Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

2011/12.... கருணாநிதியின் கூத்து.  சீமான் பேச்சு. tw_blush:

Edited by nedukkalapoovan

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
8 hours ago, இசைக்கலைஞன் said:

இங்கே சிலவற்றை எழுதவேண்டி இருக்கிறது.. வைகோ அவர்கள் ஒரு ஈழ ஆதரவாளர். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இவருக்காகத்தான் தெலுங்கு ஆதிக்கத்தை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது என்று பொருள் அல்ல. மாறாக மாற்று மொழிச் சமூகங்களை ஆட்சி அதிகாரத்தில் வைக்காதீர்கள் என்றுதான் மக்களைக் கேட்கிறார்கள். அதற்கு வலுவான காரணமும் ஒன்று உள்ளது. இந்த ஐம்பது ஆண்டுகள் இந்தத் திராவிட ஆட்சிகள் செய்து வைத்த காரியங்கள்தான் அவை. இது சரியான கோரிக்கையா என்பதை தமிழகம் தீர்மானிக்கும்..

நாம் தமிழர் கட்சியின் இந்தக் கொள்கை ஏற்கனவே ஆதித்தனார், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் என்று ஏற்கனவே பலரால் முழங்கப்பட்டதுதான்.

நாம் தமிழர் என்கிற அடிப்படையில் வைகோ போன்ற தலைவர்கள் இயக்கம் காண்பதில் மகிழ்ச்சி. இந்த மண்ணுக்கு சேவை செய்வது மகிழ்ச்சி.. ஆனால் அரசியல் அதிகாரத்தை அவர் இங்கு பெற முயற்சிப்பது தர்மம் அல்ல. ஏன்?

இதற்கு அண்மைய உதாரணம் மக்கள் நலக் கூட்டணியை முன்னெடுப்பதற்காக ஈழப்பிரச்சினையையும், அணு உலைப் பிரச்சினையையும் கைவிட்டுவிட்டார். இதுதான் அயலார் செய்வது.

மேலும் சாதி என்பதையும், இனம் என்பதையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறார் கோசான். நாயக்கர் என்பது சாதிதான். ஆனால் அவர்க் தெலுங்கு இன சாதியினர். நாயுடு, ரெட்டி இன்னும் பல.. இவர்களை "தமிழர்கள்" என்று ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள் சிலர். அட அவர்களே தாங்கள் ஆண்ட பரம்பரை.. தெலுங்கு வம்சம் என்று சொல்லித் திரிகிறார்கள்.

அண்மையில் ஒரு முகநூல் உரையாடலைக் காண நேர்ந்தது. அவர் மிக அப்பாவியாகவே கேட்டிருந்தார். தான் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் பல தலைமுறைகளாக தங்கள் குடும்பம் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாகவும், தமிழிலேயே கல்வி கற்றதாகவும், இப்போது தாம் தமிழரா இல்லையா எனவும் கேட்டிருந்தார். அதற்கு ஒருவர் நீங்கள் வீட்டில் என்ன மொழியில் பேசுவீர்கள் எனக் கேட்டார். தெலுங்கு எனப் பதில் வந்தது. இவர் தமிழரா?

கனடா நாட்டில் வளரும் எமது புதிய தலைமுறைக்கு ஆங்கிலம் அத்துப்படி. வீட்டில் தமிழில் கதைப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால் அவர்கள் ஆங்கிலேயர் ஆகிவிட்டார்களா? அல்லது சில நூற்றாண்டுகள் கழித்து ஆகிவிடுவார்களா? கனேடியன் தமிழ் என்கிற அடையாளம்தான் அவர்களுக்கு நிலைக்கும்.

யூதர் இங்கிலாந்தை ஆளவில்லையா என்கிற வாதம் வைக்கப்பட்டது. தாராளமாக.. தமிழ் கனேடியர்கள் கூட கனடாவை ஆளலாம். ஆனால் ஆட்சிக்கு வந்துவிட்டு ஆங்கில மொழியை அழித்தாலோ அல்லது நேட்டோவை விட்டு விலக முயன்றாலோ, இங்கே கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டில் சொத்து சேர்த்தாலோ தூக்கி எறியப்படுவது திண்ணம். ஆனால் தமிழர்கள் மிக நல்லவர்கள். ஐம்பது ஆண்டுகளாகச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்று மொழியாளர்களை அதிகாரத்தில் வைக்கவேண்டாம் என கருத்து உருவாக்குவதில் தவறில்லை . அதே நேரம் கட்டாயப்படுத்துதல் என்பது வேறு . மக்கள் மீது அவர்களே ஏற்காத கருத்துக்களை திணிப்பது வேறு . நாம் தமிழர் திணிக்கின்றது . மேலும் மக்கள் ஏதோ முட்டாள் போலவும் இப்போது புத்தி சொல்வது போலவும் தோரணம் கட்டுவது சரியில்லை . இது சரியான கோரிக்கையா என தமிழகம் தீர்மானிக்கும் என நீங்களே கூறிவிட்டதால் நான் கூற எதுவும் இல்லை . தேர்தல் முடிவு வரை காத்திருப்பதே சிறந்தது 

ஏற்கனவே நாம் தமிழர் கொள்கை பலரால் முழங்க பட்டிருந்தாலும் தெளிவான சித்தாந்தங்கள் அல்லது கொள்கைகள் உருவாகவில்லை . தமிழர் என்பது திராவிட எதிர்ப்பு அல்ல . இங்கு மிகப்பெரிய முட்டாள்தனம் என்னவெனில் திராவிடத்திற்கு எதிராக தமிழ் கொள்கை கொம்பு சீவப்படுகிறது . தமிழர்கள் திராவிடர்களே . ஆனால் தமிழர் மட்டும் திராவிடர் அல்ல என்பதே பொருத்தமான கொள்கை . அந்த தெளிவு யாரிடமும் இல்லை .  ( தமிழர் இந்தியர் அல்ல என கடந்த பத்து வருடங்கள் நடந்த கதை போல இப்போது தமிழர் திராவிடர் இல்லை என்ற கதை )

வைகோ போன்ற தமிழ் இனத்திற்கு உழைத்த மனிதர்கள் அதிகாரத்திற்கு வருதல் கூடாது என்பது துளியும் ஏற்க தக்கதல்ல . சீமான் இன்று வந்தவர் . ஆனால் ஒரு தெலுங்கராக இருப்பினும், இன்று நாம் தமிழர் கட்சிக்கு ஆயுதமாக இருக்கும் தமிழ் உணர்வுகளை திராவிடத்தில் கரையாமல் கட்டி காத்து  வந்தவர் வைகோ . தமிழன் நன்றி மறவாதவன் . நீங்கள் கூறும் கருத்து முற்றிலும் நிராகரிக்க வேண்டியது .

ஈழம் என்பதே வைகோவின் அரசியல் வாழ்வை அஸ்தமனம் ஆக்கிய ஒன்று . தன்னலம் பாராமல் கடைசி வரை ஈழ உணர்வுகளை தட்டி எழுப்பியர் வைகோ . கடைசி காலத்தில் ஒப்பாரி வைக்க வந்தவனெல்லாம் பங்காளி ஆக முடியாது 

ஜாதி பற்றி கூறும்போது தெளிவாக குறைகளை மட்டும் சொல்லி நிரப்பி விட்டீர் . 

1. பிற மாநில ஜாதி ஆயினும் தமிழை தவிர வேறு மொழி பேசாதோர் அல்லது தெரியாதோருக்கு என்ன பதில் ???
2. பிற மாநில ஜாதி அட்டவணையிலேயே இல்லாத அல்லது தமிழ் நாட்டில் மட்டுமே வசிக்கும் பிற மொழி ஜாதி மக்களுக்கு என்ன பதில் ???
3. பூர்வீகமே தெரியாத அல்லது பிற மாநிலத்தோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற பிற மொழி பேசும் ஜாதியினருக்கு என்ன பதில் ???

வன்னியரே ரெட்டியார் , ரெட்டிகளே வன்னியர் . மொழி மட்டுமே வேறு . இவர்கள் தமிழர்களா அல்லது தெலுங்கர்களா ??? ஜாதி வைத்து மொழி பிரிப்பது என்பது தமிழ் கோட்பாடான தொழிலில் இருந்து ஜாதி வந்தது என்பதை மறுத்து மீண்டும் ஏற்ற தாழ்வுகளை உண்டாக்க கூடிய விஷ விதை 

ஆட்சிக்கு வந்துவிட்டு யாருமே தமிழை கொல்ல வில்லை. மொழி இனம் பண்பாடு என்பது வேறு . அரசியல் நிர்வாகம் என்பது வேறு . அனைத்தையும் கலக்க வேண்டாம் . மேலும் முதலில் கோட்பாடுகள் உருவான பின்னர் யோசிக்கலாம் .

13 hours ago, புங்கையூரன் said:

வணக்கம், தமிழ் பைத்தியம்!

நீங்கள் ஒரு அவதார புருஷா மாதிரி!

இப்படியான பிரச்சனைகள் வரும் போது மட்டும் களத்துக்கு வந்து தலையைக் காட்டுவீர்களாக்கும்!

 

ராமனை திட்டுவார் . முருகனுக்கு காவடி எடுப்பார் . ( முரண்)

இங்கு எங்கே 'முரண்' காணுகிறீர்கள்?

 

இராமன்  ஆரியன்! முருகன் தமிழன்!

ஆரியர் முருகனைக் காவிக்கொண்டு போர்.. இந்திரனுக்கு மருமகனாக்கிய கதையைப் பிறகு விரிவாகக் கதைப்போம்!

 

பிரபாகரனின் புகழ் பாடியபடி வருகின்றீர்கள்!

 

தள்ளாடும்  தேகம்....எனினும் தள்ளாடாத நோக்கம்!

இது மாறுவேடத்தில் வரும் இந்திரனைப் பார்த்துக்   'கர்ணன்' சொல்வது...! (கர்ணன் படத்து வசனம்)

 

மிச்சத்தையும் எழுதுங்கோ.... நானும் பதில் கருத்தெழுதுகிறேன்!

 

 

வரவேற்பிற்கு நன்றி 
நன்றி கூறி உங்களை தள்ளி வைக்க விரும்பவில்லை . அதனால் வார்த்தைகளை மாற்றுகிறேன் 
உங்கள் வரவேற்பினால் நான் அகம் நிறைந்து மிகை மகிழ்கிறேன்

ராமன் ஆரியன் எனில் பெருமாள் ??? முருகனின் அப்பன் சிவன் ??? கார்த்திக் என வடவர் வழங்கும் கடவுளே தமிழில் முருகன் . மேலும் இந்து வழிபாடு மற்றும் தெய்வ உறவுகள் தமிழரில் இருந்து வடக்கே பரவியதே தவிர வடக்கன் வாந்தியெடுத்து அதை தமிழன் திங்கவில்லை . வடக்கன் கூட அகத்திய முனியை தான் முன்னோடியாக ஏற்று இருக்கிறான் . நமது வழக்கங்களை சமஸ்கிருதத்தில் மாற்றி நம்மையே ஏமாற்றினார் என்பது தான் உண்மை .

புஸ்பம் சமர்பயாமி - மலர்களை சமர்பிக்கிறேன்
அமிர்தம் சமர்ப்பயாமி - இனிப்புகளை சமர்பிக்கிறேன்

இந்து மதம் என்பது தமிழர்களின் பழக்கம் மற்றும் தமிழர்களே இந்து மதத்தின் ஆணிவேர்

பிரபாகரன்போல ஒரு தலைவன் வரும் வரை பிரபாகரன் புகழ் பாடுவேன் . எவனும் வருவானென்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்பது வேறு விஷயம்.

அப்ப என்னை மாறுவேடத்தில் வந்து காரியம் சாதிக்கிறேன் என சொல்கிறீர்கள். தமிழர்களை பிரித்து அழிக்க சில கூட்டம், அதுவும் தமிழருக்குள்ளேயே பல கூட்டம் . ஆரியன் / திராவிடன் என சொல்லி தமிழுக்கு பல காவியங்களை வழங்கிய அந்தணரை பிரித்தனர் . தமிழ் / ஹிந்தி சொல்லி வட இந்திய உறவை பிரித்தனர் . இப்ப திராவிடம் / தமிழ் என சொல்லி பக்கத்து மாநில மக்களிடம் இருந்து பிரிப்பது . அப்புறம் மதத்தால், ஜாதியால் இப்படி பிரித்து அளிப்பதுதான் பலரின் கனவு . இது ராமசாமியாலும், சீமானாலும் இன்னும் பலராலும் நடந்து கொண்டே இருக்கிறது . அப்படி பிரிக்கும் பொருளுக்கு நான் எதிரி . 

தமிழன் என்பவன் திராவிட இனத்தை சேர்ந்த, இந்து மதத்தை சார்ந்த இந்தியாவின் மற்றும் பூர்வீக குடிமகன் ( தமிழ் நாடு மக்களை சொல்கிறேன் )

 

இங்கு இன்னொன்றும் பதிய விரும்புகிறேன் . சீமானுக்கு 0.5% கீழே ஆதரவு என்பது ஏற்கத்தக்கது அல்ல . என்னை பொறுத்த அளவில் 3% - 6% இருக்கலாம். சீமானின் பேச்சின் வீச்சு கொஞ்சம் அதிகம்.   ஏனெனில் இவரால் பல இளம் வயதினர் கவரப்படுகின்றனர் ( நடைமுறை அறிவு இளைய தலைமுறைக்கு கம்மி என்பதால் ) .இவரை இவரது கட்சியை இப்போது ஊடகங்கள் கூட இருட்டடிப்பு செய்கின்றனர். அனைவரும் சேர்ந்து மட்டம் தட்டுகின்றனர் . ஏனெனில் இவர் எதிர்க்கட்சி ஓட்டுகளை பிரித்து விடுவார் என திமுகவும், திமுகவிற்கு எதிரான ஓட்டுகளை பிரித்து விடுவார் என அதிமுகவும், ஈழம், தமிழ் உணர்வு ஓட்டுக்களை காலி பண்ணிவிடுவார் என ம ந கூ நினைக்கின்றன . ஊடகங்கள் மேற்கூறிய மூன்று குழுவில் எதோ ஒன்றுக்கு ஜிங்கு ஜக்கா தான். ஆனால் அவ்வளவு சீன் அல்லது சரக்கு சீமானுக்கு இல்லை என்பதே உண்மை . எப்படி ஆயினும் தனித்து நின்று பாமகவிற்கு அடுத்த கட்சியாக ( ஐந்தாவது பெரிய கட்சி ) வளரும் போல தெரிகிறது. இனி அடுத்து வரும் தேர்தல்களில் நல்லா பெட்டி சம்பாரிக்கலாம் . மற்றபடி ஆட்சி எல்லாம் ஆச்சி கடை மசாலா இல்ல . நினைத்தவர் எல்லாம் வாங்குவதற்கு

( எனக்கு சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி பிடிக்காது என்பதற்காக 0.02% ஆதரவு மட்டுமே உள்ளது என்றெல்லாம் எழுத இயலாது )

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

விளங்காதவர்களுக்கு இன்னொரு முறை கேட்க...

இந்த வீடியோ பார்த்த பின்னர் தான் புரிகிறது, சீமான் தந்தை பெயர் தான் செந்தமிழன், அடைமொழி அல்ல என!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகச் சொன்னீர்கள் பைத்தியம்.

நாயக்கர் மட்டுமில்லை யாதவர்கள் உட்பட பல சாதிமக்கள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில், பூர்வீக மாநிலத்துடன் கிஞ்சித்தும் தொடர்பற்று.

தமிழ்நாட்டின் அரசியல் மீதும் மக்கள் மீதும் எனக்கு பெரும் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், தமிழரை இப்படி ஜாதிவாரியாக கூறுபோடும் சீமானின் எடுப்புக்கு இழுபட மாட்டார்கள் என்றே என் பட்டறிவு தமிழகத்தில் வாழ்ந்த அனுபவம் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tamil paithiyam said:

இங்கு இன்னொன்றும் பதிய விரும்புகிறேன் . சீமானுக்கு 0.5% கீழே ஆதரவு என்பது ஏற்கத்தக்கது அல்ல . என்னை பொறுத்த அளவில் 3% - 6% இருக்கலாம். சீமானின் பேச்சின் வீச்சு கொஞ்சம் அதிகம்.   ஏனெனில் இவரால் பல இளம் வயதினர் கவரப்படுகின்றனர் ( நடைமுறை அறிவு இளைய தலைமுறைக்கு கம்மி என்பதால் )

 

3 hours ago, tamil paithiyam said:

( எனக்கு சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி பிடிக்காது என்பதற்காக 0.02% ஆதரவு மட்டுமே உள்ளது என்றெல்லாம் எழுத இயலாது )

இங்கு ஒருசிலருக்கு நன்கு உறைக்கும் படி உங்க நிலைப்பாட்டை சொல்லி இருக்கிறீங்க பைத்தியம்.  இருந்தும் விசில் அடிக்கிறார்கள்... வழமை போல தமிழ் புரியல்லைப் போல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மேலே பைத்தியம் எழுதியது சில முத்தினவர்களுக்கு புரியவில்லை என்பதுதான் சோகம்.

ஆதரவு 0.5 வீதத்துக்கும் குறைவு என்பது உள்ளதிலே ஓரளவு நடுநிலை ஊடகமான புதிய தலைமுறையின் கணிப்பு.

0.02 என்று நான் சொல்லவில்லை.

3-5 % என்பது பைத்தியத்தின் கணிப்பு.

ஊடகம்கள் சீமானை மறைப்பதாய் அவர் சொல்லும் காராணம் ஏற்புடையாதாய் இருக்கு. 

நீலான் ஆட்சியை பிடிப்பதெல்லாம் ஆச்சி சமாச்சாரம் என்பதும் அவரின் கணிப்பே.

பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் கரியை அப்பிப் பூசினாலும் சீமானின் செம்மல்களுக்கு வெண்மையாகப் பளிச்சிடும்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியம் கூட கடைசில.. தெளிவா சொல்லுது இது தன்ர சீமான் மீதான வெறுப்புக் கருத்து என்றும்.... இருந்தாலும்.. இங்கு சிலர் தன்னை விட மோசமா... யதார்த்தத்தை கிட்டவும் தொட முடியாத அளவுக்கு.. பொய் புனைவுகளோடு.. கருத்து வைக்கினம் என்று. அது முழு முத்தினதுகளுக்கு விளங்காமல்.. காவடி எடுக்குதுங்க. ரெம்பப் பரிதாபம். :rolleyes:tw_blush:

ஊடக கவனம் குறித்து சீமான் ஏலவே பல தடவைகள் விளக்கிட்டார். தமிழ் நாட்டில்.. திராவிடக் கட்சிகள் ஆளுக்கு ஆகக் குறைந்தது ஒரு ரிவி யாவது வைச்சிருக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் அப்படியன்று. இருந்தாலும் நாம் தமிழர் பிள்ளைகள் மக்களை நேரடியாகச் சந்திப்பார்கள். அது ஊடகம் வாயிலாகச் செல்வதை விட அதிகம் தாக்கம் கூடியதாக இருக்கும். பைத்தியம் இதனை கவனத்தில் எடுக்கனும். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, கிருபன் said:

என்னதான் தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் கரியை அப்பிப் பூசினாலும் சீமானின் செம்மல்களுக்கு வெண்மையாகப் பளிச்சிடும்..:cool:

தமிழ்நாட்டு மக்கள் எந்தக் கட்சிக்குத்தான் முகத்தில் கரியை அப்பி பூசவில்லை?  ராகுல் காந்தி தமிழ்நாட்டு முதல்வராக வரலாம் என்று சொல்லி பின்புறம் கழுவும் மாமன்னர்கள் நிறைந்த பூமியல்லவா அது. :cool:

நாக்கை மடிச்சு கண்ணை உருட்டி வெருட்டுறதும்.......பத்திரிகை நிருபர்களை பார்த்து காறித்துப்புறதுதான் அரசியல் எண்டால் ஒண்டும் செய்யேலாது.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணை,

உங்கட சிங்கன்ர பேட்டி. 

எனக்கும் இந்த கட்சியை கண்ணில காட்ட ஏலா. ஆனால், நாம்தமிழர்??? ஓ அதுதான் சீமான் கட்டிசியா என்று ஒரு போடு போட்டார் பாருங்கள். சிரிப்புத் தாளவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

குசா அண்ணை,

உங்கட சிங்கன்ர பேட்டி. 

எனக்கும் இந்த கட்சியை கண்ணில காட்ட ஏலா. ஆனால், நாம்தமிழர்??? ஓ அதுதான் சீமான் கட்டிசியா என்று ஒரு போடு போட்டார் பாருங்கள். சிரிப்புத் தாளவில்லை.

உலகத்திற்கே தெரிந்த தலைவர் பிரபாகரனை.......யார் அந்த பிரபாகாரன் என்று நக்கலாக கேட்ட சிங்கமல்லவா.

உதைத்தானே நாங்களும் சொல்லுகின்றோம் .

அரைவாசி பேருக்கு அவர் யார் அவரின் கட்சி எது என்றே தெரியாது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திரா காந்தியை அம்மா...அம்மா என்று அழைத்த சிவாஜிகணேசனே பிரபாகரனை யார் அந்த தம்பி என்று கேட்டவரவல்லவா!!!!!:cool:

4 minutes ago, arjun said:

உதைத்தானே நாங்களும் சொல்லுகின்றோம் .

அரைவாசி பேருக்கு அவர் யார் அவரின் கட்சி எது என்றே தெரியாது 

வந்திட்டாரு ஈழத்து இளங்கோவன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கும் நேரு குடும்பத்தை கும்பிடுவதுக்கும் அப்பால் இளங்கோவனின் பேச்சும், நக்கலும் ரசிக்கக் கூடியதே.

நெடுக்கரைப் போல - தத்துப் பித்து என்று உளரினாலும், ரசிக்கும் படி இருக்கும்.

என்ன இருந்தாலும் பெரியாரின் பேரன் சம்பத் தின் மகன் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைக் கொன்றவர்களை விடவும் .. அவனைத் தின்றவர்களே அதிகம்!

இதில் ஆரியர், சிங்களவர், திராவிடர் என்ற வேறு பாடு இருக்கவில்லை!

மீனைக்காட்டி.. மீனைப் பிடிப்பது போல...மீன்களான தமிழரும் உள்ளடக்கம்!

தன்னைத் தின்றவர்களை தமிழன் .. இதுவரை தின்றதில்லை!

கடிக்க மட்டுமே முயல்கிறான்!

அதற்கே இவ்வளவு ....ஆரவாரம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

அரசியலுக்கும் நேரு குடும்பத்தை கும்பிடுவதுக்கும் அப்பால் இளங்கோவனின் பேச்சும், நக்கலும் ரசிக்கக் கூடியதே.

நெடுக்கரைப் போல - தத்துப் பித்து என்று உளரினாலும், ரசிக்கும் படி இருக்கும்.

என்ன இருந்தாலும் பெரியாரின் பேரன் சம்பத் தின் மகன் அல்லவா.

உப்புடி வாழையடி வாழையாக அரசியல் செய்ய வெளிக்கிட்டபடியாலைதான் நாடும் நகரமும் மீளாமல் கெட்டுப்போய்க்கிடக்கு.....இதுக்குதான் சீமான் போன்ற புதிய தலைமுறைகள் உதயமாகிக்கொண்டிருக்கின்றனர்.tw_thumbsup::cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

தமிழர்களைக் கொன்றவர்களை விடவும் .. அவனைத் தின்றவர்களே அதிகம்!

இதில் ஆரியர், சிங்களவர், திராவிடர் என்ற வேறு பாடு இருக்கவில்லை!

மீனைக்காட்டி.. மீனைப் பிடிப்பது போல...மீன்களான தமிழரும் உள்ளடக்கம்!

தன்னைத் தின்றவர்களை தமிழன் .. இதுவரை தின்றதில்லை!

கடிக்க மட்டுமே முயல்கிறான்!

அதற்கே இவ்வளவு ....ஆரவாரம்!

First they came for the Socialists, and I did not speak out—
Because I was not a Socialist.

Then they came for the Trade Unionists, and I did not speak out— 
Because I was not a Trade Unionist.

Then they came for the Jews, and I did not speak out— 
Because I was not a Jew.

Then they came for me—and there was no one left to speak for me.

அவர்கள் முதலில் நாயக்கரைத் தேடி வந்தார்கள் 

நான் அலட்டிக் கொள்ளவில்லை, நான் நாயக்கன் இல்லை .......

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

First they came for the Socialists, and I did not speak out—
Because I was not a Socialist.

Then they came for the Trade Unionists, and I did not speak out— 
Because I was not a Trade Unionist.

Then they came for the Jews, and I did not speak out— 
Because I was not a Jew.

Then they came for me—and there was no one left to speak for me.

அவர்கள் முதலில் நாயக்கரைத் தேடி வந்தார்கள் 

நான் அலட்டிக் கொள்ளவில்லை, நான் நாயக்கன் இல்லை .......

 

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டுன்னு நினைச்சிச்சாம். அந்த நிலைதான் சீமான் தொடர்பில் இங்கு சிலருக்கு.

இளங்கோவன்... சீமானின் பலம் அறிவார். அதனால் சீண்டாமல்... சிரிச்சிட்டு போக வேண்டிய நிலைமை. 

ஆனால் வைகோவை கள்ளத்தோணி என்டாரே பாருங்க. வைகோ அதுக்கு கப் சிப்.  வேற எதையோ வைச்சு சடையுறார். 

நான் கள்ளத்தோணியா? : 
இளங்கோவனுக்கு, வைகோ கேள்வி

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=161139

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tamil paithiyam said:

வரவேற்பிற்கு நன்றி 
நன்றி கூறி உங்களை தள்ளி வைக்க விரும்பவில்லை . அதனால் வார்த்தைகளை மாற்றுகிறேன் 
உங்கள் வரவேற்பினால் நான் அகம் நிறைந்து மிகை மகிழ்கிறேன்

ராமன் ஆரியன் எனில் பெருமாள் ??? முருகனின் அப்பன் சிவன் ??? கார்த்திக் என வடவர் வழங்கும் கடவுளே தமிழில் முருகன் . மேலும் இந்து வழிபாடு மற்றும் தெய்வ உறவுகள் தமிழரில் இருந்து வடக்கே பரவியதே தவிர வடக்கன் வாந்தியெடுத்து அதை தமிழன் திங்கவில்லை . வடக்கன் கூட அகத்திய முனியை தான் முன்னோடியாக ஏற்று இருக்கிறான் . நமது வழக்கங்களை சமஸ்கிருதத்தில் மாற்றி நம்மையே ஏமாற்றினார் என்பது தான் உண்மை .

புஸ்பம் சமர்பயாமி - மலர்களை சமர்பிக்கிறேன்
அமிர்தம் சமர்ப்பயாமி - இனிப்புகளை சமர்பிக்கிறேன்

இந்து மதம் என்பது தமிழர்களின் பழக்கம் மற்றும் தமிழர்களே இந்து மதத்தின் ஆணிவேர்

பிரபாகரன்போல ஒரு தலைவன் வரும் வரை பிரபாகரன் புகழ் பாடுவேன் . எவனும் வருவானென்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்பது வேறு விஷயம்.

அப்ப என்னை மாறுவேடத்தில் வந்து காரியம் சாதிக்கிறேன் என சொல்கிறீர்கள். தமிழர்களை பிரித்து அழிக்க சில கூட்டம், அதுவும் தமிழருக்குள்ளேயே பல கூட்டம் . ஆரியன் / திராவிடன் என சொல்லி தமிழுக்கு பல காவியங்களை வழங்கிய அந்தணரை பிரித்தனர் . தமிழ் / ஹிந்தி சொல்லி வட இந்திய உறவை பிரித்தனர் . இப்ப திராவிடம் / தமிழ் என சொல்லி பக்கத்து மாநில மக்களிடம் இருந்து பிரிப்பது . அப்புறம் மதத்தால், ஜாதியால் இப்படி பிரித்து அளிப்பதுதான் பலரின் கனவு . இது ராமசாமியாலும், சீமானாலும் இன்னும் பலராலும் நடந்து கொண்டே இருக்கிறது . அப்படி பிரிக்கும் பொருளுக்கு நான் எதிரி . 

தமிழன் என்பவன் திராவிட இனத்தை சேர்ந்த, இந்து மதத்தை சார்ந்த இந்தியாவின் மற்றும் பூர்வீக குடிமகன் ( தமிழ் நாடு மக்களை சொல்கிறேன் )

 

நன்றி... தமிழ் பைத்தியம்!

சிவன் முருகனுக்கு அப்பன் என்பதெல்லாம்.. ஆரியத்தின் கட்டுக்கதை!

நீங்கள் பெருமாள் என்று கூறுவது ...விஷ்ணுவாக இருப்பின் அவரும் ஆரியனே!

சைவம், சாக்தம், வைஷ்ணவம், காணபத்தியம், கௌமாரம், காபாலம், சௌரம் என்ற எல்லா மதங்களையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டதே இந்து மதம்...!

கிட்டத்  தட்ட இந்தியாவைப் போல.... ஓட்டாதவற்றைப் பலவந்தமாக.. நிர்வாக வசதிகளுக்காக ஓட்டமைக்கப் பட்ட ஒரு வடிவம்!

இலங்கையும் கிட்டத்தட்ட அந்த மாதிரி ஒரு இணைப்பே! அது தான் எமது பிரச்சனையின் மூல காரணமே! 

நான் சைவம். சிவனை முழு முதற் கடவுளாகக் கொண்ட மதத்தைச் சேர்ந்தவன்!  

ஆரியம் தான் உருத்திரன் என்ற வேதங்களில் வரும் ஒரு கழிசடையை... சிவனின் உருத்திர வடிவமாக்கியது...!

 

சூரியனிடம் இருந்து ஓடிப்போன அவனது மனைவி..யாரோ இன்னுமொரு ஐந்து பேருடன் கலந்து.. ஆறு பேரின் விந்துக்களைக் கலந்து உருவாகிய வேத பாத்திரம் ' ஸ்கந்த' ! அவனை எமது தலையில் கட்டி.. கந்தன் என்று சொல்லி வைத்தது ஆரியம்!

உங்களுக்குக் கூடக் கேட்க அருவருப்பாக இருக்குமே!  அது தான் உண்மை!

பிள்ளையாரின் வரலாறு நான் எழுதினால்...என்னை களத்திலிருந்தே தூக்கி விடுவார்கள்!

எனது வரலாறு.. சிந்து வெளியிலிருந்து... ஹரப்பாவிலிருந்து//  தொடங்குகின்றது..!

எனது மதம் இயற்கையோடு பிணைந்தது! செயற்கை கலவாதது!

 

தொலைந்து போனதை..அல்லது...இழந்து போனதைத் தான் தமிழினம் தேடுகின்றது!

நடை முறைச் சாத்தியம் என்பதற்கப்பால்... சீமான் கூறுவதில் பல உண்மைகள் உள்ளன!

இன்றில்லா விட்டாலும்...நாளைய தலைமுறை..உண்மைகளை உணரவேண்டும்!

சீமான் தகுதியுடையவர் , தகுதியில்லாதவர் என்பதற்கப்பால்..அவரது பேச்சுக்களில் உள்ள நியாயங்கள் நிச்சயம் கருத்திலெடுக்கப் பட வேண்டும்!

 

இலங்கைக்கு எண்பது கோடி .. வட்டியில்லாக் கடன்!

தென்னாபிரிக்காவுக்கு அறுபது கோடி..!

ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட தமிழனுக்கு....எத்தனை கோடி..? அதுவும் தவணை முறையில்...!

 

இங்கு தான் தமிழன் மனிதனாக மதிக்கப் படவில்லை..என்பது தெளிவாகத் தெரிகின்றது!

இதே அணுகுமுறை தான்... முள்ளி வாய்க்காலிலும் ' பிரயோகிக்கப் பட்டது!

 

சிங்களவன் மீதுள்ள கருணையால் அல்ல!

மற்றைய நாடுகளைச் சிந்திக்க இந்தியா விடவில்லை! இந்தியாவை மீறி ' உண்மைகளை' அறிந்து கொள்ள அந்த நாடுகளும் விரும்பவில்லை!

இது தான் உண்மை!

 

அதற்காக நடந்ததெல்லாம் 'சரி' என்று வாதிடக் கூடாது!

இந்த அணுகுமுறை தான்... சீமான் போன்றவர்களை உருவாக்குகின்றது!

 

மற்றும் படிக்கு உங்களுக்கும், எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை! உங்கள் அன்புக்கு என்றும் நான் கடமைப்பட்டவன்!

 

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அரசியலுக்கும் நேரு குடும்பத்தை கும்பிடுவதுக்கும் அப்பால் இளங்கோவனின் பேச்சும், நக்கலும் ரசிக்கக் கூடியதே.

நெடுக்கரைப் போல - தத்துப் பித்து என்று உளரினாலும், ரசிக்கும் படி இருக்கும்.

என்ன இருந்தாலும் பெரியாரின் பேரன் சம்பத் தின் மகன் அல்லவா.

 

2 hours ago, goshan_che said:

குசா அண்ணை,

உங்கட சிங்கன்ர பேட்டி. 

எனக்கும் இந்த கட்சியை கண்ணில காட்ட ஏலா. ஆனால், நாம்தமிழர்??? ஓ அதுதான் சீமான் கட்டிசியா என்று ஒரு போடு போட்டார் பாருங்கள். சிரிப்புத் தாளவில்லை.

கோசன் இவ்வளவு வெவரமா பேசுர நீங்களா இது ...
இளங்கோவன் கேணையன் மாதிரி சடைஞ்சு, குடைஞ்சு ...கெக்கோ பெக்கோ என்று பதில் சொல்வதில் வராத சிரிப்பு ... "சீமான்" என்ற ஒரு வார்த்தை கேட்டதும் உங்களுக்கு சிரிப்புத் தாளவில்லை பாருங்கள் ..அது தான் உங்களையும்,  உங்கள் சீமான் மீதான ஒவ்வாமை நிலையை நன்கு அடையாளப்படுதுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கசார் சசி, குழுவாதம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியே குழுவாதத்தை தூண்டும் குழுக் கொழுந்தே ;)

எனக்கு பாண்டே யாரின் பாண்டை கழட்டினாலும் பார்க்கப் பிடிக்கும். இளங்கோவன் முக்கித் தக்கியதை ரசிக்காமலில்லை. ஆனால் இந்த புரோகிராமில் வழமையாய் வருபவர்கள் போல் மிரளாமல் போகிறபோக்கில் அப்படி ஒரு கேலியைத் தூக்கிப் போட்டது, நச். சூப்பர் டைமிங் காமெடி.

அடுத்தது குடுத்தார்பாருங்க கம்யூனிஸ்ட்டும் சிறுத்தையும் தம் கூட வரும்னு ஒரு ராடு - பாண்ட்டேக்கே சிரிப்புத்தாளவில்லை.

சீமான்-பாண்டே பேட்டியும் நல்லாவே, நாகரீகமாய் இருந்தது. சீமானின் வரையறையில் பாண்டே தமிழர் இல்லை என்ற நிலையிலும்.

  • கருத்துக்கள உறவுகள்

 மேலே புங்கை சொல்வது பற்றி என் கருத்து:

சீமான் கொண்ட கொள்கைக்கு விசுவாசமாய் இருந்து, சீமானின் இந்த முயற்சி வெற்றி பெறுமாயின் தமிழகம் ஒரு பாரிய அழிவை நாம் 30 வருடத்தில் கண்டதை விடப்பேரழிவை சந்திக்க நேரிடலாம்.

கச்சதீவுக்கு படை அனுப்புவோம், 50 ஆயிரம் கடல் போலீசை நிறுவுவேன், கூடங்குளத்தை மூடுவேன் போன்றவற்றை சீமான் செய்தால். நிச்சயம் ஆட்சி டிஸ்மிஸ் ஆகும். சுப்ரீம் கோர்ட்டும் மத்திய அரசின் பக்கமே நிக்கும்.

இதுக்கு எதிர்வினையாக சீமான் செய்யும் எந்த நகர்வின் மீதும் தேசிய ஒருமைப் பாட்டுச் சட்டம் பாயும். 

கூடவே உள்ளே சீமான் தூண்டிய ஜாதிய நெருப்பு மேலும் ஊதிப் பெருப்பிக்கப் படும். தமிழ் நாடு ரணகளமாகும்.

கேரளா, கர்நாடக சுப்ரீம் கோர்ட் ஓடரை மீறினாலும் இந்திய மேலாண்மையை பாதிக்காமலே செய்தார்கள். ஆனால் பஞ்சாப் கசுமீரில், நாகலாந்த்ஹில், போடோலாண்டில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் வந்தபோது இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்கள்.

தமிழ்நாட்டிலும் இதுவே நடக்கும். ஈற்றில் சக தமிழர்களாலேயே சீமான் தோற்கடிக்கபடுவார்.

இதுதமிழ் நாட்டின் பிரிவில் கொண்டு போய்விட்டால், அதனால் லாபம் அடையப் போவது ஈழத்தமிழரே. இந்த சுயநல எண்ணமே பலரை சீமானை ஆதரிக்க வைக்கிறது.

ஆனால், இப்போ இருக்கும் சுமூக வாழ்வை விட்டு, பெரிய அழிவுக்கு தமிழகம் ஆவதன் மூலமே இது சாத்தியப் படும்.

தமிழகத்தில் அந்தளவுக்கு தமிழுணர்வும் இல்லை, மொக்குத்தனமும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.