Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு சிக்கலை அடுத்து முகநூலில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilkingdom.org/2015/07/21_59.html

பாதுகாப்பு சிக்கலை அடுத்து முகநூலில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் சுமந்திரன்

beach_and_sea_of_hawaii_jy160_350a.jpg
கடந்த வாரங்களில் பிரச்சாரத்திற்கு சென்ற சுமந்திரனை சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் காரசாரமாக கேள்விகளை கேட்டு
தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிய நிலையில் மாலைநேர சந்திப்புக்களை தவிர்த்து வந்த முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் சின்னக்கதிர்காமர் என செல்லமாக அழைக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரில் செல்வதில் தனிநபர் பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டு தனது பிரச்சாரப் பணிகளை முகநூல் வாயிலாக ஆரம்பித்திருக்கிறார்.
 
வாக்காளர்கள் தங்கள் கேள்விகள்,ஐயங்கள்,த.தே.கூட்டமைப்பின் சாணக்கிய நகர்வுகள்,ராஜதந்திர விடயங்கள் தொடர்பாக விளக்கமில்லாதவர் தொலைபேசி வாயிலாகவோ அவரது முகநூலிற்கோ சென்று உங்கள் ஆதரவையும், அரசியல் கேள்விகளையும் கேட்டு அரசியல் தெளிவை பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தொலைபேசி இல-021 3005055

முகநூலில் தொடர

அநேகமாக நாளை முகப்புத்தகப் பக்கத்தை இழுத்து மூட முன்னம் கேள்விகளைக் கேளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilkingdom.org/2015/07/21_59.html

பாதுகாப்பு சிக்கலை அடுத்து முகநூலில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் சுமந்திரன்

beach_and_sea_of_hawaii_jy160_350a.jpg
 
அநேகமாக நாளை முகப்புத்தகப் பக்கத்தை இழுத்து மூட முன்னம் கேள்விகளைக் கேளுங்கள்.

யாழில் நடந்து கொண்டிருக்கும் தேர்தல் சம்பந்தமான கருத்துக்கணிப்பில் கூட

இவர் வெல்வார் என்பதற்கு பலர் தெரிவு செய்யவில்லை (அர்யூன் அண்ணை உட்பட)..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அந்த இணைப்பைக் கொடுத்து விடுங்கள் விசுகு.

நான் முகநூலில் இணைத்த கேள்வி ஒன்று

யுத்தக் குற்றம் தொர்பிலான விசாரணைகள் குறித்த தங்கள் தனிப்பட்ட கருத்தை அறிய விரும்புகிறேன் சர்வதேசத்தின் விசாரணையை தாங்கள் விரும்புகிறீர்களா? அல்லது சிறிலங்காஅரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகின்ற உள்நாட்டு விசாரணையை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில் தந்தால் அதனையும் இணைக்கிறேன்

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தும் போராளிகள் குறித்தும் உங்களது கருத்து என்ன அவர்களை விடுதலைப் போராளிகள் என அழைக்க விரும்புகிறீர்களா? அல்லது அவர்களை பயங்கரவாதிகள் என வகைப்படுத்த விரும்புகிறீர்களா?

இது போல இன்னும் சில கேள்விகளை தனிமடலில் இணைத்திருந்தேன். அவற்றிற்குப் பதில் கிடைத்தால் அதனை இங்கு பகிர்கிறேன்

புலம் பெயர் ஊடகங்கள் பெரும்பாலும் யாரது கையில் என்று நான் எழுத வேண்டியதில்லை .தொழில் நுட்பம் இவ்வளவு வளர்ந்த காலத்தில் சுமந்திரனின் பிரச்சாரம் முகநூலில் ஆரம்பித்தது ஒரு பெரிய விடயமே இல்லை .ஆனால் தமது சொல்லுக்கு வாலை ஆட்டதவர்களை வாலுகள் என்ன செய்வார்கள் என்பது முப்பது வருடங்களாக நாம் பார்த்து வருவதுதான் .

அதில் ஒன்றுதான் இந்த சின்ன கதிர்காமர் பட்டம்மும் உந்த தலையங்கமும் ஆகும் .

மக்கள் "பலர் "வாக்கு அழிப்பது தனிய ஒருவரது திறமையை வைத்தோ அல்லது அவரது அரசியல் ஆழுமையை வைத்தோ அல்ல அதுவும் இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையில் தனிநபர் விருப்பு வாக்குகள் மிக முக்கியம் .

தமது உறவினர் ,ஊரவர் ,பரீட்சயமானவர் என்று எல்லாம் பார்ப்பார்கள் அப்படி பார்த்தால் சுமந்திரன் பெரும்பாலானவர்களுக்கு தெரியாதவர் .மாவையை விட சுரேஸ் அதிகம் வாக்குகள் பெறுவார் என்று நான் நம்புவதற்கும் இதே காரணம் தான் .மாவையின் தொகுதியில் இன்னமும் முற்றாக மீள குடியேற்றம் நடைபெறவில்லை மக்கள் தொகையும் அங்கு இப்போ குறைவு .சுரேஷ் கல்வியங்காடு கட்டபிராயில் கணிசமான வாக்குகள் பெறுவார் என்று நம்புகின்றேன் .

சித்தர்  வவுனியாவில் நிற்காமல் மானிப்பாய் வந்து தந்தை தர்மலிங்கத்தின் படத்துடன் பிரச்சாரம் செய்வதற்கும் இதே காரணம் தான் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுத் தேர்தலில் மக்களது  வாக்களிப்பு முறை குறித்த உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடுண்டு. இதில் நீங்கள் குறிப்பிடாத ஒரு விடயமான சாதியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். (நாங்கள் விரும்பாவிட்டாலும் கூட அதுதான் உண்மை).

அதனால் தான் கணிசமான வாக்குகளைக்  கொண்ட தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பட்டியலில் இணைத்துக் கொள்ளாமல் வடமாரட்சியைச் சேர்ந்த பலருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பது விஜயகலாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தத்தினாலே என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

 ஈபிடிபியினருடைய அடாவடித்தனம் நிறைந்திருந்த காலத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்த தீவுப் பகுதி மக்கள் தமது பிரதிநிதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை இவர்கள் திட்டமிட்டே இல்லாமல் செய்திருக்கிறார்கள். விந்தன் போன்றவர்கள் இது குறித்து மெளனம் சாதிப்பது கட்சிக் கட்டுப்பாட்டினாலா அல்லது அவர்களும் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை.

முழு உண்மை - ம் குமார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் நீண்ட காலம் மக்களுக்குப் பரிச்சயமான ஆனந்த சங்கரி தோற்றமைக்கு என்ன காரணம்?கூட்டமைப்பைத் தெரிவு செய்த மக்கள் ஆனந்த சங்கரியை வடி கட்டித் தோற்க வைத்தமைக்காரணம் அவரது அரசியிலில் அவர் செய்த துரோகத்திற்கே.அதுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்.அமிர்தலிங்கமும் முன்பு தோற்கடிக்கப்hட்டார்.77 ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் அடுத்த தேர்தலில் படுதோல்வி.ஆக மக்கள் எல்லோரையும் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்கள். சம்சும் மாவையும் விதிவிலக்கல்ல.இது தெரிந்துதான் தமிழரசுக்கட்சியில் நிற்காமல் புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.மக்களுக்குப் பரிட்சயமில்லாத விக்கினேஸ்வரன்>அனந்தி ஆகியோருக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததன் மர்மம் என்ன?மக்கள் மடையர்கள் அல்ல.சமயம் பார்த்து காலை வாரிவிடுகிறார்கள்.புளொட்டில் கேட்பதானால் சித்தருக்கு ஒருவாக்கும் விழாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilkingdom.org/2015/07/1_21.html

தமிழகத்தில் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

11759401_1881089858782278_2123338245_n.j
தமிழகத்தில் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
“தமிழீழ விடுதலைக்கான மாணவர் -இளைஞர் கூட்டியக்கம்” என்ற மாணவர் அமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
11748652_1881089855448945_677950544_n.jp
 
11756548_1881089868782277_1065052258_n.j
 
11759401_1881089858782278_2123338245_n.j
 
11780560_1881089862115611_181114514_n.jp
 
  • கருத்துக்கள உறவுகள்

மக்களை நேரில் சந்திக்க முடியாத, அரசியல் வாதிக்கு....  தேர்தலில் போட்டியிடும் ஆசை மட்டும் வந்தது ஏனோ?
இதிலும் பார்க்க சுமந்திரன், வழக்கம் போல்... பின் கதாவாலேயே... பாராளுமன்றத்துக்குள் போயிருக்கலாம்.Posted Image

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புச் சிக்கலா.. பதில் சொல்லச் சிக்கலா. சம் சும் கும்பல் வீட்டுக்க இருந்து தான் இம்முறை பிரச்சாரம் செய்யனும். அந்தளவுக்கு மக்களுக்கு செய்தது எல்லாம் முள்ளமாரித்தனம். :grin::) கவனம்.. பேஸ்புக் கணக்கும் பெரிய பாதுகாப்பில்லாத இடம். பேசாம கோத்தா மகிந்தவோட சேர்ந்தா நல்ல பாதுகாப்புக் கிடைக்கும். :)

புலம் பெயர் ஊடகங்கள் பெரும்பாலும் யாரது கையில் என்று நான் எழுத வேண்டியதில்லை .தொழில் நுட்பம் இவ்வளவு வளர்ந்த காலத்தில் சுமந்திரனின் பிரச்சாரம் முகநூலில் ஆரம்பித்தது ஒரு பெரிய விடயமே இல்லை .ஆனால் தமது சொல்லுக்கு வாலை ஆட்டதவர்களை வாலுகள் என்ன செய்வார்கள் என்பது முப்பது வருடங்களாக நாம் பார்த்து வருவதுதான் .

அதில் ஒன்றுதான் இந்த சின்ன கதிர்காமர் பட்டம்மும் உந்த தலையங்கமும் ஆகும் .

மக்கள் "பலர் "வாக்கு அழிப்பது தனிய ஒருவரது திறமையை வைத்தோ அல்லது அவரது அரசியல் ஆழுமையை வைத்தோ அல்ல அதுவும் இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையில் தனிநபர் விருப்பு வாக்குகள் மிக முக்கியம் .

தமது உறவினர் ,ஊரவர் ,பரீட்சயமானவர் என்று எல்லாம் பார்ப்பார்கள் அப்படி பார்த்தால் சுமந்திரன் பெரும்பாலானவர்களுக்கு தெரியாதவர் .மாவையை விட சுரேஸ் அதிகம் வாக்குகள் பெறுவார் என்று நான் நம்புவதற்கும் இதே காரணம் தான் .மாவையின் தொகுதியில் இன்னமும் முற்றாக மீள குடியேற்றம் நடைபெறவில்லை மக்கள் தொகையும் அங்கு இப்போ குறைவு .சுரேஷ் கல்வியங்காடு கட்டபிராயில் கணிசமான வாக்குகள் பெறுவார் என்று நம்புகின்றேன் .

சித்தர்  வவுனியாவில் நிற்காமல் மானிப்பாய் வந்து தந்தை தர்மலிங்கத்தின் படத்துடன் பிரச்சாரம் செய்வதற்கும் இதே காரணம் தான் . 

சுரேசருக்கு கட்டப்பிராய் பகுதியில சுமாராய் விழும் அதைவிட அரசாங்கதிண்ட ஆசீர்வாதமும் அவருக்கு இருக்கு....

அண்ணை புதுமுகங்கள் அவையிண்ட இடங்களில் கேட்பது நியாயம்......

ஆனால் 30-40 வருட அரசியல் வாதிகள் அவையிண்ட இடத்தில கேட்பது என்பது வெட்கத்திட்குரியது..... 

இந்த அரசியல் வாதிகளை நினைக்கும் போது கோபம் கோபமாக வருகின்றது ..ஆனால் மக்கள் தெளிவாக உள்ளதால் ஒரு மன நிறைவு ...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் நீண்ட காலம் மக்களுக்குப் பரிச்சயமான ஆனந்த சங்கரி தோற்றமைக்கு என்ன காரணம்?கூட்டமைப்பைத் தெரிவு செய்த மக்கள் ஆனந்த சங்கரியை வடி கட்டித் தோற்க வைத்தமைக்காரணம் அவரது அரசியிலில் அவர் செய்த துரோகத்திற்கே.அதுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்.அமிர்தலிங்கமும் முன்பு தோற்கடிக்கப்hட்டார்.77 ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் அடுத்த தேர்தலில் படுதோல்வி.ஆக மக்கள் எல்லோரையும் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்கள். சம்சும் மாவையும் விதிவிலக்கல்ல.இது தெரிந்துதான் தமிழரசுக்கட்சியில் நிற்காமல் புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.மக்களுக்குப் பரிட்சயமில்லாத விக்கினேஸ்வரன்>அனந்தி ஆகியோருக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததன் மர்மம் என்ன?மக்கள் மடையர்கள் அல்ல.சமயம் பார்த்து காலை வாரிவிடுகிறார்கள்.புளொட்டில் கேட்பதானால் சித்தருக்கு ஒருவாக்கும் விழாது.

60 வருடமாக உரிமைக்காக போராடும் ஒரு இனம்.......தாயக மக்கள் அரசியல்வாதிகளை பற்றி அறிந்து வைத்துள்ளார்கள் ஆனால் சில அரசியல்வாதிகள் தாயக மக்களைப்பற்றி அறியவில்லை

இந்த அரசியல் வாதிகளை நினைக்கும் போது கோபம் கோபமாக வருகின்றது ..ஆனால் மக்கள் தெளிவாக உள்ளதால் ஒரு மன நிறைவு ...

நேற்று தாயகத்தில் உள்ள நண்பன் ஒருவனுடன் உரையாடினேன்... அவரது கருத்துப்படி

மக்கள் அதிகமாக கூட்டமைபையே ஆதரிக்கின்றார்கள் என்றபோதும்..விருப்பு வாக்குகளை யாருக்கு அழிப்பது என்பதில்தான் குழப்பம் என்கிறார்.

தற்போதைய வேட்பாளர்கள் எவர் மீதும் நம்பிக்கை அற்றுள்ள மக்கள் தமிழ் தேசியத்தின் ஒற்றுமை கருதியே புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்றும், சுமத்திரனுக்கு அவர் மட்டும் தான் விருப்பு வாக்களிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

கூட்டமைப்பு இளம்தலைமுறையினருக்கு சந்தர்பம் அளிக்கவில்லை என்பதில் மக்கள் கடுப்பாக உள்ளதாகவும், குறிப்பாக அனந்திக்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்கலாம் என்றும் கூறினார்

இதேநேரம் தமிழ்தேசிய முன்னணி கையால் ஆகாத ஒன்று என்றும், அவர்கள் பல பொய்பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்

இது எத்தனை பேரை பிரதிபலிக்குமோ தெரியாது.

தாயகத்தில் பலர் மாற்றத்தை எதிர்பாக்கிறார்கள் . இன்றும் ஒருவர் முகப்பு புத்தகத்தில் பதிந்து இருந்தார், கூட்டமைப்பினர் சிறுவர்களுக்கு பண்டிகைகாலத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பவர்கள், தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு செய்யும் தந்திரங்களை ஒத்த செயல்களை செய்வதாக . 

கூட்டமைப்பை ஆதரிக்கும் பொதுமகன் ஒன்று ஒருவரும் எனது முகப்பு புத்தகத்தில் இல்லை -எனக்கு இருக்கும் நண்பர் கூட்டம் இப்படி அரசியில் பேசுவதற்கு என்று இணைந்தது அல்ல. பள்ளிகூடத்தில ஒன்றா படித்தவர்கள், வேலையிடத்தில் சேர்ந்தவர்கள் , அயலவர் சொந்தகாரர்கள் என்கிற தனிபட்ட வட்டமே . முந்திய காலம் போல் யாரும் இங்கிருந்து அவர்களை மாறி போடச்சொல்லி கேட்பதாக / பிரச்சாரம் செய்வதாக "எனக்கு " தெரியவில்லை . பலர் ஒதுங்கி இருக்கிறார்கள் . இன்னும் சிலர் மதில் மேல் பூனை போல் இருக்கிறார்கள் .

வெளிபடையாக நடந்த உதயன் கருத்து கணிப்பில் மக்கள் கூட்டமைப்பை நிராகரித்து இருக்கிறார்கள் . அதனை தொடர்ந்து அந்த கருத்து கணிப்பையே உதயன் நிறுத்த வேண்டி வந்தது சிலர் பலர் அறிந்திருக்கலாம் . அதே போல BBC இன் பேட்டியிலும் மக்கள் கூட்டமைப்பின் வெறுப்பை இயலாமையை சொன்னார்கள் .  இங்கே இனைகபட்டிருந்த வலம்புரியின் ஆசிரியர் தலையங்கமும் அதேயே சொல்லுநிறது . 
எனவே கூட்டமைப்பை முந்திய முறைகள் போல் அவர்களின் வெற்று கோஷங்களுக்காக மக்கள் ஏற்றுக்கொவார்கள் என்பது சந்தேகமே. இந்த முறை பல படித்த , மக்கள் வெளிப்படையாக கூட்டமைப்பை விமர்சிகிறார்கள் . 

தமிழ் தேசிய முன்னணி எத்தளவு போட்டியாக இருக்கும் என்று சொல்ல முடியாது ஆனால் "பெரும்பாலான"தாயாக மக்கள் கூடமைப்பை விரும்பவில்லை.

கூட்டமைப்பு அதிக ஆசனங்களை கைப்பற்றினால் பிறகு எப்படி தலையை காட்டுவது என்று "தலைவரால் உருவாக்கபட்ட கூட்டமைப்பு " வாய்க்கு வாய் உச்சரிக்கும்   முன்னெச்சரிக்கை முனுசாமிகள் தொல்லை தாங்கமுடியவில்லை .

தலைவர் ஏன் தான் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்காமல் ஏற்கனவே இருந்த கட்சிகளை சேர்த்து ஒரு அமைப்பை தொடங்கினார் .அதுவும் தன்னால் கொலை செய்யபட்டவர்கள் தலைவர்களாக இருந்த கட்சிகள் .எந்த பேச்சுவார்த்தைக்கும் அவர்களை அனுப்பவில்லை அவர்களில் தலைவருக்கு நம்பிக்கையுமில்லை .

சம்பந்தனுக்கு புலிகள் என்றாலே அலர்ஜி .கூட்டமைப்பில் இருக்கும் போதே இந்தியாவில் அவர் கொடுத்த பேட்டிகளை வாசித்தவர்களுக்கு தெரியும் .தலைவரால் தான் உருவாக்கபட்ட அமைப்பு முழுமையாக நம்பினால் அவர்கள் பின்னால் அல்லவோ வாலுகள் நிற்கவேண்டும் .இப்போ கூட்டமமைப்பிற்கு முழு எதிரிகளே வாலுகள் தான் .

தலைவர் ஒரு கோல் அடிக்க நினைக்க அவர்கள் ஆளுக்கொரு கோல் அடித்து ஆறு கோல்கள் அடித்துவிட்டார்கள் 

Edited by arjun
எழுத்துபிழை திருத்தம்

உங்கட சித்தரும் இதுக்குள்ள கேட்டா வெல்லலாம் என்றொரு நப்பாசையில் தானே தஞ்சம் புகுந்தவர்.....

கூட்டமைபில் உள்ள கிழடுகளை பிடுங்கி இளைஞர்களை புகுத்தவே நாம் பாடுபடுகிறோம்....

முக்கியமாக புலொட்டை புள்ளா தூக்கவேண்டும் என்பதே மக்கள் விருப்பம்....  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களை நேரில் சந்திக்க முடியாத, அரசியல் வாதிக்கு....  தேர்தலில் போட்டியிடும் ஆசை மட்டும் வந்தது ஏனோ?
இதிலும் பார்க்க சுமந்திரன், வழக்கம் போல்... பின் கதாவாலேயே... பாராளுமன்றத்துக்குள் போயிருக்கலாம்.Posted Image

பாதுகாப்புச் சிக்கலா.. பதில் சொல்லச் சிக்கலா. சம் சும் கும்பல் வீட்டுக்க இருந்து தான் இம்முறை பிரச்சாரம் செய்யனும். அந்தளவுக்கு மக்களுக்கு செய்தது எல்லாம் முள்ளமாரித்தனம். :grin::) கவனம்.. பேஸ்புக் கணக்கும் பெரிய பாதுகாப்பில்லாத இடம். பேசாம கோத்தா மகிந்தவோட சேர்ந்தா நல்ல பாதுகாப்புக் கிடைக்கும். :)

சின்னக் கதிர்காமர் எண்டு பட்டம் சூட்டினவருக்கு மோதிரம் போடவேணும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தனுக்கு புலிகள் என்றாலே அலர்ஜி .கூட்டமைப்பில் இருக்கும் போதே இந்தியாவில் அவர் கொடுத்த பேட்டிகளை வாசித்தவர்களுக்கு தெரியும் .தலைவரால் தான் உருவாக்கபட்ட அமைப்பு முழுமையாக நம்பினால் அவர்கள் பின்னால் அல்லவோ வாலுகள் நிற்கவேண்டும் .இப்போ கூட்டமமைப்பிற்கு முழு எதிரிகளே வாலுகள் தான் .

உந்த அலேர்ஜி பாலேஜி கதைகளை விடுங்கோ அண்ணே ....தங்களின் நம்பிக்கை இருந்தால் தமிழ் அரசு கட்சி என்று போட்டிபோட்டு ஒரு இடத்தைத் தன்னும் இனிமேல் வருகிற மாவட்ட, கிராம சங்க தேர்தலில் எடுத்து கட்டட்டும். 

கூட்டமைப்பு அதிக ஆசனங்களை கைப்பற்றினால் பிறகு எப்படி தலையை காட்டுவது என்று "தலைவரால் உருவாக்கபட்ட கூட்டமைப்பு " வாய்க்கு வாய் உச்சரிக்கும்   முன்னெச்சரிக்கை முனுசாமிகள் தொல்லை தாங்கமுடியவில்லை .

தலைவர் ஏன் தான் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்காமல் ஏற்கனவே இருந்த கட்சிகளை சேர்த்து ஒரு அமைப்பை தொடங்கினார் .அதுவும் தன்னால் கொலை செய்யபட்டவர்கள் தலைவர்களாக இருந்த கட்சிகள் .எந்த பேச்சுவார்த்தைக்கும் அவர்களை அனுப்பவில்லை அவர்களில் தலைவருக்கு நம்பிக்கையுமில்லை .

சம்பந்தனுக்கு புலிகள் என்றாலே அலர்ஜி .கூட்டமைப்பில் இருக்கும் போதே இந்தியாவில் அவர் கொடுத்த பேட்டிகளை வாசித்தவர்களுக்கு தெரியும் .தலைவரால் தான் உருவாக்கபட்ட அமைப்பு முழுமையாக நம்பினால் அவர்கள் பின்னால் அல்லவோ வாலுகள் நிற்கவேண்டும் .இப்போ கூட்டமமைப்பிற்கு முழு எதிரிகளே வாலுகள் தான் .

தலைவர் ஒரு கோல் அடிக்க நினைக்க அவர்கள் ஆளுக்கொரு கோல் அடித்து ஆறு கோல்கள் அடித்துவிட்டார்கள் 

அட விடுங்கப்பா இந்தாள் எப்பவும் இப்படித்தான் ... சும்மா .. யாரும் உணர்ச்சிவசபடவேண்டாம்

யாழின் அடுத்த ஆனந்தசங்கரி இவர் தான் ..மக்கள் எப்பவுமே இவரை ஒதுக்குவார்கள் ஆனால் அந்தாள் மட்டும் அப்ப அப்ப கதை விடுவார் 

Edited by பிரபாதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அந்த இணைப்பைக் கொடுத்து விடுங்கள் விசுகு.

1)

தமிழ் தேசிய கூட்டமைப்பு -4

தமிழ் காங்கிரஸ்  -1

ஈழமக்கள் ஜனாயக கட்சி -1

ஐக்கிய தேசிய கட்சி -1

2)

சுரேஸ் பிரேமசந்திரன் 

3)

சுரேஷ் பிரேமசந்திரன் 

மாவை சேனாதிராஜா 

சரவணபவன் 

சிறீதரன்

கஜேந்திரகுமார் 

டக்கிளஸ் தேவானந்தா 

விஜயகலா மகேஸ்வரன் 

http://www.yarl.com/forum3/topic/160356-யாழ்-மாவட்டத்தில்-வெற்றி-பெறும்-வேட்பாளர்களை-எதிர்வு-கூறுங்கள்/

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தோசைக் கடை சுந்தரம்,

பால்கார பரிமளம்,

மீன்காரி மீன் இப்படி என் நட்பு வட்டத்தில் அல்லது சதுரத்தில் கேட்டேன் - கூட்டமைப்பு ஊத்திக்குமாம் :)

முன்பு ஒரு கருத்துக்கணிப்பில் ஹிட்லரை விட கொடியவனாய் ராஜபக்சவை ஆக்கப் போய் அந்த கணிப்பையே அந்த நிறுவனம் மாற்றியது. 

அந்தளவுக்கு காமெடி பீசுகள் புலவாலுகள்.

இப்போதும் கூட்டமைப்பை தோக்கடிக்க தம்மாலானதை செய்கிறார்கள் :)

அட மீன்காரி மீனாவுமா? நம்பவே முடியல்ல  :grin:(இது எங்கடை யாழ் கள மீனா இல்லை பிறகு சண்டைக்கு வரவேண்டாம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா! நீங்க எல்லாம் எப் இருந்து கூட்டமைப்பு ஆதரவாளராக மாறீனீங்க?????2009 இற்குப்பிறகு தானே!புலிகளின் காலத்தில் தீவிர கூட்டமைப்பு எதிர்ப்பாளர்கள்தான் தற்போதைய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்கள்.யார் தமிழனுக்கு நல்லது நடக்காமல் துரோகம் செய்கிறானோ அவர்களை ஆதரிப்பது உங்கள் நிலைப்பாடுதான்.கருணாவை எதிர்த்த நீங்களே கருணாவை ஆதரித்தீர்கள்.துரோகத்தில் டக்ளசை சம்சும் கும்பல் மேவுவதால் சம்சும் கும்பலை ஆதரிக்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.