Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடு வயதுப் பிரச்சினை - Mid-life crisis

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கம்!

 

இதை ஏன் எழுதுகிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனாலும் எழுதவேண்டும் என்று மனம் துடிப்பதால் தொடங்குகிறேன். உங்களுக்கும் இப்படியான எண்ணங்கள் இருக்கலாம். ஆகவே நீங்களும் இங்கே பகிருவீர்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இதனைத் தொடங்குகிறேன்.

 

பிரச்சினை வேறொன்றுமில்லை, ஆங்கிலத்தில்; சொல்வதானால், "Mid-life Crisis" என்று சொல்வார்கள். தமிழில் "நாய்க்குணம்" என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. 

 

இப்போது பெயரென்ன என்பதுவெல்லாம் முக்கியமில்லை, பிரச்சினைதான் (?) முக்கியம்.

 

அதுசரி, என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா?

 

சரியாகச் சொல்லத் தெரியவில்லை. எனது இளமைக் காலத்தைத் தொலைத்துவிட்டதன் தாக்கம் இப்போது அடிக்கடி தெரிகிறது. அது நிச்சயம் திரும்பி வரக்கூடியதொன்றல்ல என்று தெரிந்தும் மனம் கவலை கொள்கிறது. எனது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னை வருத்துகின்றன. முதலாவது நரை, முகத்தின் தோலில் சுருக்கங்கள், களைப்பு, கண் பார்வையின் வீழ்ச்சி, உடல் பருமன்.....இப்படியே பல. 

 

வாழ்க்கையின் உச்சிக்குப் போய் மற்றைய பக்கத்தால் இறங்கத் தொடங்கிவிட்டேன் என்று நான் நினைக்கிறேன். நான் கீழிறங்கும் வேகம் பற்றி எனக்குப் பயம் ஏற்படுகிறது. தவிர்க்க முடியாத ஒன்றை வலுக்கட்டாயமாக எதிர்க்கவேண்டும் என்று மனம் பதை பதைக்கிறது. முதுமையடைவதை வெற்றிகொள்ள என்ன செய்யலாம் என்று தேடுவதிலேயே காலமும் நேரமும் வீணாக நான் முதுமையாகிக் கொண்டிருக்கிறேன்.

 

சில வருடங்களாக நரையை மறைக்க தலைக்கும், மீசைக்கும் மை பூசி வருகிறேன். தவறாமல் மாதமொருமுறை நான் பூசும் மைக்கு மத்தியிலும்கூட நரைகள் அவ்வப்போது எட்டிப் பார்க்கின்றன. மீசை பற்றிக் கேட்க வேண்டாம், மீசையின் ரோமத்துக்கு மை பூசுவதைக் காட்டிலும், மீசைக்கு வெளியே அப்பப்பட்ட மைய்யைக் கழுவதில்தான் நேரம் செலவாகிறது. ஆரம்பத்தில் தலைக்கு மைதடவ மனைவியின் உதவியை நாடிய நான், இப்போது 3  - 4 வாரங்களுக்கொருமுறை என்று வாடிக்கையாகிவிட நானே பூசிக் கொள்கிறேன்.

 

அதேபோல உடலின் எடை, கொழுப்பு. இதற்காக நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி செய்கிறேன். ஆனால் அதையும் மீறி முதுமை உடலை ஆக்கிரமிக்கிறது. முதுமைக்கும் எனக்குமான போராட்டத்தில் இப்போதைக்கு உடல் தோற்றத்தினளவில், முதுமையை சற்றுத் தள்ளியே வைத்திருப்பதாக நான் நினைத்தாலும், கிடைக்கும் ஒரு சிறிய சந்தர்ப்பத்தைப் பாவித்து அது உள்ளே நுளைந்துவிடும் என்பதும், பின்னர் அதன் பாதிப்பு அசுர வேகமெடுக்கும் என்பதும் நான் அறியாததல்ல. ஆக தடுக்கவே முடியாத ஒன்றை எப்படியாவது தடுத்துவிட நான் நினைக்க , முதுமையும் என்னுடன் அருகிலேயே பயணம் செய்துகொண்டு தனது நேரம் வரும்வரை காத்திருக்கிறது.

 

20 களில் நானிருந்தபோது, இந்த உலகில் என்னைப்போல இளமையானவர் வேறு எவரும் இருக்கமாட்டார்கள் என்று மனம் சொல்லியது. 20 கடந்து 30 ஆக, இளமையின் உச்ச கட்டம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் முதலாவது குழந்தை பிறந்தவுடன், இளமை ஊசலாடத் தொடங்கிவிட்டதென்பதையும் நான் மறுக்கவில்லை. அப்படியே, மத்திய 30 கள் என்று இளமையின் இறுதிக் காலத்தில் பயணித்து, இப்போது 40 தாண்டி இள - முதுமைக்குள் வந்திருக்கிறேன். 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுபற்றி நண்பர்களுடன் அவ்வப்போது பேசியிருக்கிறேன். சிலர், அப்படியொன்றுமில்லை, நாங்கள் அப்படியேதான் இருக்கிறோம், உனக்கு விசர் என்கிறார்கள். சிலர் இல்லை மச்சான், உது எல்லோருக்கும் இருக்கிற பிரச்சினைதான். ஆனால் வெளியில சொல்ல வெட்கப்பட்டுப் பேசாமலிருக்கினம் என்றும் சொல்கிறார்கள்.

 

என்னைப் பொறுத்தவரையில் இந்த நடு வயதுப் பிணக்கென்பது எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் வந்துதான் போகிறது. ஆண்களுக்கு 40 இலிருந்து 60 வயது வரைக்கும், பெண்களுக்கு 35 இலிருந்து 55 வயது வரைக்கும் இந்த மனரீதியான போராட்டம் வந்துதான் போகிறது. சிலருக்கு இதன் தாக்கம் மிக அதிகமாகி மன உளைச்சளைக் கொடுத்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு இதனால் சில பலன்களும் கிட்டுகின்றன. 

 

முதலில் இது ஒரு நோய் அல்லவென்பதை நான் நன்றாக உணர்ந்துகொண்டிருக்கிறேன். முதுமையடைவதை நம்பமறுக்கும் மனதிற்கும், இள முதுமை வயதில் மனதுடன் ஈடுகொடுக்க முடியாத உடலுக்குமான போராட்டம்தான் இதுவென்பதையும் உணர்ந்துகொள்கிறேன். 

 

சிலர், இனி என்னத்தைச் செய்து என்னத்தைக் கண்டு என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். முக்கியமாக பிள்ளைகள் வளர்ந்துவர, இனி எங்கட காலம் போயிட்டுது, இனி அதுகளுக்காகத்தான் எங்கட வாழ்க்கையெல்லாம் என்று தாமாகவே முன்வந்து வரவிருக்கும் முதுமையை முன்னோக்கி அழைக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை முதுமையடைதல் ஒரு பிரச்சினையாக இருக்குமா என்று என்னால் சொல்ல முடியவில்லை. சில நேரத்தில், தம்மால் எதுவுமே செய்ய முடியாது என்கிற விரக்தியின் வெளிப்பாடே இந்த மனநிலைக்குக் காரணமாக இருக்கலாம்.

 

ஆனால் இன்னும் சிலர், இந்த வரவிருக்கும் முதுமையை எப்படியாவது தாமதப்படுத்துவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகிறார்கள். குறிப்பாக ஆண்களும் பெண்களும் 40 -45 வயதுகளில் உடற்பயிற்சி நிலையங்களையும், ஆரோக்கியமான உணவுண்ணும் பழக்கங்களையும் நாடிச் செல்கிறார்கள். இன்னும் சிலர், இந்த வயதுகளில் வாழ்க்கைத்துணை மற்றும், வீடு, வாகனங்கள் என்று எல்லாவற்றையும் புதிதாகத் தேர்ந்தெடுத்து தமது இரண்டாவது வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். பொதுவாக மேற்குலக வாழ்க்கை நடைமுறைகளில் இது சாதாரணமான விடயமாகத் தெரிந்தாலும் கூட, எமக்கு இது சாத்தியாமனதொன்றாக இருக்கப்போவதில்லை. அதற்காக இங்கே எம்மவரில் அப்படிச் செய்தவர்கள் இல்லையென்று நான் சொல்லமாட்டேன். 

 

என்னுடன் வேலைபார்க்கும் வெள்ளையினத்தவர்களில் குறைந்தது இரண்டு அல்லது மூன்றுபேர் இந்த வயதுப் பருவத்தைக் கடந்தபோது இன்னொரு வாழ்க்கைத்துணை, புதிய கார், அதுவும் இளைஞர்கள் விரும்பும் Sports Model, இளமையான , நவ நாகரீக ஆடையணிகள், உல்லாசப் பயணம் என்று சுற்றி வந்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையின் முதுமை பற்றி அவர்கள் பயப்படவில்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம்.. மனப்பிராந்தி.

 

20 வயதில் மொட்டை விழுந்தவன்/ள் இருக்கிறான்/ள். நரை விழுந்திருக்குது. நாங்கள் வாழும் பூமியும்.. நுட்பமாக மாறிக்கொண்டு தான் உள்ளது. எனவே மாற்றங்கள் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால்.. ஒரு மனிதனின் ஆளுமையை தீர்மானிப்பது அவனது சிந்தனை தான். அது பலவீனப்படாத வரை அவன்/ள் இளமையாகவே செயற்படுவார்கள்.

 

பலர் வயதானவர்களைப் போல தோன்றினாலும்.. இளைஞர்கள் போல செயற்படக் கண்டிருக்கிறோம். முன்னர் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒருவர் வாழ்ந்தவர். அவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி. 60 வயதைத் தாண்டியவர். பதின்ம வயதுப் பிள்ளைகள் எங்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார். கடைசி ஓவர் வரை நின்று நிதானமாக விளையாடித்துதான் போவார். அப்படியானவர்களைப் பார்த்து வளர்ந்ததோ என்னவோ.. முதுமையானவர்கள் என்றால்.. இயலாதவர்கள் என்ற எண்ணம் வருவதில்லை..! அதுவும் எங்களுக்குள்ளும் பலத்தை தரும். எங்கள் இளமையிலும் ஒரு உற்சாகத்தை தரும்.

 

முதுமை என்பதை இட்டு தவறான சிந்தனை செய்து மன ஆளுமையை கெடுத்துக் கொள்வது.. சோர்வை தரும். சோர்வு உடல் உபாதைகளை தரும். அதனால் தான் பலர் முதுமை என்பதை இயலாமை என்று கொள்கின்றனர். அது தவறு. அது அவர்களின் சிந்தனைத் தவறினால் ஏற்படும் பிரச்சனை.

 

சாதிக்க நினைப்பத்தவனுக்கு முதுமை இல்லை. 90 வயதிலும் பல்கலைக்கழகம் வந்து படிக்கும் மக்களோடு வாழும் நாமே.. இளமையில் இருந்து கொண்டு முதுமையைப் பற்றி பயந்து சாகிறம் என்றால்..?!

 

மை பூசுவது பற்றி.. இப்ப இளசுகள் தான் பல வித மை பூசுதுங்க. அதுங்க கூட கவலைப்படுவதில்லை... மை பூசுவதைப் பற்றி. நரையும் ஒரு அழகு என்று பார்க்கும் பக்குவம் வந்தால் மை அவசியமே இல்லை..! நாங்க யுனியில் படிக்கும் போது ஒரு மலேசிய இளைஞர் மயிருக்கு இடைக்கிடை வெள்ளை பூச்சடிப்பார். அது அவருக்கு அழகு என்று. ஆக.. எங்கள் சிந்தனை தான் எங்களை ஆள்கிறதே அன்றி.. முதுமை.. இளமை என்பதெல்லாம்.. காலக் கண்ணாடியில் வந்து போகும் விம்பங்கள். அதையிட்டு அச்சந் தேவையில்லை.

 

உளம் இளமாக இருந்தால்.. உடல் இளைக்காமல் இருக்கும். இது குழந்தையில் இருந்து முதியோர் வரை பொருந்தும். :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பருமன் வயதானவர்கள் பிரச்சனையே அல்ல. குழந்தைகள் முதல் அது பிரச்சனை. அதற்கு சரியான உணவுக்கட்டுப்பாடும்.. நிறை உணவு வழக்கமும்.. முறையான உடல் உழைப்பும் இருந்தால்.. உடற்பருமன் சரியாகும்.

 

சம்சாரிகள்.. அதிக அளவில் மனம் சோர்ந்து போகிறார்கள் காரணம்.. அவர்களுக்கு வாய்க்கும் துணைகள் அப்படி. அது அவைட பிரச்சனை. துணைக்கு வயதாகிட்டு என்றால் தனக்கும் ஆகிட்டுது என்று நினைத்துக் கொள்ளும் அவலம்.. ஆண்களில் பலருக்கு.

 

துணையின் இயலாமை.. பல ஆண்களில் இயலாமைக்குரிய சிந்தனையை விதைக்க அதனை முதுமை என்று வரையறுத்து.. அந்த வட்டத்தை விரைந்து வரையச் செய்கிறது. அதுதான் அந்தக்காலத்தில் கொஞ்சம் வயது வித்தியாசம் விட்டு திருமணம் செய்வார்கள். இப்ப தலைமுறை இடைவெளி அதுஇதென்று சாட்டுச் சொல்லி.. ஒரே வயதில் அல்லது கிட்ட வயதில் திருமணம் செய்திட்டு.. பின் பெண் பொதுவாக.. விரைந்து மூப்படைய.. ஆண்கள் இன்னோர் துணையை தேடிக் கொள்கிறார்கள். தேவையா இதெல்லாம்.

 

அதனால் தான் வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.. அதையும் எண்ணித் துணிய வேண்டும் என்று. உணர்ச்சிக்கு கட்டுப்பட்டு காதலில் வீழ்ந்தால்.. இது தான் நிலைமை. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய மனம் பலமிக்கதாக இருக்க வேண்டும். நரை முடிக்கு நீங்கள் விருப்பப்பட்டு மை பூசுவது ஒன்று. மற்றவர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து செய்வது வேறு.

முதலாவது வகையில் உங்களுக்கு அதிக மன அழுத்தம் வரப்போவதில்லை.

முதுமை வருகிறது என்றால் உங்களுக்கு அதிக ஞானம் கிடைக்கப்பெறுகிறது என அர்த்தம். :D இதற்கு மகிழ்ச்சிகொள்ளவேண்டும் அல்லவா? :wub: இருபது வயதில் அறியாத எவ்வளவோ விடயங்களை நீங்கள் இப்போது அறிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது (பொதுத்தளத்திலும், வேலைத்தளத்திலும்). :huh: இது முக்கியமானது அல்லவா? இன்னும் வயது போகப்போக ஞானம் இன்னும் மெருகேறும். வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய மனம் பலமிக்கதாக இருக்க வேண்டும். நரை முடிக்கு நீங்கள் விருப்பப்பட்டு மை பூசுவது ஒன்று. மற்றவர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து செய்வது வேறு.

முதலாவது வகையில் உங்களுக்கு அதிக மன அழுத்தம் வரப்போவதில்லை.

முதுமை வருகிறது என்றால் உங்களுக்கு அதிக ஞானம் கிடைக்கப்பெறுகிறது என அர்த்தம். :D இதற்கு மகிழ்ச்சிகொள்ளவேண்டும் அல்லவா? :wub: இருபது வயதில் அறியாத எவ்வளவோ விடயங்களை நீங்கள் இப்போது அறிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது (பொதுத்தளத்திலும், வேலைத்தளத்திலும்). :huh: இது முக்கியமானது அல்லவா? இன்னும் வயது போகப்போக ஞானம் இன்னும் மெருகேறும். வாழ்த்துக்கள்..! :D

 

உண்மை இசை. வயதாக ஆக.. மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

சின்ன வயதில்.. விரும்பினதை செய்ய முடியாத பெற்றோர் கட்டுப்பாட்டுச் சூழல்.

 

பதின்ம வயதில் பள்ளிக்கூட தலையிடி.

 

இருபதின் ஆரம்பத்தில்.. யுனி என்று கொண்டு போய் படி படி படி.. என்று புத்தக்கத்தோடு கட்டி தலையிடி வாழ்க்கை.

 

இப்ப தான்.. கொஞ்சம் உழைச்சு.. சுதந்திரமா வாழ முடியுது.

 

அதுக்க கல்யாணம் கட்டு என்று ஒரு கூட்டம். அதைக் கட்டிட்டு.. தேவையில்லாத சுமைகளை தாங்கிக் கொண்டு.. பட்டு வந்த கஸ்டத்தை விட்டு ஒரு சுகத்தை அனுபவிக்க முதல் இன்னொரு சுமையா.

 

எதையும் எண்ணித் துணிந்தால்.. வாழ்க்கையில் வயதாவது மகிழ்ச்சிக்குரியதே ஆகும். எப்படியோ வாழ்வோம் என்று அவசரப்பட்டு வாழ்ந்திட்டு.. பிறகு கடைசியில்.. வாழ என்ன இருக்குது.. பிள்ளைக்குட்டிக்கு வாழுறம் என்ற.. அதுகள் வளர்ந்து தங்கட வாழ்க்கையை பார்க்கப் போகேக்க.. வீண் சச்சரவுகளும்.. வெறுமையும் மிஞ்சும். அதுவே.. பலரில் முதுமை என்ற இயலாமைச் சிந்தனையை உருவாக்குகிறது. அது வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாக எண்ண வைக்கிறது. எனி என்ன வாழ்க்கை என்று.. உடல்... இயங்க முடியாமல் செய்கிறது சிந்தனை. இந்த வட்டங்களை பெட்டிகளை விட்டு வெளிய வந்தால் தான் வாழ்க்கை எங்களது ஆகும். நாங்கள் விரும்பிற வடிவில் அது எங்களோடு வரும்.

 

அடுத்தவனுக்காக வாழப் போய் சோர்ந்து போவதே எம்மவர் பலரின் வாழ்க்கை சுவாரசியமின்றிப் போக முக்கிய காரணம். வாழ்க்கை உங்களது. அதனை தீர்மானிக்க வேண்டியது.. அதையிட்டு சிந்திக்க வேண்டியது நீங்க. அதைச் செய்யாமல்.. வாழ்க்கை முடிஞ்சுது போச்சுன்னு பதறிறது அர்த்தமற்றது. இப்பூமியில் வாழ்க்கை எந்த நேரத்திலும் முடியலாம். அவ்வளவு ஆபத்துக்கள் உள்ளன. இதுவரை வாழ்ந்ததே அதிஸ்டம்.

 

எனவே வாழும் வாழ்க்கையை சுவராசியமாக உங்களதாக்கி வாழ்ந்து பழகுங்கள் மக்களே. அடுத்தவனுக்காக நீங்க உங்க உடம்பைச் சொறிஞ்சா உங்க உடம்பு தான் புண்ணாகும். அடுத்தவனுக்கு எதுவும் ஆகாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

(ரகுவின் பதிவிற்குப் பதிலிடுவதற்காக மட்டும் விடுப்பில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்! :D )

 

நெடுக்கர் சொன்ன கருத்துகளே என்னுடையதும். எனக்கும் 41 ஆகி விட்டது, ஆனால் என் மகள் இன்னும் சிறியவள் என்பதால் இன்னும் பல காலம் ஓடியாடித் திரிய வேண்டிய தேவையை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். அதனாலேயே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டி உடற்பயிற்சிகளைக் கிரமமாகச் செய்கிறேன். நாய்க்குணம் எனக்கு முப்பதில் இருந்ததை விட இப்போது குறைந்து விட்டது. கண் பார்வை கொஞ்சம் குறைந்தது, ஆனால் எடுப்பான பிரேமில் கண்ணாடி போட்டுக் கொண்டேன்! :D  வேலையிலும் வேறு விடயங்களிலும் ஒரு அவசரம் கலந்த நிதானம் தொற்றிக் கொண்டுள்ளது. இன்னும் ஒரு இருபது வருடங்கள் தானே மிச்சமிருக்கிறது? என்ற நினைவு முக்கியமான விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தத் தூண்டுகிறது!

 

Bottom line: எல்லாம் நாம் பார்க்கிற பார்வையில் தான் இருக்கிறது! :)

  • கருத்துக்கள உறவுகள்

ரகு

 

உங்களது காதல்க்கதை எழுதிய அதே வசனம் தான்

இயற்கையாக இருங்கள்...

காலத்தின் போக்கில் நடக்க பழகுங்கள்..

எதை எதை எம்மால் மாற்றமுடியாதோ

அதற்கு எதற்கு வீண் முயற்ச்சி

மனக்கவலை

மாறாக இவையே எம்மை மேலும் பலவீனமாக்கிவிடும்..

 

எனது கணிப்பின்படி உங்களைவிட எனக்கு 10 வயது அதிகமிருக்கும்

 

நீங்கள் எழுதிய எந்த நினைவும் எனக்கு வந்ததில்லை

அதேநேரம்

மீசையில் நரை வர மீசையையே எடுத்துவிட்டேன்

தலைக்கு கலர் பூசிக்கொள்வேன்

(எனக்கு 14 வயதிலேயே நரை வந்துவிட்டது)

மக்களின் உத்தரவுக்கமைய (தங்களைப்போலவே தங்களது பிள்ளைகளையும் நான் உருவாக்கித்தரணுமாம்)

இதுவரை சாப்பாட்டால் மட்டும் எனது உடலில் தேவையற்ற சத்துக்கள் அதிகரிக்காமல் பார்த்துவருகின்றேன்.

ஆனால் இதையெல்லாம முதுமையுடன் தொடர்பு படுத்தியதில்லை

எனது பெடியள் 5 கிலோமீற்றரை 20 நிமிடத்தில் ஓடி முடிப்பார்கள்

அதற்காக நானும் அப்படி ஓடவேண்டுமா?

ஓடமுடியுமா என்ன....?

 

அதேநேரம் மனைவியிடமும் மக்களிடமும்

நான் ஐரோப்பியனாக இருந்தால்

இப்பத்தான் எனக்கு பொண்ணு பார்க்கும் வயது என்பேன்.. :wub:

 

இன்னொன்று எனக்கு சாவு பற்றிய எந்த பயமும் இல்லை

மனைவியையும் மக்களையும்  எனக்கு சாவு என்றும் வரலாம் அதற்கு நான் தயாராக இருப்பதாக சொல்லி

அவர்களையும் அதற்கு தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றேன். (எனது வயது நண்பர்கள் சிலர் போய்விட்டார்கள்)

எனது ஆயுள் 55 என்றும்

அதற்கு மேல் கிடைப்பதெல்லாம் அன்பளிப்பு என்றும் சொல்லி வைத்திருக்கின்றேன்.

 

இருக்கும்வரை வாழ்வோம் வாழ்க்கையை..

நாமும் சந்தோசமாக இருந்தபடி

எம்மை சுத்தியிருப்போரை சந்தோசமாக வைத்தபடி

நாலு பேருக்கு உதவிபடி...

 

சாவு வரும்  போது

இந்தப்பிறவியில் எமது கடன் முடிந்தது என்று சந்தோசமாக...

 

நன்றி பதிவுக்கு..

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயதைப்பற்றி நான் சிந்திப்பதேயில்லை. நரை பற்றி கவலைப்படுவதும் இல்லை. மனதை இளமையாக வைத்திருக்கின்றேன். அதுவே எனக்கு புத்துணர்ச்சியை தருகின்றது.  :icon_idea:  :)

என்ன இது யாழ்களத்தில் ஒரே கிழட்டுக் கூட்டமா இருக்கு. இந்தப் பக்கம் நான் இனி வர யோசிக்கணும். இப்பதான் 19 இருந்து 20 க்கு வந்ததுக்கு நான் கவலைப்படுகிறன். இதுக்குள்ள உங்களை மாதிரி 40, 50 க்கு எல்லாம் கவலைப்பட முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இது யாழ்களத்தில் ஒரே கிழட்டுக் கூட்டமா இருக்கு. இந்தப் பக்கம் நான் இனி வர யோசிக்கணும். இப்பதான் 19 இருந்து 20 க்கு வந்ததுக்கு நான் கவலைப்படுகிறன். இதுக்குள்ள உங்களை மாதிரி 40, 50 க்கு எல்லாம் கவலைப்பட முடியாது.

 

என்ன தம்பி நாங்கள் இரண்டு மூண்டு பேர் வந்து எழுதினத்துக்கே பெரிசாய் அலுக்கிறியள்???  இன்னும் நாலைஞ்சு பெரீய பிலாப்பழங்கள் வரக்கிடக்கு எண்டதையும் ஞாபகத்திலை வைச்சிருங்கோ...happy01941.gif

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எதை நினைக்கின்றோமோ அவை எம்மை நாடி விரைந்து வந்துவிடும். நரை ,திரை மூப்பை கொஞ்சம் தள்ளி வைக்கலாமே தவிர தப்பி ஓட முடியாது. ஆகையால் அவற்றையிட்டு கவலைப்பட்டு பலனில்லை.கூடுமான வரை மனதில் மகிழ்ச்சியை நிரப்பி விட வேண்டும்.

 

இதுவரை நான் :

 

டை  யைத் தொட்டதில்லை - அதனால்

டையும்  என்னைத் தொடரவில்லை.

 

வரும்போது பார்க்கலாம்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது யாழ்களத்தில் ஒரே கிழட்டுக் கூட்டமா இருக்கு. இந்தப் பக்கம் நான் இனி வர யோசிக்கணும். இப்பதான் 19 இருந்து 20 க்கு வந்ததுக்கு நான் கவலைப்படுகிறன். இதுக்குள்ள உங்களை மாதிரி 40, 50 க்கு எல்லாம் கவலைப்பட முடியாது.

நான் சொல்ல வந்ததை நீங்கள் சொல்லிட்டிங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சின்னப்பொடியலும் கருத்து சொல்லலாமோ

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை எந்த இணையதளத்தில் எடுத்தேன் என்பது மறந்துவிட்டது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் (வேறு பல திரிகளின்) கருத்துக்களோடு நான் உடன்படா விட்டாலும், இத்திரி குறித்த அவரின் தத்துவத்தோடு இணைந்து போகின்றேன்.
எப்போதும் ஜாலியாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் ...
சிரிப்பை நிறுத்தி விடாதீர்கள் .. எப்போது இளமையாக உணரலாம்..
(புதிதாக ஒரு காதலில் மாட்டிக் கொள்ளுங்கள் ... இளமை தானாக ஓடி வரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சசி,அதிலும் ஒரு சிக்கலிருக்கே.புதிய காதலைத் தேடும்போது இருக்கும் மனைவியை என்ன செய்வதாம்?

சசி,அதிலும் ஒரு சிக்கலிருக்கே.புதிய காதலைத் தேடும்போது இருக்கும் மனைவியை என்ன செய்வதாம்?

  • கருத்துக்கள உறவுகள்

சசி,அதிலும் ஒரு சிக்கலிருக்கே.புதிய காதலைத் தேடும்போது இருக்கும் மனைவியை என்ன செய்வதாம்?

சசி,அதிலும் ஒரு சிக்கலிருக்கே.புதிய காதலைத் தேடும்போது இருக்கும் மனைவியை என்ன செய்வதாம்?

 

ரகு அண்ணா,

எல்லா விசயத்தையும் (எல்லாருக்கும்)  சொல்லிகொண்டா செய்வார்கள்.

வீட்டுக்கு புதிதாக சக்களத்தியை கொண்டு வராத "ஜில் என்று ஒரு காதலாய்" இருக்கட்டுமே  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சசி......ஆகா, இது தெரியாமப் போச்சே எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மில் பலர் விடும் தவறே....
40 வயதுக்கு மேல் உடற் பயிற்சியை ஆரம்பிப்பது.
உடற் பயிற்சி என்றால்... "ஜிம்" ற்குப் போய்த்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.
அவ்வப் போது சைக்கிள் ஓட்டம்,  காலாற நடை, பொழுது போக்கு தோட்டம்.... போன்றவையே போதும்.
அதை விட முக்கியம்... வயது ஏறுகின்றது என்று கவலைப்பட்டால்.... அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
40 வயதுக்குப் பின் உணவுக் கட்டுப்பாடும், கிரமமாக வைத்தியரை சந்திப்பதும்.... மிக அவசியம். 
 

சென்ற நான்கு  கிழமைகளில் மட்டும்... எனக்குத் தெரிந்த மூன்று  பேர், நன்றாக ஓடியாடி வேலை செய்தவர்கள்.... இத்தனைக்கும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.... திடீரென்று வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார்கள்.
உணவு பழக்கத்தை மாற்றாததும், வைத்திய ஆலோசனை பெறாமல் தமது வாழ்க்கையை கொண்டு சென்றதும் தான்..... முக்கிய காரணம்.

சசி,அதிலும் ஒரு சிக்கலிருக்கே.புதிய காதலைத் தேடும்போது இருக்கும் மனைவியை என்ன செய்வதாம்?

சசி,அதிலும் ஒரு சிக்கலிருக்கே.புதிய காதலைத் தேடும்போது இருக்கும் மனைவியை என்ன செய்வதாம்?

 

ரகு இங்க என்ன நடக்குது? :icon_mrgreen::lol: 

 

ரகு அண்ணா,

எல்லா விசயத்தையும் (எல்லாருக்கும்)  சொல்லிகொண்டா செய்வார்கள்.

வீட்டுக்கு புதிதாக சக்களத்தியை கொண்டு வராத "ஜில் என்று ஒரு காதலாய்" இருக்கட்டுமே  

 

ஆஆஆ சசி எப்ப தொடக்கம் இந்த சேவை :o:lol:  நல்லாதான் இருக்கு அறிவுரை :unsure:

 

நெடுக்கரின் (வேறு பல திரிகளின்) கருத்துக்களோடு நான் உடன்படா விட்டாலும், இத்திரி குறித்த அவரின் தத்துவத்தோடு இணைந்து போகின்றேன்.

எப்போதும் ஜாலியாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் ...

சிரிப்பை நிறுத்தி விடாதீர்கள் .. எப்போது இளமையாக உணரலாம்..

 

 

அதேதான் :D:lol:

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வெள்ளைக்கார நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன். எதேச்சையாக இந்த இடை வயதுப் பிணக்குப் பற்றிக் கேட்டேன். ஓ.....அதுவா?? அது ஒரு பிரச்சினையே கிடையாது என்று சொன்னான். கூடவே ஒரு கேள்வியும் கேட்டான், "ஒருவனுக்கோ ஒருத்திக்கோ காதல் என்பது இரன்டு பருவங்களில் வருகிரது, எந்தப் பருவங்கள் என்று உன்னால் சொல்ல முடியுமா என்று கேட்டான்? தெரியாது என்று சொன்னேன். முதலில் வாலிபப் பருவம், டீன் ஏஜில் வருகிறது. இரண்டாவதாக 40 வயதில் வருகிறது. ஆனால் 40 வயதில் வருவதற்குத்தான் வீரியம் அதிகம் என்று சொன்னான். 

 

சரி, வேறு என்னவெல்லாம் மாறுகின்றதென்று கேட்டேன். வாழ்க்கையே மாறுகிறது, துணைவி, வீடு, கார் என்றெல்லாமே மாறிவிடுகிறது என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுச் சிரித்தான். 

 

அவன் கூறியதிலெனக்கு உடன்பாடில்லை. 40 வயதிற்குப் பிறகு நாம் வாழ்க்கை கீழிறங்குகிறதென்கிறோம், அவனோ ஆரம்பிக்கிறதென்கிறான். அவனது வாழ்க்கைமுறைக்கும் எமது முறைக்குமிடையே பாரிய இடைவெளி இருக்கிறது.

 

 

 

 


ரகு இங்க என்ன நடக்குது? :icon_mrgreen::lol: 
 


 

ஆஆஆ சசி எப்ப தொடக்கம் இந்த சேவை :o:lol:  நல்லாதான் இருக்கு அறிவுரை :unsure:
 


 

அதேதான் :D:lol:
 

 

 

சும்மாதான் நவீனன்?? சசியின் பதிலுக்கு நகைச்சுவையாக எழுதியது,.நீங்கள் ஒன்றும் கற்பனை பண்ண வேண்டாம் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இவர் சொல்வதைக் கேளுங்கள். 

 

ஆனால், அதில் தீமை ஏதுமில்லை, பலர் இன்னும் மகிழ்வாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். என்னையும் நான் அப்படியே பார்க்கிறேன்....!


பல ஆண்கள் தமது இடைநிலை வயதுகளில் தமது கனவுலக ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளும் விதமாக அதிநவீன கார்களை வாங்கி ஓடுகிறார்கள். தொடர்ச்சியாக வரும் ஆராய்ச்சியின் பலன்களையும் பாருங்கள், நான் சொல்வது புரியும்.

 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது 20 களிலோ அல்லது 30 களிலோ எனது உடல்நிலை குறித்தோ அல்லது உடற்பயிற்சிகள் செய்வது குறித்தோ நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. 

 

ஆனால் இன்று அப்படியில்லை வீட்டிலிருக்கும் எனது கஜிம்மில் வாரத்திற்கு குறைந்தது 3 அல்லது 4 தடவை உடற்பயிற்சி செய்கிறேன். உடலிலும் வித்தியாசம் தெரிகிறது. நான் இன்றிருக்கும் உடல் ஆரோக்கியத்துடன் முன்னர் இருந்ததில்லை. இந்த உணர்வே புத்துணர்ச்சி தருகிறது. நான் நினைப்பதைத்தான் இந்த 72 வயது வைத்தியரும் சொல்கிறார். அவரது உடற்கட்டைப் பாருங்கள், 30 வயது ஆணழகன் போலிருக்கிறார். அதற்காக அவருட்கொள்ளும் ஹோர்மோன் ஊக்கியைப் பாவியுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் அந்த இளமையான மனம்தான் அவசியம் என்கிறேன்.

 

இன்னொரு வைத்திய நிபுணரோ, இது ஒரு பிரச்சினையே இல்லை, உங்களின் இளமையை நீங்கள் மீட்டெடுப்பதற்கான சந்தர்ப்பம் என்று கூறுகிறார். ஜிம்மிற்குச் செல்லுங்கள், ஹோர்மோன் ஊக்கியெல்லாம் வேண்டாம், தேவையானளவு ஆரோக்கிய உணவுடன் முடிந்தளவு உடற்பயிற்சி செய்யுங்கள், இளமை திரும்பும், முதுமை வெளியில் நிற்கும் என்கிறார்.

 

நான் இன்றிருக்கும் உடல் நிலையுடன் முன்னர் இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். இன்றைக்கு எனக்கு 10 அல்லது 15 வயது அதிகமாக இருக்கலாம், ஆனால், அன்றிருந்ததைக் காட்டிலும் இன்று இளமையாக இருக்கிறேன் என்று மனதளவில் உணர்கிறேன்.

 

நான் இன்று செய்யும் அதீத முயற்சிகள் வரவிருக்கும் எனது முதுமையைத் தாமதப் படுத்தத்தான் என்றாலும் கூட, அதில் உள்ள பலாபலன்களையும் நான் அனுபவிக்கத் தவறவில்லை.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50 வயதை நெருங்கும் இந்த நண்பர் சொல்வதைக் கேளுங்கள். தான் அதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார். 

 

ஆண்கள் தாம் எதை விரும்புகிரார்களோ அதை வெளியே கொணருதல் அவசியம் என்கிறார். நீங்கள் எதையெல்லாம் செய்யவேண்டும் என்றோ அல்லது இதுவரை செய்ய முடியவில்லையே என்று ஏங்குகிறீர்களோஅதையெல்லாம் செய்யுங்கள் என்கின்றார்.

 

நீங்கள் விரும்புவதை தயக்கமின்றிச் செய்யுங்கள், எதிர்பார்ப்பின்றிச் செய்யுங்கள் என்கிறார். அப்படி நீங்கள் விரும்புவதைச் செய்யும்போது நேரம் ஒரு பிரச்சனையாகத் தெரியாது என்கிறார். 8 மணிநேரம் ஒரு 5 நிமிட நேரமாக மாறும் என்கிறார். இறுதியாக நீங்கள் விரும்புவதை நீங்கள் செய்யத் தொடங்கும்போது அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் விரும்புவீர்கள் என்று முடிக்கிறார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.