Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன்

Featured Replies

கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன்
 
article_1447128718-dc.jpgப.தெய்வீகன்

அவுஸ்திரேலியாவில் அருவருப்புமிக்க நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியிருக்கிறது. அரசியல் நாகரிகம் தெரியாத அநாதைகளாக புலம்பெயர்ந்த தமிழினம் தூக்கி வீசப்பட்டுவிடுமோ என்று அச்சப்படக்கூடியளவுக்கு மிகவும் மன வேதனைக்குரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிட்னி சம்பவம் முடிந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றுக்காக சிட்னியிலுள்ள

ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலைக்கு சென்றபோது, அங்கு கூடியிருந்த 30-40 தமிழ் இளைஞர் கோஷ்டி போட்ட கூத்துக்களையும் சுமந்திரனை அவர்களை பந்தாடாத குறையாக - இரையைக் கண்ட விலங்குகள் போல கடித்துக் குதறுவதற்குப் பாய்ந்து திரிவதையும் பார்க்கும்போது,

புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் எவ்வளவு அரசியல் வரட்சி மிக்கவர்களாக, கருத்து வலிமையற்ற குரூர குணம் கொண்டவர்களாக, அரசியல் அநாதைகளாக மாறிவிட்டார்கள் என்று வெட்கப்படவேண்டியிருந்தது.

அந்தக் கொடூர காட்சிகள் இன்னமும் மனக் கண்ணிலேயே நிழலாடிக்கொண்டிருக்கிறன. சமூக வலைத்தளங்கள் முழுவதும் இந்த காணொலிகள் பரவிக்கிடக்கின்றன.

தாயகத்தில், 57 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி ஒருவரைக் கருத்துக்களால் எதிர்கொள்ளமுடியாத ஒரு கோஷ்டி, அவருக்கு எதிராக கூச்சல் போட்டு இந்த புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு நிகழ்வுக்கு அனுமதிக்காமல் தடைபோடுவதன் ஊடாகத்தான் தாயகத்தில் உள்ள தமது மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று தவியாய் தவிக்கும் அந்த தவப்பயனை கண்ணுற்றேன்.

ஜனநாயகம், நல்லிணக்கம், தேசியம் ஆகிய உயர் விழுமியங்களின் மீதெல்லாம் மதிப்பு கோருவதற்கு ஐ.நா. வரை சென்று போராடியதாக மார்தட்டும் இந்த புலம்பெயர்ந்த தமிழர் கூட்டம், சுமந்திரனை சிட்னியிலிருந்து கலைப்பதன் ஊடாகவும் எமது மக்களுக்கான விடுதலையை பெற்றுவிடலாம் என்று சீறி எழுந்த வீராப்பினை கண்டுகொண்டேன்.

ஒட்டுக்குழுக்களும் பேரினவாத தேசிய கட்சிகளும் கையில் இரத்தக்கறையுடன் தேர்தலில் வாக்கு கேட்க வந்தபோதும்கூட, அவர்களை ஜனநாயக ரீதியில் சந்தித்து அவர்களின் கொள்கைகளை கொள்கைகளால் சந்தித்த தாயக மக்களின் வழிவந்த புலம்பெயர்ந்த இந்த மக்கள் கூட்டம், ஒரு தமிழ் அரசியல்வாதியை அவரது கருத்துக்களால் எதிர்கொள்ளமுடியாமல் இந்த மண்ணை விட்டு துரத்திவிடுவதன் மூலம் தமது வீரத்தை பறைசாற்றலாம் என்ற கனல் கக்கும் கண்களுடன் வெறிகொண்டு பாய்ந்ததை கண்டு வியந்தேன்.

வேதனை... அவமானம்... வெட்கம்...

விமர்சனத்துக்கு உட்படுத்தவேண்டிய சுமந்திரனின் கருத்துக்கள் நிச்சயம் பொதுவெளியில் உரையாடப்படவேண்டியவை. ஆனால், அவற்றை அவரிடம் நேரில் கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றபோதும் இந்த கோஷ்டியினர் அவரை துரத்தியடிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள் என்றால், இவர்களது நோக்கம் சுமந்திரனை நோக்கிய ஒரு சுத்திகரிப்பாக அன்றி வேறொன்றுமாக இருக்க வாய்ப்பில்லை.

சுமந்திரனின் மீது காறி உமிழ்வதன் மூலமும் அவரை தூஷணத்தினால் அர்ச்சனை செய்வதன் மூலமும் அற்ப திருப்தியை அடைந்துவிடலாம் என்ற வெறியுடன் கூக்குரலிட்ட அந்த கும்பலிலிருந்த ஒருவர்கூட, சுமந்திரனளவுக்கு எமது மக்களுக்கு ஒரு துரும்பை அசைத்தவர்களாக இருக்கமுடியாது. ஆனாலும், அவர்கள் உரக்க கத்தினார்கள். துரோகி துரோகி என்று துவேஷ மழை பொழிந்தார்கள். இந்தச் சம்பவங்களிலிருந்து சில விடயங்களை வேதனையுடன் ஆராயவேண்டியிருந்தது.

அதாவது, சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, லண்டனுக்குச் சென்றபோது அவரைக் குறிப்பிட்ட நிகழ்வொன்றில் பங்குபற்றவிடாது திருப்பி அனுப்பியவர்கள் அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள். 'எம்மின மக்களின் கொலைகளைப் புரிந்த இரத்தக்கறையுடன் உலகமெங்கும் புனிதவானாக சுற்றுலா சென்ற போர்க்குற்றவாளிக்கு எதிராக பழிவாங்குவோம்' - என்று புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் மேற்கொண்ட அந்த போராட்டம் உணர்ச்சிவசப்பட்ட ஒரு நிகழ்வாக கருதப்பட்டபோதும் அதில் ஒரு தார்மிக கோபம் இருந்தது.

ஆனால், தற்போது அவுஸ்திரேலியா வந்துள்ள சுமந்திரன் என்பவர் யார்? தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி. அவர் மீது பிழை கண்டாலோ அல்லது அவரது நடவடிக்கைகள் மீது தவறு கண்டாலோ அதனைத் தட்டிக்கேட்பதற்கும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் பார்க்க ஆயிரம் மடங்கு கோபத்துடன் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் தகுதியானவர்கள் யார், அவரைத் தெரிவுசெய்த மக்கள்தானே?

சரி. அப்படித்தான் அந்த மக்கள் அந்த எதிர்ப்பினை காண்பிக்கமுடியாமல், அடக்குமுறைகளுக்கு அச்சமடைந்து 'நமக்கேன் இந்த சோலி' என்ற பாராமுகத்துடன் இருந்தாலும் புலம்பெயர்ந்த மக்கள், சுமந்திரனுக்கு எதிரான தமது கண்டனத்தைப் பதிவு செய்வதற்கு ஒரு நாகரிகம் இருக்கிறதல்லவா?

பல்லின மக்கள் வாழும் அவுஸ்திரேலியாவில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், எத்தனையோ எதிர்ப்பு நிகழ்வுகள் என்று பல இனத்தவர்களாலும் சரியாகவும் தவறாகவும் மேற்கொள்ளப்படும்போதெல்லாம், இந்த நாட்டு சட்டங்கள் அவற்றுக்கு கொடுக்கும் சுதந்திரமும் கட்டுப்பாடுகளும் எது சரி எது பிழை என்பதை சரியாக கோடு கிழித்துக்காட்டியிருக்கின்றன.

அப்படியிருந்தும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் சுமந்திரனை தமிழ் இனத்தை அழித்த மஹிந்தவிலும் கேவலமாக கடித்துக்குதறுவதற்கு பாய்ந்து திரிந்த இளைஞர்களின் அறச்சீற்றம் அப்பாவித்தனமாகவும் அரியண்டமாகவும்தான் இருந்தது. இந்த சம்பவத்துக்கு முன்னர் இந்தியாவில் இடம்பெற்ற முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் நாராயணனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செருப்படி தாக்குதலானது, சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவிருந்தவர்களை இன்னமும் உசுப்பேற்றிவிட்டிருந்தது என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

உண்மையில், இந்த சம்பவங்களின் பின்னணியில் தமிழ்மக்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?

உணர்ச்சி அரசியல் என்பது உலகளாவிய ரீதியில் காலாவதியாகிவிட்ட ஒரு விடயம். அதை தற்போதைய அரசியல் - இராஜதந்திர களத்தில் கையிலெடுத்தவர்கள் எவரும் தன்முனைப்புமிக்க பாதையில் பயணித்ததில்லை. அது தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி, இயக்க மரபுகளுடன் பயணிக்கவல்ல ஒரு தனித்த - பிடிவாதம் மிக்க - தரப்பாக தேங்கிநிற்குமே தவிர, சாத்தியமான விடுதலைப் பாதைக்கான விரைவான உத்திகளைக் காண்பிக்காது. இந்தியாவின் நாராயணன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை எடுத்துப்பார்த்தால் வரலாற்றைத் தீர்க்கமாகப் புரிந்தவர்களுக்கு இது எவ்வளவு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவல்ல ஒரு விடயம் என்பது புரிந்திருக்கும்.

அந்த நாட்டின் பிரதமர் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தினால் இலங்கையில் ஓர் இனமே அழிந்ததுதான் வரலாறு. அது மட்டுமல்லாமல், இன்னமும் அந்த பழிவாங்கும் கரங்களுடன்தான் இந்திய அரசும் பாதுகாப்புத் தரப்பும் தமிழ் மக்களை எதிரிகளாக பார்த்தவண்ணமுள்ளன. மன்னிப்பு கேட்டென்ன மன்றாட்டம் செய்தென்ன இன்று இந்தியாவின் ஆசீர்வாதமில்லாமல் தமிழ் மக்கள் விடயத்தில் ஓர் அணுவைக்கூட அசைத்துவிடமுடியாத நிலையே காணப்படுகிறது. இதுதான் யதார்த்தம்.

அதற்காக இந்தியாவின் இந்த பிடிவாதம் நியாயம் என்றோ, ராஜீவ்காந்தியும்கூட நியாயவான் என்று இங்கு தர்க்கிக்கவில்லை. எதிரியாக இலக்கிடப்பட்டவனை சரியாக கையாளுவதில் காண்பித்த முதிர்ச்சியின்மை, ஈற்றில் அழிவுகளுக்கு வழிவகுத்த பாடத்தைத்தான் தமிழினத்துக்கு வழங்கிச் சென்றிருக்கிறது.

இந்தத் தருணத்தில், இந்தியாவை பொறுத்தவரை ராஜீவ்காந்திக்கு அதேயளவு பெறுமதியுடைய நாராயணன் எனப்படும் தமிழின அழிப்புக்கான சூத்திரதாரியை உணர்ச்சிவசப்பட்ட தமிழன் ஒருவன் செருப்பால் அடித்து தனது அற்ப திருப்தியை அடைந்திருக்கிறான். அவனது உணர்வை கொச்சைப்படுத்துவது இங்கு நோக்கமல்ல.

ஆனால், இந்த காரியத்தின் மூலம் தமிழகத்திலும் ஈழத்திலும் விடுதலையை நோக்கி எவ்வளவு தூரம் எமது மக்கள் முன்னகர்ந்திருக்கிறார்கள்?

விடுதலைப் புலிகளாலேயே மன்னிப்பு கேட்டு மீண்டும் நல்லுறவை கட்டியெழுப்ப முயற்சிக்கப்பட்ட இந்திய - ஈழமக்கள் உறவுநிலை எவ்வளவுக்கு இறுக்கமடைந்திருக்கிறது, விடை. பூச்சியம்தானே?

அதேபோன்றதொரு நிகழ்வுதான் இன்று சிட்னியில் நடந்தேறியிருக்கிறது. உணர்ச்சி அரசியலின் உச்ச வெளிப்பாடாகத்தான் இதை பார்க்கவேண்டியிருந்தது. இது எவ்வளவுதூரம் தமிழ் மக்களின் பிளவுகளின் ஊடாக அரசியல் செய்வதற்கு காத்திருக்கும் தரப்புக்களுக்கு வசதியாக போயிருக்கிறது என்பதை இந்த இளைஞர்கள் சிந்திக்கவில்லை.

தங்கள் வீரத்தை ஆவணப்படுத்துவதற்காக தங்களின் நண்பர்கள் ஊடாக பதிவு செய்த காணொலிகளே தங்களுக்கு எதிரான சாட்சியங்களாக மாறக்கூடும் என்ற அறியாமையைக் கொண்டதுபோலவே, இந்த போராட்டங்கள் எல்லாம் தாயகத்தில் உள்ள மக்களுக்கும் அவமானத்தை கொண்டுசேர்க்கும் என்ற யாதார்த்தத்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் ஆர்ப்பாட்டங்கள் செய்த கடும் தேசியவாத சிங்கள அமைப்புக்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவங்களை காணொளியில் பார்த்து கைகொட்டி சிரித்திருக்கும். 'பரவாயில்லையே... நாங்கள் செய்யவேண்டிய வேலையை தமிழன் தானே செய்துகொள்கிறான்' என்று உள்ளுக்குள் நகைத்திருக்கும்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற பின்னர், கிளிநொச்சியிலுள்ள ஒரு போராளித்தாயுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கூறிய வாசகங்கள் இன்னமும் ஆழ்மனதில் அமிழ்ந்து அமிழ்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.

'தம்பி, 20 வருஷமா இயக்கத்தில இருந்து என்ர பிள்ளையள் தொடக்கம் பேர்த்திமார் வரைக்கும் மாவீரராக இந்த மண்ணுக்காக குடுத்த எங்களுக்கு, வெளிநாட்டில போய் நிண்டு இந்த பெடியள் செய்யிற கூத்தை பாக்கேக... நாங்களும் அப்பவே போய் சேந்திருக்கவேணும் போல கிடக்கடா' என்றார் கவலையுடன்.

அதற்குப் பின்னர், கூட்டமைப்பின் தலைமை தொடர்ச்சியாக இழைக்கும் தவறுகள் மற்றும் சுமந்திரனின் பேச்சுக்கள் குறித்த விமர்சனங்கள் குறித்து வழமைபோல விரிவாக பேசிக்கொண்டோம்.

- See more at: http://www.tamilmirror.lk/158757/%E0%AE%95%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A9-#sthash.7JYFwk1c.dpuf

உணர்ச்சி அரசியல் கூடாத என்ற வாதம்  உண்மையில் ஏற்றுகொள்ளகூடியதே. ஆனால் இந்திய நாட்டின் உயர்மட்டத்தில் உள்ள அதிகம் படித்த அதிகாரிகள், அரசியல் வாதிகளே  ஒரு இயக்கம் மேற்கொண்ட ஒரு அரசியல் கொலைக்காக  இரண்டு தசாப்பதம் கடந்து விட்ட பின்பும் வன்ம்ம் வைத்து  அதற்கு பழிவாங்குவதற்காக பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை கொலை செய்வதற்கு அனுசரணையாக இருந்து தமது வன்மத்தை தீர்த்து கொண்டனர். தென்னாசியாவின் ஒரு பெரிய ஜனநாயக நாடு என்று கூறப்படுகின்ற நாட்டின் உயர் பீடத்தாலேயே இந்த உணர்ச்சி அரசியலில் இருந்து மீள முடியாமல் ராஜீவ் காந்தி என்ற ஒரு நபருக்காக பாரிய இரத்த களரிமூலம் தமது ரவுடி தனத்தனத்தை எந்த தவறும் செயாத அப்பாவி மக்கள் மீது  காட்டி பழி தீர்த்து கோர தாண்டவம் ஆடினர்   என்றால்  என்றால் அந்த ரவுடி நாட்டின் பக்கதில் உள்ள  சிறிய இனத்தில் உள்ள ஒரு சில தனிப்பட்டவர்களும் அப்படிதானே இருப்பர். இதுவும் ஜதார்த்தம் தானே இத்த கட்டுரை எழுதியவர் அந்த ரவுடி நாட்டுக்கு புத்தி சொல்லி திருத்தினால் மற்றவர்களும் திருந்த இடமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

:cool: இப்ப சந்தோசமா பு.பெ தேசியக் கண்மணிகளே? நிலாந்தன் இன்னும் எழுதவில்லை என நினைக்கிறேன்! அவர் எழுதும் போது இதை விடப் பொட்டில் அறைந்த மாதிரி இருக்கும்!

இந்த வெட்கக் கேட்டில் ட்ரிங்கோவின் ஜோக் வேறு! தெய்வீகன் ஒரு பத்திரிகையாளர், எல்லாத் தரப்பைப் பற்றியும் எழுதும் ஒருவர்! அவர் இருப்பது இந்தியாவுக்குத் தெரியுமோ தெரியாது! இந்த நிலையில் தெய்வீகன் போய் இந்தியாவின் அரக்கத் தனத்தை அடக்க வேணுமாம் என்கிறார் ட்ரிங்கோ! எப்படி? அவுசில் கோவணமிழந்த த.தேசிய ரௌடிகள் போலத் தூசணம் பேசியா? :cool:

1 hour ago, Justin said:

அதைத்தானே நானும் கூறினேன் ஜஸ்ரின் ஐயா. இந்தியா என்ற ரவுடி நாட்டின் தலைவர்களே உணர்ச்சி அரசியல் செய்யும் போது அது சுற்றி உள்ள நாட்டு சாதாரண மக்களும் ரவுடிகளாக இருப்பார்கள். அதுதானே ஜதார்ததம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ 30 பேர் செய்த எதிர்ப்பை புலம் பெயர்ந்த அனைவர் மேலும் வைப்பதிலிருந்து னகட்டரையாளர் யார் சார்பாக எழுதுகிறார் என்று தெரிகிறதா?எத்தனையோ அரசியல் வாதிகள் வரும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத இவர்கள் ஏன் சுமத்திரனைக் கண்டு கொதிக்கிறார்கள்.தமிழ் மக்களை மீண்டும் வன்முறை வரிக்கு கொண்டு வந்து அவர்கள் கடுமையான காட்டு மிராண்டிகள் என்று காட்டுவதற்கு சம்சும் கும்பல் முனைகிறது.சுஉமத்திரன் ஒழுங்காக இருந்தால் இது நடந்திருக்காது.வாயை சும்மா வைத்திருந்தால் ஏன் இந்த நிலை?இதற்குள் முதலமைச்சரைக்கட்சியிலிருந்து தூக்கப் போகிறாராம் .கட்சிக்காக 30 வருடமாகி உழைத்தவர் போல நடந்து கொள்கிறரார்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பு.பெ பு வால்களுக்கும் , இந்திய வால்களுக்கும்   மண்டையில்  ஒன்றுமில்லை 
இப்படித்தான் அறுபது லட்சம் பேர் சேர்ந்து தேர்ந்தெடுத்த மகிந்தவையும் துரத்தினார்கள் .... மாலை போட்டு கும்பிடவேண்டிய நாராயணனுக்கு செருப்பால் எறிகிறார்கள் ...இப்போது இனச்சுத்திகரிப்பு புகழ் சும்முக்கும் அதே வேலையே செய்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்! சவுண்டாக தூசணத்தில் பேசும் "புதிய தமிழ் ஜனநாயக மரபை" மாற்ற வெளிக்கிட்டது சும் மின் பிழை தான்! முகநூலில் ஒரு அவுஸ் தமிழர் கேட்டிருந்தார் இப்படி:

"இன அழிப்பை நேரடியாகச் செய்த பல சிங்களவர்கள் இங்க அவுசில் தான் வெளிப்படையாக இருக்கீனம். அவர்களிடம் ஏன் இந்த "இளையோரால்" தங்கள் வீரத்தைக் காட்ட இயலாமல் போனது?" என்று (அவர் ஆங்கிலத்தில் கேட்டிருந்தார்! ரௌடிக் கூட்டத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்காது என்று நினைக்கிறேன்!:cool:)  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Justin said:

ஓம்! சவுண்டாக தூசணத்தில் பேசும் "புதிய தமிழ் ஜனநாயக மரபை" மாற்ற வெளிக்கிட்டது சும் மின் பிழை தான்! முகநூலில் ஒரு அவுஸ் தமிழர் கேட்டிருந்தார் இப்படி:

"இன அழிப்பை நேரடியாகச் செய்த பல சிங்களவர்கள் இங்க அவுசில் தான் வெளிப்படையாக இருக்கீனம். அவர்களிடம் ஏன் இந்த "இளையோரால்" தங்கள் வீரத்தைக் காட்ட இயலாமல் போனது?" என்று (அவர் ஆங்கிலத்தில் கேட்டிருந்தார்! ரௌடிக் கூட்டத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்காது என்று நினைக்கிறேன்!:cool:)  

இதை விடுதலைப்புலிகள் அன்றே செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் முடிவு நியாயமானதாக இருந்திருக்கும்.:(

படித்தவர்களின் புலமைகளைகளையும்;மேடைப்பேச்சுக்களையும் நம்பித்தான் தமிழ்மக்கள் வாக்களித்து ஏமாந்து வருகின்றனர் tw_angry:

இது ஒன்றும் புதிததல்ல ,

வேறு எந்த அமைப்பாவது கடந்த முப்பது வருடங்களில் எவரது கூட்டத்தையாவது  குழப்பியதாக தெரிந்தால் சொல்லுங்கள் .84 ஆண்டு அளவுகளிலேயே இதை அவர்கள் தொடங்கிவிட்டார்கள் .ஜனநாயகம் மாற்றுகருத்து என்றால் என்ன என்று எல்லாம் அவர்களுக்கு தெரியாது .தாங்கள் விடுதலை போராளிகள் மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் இவ்வளவுதான் அவர்கள் அறிவு .

லண்டன் ,பிரான்ஸ் ,சுவிஸ் ,நோர்வே கனடா இப்படி எல்லா இடமும் இது நடந்தது .அவர்களை பற்றி மிக நன்றாக மாற்று கருத்தாளர்களுக்கு தெரியும் .கூட்டத்தை குழபுவது மட்டும் அல்ல ,அடி தடி ,ஊடகங்களில் தனி நபர்களில் சேறடிப்பது இதுவெல்லாம் தாண்டிதான் நாம் வந்தோம் .

கடைசியில் நாட்டில்  போராட்டம் தோற்று அவர்களின் நிலை தெரியும் தானே . சிலர் பிச்சை வேறு எடுகின்றார்கள் .புலம் பெயர் தேசத்தில் காசு அடித்த கோஸ்டி சில சுழி ஓடிவிட்டது .சிலர் நாடு கடத்தப்பட்டுவிட்டார்கள் சிலருக்கு இன்னமும் விசா இல்லை ,

இதில் பெரிய பகிடி என்னவென்றால் சிலர் வந்து இப்ப எங்களுடன் ஒட்டி உறவாட நிற்பது .எல்லாம் காலம் செய்த கோலம் .

கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் கோஸ்டி வரட்டும் கூட்டம் வைக்கட்டும் நாங்கள் நாங்கள் போய் நாகரீகமா கேள்விகள் கேட்போமே அன்றி காட்டுமிராண்டிகள் மாதிரி கூட்டத்தை குழப்பமாட்டோம் .

6 hours ago, நவீனன் said:

தாயகத்தில், 57 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி ஒருவரைக் கருத்துக்களால் எதிர்கொள்ளமுடியாத ஒரு கோஷ்டி, அவருக்கு எதிராக கூச்சல் போட்டு இந்த புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு நிகழ்வுக்கு அனுமதிக்காமல் தடைபோடுவதன் ஊடாகத்தான் தாயகத்தில் உள்ள தமது மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று தவியாய் தவிக்கும் அந்த தவப்பயனை கண்ணுற்றேன்.

இந் நிகழ்வைப் பற்றிக் கூறுவதற்கு இதைவிட வேறு சொற்கள் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இதை விடுதலைப்புலிகள் அன்றே செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் முடிவு நியாயமானதாக இருந்திருக்கும்.:(

படித்தவர்களின் புலமைகளைகளையும்;மேடைப்பேச்சுக்களையும் நம்பித்தான் தமிழ்மக்கள் வாக்களித்து ஏமாந்து வருகின்றனர் tw_angry:

அன்புள்ள கு.சா!, எல்லா நிகழ்வுகளுக்கும் உங்களுக்கு வெளியே ஒரு காரணத்தைத் தேடுங்கள், கண்டு பிடியுங்கள், குற்றம் சுமத்துங்கள்! அதுவே ஈசியான வழி!

முப்பது வருடம் நடந்த போராட்டத்தில் புலிகள் பல விடயங்களை நேர்மையுடன் செய்தார்கள். சில விடயங்களில் தவறு செய்தார்கள். அப்போது அவர்களோடு இருந்த நாங்கள் எதுவும் தட்டிக் கேட்கவோ கண்டிக்கவோ இல்லை! இப்போது அந்தத் தவறுகளைப் பற்றிப் பேச விழையும் போது "ஏன் பழசைக் கிளறுவான்? என்ன தேவை? அப்ப ஏன் கேட்கவில்லை?" என்று நீங்கள் உட்படப் பலர் கேட்பதுண்டு இங்கே.

இதோ, இரண்டு நாட்கள் முன்பு புலிகள் விட்டது போன்ற ஜனநாயக மறுப்பு தொடர்பான ஒரு தவறை புலம் பெயர் தமிழர்கள் சில பத்துப் பேர் செய்து விட்டார்கள். இதைத் தவறென்று உங்களில் எத்தனை பேர் சொன்னீர்கள்? தட்டிக் கேட்பதைப் பிறகு பார்க்கலாம், இந்த நாகரீகமற்ற செயலைப் பாராட்டி ஊக்குவிப்பதைத் தவிர வேறென்ன உருப்படியாகச் செய்தீர்கள்?

அது தான் சொல்கிறேன்: தமிழருக்கு இருக்கும் எந்தத் துன்பத்திற்கும் நான் "உங்கள்" என்று விளிக்கும் தீவிர தமிழ் தேசிய ஆதரவாளர்கள் காரணமில்லை! மற்றவர்கள் தான் காரணம்! இதுவே உங்களுக்கு நிம்மதியாக உறங்க உதவும் சிந்தனையென்றால் வைத்திருங்கள்! எனக்கொன்றும் விக்கினமில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் சரியாகவே விடயத்தினை பதிவு செய்து உள்ளார். இவ்வாறு துணிச்சலாக எழுத வேண்டும். முன்னரைப் போன்று காக்கா பிடித்து எழுதாமல் உண்மை நிலமையினை எழுத வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் நல்ல மனப்பான்மை உள்ளவர்கள் என்பதனால் அன்று இளைஞர்கள் பலர் காவல்துறையினரிடம் அகப்படாமல் இருந்து இருப்பார்கள்.

சுமந்திரனுக்கு எதிராக முழக்கம் இட்டுக் கொண்டு இருந்தவர்களை அவர்கள் நினைத்து இருந்தால் காவல்துறையினரை அழைத்து பிடித்து கொடுத்து இருக்கலாம். 

முழக்கம் இடுபவர்கள் அப்பாவி இளைஞர்கள் அதுவும் கப்பலில் வந்த இளைஞர்கள் என்பதனால் ஏற்பாட்டாளர்கள் அவர்களிடமே நேரடியாக சென்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரோடு இணைந்து போராடாதீர்கள் உங்களின் அகதி அந்தஸ்துக்கு பிரச்சினை ஏற்படலாம் என அறிவுறுத்தி இருந்தனர். ஆனால், அவர்கள் கேட்கவில்லை.

இறுதியில் காவல்துறை வந்தது. ஆனால், அவர்களை அழைத்தது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அல்ல. பாடசாலைக்கு அருகில் உள்ள மக்களும் அங்கே வந்து இருந்த வெள்ளை இன பெண்மணி ஒருவரும்தான் காவல்துறையினரை அழைத்து இருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

ஓம்! சவுண்டாக தூசணத்தில் பேசும் "புதிய தமிழ் ஜனநாயக மரபை" மாற்ற வெளிக்கிட்டது சும் மின் பிழை தான்! முகநூலில் ஒரு அவுஸ் தமிழர் கேட்டிருந்தார் இப்படி:

"இன அழிப்பை நேரடியாகச் செய்த பல சிங்களவர்கள் இங்க அவுசில் தான் வெளிப்படையாக இருக்கீனம். அவர்களிடம் ஏன் இந்த "இளையோரால்" தங்கள் வீரத்தைக் காட்ட இயலாமல் போனது?" என்று (அவர் ஆங்கிலத்தில் கேட்டிருந்தார்! ரௌடிக் கூட்டத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்காது என்று நினைக்கிறேன்!:cool:)  

தமிழர் தங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லி நேரம் ஒரு கதை கதைத்ததுக்குத்தான் இங்கு கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதப்போய் சிங்களவனிட்டை கேக்கட்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

57 ஆயிரம் (கள்ள வழி வாக்குகள் உட்பட) வாக்குப் பெற்றவரை தூக்கி வைச்சுக் கொண்டாடும் ஒரு கூட்டம்.. அதே அவர் ஒரு லட்சம் வாக்குப் பெற்ற சி வியையும்.. 80 ஆயிரம் பெற்ற அனந்தியையும் புறக்கணிப்பது பற்றி சன நாயக்காற்றால் மூச்சும் விடுவதில்லை.

மக்கள் தங்கள் உணர்வை பல வழிகளில் வெளிப்படுத்துவர். மேலை நாடுகளிலும் கூடாத சொற்கள்.. முட்டை அடித்தல்.. என்று அரசியல் தலைவர்கள் மக்களிடம் (குறிப்பாக அடிமட்ட மக்களிடம்) வாங்கிக்கட்டுவதை இங்குள்ள சில அதி தீவிர சுமந்திரன் தேவாரங்கள் அறிந்ததில்லைப் போலும். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

தமிழர் தங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லி நேரம் ஒரு கதை கதைத்ததுக்குத்தான் இங்கு கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதப்போய் சிங்களவனிட்டை கேக்கட்டாம்.

இதப் போய் சிங்களவனிடம் கேட்கச் சொல்லவில்லை! அமைதியாகப் பேசும் சும்மிடம் காட்டும் உரத்த குரல் வீரத்தை அவுசில் இருக்கும் போர்க்குற்றவாளிகளிடம் காட்டச் சொல்லித் தான் சவால்? இந்த கமெராவில் முகம் வராமல், கட்டிடத்துக்குள்ளயே தொப்பி அணிந்து சண்டித் தனம் காட்டிய கோழைப் பொறுக்கிகளுக்கு முடியுமா? அறிந்து சொல்வீர்களா ஒருக்கா? :cool:

57 minutes ago, nedukkalapoovan said:

57 ஆயிரம் (கள்ள வழி வாக்குகள் உட்பட) வாக்குப் பெற்றவரை தூக்கி வைச்சுக் கொண்டாடும் ஒரு கூட்டம்.. அதே அவர் ஒரு லட்சம் வாக்குப் பெற்ற சி வியையும்.. 80 ஆயிரம் பெற்ற அனந்தியையும் புறக்கணிப்பது பற்றி சன நாயக்காற்றால் மூச்சும் விடுவதில்லை.

மக்கள் தங்கள் உணர்வை பல வழிகளில் வெளிப்படுத்துவர். மேலை நாடுகளிலும் கூடாத சொற்கள்.. முட்டை அடித்தல்.. என்று அரசியல் தலைவர்கள் மக்களிடம் (குறிப்பாக அடிமட்ட மக்களிடம்) வாங்கிக்கட்டுவதை இங்குள்ள சில அதி தீவிர சுமந்திரன் தேவாரங்கள் அறிந்ததில்லைப் போலும். tw_blush::rolleyes:

ஒரு லட்சம் வாக்குப் பெற்றதால் சி.வி ஐயாவுக்கு தமிழக பாணியில் யாரும் பாதநமஸ்காரம் செய்ய வேண்டிய அவசியமில்லை! 80 ஆயிரம் வாக்குப் பெற்ற அனந்தி பதவியில் இது வரை செய்தது என்ன? ஐ.நா அறிக்கையில் அவரது கணவரின் பெயரும் வந்து அவர் பெயரை நாறி விட்டதால் தானே இன்று ஒதுங்கியிருக்க வேண்டியுள்ளது? வெளிநாட்டு தராதரப் படி ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்போர் தான் அந்த வெளிநாட்டு அரசியலில் உள்ள குறைபாடுகளையும் ஒற்றியொழுக நியாயம் உண்டு! ஆதாரமில்லாமல் 58 ஆயிரம் வாக்குகளில் கள்ள வாக்கு உண்டு என்று இன்னும் பனை வடலிக்குள் ஒதுங்கும் உங்களுக்கெல்லாம் ஏன் வெளிநாட்டு அரசியல் கொப்பி கேற்? நாய்க்கேன் போர்த்தேங்காய்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

இதப் போய் சிங்களவனிடம் கேட்கச் சொல்லவில்லை! அமைதியாகப் பேசும் சும்மிடம் காட்டும் உரத்த குரல் வீரத்தை அவுசில் இருக்கும் போர்க்குற்றவாளிகளிடம் காட்டச் சொல்லித் தான் சவால்? இந்த கமெராவில் முகம் வராமல், கட்டிடத்துக்குள்ளயே தொப்பி அணிந்து சண்டித் தனம் காட்டிய கோழைப் பொறுக்கிகளுக்கு முடியுமா? அறிந்து சொல்வீர்களா ஒருக்கா? :cool:

ஒரு லட்சம் வாக்குப் பெற்றதால் சி.வி ஐயாவுக்கு தமிழக பாணியில் யாரும் பாதநமஸ்காரம் செய்ய வேண்டிய அவசியமில்லை! 80 ஆயிரம் வாக்குப் பெற்ற அனந்தி பதவியில் இது வரை செய்தது என்ன? ஐ.நா அறிக்கையில் அவரது கணவரின் பெயரும் வந்து அவர் பெயரை நாறி விட்டதால் தானே இன்று ஒதுங்கியிருக்க வேண்டியுள்ளது? வெளிநாட்டு தராதரப் படி ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்போர் தான் அந்த வெளிநாட்டு அரசியலில் உள்ள குறைபாடுகளையும் ஒற்றியொழுக நியாயம் உண்டு! ஆதாரமில்லாமல் 58 ஆயிரம் வாக்குகளில் கள்ள வாக்கு உண்டு என்று இன்னும் பனை வடலிக்குள் ஒதுங்கும் உங்களுக்கெல்லாம் ஏன் வெளிநாட்டு அரசியல் கொப்பி கேற்? நாய்க்கேன் போர்த்தேங்காய்? :rolleyes:

58 யிரம் (கள்ள வாக்கு உட்பட) பெற்றவர் என்னத்தை வெட்டிப் புடுங்கினாரோ.. அதைவிட அதிகம் அனந்தி செய்திருக்கிறா.. பாதிக்கப்பட்ட பெண்கள் சார்ப்பாக. ஐநா மனித உரிமை அவையின்.. அறிக்கையில்.. அவரின் குரலும் ஒரு ஆதாரமாக எடுக்கப்பட்டிருந்தது. பல பெண்களின் குரல் அங்கு சாட்சியமாக சுமந்திரன் என்ற ஒற்றரை விட அனந்தி என்ற இனப்பற்றாளர் செய்தது அதிகம்.

உங்களால் பெட்டியை விட்டு வெளில வரமுடியல்லை என்பதற்காக.. அந்தப் பெட்டிக்குள் தான் எல்லாம் என்று காட்ட நினைக்கும் சிறுமைத்தனத்தை நிறுத்திக் கொண்டால் நல்லா இருக்கும்.

ஜனநாயக வெளியில் சுமந்திரன்.. (பின்வாசல் வழியாக நுழைந்த சுமந்திரன்..)... மக்களை எதிர்கொள்ள முடியல்லைன்னா.. வாக்குப் போட்ட மக்களை தான் எதிர்கொள்வன் என்றால்.. யாழ்ப்பாணத்தோட கிடக்கனும். அடுத்த தேசத்துக்கு பொய்களையும் புரட்டுக்களையும் கொண்டு மக்கள் முன் வரக்கூடாது. வந்தால்.. கேள்வி கேட்பான்.. காறித்துப்புவான்.. முட்டையும் அடிப்பான்... ஏன் செருப்பாலும் அடிப்பான். ஏன் மக்களுக்கு தான் பாதிப்பின் வலி அதிகம். அரசியல்வாதிக்கல்ல.  :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

ஐ.நாவுக்கு சாட்சி அனந்தி சொல்லித் தான் கிடைத்தது என்பது நகைச்சுவை! மேலும், இனி ஐ-.நாவுக்கு அனந்தி போனால் "உங்கள் கணவர் அல்லவா அறிக்கையில் இருப்பவர்?" என்று தான் கேப்பினம்! அதை விடுங்கள்!

உங்களைப் பொறுத்தவரை புலிகள் மாதிரி வன்னியில் இருப்பவர் வன்னியில் இருக்கணும், வெளிநாட்டில் காசு சேர்த்தவர் வெளிநாட்டிலயே இருக்க வேணும் எண்ட நிலைமை த.தே.கூவுக்கு இல்லை! அது இன்று புல வால்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கையில் இருக்கும் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி! அதன் வெளியுறவு செயலாளருக்கு வெளினாட்டில் ஆயிரம் வேலை இருக்கும்! புலத்தில் இருந்து தாயகத்தில் ஒரு உரோமமும் பிடுங்க முடியவில்லை என்ற புல வாலுகளின் வலி வேதனை அவரது வருகையைக் கட்டுப் படுத்தக் கூடாது! அவரது என்ன? யாருடைய வருகையையும் கட்டுப் படுத்தாது! வந்தால் அடிப்போம் வெட்டுவோம் என்று நீங்கள் சொன்னால் அது ஒன்றும் புதினமில்லை! இனி அதை மட்டும் தான் உங்களால் செய்ய முடியும்! அதுவே அடுத்த தேர்தலில் சும் முக்கு விருப்பு வாக்காகவும், உங்களுக்கு இன்னொரு செருப்படியாகவும் திருப்பிக் கிடைக்கும்!  :cool:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த (பண்பில்லாத) கேள்விப் போராளிகள் உண்மையில் கப்பலில் வந்தவர்களாக இருந்தால் ஆக்களை ஆஸி அரசு நாடுகடத்த வேணும். உப்புடி நாலைஞ்சு பேரை அனுப்பினால்தான் மற்ற ஆக்கள் அடங்குவினம். அதோடை இனி புலம்பெயர் தேசங்களில் சந்திப்புக்களை நடத்தும்போது அந்தந்த நாட்டு பொலிசாருக்கு (குழப்பங்காட்டிகள் பற்றி) அறிவித்து விட்டு செய்ய முயற்சிசெய்யவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சாட்சியங்களை ஒழிக்கவில்லை.. பதிவு செய்தார். தானும் பாதிக்கப்பட்டவள் என்ற வகையில்.. தன் மக்களின் குரலை அவர் பிரதிபலித்தார். அந்த நேர்மை சுமந்திரனிடம் கிடையாது. அதுதான் அங்கு சொல்லப்பட்ட செய்தி. ஐநா அனந்தியின் சாட்சியத்தை மட்டும் வைத்து அறிக்கை தரவில்லை என்பது பாப்பா பால்குடிக்கும் தெரியும்.

சிங்கள மக்களின் அமோக ஆணையைப் பெற்ற மகிந்த.. இன்று விசாரணையில்... அவருக்கு வாக்களித்த மக்களை யாரும் கணக்கில் எடுப்பதே இல்லை. ஆனால்.. 58 ஆயிரம் வாக்கு( கள்ள வாக்கு உள்ளடங்க) பெற்ற ஒற்றருக்கு ஒரே தேவார தீபாராதனை என்பது.. நெடுக மக்களை ஏமாற்ற வழி சமைக்காது. மக்களை எப்பவும் ஏமாற்றலாம் என்று கனவு காணக் கூடாது. அந்தக் கனவு நிலைக்காது.

ஒரு பகுதி மக்கள் தெளிவா இருக்கினம்.. மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்கினவை மேலும் மேலும் வெல்லுவினம் என்று கனவு காண்பவர்கள்.. தொடர்ந்து கனவு கண்டுகொண்டிருப்பது அவர்களின் சொந்தப் பிரச்சனை.

கீழுள்ள காணொளி மக்களின் மனநிலையை சொல்லுது.....

https://www.youtube.com/watch?v=Y1uZtZEdd6g

வெசாக் தினத்தை முன்னிட்டு 484 கைதிகள் விடுதலை... (இது சிங்களவனுக்கு.) இதைக் கூட சம் சும் கும்பல் செய்ய முடியல்ல.

https://www.youtube.com/watch?v=Oq7mYWE0RU4

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

அனந்தி சாட்சியங்களை ஒழிக்கவில்லை.. பதிவு செய்தார். தானும் பாதிக்கப்பட்டவள் என்ற வகையில்.. தன் மக்களின் குரலை அவர் பிரதிபலித்தார். அந்த நேர்மை சுமந்திரனிடம் கிடையாது.

சிங்கள மக்களின் அமோக ஆணையைப் பெற்ற மகிந்த.. இன்று விசாரணையில்... அவருக்கு வாக்களித்த மக்களை யாரும் கணக்கில் எடுப்பதே இல்லை. ஆனால்.. 58 ஆயிரம் வாக்கு( கள்ள வாக்கு உள்ளடங்க) பெற்ற ஒற்றருக்கு ஒரே தேவார தீபாராதனை என்பது.. நெடுக மக்களை ஏமாற்ற வழி சமைக்காது. மக்களை எப்பவும் ஏமாற்றலாம் என்று கனவு காணக் கூடாது. அந்தக் கனவு நிலைக்காது.

மக்கள் தெளிவா இருக்கினம்.. மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்கினவை மேலும் மேலும் வெல்லுவினம் என்று கனவு காண்பவர்கள்.. தொடர்ந்து கனவு கண்டுகொண்டிருப்பது அவர்களின் சொந்தப் பிரச்சனை.

கீழுள்ள காணொளி மக்களின் மனநிலையை சொல்லுது.....

https://www.youtube.com/watch?v=Y1uZtZEdd6g

வெசாக் தினத்தை முன்னிட்டு 484 கைதிகள் விடுதலை... (இது சிங்களவனுக்கு.) இதைக் கூட சம் சும் கும்பல் செய்ய முடியல்ல.

https://www.youtube.com/watch?v=Oq7mYWE0RU4

இது மிகச்சரி! புலம் பெயர் ரௌடிகள் சில நூறு பேர் தான் இன்னும் மண்டை குழம்பிப் போய்க் கிடக்கீனம்! :cool:

18 minutes ago, வாலி said:

உந்த (பண்பில்லாத) கேள்விப் போராளிகள் உண்மையில் கப்பலில் வந்தவர்களாக இருந்தால் ஆக்களை ஆஸி அரசு நாடுகடத்த வேணும். உப்புடி நாலைஞ்சு பேரை அனுப்பினால்தான் மற்ற ஆக்கள் அடங்குவினம். அதோடை இனி புலம்பெயர் தேசங்களில் சந்திப்புக்களை நடத்தும்போது அந்தந்த நாட்டு பொலிசாருக்கு (குழப்பங்காட்டிகள் பற்றி) அறிவித்து விட்டு செய்ய முயற்சிசெய்யவேண்டும். 

அமெரிக்காவில் 2009 இல் ஒரு சில சந்திப்புகள் நடந்த போது (மருதரும் வந்திருப்பார் இதுகளுக்கு!) பெரும்பாலும் ஒரு பொலிஸ்காரர் வாசலில் ஆவெண்டு பார்த்தபடி நிற்பார்! அது சிங்களவரின் அச்சுறுத்தல் குறித்த முன்னெச்சரிக்கை! பொலிஸ் பாதுகாப்பு இல்லாத நேரங்களிலும் சிங்களவர்கள் எங்களோடு ஒரே அறையில் இருந்து கலந்து கொண்ட சம்பவங்களும் உண்டு! எங்கேயும் இந்தப் பொறுக்கிகள் போல அவர்கள் நடந்து கொள்ளவில்லை! வாதிப்பார்கள்! ஆனால் எல்லை மீறியதில்லை. என் கருத்துப் படி இந்த ரௌடிக் கூட்டம் மேற்கு நாட்டு ஜனநாயக வாழ்க்கை முறைக்குக் குந்தகம் விளைவிக்கும் வாய்ப்புகளே அதிகம் இருப்பதால், திருப்பி அனுப்பக் கூடிய எந்த விசாவில் இருந்தாலும் திருப்பியனுப்பி விட வேண்டும்! அவுசை விட அரசியல் குண்டர்கள் அதிகம் தேவைப்படும் சிறிலங்காவில் தான் இவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன்!  :cool:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சுமந்திரன் தொடர்பிலும் அவர் பெற்ற வெற்றியின் தார்ப்பரியம் கள்ள வாக்குகள் தொடர்பிலும்.. நல்ல தெளிவா இருக்கினம். மீண்டும்.. ஊருக்கு போய் இவர் எனி என்ன பொய்யைச் சொல்லுறது.. காணி விடுவிப்பில்.. சுத்துமாத்து. சம்பூர் கையளிப்பில் சுத்துமாத்து. இப்போ அரசியல் கைதிகள் விடுதலையிலும் அது. இவை சொல்லும் சம் சும் கும்பலின் பித்தலாட்டத்தனத்தை. அது மக்கள் என்ன தீர்ப்பை வருங்காலத்தில் எடுப்பினம் என்பதையும் தெளிவாக உணர்த்தும். அதையும் பாப்பியள்.

இன்று சம்பந்தர் அறிக்கை விட்டு... தீபாவளி கொண்டாட.. மிச்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. கறுப்பு தீபாவளின்னு.. தீபாவளி கொண்டாட தவிர்ப்புச் செய்யும் நிலை. ஏன்..??! இது மக்கள் எப்படியான தெளிவில் இருக்கினம் என்பதை இனங்காட்டுது. அது விளங்காத மாதிரி நீங்கள் நடிப்பது நல்லாவே புரியும்.  :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

மக்கள் சுமந்திரன் தொடர்பிலும் அவர் பெற்ற வெற்றியின் தார்ப்பரியம் கள்ள வாக்குகள் தொடர்பிலும்.. நல்ல தெளிவா இருக்கினம். மீண்டும்.. ஊருக்கு போய் இவர் எனி என்ன பொய்யைச் சொல்லுறது.. காணி விடுவிப்பில்.. சுத்துமாத்து. சம்பூர் கையளிப்பில் சுத்துமாத்து. இப்போ அரசியல் கைதிகள் விடுதலையிலும் அது. இவை சொல்லும் சம் சும் கும்பலின் பித்தலாட்டத்தனத்தை. அது மக்கள் என்ன தீர்ப்பை வருங்காலத்தில் எடுப்பினம் என்பதையும் தெளிவாகக் உணர்த்தும். அதையும் பாப்பியள்.

இன்று சம்பந்தர் அறிக்கை விட்டு... தீபாவளி கொண்டாட.. மிச்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. கறுப்பு தீபாவளின்னு.. தீபாவளி கொண்டாட தவிர்ப்புச் செய்யும் நிலை. ஏன்..??! இது மக்கள் எப்படியான தெளிவில் இருக்கினம் என்பதை இனங்காட்டுது. அது விளங்காத மாதிரி நீங்கள் நடிப்பது நல்லாவே புரியும்.  :rolleyes:tw_angry:

ஆதாரம் தந்து பேசப் பழகுங்கள்! ஓ! உங்களுக்குப் பரிச்சயமான விக்கிபீடியாவில் இன்னும் வரவில்லையென்பதால் தர முடியவில்லையா? :rolleyes:பரவாயில்லை! நீங்களே போய் ஒரு விக்கிப்பதிவைத் தொடங்கி இங்கே ஆதாரமாகக் காட்டுங்கள்! இல்லையேல், இப்படியே புசத்துங்கள்! சூரியன் மேற்கில் உதிக்கும் வரை! 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முதலில்.. நாட்டு நடப்புக்களை அவதானித்து வரணும். ஆகஸ்ட் தேர்தலில் நடந்த தில்லு முல்லை நவம்பரில் வந்து அதுவும் கள்ள வாக்குச் சுமந்திரன்.. நல்லாட்சியில் ஒட்டுண்ணி ஒற்றராக ஒட்டிக்கொண்ட பின் கேட்டுத் திரிவதிலும்.. இங்கு யாழில் தேடிப் பாருங்கள்.. ஆதாரம் கிடைக்கும். யாழில் அது குறித்த செய்திகள் பதியப்பட்டுள்ளன. உங்களுக்கு ஆதாரம் தேடுவது அல்ல இங்கு பிரச்சனை. விரும்பினால் நம்புங்கள் இல்ல போங்கள். நீங்கள் நம்பி அங்கீகரித்தால் தான் அது உண்மை என்று நம்ப நாம் முட்டாள்கள் அல்ல. உங்களின் அரசியல் கருத்து பித்தலாட்டத்தை நாம் தற்போது நன்கே அறிந்து வருகிறோம்.

நீங்களும் உங்கள் சக தேவாரம் பாடிகளும்..இவற்றைக் காணனும்..

http://ibctamil.com/news/index/12966

எதிர்கட்சி தலைவர் பதவியை அடகு வைத்து விடுதலை செய்யுங்கள்; அரசியல் கைதிகள்

[ Tuesday,10 November 2015, 10:57:37 ] video1.png  
download.jpg

எதிர்கட்சி தலைவர் பதவியையோ அல்லது குழுக்களின் பிரதி தலைவர் பதவியையோ அடகு வைத்தாவது தங்களது விடுதலை போரட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் தன்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – வெலிக்கடை சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், ஜனாதிபதி செயலாளர் ஆகியோர் நோில் சென்று சந்தித்துள்ளனர்.

கைதிகளை சந்தித்த பின்னர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

நாளை 30 கைதிகள் விடுதலை தொடர்பில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன், போரட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்த போதும் கைதிகள் அந்த வேண்டுகோளை நிராகரித்துள்ளனர்.

இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது போராட்டத்தில் இணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.  

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் உறுதிமொழியை  நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் கைதிகள் தெரிவித்துள்ளனர். 

http://ibctamil.com/news/index/12956

https://www.youtube.com/watch?time_continue=3&v=myMg4Urk6Qk

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

ஆமாம்! ஆதாரம் ஒரு தரவாக இருந்தால் தானே நீங்கள் இந்தா எண்டு தர முடியும்? சோசியல் மீடியா என்ற மூஞ்சிப் புத்தகத்தில் குப்பனும் சுப்பனும் எழுதும் ஐயம், எங்காவது ஒரு கக்கூசில் இருந்து ஒற்றை நபரால் நடத்தப் படும் ஒரு மஞ்சள் இணையத்தின் கறுவல்கள் இவை தான் நீங்கள் உறுதியாக நம்பும் ஆதாரத் தரவுகள்! :rolleyes:

இப்படி யாழில் தேர்தலுக்கு முதலே சும் பற்றிப் பகிரப் பட்ட பல "தரவுகளை" யாழ் கள உறவு கரி ஒரு பத்து வீடியோ ஆதாரங்களில் தேர்தலுக்கு முதல் நாள் முறியடித்த போது, "கம்"மென்று இருந்தார்கள் உங்களைப் போன்ற "ஆதார புருஷர்கள்" .  Hearsay ஐ ஆதாரம் என்று நீங்கள் அழைக்கிறீர்கள்! **************

Edited by நியானி
ஒரு வரி தணிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.