Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் தீர்வுக்கான பேரம்பேசும் சக்தியை பெறமுடியும் – இரா.சம்பந்தன்

Featured Replies

20 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் தீர்வுக்கான பேரம்பேசும் சக்தியை பெறமுடியும் – இரா.சம்பந்தன்

JUL 20, 2015 | 0:03by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள்

R.sampanthanநாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை, சேருவில தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் தொகுதிக் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன்-

“நாம் அதிகபட்சமாக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெறுவதன் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இன்றியமையாத பேரம்பேசும் சக்தியைப் பெற முடியும்.

இதனை, நாம் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்து கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பயணத்தை நிறைவு செய்ய தயாராகவுள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதபலத்தை பார்த்து சிறிலங்கா அரசாங்கம் எம்மை பலமுறை பேச்சுக்கு அழைத்ததுடன் பல தீர்வுகளையும் முன்வைத்தனர்.

எனினும் கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டுள்ளோம்.

அந்த இராணுவ பலத்தை நாம் ஜனநாயக ரீதியில் அரசியல் பலமாகக் காட்டவேண்டிய தருணம் தற்போது தோன்றியுள்ளது.

இந்த அரசாங்கத்திடம் நாம் மிகவும் நிதானமாக நடந்து கொள்கிறோம்.

தற்போது சிறிலங்காவின் அதிபராக உள்ள மைத்திரிபால சிறிசேனவை நான் நீண்டகாலமாக அறிவேன்.

1994 ம் ஆண்டு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தமிழ் மக்களுக்கான தீர்வுப் பொதியொன்றைக் கொண்டு வந்தபோது அவருக்குப் பக்கபலமாக இருந்தவர்.

தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

கடந்த அரசாங்கத்துடன் நடத்திய இரண்டு பேச்சுக்களை என்னால் மறக்க முடியாது. ஒன்று தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு பேசியது.

இரண்டாவது 13வது அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றத்தை கொண்டுவர அமைச்சரவை உதவியுடன் மகிந்த ராஜபக்ச முயற்சித்தபோது நடைபெற்ற பேச்சு.

இந்த இரண்டு பேச்சுக்களிலும் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார்.

அப்போது அவர் சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் என்பதாலும் அதிகப்படியான சிங்கள மக்களின் ஆதரவை கொண்ட ஒரு தலைவர் என்பதனாலும் அன்றும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஆயினும், அவர் இனவாதத்துடன் எந்த சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்ளவில்லை.

மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மாட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகிய பெரியோர்கள் வழியில் செல்லவுள்ளார்.

எனவே, இந்த ஆட்சியும் அமையவுள்ள ஆட்சியும் நமக்கு சாதகமான பல சந்தர்ப்பங்களை கொண்டுள்ளது. இதனை நாம் மிக சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2015/07/20/news/7985

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பின் ஒவ்வொரு ஆசனமும் தமிழர்களின் இருப்புக்கும் கொள்ளி வைக்கும் இறுதி தீவெட்டிகள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமரும் ஆசனத்தை தமிழ்மக்கள் தந்த போதும்....அதன் அருமை தெரியாமல் சிங்களங்களுடன் கூடிக்குலாவி....உங்கள் உறவினர்களுக்கு மட்டும் உரிய சுகபோக உதவிகளை செய்து ஒட்டுமொத்த தமிழினத்தையும் நடுத்தெருவிற்கு கொண்டுவந்த புண்ணியவான்கள் நீங்கள்??????

காலமும் சூழ்நிலையும் மீண்டும் உங்களை நம்ப வேண்டிய காலகட்டத்தில் தமிழினம் தள்ளப்பட்டு விட்டது.:(

பொறுத்தார் பூமியாள்வார் என்பதை தூக்கியெறிந்துவிட்டு......

ஒருவருட அவகாசம்......... 

ஈழத்தமிழரிடம் மீண்டுமொருமுறை அரசியல் சலிப்புத்தன்மையை ஏற்படுத்தமாட்டீர்கள் என நம்புகின்றோம்.

  • தொடங்கியவர்

11737875_10205921966720522_6683973573317

  • கருத்துக்கள உறவுகள்

பேசப்போவது என்னவோ இரண்டுபேதானே? அதற்கு இருபது ஆசனங்கள் இருந்தாலென்ன, இரண்டு ஆசனங்கள் இருந்தாலென்ன,  ?

 குமாரசாமி அண்ணை ,

கூட்டணி எதிர்கட்சியாக வரும்போதே நாட்டை விட்டு ஓடிவிட்டீர்களா ?

அல்லது அந்த நேரம் நாட்டில் நடந்த அரசியல் எதுவும் தெரியாதா ?

Edited by arjun
எழுத்து திருத்தம்

  • தொடங்கியவர்

சம் சும் கும்பலின் சும்மின் பெயரை நேற்று முதல் ஊடகங்கல் "சின்னக் கதிர்காமர்" என அழைக்கத்தொடங்கியுள்ளன. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 குமாரசாமி அண்ணை ,

கூட்டணி எதிர்கட்சியாக வரும்போதே நாட்டை விட்டு ஓடிவிட்டீர்களா ?

அல்லது அந்த நேரம் நாட்டில் நடந்த அரசியல் எதுவும் தெரியாதா ?

அது கூட்டணி. இது கூத்தமைப்பு ..புலி சேர்த்து வைத்த கூட்டமைப்பில் இருந்து மருவி நிற்கும் கதிர்காமர் கூட்டம் . 

  • கருத்துக்கள உறவுகள்

இதில காமடி என்னவென்றால், தான் போக வழியில்லாமல் நிக்கும் விண்ணணி விண்ணர்கள் "தமிழ்த்தேசம் தனது உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்களதேசதேசத்துடன் நடத்துவதற்கு முன்பாக வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசிய அவை ஒன்று நிறுவப்படும்" எண்டு அறிக்கை விடுவதுதான். ஒழுங்கா இரண்டு வார்த்தை உருப்படியாப் பேசத் தெரியாது. எங்கையும் செல்லாக் காசுகளை ஆரும் கணக்கெடுக்க மாட்டினம் எண்டு தெரியாமல் போனது கேலிக்குரியது. இந்த ஜுஜுப்பி கூட்டத்தோட சிங்களம் பேசுமாம், இருந்து கனவு காணுங்கவன். :grin::grin:

போஸ் ஒளிச்சு ஓட வேண்டாம்..அந்த 4 பேர் போடுகிறதுக்காக ஒரு நேஷனல் லிஸ்ட் சீட் கொடுக்கிற பிளான் இப்பவும்மிருக்கோ இல்லையோ? 

இங்கே எனக்கு தெரிய 5 பேர் டகிலசின் ஆக்கள் மாறி வருகிறார்களாம் அவர்களுக்கும் ஒரு சீட் கொடுக்க முடியும் என்றால் அந்த 5 வோட்டையும் மடக்கலாம் ...எப்படி ஐடியா ? 

 குமாரசாமி அண்ணை ,

கூட்டணி எதிர்கட்சியாக வரும்போதே நாட்டை விட்டு ஓடிவிட்டீர்களா ?

அல்லது அந்த நேரம் நாட்டில் நடந்த அரசியல் எதுவும் தெரியாதா ?

உண்மையை சொல்லுங்கோ, இன்றைக்கு BBC கேட்டனீர்களோ இல்லையோ ? கேட்காவிட்டால் கேட்கவும். கேட்டுவிட்டு மனம் திறந்து உங்கள் பதிலை சொல்லவும். ஒரு 7-8 பேரிடம் வவுனியா மாணிக்கவாசகர்  பேட்டி எடுத்திருக்கிறார். எல்லா சனமும் கூட்டமைப்பை கிழி கிழி என கிழிக்கிறார்கள். 6 வருடமாய் ஒரு மண்ணும் செய்யவில்லை என . 

அனைவரும் சொல்லும் விடயம் மாற்றம். 

கேட்டுவிட்டு சொல்லுங்கள். தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்று ...

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இன்னும் கிணத்துக்கை தவளை மாதிரிக் கிடப்பது புரிகின்றது. விண்ணணி விண்ணர்களை விட யாழில் டக்கிளஸ் அங்கிளுக்கும் அவரிண்ட ஆக்களுக்கும் ஆதரவு அதிகம். புரியாமல் புலம்பக்கூடாது. வரும் தேர்தல் அதை மீண்டும் தெளிவாகப் புரியவைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

//20 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் தீர்வுக்கான பேரம்பேசும் சக்தியை பெறமுடியும் – இரா.சம்பந்தன்.//

smiley | Modern Dog magazine

"முயல் பிடிக்கிற, நாயை.... மூஞ்சையில பார்க்கத் தெரியும்."
கிழக்கு மாகாண முதல்வராக... ஒரு தமிழர் வரக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும், 
அதனை... முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்த சம்பந்தன், இப்ப.... 20 ஆசனத்துக்கு ஆசைப்படுவது அதிகம்.

கூட்டமைப்புக்கு.... பேரம் பேசும் சக்தி, என்றுமே... இருந்ததில்லை.
வரும் தேர்தலில்.... தமிழர் பிரதி நிதிகளாக புதிய முகங்கள் வர  இருக்கிறார்கள். இடத்தை காலி பண்ணுங்க, சம்பந்தர்.:)

Edited by தமிழ் சிறி

போஸ் ஒளிச்சு ஓட வேண்டாம்..அந்த 4 பேர் போடுகிறதுக்காக ஒரு நேஷனல் லிஸ்ட் சீட் கொடுக்கிற பிளான் இப்பவும்மிருக்கோ இல்லையோ? 

இங்கே எனக்கு தெரிய 5 பேர் டகிலசின் ஆக்கள் மாறி வருகிறார்களாம் அவர்களுக்கும் ஒரு சீட் கொடுக்க முடியும் என்றால் அந்த 5 வோட்டையும் மடக்கலாம் ...எப்படி ஐடியா ? 

உண்மையை சொல்லுங்கோ, இன்றைக்கு BBC கேட்டனீர்களோ இல்லையோ ? கேட்காவிட்டால் கேட்கவும். கேட்டுவிட்டு மனம் திறந்து உங்கள் பதிலை சொல்லவும். ஒரு 7-8 பேரிடம் வவுனியா மாணிக்கவாசகர்  பேட்டி எடுத்திருக்கிறார். எல்லா சனமும் கூட்டமைப்பை கிழி கிழி என கிழிக்கிறார்கள். 6 வருடமாய் ஒரு மண்ணும் செய்யவில்லை என . 

அனைவரும் சொல்லும் விடயம் மாற்றம். 

கேட்டுவிட்டு சொல்லுங்கள். தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்று ...

ஆறு வருடங்களாக இல்லை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து தமிழர்களின் உரிமைக்காக போராடுபவர்களால் எதுவுமே மக்களுக்கு செய்ய முடியவில்லை .அரசுடன் சேர்ந்த தமிழ் கட்சிகள் தமிழர்களுக்கு செய்தவைகள் மிக பெரிய பட்டியலே இடலாம் .காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தொடங்கி யாழ் நவீன சந்தை பின்னர் இப்போ டக்கிலஸ் செய்பவை .

ஆனால் மக்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை விட தமக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள் .நடக்க போகும் தேர்தலிலும் மக்கள் தமது உரிமை வேண்டித்தான் வாக்கு அழிக்க போகின்றார்களே தவிர சலுகைகளுக்காக் அல்ல .

டக்கியும் விஜயகலாவும் வெல்லாமல் கூட்டமைப்போ காங்கிரசோ வெல்லுவது என்றால் அதுதான் காரணம் .

  • கருத்துக்கள உறவுகள்

red%252Bbike%252Bicon.png

உங்கள் வாக்கு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்.... சைக்கிள் சின்னத்துக்கே.
போடுங்க... புள்ளடி.... 
Emoticon bike by clairebearer:)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1977 இல் எதிர்க்கட்சியாக தமிழ்மக்கள் சம்பந்தர் சார்ந்த கட்சியைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய போதும் ஒன்றும் வெட்டிப் புடுங்காத சம்பந்தர் 20 ஆசனங்களை வைத்து என்னத்தைக் கிழிக்கப் போகிறார்??????40 வருடம் கதிரையைச் சூடேற்றியது போதும் இறங்கி இளசுகளுக்கு வழிவிடுங்க>

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு வருடங்களாக இல்லை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து தமிழர்களின் உரிமைக்காக போராடுபவர்களால் எதுவுமே மக்களுக்கு செய்ய முடியவில்லை .அரசுடன் சேர்ந்த தமிழ் கட்சிகள் தமிழர்களுக்கு செய்தவைகள் மிக பெரிய பட்டியலே இடலாம் .காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தொடங்கி யாழ் நவீன சந்தை பின்னர் இப்போ டக்கிலஸ் செய்பவை .

ஆனால் மக்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை விட தமக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள் .நடக்க போகும் தேர்தலிலும் மக்கள் தமது உரிமை வேண்டித்தான் வாக்கு அழிக்க போகின்றார்களே தவிர சலுகைகளுக்காக் அல்ல .

டக்கியும் விஜயகலாவும் வெல்லாமல் கூட்டமைப்போ காங்கிரசோ வெல்லுவது என்றால் அதுதான் காரணம் .

ஒருபடி மேல வந்திருக்கிறார்

கூட்டமைப்புக்கு அடுத்தநிலையை  ஒப்புக்கொண்டுவிட்டார்....

 கூட்டமைப்புக்கு இது தான் முதல்நிலை கடைசித்தேர்தல்....

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பல் கதிரைகளின் எண்ணிக்கையில் தான் கவனமா இருக்கினம். மக்களின் எண்ணங்களை உள்வாங்கவோ.. பிரதிபலிக்கவோ.. தயாராக இல்லை. இதில கதிரைக்கு மட்டும் அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார்கள். :grin::innocent:

  • கருத்துக்கள உறவுகள்
 
11737875_10205921966720522_6683973573317

இணைப்புக்கு நன்றி நீலப்பறவையவர்களே!

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நீலப்பறவையவர்களே!

நீங்க வேற...

11737875_10205921966720522_6683973573317

2020 தேர்தலில்.....

அனைத்துலக  உதவியுடன் தீர்வு 2021 இல் கிடைக்க அரியதோர் வாய்ப்பு

நழுவவிடாதீர்கள் தமிழர்களே

எம்மை பலமாக்குவீர்.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.