Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு வாழ்த்துக்கள் .

சம்பந்தர் எதிர்கட்சி தலைவராக வந்ததற்கும் தமிழர்கள் புறக்கணிக்கபடுவதை வெளியில் போய் எப்படி முகத்தை காட்டுவதற்கும் என்ன சம்பந்தம் .

சம்பந்தர் எதிர்கட்சி தலைவராக வராவிட்டால் தமிழர்களை புறக்கணிக்கின்றார்கள் என்று ஆயிரம் அலுவல்கள் பார்க்க இருந்தோம் இப்ப எல்லாம் குழம்பி போச்சு .

அர்ஜுன்.. மேலே கோஷான் எழுதியிருக்கும் கருத்தை ஒரு முறை வாசித்துப் பாருங்கள்!

அது ஒரு நிதானமான, கவனமான கருத்து!

இப்படியான கருத்துக்கள் தான் மற்றவர்களைச் சிந்திக்கத் தூண்டும்!

ஊரே அறிந்த ஒரு பிரச்சனை ஒன்று..இன்று உள்வீட்டுப் பிரச்சனையாக்கப் பட்டுள்ளது உங்களுக்கு.. உண்மையில் புரியவில்லையா?

ஆயிரம் அலுவல்கள் பார்ப்பவர்கள் என்று எங்களைக் குறிப்பிடுகிறீர்களா .. ...அல்லது புலிகளின் வீழ்ச்சியால் மேலெழுந்த சிலரைக் குறிப்பிடுகிறீர்களா?

இன அழிப்பு. சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற இரண்டு ஆயுதங்களும்.. புலிகளின் ஆயுதங்களின் மௌனிப்பைப் போல..மௌனிக்கப்பட்டுள்ளது உங்களுக்கு.. உண்மையில் தெரியவில்லைத் தானா?

இவ்வளவு இழப்பின் பின்னரும்..எண்பதுகளுக்கே நாம் திரும்பியிருக்கிறோம் எனில்..அதில் பெருமைப் பட என்ன இருக்கின்றது?

இப்போதே திருப்திப் படுகின்ற நீங்கள்.. எண்பதுகளின் இதை விடவும் பரவாயில்லாத நிலமை இருந்த போதும் ..எதற்காக ஆயுதம் தூக்கினீர்கள்?

உங்களைப் போன்றவர்களால் தானே.. எங்களைப் போன்ற சாதாரண தமிழ் மக்களுக்கு.. இவ்வளவு அழிவுகளும் ஏற்பட்டது என்று நான் கூறினால், அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் உங்களிடம் உள்ளதா?

தனிப்பட்ட ரீதியில்.. எனது  வாழ்க்கையில் நான் கண்ட இழப்புகளை நான் எழுதுகிறேன்!

உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை நீங்கள் அட்டவணைப் படுத்த முடியுமா?  

வேண்டுமானால்.. குமுதினிப் படகுப் படுகொலையிலிருந்து நான் ஆரம்பிக்கிறேனே!

  • Replies 53
  • Views 4.6k
  • Created
  • Last Reply

கனவில் நடக்கலாம் மிதக்கலாம் பறக்கலாம் புங்கை ,

யதார்த்தத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதும் கூட மிக கஷ்டம் .

கனவு வேறு நிஜம் வேறு என்று நான் உணர்ந்து பல வருடங்கள் அதை எழுத தொடங்கினால் ஏன் எனது கனவை இவர் குலைப்பான் என்றுதான் பலர் கருத்து .

மௌனிப்பு என்ற சொல்லிலேயே உங்கள் முகம் தெரியுது .இவ்வளவு காலமும் ஊரே தெரிந்த பிரச்சனையை எதுவும் செய்ய முடியவில்லை இப்ப உள் வீட்டு பிரச்சனை ஆக்குகின்றார்கள் என்பதுதான் உங்கள் பிரச்சனை .

நாட்டில் மக்களும் கூட்டமைப்பும் மிக தெளிவான அரசியல் செய்கின்றார்கள் குறிப்பாக சுமந்திரன் .

புலம்பெயர்ந்தவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமே இன்று எமக்கு தேவையானது . 

கூட்டமைப்பின் இப்போதைய செயற்பாடுகளுக்கு விமர்சனம் இருக்கலாம் ஆனால் அதைவிட்டு நாங்கள் இன்னமும் புடுங்குவம் என்றால் எவரும் கேட்க தாயாராக இல்லை .

முடிந்தால் புடுங்கி பாருங்கள் என்று கூட சொல்லலாம் அவர்கள் கனவு கலைந்து விழிக்க மட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

கனவில் நடக்கலாம் மிதக்கலாம் பறக்கலாம் புங்கை ,

யதார்த்தத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதும் கூட மிக கஷ்டம் .

கனவு வேறு நிஜம் வேறு என்று நான் உணர்ந்து பல வருடங்கள் அதை எழுத தொடங்கினால் ஏன் எனது கனவை இவர் குலைப்பான் என்றுதான் பலர் கருத்து .

மௌனிப்பு என்ற சொல்லிலேயே உங்கள் முகம் தெரியுது .இவ்வளவு காலமும் ஊரே தெரிந்த பிரச்சனையை எதுவும் செய்ய முடியவில்லை இப்ப உள் வீட்டு பிரச்சனை ஆக்குகின்றார்கள் என்பதுதான் உங்கள் பிரச்சனை .

நாட்டில் மக்களும் கூட்டமைப்பும் மிக தெளிவான அரசியல் செய்கின்றார்கள் குறிப்பாக சுமந்திரன் .

புலம்பெயர்ந்தவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமே இன்று எமக்கு தேவையானது . 

கூட்டமைப்பின் இப்போதைய செயற்பாடுகளுக்கு விமர்சனம் இருக்கலாம் ஆனால் அதைவிட்டு நாங்கள் இன்னமும் புடுங்குவம் என்றால் எவரும் கேட்க தாயாராக இல்லை .

முடிந்தால் புடுங்கி பாருங்கள் என்று கூட சொல்லலாம் அவர்கள் கனவு கலைந்து விழிக்க மட்டும் .

கருத்துக்கு நன்றி அர்ஜுன் ! 

கனவு வாழ்க்கைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் இல்லை!

புலம்பெயர்ந்தவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமே இன்று எமக்கு தேவையானது 

நீங்கள் மேலே கூறியது போல..எல்லாப் புலம் பெயர்ந்தவர்களையும்.. ஒரு பொதுமைக்குள் போட்டு விடாது..அவர்களது ஆதரவையும் ஏற்று..இணைந்து நடப்பதே.. இப்போதுள்ள நிலையில் உசிதமானது!

எமது கருத்துக்களால், மற்றவர்களைச் சீண்டுவதை விடவும்...அவர்களையும் அணைத்துப் பயணிப்பதே.. உண்மையான பலன்களைத் தரும் என்று நம்புகிறவன் நான்!

அதனால் தான் மேலுள்ள விமரிசனத்தை உங்கள் மீது வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

போராடியதன்  பலனுக்காதல் ஏதாவது ஒரு அரசியல் தீர்வை சிங்களத்திடம் இருந்து பெறாமல் சிங்கள அரச யாப்பை ஏற்று  எதிர்க்கட்சித்தலைவராக பதவி ஏற்றது  துரோகதனம். இறந்தவர்களையும்  ,போராடி மடிந்தவர்களையும் கொச்சை படுத்தி விட்டார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்கமாட்டோம். எங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை  என்று .ஒற்றை ஆட்சி முறையை ஏற்கவில்லை  என்று மறுத்துருந்தால்    35 வருடம் போராடியதற்கான காரணத்தை நியாய படுத்தி இருக்கலாம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வாழ்வு முடிந்து விட்டது.  

உண்மை நேசன். 
குறைந்தது.... ஆளும் தரப்பிடம், இனப் பிரச்சினை சம்பந்தமாக... கோரிக்கைகளை வைத்து, சில வாக்குறுதிகளையாவது பெற்றுக் கொண்டு அப் பதவியை ஏற்று இருக்கலாம். 
எப்ப... அந்த இடத்தை தனக்கு சபாநாயகர் தருவார் என்று, காத்திருந்து  கொண்டு.... அவர் கேட்டவுடன், பக்கெண்டு போய்... கதிரையில் குந்தி இருந்தாச்சு.
இதனால்.... ஸ்ரீலங்காவில், இரண்டாவது முறையாக தமிழர் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார்  என்ற  செய்தி தான்.... உலகத்துக்கு சொல்லப் பட்டிருக்கின்றது. பாதிக்கப் பட்ட தமிழனின், காதில் பூ வைக்கப் பட்டுள்ளது அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் எதிர்கட்சி தலைவருக்கு என்ன அதிகாரம் உள்ளது..??! ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு உள்ள அதே சலுகைகள் தான். அங்க வேற ஒன்றும் கிடையாது. சிங்களவன் கூட்டா நின்று கும்மி அடிக்க.. இவர் அவங்களுக்கு ஆலேலோ பாட சூப்பரா இருக்கும். இதனால்.. தமிழ் மக்களுக்கு ஒரு விமோசனமும் வரப் போறதில்லை.

சமஷ்டி.. சுயநிர்ணயம்..சம உரிமை எல்லாம் போய்.. ஒற்றையாட்சி.. சகோதரத்துவம்.. சகவாழ்வுன்னு கோசம் மிக விரைவில் கூட்டமைப்பிடம் இருந்து வரும். இதை விட்டா நமக்கு வேற என்ன அரசியல் தெரியும். காட்டிக்கொடுப்பு சரணாகதி அரசியல் தான் எமது ராஜதந்திரமே. டக்கிளஸ் செய்ததை இப்ப கூட்டமைப்பு கூட்டாச் செய்யுது. அவ்வளவு தான்.  tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் எதிர்கட்சிதலைவராக வந்தவுடன் சிங்கள் மக்கள் பரவலாக பேசிகொண்டார்கள்......எதிர்கட்சி தலைவராக வருபவர் அடுத்த முறை பிரதமராக வருவார் என்று  ......77 ஆண்டுக்கு முதல் அப்படியான சூழ்நிலைதான் நிலவியது.ஜ.தே.கட்சியும்,சிறிலங்கா சுதந்திர கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்த காலம் அது......தமிழன் எதிர்கட்சி தலைவனாக வரவிடாமல் இருப்பதற்காகவே விகிதாசார தேர்தல் முறையை அறிமுகம் செய்ததாகவும் பேசிகொண்டார்கள்

சிங்கள அரசுக்கு.. இந்த நியமனம் ஒரு மாபெரும் வெற்றி என்றே கருதுகின்றேன்!

இனி எந்த மூஞ்சியை வைச்சுக்கொண்டு... வெளியால போய்த் தமிழன் இலங்கையில் புறக்கணிக்கப் படுகிறான் எண்டு சொல்லுறது?

பிரித்தானிய மகாராணி...அவுஸ்திரேலியாவின் தலைவராக  (Head of State) இருந்தாலும் ..அவுஸ்திரேலிய அரசியலில் ஒரு புல்லைக்கூடப் பிடுங்க முடியாது!

அது போலத் தான் சம்பந்தனின் பதவியும்...!:)

சிங்களமென்னும்  நதியில் கரையில் வளரும் ஒரு நாணல் புல்லாகத் தான் இருக்க முடியும்!

சம்பந்தன் எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் இனவாதம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது

dilan%20perera_1.jpg

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் மூலம் இந்­நாட்டில் இன­வாதம் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அது மாத்­தி­ர­மின்றி இரத்தம் சிந்­தாது ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்­சியின் வெற்­றி­யா­கவே இதனை பார்க்­கின்றேன். எனவே அவருக்கும் குழுக்­களின் பிரதித் தலை­வ­ராக பத­வி­யேற்­றுள்ள செல்வம் அடைக்­க­ல­நா­த­னுக்கும் மனப்­பூர்­வ­மான வாழ்த்­துக்­களை தெரி­வித்துக் கொள்­கின்றேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் எம்.பி.யான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவை எண்ணிக்கை அதி­க­ரிப்பு தொடர்­பான பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தாடி வளர்த்த சிலர் இன்னும் இந்த சபையில் இருந்து இன­வா­தத்தை பரப்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனாலும் இன­வா­தத்­திற்கு எதி­ராக போரா­டிய இரா.சம்­பந்தன் இன்று எதிர்க்­கட்சித் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடி­யா­த­வர்­களே இன்று கொதித்துப் போயுள்­ளனர். எதிர்க்­கட்சி தலைவர் பதவி சம்­பந்­த­னுகே செல்ல வேண்டும் என்று ஒரு­வா­ரத்­திற்கு முன்­னரே நான் எண்ணம் கொன்­டி­ருந்தேன். எனது எண்­ணமும் பிரார்த்­த­னையும் நிறை­வே­றி­யுள்­ளது. இதனால் நான் ஆனந்தக் கண்ணீர் விடு­கின்றேன்.

குழுக்­களின் பிரதித் தலை­வ­ரா­கவும் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வா­கி­யுள்ளார். அதே­போன்று எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசா நாயக்க தெரி­வா­கி­யுள்ளார். இது குறித்து நாம் பெரு­மைப்­பட வேண்டும். நாட்டை முன்­னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கம் ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் உள்­ளது. இன்று இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­துள்­ளன. இத­னையே நாட்டு மக்கள் எதிர்பார்த்­தி­ருந்­தனர் அது இன்று இடம்­பெற்­றுள்­ளது.

எனினும் சுதந்­திரக் கட்­சியை சாராத சிலர் இன்னும் இன­வா­தத்தை பரப்ப முற்­ப­டு­கின்­றனர். நாட்டு மக்கள் இன­வா­தத்தை முறி­ய­டித்து விட்­டனர். சுதந்­திரக் கட்­சியை அல்­லா­த­வர்கள் எவரும் எமது கட்சி பற்றி பேச வேண்­டிய தேவை இனியும் கிடை­யாது.

இன்று எமது நாட்டில் எழுந்­துள்ள முன்­னேற்­ற­க­ர­மான நிலை­மையை சர்­வ­தேசம் உற்று நோக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. எமது இத் திட்டம் எப்போது சீரழியும் என்று ஒரு கூட்டத்தினர் எதிர்பார்த்திருக்கின்றனர். எனவே ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து இந்த பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்போம் என்றார்.

http://www.virakesari.lk/articles/2015/09/04/சம்பந்தன்-எதிர்க்கட்சித்தலைவராக-நியமிக்கப்பட்டதன்-மூலம்-நாட்டில்-இனவாதம்

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் மூலம் இந்­நாட்டில் இன­வாதம் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.


இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் சம்பந்த குமாரா......

இதே வசனத்தை நாளைக்கு இந்தியா வெளிவிவகார செயலர் கிந்தியிலயும்,,,,,,,அமெரிக்காவின் தெற்காசிய செயலர் கிங்கிலிசிலயும் சொல்வினம்

 


இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் சம்பந்த குமாரா......

இதே வசனத்தை நாளைக்கு இந்தியா வெளிவிவகார செயலர் கிந்தியிலயும்,,,,,,,அமெரிக்காவின் தெற்காசிய செயலர் கிங்கிலிசிலயும் சொல்வினம்

சம்பந்தர் தெளிவாக இருந்து சமஸ்டி தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் சிங்களத்திர புட்டு தெறிசிடும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

தாடி வளர்த்த சிலர் இன்னும் இந்த சபையில் இருந்து இன­வா­தத்தை பரப்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

தாடிகாரர் அங்க இனவாதம்.......இங்க பு...............

சம்பந்தர் தெளிவாக இருந்து சமஸ்டி தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் சிங்களத்திர புட்டு தெறிசிடும். 

 

இருந்து பார்ப்போம்......சம்பந்தரின் 40 வருட அரசியல் சாணக்கியத்தை

புத்தர்,

கோயிலுக்கு போட்ட திரைச்சீலை மாதிரி ஒன்டை  உங்கட ஒவ்வொரு பதிவுக்கு பின்னுக்கும் செருகி விடுறிங்களே ஏன்?

உது உங்கட கண்ணுக்கு சின்னனாகவோ தெரியுது?

 

 

இப்ப உள்ள உலக சூழலில் எதிர்கட்சி தலைவராக இருப்பது நல்லது தான் ..இருப்பினும் எங்கள் தேவையை சரியாக நகர்த்தி வெற்றி அடைய உழைக்க வேண்டும் ..இனி வெளியில் இருந்து கத்துவதில் அர்த்தம் இல்லை .
கருணா , டக்கிலஸ் போன்ற துரோகிகளை வெளியில் வைப்பதே நல்லம் ....

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்,

கோயிலுக்கு போட்ட திரைச்சீலை மாதிரி ஒன்டை  உங்கட ஒவ்வொரு பதிவுக்கு பின்னுக்கும் செருகி விடுறிங்களே ஏன்?

உது உங்கட கண்ணுக்கு சின்னனாகவோ தெரியுது?

 

 

நான் லிங்கைதான் அதில போட்டேன் ,யாரோ படத்தை போட்டுவிட்டார்கள் ......சிங்க கொடியிலும் பார்க்க இது நல்லாயிருக்குதுதானே:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் லிங்கைதான் அதில போட்டேன் ,யாரோ படத்தை போட்டுவிட்டார்கள் ......சிங்க கொடியிலும் பார்க்க இது நல்லாயிருக்குதுதானே:rolleyes:

பரவாயில்லை  

நீங்களும் கடவுள் தானே...புத்தர்....?

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை  

நீங்களும் கடவுள் தானே...புத்தர்....?

நான் ஆசாமி:rolleyes:

சிங்களவன் திருமப் கேட்கனும் 30 வருட பயங்கரவாதிகளாக போராடி நாட்டை சீரழிச்சு போட்டு வெட்கம் இல்லாமல்  எதிர்கட்சி தலைவர் பதவியை கொடுத்தவுடன்  , எல்லாத்தையும் ஒதுக்கி தள்ளிப்ப்போட்டு    வந்திருந்து  சிங்களத்தோட அரசியல் செய்கிறீர்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் திருமப் கேட்கனும் 30 வருட பயங்கரவாதிகளாக போராடி நாட்டை சீரழிச்சு போட்டு வெட்கம் இல்லாமல்  எதிர்கட்சி தலைவர் பதவியை கொடுத்தவுடன்  , எல்லாத்தையும் ஒதுக்கி தள்ளிப்ப்போட்டு    வந்திருந்து  சிங்களத்தோட அரசியல் செய்கிறீர்கள்,

இப்ப வாற இந்த வெட்கம் கஜே கோஸ்டியை இறக்காம இலங்கை தேர்தலைப் புறக்கணிச்சு இருந்தால் நியாயமானது. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!

சிங்களவன் இவ்வளவு காலமும், உலகமெல்லாம் அலைந்து அவனவன் கால்களில் வீழ்ந்து, உந்த ஜெனீவா திருவிழாக்களை திசை திருப்ப ஆடிய ஆடங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. .. இனி அது தேவையில்லை!

இங்கு ஒன்று கட்டையிலை போற காலத்திலை, கதிரையை கட்டிப்பிடிக்க .. உருண்டு பிரண்டு, கூத்தாடி, எம்பிட்டத்தையும் விற்க ... முற்படுவதை இனம் கண்டு விட்டான்! .. கூட சிங்களவனாலேயே உள்நுளைக்கப்பட்ட மாமா சும்சும் காட்டிக்கொடுத்தும் விட்டார், கிழட்டின் கூத்தை! ... ஒரே போடு! உப்புச்சப்பில்லாத ஓர் கதிரை! ஏதாவது அதிகாரங்கள்?

என் நண்பர்கள் சிலர் திருமலையை சேர்ந்தவர்கள், கூறினார்கள், இதுவரை காலமும் கிழடு, திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழர்களுக்கு செய்தவை ஒன்றுமில்லை! அன்றிலிருந்து .. வேலைவாய்ப்புக்கள்? 70/80களில் திருமலையில் இருந்து கொன்று/துரத்தி அடிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்கள், உடைமைகள் தொடர்பாக? பிற்காலங்களில் திருமலையில் நடைபெற்ற இனவழிப்பு? கடத்தல்கள்? ... என்று ஒன்றுக்குமே குரல் கொடுத்துமில்லை! அவற்றை தடுக்க முற்பட்டதுமில்லை? .. அப்ப எவ்வாறு தொடர்சியாக வென்றார்? என்ற கேள்வி வரும், ஆம், வாக்களிக்காவிடில், ஏனைய இனங்கள் பிரதிநிதித்துவத்தை எடுத்து விடும் என்பதனால்! 

இப்ப வாற இந்த வெட்கம் கஜே கோஸ்டியை இறக்காம இலங்கை தேர்தலைப் புறக்கணிச்சு இருந்தால் நியாயமானது. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!எஹ்டி

தேர்தலில் பங்கு பற்றியது தமிழர்களின் விருப்பு ,ஒற்றுமை , அரசியல் பலம் என்பதற்கான சான்றுக்காக   தவிர.  16  பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்து  எதிர்கட்சி தலைவர் பதவி பெற்று சனநாயகமான நாடு  சிறிலங்கா , அங்க ஒரு இனக்குரோதமும்  இல்லை  ,முள்ளி வாய்க்கால் எல்லாம்  சும்மா கதை என்று  காட்டுவதற்காக   அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் கிந்திய உலகசுரண்டலாதிக்க சக்திகள் என்பவற்றின் இறுதி இலக்குக்கான அரிவளாக இந்தப் பதவி அல்லது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக சிங்கள நாடாளுமன்றத்தின் இரத்தவாடையையும் இனவாதத்தையும் மூடிமறைக்கும் முயற்சியோடு அடுத்ததொரு தமிழினத்தின் அரசியல் அழிவுக்கு அல்லது அழிப்புக்கான வழியை மிக இலகுவாகச் சிங்களம் திறந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் பங்கு பற்றியது தமிழர்களின் விருப்பு ,ஒற்றுமை , அரசியல் பலம் என்பதற்கான சான்றுக்காக   தவிர.  16  பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்து  எதிர்கட்சி தலைவர் பதவி பெற்று சனநாயகமான நாடு  சிறிலங்கா , அங்க ஒரு இனக்குரோதமும்  இல்லை  ,முள்ளி வாய்க்கால் எல்லாம்  சும்மா கதை என்று  காட்டுவதற்காக   அல்ல.

22 தொகுதி எதிர் பார்த்தது.... கூத்தமைப்பு.
கஜேந்திரன் அவர்களால், 16 ஆக வந்தது மகிழ்ச்சி.
இல்லாவிட்டால்... இவங்களுக்கு, வாய்க் கொழுப்பு, இன்னும் கூடியிருக்கும்.
அடுத்த.... தேர்தலுக்கு முன்னர், இந்த சம்சும் கும்பலின் ஆட்டம் முடிந்தது.
ஏனென்றால்.... சுண்டெலியின், தலையில்..... பனங்காயை, சிங்களம் வைத்திருக்குது.
இதுகள்... பல்லைக் காட்டிக் கொண்டு, அதிலை... போய்  உட்கார்ந்து இருந்து கொண்டு... புளிச்சல் ஏவறை விடுகுதுகள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் எண்டவுடனை கனசனம் துள்ளிக்குதிக்கினம்......<_<
பழைய அரசியல் தெரியாதவர்களுக்கு இது வரலாற்று புதுமை. :grin:
என்னைப்போன்றவர்களுக்கு இது ஆறின பழங்கஞ்சி :cool:

பொறுத்திருந்து தான் பார்க்க வேணும் என்ன நடக்குது என்று.... ஒரு  4/5 வருடங்கள் தானே :)... 

 

 

சிங்கள அரசுக்கு.. இந்த நியமனம் ஒரு மாபெரும் வெற்றி என்றே கருதுகின்றேன்!

இனி எந்த மூஞ்சியை வைச்சுக்கொண்டு... வெளியால போய்த் தமிழன் இலங்கையில் புறக்கணிக்கப் படுகிறான் எண்டு சொல்லுறது?

 

 

திரு.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் என்று தெரிபவர்களுக்கு நல்லாய் விளங்கும் எவ்வளவு ஆசனங்களுடன் பதவிக்கு வந்தவர் என்று..... இலங்கை அரசியல் பற்றித் தெரிபவர்களுக்கு இது விளங்காமலா இருக்கும்??? விளங்காத மாதிரி நடிப்பினம் அது வேறை :)

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காத்திருக்க காத்திருக்க......திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் எக்கச்சக்கமாய் அதிகரிக்க...... கடைசியிலை சர்வசன வாக்கெடுப்பும் பலிக்காது.:innocent:

இன்றைய நவீன அரசியல் எது தெரியுமா???? எவன் மிரண்டு பிடிக்கிறானோ அவனின் சரித்திரத்தை அழிப்பது. அதாவது வரலாறுகளை தடயங்களை புராதன சின்னங்களை அழித்தொழிப்பது....


இதற்கு சாட்சியாக நேற்றய தினமும் ஒரு சம்பவம் ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தெளிவாக இருந்து சமஸ்டி தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் சிங்களத்திர புட்டு தெறிசிடும். 

சம்பந்தனுக்கு... தெளிவு வர, விடிஞ்சு....  போயிடும் அப்பு. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.