Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள்.

Featured Replies

எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள்.

Published on August 23, 2015-9:39 am   ·   No Comments

dineshகடந்த 17ஆம் திகதிவரை இலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலும் தேர்தல் ஆரவாரங்கள் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக நடைபெற்றன. லண்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், ஒஸ்ரேலியா, உட்பட ஐரோப்பிய நாடுகள் எங்கும் கூட்டங்களும் தேர்தல் பிரசாரங்களும் என்று அமர்க்களமாகவே காணப்பட்டது. லண்டன் கனடா, ஒஸ்ரேலியா நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் என எங்கும் இந்த தேர்தல் ஆரவாரமாகத்தான் காணப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்கள் பெரும்தொகையாக கூடும் லாச்சப்பலில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

என்ன ஐரோப்பாவிலும் தேர்தல் நடக்கிறதா என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். இலங்கையில் நடந்த தேர்தல் ஆரவாரங்களின் ஒரு பகுதியாகவே இவற்றை இங்கு காணமுடிந்தது. புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் அமைப்புக்கள் அனைத்தும் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியை ஆதரிக்குமாறு அறிக்கை விட்டதுடன் பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

கஜேந்திரகுமார் அணியை வெல்ல வைப்பதற்காக மாற்றத்திற்கான குரல் என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக பெருந்தொகை பணத்தை திரட்டி இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. கனடா, இலண்டன், ஜேர்மனி என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மேற்குலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களும் கஜேந்திரகுமார் அணிக்கே மிகத்தீவிரமாக பிரசாரங்களில் ஈடுபட்டன. லண்டனில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி நிலையங்களின் பொறுப்பாளர்களை அழைத்த விடுதலைப்புலிகள் கஜேந்திரகுமார் அணிக்கே முழமையான ஆதரவை வழங்கமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களை துரோகிகளாக காட்டுமாறும் உத்தரவிட்டனர்.
லண்டன், கனடா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உத்தரவை தலைமேல் கொண்டு தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை செயற்பட்டன.

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள உங்கள் உறவினர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சின்னமான சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கூறுமாறு விடுதலைப்புலிகளும் தமிழ் ஊடகங்களும் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களை வலியுறுத்தி வந்தன.

இவர்களின் வலியுறுத்தலை சிலர் ஏற்றுக்கொண்டு தாயகத்தில் இருந்த மக்களுக்கு கஜேந்திரகுமார் தரப்புக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தனர்.

தேர்தல் தினத்தன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு இல்லை, தாங்கள் கூறும் கருத்துக்கள் அங்கு dineshஉள்ள மக்களை சென்றடையவில்லை. அங்குள்ள ஊடகங்கள் அதனை மூடிமறைக்கின்றன. கஜேந்திரகுமார் தரப்புக்கு இலங்கையில் உள்ள ஊடகங்கள் போதிய ஆதரவை வழங்கவில்லை என குறிப்பிட்டார். அந்நபர் கஜேந்திரகுமார் தரப்பிற்காக தீவிரமான பிரசாரம் செய்பவர் என்பதை அவரின் பேச்சில் அறியமுடிந்தது.

ஓட்டுமொத்தத்தில் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அரசியல் அறிவற்ற முட்டாள்கள், இதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றனர். அறிவாளிகளான நாங்கள் கூறும் கருத்துக்களையும் இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள் மூடிமறைப்பதால் அரசியல் அறிவு இல்லாத முட்டாள்களாக இருக்கும் வடக்கு கிழக்கு தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர் என்ற கருத்துப்பட பேசிக்கொண்டிருந்தார்.

இவரைப்போன்றவர்களுக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களுக்கும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தக்க பதிலை வழங்கியுள்ளனர். பதில் என்பதை விட தலையில் ஓங்கி பலமான அடி ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களின் ஊதுகுழல்களாக இருக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களும் தாங்கள் சொல்வதை தான் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் கேட்கவேண்டும், தங்களின் தாளத்திற்கு தான் ஆடவேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி ஆடாதவர்களை வரிசையில் நிறுத்தி துரோகி பட்டம் வழங்குதையே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

கஜேந்திரகுமார் தரப்பு மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் தாளத்திற்கு ஆடுவதால் அவர்களை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்டுவதற்காகவே இந்த பொதுத்தேர்தலில் கடும் பிராயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.

2010ஆம் ஆண்டும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினர் கஜேந்திரகுமார் தரப்பிற்காக பிரசாரம் செய்திருந்தனர்.
அதை விட இம்முறை நடைபெற்ற தேர்தலில் பெரும் எடுப்பில் பெரும் பணச்செலவில் கஜேந்திரகுமார் தரப்பிற்காக பிரசாரங்களை செய்ததுடன் இலங்கையில் தேர்தல் பிரசாரங்களுக்காக பெருந்தொகை பணமும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தக்க பதிலை வழங்கியிருக்கிறார்கள். எங்கள் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். உங்கள் தலையீடு எமக்கு தேவையில்லை என்பதை அவர்கள் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றனர்.

தேர்தலுக்கு சில தினங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவர் இதனை மிகத்தெளிவாக சொன்னார். லண்டனில் இருக்கும் தனது உறவினர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சொன்னார், வெளிநாட்டிற்கு சென்ற காலம் தொடக்கம் இன்றுவரை தொலைபேசி எடுக்காதவர் இப்போது எங்களுக்கு அரசியல் சொல்லித்தருகிறார் என கூறினார்.

முடிவுகளை எடுப்பதற்கு எங்களுக்கு தெரியும், வெளிநாட்டில் உள்ளவர்கள் இதில் தலையிட தேவையில்லை என்பதே வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களின் நிலையாகும். இதனையே அவர்கள் தேர்தலில் பிரதிபலித்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய மாவட்டங்களான வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியாக புலம்பெயர் புலிகளின் ஆதரவை பெற்ற கஜேந்திரகுமார் அணி இருக்கவில்லை, அந்த மாவட்டங்களில் போட்டியிட்ட சுயேச்சைக்குழுக்களில் ஒன்றாக ஒரு உதிரிக்கட்சியாகத்தான் கஜேந்திரகுமார் அணியை பார்த்தனர்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் தமிழ் சிவில் சமூகம், பல்கலைக்கழக சமூகம், வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொண்ட கஜேந்திரகுமார் தரப்பு அம்மாவட்டத்தில் ஆகக்கூடிய ஆசனங்களை பெறுவோம், அல்லது ஆகக்குறைந்தது 3 ஆசனங்களை பெறுவோம் என்றும் சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்களை தோற்கடிப்பதே தமது இலக்கு என்றும் பிரசாரம் செய்தனர்.  இதற்காக அவர்கள் சுமந்திரனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வடமராட்சி பகுதி உட்பட யாழ் மாவட்டம் எங்கும் துண்டுபிரசுரங்களையும் விநியோகித்தனர்.

தலைவர் பிரபாகரன் பிறந்த வடமராட்சி மண்ணில் துரோகி சுமந்திரனுக்கு இடம் கொடுப்பதா என துண்டு பிரசுரத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பருத்தித்துறை உடுப்பிட்டி தொகுதிகளில் மிகத்தீவிரமான பிரசாரங்களை கஜேந்திரகுமார் தரப்பு மேற்கொண்டிருந்தது. வடமராட்சிகிழக்கு பகுதியில் கோழி, ஆடு, மீன்பிடி வலை போன்றவற்றை விநியோகித்து சலுகைகளை காட்டி வாக்கை பெறலாம் என்றும் எண்ணினர்.

இது தவிர சுமந்திரன், மாவை போன்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் மீது புதுப்புது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார்களே ஒழிய தமது இரு தேசம் ஒரு நாடு என்ற கொள்கையை அடைவது எவ்வாறு, தமது இலக்கு என்ன என்பதை மக்களுக்கு விளக்கவே இல்லை,

விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக நாங்கள் வந்திருக்கிறோம், விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறோம் என்றே மக்கள் மத்தியில் அவர்கள் பிரசாரம் செய்தனர்.

தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலேயே வெளியிட்டு வைத்தனர். அந்த கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் தான், மற்றவர்கள் எல்லோரும் போலிகள் என்றும் கஜேந்திரகுமார் தரப்பு அறிவித்தது.

நாங்கள் தோற்றால் விடுதலைப்புலிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தமாகிவிடும், எனவே எங்களை வெற்றிபெற செய்யுங்கள் என அவர்கள் கோரிநின்றனர்.

ஆனால் அவர்களின் கோரிக்கைகளையோ கொள்கைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, யாழ். மாவட்டத்தில் வெறும் 15ஆயிரத்து 22 வாக்குகளை மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் பெற்றுக்கொண்டது. டக்ளஸ், தேவானந்தா, அங்கஜன், விஜயகலா போன்றவர்கள் பெற்ற வாக்குகளை கூட இவர்களால் பெற முடியாமல் போய்விட்டது.  யாரை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றார்களோ அவர்கள் அதிகப்படியான விரும்புவாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் கஜேந்திரகுமார் தரப்பால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆயிரம் வாக்குகளை கூட பெற முடியாமல் போய்விட்டது.

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்போம் என கஜேந்திரகுமார் தரப்பு பிரசாரங்களை மேற்கொண்டது. தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதற்கு தனக்கு இடம்தருமாறு கோரிய முன்னாள் விடுதலைப்புலிகளின் மாவட்ட பொறுப்பாளர் ரூபன் அது கிடைக்காததை அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ரூபன் பிரசாரம் செய்தால் திருகோணமலையில் பெரும்பாலான தமிழர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்குதான் வாக்களிப்பார்கள் என சொல்லப்பட்டது. கிராமம் கிராமமாக ரூபனும் அவரது மனைவியும் வீடு வீடாக சென்று பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் 1144 வாக்குகளை மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியால் பெற முடிந்திருக்கிறது.

அதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 865 வாக்குகளையும் அம்பாறை மாவட்டத்தில் 439 வாக்குகளையும் மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியால் பெற முடிந்தது.

தாங்கள் விடுதலைப்புலிகளின் நீட்சியாக அல்லது அவர்களின் பிரதிநிதிகளாக வந்திருக்கிறோம், அவர்களின் கோரிக்கைகளை இலக்குகளை நோக்கியே செல்கிறோம் என்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் நாங்களே, இரு தேசம் ஒரு நாடு என்ற இலக்கை அடைய எங்களுக்கு வாக்களியுங்கள் என கோரிய கஜேந்திரகுமார் தரப்பை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் இலங்கையில் உள்ள கஜேந்திரகுமார் தரப்புக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பலமான செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.

எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம், அதில் தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது.

இனிமேலாவது தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் இச்செய்தியை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் கஜேந்திரகுமார் தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.

( இரா.துரைரத்தினம்)
thurair@hotmail.com

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் மாற்றமென்பது ஏற்படுவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும்!

எனினும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் சொற்பமே எனினும்.. மாற்றத்துக்கான வடிகால் அமைக்கப்பட்டு விட்டதென்பதையே அவர்களுக்குக் கிடைத்த வாக்குகள் தெரிவிக்கின்றன!

புலம்பெயர் தமிழர்களைத் தூக்கி எறிவதானது, தங்களுக்கான ஒரு பாதுகாப்புக் கவசத்தை உடைத்தெறிவதற்கு நிகரானதாகும்!

அதனைத் தமிழ் மக்கள் நிச்சயம் உணர்ந்திருக்கிறார்கள்!

இதுவே தமிழர் கூட்டணிக்கான இறுதிச் சந்தர்ப்பமாகக் கூட இருக்கலாம்! 

தமிழர் கூட்டணி.. இனிமேலாவது கூரையில் ஏறி நின்று மார் தட்டுவதையும், மற்றைய கட்சிகளை எள்ளி நகையாடுவதையும் வீட்டுத்.. தமிழ் மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய முடியுமாயின்.. அதைச் செய்வதே.. அதன் நாளைய இருப்பை உறுதிப்படுத்தும்!

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள்
இந்தலைப்பை கொஞ்சம் மாற்றிச் சொல்வார்களா தாயக மக்கள். எங்களுக்கு புலம்பெயர்ந்த மக்களின் எந்த உதவியும் வேண்டாமென்று.நெருக்கடியான காலகட்டத்தில் எந்த உதவியும்மற்ற நிலையில் போராட்டத்தையும் மக்களையும் தாங்கிப்பிடித்த மக்கள் தாயக மக்களுக்குப் பாதகமான எதையும் செய்யமாட்டார்கள்.புலம்பெயர் உறவுகளின் உதவிகள் முற்றாக(ஒரு பேச்சுக்கு) நிறுத்தப்பட்டால் தாயக மக்களின் நிலை என்னாகும் என்பது தெரியும். மாற்றத்துக்கான அறிகுறி ஆரம்பமாகி விட்டது.

எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள்.

Published on August 23, 2015-9:39 am   ·   No Comments

dineshகடந்த 17ஆம் திகதிவரை இலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலும் தேர்தல் ஆரவாரங்கள் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக நடைபெற்றன. லண்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், ஒஸ்ரேலியா, உட்பட ஐரோப்பிய நாடுகள் எங்கும் கூட்டங்களும் தேர்தல் பிரசாரங்களும் என்று அமர்க்களமாகவே காணப்பட்டது. லண்டன் கனடா, ஒஸ்ரேலியா நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் என எங்கும் இந்த தேர்தல் ஆரவாரமாகத்தான் காணப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்கள் பெரும்தொகையாக கூடும் லாச்சப்பலில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

என்ன ஐரோப்பாவிலும் தேர்தல் நடக்கிறதா என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். இலங்கையில் நடந்த தேர்தல் ஆரவாரங்களின் ஒரு பகுதியாகவே இவற்றை இங்கு காணமுடிந்தது. புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் அமைப்புக்கள் அனைத்தும் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியை ஆதரிக்குமாறு அறிக்கை விட்டதுடன் பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

கஜேந்திரகுமார் அணியை வெல்ல வைப்பதற்காக மாற்றத்திற்கான குரல் என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக பெருந்தொகை பணத்தை திரட்டி இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. கனடா, இலண்டன், ஜேர்மனி என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மேற்குலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களும் கஜேந்திரகுமார் அணிக்கே மிகத்தீவிரமாக பிரசாரங்களில் ஈடுபட்டன. லண்டனில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி நிலையங்களின் பொறுப்பாளர்களை அழைத்த விடுதலைப்புலிகள் கஜேந்திரகுமார் அணிக்கே முழமையான ஆதரவை வழங்கமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களை துரோகிகளாக காட்டுமாறும் உத்தரவிட்டனர்.
லண்டன், கனடா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உத்தரவை தலைமேல் கொண்டு தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை செயற்பட்டன.

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள உங்கள் உறவினர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சின்னமான சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கூறுமாறு விடுதலைப்புலிகளும் தமிழ் ஊடகங்களும் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களை வலியுறுத்தி வந்தன.

இவர்களின் வலியுறுத்தலை சிலர் ஏற்றுக்கொண்டு தாயகத்தில் இருந்த மக்களுக்கு கஜேந்திரகுமார் தரப்புக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தனர்.

தேர்தல் தினத்தன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு இல்லை, தாங்கள் கூறும் கருத்துக்கள் அங்கு dineshஉள்ள மக்களை சென்றடையவில்லை. அங்குள்ள ஊடகங்கள் அதனை மூடிமறைக்கின்றன. கஜேந்திரகுமார் தரப்புக்கு இலங்கையில் உள்ள ஊடகங்கள் போதிய ஆதரவை வழங்கவில்லை என குறிப்பிட்டார். அந்நபர் கஜேந்திரகுமார் தரப்பிற்காக தீவிரமான பிரசாரம் செய்பவர் என்பதை அவரின் பேச்சில் அறியமுடிந்தது.

ஓட்டுமொத்தத்தில் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அரசியல் அறிவற்ற முட்டாள்கள், இதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றனர். அறிவாளிகளான நாங்கள் கூறும் கருத்துக்களையும் இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள் மூடிமறைப்பதால் அரசியல் அறிவு இல்லாத முட்டாள்களாக இருக்கும் வடக்கு கிழக்கு தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர் என்ற கருத்துப்பட பேசிக்கொண்டிருந்தார்.

இவரைப்போன்றவர்களுக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களுக்கும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தக்க பதிலை வழங்கியுள்ளனர். பதில் என்பதை விட தலையில் ஓங்கி பலமான அடி ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களின் ஊதுகுழல்களாக இருக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களும் தாங்கள் சொல்வதை தான் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் கேட்கவேண்டும், தங்களின் தாளத்திற்கு தான் ஆடவேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி ஆடாதவர்களை வரிசையில் நிறுத்தி துரோகி பட்டம் வழங்குதையே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

கஜேந்திரகுமார் தரப்பு மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் தாளத்திற்கு ஆடுவதால் அவர்களை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்டுவதற்காகவே இந்த பொதுத்தேர்தலில் கடும் பிராயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.

2010ஆம் ஆண்டும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினர் கஜேந்திரகுமார் தரப்பிற்காக பிரசாரம் செய்திருந்தனர்.
அதை விட இம்முறை நடைபெற்ற தேர்தலில் பெரும் எடுப்பில் பெரும் பணச்செலவில் கஜேந்திரகுமார் தரப்பிற்காக பிரசாரங்களை செய்ததுடன் இலங்கையில் தேர்தல் பிரசாரங்களுக்காக பெருந்தொகை பணமும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தக்க பதிலை வழங்கியிருக்கிறார்கள். எங்கள் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். உங்கள் தலையீடு எமக்கு தேவையில்லை என்பதை அவர்கள் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றனர்.

தேர்தலுக்கு சில தினங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவர் இதனை மிகத்தெளிவாக சொன்னார். லண்டனில் இருக்கும் தனது உறவினர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சொன்னார், வெளிநாட்டிற்கு சென்ற காலம் தொடக்கம் இன்றுவரை தொலைபேசி எடுக்காதவர் இப்போது எங்களுக்கு அரசியல் சொல்லித்தருகிறார் என கூறினார்.

முடிவுகளை எடுப்பதற்கு எங்களுக்கு தெரியும், வெளிநாட்டில் உள்ளவர்கள் இதில் தலையிட தேவையில்லை என்பதே வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களின் நிலையாகும். இதனையே அவர்கள் தேர்தலில் பிரதிபலித்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய மாவட்டங்களான வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியாக புலம்பெயர் புலிகளின் ஆதரவை பெற்ற கஜேந்திரகுமார் அணி இருக்கவில்லை, அந்த மாவட்டங்களில் போட்டியிட்ட சுயேச்சைக்குழுக்களில் ஒன்றாக ஒரு உதிரிக்கட்சியாகத்தான் கஜேந்திரகுமார் அணியை பார்த்தனர்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் தமிழ் சிவில் சமூகம், பல்கலைக்கழக சமூகம், வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொண்ட கஜேந்திரகுமார் தரப்பு அம்மாவட்டத்தில் ஆகக்கூடிய ஆசனங்களை பெறுவோம், அல்லது ஆகக்குறைந்தது 3 ஆசனங்களை பெறுவோம் என்றும் சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்களை தோற்கடிப்பதே தமது இலக்கு என்றும் பிரசாரம் செய்தனர்.  இதற்காக அவர்கள் சுமந்திரனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வடமராட்சி பகுதி உட்பட யாழ் மாவட்டம் எங்கும் துண்டுபிரசுரங்களையும் விநியோகித்தனர்.

தலைவர் பிரபாகரன் பிறந்த வடமராட்சி மண்ணில் துரோகி சுமந்திரனுக்கு இடம் கொடுப்பதா என துண்டு பிரசுரத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பருத்தித்துறை உடுப்பிட்டி தொகுதிகளில் மிகத்தீவிரமான பிரசாரங்களை கஜேந்திரகுமார் தரப்பு மேற்கொண்டிருந்தது. வடமராட்சிகிழக்கு பகுதியில் கோழி, ஆடு, மீன்பிடி வலை போன்றவற்றை விநியோகித்து சலுகைகளை காட்டி வாக்கை பெறலாம் என்றும் எண்ணினர்.

இது தவிர சுமந்திரன், மாவை போன்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் மீது புதுப்புது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார்களே ஒழிய தமது இரு தேசம் ஒரு நாடு என்ற கொள்கையை அடைவது எவ்வாறு, தமது இலக்கு என்ன என்பதை மக்களுக்கு விளக்கவே இல்லை,

விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக நாங்கள் வந்திருக்கிறோம், விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறோம் என்றே மக்கள் மத்தியில் அவர்கள் பிரசாரம் செய்தனர்.

தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலேயே வெளியிட்டு வைத்தனர். அந்த கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் தான், மற்றவர்கள் எல்லோரும் போலிகள் என்றும் கஜேந்திரகுமார் தரப்பு அறிவித்தது.

நாங்கள் தோற்றால் விடுதலைப்புலிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தமாகிவிடும், எனவே எங்களை வெற்றிபெற செய்யுங்கள் என அவர்கள் கோரிநின்றனர்.

ஆனால் அவர்களின் கோரிக்கைகளையோ கொள்கைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, யாழ். மாவட்டத்தில் வெறும் 15ஆயிரத்து 22 வாக்குகளை மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் பெற்றுக்கொண்டது. டக்ளஸ், தேவானந்தா, அங்கஜன், விஜயகலா போன்றவர்கள் பெற்ற வாக்குகளை கூட இவர்களால் பெற முடியாமல் போய்விட்டது.  யாரை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றார்களோ அவர்கள் அதிகப்படியான விரும்புவாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் கஜேந்திரகுமார் தரப்பால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆயிரம் வாக்குகளை கூட பெற முடியாமல் போய்விட்டது.

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்போம் என கஜேந்திரகுமார் தரப்பு பிரசாரங்களை மேற்கொண்டது. தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதற்கு தனக்கு இடம்தருமாறு கோரிய முன்னாள் விடுதலைப்புலிகளின் மாவட்ட பொறுப்பாளர் ரூபன் அது கிடைக்காததை அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ரூபன் பிரசாரம் செய்தால் திருகோணமலையில் பெரும்பாலான தமிழர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்குதான் வாக்களிப்பார்கள் என சொல்லப்பட்டது. கிராமம் கிராமமாக ரூபனும் அவரது மனைவியும் வீடு வீடாக சென்று பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் 1144 வாக்குகளை மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியால் பெற முடிந்திருக்கிறது.

அதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 865 வாக்குகளையும் அம்பாறை மாவட்டத்தில் 439 வாக்குகளையும் மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியால் பெற முடிந்தது.

தாங்கள் விடுதலைப்புலிகளின் நீட்சியாக அல்லது அவர்களின் பிரதிநிதிகளாக வந்திருக்கிறோம், அவர்களின் கோரிக்கைகளை இலக்குகளை நோக்கியே செல்கிறோம் என்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் நாங்களே, இரு தேசம் ஒரு நாடு என்ற இலக்கை அடைய எங்களுக்கு வாக்களியுங்கள் என கோரிய கஜேந்திரகுமார் தரப்பை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் இலங்கையில் உள்ள கஜேந்திரகுமார் தரப்புக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பலமான செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.

எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம், அதில் தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது.

இனிமேலாவது தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் இச்செய்தியை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் கஜேந்திரகுமார் தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.

( இரா.துரைரத்தினம்)
thurair@hotmail.com

எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம், அதில் தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது.

பணம் மட்டும் அனுப்பினால் போதும்.

Edited by புலவர்

புலம் பெயர் மக்கள் வேறு தாயாக மக்கள் வேறல்ல ...எல்லாருமே உறவினர்கள் தான் ...இங்க ஒருவருக்கும் ஒருவர் நெற்றி அடி கொடுக்க முடியாது அது தங்களுக்கு தாங்கள் அடிப்பது மாதிரி ...இதுவரை தமிழ் மக்களுக்கான சிறந்த அரசியல் கட்சிகள் தாயகத்தில் இல்லை ...அதனால் தான் மக்கள கூட்டமைப்பை தற்போது வரை தெரிவில் வைத்துள்ளார்கள் ....

அதுவும் கூடிய விருப்பு வாக்குகள் யாரை சேர்கின்றதில் இருந்து தெரியும் இதன் போக்கு எப்படி மாறுகின்றது என்று. இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் ...எல்லாம் தெளிவாகும் ....

  • தொடங்கியவர்

விடுதலை போரட்டமோ மக்களோ வெளிநாட்டு காசை நம்பி வாழவில்லை பிரபஞ்சம் தோன்றியகாலத்திலிருந்து மனிதன் வாழ்கிறான்.பண உதவி நவகாலனித்துவ முலப்பொருட்களை 3ம் உலகநாடுகளிலிருந்து சுரண்ட மேற்உலகின் கோட்பாட்டுஉதவி இதில் லாபம் அடைபவர்கள் மேற்உகலகம்அந்தமக்களை சொந்தகாலில் சோம்பேறியாக்குவதற்கு .அந்த போரட்டத்தை பயன்படுத்தி மேற்க நாடுகளில் தஞ்சம் அடைந்துவிட்டு உங்கள் பணத்தால் அங்கு என்ன செய்யமுடியும்.இதைவிடவிளக்கம் விரிவாக தரமுடியும் இது விளங்குதோ தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்களின் நேரடியானதும்..அல்லது மறைமுகமானதும் ஆன உதவிகள் கிடைத்திரா விட்டால், முள்ளி வாய்க்காலில் அநாதரவாகக் கைவிடப்பட்ட போது மக்களின் புதை குழிகளின் மீது, காவிளாய் பத்தை வளர்ந்திருக்கும்!

போராட்டம் கூடக் குரும்பெட்டித் தேர் கட்டி ஓடியிருக்கும்! 

இதெல்லாம் சும்மா பத்தி எழுத்தாளர்களுக்கு  எழுத ஒன்றும் இல்லை . ஏதாவது  புதிதா எழுதனுமே, வெளிநாடுகளிம்  தமிழ்தேசிய கூட்டமைப்பின் விளம்பரமும் ,கூட்டம் தான் கூடுதலாக இருந்தது.  மற்றைய அணி பற்றி பேசினார்களே தவிர அவர்களுக்காக    ஒருவரும் ஒன்றும் செய்ய வில்லை.  தொலைகாட்சிகளில்  விவாதம் மட்டுமே  பேச்சாக இருந்தது.    எழுதி இருப்பது போல்  தமிழ்தேசிய கூட்டமைப்பை   வெறுக்க வில்லை  ,அவர்கள் போல்  இன்னுரு கட்சி  தேவை என்ற நிலைப்பாடு எல்லாரிடமும் உணடு.  அப்ப தான்  சிங்களவர்   அரசியல் ரீதியான மாற்றத்தை  நினைப்பார்கள்.   எட்டப்பன்(சிங்களவரிடம் சரனாகதி ஆகாத) இல்லாத  ஒரு கட்சி  தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு போட்டியாக தேவை... அதுவே  ஈழத்தமிழருக்கு எதிர்காலத்தில்   அரசியல் ரீதியான பாதுகாப்பை தரும்.

விடுதலை போரட்டமோ மக்களோ வெளிநாட்டு காசை நம்பி வாழவில்லை பிரபஞ்சம் தோன்றியகாலத்திலிருந்து மனிதன் வாழ்கிறான்.பண உதவி நவகாலனித்துவ முலப்பொருட்களை 3ம் உலகநாடுகளிலிருந்து சுரண்ட மேற்உலகின் கோட்பாட்டுஉதவி இதில் லாபம் அடைபவர்கள் மேற்உகலகம்அந்தமக்களை சொந்தகாலில் சோம்பேறியாக்குவதற்கு .அந்த போரட்டத்தை பயன்படுத்தி மேற்க நாடுகளில் தஞ்சம் அடைந்துவிட்டு உங்கள் பணத்தால் அங்கு என்ன செய்யமுடியும்.இதைவிடவிளக்கம் விரிவாக தரமுடியும் இது விளங்குதோ தெரியாது

போராட்ட காலத்தில  ஈரோஸ், புளட்  மண்டையை கழுவின மாதிரி   கொம்யுனிச வசனங்களாய் இருக்கு.  

Edited by நேசன்

புலம் பெயர் மக்களின் நேரடியானதும்..அல்லது மறைமுகமானதும் ஆன உதவிகள் கிடைத்திரா விட்டால், முள்ளி வாய்க்காலில் அநாதரவாகக் கைவிடப்பட்ட போது மக்களின் புதை குழிகளின் மீது, காவிளாய் பத்தை வளர்ந்திருக்கும்!

போராட்டம் கூடக் குரும்பெட்டித் தேர் கட்டி ஓடியிருக்கும்! 

ஆயுத போராட்டத்தின் ஆரம்ப காலங்களும் பின்னர் பணம் வந்துகுவிந்த பின் ஏற்பட்ட மாற்றங்களையும் ஒப்பிட்டால் உண்மை விளங்கும் .விவசாயபண்ணை .காந்தியம் ,தொழிற்சங்க அமைப்புகளிற்க்கு ஊடக தொடங்கிய ஆயுத போராட்டம் பணம் வந்து சேர வெறும் வியாபராமாக மாறியது .பின் தளமாக தமிழ் நாடு சென்று இந்தியாவின் வலைக்குள் விழுந்ததும் புலம் பெயர்ந்தவர்களின் பணமும் தான் முக்கிய காரணம் .ஒரு அரசு செயற்படுவது போல அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் படித்திருந்து படைகளை ஏவிவிடுவது போல விடுதலை போராட்டம் மாறிய அவலம் தான் முள்ளிவாய்கால் முடிவு .

வெற்றி பெற்ற உலக வரலாறுகளை பார்த்தால் உண்மை தெரியும் .

முள்ளிவாய்கால் அவலத்தின் போது கூட கிடைத்திருக்க வேண்டிய உதவியில் ஒரு பத்துவீதம் தான் புலம்பெயர்ந்தவர்கள் செய்தார்கள் .அதிலும் ஆட்டை போட்டவர்களும் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலுவையை நாங்களே சுமக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில நயவஞ்சகர்கள் தான் புகலிடத்தையும்.. தாயகத்தையும் பிரித்து தமிழர்களைப் பலவீனப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கிறார்கள். சுமந்திரன் தலைமையில்.. இதனை ரணில் நடத்திக் கொண்டிருக்கிறார். கூட்டமைப்பிலும் அதற்கு வெளியிலும் சிலதுகள்.. அதற்கு ஆலவட்டம் பிடிக்க.. யாழ் களத்தில் பீஸ்மர் பிரதானமாக இவ்வாறான தமிழ் மக்களை பிளவுபடுத்தி.. பலவீனப்படுத்தும் பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

தாயகத் தமிழர்களின் பிள்ளைகளும்.. சகோதரங்களும்.. துணைவர்களும் தான் புலம்பெயர் தமிழர்கள் என்ற எளிய உண்மை புரியாமல் சிலர் கட்டுரை வரைந்து தமிழர்களை பிளவு படுத்தி சிங்கள.. ஹிந்திய எஜமானர்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். கூட எலும்புத் துண்டு கிடைக்கும் என்ற நப்பாசையில் இது நடத்தப்படுகிறது.

தமிழினம் இதையும் தாண்டி ஒற்றுமையாக வரும். இந்தியப் படைகாலத்திலும் மக்களைக் குழப்பும் இவ்வாறான பல சுவரொட்டிகளும்.. பத்திரிகை அறிக்கைகளும் வந்தன. இறுதியில் அவை மக்களை ஒற்றுமைப்படுத்தி.. துரத்த வேண்டிய.. எல்லாத்தையும் ஒரேயடியா துரத்தி அடிக்க உதவின. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

4 பரதேசிகள் சொல்லும் கருத்துகளுக்கெல்லாம் இங்கு விளக்கம் கொடுக்க வேண்டிய தேவைகள் இல்லை என்பதே உண்மை.

போராட்டம் நடத்தியவர்களுக்கும், போராடியவர்களுக்கும், மக்களுக்கும் தெரியும் புலம் பெயர் தமிழர்கள் எப்படி அவர்கள் வாழ்வியலில், போராட்டத்தில்  ஜீவ நாடியாய் இன்றுவரை இருந்துள்ளார்கள் என்று.
ஒரு பீஸ்மரும், அர்ஜுனரும், துரோணரும்,  ...இன்னும் இப்படிப்பட்ட (மகாபாரத அன்னக்காவடி) கோஷ்டிகளால் 4 வசனம் எழுதேலுமே தவிர ஒரு மயிரையும் புடுங்க ஏலாது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு முதல் கூட்டமைப்பினர் எவ்வளவு பயத்துடன் இருந்தார்கள் என்பதற்கு இது போன்ற எழுத்துக்கள் சாட்சி.
மற்றும்படி புலம்பெயர்ந்தவர்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையில் இவர்கள் நினைப்பது மாதிரி இலகுவில் சிண்டு முடிந்து விட முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி கிளம்புங்க நீங்க ஏறின குருதை படுத்திடிச்சி. அடுத்தமுறை பாத்துக்கலாம். இப்ப நடையக் கட்டுங்க. சிலபேருக்கு வெக்கம் வருது! சிலபேருக்கு கோள்வம் வருது! 

  • கருத்துக்கள உறவுகள்

அங்கினேக்க என்ன சத்தம்? 

எல்லாரையும் கப் சிப் எண்டு இருக்கட்டாம். சுமந்திரன் சொன்னது.

சும்மாவே இங்க ஓடியந்தனியள்?

அங்க இருக்கிற ஆக்களோட காணி பூமியை வச்சுத்தானே வந்தது?

அந்த காச திருப்பிக் கொடுத்துப்போட்டு ஏதோ கப்பல் கட்ட காசனுப்பின ரேஞ்சில கதை.

வேணுமெண்டால் காசனுபுங்கோ, இல்லாட்டி அடுத்த திருவிழாவுக்கு போகேக்க நாயும் மதியாது ?

பேசாமா ஊருக்குப் போய் சோக்காட்டாமா ஜெமைக்கா, கியுபா எண்டு போவேண்டியான் ?

ஒருவரும் சிண்டு ஒன்றும் முடியவில்லை ஆனால் என்ன நடந்தது என்ற விளக்கம் இல்லாத நிலையில் தான் பலர் .

யுத்தம் முடிந்து சர்வாதிகாரி மகிந்தாவை பதவியில் இருந்து இறக்கி ஒரு வித சர்வதேச அங்கீகாரத்துடன் கூட்டமைப்பு பங்குபற்றும் முதல் தேர்தல் .

தமிழர்கள் ஒற்றுமையாக இந்த தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறவேண்டும் என்றுதான் ஒவ்வொரு தமிழ் மகனும் விரும்புவான்.நாட்டில் இருக்கும் தமிழர்கள் ,புலம் பெயர் தமிழர்கள் இந்திய தமிழர்கள் எல்லோரின் ஆதரவையும் அனைவரும் எதிர்பார்த்தார்கள் .

ஆனால் நடந்தது என்ன ?

யுத்தத்தின் பின் சம்பந்தரினதும் சுமந்திரனதும் சில செயற்பாடுகளால் வெறுப்படைந்த புலம் பெயர்ந்த புலி அமைப்புகள் ஊடகங்களில் ஆரம்பத்தில் இவர்கள் பற்றி மிக கேவலமாக விமர்சிக்க தொடங்கினார்கள் .தமது கட்டுப்பாட்டிற்குள்  கூட்டமைப்பை கொண்டுவர முயற்சித்தார்கள் .(சுவிசில் மாவையுடன் பேச்சுவார்த்தை )

எதுவும் பலிக்காமல் போக மாற்றத்திற்காக குரல் என்று பப்ளிக்காக கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட தொடங்கி கஜேந்திரகுமாரை முன்நிறுத்தி கூட்டமைப்பை வசை பாடுவதே ஒரே தொழிலாக செய்தார்கள் (யாழை வாசித்து வந்தாலே தெரியும் குறிப்பாக பதிவு )

நாம் தொடர்ந்தும் சொல்லி வந்தது நாட்டில் இருக்கும் மக்கள் அவர்கள் அரசியலை செய்யட்டும் நாம் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று ஆனால் புலம்பெயந்த இந்த அமைப்புகள் நாட்டில் இருப்பவர்களின் அரசியலை தாமே தீர்மானிக்க முயன்றார்கள்.

இந்த இடைவெளியை கொண்டுவந்ததே அவர்கள் தான் .மக்கள் மிக தெளிவாக இருந்து அவர்களுக்கு நல்ல பாடம் படிப்பித்துவிட்டார்கள் .

இந்த தேர்தல் சொல்லிய செய்தி நாட்டில் மக்களும் புலம்பெயர்ந்த மக்களும் மிக தெளிவாக இருக்கின்றார்கள் ஆனால் புலம் பெயர்ந்த முன்னாள் புலி அமைப்புகள் இன்னமும் தம்மை முதன்மை படுத்த எதையும் செய்ய தயாரக இருக்கின்றார்கள் என்பதுதான் .

சசி பாவம் சின்ன பிள்ளை .முள்ளிவாய்க்கால்  முடிவிற்கு பின் இன்னமும் முன்னாள் போராளிகள் ,மக்கள் பலர் இன்னமும் சிறையில் ,வெளிவந்தர்களில் பலர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகின்றார்கள் இன்னும் பல இதைவிட கேவலமாக நடக்குது .

இவர்களின் ஜீவநாடியாக இருக்கும்  சசியும் முள்ளிவாய்க்காலுக்கு இன்றுவரை சாப்பிடவில்லை என்று நினைக்க எனக்கும் மனவருத்தமாகத்தான் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு கோமாளித்தனமான கட்டுரை 

கடுரையின் தலைப்பிற்கும் உள்ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை 
கடைசி வரியை தவிர வேறு ஒரு வரிகூட தலைப்புக்கு தொடர்பாக இல்லை.

புலம்பெயர் மக்கள் பெருவாரியாக கஜேந்திரகுமாரை ஆதரித்தார்கள் என்பதுதான் முழு சோடனையும்.
வாக்கு சாவடிக்கு போன பெரும்பான்மை மக்கள் த தே கூ விற்கு வாக்கு போட்டார்கள்.

இந்த இடைவெளிக்குள் ஒரு ஆட்டோவை இறக்கி தனது வாந்தியை எடுத்து விட்டிருக்கிறார் 
இதை எழுதியவர். இவரது நோக்கம் எதுவென்று கட்டுரையில் இருக்கிறது 
நோக்கம் அது இல்லை என்றால் ....... மூளை பழுதாக இருக்க வேண்டும்.

ஜனவரி மாத தேர்தலில் மகிந்த வென்றிருந்தால் ......?
மேற்கு அவரை வலுகட்டாயமாக தூக்கி இருக்கும் .. சர்வதேச விசாரணைக்கு கோத்தவிட்கு  அழைப்பு விடுத்தாலே
மகிந்த சுருண்டிருப்பார்.
அப்போ எமது கரம் ஓங்கியிருக்கும் இல்லாவிட்டாலும் அவர்களுடைய ஆதாரங்களை ....
நாம் ஆதரபடுத்தி இருக்க முடியும்.
மைத்திரி வந்த பின்பு .....
மகிந்த நேரடி சக்தி (போர்சை ) உபோயோக்கித்து செய்வதை மைத்திரி மறைமுக சக்தியால் செய்கிறார்.
எம்மால் எதுவும் செய்யமுடியாது.
மேற்கு ஆதிக்கம்  பண முதலீட்டாளர்கள் சிங்கள பேரினவாதம் இந்திய பாசிசம் நான்கும் ஒரே அச்சில் வந்திருக்கிறது. 
இதில் ஒன்று கூட தமிழர் நலனை பற்றி அக்கறை கொண்டதல்ல 
சிங்கள பயிருக்கு அவர்கள் இறைக்கும் நீரில் நாமும் நனைய நேர்ந்தால் ....
அதை ஜெனநாயகம் என்று ஆடுவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை.
இதை புரிய கூடிய வகையில் இந்த யாழ் களத்திலேயே பலர் இல்லாதபோது 
தாயக மக்களால் புரிந்துகொள்ள முடியாது.
சிங்கள ஆதிக்கத்தின் நேரடி போர்ஸ் என்பதை அவர்கள் சுமக்கும்போது 
அதில் இருந்து விடுபடுவதை விடுதலை என்று கொள்ளவேண்டிய துர்பாக்கிய நிலை உருவாக்கபட்டிருக்கும். 
(பாலஸ்தீனத்திலும் இது மேற்கு ஆதிக்கத்திற்கு பாரிய வெற்றியை கொடுத்திருக்கிறது) 

மெயின் மீடிய ஸ்ட்ரீமின் ஆதிக்கம் என்பது மேலை நாடுகளிலேயே சாதரமானது 
கீழை நாடுகளில் அதுதில்தான் வாழ்கையே படர்ந்து இருக்கிறது. 
கடந்த தமிழக தேர்தலில் ஜெயலலிதா பாரிய வெற்றி ஈட்டினார் .... தமிழக மக்கள் தெளிவாக இருந்தார்கள் என்பது இதன் பொருள் இல்லை.
ஜெயலலிதா நாட்டை கொள்ளை அடித்த ஒரு கஸ்மாலம் இனியும் அது தொடரும் ...
இருந்தும் வென்றார் !
இதுதான் இப்போ ஈழத்திலும் நடந்தது ...
சம்மந்தன் இனத்தை விற்று வாழ்பவர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை 
சுமந்திரன் கூட்டி கொடுத்தார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் வென்றார்கள்.

தேர்தல் காலத்தில் எப்படி கஜேந்திரகுமார் புலத்தில் பிரபலம் ஆனார் ?
என்பதுதான் இங்கு ஆராயப்பட வேண்டியது.
ஏன் பிரபலமானார் ?
ஏன் கூடமைப்பை மக்கள் எதிர்த்தார்கள் ?
இவைதான் கேள்விக்கு உள்படுத்த பட வேண்டியது.

ஒரே காரணம்தான் .... சோசல் மீடியா !
சோசல் மீடியா மக்களின் சொந்த குரல் ..... சோசல் மீடியா எழுச்சி கொள்ளும்போது 
மெயின் மீடியாவின் பொய் பரப்புரைகள் மாஜ தோற்றம் என்பன எடுபாடாது போகும்.

சிரியா போரே சோசல் மீடியாவால்தான் கட்டுப்பாடில் இருக்கிறது இதன் தாக்கத்தை இதை வைத்தே புரிந்து கொள்ளலாலாம்.

உள்ளூர் நம்பிக்கையான முன்னணி உதயன் பத்திரிக்கை சத்தியபவன் கூட்டணி வேட்பாளர்.
கூட்டணி ஆதரவை இவர் உதயன் விற்பனைக்கும் பயன்படுத்தினார் (இது தேர்தல் ஆணையத்தின் விதி மீறல் கூட )

இனிவரும் காலங்களில் சோசல் மீடியாவின் ஆதிக்கம் ஈழத்தில் தலைதூக்கும் போது 
ரவுடிகளின் ஆதிக்கம் இதுபோல இருக்காது.

சீமானின் வாழ்வே சோசல் மீடியாவில்தான் இருக்கிறது 
சோசல் மீடியா இல்லை என்றால் இன்று சீமானே இல்லை. 
இதுதான் நிதர்சனம் !

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத் தரப்பில் இருந்தும் இது போன்ற தீவிரமான கோசங்கள் தவிர்க்கப் பட வேண்டும். இன்னொரு திரியிலும் அவசியமில்லாமல் தமிழக தலைவர்களயும் மக்களையும் திட்டி ராஜவன்னியன் எங்களைத் திருப்பித் திட்டும் அளவுக்கு வைத்து விட்டார்கள். இதனால் என்ன பயன்? நாகரிகமான சமூகங்களில் தேர்தல் முடிந்த பின்னர் வென்ற தரப்பு பெருந்தன்மையுடன் வெல்லாத தரப்பின் சுடு சொற்களை மறந்து விடும். அதே போல வெல்லாத தரப்பும் கறுவிக் கொண்டிராமல் வென்றவர்களோடு எப்படிச் சேர்ந்து வேலை செய்யலாம் எனப் பார்க்கும். நாம் நாகரீகமான சமூகம் இல்லையா?  

  • கருத்துக்கள உறவுகள்

11863242_605923346214286_352298473563349

Embedded image permalink

மேலே நான் எழுதிய கருத்திற்கு உரிய ஆவணமாக இதை இணைக்கிறேன் 

இவை மிக சிறிய உதாரணங்கள் மட்டுமே 

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் இனத்தை விற்று வாழ்பவர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை 
சுமந்திரன் கூட்டி கொடுத்தார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் வென்றார்கள்.

தேர்தல் காலத்தில் எப்படி கஜேந்திரகுமார் புலத்தில் பிரபலம் ஆனார் ?
என்பதுதான் இங்கு ஆராயப்பட வேண்டியது.
ஏன் பிரபலமானார் ?
ஏன் கூடமைப்பை மக்கள் எதிர்த்தார்கள் ?
இவைதான் கேள்விக்கு உள்படுத்த பட வேண்டியது.

ஒரே காரணம்தான் .... சோசல் மீடியா !
சோசல் மீடியா மக்களின் சொந்த குரல் ..... சோசல் மீடியா எழுச்சி கொள்ளும்போது 
மெயின் மீடியாவின் பொய் பரப்புரைகள் மாஜ தோற்றம் என்பன எடுபாடாது போகும்.

சிரியா போரே சோசல் மீடியாவால்தான் கட்டுப்பாடில் இருக்கிறது இதன் தாக்கத்தை இதை வைத்தே புரிந்து கொள்ளலாலாம்.

உள்ளூர் நம்பிக்கையான முன்னணி உதயன் பத்திரிக்கை சத்தியபவன் கூட்டணி வேட்பாளர்.
கூட்டணி ஆதரவை இவர் உதயன் விற்பனைக்கும் பயன்படுத்தினார் (இது தேர்தல் ஆணையத்தின் விதி மீறல் கூட )

இனிவரும் காலங்களில் சோசல் மீடியாவின் ஆதிக்கம் ஈழத்தில் தலைதூக்கும் போது 
ரவுடிகளின் ஆதிக்கம் இதுபோல இருக்காது.

சீமானின் வாழ்வே சோசல் மீடியாவில்தான் இருக்கிறது 
சோசல் மீடியா இல்லை என்றால் இன்று சீமானே இல்லை. 
இதுதான் நிதர்சனம் !

உங்களுக்கு சிம்பிளாக யோசிக்கவே வராதா? 58,000 வாக்கைப் போட்டு சுமந்திரனை ஊரில் வெல்ல வைத்த பிறகும், ஏதோ முகநூலில் பகிரப் படும் "உண்மைகள்" தெரியாமல் அவர்கள் விருப்பு வாக்குப் போட்டார்கள் என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்களே ஐயா? உங்களுக்கு ஒரு சவால்: நீங்கள் அடுத்த முறை யாழ்ப்பாணம் செல்லும் போது ஒரு பத்துப் பேர்கள் கூடியிருக்கிற இடத்தில் இதே கருத்தைச் சொல்லி விட்டு மூக்குக்குப் பிளாஸ்ரர் போடாமல் திரும்பி வர முடியுமா? செய்வீர்களா?  :grin:

நிட்ச்சயமாக முடியாது ......

அதுதான் நான் மேலே எழுதியது. நீங்கள் இன்னொரு விதமாக எழுதி இருக்கிறீர்கள் .
எனக்கு எதிராக அல்லது சுமந்திரனுக்கு மாலை சுட 
எத்தணித்தது இருக்கிருரீர்கள் அவ்வளவே!

கமாராஜரை உயிர்பித்து 
வரும் தமிழக தேர்தலில் போட்டியிட வைத்தால் ஜெயிப்பாரா ?
என்றால் 
இல்லை இல்லை இல்லை என்பதுதான் ஒரே பதில்.

தவறு எங்கு என்பதுதான் 
எனது கருத்தாகும். 
இதை எளிதில் புரிய முடியாது. 

அதானே! அப்படியே சோசியல் மீடியாவை அத்திவாரமாக வைத்து உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்! நீங்கள் வளர்கிறீர்களோ இல்லையோ, மாரக் சக்கர்பேர்க்கின் வருமானம் வளரும்!:cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஓவரு தொழிநுட்பமும் மனிதரின் அன்றாட வாழ்வை 
அரசியல் அமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கும் 
தொழில்சாலை யுத்தியை தொடர்ந்தே 
முதலாளித்துவம் பிறந்தது 

இன்று சோசல் மீடியாவின் ஆதிக்கம் பல அரசுகளின் 
அடாவடித்தனங்களை தட்டி கேட்க தொடங்கி இருக்கிறது 
இதன் தாக்கம் என்ன என்று ....
எதிர்காலம்தான் பதில் சொல்லும். 

ரைட் சகோதர்களுக்கு புகழ் வந்துவிடும் என்று 
விமானம் ஏறாமல் சிலர் இருக்கலாம் ......
ஆனால் உலகம் இன்று விமான பயணத்தை தவிர்த்து வாழ முடியாது என்பதுதான் நிதர்சனம் !

என்பதை விட பல அரசுகளின் வீழ்ச்சிக்கே காரணமானது 
உதாரணம் குரோசிமா .ஜப்பான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கினேக்க என்ன சத்தம்? 

எல்லாரையும் கப் சிப் எண்டு இருக்கட்டாம். சுமந்திரன் சொன்னது.

சும்மாவே இங்க ஓடியந்தனியள்?

அங்க இருக்கிற ஆக்களோட காணி பூமியை வச்சுத்தானே வந்தது?

அந்த காச திருப்பிக் கொடுத்துப்போட்டு ஏதோ கப்பல் கட்ட காசனுப்பின ரேஞ்சில கதை.

வேணுமெண்டால் காசனுபுங்கோ, இல்லாட்டி அடுத்த திருவிழாவுக்கு போகேக்க நாயும் மதியாது ?

பேசாமா ஊருக்குப் போய் சோக்காட்டாமா ஜெமைக்கா, கியுபா எண்டு போவேண்டியான் ?

அதுசரி நீங்களும் உங்களைப்போலை ஆக்களும் பத்தோடை பதினொண்டாய் இங்கினேக்கை இருந்து என்னத்தை செய்யுறியள்? 

தாங்கள் ஏதோ வானத்திலையிருந்து நேரை லண்டனுக்கும் கனடாவுக்கும் குதிச்சமாதிரியெல்லே கதை விடுகினம்..

இக் கருத்து ஒட்டு மொத்தத்தமிழ் மக்களினது அல்ல செய்தியாளர் மற்றும் ஒரு சிலரினதுமாகும்.இங்கு ஒரு விடயம் குறிப்பிடவேண்டியுள்ளது.சரியோ தவறோ தெரியவில்லை.கனடாவிலிருக்கும் பல முதுதமிழர் உட்பட  ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் சுமந்திரன் உட்பட கூட்டணியினர் வெல்ல வேண்டும் என்பதற்காக தங்களினனைத்து வளங்களையும் பயன் படுத்தியிருந்தனர்.சில வேளைகளில் இவர்கள் வழியில் குறுக்கீடுகள் வரும் என்பதைகூட பொருட்படுத்தாது தமது தாயக மக்களுக்காக உழைத்திருந்தனர்.இப்படியான நிலையில் கட்டுரையாளருக்கு எப்படி இவைகள் தெரியாமல் போனது? இதிவிட அனேகமான புலம் பெயர் தமிழருக்கு புலம் பெயர் நாடுகளில்குடியுரிமை மற்றும் வதிவிட அனுமதி உண்டு. அவர்களின் பிள்ளைகள் தாயகத்துக்கு குடி பெயர ஒரு வீதம் கூட சந்தர்ப்பம் கிடையாது. இன் நிலையில் எதற்காக அவர்கள் தாயகத்திற்காக உழைக்க வேண்டும்.சொந்த பந்தங்களைக் காக்க வேண்டும்.வசூலுக்கு மட்டும் உறவுகளா?வெளி நாடுகளில் குளிர் பனியென்று பொருட் படுத்தாது உழைத்த காசில் ஆடம்பர வாழ்க்கை வாழும் தாயக உறவுகளே! இளம் சந்ததியினரே!இனிமேலும் நாங்களும் எங்கள் பிள்ளைகளுக்கு சேர வேண்டியதை உங்களுக்கு தரப் போவதில்லை.னாங்களும் எமது நாட்டின் சமூக அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க வேண்டியுள்ளது.அதே போல புலம் பெயர் அகதித் தமிழனின் பிள்ளைகள் பட்டப் படிப்பிற்காக கடன் எடுக்க வேண்டியும் இருக்காது.புலம் பெயர் தமிழர்களின் விரிசலான பெற்றோர்  பிள்ளைகளுக்கான உறவுகள் கூட மேம்படும்.(அண்மையில் நண்பர் ஒருவரின் மகள் பின்வருமாறு என்னிடம் கூறியிருந்தார் "அங்கிள் அப்பா உழைக்கின்ற காசெல்லாம் சொந்தக் காரருக்கு அனுப்பவே சரி; நாங்கள் கடனெடுத்து பகுதி நேர வேலை செய்து படிக்கின்றோம்.என்று நொந்து கொண்டார்.அதைவிட பல வருடங்களாக ஸ்காபுரோவில் இருக்கும் அந்த அப்பாவால் பிள்ளைகளை இதுவரை காலத்தில்  சி என் ஈ எனப்படும் பொருட்காட்சியகத்துக்கு கூட அழைத்து செல்லக்கூட இயலவில்லையாம்.கட்டுரையாளருக்கு நன்றிகள்.எம்மை நாமே திருத்திக்கொள்வோம்

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

நிட்ச்சயமாக முடியாது ......

அதுதான் நான் மேலே எழுதியது. நீங்கள் இன்னொரு விதமாக எழுதி இருக்கிறீர்கள் .
எனக்கு எதிராக அல்லது சுமந்திரனுக்கு மாலை சுட 
எத்தணித்தது இருக்கிருரீர்கள் அவ்வளவே!

கமாராஜரை உயிர்பித்து 
வரும் தமிழக தேர்தலில் போட்டியிட வைத்தால் ஜெயிப்பாரா ?
என்றால் 
இல்லை இல்லை இல்லை என்பதுதான் ஒரே பதில்.

தவறு எங்கு என்பதுதான் 
எனது கருத்தாகும். 
இதை எளிதில் புரிய முடியாது. 

உண்மையில் மருது, உங்கள் எழுத்துகளைப் புரிந்து பதில் கூறவே ஒரு தனியான திறமை வேண்டும். அது யாழில் உங்களிடம் மட்டும் தான் இருக்கிறது இப்போதைக்கு! நான் நவீன வருகைகளில் மிகவும் விரும்புவது எது தெரியுமா? பனடோல், அலீவ், ரைலினோல் என்று வகை வகையாக வரும் தலைவலி நிவாரணிகளைத் தான்! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.