உறவில் இணைய மறுக்கும் தலைமுறைகளும் உருவாகும்.

இவ்வளவு சிந்திக்க தெரிந்த உங்களுக்கு இருமன உடன்பாடு தான் திருமணம் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.
 
விரும்பிய ஒருவரை திருமணம் செய்துவிட்டு படிப்பு பட்டங்களை மேற்கொள்வதில் என்ன சிரமம் வரப்போகின்றது?
 
இந்த வேலைதான் வேண்டும் எனும் நிலையை யார் உருவாக்கியது? பிறப்பிலேயே வந்ததா???
 
மதம் கலை கலாச்சாரங்களுக்கு கருத்து கணிக்க வெளிக்கிட்டால் மனித வாழ்க்கையே சீரழிந்து போகும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி சொன்னது முற்றிலும் தவறான தகவல் என்று எப்படி சொல்கிறீர்கள் தமிழ் சிறி. இது தவறான விடயம் என்பது எமக்கு தெரிகிறது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சில கசப்பான விடயங்களையும் பெற்றவர்கள் எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றவர்களுக்குத் தெரியாமல் பிள்ளைகள் செய்யும் பல விடயங்கள் பெற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாமல் மனநோயாளராகிய பல பெற்றவர்களையும் நாம் காண்கிறோம். நாம் எதிர் காலத்தில் இப்படி எத்தனையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விடயங்களை ஏற்றுக்கொள்ள எம்மைத் தயார்ப்படுத்தத்தான் வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

பெற்றவர்களுக்கு தெரியாமல் பிள்ளைகள் செய்யும் விடயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.... எத்தனையோ பல விடயங்கள்.
இவைகள் இன்று நேற்று தொடங்கியதல்ல...அன்று தொடக்கம் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. அதற்காக காலத்தின் மேல் பழியை போட்டு யாவரும் தப்பிக்க பார்க்கின்றோம்.
பாலியல் தப்பான விடயமல்ல......
அது தப்பாக போய்க்கொண்டிருக்கின்றது என்பதுதான் என் கவலை.
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தப்பான விடயமல்ல......
அது தப்பாக போய்க்கொண்டிருக்கின்றது என்பதுதான் என் கவலை.

bampw-bad-love-Favim.com-424964.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்திச்சு அந்த1.55 நிமிசத்துக்கு அப்புறம் ஒறுத்தி வந்தாங்க பாருங்க....அவ்வளவுதா நமக்கு வாழ்க்கையே வெறுத்திடுச்சி... :(

கறுப்பு. :D

பாலுறவில் அவதானம் தேவையென்று பாடசாலைகளில் கற்ப்பிக்கும் காலத்தில் இருந்து கொண்டு திருமணத்தின் பின் தான் பாலுறவு கொள்ளலாம் என வாதிடுவதில் எந்த பயனும் இல்லை :icon_idea:

இளைஞர்கள் வாழும் சூழல் அவர்களின் பாலியல் நடவடிக்கையை அதிகம் தீர்மானிக்கிறது
இதில் நாம் குத்தி முறிவதில் பயனில்லை

வெட்கத்தை விட்டு பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கி தனிப்பட்ட முறையில் அவர்களை பாதுகாக்கலாமே தவிர, சமூகத்தை திருத்தி அவர்களை பாதுக்காக முற்படுவது பகல்க்கனவு :rolleyes:

மற்றது எங்கடை ஆக்களின் 20&25 வயது திருமணங்கள் இப்போ 26&30 ஆக மாறியது இப்போதைய சந்ததியினரை திருமணத்திட்கு முன் பாலியல் உறவு கொள்வதை தூண்டி நிற்கின்றது. இதில் சந்தர்ப்பம் வாய்க்காதவர்கள் நல்லபிள்ளை பட்டம் பெறுகிறார்கள் :lol:

40-50 வயதில் பாலியல் உறவைபற்றி குத்திமுறியும் பெரியோர்கள் ஏன் பொறுத்த வயதில் பாலியல் உறவை தடுத்து நிறுத்துகிறீர்கள்? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

...

40-50 வயதில் பாலியல் உறவைபற்றி குத்திமுறியும் பெரியோர்கள் ஏன் பொறுத்த வயதில் பாலியல் உறவை தடுத்து நிறுத்துகிறீர்கள்? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

கரைபுரண்டு ஓடும் காட்டாற்றிற்கு நெறிப்படுத்துதலும், அணையும் தேவையல்லவா, ?

கண்ட இடத்தில் கண்ட நேரத்தில் பாய்ந்துவிட்டு, தேவைப்படும் நேரத்தில் விளைச்சலுக்கு வழியில்லாமல் போய்விடக்கூடாதென்ற கரிசனைதான்.

எல்லாம் 'STORE it and use it - wise and safety' strategy தான்! :)

ஆம் இதுவே நம் பெரியோர்களின் விஞ்ஞானவிளக்கம் :D

இப்புடி இருந்தால் இன்னும் விளங்கும் :icon_idea:

15 வயசிலே திருமணமான எம் முன்னோர்கள் என்னன்டு 10-12 பெத்தவை, இல்லை வெள்ளைக்காரனுக்கு ஒவொருநாளும் தானே பாயுது!!!!!

30 வயத்திற்கு பின் பிரசவம் தொடங்கும் பெண்கள் 50வயதில் பல நரம்பியல் நோய்களுக்கு ஆளாவது தெரியாதா?

விஷமத்திற்கு கதைச்சா கதைக்கலாம்... ஆனா விஞ்ஞானத்துடன் பார்த்தால் நம்மவர்கள் செய்வது வெறும் முட்டாள் தனமே :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

சாமிகளே, எனது காலத்தில் இங்கு நடந்துள்ள, நடப்பவைகளை வைத்தே சொன்னேன்.. :lol:

வெள்ளைக்காரனுக்கு ஏன் பாயுது, முன்னோர்கள் ஏன் வண்டி வண்டியாய் பெத்தார்கள் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். :)

சாமிகளே, எனது காலத்தில் இங்கு நடந்துள்ள, நடப்பவைகளை வைத்தே சொன்னேன்.. :lol:

வெள்ளைக்காரனுக்கு ஏன் பாயுது, முன்னோர்கள் ஏன் வண்டி வண்டியாய் பெத்தார்கள் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். :)

அண்ணோய் அவற்றை உதாரனங்களாக சொன்னேன்.

மற்றும்படி உங்களது கால நடவடிக்கைகள் விஞ்ஞானத்துடன் நோக்கும் போது தவறென்பதே எம் விவாதம்

அதே சட்டிக்குள் இளைய சந்ததியினரை போட்டுவிட வேண்டாம் என்பது வேண்டுகோள்...

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும் ....
காரணம் நாம் எங்கிருந்து எதை பார்க்கிறோம் என்பது
எமது தெரிதலை (தெளிவை) மைய படுத்துவதால்
கருத்துக்கள் மாறு படுகின்றன......

திருமணம் என்பது சரியா தவறா ?
என்ற கேள்விக்கு இன்னமும் நாம் சரியான பதிலை காணவில்லை
திருமணத்தை நாம் நிஜாயபடுத்தும்போது
அல்லது அது சரியென நாம் கொள்ளும் கருத்தின் மூலம்
இதையும் சரி என்றே கொள்ளலாம்

திருமணத்தை ஊருக்காக அல்லது சமூகத்திற்காகவே செய்கிறோம்
இரு மனங்கள் இணைவது என்பதுதான் அதில் முக்கிய விடயம்.
இரு மனங்கள் திருமணத்திட்கு முன்பு இணைய முடியாதா ??
இரு மனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து கொள்ள திருமணத்திட்கு முன்பே
சாத்தியம் இருக்கும்போது.......
பாலியல் முன்பு சரியா? தவறா? என்று எந்த கோணத்தில்
இருந்து விவாதிப்பது ?

பாலியல் என்பது உறவை மேம்படுத்துவதோடு
உணவுக்கான ஒரு பசிபோல உடலின் இன்னொரு பசியாகவே இருக்கிறது.

திருமணங்கள் பல இன்று முறிவு அடைந்து வருகிறது ....
இன்னொருவருடன் வாழ்ந்த ஆணோ பெண்ணோ இன்னொருவருடன்
மீண்டும் இணைகிறார்கள்.
பின்பு இணைய நேரிடலாம் என்பதால்....
திருமணம் ஆன பின்பும்
பாலியல் சரியா? தவறா?
என்று விவாதிக்க வேண்டுமா?

ஏற்கனவே பெண்ணுடன் உறவை கொண்டுவிட்டதால்
பல ஆண்கள் ஏமாற்றிவிட்டு போகிறார்கள்
திருமணமான பெண்கள் ஏமாந்த நிலையில் இருக்கிறார்கள்
ஆண்களும் இருக்கலாம்
ஈழத்தில் பல கனடா மாப்பிளைகள் இப்படி நடப்பது
நாளந்த செய்தியாக இங்கே இருக்கிறதே?

வள்ளுவனிடம் எல்லத்திட்கும் பதில் உண்டு ....
காலம்
நேரம்
இடம்
பொருள்
அறிந்து ......

செய்யும் எதுவும் தப்பில்லை.
இதை அறியாது செய்யும் எதுவும் தப்புதான்
எப்போது செய்தோம் என்பது இங்கு ஒரு பொருட்டே இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.