Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்புக்கு இலங்கைத் தேசிய அரசில் இடமில்லை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு இலங்கைத் தேசிய அரசில் இடமில்லை..!

 
கூட்டமைப்புக்கு இலங்கைத் தேசிய அரசில் இடமில்லை..!

மைத்திரிரி பால சிறி சேனாவின் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும்தான் முக்கிய மந்திரிப் பதவிகளை எடுக்க உள்ளன..

கூட்டமைப்பின் கடுகளவு ஆதரவு கூட சிங்கள அரசால் எதிர் பார்க்கப் படவில்லை!

விரக்தியால்…

எதிர்க் கட்சி தலைவர் பதவியை குறி வைக்கும் சுமந்திரன்!

எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் சம்பந்தன்!

-மு.வே.யோ-

 

ஆம்!..நாளை காலை சுமார் பத்து மணியளவில் இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பிரதம அமைச்சராக ரணில் விக்கிரம சிங்கா
பதவி ஏற்க உள்ளார். அவருக்கு இலங்கை அதிபர்,மைத்திரி பால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்னும் செய்தி வந்து சேர்ந்து விட்டது.
எனக்கு கிடைத்த கடைசித் தகவலின்படி..
கூட்டமைப்புக்கு ஓர் அரசியல் கட்சி என்ற வழக்கமான பதவி ஏற்பு.. அழைப்பு மட்டும் அனுப்ப பட்டு. உள்ளதாக தெரிகிறது.ஆனால்..தாம் புதிய அரசில் எந்த மந்திரிப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என்று..பந்தாவுக்காக கூட்டமைப்பு இப்போது சொல்லித் திரிகிறது.
இலவம் பழம் பழுக்கும்,பழுக்கும் என்று கிளி காத்திருந்து ஏமாற்றத்துடன் பறந்ததுதான் மிச்சம் என்பதுபோல்…மந்திரிப் பதவியை ஏற்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு, மந்தி(ரி)களுக்கு உள்ள பின் கதவுச் சலுகைகளை கடந்த காங்களில் அனுபவித்து வந்த சிலர் இன்றைய கூட்டமைப்பில் உள்ளார்கள்.பலர் விண்ணுலகம் சென்று விட்டார்கள்..

அதுபோல் ஒரு விளையாட்டை இம்முறையும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆடலாம் என்று கனவு கண்ட கூத்தமைப்புக்கு சிங்கள பெரும் பான்மைக் கட்சிகள் வைத்து விட்டன வேட்டு..
தேசிய அரசு என்ற ஒன்றை அந்தக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்..ஐக்கிய தேசிய கட்சியும் கொண்டு வந்து ,ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க உள்ளனவாம்..அதில் முக்கியமாக அதே கட்சியை சேர்ந்தவர்களோ,அதனுடன் சேர்ந்த, சில சிறு கட்சிகளோ மட்டும்தான்.. அமைச்சர்களாக அங்கம் வகிக்க உள்ளனராம்..
அப்படி என்றால்..எதிர்க் கட்சி ஆவது தமக்கு கிடைக்காதா?..என்று இப்போது கூத்தமைப்பு கூடிப் பேசிக் கொண்டு இருக்கிறதாம்..அதில் முக்கிய எதிர்க் கட்சி தலைவர் பதவியில் கண் போட்டு உள்ளாராம் நம்ம தந்திர நரி சுமந்திரன்..

எங்கள் சனங்களில் பலருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி என்பது வெறும் உழைப்பு அற்ற ஓர் பதவி என்றுதான் தெரியும்..ஆனால்..அந்தப் பதவியின் பின் பக்கம் என்ன..எப்படி என்று பலருக்கும் தெரியாது..ஒரு அரச மந்திரிக்கு உள்ள அத்தனை மதிப்பும் அதிகாரமும் எதிர்க் கட்சித் தலைவருக்கு உண்டு..தலைவருக்கு அது உண்டு என்றால் பிரதானிகளுக்கும் உண்டுதானே? தமிழ் மக்களை ஏமாற்ற நாம் எந்த மந்திரிப் பதவியும் எடுக்க போவதில்லை என்ற வெற்று கோசத்தை போட்டுக் கொண்டு எதிர்க் கட்சியில் அமர்ந்தால்..அங்கே வந்து குவியப் போகுது..இலட்சுமி கடாட்சம்..! சுமந்திரன் ஐயாவின் காக்கை கண்கள் இப்போது எங்கே இருக்கின்றன என்று புரிகின்றதா?

பிழைக்க தெரிந்தவனுக்கு பூலோகம் ஒரு சொர்க்கம் தம்பி..ஆனால் எங்கள் ஈழ..தமிழ் மக்களின் முக்கிய கனவு என்ன தெரியுமா?
இராணுவத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்..
வடக்கு மாகாண சபைக்கு நிதி..காவல்..காணி..போன்ற முக்கிய அதிகாரங்கள் கிடைக்க வேண்டும்..என்பது மட்டும் அல்ல..மீண்டும் அந்த மண்ணில்..பனம் பழம் விழும் சத்தம் மட்டும்தான் கேட்கவேண்டும்.குண்டுச் சத்தமோ வேட்டுச் சத்தமோ கேட்கக் கூடாது என்பதுதான்…பலாலிக் காணிகள் எங்கும் எங்கள் மக்கள் மீண்டும் வெங்காயம்,புகையிலை வைத்து வாழவேண்டும் என்பதையும் அதனுடன் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்….நியாயமான ஆசைகள்….ஆனால்..ஒற்றை ஆட்சியின் கீழ்..இவை அனைத்தும் நடக்க கூடியவைகளா?..அதுவும் சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கும்போது?..நிச்சயம் இல்லை..
நடந்து முடிந்த இலங்கைப் பொதுத் தேர்தல் என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாத ஒன்று என்பதுதான் என் கணிப்பு..

http://www.velichaveedu.com/np-20815-04/

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ, எழுதகினம், பேனா கையில கிடைத்தால்....:oO:

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்தானே அதில் என்ன தவறு?

அதிகமான மக்களின் கருத்து எதுவோ அதுதான் இப்போதைக்கு நடக்கும் என உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித் தலைவர் என்றால் பாராளு மன்றத்தின் மேசையில் ஓங்கி அடித்துச் சவுண்டு விடலாமோ

  • கருத்துக்கள உறவுகள்

அரசில் சேர்ந்தா ஐயோ துரோகி.

சேராவிட்டால் இப்படி.

இப்படியே செய்தால் புலம்சுக்கு ஊரில் இருக்கிற கொஞ்ச மரியாதையும் போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சின்னக்கதிர்காமர் வடை போச்சேன்னு வாயை பிளக்கிறாப் போல படம் போடுவது தப்பு. tw_blush:

கூட்டமைப்புக்கு இலங்கைத் தேசிய அரசில் இடமில்லை..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியே செய்தால் புலம்சுக்கு ஊரில் இருக்கிற கொஞ்ச மரியாதையும் போயிடும்.

மருவாதையா? என்ன பகிடியா விடுறீங்க? இப்ப புலம் பெயர் சவுண்ட்டெல்லாம் சும்மா நொய்ஸ் தான். விஞ்ஞானத்தில் சில பௌதீக விடயங்களை அளக்கும் போது background noise எப்பவும் இருக்கும். அதைக் கண்டு பிடித்த பிறகு எதிர்கால அளவீடுகளில் அதைப் பற்றிக் குழப்பம் கொள்ளாதிருக்க அப்படியே background noise ஐ offset செய்து விடுவார்கள். புலம் பெயர் சவுண்டை தாயக மக்களும், சிங்களவரும், சர்வதேசமும் offset செய்து பல மாதங்களாகி விட்டது!  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தேசிய அரசு அமைத்தால் இவர்கள் எப்படிப் பேரம் பேசுவார்கள.?;?மகிந்தவுடன் 60 பேர் நிற்கிறார்களாம். அரசிலும் அவர்கள் எதிர்க் கட்சியிலும் அவர்கள். ?முதலிலிலே யே மகிந்தவுடன் பேரம் பேசி இருந்தால் சுதந்திரக் கட்சியிலிருந்து தேசிய அரசுக்கு ஆதரவு கொடுத்தவர்களை தடுத்து நிறுத்தி இருக்கலாம். ரணிலும் பேச்சுக் கு வந்திருப்பார்.பேசாமல் பார்லி மெண்டையே புறக்கணிக்க வேண்டியதுதான். அல்லது மறுபடியும் தமிழீழக் கோரிக்கையைக் கையில் எடுக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மருவாதையா? என்ன பகிடியா விடுறீங்க? இப்ப புலம் பெயர் சவுண்ட்டெல்லாம் சும்மா நொய்ஸ் தான். விஞ்ஞானத்தில் சில பௌதீக விடயங்களை அளக்கும் போது background noise எப்பவும் இருக்கும். அதைக் கண்டு பிடித்த பிறகு எதிர்கால அளவீடுகளில் அதைப் பற்றிக் குழப்பம் கொள்ளாதிருக்க அப்படியே background noise ஐ offset செய்து விடுவார்கள். புலம் பெயர் சவுண்டை தாயக மக்களும், சிங்களவரும், சர்வதேசமும் offset செய்து பல மாதங்களாகி விட்டது!  :grin:

சூப்பர் விளக்கம். இதை விட நளினமாகவும் நாகரிகமாகவும் எவராலும் சொல்லிவிடமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

எனி இவை சமஷ்டி.. சுயநிர்ணயம்.. சம உரிமை ஏன் 13 எல்லாத்தையும் திறந்து போட்டு ஒற்றை இலங்கை.. ஒற்றையாட்சி.. நல்லிணக்கம்.. சுகபோகம் சக வாழ்வுன்னு போனால் தான் அங்கின துணை மந்திரி பதவியாவது மிஞ்சும். வாக்குப் போட்ட தமிழர்கள் வாய் பார்த்து வறுத்துக் குத்த வேண்டியான். சமஷ்சி.. சுயநிர்ணம்.. சம உரிமை 2016 அல்ல.. 20000000016 ஆண்டுகள் ஆனாலும் கிடைக்க வாய்ப்பில்லை.

இதில புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிக்கத்தக்க சக்தியாகிவிட்டதால்.. அவையிட்ட காசு தா.. சேவை தான்னும் வர முடியாது. சிங்களவன் கிள்ளிப் போடும் போது அள்ளி எடுத்து வாழ்த்துக்க வேண்டியான். tw_blush: 

இது தான் சொல்லுறது யானை தானே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டிட்டு.. நல்லா.. குளிச்சிட்டன் என்று நினைக்குமாம். இப்ப தாயக தமிழரின் நிலை இதுவே..! 

தாயக அரசியலை நேர்மையும்.. இளமையும்.. கொள்கைப் பிடிப்புள்ள.. உழைக்கும் தகவுள்ள.. சோரம்போதலும் அற்ற சர்வதேச அவதானிப்போடு கொள்கை கோட்பாடுகளை வகுத்துச் செயற்படக் கூடிய இளைய சமூகம் பொறுப்பெடுக்கும் வரை தாயக தமிழர்களுக்கு இது தான் அரசியல். தாடி நரைச்ச நரைக்காத.. கொலைஞனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் வாக்குப் போட்டு சிங்கள பாராளுமன்றம் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டியான். tw_angry:

Edited by nedukkalapoovan

முப்பதுவருடங்கள் ஜெயிலில் இருந்த கைதியை விடுதலை செய்து வெளியில் விட்டால் என்னடா சுதந்திரம் இது இதை விட உள்ளே என்ன சந்தோசமாக இருந்தேன்  என்ற மாதிரி இருக்கு .:shocked:

  • கருத்துக்கள உறவுகள்

மருவாதையா? என்ன பகிடியா விடுறீங்க? இப்ப புலம் பெயர் சவுண்ட்டெல்லாம் சும்மா நொய்ஸ் தான். விஞ்ஞானத்தில் சில பௌதீக விடயங்களை அளக்கும் போது background noise எப்பவும் இருக்கும். அதைக் கண்டு பிடித்த பிறகு எதிர்கால அளவீடுகளில் அதைப் பற்றிக் குழப்பம் கொள்ளாதிருக்க அப்படியே background noise ஐ offset செய்து விடுவார்கள். புலம் பெயர் சவுண்டை தாயக மக்களும், சிங்களவரும், சர்வதேசமும் offset செய்து பல மாதங்களாகி விட்டது!  :grin:

புலம்பெயர் என்று  எதை குறிப்பிட்டீர்களோ என்பது புரியவில்லை.

1980-2009 வரை ஆயுத ரீதியான அடக்குமுறை என்பது இலங்கையில் தமிழருக்கு  எதிராக சிங்கள பேரினவாத 
அடக்குமுறை அரசால் இருந்தது (இதையாவது குறைந்த பட்சமாக ஏற்றுகொள்வீர்கள் என்று நம்புகிறேன்).

இந்த கால பகுதியில் பிரதேச வாழ்விட சூழ்நிலையால் 
வேறு வேறு பிரச்சனைகளை தமிழர்கள் எதிர் கொண்டார்கள்.

சொந்த  நிலம் இழந்து துரத்தி  அடிக்க பட்டவர்கள் 
சொந்த தொழில் இழந்து  அகற்ற பட்டவர்கள் 

அகதி எனும் பெயருடன் இடம்பெயர வேண்டியது விருப்பத்தின் பெயரில் செய்யபட்டதல்ல 
உயிர்காப்பின் பெயரில் செய்யபட்டது.

1980களில் திருகோணமலை மக்கள் வடக்கு நோக்கி பெருவாரியாக வந்தார்கள்.
தற்காலிக உயிர்காப்பு பயணமாக அது ஆரம்பத்தில் இருந்தாலும் .... காலபோக்கில் பொருளாதார 
வாழ்வாதார இடம் நோக்கி நகரவேண்டிய தேவை அல்லது கட்டாயம் உருவானது.
அப்போது பலர் இந்தியா நோக்கி புறப்படுவது தவிர்க்க முடியாது போனது.

பின்பு இந்திய முகாம்களில் இருந்து  அதே காரனத்திற்காக மத்திய கிழக்கு ஐரோப்பிய வட அமெரிக்க நோக்கி 
புறப்படுவது தவிர்க்க முடியாது போனது.

இப்போது இவர்கள் சிங்கள பேரினவாதத்தின் பிடியில் இருந்து வெகுதூரம் ஓடிவிட்டார்கள் ....
இனி பாரிய பண செலவை சிங்கள பேரினவாதம் செய்தாலும் கூட 
இவர்களை அவர்களால் அச்சுறுத்த முடியுமா ? என்றால் முடியாது என்று கூற முடியும்.

இந்த தளத்தில் இருந்து ....
வரும் குரல்கள் எந்த அச்சுறுத்தலும் இல்லாத ஒரு தளத்தில் இருந்து வருகிறது.

இவர்களின் சகோததர சகோதரிகள் போதிய பொருளாதார அடிப்படை இன்மையால் 
வருவதை எதிர்கொண்டு உள்நாட்டில் இருந்துவிட்டகள் 
இவர்கள் மீது இப்போதும் ஒரு இனவாத படலம் இருந்துகொண்டே இருக்கிறது 
இங்கிருந்து இனவாத படலத்தின் தணிக்கைக்கு உள்ளாக்கி சுய தணிக்கை செய்தே குரல் கொடுக்க முடியும்.

ஒரு சுதந்திர குரலை 
அடக்குவதில் சுதந்திரம் தேடிய நாம் இன்று வீராப்பு பேசுகிறோம்.

நாம் உண்மையில் தேடியது சுதந்திரம்தானா ?

(உங்களுடைய சொல்லாடல் என்னால் சரியாக புரியப்படாமல் இருக்கலாம். சுற்றும் சூழலும் புரிகிறது) 

சுதந்திரத்தை அடகுவைக்க தொடங்கிவிட்டால் ....
அதில் வரும் சுகம் 
சுதந்திரமாக மரணிப்பது வரை கொண்டு செல்லும்.

விபச்சாரம் என்பது இந்த உலகில் எப்படி உயிர்வாழ்கிறது ?
ஒருவனுக்கு ஒருத்தி எனும் குரல் அதன் ஓரத்தில் வாழ்கிறது.

நாம் எதை தேடினோம் என்பது .....
ஓடிய தமிழனுக்கு இப்படிதான் நினைவு இல்லாமல் போய்விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தால் நெருங்கியுளோம், இணக்க அரசியல் செய்யப் போகிறோம்..... என்று சவுண்டு, விட்டவர்கள்.....
இனி... என்ன சொல்லப் போகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.