Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களை அழித்துவிட்டு மௌனம் காக்கும் இந்தியா - யுத்தம் தொடர்பில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - அனந்தி சசிதரன்

Featured Replies

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்தவை குறித்து இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று   நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் பங்களிப்பு பாரியளவில் இருந்தமை வெளிப்படையான உண்மை. சாட்சியங்கள் இல்லாமல் நடத்தப்பட்ட இன அழிப்புப் போரில் சாட்சியத்தைக் கொண்டுவரும்படிக் கோருவதும் அதற்கான ஆதாரத்தைக் கேட்பதும் நகைப்பிற்குரியது என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘இறுதிப்போரில் நாங்கள் இருந்தோம் எங்களுடைய சாட்சியைத் தவிர வேறு சாட்சி இல்லை,’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.பதிவு இணைய செய்தி

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இறுதிப்போரில் விடுதலைப் புலிகளின் சரணடைவு பற்றி, இன அழிப்பு பற்றி இப்பொழுது இந்திய ஜனாதிபதியாக இருக்கின்ற பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன், விஜய் நம்பியார் மற்றும் சிதம்பரம் இவர்களுக்கு எல்லாம் பங்கில்லையா என்று இந்திய மத்திய அரசைக் கேட்கின்றேன். வெறுமனே அரசியல் இலாபத்திற்காக எங்களை அழித்துவிட்டு மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 6 வருடம் முடிந்து பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நான் விடுக்கின்ற கோரிக்கை, இறுதி யுத்தம் தொடர்பில் இந்திய அரசாங்கம் இதய சுத்தியுடன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும். என்றார்.பதிவு இணைய செய்தி

இதேவளை, கடந்தவாரம் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சரணடைந்த சம்பவம் குறித்து கூறிய கருத்துக்கு அனந்தி சசிதரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.பதிவு இணைய செய்தி

தனது கணவர் இராணுவ உயரதிகாரிகளிடம் தன்னால் கையளிக்கப்பட்டதாகவும் அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான போராளிகள், பொறுப்பாளர்கள், குடும்பத்தினர், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என்ற வகையில் தான் அந்த சரணடைவு இடம்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டதாவது;பதிவு இணைய செய்தி

கருணாநிதியினுடைய மகள் 16.05.2009 அன்று இரவு என்னுடைய கணவருடன் செய்மதி தொலைபேசியூடாகக் கதைத்திருந்தார். அந்த சம்பவத்தின்போது நான் தான் நின்றேன். நான் தான் அதன் சாட்சி. என்னுடைய கணவரிடம் கேட்டேன். அப்போது அவர் கூறினார், ‘முதல்வர் கருணாநிதி சார்பில் கனிமொழி அவர்களிடம் நான் பேசுகிறேன். கனிமொழி அவர்கள் எங்களை ஆயுதத்தைப் போட்டுவிட்டு சரணடையுமாறும் சர்வதேசத்துடன் எங்களுடைய விடுதலை தொடர்பில் பேசுவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தார், என்றார்.

http://www.pathivu.com/news/40815/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே தேத பாணியை பின்பற்றுறா.

இந்தியாவை சீண்டுவதில் அப்படி என்ன இன்பமோ?

அதுதான் அடிச்சு தொங்க விட்டாங்கள்ல இன்னும் ஏன் போய் அங்கயே சொறியுரீங்க?

இவவை கஜன் கம்பேனிக்கு துரத்தும் காலம் தொலைவில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தர்மம் வெல்லும் வரை, நீதி கிடைக்கும் வரை எம்மக்களை அழித்தவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது. 6 வருடம் என்ன 60 வருடம் ஆனாலும் காத்திருப்போம். இன அழிப்பு புரிந்தவர்கள் தப்பியதாக வரலாறு இல்லை. இப்போது கொடி பிடிப்பவர்கள், பின்பு குத்துக்கரணம் அடிக்க வேண்டி வரும்.

சகோதரி தனித்து நின்று விடும் அறிக்கைகள், பலருக்கு வயிற்றில் புளியை கரைக்கும். தமிழ் தேர்தல் களத்தில் நிக்கும் யாராவது இதை எதிர்த்து அறிக்கை விடுவார்களா? காங்கிரஸ் கூட்டணி எம்மை அழிக்க வில்லை என்று மக்கள் முன் சொல்வார்களா?

அப்படியே தேத பாணியை பின்பற்றுறா.

இந்தியாவை சீண்டுவதில் அப்படி என்ன இன்பமோ?

அதுதான் அடிச்சு தொங்க விட்டாங்கள்ல இன்னும் ஏன் போய் அங்கயே சொறியுரீங்க?

இவவை கஜன் கம்பேனிக்கு துரத்தும் காலம் தொலைவில் இல்லை.

உண்மையைச் சொன்னால் ஏன் உங்களுக்கு அரிக்குது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரிப்பும் இல்லை ராசா, ஒருத்தர் இந்தியாவோட சொறிஞ்சதுக்கே முழு இனமும் 2009 பெரிய விலையை கொடுத்தது.

இப்ப அன்ரி வேற அதே பாணியில் வெளிக்கிடுறா அதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு அரிப்பும் இல்லை ராசா, ஒருத்தர் இந்தியாவோட சொறிஞ்சதுக்கே முழு இனமும் 2009 பெரிய விலையை கொடுத்தது.

இப்ப அன்ரி வேற அதே பாணியில் வெளிக்கிடுறா அதுதான்.

சொறிஞ்சதுக்கே ஒரு இனத்தையே அழிக்கிற அளவுக்கு மண்டையுக்கை என்ன களிமண்ணா இருக்குது?

பாக்கிஸ்தான் இல்லை சீனாவோடை தன்ரை பலத்தை காட்டட்டும் பாப்பம்?

உங்களைப்போன்றவர்கள் செத்தவீட்டிலும் சுகம் காணக்கூடியவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சூறா,

இந்த ரேட்டில மண்டையில் லைட் எரிஞ்சா, சூடுதாங்காது கவனம்.

குசா,

வெறிநாய் எண்டு தெரியுதில்ல? ஒருக்கா கல் எறிஞ்சு வாங்கியது பத்தாதெண்டு அன்ரி இன்னும் கல்லெறிஞ்சா என்ன செய்யலாம்?

பாகிஸ்தானை, சீனாவை விட்டு பைப்பான் ஆனால் நம்மை பின்னி பெடல் எடுத்திருவான். அனுபவப்பட்ட பின்னும் தொடர்ந்தும் ஏன் குரங்குஞ்சேட்டை?

கொஞ்சம் கஷ்டபட்டாலும் அப்பத்தான் அறிவாளி எண்டு நம்புவாங்கப்பா.   :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை தந்தை நாடு என்று மாவீரர் நாளில் சொன்னது இந்தியாவுக்கு விளங்கவில்லையாம்.

0ee56ceef28cedbb71e90f5dbf5cfb19

மற்றும்படி இந்தியாவை அரவணைச்சு இருந்தாலும் இயக்கங்களை மோத விட்டது போல நரி விளையாட்டு தான் செய்து இருப்பார்கள்.

இந்தியா மோதவிட்டால் மோத நாங்கள் என்ன ஆறறிவு இல்லாதவர்களா ? 

வேறு இயக்கங்கள் தங்களுக்குள் மோதியதாய் எனக்கு தெரியாது .ஐந்து அறிவு உள்ளதுதான் அனைவருடனும் மோதியது .

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபி கட்டாய ஆட்சேர்ப்பு செய்தது எதற்குள் அடங்கும். ஐந்தறிவுக்குள்ளா அல்லது ஆறறிவுக்குள்ளா?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே கோசான்,'தேத' எண்டா என்னண்ணே ...என்ர அறிவுக்கு எட்டுதில்லே

  • கருத்துக்கள உறவுகள்

வ்வுனியாவில் சித்தர் ரெலோ வை போட்டதும் ரெலோ புளட்டை போட்டதும் , கிழக்கில் ஈபி ரெலோ மாறிமாறி போட்டதும் எங்களுக்கு மறந்திட்டுது.

இதுக்குள்ள என்க்கு எல்லாம் தெரியும் எனக்கு எல்லா தொடர்பும் இருக்கென்ட பீலா வேற.

சூறா,

இந்த ரேட்டில மண்டையில் லைட் எரிஞ்சா, சூடுதாங்காது கவனம்.

குசா,

வெறிநாய் எண்டு தெரியுதில்ல? ஒருக்கா கல் எறிஞ்சு வாங்கியது பத்தாதெண்டு அன்ரி இன்னும் கல்லெறிஞ்சா என்ன செய்யலாம்?

பாகிஸ்தானை, சீனாவை விட்டு பைப்பான் ஆனால் நம்மை பின்னி பெடல் எடுத்திருவான். அனுபவப்பட்ட பின்னும் தொடர்ந்தும் ஏன் குரங்குஞ்சேட்டை?

வெறி நாய் எண்டு தெரிஞ்சால் உடனடியாக போட்டு தள்ளிட வேணும்.biggrin.png  அதுதான் எல்லோருக்கும் நல்லது, பாதுகாப்பானது. laugh.png

இந்தியாவை தந்தை நாடு என்று மாவீரர் நாளில் சொன்னது இந்தியாவுக்கு விளங்கவில்லையாம்.

சரி தந்தை நாடு இந்தியா
அப்ப தாய்நாடு இலங்கையா?
  • கருத்துக்கள உறவுகள்

டண்டு,

அமெரிக்க விடுதலையை வென்று எடுத்த வார்சிங்டன் , கறுப்பின விடுதலை நாயகன் லிங்கன், தென்னாபிரிக்க விடுதலை நாயகன் மண்டேலா எல்லோரும் இன்றுவரை மிஸ்டர் பிரசிடெண்ட்தான்.

சுபாஸ் இன்றைக்கும் நேதாஜி (அண்ணா) மட்டுமே.

கஸ்ரோ, மாவோ, லெனின் எப்போதும் தோழர் (கம்ரேட்) தான்.

ஆனால் காந்தி மகாத்மா, நேரு ஆசிய ஜோதி, அண்ணா பேரறிஞர், எம்ஜிஆர் மக்கள் திலகம், செல்வா தந்தை (ஊருக்கேயா?), அமிர் தளபதி, நாகநாதன் இரும்பு மனிதன், சிவசிதம்பரம் உடுப்பிட்டிச் சிங்கம் ( உடுப்பிட்டியில் ஏதையா சிங்கம்), சம்பந்தர் திருமலை காவலர்.

பிரபாவுக்கும் அவர் ஓர் விடுதலை போராளியாய், தலைவனாய் தொடங்கும் போதே தம்பி என்று ஒரு அழைப்பு இருந்தது.

ஆனால் சுற்றி இருந்த துதிபாடிகள், பப்பா மரத்தில் ஏற்றுபவர்களுக்கு அது போதவில்லை. அதன் விளைவே "மேதகு" வும் "அதி மேதகு" வும் தேத வும்.

பிரபா தன்னை தானே அப்படி அழைக்காவிடினும், ஏனையோர், அவர் கீழுள்ளோர், அவரின் ஊடகங்கள் அப்படி அழைப்பதை ஆனோதித்தார்.

தன்னை புகழ்ந்து, முருகனுக்கு நிகர்த்து இறுவெட்டு வெளிவருவதையும் ரசித்தார்.

எல்லா பெரிய மனிதரிலும் சில குறைபாடுகள் இருக்கும். இவருக்கு இது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரிப்பும் இல்லை ராசா, ஒருத்தர் இந்தியாவோட சொறிஞ்சதுக்கே முழு இனமும் 2009 பெரிய விலையை கொடுத்தது.

இப்ப அன்ரி வேற அதே பாணியில் வெளிக்கிடுறா அதுதான்.

நானும் ஒரு சாட்சி  எனது சாட்சியையும் ஏற்றுக்கொண்டு ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளின் விசாரணையில்  அதற்குக் காரணமாக இருந்த அன்றைய அண்டை நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினரையும் அவரது சகாக்களையும் விசாரணையில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்ற அனந்தி அவர்களின் கோரிக்கை நியாயமானதே.

அதை விடுத்து தே த்தா கா த்தா எனக் கோ த்தாவிற்குத் துதிபாடும் நிலையை மாற்ற வேண்டும்.

ஒருமுறை ஹிந்தியர்களுடன் மோதியதால் தான் இந்த அழிவு வந்தது

எனும் கருத்துக் குழந்தைப் பிள்ளைகளுக்குப் பூச்சாண்டி காட்டுவது மாதிரி இருக்கின்றது கோ சான் சே 

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் இந்தியா சும்மா பகிடிக்கி செய்தது.

87 யுத்ததிற்க்கும், ராஜீவ் கொலைக்கும் முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. எல்லாம் பூச்சட்டி, சே பூச்சாண்டி.

என்னது பூசனியா, சோறா? எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரி இப்ப மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டுதான் அலுவல் பார்க்கின்றாவாம். அவவை ப்யூட்டி பார்லரில் கண்டவை சொன்னவை. இதுக்குப் போய் என்னை எல்லாம் திட்டக்கூடாது.

யாழ். ஊடகவியலாளர் மாநாட்டின் படங்களை வடிவாக பாருங்கோ. ஆளின் தலைமுடியினை பார்த்தாலே நன்கு தெரியும்.

மேக்கப் போட்டால் என்ன என்று இங்கே என்னோடு சண்டைக்கு வர வேண்டாம். மற்றவர்கள் செய்தால் பிழை. இவர் செய்தால் சரி என்று வாதிடுபவர்களுக்குத்தான் இதனை பதிவு செய்தேன்.

கன்னுவைக்காதிங்க நிர்மலன், யாழ்ப்பாணத்தில பியுட்டி பலர்ஸ் இருக்கிறது நல்லதுதானனே.

இதெல்லாம் மேக்கப்பு என்று யாரு சொன்னது? விடியோ காரரின் கைவண்ணமாக கூட இருக்கலாம். 

இந்தியா மோதவிட்டால் மோத நாங்கள் என்ன ஆறறிவு இல்லாதவர்களா ? 

வேறு இயக்கங்கள் தங்களுக்குள் மோதியதாய் எனக்கு தெரியாது .ஐந்து அறிவு உள்ளதுதான் அனைவருடனும் மோதியது .

அட அது தானே பார்த்தன் ..ஒரு வரலாறும் இந்த அண்ணாச்சிக்கு தெரியலே என்று ... அரைகுறையா ...
விளக்கம் இல்லாட்டி சும்மா பீல் விடக்கூடாது .... டெலோ வும் புளொட் உம செய்த கொலைகள் உட்கொலைகள்  என்ன தெரியாதோ ... அதுக்கப்புறம் தானே புலிகள் இந்த மிருகங்களை வேட்டை ஆடினவர்கள் ... 
வரலாறு எல்லாருக்கும் தெரியும் ... அலட்ட கூடாது ....

ஓமோம் இந்தியா சும்மா பகிடிக்கி செய்தது.

87 யுத்ததிற்க்கும், ராஜீவ் கொலைக்கும் முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. எல்லாம் பூச்சட்டி, சே பூச்சாண்டி.

என்னது பூசனியா, சோறா? எங்கே?

அமெரிக்காவுக்கும் இந்தியவிக்கும் புலிகள் தேவை இல்லை ஆன போது அவர்களை அழிக்க எப்பவோ முடிவு எடுத்து விட்டார்கள் .. அதில் ராஜீவ் கொலை சும்ம ஒரு சாட்டு ... இந்த அரசியல் விளக்கம் தெரியவில்லையா அல்லது சும்மா அலட்டலா .....
 
புலிகளை அழிக்க சமாதானம் என்று உலக நாடுகள் கையில் எடுத்த ஆயுதம் ... இது தேசியத்தலைவர் , பாலா அண்ணர் எல்லாருக்கும் நன்றாக தெரியும் ... எந்த தெரிவினை புலிகள் எடுத்தாலும் இறுதியில் அழிவு தான் ...
 
இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டதால் தான் ...வேறு வழி இல்லாமல் உலக நாடுகள் செய்த போரினை எதிர் கொண்டார்கள் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.