Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் கட்சிக்கே வாக்களியுங்கள் – விக்கினேஸ்வரன்

Featured Replies

Wigneswaran-4

சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் கட்சிக்கே வாக்களியுங்கள், என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அறிக்கை விடுத்துள்ளார். இன்று காலை விடுத்துள்ள அவர் விடுத்துள்ள அறிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனது அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இளைஞர்களே, யுவதிகளே!

தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் யாருக்கு வாக்களிப்பது, யாரை தெரிவு செய்தால் உங்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அவர்கள் வாழவைப்பார்கள் என்பது குறித்து நீங்கள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பீர்க்ள் என நம்புகின்றேன். உங்களது தீர்மானத்தில் நான் எந்தவொரு செல்வாக்கினையோ அல்லது தலையிட்டினையோ செய்யப்போவதில்லை. இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன். ஆரோக்கியமான அகமுரண்பாடுகள் அவசியமானவையாயினும்கூட, ஒரே கட்சிக்குள் இருந்து கொண்டு ஒரே கொள்கைக்காகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டும், வசைபாடிக்கொண்டும், அரசியல் நாகரீகம் அற்ற முறையில் ஒருவர் மற்றவருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமையினைக் காணும் போது பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது முடிவு சரியானது என்றே நான் கருதுகின்றேன்.

வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் மாதம் 2013ல் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை பலத்த சவால்களுக்கு மத்தியிலும் நிறைவேற்றுவதற்காக நான் இதயசுத்தியுடன் செயற்பட்டேன், செயற்பட்டு வருகிறேன். இதனைத் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்க எதிர்காலத்தில் எனது மக்களின் பாரிய ஒத்துழைப்பும் பங்களிப்பும் மென்மேலும் அவசியம். மக்கள் நலனை முதன்மைப்படுத்திய எனது வேலைத்திட்டங்களையும், அது சார்ந்த உள்நாட்டு வெளிநாட்டுச் சந்திப்புக்களையும் வட மாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாகவே முன்னெடுக்கின்றேன். தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் மக்கள் நலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது எனது பொறுப்பென உணர்கின்றேன். அந்தப் பொறுப்பைப் பற்றுறுதியுடன் பற்றிக் கொள்ளவே நான் விரும்புகின்றேன். இதற்காக நான் எத்தகைய அர்ப்பணிப்பையுஞ் செய்யத் தயாராக இருக்கின்றேன்.
போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு எமது இனத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு கட்டமைப்புகளை சிதைத்துள்ளது. இவற்றை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அமைவாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களைப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக மேற்கொள்ளும் வாய்ப்பு நான் முதலமைச்சராக பதவியேற்ற பின் கிடைத்தது. அதனை, மிக ஆழமாக ஆராய்ந்து பார்த்த பின்பே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிப்பதென்ற முடிவையெடுத்தேன்.

இது சம்பந்தமாக அண்மையில் நான் வெளியிட்ட செய்தி பலவிதமான மாறுபட்ட கருத்துக்களை முன் கொண்டு வந்துள்ளதாக அவதானிக்கின்றேன்;. எனினும் அது பலரைச் சிந்திக்க வைத்துள்ளமை புலப்படுகிறது. என்னைப் பொறுத்த வரையில் நான் தற்போது அரசியலில் இருக்கும் அதேநேரம், அரசியலுக்கு வர முன்பிருந்தே சமூக சேவையிலும் சமூக மறுமலர்ச்சியிலுந் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்துள்ளேன் என்பதை அறியத்தரவேண்டியுள்ளது. எம் மக்களின் சேவையிலும் மறுமலர்ச்சியிலுந் தொடர்ந்து ஈடுபட அரசியல் எனக்கு ஒரு கருவியே ஒளிய எனது முழு நேரத் தொழில் அல்ல.
சென்ற 22 மாதங்களில் நான் என் மக்களிடம் இருந்து தெரிந்து கொண்ட பாடங்கள் சில உண்டு.

ஒன்று – அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் பேசுபவற்றை தேர்தல் முடிந்ததும் காற்றில் பறக்க விட்டு விடுகின்றார்கள் என்பது. எனவே இதனால் மக்கள் மனக் கிளர்ச்சியுந் தளர்ச்சியும் அடைகின்றார்கள்.

இரண்டு- தேர்தல் முடிந்ததும் மக்களிடம் இருந்து அரசியல்வாதிகள் விலகிச் செல்கின்றார்கள். அவர்களின் பிரச்சனைகளை, ஏக்கங்களை, தேவைகளைப் புறக்கணிக்கின்றார்கள். தமக்கும் தமக்கு அண்மித்தவர்களுக்கும் மட்டும் சலுகைகள் செய்கின்றார்கள், கரிசனை காட்டுகின்றார்கள், உதவிகள் புரிகின்றார்கள், என்பது.

மூன்று- கொடுத்த தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளுக்கு மாறாக சுயநலத்துடன் நடக்க எத்தனிக்கின்றார்கள். முக்கியமாகத் தெற்கத்தைய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நடக்க வேண்டும் இல்லையேல் விமோசனம் இல்லை என்ற எண்ணத்தில், உணர்ச்சியுடன் தமிழ் மக்களிடையே தேர்தல் மேடைகளில் பேசிய வசனங்களை மறந்து, தெற்கத்தையவர்களின் மனங் கோணாமல் நடந்து கொள்ள எத்தனிக்கின்றார்கள். அவ்வாறு செய்வதானால் அதை முன்கூட்டியே தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இவ்வாறு பலதையும் மக்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன். இதுபற்றி அரசியல்வாதிகளிடங் கேட்டால் தமது கட்சியின் பெயரைக் கூறி அதில் குளிர்காயப் பார்க்கின்றார்கள்.

இதனால்த் தான் நான் கட்சிக்கு அப்பால், கொள்கை நிலை கொண்ட நேர்மையான, பற்றுறுதி கொண்ட, விலைபோகாத, தூரநோக்குப் பார்வை கொண்ட, கரிசனையுடைய பிரதிநிதிகளை அடையாளங் காணுங்கள் என்றேன்.

எனினும் நான் என் முன்னைய செய்தியில் இன்னொன்றைக் கூறியதையும் எம் மக்கள் மறக்கக் கூடாது. நாம் தேர்ந்தெடுப்பவர்கள் தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அவர்களின் சுயநிர்ணய உரிமையையும் உறுதிப்படுத்தி, எம்மக்களின் உரிமைகளையும் அவர்களுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். போட்டியிடும் பல கட்சிகள் எமது மக்களின் தனித்துவத்தையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதியாதவகையில் தான் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரித்துள்ளார்கள். அக் கட்சிகளுள் தரம் மிக்கவர்கள் இருந்தால் கூட (நான் இருக்கின்றார்கள் என்று கூறவில்லை) அவர்களின் தாற்பரியம் வேறு என்பதை நாங்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும். அவர்களால் எமது வடக்கு கிழக்கு வாழ் மக்கள் நிரந்தரமான நன்மைகளைப் பெற முடியாது என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மேலும் தாயகம், தனித்துவம், தமிழர் சுயநிர்ணயம் போன்ற கருத்துக்களை 2009ம் ஆண்டு மே மாதந் தொடங்கியாவது இக்கட்சிகள் உலகிற்குப் பறைசாற்றி வந்திருக்க வேண்டும். காளான்கள் காரியவாதிகள் ஆக முடியும் ஆனால் காவலர்கள் ஆக முடியாது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் வடகிழக்கு மாகாணங்களில் ஒரு சிறந்த அப்பளுக்கற்ற அரசியல் கலாசாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய கடப்பாடு எம் எல்லோருக்கும் எழுந்துள்ளது. தெற்கில் பூதவடிவம் பெறப்பார்க்;கும் இனவெறுப்புடனான அரசியல் சிந்தனைகளை நாம் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். எம்முடன் கைகோர்த்;துவரச் சம்மதித்திருக்கும் மேற்கத்தைய நாடுகளுடனான உறவை நாம் பலப்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதால் எமக்கொரு நிரந்தர அரசியல் தீர்வை நாங்கள் பெற வழி அமைக்கலாம். இதை மனதில் வைத்துத் தான் நாம் தேரந்;தெடுக்கும் பிரதிநிதிகளின் தரம், தகைமை, தகுதி எவ்வாறு அமைய வேண்டும் என்று மக்களை நோக்கிய எனது முன்னைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை விட மத்தியில் உள்ளோர், நல்லாட்சிக்கானதும், நீதி, சமத்துவம் போன்ற கொள்கையின் அடிப்படையிலானதுமான ஒரு ஆட்சியை அமைக்க முன்வர வேண்டும் என்று கேட்டிருந்தேன். அத்துடன் எமது சர்வதேசபரிமாற்றங்கள் எமக்கு நன்மை அளிப்பனவாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

தேர்தல் நெருங்கி விட்டிருக்கும் இந்த நேரத்தில் எனது இனிய சகோதர சகோதரிகளுக்கும் இளைஞர்கள் யுவதிகளுக்கும் நான் ஒன்று கூறக் கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் விரைவில் முடிந்து விடும். பழைய வாழ்க்கை மீண்டும் திரும்பி விடும். ஆனால் உங்கள் இனிவரும் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படவேண்டுமானால் உங்களுக்கான கட்சியை நீங்கள் தேர்ந்தெடுத்தால் போதாது. அக்கட்சியில் போட்டியிடும் திறமான வேட்பாளர்களை அடையாளம் கண்டால் போதாது. நீங்கள் அனைவரும் திரண்டெழுந்து சென்று ஆகஸ்ட் மாதம் 17ந் திகதி காலையில் வாக்களிப்பது மிக முக்கியம். வீட்டில் முடங்கிக் கிடக்காதீர்கள்! உங்கள் பொன்னான வாக்குகளை அன்று காலையே வாக்குச்சாவடிகளுக்கு சென்று அளியுங்கள். அது மட்டுமே உங்களுக்குள்ள ஒரேயொரு திடமான ஜனநாயக உரித்து. நீங்கள் வாக்களிக்காது விட்டால் முன்னர் 25 வாக்குகளுடன் பாராளுமன்றம் சென்றவர்களைப் போல் குறைந்தவாக்குகளுடன் குறையுள்ள வேட்பாளர்கள் உங்கள் குறைகேட்கும் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஆகிவிடுவார்கள். நீங்கள் வாக்குகளை இடாவிடில் வேறு வழிகளில் உங்கள் வாக்குகளைப் பாவிக்க சில கூட்டங்கள் தயார் நிலையில் இருக்கக்கூடும். அவ்வாறானவர்களின் தவறான நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காதீர்கள்.

‘செய்தக்க செய்யாமையானுங் கெடும்’ என்று வள்ளுவன் கூறியது போல நீங்கள் செய்யவேண்டிய உங்களது கடமையை செய்யாது போனால் அது உங்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் கேடுதருவதாய் அமைந்து விடும் என நான் அஞ்சுகின்றேன்.

எனவே எனது வடக்குக் கிழக்கு மாகாண அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! இளைஞர்கள், யுவதிகளே! தேர்தலில் வாக்களிப்பதென்ற உங்களது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்ற முன்வருவதோடு தமிழ் பேசும் மக்களின் நலனுக்காய் அணிதிரண்டு சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இம் மாதம் 17ந் திகதி; காலையில் எந்தக் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள் என்பதை முதலில் மனதில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அக்கட்சி எமது தனித்துவத்தையும் சுயநிர்ணயத்தையும் உறுதிப்படுத்தும் கட்சியாக இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னுந் தாயகம், தனித்துவம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்ற கட்சியாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு நீதிதேடுவதற்குப் பின்னிற்காத கட்சியாக, சுதந்திரமான சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் உறுதியுடன் உள்ள கட்சியாகத் திகழவேண்டும். தமிழ் மக்களின் கௌரவம், சமத்துவம், பாதுகாப்பு போன்ற விடயங்களில் சமரசம் செய்யாத கட்சியாக இருக்க வேண்டும். போருக்குப் பின்னரான இந்தச் சூழலில், செயற்த்திறன் மிக்க புனருத்தாரண பணிகளை முன்னெடுக்கின்ற கட்சியாக இருக்க வேண்டும். காணமல் போகச் செய்யப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவதற்காகவும், அரசியல் கைதிகள் விடுதலைக்காகவும் இதயசுத்தியுடன் செயற்படுகின்ற கட்சியாக இருக்க வேண்டும்.

சரணகதியடையாமல், எமது தனித்துவத்தையுஞ் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி வரும் கட்சியை அடையாளங் காணுவது உங்களுக்குச் சிரமம் அளிக்காது என்று எண்ணுகின்றேன். அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் கட்சியில் இருக்கும் நேர்மையான, கொள்கையில் உறுதியுடைய, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய, தூரநோக்குப் பார்வைகொண்ட, எத்தருணத்திலும் விலைபோகாத மனோதிடம் கொண்ட வேட்பாளர்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது அவர்களின் இலக்கங்களை மனதில் பதிந்து வைத்திருங்கள். அன்றைய தினம் காலை ஏழு மணிக்கே தேர்தல் களம் செல்லுங்கள். தவறாது வாக்களியுங்கள். வடகிழக்கு மாகாணங்களில்த்தான் மிகச்சிறந்த வாக்காளர் பங்குபற்றல் நடைபெற்றதென்ற நற் செய்திக்கு வலுவூட்டுங்கள்.

வடகிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து வேட்பாளர்களும் மக்கள் நலனே முதன்மையானது என்ற இலக்கினால் ஒன்று சேர்ந்து, ஒரு குடைக்குக் கீழ் ஒற்றுமையாய் வடகிழக்கு மக்களின் நலன் கருதி செயலாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் இறைவனின் இடைவிடாத ஆசிகள் கிடைக்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சி விடைபெறுகின்றேன்.

நன்றி.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம

http://www.colombomirror.com/tamil/?p=5399

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான அறிக்கை.மக்களே இந்த அறிக்கையைக் கவனமாக வரிக்கு வரி வாசியுங்கள். மீண்டும் மீண்டும் வாசியுங்கள். திடமான>தெளிவான முடிவெடுத்து உங்கள் சக்திமிக்க வாக்குகளை தாயகம்>தேசியம்>சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டில் விட்டுக்கொடுக்காத கட்சியைத்தேர்ந்தெடுப்பது மட்டுமன்றி அந்த இலட்சியத்தில் உறுதியாக நிற்கும் 3 விலைபோகாத வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கள். மக்களுக்கு எல்லாம் தெரியும் மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள்.அனைவரும் அதிகாலையிலேயே நேரத்துடன் அணிதிரண்டு சென்று தவறாது வாக்களியுங்கள்.17 ஆம் திகதி நீங்கள் தான் தீர்மானிக்கும் சக்தி சரியானவர்களைத் தீர்மானிக்காவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவலப்படப்போவதும் நீங்கள்தான் என்பதை மனதில் இருத்துங்கள்.

மிகவும்  தெளிவான

தமிழர்களின் தாகம் அறிந்த அறிக்கை...

ஒவ்வொரு தமிழரின் கனவுகளும் இதுவே...

(சிவப்பால் குறிப்பிட்டவை கூட்டமைப்புக்கு எரிச்சல் தரக்கூடும். ஆனால் உண்மை சுடவே செய்யும்)

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர் சுயநிர்ணயம் போன்ற கருத்துக்களை 2009ம் ஆண்டு மே மாதந் தொடங்கியாவது இக்கட்சிகள் உலகிற்குப் பறைசாற்றி வந்திருக்க வேண்டும். காளான்கள் காரியவாதிகள் ஆக முடியும் ஆனால் காவலர்கள் ஆக முடியாது."

"முக்கியமாகத் தெற்கத்தைய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நடக்க வேண்டும் இல்லையேல் விமோசனம் இல்லை என்ற எண்ணத்தில், உணர்ச்சியுடன் தமிழ் மக்களிடையே தேர்தல் மேடைகளில் பேசிய வசனங்களை மறந்து, தெற்கத்தையவர்களின் மனங் கோணாமல் நடந்து கொள்ள எத்தனிக்கின்றார்கள். அவ்வாறு செய்வதானால் அதை முன்கூட்டியே தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்"

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் அவர்கள் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் பங்கு கொள்ளக் கேட்பது மிக முக்கியமான விடயம். தமிழ் மக்களின்  வாக்களிப்பு விகிதம் அதிகரிக்க அதிகரிக்க தேசியக் கட்சிகளின் இருப்பு வட கிழக்கில்  இல்லாது ஒழிக்கப்படும். குறிப்பாகக் கிழக்கில் தேசியக் கட்சிகளின் இருப்பைக் குறைக்க உதவும்.

அதே வேளை தமிழ் தேசியக் கட்சிகளின் இருப்பு முழுமையாக்கப்படும்.
அது முன்னணியாக இருந்தால் தமிழ் இனத்தின் இருப்பு வட கிழக்கில் உறுதி செய்யப்படும்.
கூட்டமைப்பாக இருந்தால் தமிழ் இனத்தின் இருப்பு வட கிழக்கில் கேள்விக்குறியாக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் விளக்கம் குடுக்கக் கஸ்டப்படுகினை போல கிடக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் இதை விட தெளிவாக ததேமு வை ஆதரியுங்கள் எனச் சொல்லியிருக்க முடியாது.

விக்கினேஸ்வரனின் ஆதரவு முண்ணணிக்குத்தான் என்பது வெள்ளிடைமலை. வடமாகாணத்தில் இது கூட்டணிக்கு பாரிய பின்னடைவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இன்றைய நிலமை கோசான். கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் குறிப்பாக சம் சும் ஆகியோரால் ஏற்படுத்தப்பட்டது. சிறீதரனுக்கு வாக்களிக்கும் படி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை 

வடக்கு மாகாணசபை தேர்தலை பகீஷ்கரிக்க மக்களிற்கு ஆணையிட்டும் அதை நிராகரித்து மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து முதல் அமைச்சரையும் மாகணசபையையும் தெரிவுசெய்தனர்- கயேந்திரன்குழுக்கள் ஏன் ஏன் அவரது பேச்சை தூக்கிகொண்டுதிரிய முயற்ச்சிக்கிறார்கள் ஆதரிக்கவேண்டும்.தேசியம் சுயநிர்னயம் ஒரு தனிமனிதனிற்குரிய உரிமை இதை வாய்கிழிய பேசுறவனின் வாயை தமிழன் ஆ வென்று பார்க்க தேவையில்லை.அவர்கள் தங்கள் சுயவியாபாரத்திற்கு பயன்படுத்த. யாழ் அறிவு சார் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பீஸ்மர்,

மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது 17ம் திகதி தெரிந்துவிடும்.

கஜேந்திரன், பத்மினி போன்ற பாவாடைச்சாமிகளை மக்கள் தெரியக்கூடாது என்பதுதான் என் விருப்பமும்.

ஆனால் முதல்வர் முண்ணணிக்குத்தான் வாக்குக் கேட்கிறார் என்பதை மறுக்க முடியாது.

பார்ப்போம் ......

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் அவர்கள் சுயநிரணய உரிமைக்காகக் குரல் கொடுப்போருக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். நீங்கள், அவர் கஜேந்திரக்குமார் அணிக்குத்தான் வாக்குக் கேட்கிறார் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கஜேந்திரக்குமார் அணியைத் தவைர வேறு எவர்க்கும் சுய நிர்ணய உரிமை தேவையில்லை என்றி ஆகிவிடுகிறதா?

சரி, சுய நிர்ணய உரிமை யாருக்குத்தான் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? வேண்டும்தான், இப்போதைக்கு அது வேண்டாம், அது உருவாகியிருக்கும் சிங்கள தமிழ் உறவைப் பாதித்து விடும் என்று கருதினால், எப்போதுதான் சுயநிர்ணயம் பற்றிப் பேசப்போகிறீர்கள்? கடந்த 60 வருட காலமாக சுயநிர்ணய உரிமை பற்றிக் கதைக்காமலேயே இருந்துவிட்டோம். இடையே 35 வருடம் யுத்தத்துடன் போய்விட்டது. அப்போதும் எவரும் கேட்கவில்லை, புலிகளைத் தவிர. இப்போது சிங்களத்தின் கோபம் தணிந்திருக்கிறது, இப்போதுதான் கேட்போமே என்றால், அதுவும் வேண்டாம், மறுபடியும் சிங்களத்துக்குக் கோபம் வந்துவிடும் என்கிறீர்கள். அப்போ, எப்போதுதான் இதைக் கேட்கப் போவதாக உத்தேசம்? எப்போதுமே இல்லையென்றால், அதை இப்போதே தேர்தலில் முன்வைத்துத் துணிவாக மக்களிடம் வாக்குக் கேட்கலாமே?

சரி, உங்களின் பாதைக்கே வருகிறேன். கஜேந்திரன் அணிக்கு அரசியல் தெரியாது, வெறும் கத்துக் குட்டிகள் என்றால், விக்கினேஸ்வரனுக்குமா அரசியல் தெரியாது ? சரி, அவர் ஒரு நீதியரசரே தவிர, அரசியல் சூணியம் என்று நீங்கள் நினைத்தால், அவரை ஏன் அரசியலுக்குக் கொண்டுவந்தீர்கள் ? உங்களுக்கு உங்கள் "சாணக்கிய" அரசியல் வாதிகளின் அன்றாட முகத்தை மறைக்க ஒரு முகமூடி தேவைப்பட்டது. ஆதற்காகக் ஒரு நீதியரசரைக் கொண்டு வந்து இருத்தினீர்கள். அவர் நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவார், வாசித்துப் பார்க்கமலேயே கைய்யெழுத்துப் போடுவார் என்று நினைத்தீர்கள். ஆனால் மனுசருக்கு வாசிப்புப் பழக்கம் இருக்கெண்டு ஒருத்தருக்கும் தெரியாமப் போச்சு.

இப்போது விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள். அவரைப் பிழை என்று சொன்னால், அது உங்கள் குற்றமாகி விடும், ஏனென்றால் நீங்கள்தான் அவரை அரசியலுக்குக் கொண்டுவந்தது. அவரைச் சரியென்று நீங்களே கூறினால், உங்களுக்கு நீங்களே அப்பு வைப்பதாக ஆகிவிடும்.

ஆகப், பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறீர்கள். தேர்தலில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல விக்கினேஸ்வரன் அவர்கள் ஆதரிக்கும் கஜேந்திரன் அணி தோற்று விட்டால், கஜேந்திரன் கூட்டணியோடு, அப்படியே விக்கினேஸ்வரனுக்கும் சங்கு ஊதிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதற்குப்பிறகு நீங்கள் எதிர்பார்த்தபடி விக்கினேஸ்வரனுக்கு பகிரங்கமாகவே எதிர்ப்புக் காட்டலாம், வேண்டுமென்றால் தூக்கியும் எறியலாம் என்று நினைக்கிறீர்கள்?

பீஸ்மர்,

மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது 17ம் திகதி தெரிந்துவிடும்.

கஜேந்திரன், பத்மினி போன்ற பாவாடைச்சாமிகளை மக்கள் தெரியக்கூடாது என்பதுதான் என் விருப்பமும்.

ஆனால் முதல்வர் முண்ணணிக்குத்தான் வாக்குக் கேட்கிறார் என்பதை மறுக்க முடியாது.

பார்ப்போம் ......

பாவாடைச் சாமிகளுக்கு வாக்குப் போடக் கூடாதென்று உங்களுக்குத் தெரிந்த அரசியல் ஏன் விக்கினேஸ்வரனுக்குத் தெரியாமல்ப் போனதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அப்படி என்னதான் கஜேந்திரக்குமார் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று நினைக்கிறீர்கள்? வெறுமனே, அவர் கூட்டமைப்பை எதிர்ப்பதால்த்தான் என்று சாட்டுப் போக்குச் சொல்லவேண்டாம். நியாயமாக நீங்கள் அவரை எதிர்ப்பதன் காரணத்தைச் சொல்லுங்கள். அவரின் பின்னாலிருந்து இயக்குபவர்கள் என்று நீங்கள் சொல்லும் குழுவினரால்த்தான் உங்களுக்கு அவர்மேல் ஆத்திரமா? சரி, அவரை இயக்கும் குழு கூட அப்படி என்ன துரோகத்தை தமிழர்க்கு இழைக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறதென்று நினைக்கிறீர்கள்?

தமிழரின் வாக்குகள் பிரியக்கூடாது என்பதில் உங்களைப் போலவே எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்தப் பிரியப்படாத வாக்குகள் தமிழரின் பேரம்பேசும் வலுவை அதிகரித்து அவர்களை உரிமை மிக்க மனிதர்களாக தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழவைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கவேண்டுமே ஒழிய, சிங்களத்திடம் அடிபணிந்து, அவர்களைக் கோபப்படுத்தாமல் எடுத்துக்கொள்ளும் வெற்றுக் கோது உரிமைக்காக அவர்களின் கால்களில் அடகுவைக்கப் பட்டுவிடக்கூடாது என்பதுதான் எனது விருப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

சிவி யின் வரவை நான் வரவேற்றதும் உண்மை. அவர் அந்த நம்பிக்கை பொய்க்காமல் அரசியல் செய்கிறார் என்பதும் உண்மை.

நான் முன்பே சொல்லி இருக்கிறேன் சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போகும் உரிமையுடன் கூடியது. பிரிந்து போகும் உரிமை அற்ற சுயநிர்ணயம் என்பது ஒரு மாயை. ஆக இலங்கையில் எமக்கு ஒரு தீர்வு சுய நிர்ணயத்தின் அடிப்படையில் ஒரு போதும் அமைய முடியாது.

தற்போது ஸ்காட்லாந்தில் இருக்கும் டீவோ மேக்ஸ் போன்ற ஒரு சமஸ்டியை நிகர்த்த தீர்வே நாம் எதிர்பார்க்க கூடிய உச்ச பட்சம்.

இதில் சீவியின் போக்கில் இருந்து நான் முற்றிலும் வேறு படுகிறேன்.

சுயநிர்ணயத்தை இழுந்துக்கொண்டு ஒரு நாடு இரு தேசம் என மொக்குக் கதை கதைப்போமாயின் தெற்கிற்க்கு வேலை இலகுவாய் முடிந்த்துவிடும்.

இன்னும் 20 வருடத்துக்கு இழுத்தடித்து அதற்குள் முழு வடகிழக்கையும் சிங்கள மயப்படுத்தி விடுவார்கள்.

பிறகு தீர்வாவது மண்ணாவது.

வாக்காளர்களைக் குழப்பும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் - வீ . தனபாலசிங்கம்
[ புதன்கிழமை, 12 ஓகஸ்ட் 2015, 07:54.36 PM GMT ]
cv_thanam.jpg
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரசுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வெற்றி பெற்ற விக்னேஸ்வரனுக்கு, அதனை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடப்பாடு உள்ளது.

அவர் நடுநிலை வகிப்பதாக கூறுகிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றுக்குப் பின்னால் இருப்பதாக தெளிவாக இருக்கிறது.

அவரது நிலைப்பாடு வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் ஆதரவு அவசியம் எனக் கருதுவதாகவும், ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், விக்னேஸ்வரனின் அறிக்கை மேற்குலக ஆதரவு தேவை என்பதை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், ஆனால் இந்தியாவைப் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

http://www.tamilwin.com/show-RUmtyISWSVlp6C.html

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்துபோகும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமை கேட்ட்டால் சிங்களம் சுதாரித்துக்கொள்ளும், வடக்கை முற்றான ஆக்கிரமித்துவிடும் என்கிறீர்கள்.அப்படியானால், இப்போது அந்த ஆக்கிரமிப்பு நடைபெறவில்லையா? சரி, அப்படி சிங்களம் இதுவரை எமக்குத் தருவதாக உறுதி கூறியிருக்கும் உரிமை எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நடப்பில் உள்ள, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாகாணசபைக்கான காணி, பொலீஸ் அதிகாரங்களையே தர மறுக்கும் ஒரு அரசு வேறு என்னவிதமான உரிமையைத் தரப்போகிறது என்று நினைக்கிறீர்கள்?

ஆக, சிங்களம் தாமாக விரும்பித் தரவிருக்கும் ஒரு தீர்வைப் பெற்றுக்கொண்டு சந்தோசமாக வாழவேண்டும் என்று கேட்கிறீர்கள்?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? சிங்களம் தமிழருக்கென்று ஒருபோதுமே நியாயமான தீர்வொன்றைத் தரப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அது இலங்கை சிங்கள பெளத்த மக்களுக்கே சொந்தமானது என்ற கோட்பாட்டிலிருந்து துளியேனும் வெளிவரவில்லை !

Edited by ragunathan
சொற்பிழை

.விக்னேஸ்வரன் நேர்மையானவராகவும் ,மனவுறுதி உள்ளவராகவும் இருந்தால் மதில்மேல் பூனைமாதிரி இருக்காமல் ,தெளிவாக ,அறிக்கை விட்டு நேரடியாக தமிழ் தேசிய முன்னணியை ஆதரிக்கலாம்.

விக்கியின் இன்றைய நிலைக்கு காரணம் விக்கினேஸ்வரனால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட  இனப்படுகொலை தீர்மானம்
இதற்குப்பிறகு மேற்குலக நாடுகள் இவரை ஓரம் கட்ட டுகின்றன ,இவர் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பொழுது புலம்பெயந்த பலர் இவரை அழைத்தனர் .அதற்கு இவர் சொன்ன காரணம் கமருனையும் மோடியையும் சந்திக்காமல் வேறு எந்த நிகழ்வுக்கும் வரமுடியாது என்பது ,திடிரென அமெரிக்காவுக்கு FETNA வின் நிகழ்ச்சிக்கு வந்தவர் ,அங்கு தான் இவரை புலி வாலுகள் முளைச்சவரம் செய்தவர்கள் .இதைவிட இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் மோடியின் வரவின்போது விக்கியிடம் மோடி ,தற்போதைய நேரத்தில் இந்த தீர்மானம் பொருத்தமற்றது என்று சொல்லப்பட்டதாக தகவல் .கேரியின் சந்திப்பின்போது விக்கிக்கு கடைசி இருக்கை போடப்பட்டதும் இதுதான் காரணம் இதற்கு மேலாக கொழும்பிலுள்ள மேற்கு நாட்டு துதுவர்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்ததாக தகவல் .
 
இவைகளால் தான் விக்கி முளை குழப்பிப்போய் நாளுக் கொரு அறிக்கை .
 
  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சரின் அறிக்கையை வாசிக்கும் எவருக்கும் அவர் தமிழ்த் தேசி மக்கள் முன்னணியினருக்கே வாக்களிக்கும் படி கோரியிருக்கிறார் என்பது தெளிவாக விளங்கும். ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாமது சொன்னால் பாவம் என்ற ரீதியில் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். இது கூட்டமைப்பினருக்கு விளங்கியும் விழுந்தும் மீசையில் மண்படாத மாதிரி தங்கள் தேர்தல் விஞ்ஙாபனத்தில் குறிப்பிட்ட கொள்கைகளுக்கு வாக்களிக்கும்படி கோரியிருக்கிறார் என்று விளக்கம் கொடுக்கின்றனர். எழுத்தில் இருந்தால் போதாது செயலிலும் இருக்க வேண்டும்.செயல் வீரர்களைத் தெரிவு செய்யும் படி முதல்வர் கோரியிருப்பதுதான் கூட்டமைப்பினருக்கு இடக்கிறது. தமிழ்மக்கள் புத்திசாலிகள் .இந்தத் தார்ப்பரியம் அவர்களுக்கு விளங்கும் 1989 ஆம் ஆண்டு ஈரோசுக்கு வாக்களித்தமாதிரி தெளிவான முடிவை அவர்கள் எடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்துபோகும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமை கேட்ட்டால் சிங்களம் சுதாரித்துக்கொள்ளும், வடக்கை முற்றான ஆக்கிரமித்துவிடும் என்கிறீர்கள்.அப்படியானால், இப்போது அந்த ஆக்கிரமிப்பு நடைபெறவில்லையா? சரி, அப்படி சிங்களம் இதுவரை எமக்குத் தருவதாக உறுதி கூறியிருக்கும் உரிமை எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நடப்பில் உள்ள, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாகாணசபைக்கான காணி, பொலீஸ் அதிகாரங்களையே தர மறுக்கும் ஒரு அரசு வேறு என்னவிதமான உரிமையைத் தரப்போகிறது என்று நினைக்கிறீர்கள்?

ஆக, சிங்களம் தாமாக விரும்பித் தரவிருக்கும் ஒரு தீர்வைப் பெற்றுக்கொண்டு சந்தோசமாக வாழவேண்டும் என்று கேட்கிறீர்கள்?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? சிங்களம் தமிழருக்கென்று ஒருபோதுமே நியாயமான தீர்வொன்றைத் தரப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அது இலங்கை சிங்கள பெளத்த மக்களுக்கே சொந்தமானது என்ற கோட்பாட்டிலிருந்து துளியேனும் வெளிவரவில்லை !

65 கால பட்டறிவிலிருந்து எதையுமே தமிழினம் படிக்கவில்லை

ஆனால் சிங்களம் வர வர தனது நினைப்பில் உறுதியாகி வருகிறது

?த தான் அவனது வெற்றிக்கும்

எமது குனிவுக்கும் காரணம்..

நன்றி ரகு

நான் எழுத வந்ததையெல்லாம் குறிப்பிட்டுவிட்டீர்கள்...

முதலமைச்சர் அவர்கள் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் பங்கு கொள்ளக் கேட்பது மிக முக்கியமான விடயம். தமிழ் மக்களின்  வாக்களிப்பு விகிதம் அதிகரிக்க அதிகரிக்க தேசியக் கட்சிகளின் இருப்பு வட கிழக்கில்  இல்லாது ஒழிக்கப்படும். குறிப்பாகக் கிழக்கில் தேசியக் கட்சிகளின் இருப்பைக் குறைக்க உதவும்.

அதே வேளை தமிழ் தேசியக் கட்சிகளின் இருப்பு முழுமையாக்கப்படும்.
அது முன்னணியாக இருந்தால் தமிழ் இனத்தின் இருப்பு வட கிழக்கில் உறுதி செய்யப்படும்.
கூட்டமைப்பாக இருந்தால் தமிழ் இனத்தின் இருப்பு வட கிழக்கில் கேள்விக்குறியாக்கப்படும்.

இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மகிந்த,ரணில் கட்சிகளில் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகின்ற உத்தேசம், கிழக்கைப்பற்றி கவலைப்படாதீர்கள், சிங்கள இனவாத கட்சிகளிலிருந்து தமிழனை  பாராளுமன்றஅனுப்பமாட்டார்கள் .

நம்பீட்டம் !

இதையே வேறுபடுத்தி அறியமுடியாத நீங்களெல்லாம் அரசியல் கருத்துகளை எழுதினால் எப்படியிருக்கும் 

அவனா இவன் ?

இதையே வேறுபடுத்தி அறியமுடியாத நீங்களெல்லாம் அரசியல் கருத்துகளை எழுதினால் எப்படியிருக்கும் இதற்கிடையில் இன்னொருவர் பச்சை வேறு .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்ப "புலி சாயம்" படாத ஒருவரை வட மாகாண முதல்வராக கொண்டுவர சிலர் உதவினார்கள். ஆனால் பதவிக்கு வந்தபின் விக்னேஸ்வரன் அவர்களுக்கு உண்மைகள் தெரிந்து அவர் நியாயத்தின்பக்கம் நிற்க விளைகிறார். இது இந்தியாவுக்கும், அதன் முகவர் அரசியல்வாதிகளுக்கும் சிக்கலாகிவிட்டது. :shocked::grin:

வரலாற்றில் பலரிடம் இருந்து பெற்றுக் கொண்ட மோசமான பாடம்  எவரையும் முழுமையாக நம்பவேண்டாம் என்பதே

விக்கி ஐயா மீது எனக்கு நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன.

மகிந்த மாத்தையா இருக்கும் வரைக்கும் அவருக்கு நல்லெண்ண சமிஞ்சைகளை தொடர்ந்து விட்டுக் கொண்டு இருந்தார். வடக்கு மாகாணசபையில் மகிந்த இருக்கும் போது கொண்டு வர எத்தனித்த இனப்படுகொலை தீர்மானத்தினை பற்றி மெளனம்காத்தார்.
மகிந்த இருக்கும் வரைக்கும் மகிந்த முன்னின்று நிகழ்த்திய இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் வடக்கு மாகாண சபையில் விவாதத்துக்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தேர்தலில் மகிந்த தோற்கின்றார், ரணில் வருகின்றார்.

மகிந்தவை அப்புச்சி உறவு கொண்டாடும் வாசுதேவ நாணயக்காரவுக்கும் ரணிலை படிப்பதில்லை. அவரின்  சம்பந்தி விக்கி ஐயா அவர்களுக்கும் ரணிலை பிடிப்பதில்லை

ரணிலுடன் முதல் நாளில் இருந்து முரண்படுகின்றார். அவசர அவசரமாக இனப்படுகொலை தீர்மானத்தினைக் கொண்டு வருகின்றார். மகிந்தவுக்கு சங்கடத்தினை கொண்டு வரும் என்பதற்காக எதற்காக மெளனம் காத்தாரோ  அதை அவரே முன்னின்று, உடல் நிலை சரியில்லாத போதும் முன்னின்று கொண்டு வருகின்றார்

வடக்கு தேர்தலின் போதும் சரி, சனாதிபதி தேர்தலின் போதும் சரி தமிழ் தேசியம், சுய நிர்ணய உரிமை போன்றவற்றை பற்றி காத்திரமாக உச்சரிக்காத விக்கி ஐயா அவர்கள், 6 மாதங்களில் திடீரென, பாராளுமன்ற தேர்தல் அறிவித்த உடனேயே உச்சரிக்கத் தொடங்குகின்றார்

தமிழ் தேசிய கூத்தமைப்பு  பற்றி கடுமையாக விமர்சிக்கின்றார், கஜேந்திரன் கோஷ்டி பற்றிய அவர் ஆதரவு நிலை அவர்கள் தேர்தலில் பங்கு கொள்ளப் போகின்றேன் என்று அறிவித்த நாளில் இருந்து புல்லப்படத் தொடங்குகின்றது.

தன்னை நடுநிலைவாதியாக  காட்டிக் கொண்டே முழு பக்கச்சார்பாக கஜே கோஷ்டிக்கு ஆதரவு கொடுக்கின்றார். அது வரைக்கும் தன்னை புலம்பெயர் மக்களுடன் ஓட்டியவராக காட்டாதவர் திடீரென புலம்பெயர் மக்களின் நிகழ்வுக்கு செல்கின்றார்.

 இவரது ரணில் மீதான எதிர்ப்புத் தான் கஜே அணியினரை ஆதரிக்க வைக்கின்றதா என்று இங்கு தான்  என் சந்தேகம் எழுகின்றது

விக்கி ஐயா அவர்கள் நேரடியாக இன்னாருக்குத்தான் வாக்களியுங்கள் என்று சொல்லி இருந்தால் அவர் மீதான, அவர் நேர்மை மீதான என் சந்தேகம் நியாயமற்று இருக்கும்

ஆனால் தன்னை நடுநிலை வாதியாக காட்டிக் கொண்டே  ரணில் எதிர்ப்பு அரசியல் செய்கின்றாரா என்றும், அதற்காகத்தான் தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் மக்களுக்கு உயிர் துடிப்பாக இருக்கும் விடயங்களை தன்  சுய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காக மலினப்படுத்துகின்றார என்றும் சந்தேகம்  எனக்கு எழுகின்றது

Edited by நிழலி
உறவு நிலையை தவறுதலாக குறிப்பிட்டதை திருத்த

  • கருத்துக்கள உறவுகள்

இதையே வேறுபடுத்தி அறியமுடியாத நீங்களெல்லாம் அரசியல் கருத்துகளை எழுதினால் எப்படியிருக்கும் 

இதையே வேறுபடுத்தி அறியமுடியாத நீங்களெல்லாம் அரசியல் கருத்துகளை எழுதினால் எப்படியிருக்கும் இதற்கிடையில் இன்னொருவர் பச்சை வேறு .

அப்ப நீங்கள் என்ன சொல்லவாறியள். நாங்கள் எல்லோரும் அரசியல் ஞானசூனியங்கள் நீங்கள் Howard  university இல் அரசியல் விஞ்ஞானத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர்கள், முதல்வருக்கே அரசியல் கற்பிப்பீர்கள் என்கிறீரகள். கோஷான் சொன்ன மாதிரி இந்த விடயத்தில் எனக்கு முதல்வரோடு கருத்துடன் பாடு இல்லை என்று நாகரீகமாக கதைப்பதை  விட்டு மதில் பூனை என்று கதைக்காதீர்கள். இப்ப இருக்கும் தமிழ் தலைவர்களில் CV மட்டுமே நம்பத்தகுந்தவர்

77இல் எப்படி தமக்கு எதிரானவர்களை தாம் துரோகி என்று கை காட்டுபவர்களை போட்டுத் தள்ள ஒரு ஆயுதம் தாங்கிய இளைஞர் கூட்டம் தேவைப்பட்டதோ அதே போல தற்பொதைய நிலையில் தாம் செய்யும் அரசியல் தகிடுதத்தம்களை ஆமாம் போட்டு ஆதரிப்பதற்கு ஒரு கல்விமான் தேவப்பட்ட நிலையில் விக்கினேஸ்வரனை கூத்தமைப்பு களமிறக்கியது. 

ஆனாலும் களம் இறக்கப்பட்ட விக்கினேஸ்வரன் தானாகச் சிந்தித்து சில செயற்திட்டங்களை மேற்கொண்ட போது அதனைப் பொறுக்க மாட்டாத சம் சும் இரட்டையர்கள் அவரது நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் நிலைப்பாட்டை எடுத்தனர். விளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பை நேரடியாக ஆதரிக்க முடியாத நிலைக்கு முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.

தேர்தல் முடிந்ததும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் விக்கினேஸ்வரனை பதவியிறக்கி ஒரு 'பன்னீர்ச்செல்வத்தை' முதலமைச்சராக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

கதை கதையாம் பகுதில் பதியவேண்டிய துப்பறியும் கதைகள் தான் இங்கு பலரின் பின்னூட்டங்களாக இருக்கு . உதாரணம் -விக்கி தானா சிந்தித்து என்றவரி  செம கொமடி .

புலி சார்பு ஊடகங்கள்  முப்பதுவருடங்கள்  கொடுத்த பயிற்சி அது .

தேர்தல் பல செய்திகளை பலருக்கு  சொல்லி நிற்கப்போகின்றது விக்கியர் ,யாழ் உறவுகள் உட்பட .

விக்கியர் பற்றிய செய்திகள் பல ஊதி பெருக்கப்பட்டவை .

  • கருத்துக்கள உறவுகள்

காமெடிக்கும் பயிற்சியளிக்கப்பட்டதா?:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.