Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வை பெற்றுத்தருவோம் - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்துடன் வெல்லும். ஆனால் தீர்வு காண்பது என்பது தீர்வை தருபவர்கள் சொல்ல வேண்டும். தீர்வை இன்னுமொருவரிடம் இருந்து பெறப்போவர்கள் சொல்ல முடியாது. தீர்வு வருவதற்கான சாத்தியக்கூறுகளை சொல்லலாம். தீர்வு வரும் என ஆசை வார்த்தை கூறக்கூடாது.

கூட்டமைப்பு வெற்றியடைய வேண்டுமென்பதே அனைத்து தமிழர்களினதும் அடிமனது ஆசை.

ஆனால் அவர்களின் மென்மைப்போக்கான அரசியல் நடவடிக்கைகள் சிங்கள காட்டுமிராண்டி அரசியலுக்கு எடுபடமாட்டாது என்பதுதான் என் ஆதங்கம்.


அத்துடன் இதர அரசியல் கட்சிகளையும் தார்மீக மனதுடன் அரவணைத்து செல்லவேண்டிய தலையாய கடமையும் இவர்களுடையதே.

  • Replies 51
  • Views 3.9k
  • Created
  • Last Reply

புங்கையூரான் உங்கள் இந்த இணைப்பு 1977 ல்  சம்பந்தர் உட்பட தமிழர்கூட்டணி தலைவர்கள் தமிழீழ கோசத்தோடு மக்களை தமது  பாராளுமன்ற கதிரைகளுக்காக  உணர்ச்சிவசப்படுத்திய போது கூட்டணி கூட்டங்களில் தென்னைமர உயரத்திற்கு வெடி கட்டி கொழுத்தி மகிழ்ந்ததை ஞாபகப்படுத்தியது. நன்றி.

"வழக்கம்போல் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறுவோம் என இம்முறையும் கூறியிருக்கும் சம்பந்தர் அய்யா, ஆனால் இந்தமுறை ஒரு வருடத்திற்குள் பெறப்படும் என கால எல்லையுடன் உறுதியளித்துள்ளார்.
இங்கு நமது கேள்வி என்னவெனில்,
• கடந்த தேர்தல்களிலும் இதையே கூறி வென்றீர்கள். ஆனால் ஏன் உங்களால் தீர்வு பெறப்படவில்லை?
• இதுவரை எந்த தீர்வையும் பெற முடியாத உங்களால் இம் முறை எப்படி பெறுவீர்கள் என்பதை மக்களுக்கு தெளிவாக கூறமுடியுமா?
• குறிப்பிட்டபடி ஒரு வருடத்திற்குள் தீர்வை பெற முடியாது போனால் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்வீர்களா?"

11751745_10155686479505012_5210443191639

அன்றும்... இன்றும்..

சந்தர்ப்பவாதத்தின் இலக்கணப் பிறப்பு = "சம்பந்தர்"

அன்று புலிக்கொடி முன் தேசியத் தலைவர் அருகில் வீற்றிருந்ததும் இதே சம்பந்தர்!

இன்று சிங்கக் கொடி ஏந்தி இனப்படுகொலையாளர்கள் அருகில் நின்றுகொண்டு இருப்பதும் இதே சம்பந்தர்!

அன்று புலி சாயம்... இன்று புலி துரோகம்...

அன்று புலி வால்.. இன்று புலிகளை அறுக்கும் வாள்...

புழுதி மண் படாமலே மக்கள் தொகுதிகளுக்கு செல்லாமலே அரசியல் செய்யும் இவர்கள் போன்றோர் புழுதி மண்ணில் புரண்டு எழுந்து மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காக உயிர் கொடுத்த புலிகளை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது????

பச்சோந்திகள் கூட எதிரியிடம் இருந்து தம்மை காக்க நிறம் மாறும்.
ஆனால் எம்மிடையே உலவும் பச்சோந்திகள் எதிரிகளிடம் எம் இனத்தை விலை பேசி விற்று தம் நலன் காக்கவல்லவா நேரத்திற்கு நேரம் நிறம் மாறுகின்றார்கள்!

மண்ணுக்காக போராடிய மான மாவீரர்கள் எதற்கும் விலை போகாமல் உயிர் விலை கொடுத்தவர்கள். எங்கள் மண்ணில் அவர்கள் குருதியும் வியர்வையும் உறைந்து இருக்கின்றது.

ஒரு சொட்டு குருதியோ வியர்வையோ இவர்கள் எம் மக்களுக்காக சிந்தியதில்லை. உயிர் சிந்திய எம் உறங்காத கண்மணிகளை இழித்து பேசுவதா?

மண்ணுக்காக மரணித்த மாவீரர்களை மிதித்து எழுந்து தம்மை உயர்த்த நினைப்பவர்கள் மண்ணோடு மண்ணாவார்கள் என்பது உறுதி!

11745586_10155686420060012_7181876432422

 

 

11704960_10155686420305012_3150645719062

வெட்ககேடு தமிழர் அல்லாதோர் நடந்தது இனபடுகொலை என்று குரல் கொடுக்கிறார்கள் ஆனால் தமிழரான அரசியல்வாதிகள் 
பதவிக்காக தமிழ்உணர்வை சாகடிக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

87ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியால் பெற்றுத் தரப்பட்ட வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபை தீர்வு ஏற்கனவே உள்ளதே. இதைவிடச் சிறந்த தீர்வை பெறலாம் என்று சம்பந்தன் பகலில் நித்திரை கொண்டு கனவு காண்கின்றார் போலிருக்கு:grin:

  • கருத்துக்கள உறவுகள்

87ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியால் பெற்றுத் தரப்பட்ட வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபை தீர்வு ஏற்கனவே உள்ளதே. இதைவிடச் சிறந்த தீர்வை பெறலாம் என்று சம்பந்தன் பகலில் நித்திரை கொண்டு கனவு காண்கின்றார் போலிருக்கு:grin:

முதல்மைச்சர் சொல்லியிரிக்கிறார் தூர நோக்கு திம்பு கோட்பாடு என்று ......திம்பு கோட்பாட்டில் என்ன உள்ளது........பூட்டானில் இந்திய நாணயமும் பாவிக்கலாம் என்று நிணைக்கிறேன் அதுபோல சிறிலங்காவிலும் நடை பெறுமா?

சம்பந்தனின் உல்டா இருக்கட்டும் ,சிங்களம் ஓமாமே 2016 இல் தீர்வை தர . நேற்று என்னடா என்றால் பாதுகாப்பு செயலாளர் இராணுவத்திடம் கேட்கின்றரா தமிழர்களின் காணிகளை விட்விக்காலமா என்று அதக்கு அவர் இல்லை என்கின்றார் ...இப்படி இருக்கு சிங்களத்தின் நிலைப்பாடு ..ஒரு இம்மி கூட மாறவில்லை ... 

மோடிக்கு தங்கட நாட்டை கவினிக்கமட்டாமல் நாடுகள் சுற்றுகின்றார் இந்த லட்சணத்தில் சம்பந்தர் மகா புருடா அடிக்கின்றார் ...

***

Edited by இணையவன்

11751747_10205919691383640_4268247238270

  • கருத்துக்கள உறவுகள்
11745748_1617743795167639_28797848503922

 

  • கருத்துக்கள உறவுகள்

திம்புக்கோட்பாடி என்பது திம்ம்ப்வில் நடைபெற்ற பேசுவார்த்தைகளில் "தாயகம், தேசியம், சுயநிர்ணயம்" எனும் அடிப்படையில் தமிழர்களது பிரச்சனைக்கான தீர்வினை விரைந்துபெறப்படல்வேண்டும் என்பதை அப்போது இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டவர்களும் தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திப்போராடிய அனைத்து இயக்கங்களது கூட்டமைப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும்.

அதன் அடிப்படையிலேயே பின்பு விடுதலைப்புலிகள் கலந்துகொண்ட அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் மீண்டும் மீண்டும் முன்மொழியப்பட்டதுனாரம்பத்தில் அதற்கு இணங்கியிருந்த இந்தியா பின்பு மாறுபட்டகருத்துக்களை முன்வைக்கின்றது, இக்கோரிக்கையையே இப்போது விக்கி ஐயா முன்வைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

"Two nations may agree to live together by force of reason. 
They cannot be compelled to live together by force of arms"

 

It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:

- recognition of the Tamils of Ceylon as a nation

- recognition of the existence of an identified homeland for the Tamils in Ceylon

- recognition of the right of self determination of the Tamil nation

- recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils in Ceylon

Different countries have fashioned different systems of governments to ensure these principles. We have demanded and struggled for an independent Tamil state as the answer to this problem arising out of the denial of these basic rights of our people. The proposals put forward by the Sri Lankan government delegation as their solution to this problem is totally unacceptable. Therefore we have rejected them as stated by us in our statement of the 12th of July 1985. However, in view of our earnest desire for peace, we are prepared to give consideration to any set of proposals, in keeping with the above mentioned principles, that the Sri Lankan Government may place before us.

வெளிநாட்டில் இருந்து கொண்டு குத்தி முறியிறவை தான் கூட.  போய் உங்கட வேலையைப் பாருங்கோ... தாயகத்தில் உள்ளவை தங்கள் அரசியலைக் கவனிப்பினம்..

  • தொடங்கியவர்

பேரம் பேசும் சக்தியூடாகவே தீர்வைப் பெற முடியும்

article_1437303081-22.JPG

ஆட்சியாளர்களுக்கு இன்றியமையாத பேரம் பேசும் சக்தியாக இத்தேர்தலில் மாறுவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், நேற்று சனிக்கிழமை (18) தெரிவித்தார். திருகோணமலை, சேருவில தேர்தல் தொகுதியில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தொகுதிக் கிளை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்த உரையாற்றுகையில், இந்த அரசாங்கத்திடம் நாம் மிகவும் நிதானமாக நடந்து கொள்கின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவராவார். எனவே, இந்த ஆட்சியும் அமையவுள்ள ஆட்சியும் நமக்கு சாதகமான பல சந்தர்ப்பங்களை கொண்டுள்ளது. இதனை நாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தேர்தலின் பின்னர் எமது தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றேன் என்றார். 

http://www.tamilmirror.lk/150470#sthash.oIcDCWSb.dpuf

 

 

  • தொடங்கியவர்

புலிகளின் ஆயுத பலத்தை பார்த்து பயந்து பேச்சுக்கும் தீர்வுக்கும் அன்றைய அரசு முன்வந்தது: சம்பந்தன்

 

புலிகளின் ஆயுத பலத்தை பார்த்து பயந்து பேச்சுக்கும் தீர்வுக்கும் அன்றைய அரசு முன்வந்தது: சம்பந்தன்-


தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை பார்த்து பயந்து பேச்சுவாரத்தைக்கும் தீர்வுக்கும் அன்றைய அரசு முன்வந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அந்த இராணுவ பலத்தை தற்போது அரசியல் பலமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தேர்தல் முடிய தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் இரா சம்பந்தன் தெரிவித்தார். 

ஆகஸ்ட் 17 தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 20 ஆசனங்களை பெற்றால் ஏனைய இனமும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை பெறலாம் என்றும் கூறினார். 

திருகோணமலை சேருவில தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இரா சம்பந்தன் இதனைத் தெரிவித்தார். 

அதிகபடியான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால் இனப்பிரச்சினைக்கு இன்றியமையாத பேரம் பேசும் சக்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

1994இல் சந்திரிக்கா தமிழ் மக்களுக்காக தீர்வுப் பொதியொன்றை கொண்டுவந்தபோது அதற்கு மைத்திரிபால சிறிசேன பக்கபலமாக இருந்தவர் என்றும் அவரை தான் நீண்டகாலமாக அறிந்திருப்பதாகவும் சம்பந்தர் குறிப்பிட்டார். 

தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்பதில் மைத்திரிபால சிறிசேன உறுதியானவர் என்றும் சம்பந்தர் இதன்போது கருத்துத் தெரிவித்தார். 

இதேவேளை மைத்திரிபால சிறிசேன மகாத்மா காந்தி, பிரகாம் லிங்கன், மாட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்ற பெரியார்களின் வழியில் பயணிப்பவர் என்றும் இரா. சம்பந்தர் மேலும் தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122127/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஆயுத பலத்தை பார்த்து பயந்து பேச்சுக்கும் தீர்வுக்கும் அன்றைய அரசு முன்வந்தது: சம்பந்தன்

 

இதைத்தான் தலைவரும் சொன்னார்

சிங்கள  தலைவவர்கள்  உண்மையான  பௌத்தர்களாக இருந்தால்

நாங்கள் ஏன் ஆயுதம் தாக்குகின்றோம் என்று..

ஆயுதம் என்பது  பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கான ஒரு அழுத்தம் மட்டுமே என்று...

  • தொடங்கியவர்

"நாட்டில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றம் எமக்கு உதவப்போகின்றது முஸ்லிம்களும் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்"

நாட்டில் எதிர்­வரும் ஆகஸ்ட் 17 ஆம் திக­திக்குப் பின்னர் ஏற்­ப­டப்­போகும் ஆட்சி மாற்­ற­மா­னது எமக்கு உத­வு­வ­தா­கவே அமை­யப்­போ­கி­றது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

r.sampanthan_2.jpg
முஸ்லிம் மக்­க­ளு­டைய எதிர்­காலம் மத்­திய அர­சாங்­கத்தில் தங்­க­வில்லை. பிராந்­திய அரசின் அதி­கா­ரங்­களைப் பெறு­வ­தி­லேயே தங்­கி­யுள்­ளது. ஆகவே தேசியக் கட்­சி­க­ளுடன் கைகோர்க்­காமல் எம்­முடன் இணை­யுங்கள் என்றும் இரா.சம்­பந்தன் அழைப்பு விடுத்தார்.

தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பின் திரு­கோ­ண­மலை மாவட்ட வேட்­பாளர் அறி­முகம் திரு­மலை சில்­வஸ்டார் ஹோட்­டலில் கிளைத் தலைவர் கோ.சத்­தி­ய­சீ­ல­ராஜா தலை­மையில் நடை­பெற்ற போது அதில் கலந்து உரை­யாற்­றிய போதே அவர் மேற் கண்­ட­வாறு கூறினார்.

இரா.சம்­பந்தன் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் போக்­கிலும் மன­நி­லை­யிலும் ஒரு­மாற்றம் தெரி­கி­றது.தான்­விட்ட தவ­று­களை அனு­ரா­த­புர கூட்­டத்தில் பகி­ரங்­க­மா­கவே ஒத்துக் கொண்­டுள்ளார். ஏற்றுக்கொண்டுள்ள மஹிந்த தான் சர்­வ­தே­சத்­துடன் ஒத்­துப்­போ­க­வில்லை. அவர்­களை உதா­சீனம் செய்து சர்­வ­தேச எதிர்ப்பை சம்­பா­தித்­து­விட்டேன் என்று ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

அடுத்­த­தாக சிறு­பான்மைச் சமூ­கத்தின் போக்­கையும் அபி­லா­ஷை­க­ளையும் புரிந்து கொண்டு சம­மாக நடக்கத் தவ­றி­விட்டேன் என்­ப­தையும் ஏற்­றுக்­கொண்­டுள்ளார். புலி­களை விமர்­சித்­தி­ருந்­தாலும் இவ்­வாறு அவர் கூறி­யுள்ளார் என்­பதை தெரிந்­து­கொண்­டுள்ளோம். ஆனால் தேர்­தலின் பின் என்ன நடை­பெறும் என்­பதை நாம் இப்­பொ­ழுது கூறி­விட முடி­யாது.

முஸ்லிம் மக்­க­ளுக்கு நான் பகி­ரங்­க­மாக ஒன்றைக் கூறிக்­கொள்­கிறேன். மத்­திய அர­சாங்­கத்தை நீங்கள் ஆத­ரிப்­ப­த­னாலோ தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து கேட்­ப­த­னாலோ எதிர்­கா­லத்­திலும் சரி நிகழ்­கா­லத்­திலும் சரி எவ்­வித பய­னையும் பெறப்­போ­வ­தில்லை. 60 வரு­டங்­க­ளாக நாம் எமது உரி­மை­க­ளுக்­கா­கவும் தீர்­வுக்­கா­கவும் போராடி வந்­துள்ளோம். எந்தத் தீர்­விற்­காக நாம் போராடி வந்­தோமோ? அந்­தத்­தீர்வை விரைவில் அடைந்தே தீருவோம். அதை யாரும் தடுக்க முடி­யாது.

திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்லிம் மக்கள் அதிக குழப்பம் அடைந்து காணப்­ப­டு­கின்­றார்கள் என்­பது எமக்குப் புரி­கின்­றது. இக்­கு­ழப்­பத்­திற்­கான காரணம் என்­ன­வென்றால்இ தங்கள் தலை­வர்கள் தங்கள் உரி­மை­பற்றிஇ அதி­காரம் பற்றி எவ்­விதம் செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பது முஸ்லிம் மக்­க­ளுக்குத் தெரி­யாமல் உள்­ளது. இது தான் குழப்­பத்­திற்­கான காரணம். முஸ்லிம் காங்­கிரஸ், மறைந்த தலைவர் அஷ்ரப் இனால் ஆரம்­பிக்­கப்­பட்ட கட்சி. முஸ்லிம் மக்­களைப் பிர­தி­நி­தித்­துவப் படுத்தும் கட்சி என வர்­ணிக்­கப்­படும் கட்சி. அஷ்­ரப்பின் தலை­மையை மக்கள் ஏற்­றுக்­கொண்­ட­வர்கள் .

அவரின் மறை­விற்­குப்பின் நிலைமை மாறி­யுள்­ளது. கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் நாம் சேர்ந்து ஆட்­சி­ய­மைத்­த­மைக்கு முக்­கிய காரணம் தமிழ்இமுஸ்லிம் ஒற்­றுமை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்டும் காப்­பாற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­க­வே­யாகும்.

இரண்டு இனங்­க­ளி­னதும் உற­வு­களும் தொட­ர­வேண்டும். அந்த உறவு பெறு­மதி மிக்­கது. வட­கி­ழக்கைப் பொறுத்­த­வரை தமிழ்இ முஸ்லிம் ஒற்­றுமை பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். அது வளர்ச்­சி­ய­டைந்து பலம் அடை­ய­வேண்டும் என்­ப­தாகும்.

தற்­பொ­ழுது பாரா­ளு­மன்றத் தேர்தல் ஒன்று வந்­தி­ருக்­கின்­றது. இத்­தேர்­தலில் பெரும்­பான்­மைக்­கட்­சி­க­ளுடன் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்­ப­டக்­கூ­டாது. நாம் பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுடன் போரா­டு­கின்றோம். ஆட்சி அதி­காரம் எமக்கு வழங்­கப்­பட வேண்டும்இ சுயாட்சி வேண்டும் என்று கேட்­கின்றோம். எமது பிராந்­தி­யங்­களில் ஆட்சி எம்­மிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும் என்று ஜன­நா­யக ரீதியில் போராடி வரு­கின்றோம். அந்­தத்­தீர்வு விரைவில் வரப்­போ­கின்­றது. இதை நான் பகி­ரங்­க­மாக கூற­வி­ரும்­பு­கின்றேன். இவ்­வி­த­மான சூழ்­நி­லையில் எதற்­காக ? ஏன்? முஸ்லிம் காங்­கிரஸ் ஐ.தே.கட்­சி­யுடன் சேர்ந்து போட்­டி­யி­ட­வேண்டும்?

ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பின் முக்­கிய வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளார். முஸ்லிம் மக்கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்க விரும்­ப­வில்லை. காரணம் அவரின் ஆட்­சிக்­கால கொடு­மைகள். முஸ்லிம் மக்­களின் பள்­ளி­வா­சல்கள் இடிக்­கப்­பட்­ட­போதுஇ அவர்­க­ளுக்கு கொடு­மைகள் இழைக்­கப்­பட்­ட­போது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்­குக்­குப்­பொ­றுப்­பா­ன­வர்கள் ஓடி ஒளிந்­து­விட்­டார்கள்.

அந்த மக்­களைப் பாது­காக்கத் தவறி விட்­டார்கள். தம்­புள்­ளையில் நடந்த சம்­பவம்,கொழும்பில், பேரு­வ­ளையில், அளுத்­கம ஆகிய இடங்­களில் நடந்த சம்­ப­வங்கள், கொடு­மைகள் போன்­ற­வற்றை அனு­ப­வித்­ததன் கார­ண­மா­கவே முஸ்லிம் மக்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இன்று வாக்­க­ளிக்­க­வி­ரும்­ப­வில்லை. விரும்­பவும் கூடாது. நாம் என்ன செய்ய வேண்­டு­மென்று அம்­மக்கள் சிந்­திக்­கின்­றார்கள். எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்கள், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளி­யுங்கள், எனக்கு வாக்­க­ளி­யுங்கள். உங்­களை நாம் ஒரு போதும் கைவிட மாட்டோம்.

முஸ்லிம் மக்கள் சார்­பாக ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் குரல் கொடுத்­தி­ருக்­கிறோம். முஸ்லிம் மக்கள் மீது பல­வி­த­மான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட போது நான் பாரா­ளு­மன்றில் இவ்­வி­டயம் சம்பந்­த­மாக விசே­ட­மான உரையை ஆற்­றினேன். அப்­பொ­ழுது உங்கள் இனத்தைச் சேர்ந்த அஸ்­வரும் அப்துல் காதரும் எனக்கு குறுக்­கீடு செய்­தார்கள்.
அவர்கள் செய்த குறுக்­கீட்டைக் கேட்ட பல முஸ்லிம் மக்கள் என்­னுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு அவர்கள் செய்த காரி­யத்­துக்­காக மன்­னிப்புக் கேட்­ட­துடன் எனக்கு பாராட்டும் நல்­கி­னார்கள்.

அம்­மையார் நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை வந்­த­போது தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சினை பற்றி கூறி­விட்டு, முஸ்லிம் மக்கள் படும் கஷ்­டங்கள் பற்றி எடுத்துக் கூறி­ய­போது அவர் ஒரு விட­யத்தைக் கூறினார் அதா­வது முஸ்லிம் மக்கள் பற்றி பேசு­வ­தற்கும் நீங்கள் இருக்­கி­றீர்கள் என்று கூறினார்.என­வேதான் முஸ்லிம் மக்­க­ளுக்கு ஒரு விசேட செய்­தியை விடுக்க விரும்­பு­கின்றேன். மத்­திய அர­சாங்­கத்தால் எந்த நன்­மையும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. உங்கள் எதிர்­காலம் பிராந்­திய அதி­கா­ரத்தின் மூலமே தங்­கி­யுள்­ளது என்­பதை நீங்கள் உணர்ந்து செயற்­படல் வேண்டும். மைத்­தி­ரியின் ஆட்சி பல­முள்­ள­தாக அமை­யாத கார­ணத்­தினால் எல்லா விட­யங்­க­ளையும் உட­ன­டி­யாக நிறை­வேற்ற முடி­யாமல் போய்­விட்­டது.

ஆனால் தேர்தல் முடிந்த பிறகு எல்­லா­வி­ட­யங்­களும் ஒரு முடி­வுக்கு வரு­மென நாம் நம்­பு­கின்றோம். இருந்த போதிலும் எமது நிலைப்­பாட்டை இந்த தேர்தல் மூலம் தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சியம். தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளி­வாக அதை எடுத்துக் கூறுவோம்.

எமது மக்­க­ளு­டைய ஜன­நா­யக முடிவு என்ன- ? எமக்கு வேண்­டிய அர­சியல் தீர்வு என்ன? என்­பது பற்­றிய தெளி­வான முடிவை விஞ்­ஞா­ப­னத்தில் கூறுவோம். அது மாத்­தி­ர­மல்ல மக்­களின் உட­ன­டித்­தே­வைகள் சம்பமந்­த­மா­கவும் அது நிறை­வேற்ற வேண்­டிய அவ­சியம், அவ­சரம் குறித்தும் கூறுவோம்.

தமிழ் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு நிரந்­த­ர­மான தீர்வு காணப்­பட வேண்டும். நிரந்­தர தீர்­வொன்றைக் காண்­ப­த­னூ­டா­கத்தான் நாட்டின் நல்லிணக்கம், சமாதானம், புரிந்துணர்வு, சமத்துவம், ஒற்றுமை, ஒருமித்த நாடு என்ற கருமங்களை அடையமுடியுமென்ற நிலை ஏற்படும். தேர்தல் முடிவுகளுக்குப் பின் வல்லரசான இந்தியாவும் அமெரிக்காவும் எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றன.

எமக்கு சார்பாக இருக்கின்றார்கள். அவர்கள் எங்களை கைவிட முடியாது. நாட்டில் ஏற்படப் போகும் ஆட்சிமாற்றமானது எமக்கு உதவப் போகின்றது என்பது உண்மை.
இக் கூட்டத்தில் வேட்பாளர்களான க. துரைரெட்ண சிங்கம், டாக்டர் இந்திராணி, சரா புவனேஸ்வரன், க.கனகசிங்கம், க.ஜீவ ரூபன், அ.யதீந்திரா மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகி யோரும் உரையாற்றினர்.

http://www.virakesari.lk/articles/2015/07/20/நாட்டில்-ஏற்படப்போகும்-ஆட்சி-மாற்றம்-எமக்கு-உதவப்போகின்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

11705350_740791219363306_349578563196805

  • கருத்துக்கள உறவுகள்

 

"நாட்டில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றம் எமக்கு உதவப்போகின்றது முஸ்லிம்களும் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்"

 

சம்பந்தர் ஐயா  அவர்கள்

எங்கும்  தமிழ் முஸ்லிம்கள் மக்கள் என்று சொல்லவில்லை...???

 

  • தொடங்கியவர்

முஸ்லிம்களுக்கு ஆசனம் வழங்குவோம்

article_1437451909-index.jpg

திருகோணமலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம்  மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்ற ஆசனங்களை பெற முடியும். அவ்வாறு பெறப்படும் ஆசனம் ஒன்றை முஸ்லிம்களுக்கே வழங்குவோம் என திருகோணமலை மாவட்டத்தின் தலைமை வேட்பாளர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை நியூ சில்வஸ்டார் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்.

மத்திய அரசாங்கத்துடன் இணைவதால் முஸ்லிம்களுக்கு எதிர்காலம் கிடைக்கப்போவதில்லை. பிராந்திய அரசாங்கத்திலேயே அவர்களுடைய எதிர்காலம் தங்கியுள்ளது. அவ்வாறான பிராந்திய அரசாங்கத்தினை நாம் அடையப்போகின்றோம். அதனை யாராலும் தடுக்க முடியாது' என்றார்.

'மேலும், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் இன்று பெரும்பான்மை கட்சியின் உதவி தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இணைந்திருப்பதே எமக்கு பலம்' எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/150562#sthash.AZDgDy82.dpuf

2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வை பெற்றுத்தருவோம் - இரா.சம்பந்தன்

என்னம்மா அங்க சத்தம் ????  :grin:

 

தீர்வுக்கு சம்பந்தர் ஓடர் பண்ணி உள்ளார்.  தீர்வு Delivery அடுத்த வருடம் தான்.  அதுவரை காத்திருங்கள். தற்செயலாக Delivery தவறினால் சம்பந்தரால் அடுத்த தேர்தலுக்கு இரண்டு மாத்த்திற்கு முன்பு மீண்டும் தீர்வு ஓடர் பண்ணப்படும்.  

(சம்பந்தர் ஓடர் பண்ணிய தீர்வு அவசரம் அவசரமாக திருநெல்வேலியில் உற்பத்தி செய்யப்படுகிறது. Quality controller திரு. சுமந்திரன்)

சம்பந்தர் என்ன ஆதாரத்தை வைத்து இப்படிகூறுகின்றார்!

எந்தவித அடிப்படையும் இல்லாமல் இருக்கின்றது.....

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் என்ன ஆதாரத்தை வைத்து இப்படிகூறுகின்றார்!

எந்தவித அடிப்படையும் இல்லாமல் இருக்கின்றது.....

என்ன விளையாடுறியலா சர்வேயர் 
எங்கட வாத்(ந்)திமார் தீர்வைப்பற்றி கூறினால் சத்தம்போடாமல் கேட்பியல்
சம் முக்கு மட்டும் ஆதாரம் கேக்குறியல் ......இது நியாயமா 
 

என்ன விளையாடுறியலா சர்வேயர் 
எங்கட வாத்(ந்)திமார் தீர்வைப்பற்றி கூறினால் சத்தம்போடாமல் கேட்பியல்
சம் முக்கு மட்டும் ஆதாரம் கேக்குறியல் ......இது நியாயமா 
 

வணக்கம் அக்கினி,

இப்ப சம்சும் அவையிட்டை முழுநேர மாணவர்கள் என்பதால் கேட்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.