Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.பி. சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு வட மாகாண சபை முதல்வர் பதில்

Featured Replies

vigneswaran_0.jpg

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன், தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு,

 

இனப்படுகொலையும் நாமும்

எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை அண்மைக் காலமாக முன்வைத்து வந்துள்ளார். அவை அனைத்திற்கும் பதில் கூற வேண்டிய காலம் கனிந்துள்ளது. முதலில் அவர் இனப்படுகொலை பற்றிய வடமாகாண சபைத் தீர்மானம் பற்றி விமர்சித்தார். உண்மையில் இந்தத் தீர்மானத்தைத் தயாரித்துத் தரவேண்டும் என்று திரு.சுமந்திரன் அவர்களிடம் கோரிய போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஜனாதிபதி தேரிதலின் பின்னர் எதுவும் சொல்லாமல் வெளிநாடு சென்று விட்டார் என்று நினைக்கின்றேன். அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் கடைசி நேரத்தில் நானே தயாரிக்க வேண்டிய கடப்பாடு என்னைச் சார்ந்தது. தீர்மானம் வெளிவந்தவுடனே அதனை வரவேற்று அறிக்கை தந்த அவர் பின்னர் அப்பேர்ப்பட்ட தீர்மானம் பிழையானது என்றார். காரணம் அதன் ஊடாக எவரையும் சட்டப்படி குற்றவாளிகள் ஆக்க முடியாது என்றும் அதனால் அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். 

பல மக்கள் பிரச்சனைகள் தம்முன் வரும் போது சட்டத் தரணியான அவர் இந்த இந்த விடயங்களில் வழக்குப் பதிய முடியாது, சாட்சியங்கள் போதாது என்றெல்லாம் கூறியிருப்பார். அதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு இழைக்கப்படவில்லை என்றோ பாதிப்பு ஏற்படவில்லை என்றோ மனக் கிலேசம் ஏற்படவில்லை என்றோ அர்த்தமில்லை. எமது தீர்மானம் இந் நாட்டில் இதுவரை நடந்ததைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அத்தீர்மானம் எவ்வௌற்றை இனப்படுகொலைச் சட்டம் இனப்படுகொலையாக ஏற்றுக் கொண்டுள்ளதோ அவை எம் நாட்டில் நடைபெற்றுள்ளன என்பதைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அது ஒரு சமூக ஆவணம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது ஐ.நா செயலாளரினால் தீர்மானிக்கப்படவேண்டியது. 

 

உண்மையும் நல்லிணக்கமும் 

மேலும் இதனை இவ்வருடம் ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் கொண்டு வந்ததும் கௌரவ சுமந்திரன் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில் ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் தான் இத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் எழுந்தது. எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கந்தான் நல்லிணக்கம் பற்றிக் கூறிவருகின்றது. தென்ஆபிரிக்காவில் உண்மையும் நல்லிணக்கமும் சார்ந்த ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டது. உண்மை தெரிந்தால்த்தான் நல்லிணக்கத்தை எய்தலாம். உண்மை தெரியாமல் நல்லிணக்கம் எப்படி  உருவாகும்? உலகத்திற்கு மட்டும் எங்கள் தீர்மானம் உண்மையை விளம்பவில்லை. இலங்கை மக்களுக்கும் அத்தீர்மானம் உண்மையை விளம்பியது.

முக்கியமாகச் சிங்கள மக்கள் அதில் கூறப்பட்டவை உண்மை என்று தெரிந்து ஏற்றுக் கொண்டால்த்தான்  நல்லிணக்கத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். அவை எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்கட் தலைவர்கள் கூறினால் நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகின்றோம்? எனவே இனப்படுகொலை பற்றிய வட மாகாண சபையின் தீர்மானம் கௌரவ பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அவருடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் மற்றையவர்களுக்கும் கோபத்தைத் தருவதாக இருந்தாலும் அத்தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் எங்கள் உறுப்பினர்கள் அனைவரதும் ஏகோபித்த கருத்தையே வெளிக்காட்டி நின்றன. உண்மையைச் சுட்டிக் காட்டி நின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவே முதலமைச்சர் பதவி

அடுத்த குற்றச்சாட்டு என்னைத் தமது கட்சியே அரசியலுக்கு அழைத்து வந்ததென்றும் வடமாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சியே கொடுத்தது என்றும் கூறியுள்ளார். இது தவறு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி. அது பதிவு படுத்தப்படாத கட்சி. என்னை வலிந்து பலரும் அரசியலுக்குள் அழைத்த போது சகல கட்சிகளும் சேர்ந்து என்னை அழைத்தால் அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினேன். சகல கட்சித் தலைவர்களும் என்னை முதலமைச்சராக முன்னிறுத்துவது என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சியும்இ ஏனைய கட்சித் தலைவர்களும் இணைந்து கூட்டாகவே குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தேர்தல் நடந்தது. 1இ33இ000க்கு மேலதிகமான வாக்குகள் கிடைத்தன. அதனால்த்தான் நான் வடமாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றேன். ஏற்றுக் கொண்டேன். கௌரவ சுமந்திரன் கூறுவது போல் அவரின் கட்சி என்னைக் கூப்பிட்டு நாங்கள் இந்தப் பதவியை உங்களுக்குத் தருகின்றோம். எங்கள் கட்சிக்கு விஸ்வாசமாக நீங்கள் நடக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டு எனக்கு இப் பதவியை வழங்கவில்லை. ஆகவே கௌரவ சுமந்திரனின் 2ம் குற்றச் சாட்டு அஸ்திவாரமற்ற குற்றச் சாட்டு.

பொதுத் தேர்தலும் நிதி சேகரிப்பும்

அடுத்த குற்றச் சாட்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சிக்குச் சார்பாகச் செயற்படவில்லை என்பது. நான் ஏதாவது ஒரு கட்சியின் நடைமுறை உறுப்பினராக இருந்தால்த்தானே கட்சி என்னைக் கட்டுப்படுத்தலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவுபடுத்தப்படாத கட்சி. இலங்கைத் தமிழரசுக் கட்சியோ வேறேதேனுங் கட்சியோ என்னைத் தமது கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கவுமில்லை. நான் போகவுமில்லை. திருகோணமலையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன். போனேன். என்னைப் பொறுத்த வரையில் வடமாகாண மக்களே. பெருவாரியாக எனக்கு வாக்களித்த அவர்;களேஇ எனது கட்சி. அவர்களின் நன்மையே எனது கட்சிக் குறிக்கோள். ஆகவே கட்சியே எனக்குப் பதவியைக் கொடுத்தது என்பதிலும் பார்க்க மக்களே எனக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதே உண்மையாகும். நான் கேட்டு கட்சி எனக்கு ஒரு பதவியை வழங்குவதையும் கட்சி கேட்டு நான் மக்களிடம் வாக்குப்பெற்று பதவி பெறுவதையும் ஒன்றாகக் கருத முடியாது. 

அடுத்து கனடா செல்லாமை பற்றிய குற்றச்சாட்டு. முதலில் பலர் கேட்ட போது எனக்கு முழங்கால் வலி இருந்தது உண்மை. எமது வைத்தியர்கள் காலக்கிரமத்தில் எனக்கு சிகிற்சை அளித்து அதிலிருந்து விடுவித்ததும் உண்மை. அதன்பின்னர் எனக்குச்; சுகமாக இருக்கவே நான் அமெரிக்கா சென்றதும் உண்மைதான். அமெரிக்கா சென்ற போது பல விடயங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதே நேரம் இங்கிலாந்தில் உயிருடன் இருக்கும் எனது ஒரேயொரு சகோதரி நான் இங்கிலாந்து வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கிலாந்து செல்ல வேண்டி வந்ததும் உண்மை. அதனால் என்னால் கனடா செல்ல முடியாது என்று கூறியதும் உண்மை. அமெரிக்காவில் இருக்கும் போதே சில சரீர உபாதைகளுக்கு நான் உட்பட்டு இருந்தேன். எனவே கனடா சென்று வருவது என்பது எனக்குத் தேக அசௌகரியத்தையே தந்திருக்கும். 

அத்துடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பணம் திரட்ட வேண்டுமானால் அப்பணத்தைச் செலவழிக்கப் போகும் பாராளுமன்ற வேட்பாளர்களே அதைப் போய் கனேடிய மக்களிடம் கேட்டுப் பெற வேண்டுமே ஒளிய வடமாகாண சபையைச் சேர்ந்த நான் எப்படிக் கேட்பது? பணத்தைச் செலவு செய்யப் போகின்றவர்கள்இ அதற்குக் கணக்குக் காட்டப் போகின்றவர்கள்இ பணத்தை இலங்கைக்கு எடுத்துவரப் போகின்றவர்கள் ஒரு புறம் இருக்க என்னை அங்கு செல்ல வைப்பதற்கு கௌரவ சுமந்திரன் அவர்கள் ஊக்கம் காட்டியது எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அவரின் கூற்றின்படி தேவையற்ற இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏக மனதாக வடமாகாணசபை நிறைவேற்றிய பின்னர் என்னைக் கனேடிய மக்கள் ஒதுக்கித்தள்ளியிருப்பார்கள் என்ற அவர் கருத்துப்படியான விதத்தில் அவர் என்னைக் கனடா செல்ல அழைத்ததே பிழையென்றுதான் கருத வேண்டும்.
 
தேர்தல்கால அறிக்கைகள்

அடுத்த குற்றச்சாட்டு கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தேன் என்பது. அவ்வாறு நான் எந்தத் தருணத்திலும் அறிக்கை விடவில்லை. கட்சிகளைச் சேராத நான் நடுநிலையாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஐந்து அல்லது நான்கு கட்சிகள் சேர்ந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அபிமானிகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்ட ஒரு தேர்தலில்   நான் எவ்வாறு பாரபட்சம் காட்டி இன்னாருக்கு வாக்குப் போடுங்கள் என்று கேட்பது? 

அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குப் போடுங்கள் என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது. இங்கு சில விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இவ் வருடம் ஜனவரி மாதம் 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அடுத்த நாள் கௌரவ இரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார். கௌரவ சம்பந்தன், கௌரவ சுமந்திரன் சகிதம் நானும் சேர்ந்து கொழும்பு புலர்ஸ் லேனில் இருக்கும் கௌரவ மலிக் சமரவிக்கிரம அவர்களின் வீட்டில் கௌரவ இரணில் அவர்களைச் சந்தித்து அவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்தோம். அப்போது ஜேவிபியைச் சேர்ந்தவர்கள் கூட அங்கு வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.

வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றம்

நாங்கள் அங்கிருந்து செல்கையில் கௌரவ இரணில் அவர்கள் என்னைப் பார்த்துக் கூறினார் - 'நான் நாளைக்கு மகாநாயக்க தேரருக்கு வடக்கிலிருந்து இராணுவத்தினர் எவரையும் அகற்றப் போவதில்லை என்று கூறப் போகின்றேன்' என்றார். பக்கத்தில் கௌரவ சம்பந்தன் அவர்களும் கௌரவ சுமந்திரன் அவர்களும் இருந்தார்கள். நான் அந்த நேரத்தில் எதையும் கூறவிரும்பவில்லை. சிரித்துவிட்டுத் திரும்பி வந்து விட்டேன். கௌரவ இரணில் அவர்களின் கூற்றின் தாற்பரியம் எனக்குப் புரிந்தது. அதாவது 'இராணுவத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்கு உதவுவதாக நான் முன்னர் உங்களுக்குக் கூறியிருந்தாலும் அதற்கு மாறாக நான் மகாநாயக்கருக்குத் தெரிவிக்கப் போகின்றேன்' என்பதே அது. அதாவது தமிழர்களுக்கு ஒரு முகம் காட்டிய நான் மகாநாயக்கருக்கு என் மறு முகத்தைக் காட்டப் போகின்றேன் என்பதே அவரின் கூற்றின் உள்நோக்கம்.

நான் அதன்பின் அதைப் பொருட்படுத்தவில்லை. அவரின் உறவினர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வடக்கு வந்து அதே கருத்தைத் தெட்டத் தெளிவாக இராணுவத்தினர் மத்தியில் கூறிய போதுதான் அதற்கு மறுமொழி கொடுத்தேன். அதாவது இந்தக் கருத்தை ஏற்கனவே எனக்குக் கௌரவ இரணில் அவர்கள் கூறிவிட்டார் என்றேன். யுஎன்பிஐ மாமன் மருமகன் கட்சி என்று முன்னர் அழைப்பார்கள். அதேபோன்று மாமன் கூறியதை வடக்கு வந்து மருமகன் கூறினார் என்றேன். ஆனால் உண்மையில் பல வயது வித்தியாசம் இருந்தாலும் கௌரவ இரணில் அவர்களின் ஒன்று விட்ட சகோதரரே தான் என்று கௌரவ ருவான் விஜேவர்தன எனக்குப் பின்னர் கூறியிருந்தார். நான் அவர் கூற்றை விமர்சித்துக் கூறியதில் கௌரவ ருவான் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை. 

கௌரவ இரணிலும் நம்மவர்களும்

அதன் பின் கௌரவ இரணிலிடம் இந்தியாவில் இராணுவம் பற்றி இவ்வாறு வடமாகாண முதலமைச்சருக்குக் கூறினீர்களா என்று கேட்டபோது என்னைத் தான் சந்திக்கவுமில்லை பேசவுமில்லை என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மறுமொழி அளித்தார். அதையுந் தாண்டி 'விக்னேஸ்வரன் ஒரு பொய்யர்' என்றும் கூறினார். அது பற்றி என்னுடன் இருந்த கௌரவ சம்பந்தனோஇ கௌரவ சுமந்திரனோ உண்மை என்ன என்பதைக் கூற முன்வரவில்லை. பேசா மடந்தைகளாக இருந்தார்கள். நான் மட்டும் இரண்டு மூன்று கிழமைகள் கழித்து 'நான் பொய்யரா இல்லையா என்பது பிரச்சனை இல்லை. இராணுவத்தினரை ஒரு திட்டத்தின் கீழ் குறைத்து வடமாகாணத்தில் இருந்து படிப்படியாக வெளியேற்றுவேன் என்று கௌரவ இரணில் அவர்கள் கூறட்டும். நான் அடுத்த நிமிடமே அவருக்குக் கைலாகு கொடுக்கின்றேன்.' என்றேன். இவ்வளவுக்கும் கட்சிக்கு நான் சார்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறும் கௌரவ சுமந்திரன் தமது கட்சி உறுப்பினர் என்று அவர் கருதும் எனக்குச் சார்பாக ஒரு வார்த்தைதானும் கூறினாரா? பணம் சேர்க்க நான் வேண்டும். பழி ஏற்கவும் நான் தான் வேண்டும் என்ற நிலையில்இ கௌரவ இரணிலின் நெருக்கமே தமக்குக் கூடிய முக்கியத்துவம் உடையதுஇ உறுப்பினர் உறவு முக்கியமில்லை என்ற நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கௌரவ சுமந்திரனுடையதுதான்

மேலும் அண்மைய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் கௌரவ சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் வரைவை எனக்கு அனுப்பிவிட்டு அது சம்பந்தமாக நான் எனது அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து எமது கருத்துக்களைத் தரவேண்டும் என்று நான் கூறியதன் பிற்பாடுகூட எம்மைப் புறக்கணித்து அடுத்த நாளே தனது வரைவைப் பத்திரிகைகளுக்கு 'இதுதான் எமது தேர்தல் விஞ்ஞாபனம்' என்று வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு? அத்துடன் ஐக்கிய இராஜ்யத்திற்குப் போன போது கௌரவ சுமந்திரன் அவர்கள் வடமாகாணசபையினருடன் கலந்தாலோசிக்காமல் அவர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக மீள்குடியேற்றம் பற்றித் தமது கருத்துக்களை வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

தான்தோன்றித்தனமான வேட்பாளர்கள் தெரிவு

மேலும் வடமாகாணசபையை உருவாக்கியபோது ஒவ்வொருவரின் திறமைகளையும் அனுபவத்தையும் தகைமைகளையும் அத்துடன் அரசியல் பின்னணிகளினால் ஏற்பட்ட சில கட்டுப்பாடுகளையும் மனதில் வைத்தே நான் எனது அமைச்சர்களைத் தெரிவு செய்தேன். அண்மைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களின் தகைமைகள்இ வாக்காள மக்களின் போரின் பின்னரான அவர்களின் தேவைகள், முன்னுரிமைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அலசி ஆராய்ந்து வடமாகாணசபையினரின் இருவருட அனுபவத்தின் அடிப்படையில் எவ்வௌர்களை நியமிப்பது என்ற விடயத்தை வெறும் சம்பிரதாயத்திற்காகவேனும் எமது வடமாகாணசபையினருடன் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகவே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தச் சூழ்நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

அரசியல் தீர்வு பரம இரகசியம்

மேலும் வடமாகாணசபையினருடன் கலந்தாலோசியாமல் தான்தோன்றித்தனமாக சிங்கப்பூரில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் அரசியல் தீர்வு பற்றியும் கௌரவ சுமந்திரன் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். அது பற்றி இது வரையில் எந்த விதமான கருத்துப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. தான்தோன்றித்தனமாக அவர் நடக்கையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

உள்ள10ராட்சி அமைச்சர் என்ற வகையில் நான் ஊழல் நிறைந்த சில உள்ள10ராட்சி மன்றங்களைச் செயலற்றதாக்க வேண்டியிருந்தது. செயலாளரைத் தாக்கிய ஒரு பிரதேசசபைத் தலைவர் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. பிழையான வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதால்த்தான் இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் நடக்க வேண்டி வந்தது. தகைமை, தரம், அறிவு, நேர்மை போன்றவை வெறும் வாய்ச் சொற்களாக இருக்கப்படாது. தகைமையுடையோரையே நாங்கள் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும். ஆகவே அவ்வாறான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியதில் என்ன தப்பு? 

மாண்புமிகு ஜனாதிபதி சிறிசேன அவர்கள்கூட பல கட்சிகள் சேர்ந்த தமது கூட்டணியினரின் தேர்தலில் நடுநிலைமை காத்தார். அதில் என்ன தப்பு? 
பத்திரிகையாளர்கள் விடுத்து விடுத்து ஏன் நடுநிலைமை வகிக்கின்றீர்கள் என்று கேட்ட போது இவற்றைக் கூற விரும்பாமல்த் தான் 'நான் ஊமை' என்று கூறினேன்.

அடுத்த குற்றச்சாட்டு என்னுடைய தேர்தலின் போதான இரு அறிக்கைகள் தெளிவாக மாற்றுக் கட்சிகளைச் சுட்டிக் காட்டுபவையாக அமைந்தன என்பது. 

நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், வல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது மாற்றுக் கட்சியையே சுட்டிக் காட்டியது என்றால் எமது கூட்டுக் கட்சியில் நல்லவர்களும் வல்லவர்களும் நேர்மையானவர்களும் இல்லை என்றா கௌரவ சுமந்திரன் அவர்கள் கூறுகின்றார்?

பாராளுமன்றத் தேர்தலும் நாமும்

ஒரு வேளை வீட்டில் முடங்கிக் கிடக்காது வேளைக்குச் சென்று வாக்களியுங்கள் என்று நான் கூறியதற்கு அவர் தானாக அளித்த வியாக்கியானத்தை அவர் குறிப்பிடுவதாக இருந்தால் எனக்கு அப்பேர்ப்பட்ட எண்ணம் எதுவும் அவ் அறிக்கையை வெளியிடும் போது இருக்கவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருந்திருந்தால்இ நான்; எவ்வாறு கூறியிருக்க வேண்டும்? உங்கள் வீடுகளை விட்டுச் சைக்கிளில் பிரயாணஞ் செய்து சென்று வாக்களியுங்கள் என்று கூறியிருக்க வேண்டும். கௌரவ சுமந்திரன் அவர்கள் தான் தரும் வியாக்கியானந்தான் உண்மை நான் கூறும் உண்மை உண்மையல்ல என்று அடம் பிடிப்பது அவருக்கு அழகல்ல.
 
ஜூலை மாதம் 17ந் திகதி இங்கிலாந்து ஹரோவில் பல தரப்புக்கள் இணைந்து என்னை அழைத்திருந்தார்கள். எனது செவ்வி படமாக்கப்பட்டு பல நாடுகளிலும் காட்டப்பட்டது. மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்குத் திட்டவட்டமாக நான் கூறிய பதில் 'நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை' என்பது. இது வரையில் அவ்வாறே நான் இருந்து வருகின்றேன். கட்சித் தலைமைத்துவம் தாம் எண்ணுவதே சரியென்று நினைக்கஇ அதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றால் எமது கருத்து கட்சியைப் புறக்கணித்ததாக அமையாது. ஒரு வேளை கட்சி சில விடயங்ளை அபிமானிகளிடையே அல்லது அனுசரணையாளர்களிடம் ஒரு முறையான நியாயமான தீர்மானத்திற்கு விட்டால் அவர்களில் பெரும்பான்மையோர் கட்சித் தலைமையின் கருத்து பிழையென்று கூறக் கூடிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். கொள்கைகளில் இருந்து பிறழாத வலுமிக்க நேர்மையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது ஒரு போதும் கட்சிக்குப் பாதகமான கருத்தாக எடுக்கப்பட முடியாது. அது கட்சியை வலுவேற்றும் ஒரு அப்பியாசமாகவே கருதப்பட வேண்டும்.
 
உட்கட்சி ஜனநாயகமே கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்

பொதுவாகக் கட்சிகள் பற்றி எனக்குப் பல கருத்துக்கள் உண்டு. கட்சி என்பது அதன் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டும். சில கருத்துக்களைப் பெரும்பான்மையினரின் வாக்கின் மூலம் நிராகரிக்கலாம். ஆனால் ஒரு கட்சியானது அதன் உறுப்பினர்களின் கருத்தறிந்து நடக்க வேண்டும். கட்சியின் தலைமைத்துவம் தான்தோன்றித்தனமாக நடக்க முனைவது கட்சிக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். மேலும் வடமாகாணம் பற்றிய கருத்துக்களைக் கட்சி வெளியிட முன்னர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் தலைமைத்துவமானது கலந்துறவாட வேண்டிய ஒரு கடப்பாடும் அதற்கு உண்டு. 

வடமாகாணசபையின் அலுவலர் நியமனங்கள் பற்றி நேரடியாக எமது அலுவலர்களுக்கு கட்சி சார்பில் கருத்துக்களை வழங்கி வடமாகாண மக்கட் பிரதிநிதிகளை உதாசீனம் செய்வதும் வரவேற்கத்தக்கதல்ல. இவை அனைத்தையும் நான் கட்சித் தலைவருக்கு எழுத்து மூலம் சென்ற ஏப்ரல் மாதந் தொடக்கம்  தெரிவித்து வந்துள்ளேன். ஒரு கடிதத்திற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். மேலும் அண்மையில் கௌரவ சம்பந்தன் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு என் மனமுவந்த வாழ்த்தைத் தெரிவித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடகிழக்கு மாகாணசபைகளின் உறுப்பினர்களும் சேர்ந்து ஒருமித்துஇ எமக்கு வாக்களித்துத் தெரிவு செய்த மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தேன். இப்பொழுதும் அக் கடிதங்களுக்கு அவரிடம் இருந்து பதிலை எதிர்பார்த்தே இருக்கின்றேன். 

ஆகவே கௌரவ சுமந்திரன் அவர்கள் தமக்குக் கட்சியில் இதுகாறும் இருந்த மதிப்பு குறைகின்றதே என்ற ஆதங்கத்தில் அதற்கு என்னைப் பலிக்கடாவாக்க முனைவது வருத்தத்திற்குரியது. எனினும் அவர் எனது பழைய மாணவர் என்ற விதத்தில் அவருக்கு இறைவன் ஆசி என்றென்றும் இருப்பதாக என்று பிரார்த்திக்கின்றேன்.  என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/articles/2015/11/17/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D

Edited by Athavan CH

சுமந்திரனின் திருகுதாளங்களை கெளரவ விக்கினேஸ்வரன்  அவர்கள் சிறந்த முறை அம்பலப்படுத்தி உள்ளார். இன்னமும் வெளியே வராத சுமந்திரனின் எத்தனை ஜில்மாக்கள் இருக்கிறதோ தெரியாது. 

Edited by trinco

பொதுத் தேர்தலும் நிதி சேகரிப்பு---

இந்த விடயம் சம்பந்தமாக நான் பின்பு எழுதுகின்றேன் .2010பொதுத்தேர்தல் 2012கிழக்கு மாகாண சபைத்தேர்தல் ,2013வட மாகாண சபைத்தேர்தல் எல்லாவற்றிற்கும்  இவர் வந்தா நாங்கள் நிதி சேகரித்தனாங்கள் .இவர் எங்களுக்கு சொன்னதற்கும் ,இந்த அறிக்கைக்கும் வித்தியாசம் .

 

 

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயாவின் அறிக்கையை வாசித்துப்  பார்த்தால் தான் பல அறிவாளிகளுக்கு கூட்டமைப்பின் கபடங்கள் புரியும். சும் ஒரு அம்புதான் வில்லுக்குரியவர்கள் ரணில் மாத்தையாவும் அவரின்  கொடிபிடிகளும்  தான் என்பதும் அவர்களுக்கு விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Gari said:

பொதுத் தேர்தலும் நிதி சேகரிப்பு---

இந்த விடயம் சம்பந்தமாக நான் பின்பு எழுதுகின்றேன் .2010பொதுத்தேர்தல் 2012கிழக்கு மாகாண சபைத்தேர்தல் ,2013வட மாகாண சபைத்தேர்தல் எல்லாவற்றிற்கும்  இவர் வந்தா நாங்கள் நிதி சேகரித்தனாங்கள் .இவர் எங்களுக்கு சொன்னதற்கும் ,இந்த அறிக்கைக்கும் வித்தியாசம் .

 

 

ஒரு பொதுசன ஆதரவுள்ள கட்சிக்கு எதற்குத் தேர்தல்நிதி, இதிலிருந்தே கூட்டமைப்பினது நம்பிக்கையின்மை ஆரம்பமாகிறதே!

  • கருத்துக்கள உறவுகள்

( புலம் வாழ் காவடி பிரியர்கள் / அன்பர்களுக்கு ) இது தான் நெத்தி அடி !!

உண்மை தெரிந்தால்த்தான் நல்லிணக்கத்தை எய்தலாம். உண்மை தெரியாமல் நல்லிணக்கம் எப்படி  உருவாகும்?

சிங்கள மக்கள் அதில் கூறப்பட்டவை உண்மை என்று தெரிந்து ஏற்றுக் கொண்டால்த்தான்  நல்லிணக்கத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். அவை எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்கட் தலைவர்கள் கூறினால் நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகின்றோம்? எனவே இனப்படுகொலை பற்றிய வட மாகாண சபையின் தீர்மானம் கௌரவ பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அவருடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் மற்றையவர்களுக்கும் கோபத்தைத் தருவதாக இருந்தாலும்..

இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் காவடி கூட்டத்துக்கு வரவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Gari said:

பொதுத் தேர்தலும் நிதி சேகரிப்பு---

இந்த விடயம் சம்பந்தமாக நான் பின்பு எழுதுகின்றேன் .2010பொதுத்தேர்தல் 2012கிழக்கு மாகாண சபைத்தேர்தல் ,2013வட மாகாண சபைத்தேர்தல் எல்லாவற்றிற்கும்  இவர் வந்தா நாங்கள் நிதி சேகரித்தனாங்கள் .இவர் எங்களுக்கு சொன்னதற்கும் ,இந்த அறிக்கைக்கும் வித்தியாசம் .

 

 

விக்னேஸ்வரன் வந்தா நிதி சேர்த்த நாங்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள். விக்னேஸ்வரன் வரவில்லை என்று சுமேந்திரன் குற்றம் சாட்டியதற்கே விக்னேஸ்வரன் பதில் அளித்திருக்கிறார். ஏன் நீங்கள் விக்னேஸ்வரனை வரும் படி கேட்டு, பின் அவர் வர முடியாத நிலையில் அவர் வரவில்லை என்று குற்றம் சாட்டி அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கிறீர்கள்? முன்னுக்கு பின் முரணாக ஒருவருக்கு ஒருவர் முரணாக கருத்துகள் தெரிவிப்பது உங்கள் மேல் மக்களுக்கு சந்தேகத்தை வலுப்படுத்தவே உதவும்.

 

1 hour ago, Elugnajiru said:

ஒரு பொதுசன ஆதரவுள்ள கட்சிக்கு எதற்குத் தேர்தல்நிதி, இதிலிருந்தே கூட்டமைப்பினது நம்பிக்கையின்மை ஆரம்பமாகிறதே!

நண்பரே, நீங்கள் பெற்றோர் பணத்தில் வாழும் வயதில் இருந்து எழுதுபவர் போல தெரிகிறது. ஒரு தொலைபேசி அழைப்புக்கு கூட பணம் தேவை. பொதுசன ஆதரவுள்ள கட்சி பொதுசனத்திடமே அந்த பணத்தை கேட்கிறது. இதை நீங்கள் நம்பிக்கையீனத்துக்கு அடையாளம் என்கிறீர்கள். 

சில பொதுவுடைமை கட்சிகளுக்கு சீன மற்றும் ரஸ்ய தூதரகங்களின் இரகசிய உதவியுடன் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பணஉதவி செய்கின்றன. போராளிகள் அமைப்புகளுக்கு ஆயுதங்கள் முதல் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பணம் வரை இந்திய தூதரகங்களின் இரகசிய உதவியுடன் இந்தியா வழங்கி இருக்கிறது. அமெரிக்க அரசு வெளிப்படையாகவே தனது சார்பு அரசியல்வாதிகளுக்கு பணமும் வசதிகளும் வழங்குகிறது. நோர்வே அரசு விடுதலை புலிகளுக்கு பணமும் பொருட்களும் வழங்கியது. இவ்வாறான பணம் சேர்த்தலா நம்பிக்கைக்கு உரிய அடையாளம்?

பணம் இல்லாமல் எல்லாம் இலவசமாக கிடைப்பது நீங்கள் பெற்றோர் பணத்தில் வாழும் வரைதான் நண்பரே!

 

 

37 minutes ago, Jude said:

நண்பரே, நீங்கள் பெற்றோர் பணத்தில் வாழும் வயதில் இருந்து எழுதுபவர் போல தெரிகிறது. ஒரு தொலைபேசி அழைப்புக்கு கூட பணம் தேவை. பொதுசன ஆதரவுள்ள கட்சி பொதுசனத்திடமே அந்த பணத்தை கேட்கிறது. இதை நீங்கள் நம்பிக்கையீனத்துக்கு அடையாளம் என்கிறீர்கள். 

சில பொதுவுடைமை கட்சிகளுக்கு சீன மற்றும் ரஸ்ய தூதரகங்களின் இரகசிய உதவியுடன் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பணஉதவி செய்கின்றன. போராளிகள் அமைப்புகளுக்கு ஆயுதங்கள் முதல் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பணம் வரை இந்திய தூதரகங்களின் இரகசிய உதவியுடன் இந்தியா வழங்கி இருக்கிறது. அமெரிக்க அரசு வெளிப்படையாகவே தனது சார்பு அரசியல்வாதிகளுக்கு பணமும் வசதிகளும் வழங்குகிறது. நோர்வே அரசு விடுதலை புலிகளுக்கு பணமும் பொருட்களும் வழங்கியது. இவ்வாறான பணம் சேர்த்தலா நம்பிக்கைக்கு உரிய அடையாளம்?

பணம் இல்லாமல் எல்லாம் இலவசமாக கிடைப்பது நீங்கள் பெற்றோர் பணத்தில் வாழும் வரைதான் நண்பரே!

 

எழுத நினைத்தது, எழுதிவிட்டீர்கள். நன்றி

முதலில் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு இப்போ தமிழரசு கட்சிக்கு உள்ளேயே குத்துவெட்டு .

சுமந்திரன் -அதிகபிரசங்கிதனம் கூடிவிட்டது உண்மைதான் .உண்மை பேசுகின்றேன் என்று பேர்வழி தேவையில்லாத விடயங்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து வாங்கிகட்டிகொள்கின்றார் .

விக்கினேஸ்வரன் -அறிவு ,ஆழுமை இருந்தாலும் அரசியலில் அவர் அருச்சுவடி என்பதை அடிக்கடி நிரூபிகின்றார் .இவ்வளவு காலமும் எவ்வளவோ நாட்டில் பிரச்சனைகள் இருந்த காலத்தில் சிங்களஆட்சியில் நீதிபதியாக இருந்தவர் .தமிழரசு  கட்சிதான் அவரை அரசியலுக்கு கொண்டுவந்தது ஆனால் சில வருடங்களிலேயே அதிதீவிரதேசியம் பேசி அவர்களின் காலை வாருவதிலேயே குறியாக இருக்கின்றார் .

கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரியை சந்திதித்துவிட்டு வந்து அவர் விட்ட அறிக்கை சம்பந்தன் விடும் அறிக்கைகள் போலவே இருந்தது .புதிய அரசு வந்து ஒருவருடம் கூட ஆகாத நிலையில் இனப்பிரச்சனைக்கு ஒரு இரவில் மாற்றம் கொண்டுவரமுடியாது என்பதை அவர் உணர்திருந்தார் .

மைத்திரி ,ரணில் ,சந்திரிக்கா இந்த மூவருக்கும் இன்றும் மகிந்தா மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுவார் என்ற பயம் உள்ளது இதற்குள் தமிழர்களுக்கு தீர்வு ,கைதிகள் விடுதலை ,மீளக்குடியேற்றம் என்று தமது இருப்பை தொலைக்க விரும்பமாட்டார்கள் .சம்பந்தனுக்கு இந்த நிலைமைகள்  நன்கு தெரியும் அதுதான் நிதானாமாக அரசியல் செய்கின்றார் .

எமக்கு  தீர்வு ஏதாவது எட்டுவதற்கு முதல் நாமே எமக்குள் அடிபட்டு தமிழர்களின் பாரம்பரியத்தை காட்டிவிடுவோம் .

"சும்" ... அதிகப்பிரசங்கித்தனம் செய்யவுமில்லை, தேவையில்லாத விடயங்களை கதைக்கவுமில்லை, ...! அவருக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுகிறார்/அதன்படி செயற்படுகிறார்!

உதாரணத்து தமிழகத்தில் இதே போல் கோமாளிகளாகவும், குழப்பவாதிகளாகவும் சிலர் ... சோ சாமி, சுப்பிரமணி சாமி, .. என்ன செய்கிறார்கள்? ... ஏதாவது முக்கியமான பிரட்சனை வரும் போது, வேறு விதமாக ஆட்சியில்/எதிர்கட்சியில் இருப்போர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி, பிரட்சனையை திசை திருப்பி விடுவார்கள்! இதையே? காலாகாலமாக செய்கிறார்கள்! அதற்கு மேல் ஆட்சி மாற்றத்தையும் தீர்மாணிக்கிறார்கள்! ஏன் செய்கிறார்கள்? ... அவர்கள் "அந்த" அமைப்பில் முக்கிய பதவியில் இருப்பவர்கள்(ஓர் மூந்த தமிழக பத்திரிகையாளரின் தகவலின்படி), பிரட்சனை, அது, இது என போராட்டங்கள் வெடித்து, இந்திய இறையாமைக்கு ஏதாவது தீங்கு விளைவித்தாலும் என்று .. குழப்பவாதிகள் எனும் பெயரில் ..

அதே வேலையை .... இங்கு சுமந்திரனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது! என்ன வித்தியாசம் ..தமிழ் கூட்டமைப்புக்குள் இருந்தே செய்யச் சொல்லி இருக்கிறது!

Edited by no fire zone

வேறோர் தலைப்பில் எழுதியதிலிருந்து ..

சுமந்திரன் ... விடை? ... "பிராந்திய வல்லரசு"!

... இவரை தமிழரசுக்கட்சிக்குள் நுளைத்தார்கள்! பல தலைவர்களை ஓரங்கட்டச்செய்து தமிழரசு கட்சி தலைவராக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்! இன்று இவரை வைத்து ஆட வேண்டிய ஆட்டங்களை எல்லாம் ஆடுகிறது ... அதில் ஒன்றுதான் தமிழ்த்தேசியத்துக்கான தமிழரசு கட்சி/கூட்டமைப்பின் இலக்கை உடைத்து எறிவது!

... இலங்கைத்தீவில் ஆயுதப்போராட்டத்தை சர்வதேசத்துடன் இணைந்து முடிபுக்கு கொண்டு வந்தது இந்தியாதான்! ... இறுதியுத்தத்தில் இந்திய இராணுவம் முதல் நச்சுவாயுக்களின் தாக்குதல் வரை!

.... இன்று இந்திய  நலனுக்காக, இலங்கைத்தீவில் தமிழர்களின் ஜனநாயக குரல்களையும் முடக்க வேண்டிய தேவை! ... இதற்கான ஒரு ஆயுதமே "சுமந்திரன்"!

நேற்றைய தினம் விக்கியர் .. மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் எம்மவர்களை பார்க்க போயிருக்கிறார் ... போகப்போவது தெரிந்து அந்த நேரத்தில் .. சூடு, சொரணை, அது, இதை எல்லாம் விட்டு விட்டு ... நம்ம சும்மரும் போயிருக்கிறார் .. ஒட்டிக் கொண்டு உள்ளே போக! ....ஆனால் அங்குள்ள உண்ணாவிரதிகள் சொல்லிப்போட்டார்களாம் ... பின்வாசல் ... வரவே வேண்டாம் என்று!

சும் நீ இயமனுக்கே ஆட்டையை போடக்கூடிய அரசியல்வாதி!

கவனிக்குக: தமிழை சரியாக எழுதப்பார்க்கிறேன், சிலர் இங்கு கண்டித்ததன் பெயரால் ... உதாரணத்துக்கு "யமன்" .. "இயமன்"! 

  • கருத்துக்கள உறவுகள்

குருவை விஞ்சிய மாணவனாக சுமந்திரன் வளர்ந்துவிட்டார் என்பதைத்தான் விக்கியரின் இந்த அறிக்கை காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, no fire zone said:

 

கவனிக்குக: தமிழை சரியாக எழுதப்பார்க்கிறேன், சிலர் இங்கு கண்டித்ததன் பெயரால் ... உதாரணத்துக்கு "யமன்" .. "இயமன்"! 

நன்றி நண்பரே!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பதில் அளிக்கின்றன் என சுமன்திரன் மேதாவி திரும்பவும் தன்னுடைய அறிவிலிதனத்தை காட்ட வெளிக்கிடும் . ஆனாலும் நம்ம காவடிகளுக்கு முயலுக்கு மூன்று கால்கள் தான் எப்பவுமே .

அந்த 58 ஆயிரம் பேருக்கு எங்களை விட மூளை கூடத்தான். இப்படி விரைவாக சுமந்திரன் மேதாவி பிம்பம் உடையும் என்று கனவிலும்  சுமந்திரனை கொண்டு வந்த அதிமேதாவிகள் நினைத்திருக்க மாட்டினம் .

சுமந்திரன் இல்லாவிட்டாலும் புலி எதிர்ப்பாளர்களுக்காக  கத்தரி தோட்டத்து வெருளிக்காவது கோட் போட்டு இந்திய பல்கலையில் ஒரு பட்டமும் வேண்டி ரெடி பண்ணனும் இல்லாவிட்டால் சாப்பிட்ட சோறு செமிக்காது பாவம் அவர்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, no fire zone said:

நேற்றைய தினம் விக்கியர் .. மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் எம்மவர்களை பார்க்க போயிருக்கிறார் ... போகப்போவது தெரிந்து அந்த நேரத்தில் .. சூடு, சொரணை, அது, இதை எல்லாம் விட்டு விட்டு ... நம்ம சும்மரும் போயிருக்கிறார் .. ஒட்டிக் கொண்டு உள்ளே போக! ....ஆனால் அங்குள்ள உண்ணாவிரதிகள் சொல்லிப்போட்டார்களாம் ... பின்வாசல் ... வரவே வேண்டாம் என்று!

சும் நீ இயமனுக்கே ஆட்டையை போடக்கூடிய அரசியல்வாதி!

கவனிக்குக: தமிழை சரியாக எழுதப்பார்க்கிறேன், சிலர் இங்கு கண்டித்ததன் பெயரால் ... உதாரணத்துக்கு "யமன்" .. "இயமன்"! 

 (சூடு, சொரணை) இது இவர்களுக்கு இருக்காது. இது இருக்கிறவர்களிடத்தில் துரோகம் இருக்காது.

மொத்தத்தில் கௌரவம், அமைதியாய் இருந்த மனுசனை இழுத்துக்கொண்டு வந்து சேறடிச்சாச்சு. அறுபது வருசமாய் மாரடிச்சவயளாலை அசைக்க முடியாததை நேற்று வந்தவர் புடுங்க வேணுமெண்டு சிலர் எதிர்பாக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்

வேறு சாதாரண அரயசியல்வாதிகளிடம் மாட்டினாலும் பரவாயில்ல இந்தளவுக்கு வந்து இருக்காது மாண்புமிகு முதல்வர் விக்கி ஜயாவிடம் மாட்டி கடைசில கோவணமும் இல்லாமல்....................

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா.... பண்புள்ள மனிதன் என்பதை, தன் அறிக்கையின் மூலம்,வெளிப்படுத்தி விட்டார்.
தான் தோன்றித்தனமாக, அறிக்கை விடும் செயல்களை..... இனியாவது அல்லக்கை சுமந்திரன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பிலீஸ் நோட் திஸ் பாயிண்டு யுவர் ஆனார்.

ஒரு இடதத்தில் பல கட்சிகள் என்றும்.. பின்னர் கூட்டமைப்பு பதிவே செய்யப்படாத அமைப்பு கட்சியே இல்லை என்ரும் வருது"

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவே முதலமைச்சர் பதவி

அடுத்த குற்றச்சாட்டு என்னைத் தமது கட்சியே அரசியலுக்கு அழைத்து வந்ததென்றும் வடமாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சியே கொடுத்தது என்றும் கூறியுள்ளார். இது தவறு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி...............

 

பின்னர் கட்சி சனாயத்தை பற்றியும் கூட்டமைப்பை பற்றியும் வருது:

உட்கட்சி ஜனநாயகமே கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்

பொதுவாகக் கட்சிகள் பற்றி எனக்குப் பல கருத்துக்கள் உண்டு. கட்சி என்பது அதன் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டும். சில கருத்துக்களைப் பெரும்பான்மையினரின் வாக்கின் மூலம் நிராகரிக்கலாம். ஆனால் ஒரு கட்சியானது அதன் உறுப்பினர்களின் கருத்தறிந்து நடக்க வேண்டும்........................

 

 

குழப்பமாக இருக்கு யுவார் ஆனார்.

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, கிருபன் said:

குருவை விஞ்சிய மாணவனாக சுமந்திரன் வளர்ந்துவிட்டார் என்பதைத்தான் விக்கியரின் இந்த அறிக்கை காட்டுகின்றது.

குருவை விஞ்சிய மாணவர்களால்தான் எமது போராட்டம் நடுத்தெருவில்........:(

  • கருத்துக்கள உறவுகள்
On 17 November 2015 at 09:51:24, Athavan CH said:

பல மக்கள் பிரச்சனைகள் தம்முன் வரும் போது சட்டத் தரணியான அவர் இந்த இந்த விடயங்களில் வழக்குப் பதிய முடியாது, சாட்சியங்கள் போதாது என்றெல்லாம் கூறியிருப்பார். அதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு இழைக்கப்படவில்லை என்றோ பாதிப்பு ஏற்படவில்லை என்றோ மனக் கிலேசம் ஏற்படவில்லை என்றோ அர்த்தமில்லை. 

சுமந்திரன் அரசியல் கற்றுக்குட்டியாக இருப்பதை இலண்டனில் நடந்த கலந்துரையாடலிலும் அவதானித்ததாக அங்கு போனவர்கள் சொன்னார்கள். சட்டத்தரணி போன்றே மிகவும் உணர்வு பூர்வமான இனம் சார்ந்த விடயங்களுக்குப் பதில் அளிப்பதை அரசியல்வாதிகள் செய்வதில்லை. மக்களின் உணர்வுகளை மதிக்கவும்,  மக்களின் நம்பிக்கையைப் பெறவும் சட்டத்தரணி என்ற கோதாவில் இறங்கவேண்டியதில்லை. மாறாக, இப்படியான பிரச்சினைகளை இந்த வழியில் அணுகலாம் என்று எளிமையாக எடுத்துரைக்கும் பக்குவம் வேண்டும். ஆனால் சுமந்திரனிடம் உள்ளதெல்லாம் எப்படி திரைமறைவுக்குப் பின்னால் "டீல்" பண்ணி தன்னை தமிழர்களின் தலைமையாக உருவாக்குவது என்பது மட்டுமே. இதனால்தான் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குக்கூடத் தெரியாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு, தன்னிச்சையாகவே முடிவுகளை எடுக்கின்றார். இது ஜனநாயக வெளியில் கூட்டமைப்பு இயங்குகின்றது என்று நம்புபவர்களுக்கு தெரியாமல் போவதுதான் வேடிக்கை. ஆயுதம் தாங்கிய இயக்கங்களுக்குள் இருந்திராத உட்கட்சி ஜனநாயகம் மிதவாதிகளாகக் அடையாளம் காட்டும் கூட்டமைப்பினரிடம், முக்கியமாக சம்பந்தன்-சுமந்திரனிடம், அறவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

TNA இன் ‘ஜனநாயகம்’ – புதிய பதிப்பு – விக்னேஸ்வரனின் அறிக்கை – ஒரு பார்வை

cvvவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார்.
அந்த அறிக்கை முழுவதும் எந்த அரசியலையும் குறிப்பாகப் பேசவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி ஜனநாயகம் குறித்தே கூறப்படுகிறது.
ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சிப் பிரதேசமாக வடக்கும் கிழக்கு முன்வைக்கப்பட்டது. அது காலப் போக்கில் சுருங்கி வடக்கு மட்டும் என்ற நிலையை வந்தடைந்தது. வட மாகாண சபையை ஏற்றுக்கொண்டு கிழக்கு முழுவதுமாக அன்னியப்படுத்தப்பட்ட பின்னர் அது மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. கிழக்கு மாகாணம் மட்டுமன்றி இன்று வடக்கின் தொலைவுப் பகுதிகளும் புறக்கணிக்கப்பட்டு யாழ்ப்பாணமும் அதனைச் சுற்றியுள்ள சிறிய பகுதியும் தமிழ்த் தேசியத்திற்கான பிரதேசமாகச் சுருங்கிவிட்டது.

இன்று வட மாகாண சபை அதன் அதிகாரம் மட்டுமே ஈழப் போராட்டத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கை விக்னேஸ்வரனின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் முதலமைச்சரையும் அதன் உறுப்பினர்களையும் கலந்தாலோசிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முடிவெடுப்பதாக தனது அறிக்கையில் ஆதங்கப்படும் திரு.விக்னேஸ்வரன் கிழக்கு மகாண சபை உறுப்பினர்களையும் அவர்களின் கருத்துக்களையும் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வட மாகாண சபையைப் புறக்கணிக்கணிக்க, வடக்கு மாகாண சபை கிழக்கைப் புறக்கணிக்க முழுக் கட்சியுமே ஜனநாயகத்திற்கு புதிய வரைவிலகணத்தைக் கொடுக்கிறது.

விக்னேஸ்வரனுக்கும், சுமந்திரனுக்கும் அரசியல் முரண்பாடுகள் கொழுந்துவிட்டு எரிகிறது என்று புலம்பெயர் தேசியக் கோமான்கள் ‘மாற்றத்திற்கான குரல்’ எழுப்பி தோற்றுப் போனார்களோ என்று தோன்றுகிறது.

விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் பொதுவாக எந்த அரசியல் முரண்பாட்டையும் குறிப்பிடவில்லை. வெறுமனே தனக்கும் தனது ‘பணிவான’ மாணாக்கன் சுமந்திரனுக்கும் இடையேயான ஈகோ பிரச்சனை பற்றியே குறிப்பிடுகிறார்.

கட்சியில் ஜனநயகம் இல்லை என்பதே விக்னேஸ்வரனின் நீண்ட அறிக்கையின் சாராம்சம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனநாயகம் எப்போது இருந்தது என்ற கேள்விக்கு விக்னேஸ்வரனுக்குக் கூடப் பதில் சொல்ல முடியாது.

கட்சி என்ன சம்பந்தனின் சித்தப்பன் வீட்டுச் சொத்தா என்று கேட்டால், ஈழம் என்ன வட மாகாண சபையின் உரித்தா என்ற கேள்வி அதனோடு தொற்றிக்கொள்ளும்.
சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டதோ அன்றிலிருந்தே அதன் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் தேசியம் அர்த்தமிழந்துவிட்டது. விக்னேஸ்வரனின் தலைமையில் யாழ்ப்பாணத் தேசியமாகக் குறுக்கப்பட்ட தன்னாட்சிப் பிரதேசமும் வலுவிழந்த தேசியக் கோரிக்கையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்த் தேசியக் கோமாளிகளாக்கிவிட்டது.

விக்னேஸ்வரன் புலம்பெயர் இனவாதிகளுக்குத் தீனி போடுவதற்கும், கூட்டமைப்பு கொழும்பு சிங்களப் பேரினவாதிகளுக்குத் தீனி போடுவதற்கும் கூட்டமைபின்  குத்துவெட்டுக்கள் பயன்படுமே தவிர  சுயநிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை வென்றிடுக்கப் பயன்படாது.

தவிர, கிழக்கு திட்டமிட்டுத் தனிமைப்படுத்தப்படுவதற்கு புலம்பெயர் ஏகாதிபத்திய சார்பு புலம்பெயர் பிழைப்புவாதிகள் மற்றும் விக்னேஸ்வரன் கூட்டுப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் நியாயமானதே. அதே வேளை ஏகாதிபத்திய அடியாள் அரசான மைத்திரி-ரனில் பேரினவாத அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஊது குழலாக சுமந்திரன் பயன்படுத்தப்படுவது வெளிப்படையானதே.

http://inioru.com/cww-memo-to-sumanthiran-a-glance/

... ரஷ்யா என்ற ஒரு நாடாம் அன்று பற்றி எரிந்து கொண்டிருந்த போது, யாரோ அன்றாண்ட சார் மன்னனாம், பீடியோ சுருட்டோ புகைத்துக்கொண்டிருந்தானாம்! அப்படி நாடு மட்டுமல்ல, தமிழரசுக்கட்சிக்கூத்தமைப்பு நாறடிக்கப்பட்டுகொண்டிருக்கிறது! ஆனால் நம்ம மன்னன் சம்,உல்லாசத்தில் ஹிந்தியாவில் ...! உருப்படுமா???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, no fire zone said:

... ரஷ்யா என்ற ஒரு நாடாம் அன்று பற்றி எரிந்து கொண்டிருந்த போது, யாரோ அன்றாண்ட சார் மன்னனாம், பீடியோ சுருட்டோ புகைத்துக்கொண்டிருந்தானாம்! அப்படி நாடு மட்டுமல்ல, தமிழரசுக்கட்சிக்கூத்தமைப்பு நாறடிக்கப்பட்டுகொண்டிருக்கிறது! ஆனால் நம்ம மன்னன் சம்,உல்லாசத்தில் ஹிந்தியாவில் ...! உருப்படுமா???

 

இதில் வரும் ராமையாவின் வேஷம்தான் சம்  பிராந்திய சாமிகளின் உடுக்கேற போய் இருப்பார் .

  • கருத்துக்கள உறவுகள்
On 11/17/2015, 6:55:17, Jude said:

விக்னேஸ்வரன் வந்தா நிதி சேர்த்த நாங்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள். விக்னேஸ்வரன் வரவில்லை என்று சுமேந்திரன் குற்றம் சாட்டியதற்கே விக்னேஸ்வரன் பதில் அளித்திருக்கிறார். ஏன் நீங்கள் விக்னேஸ்வரனை வரும் படி கேட்டு, பின் அவர் வர முடியாத நிலையில் அவர் வரவில்லை என்று குற்றம் சாட்டி அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கிறீர்கள்? முன்னுக்கு பின் முரணாக ஒருவருக்கு ஒருவர் முரணாக கருத்துகள் தெரிவிப்பது உங்கள் மேல் மக்களுக்கு சந்தேகத்தை வலுப்படுத்தவே உதவும்.

 

நண்பரே, நீங்கள் பெற்றோர் பணத்தில் வாழும் வயதில் இருந்து எழுதுபவர் போல தெரிகிறது. ஒரு தொலைபேசி அழைப்புக்கு கூட பணம் தேவை. பொதுசன ஆதரவுள்ள கட்சி பொதுசனத்திடமே அந்த பணத்தை கேட்கிறது. இதை நீங்கள் நம்பிக்கையீனத்துக்கு அடையாளம் என்கிறீர்கள். 

சில பொதுவுடைமை கட்சிகளுக்கு சீன மற்றும் ரஸ்ய தூதரகங்களின் இரகசிய உதவியுடன் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பணஉதவி செய்கின்றன. போராளிகள் அமைப்புகளுக்கு ஆயுதங்கள் முதல் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பணம் வரை இந்திய தூதரகங்களின் இரகசிய உதவியுடன் இந்தியா வழங்கி இருக்கிறது. அமெரிக்க அரசு வெளிப்படையாகவே தனது சார்பு அரசியல்வாதிகளுக்கு பணமும் வசதிகளும் வழங்குகிறது. நோர்வே அரசு விடுதலை புலிகளுக்கு பணமும் பொருட்களும் வழங்கியது. இவ்வாறான பணம் சேர்த்தலா நம்பிக்கைக்கு உரிய அடையாளம்?

பணம் இல்லாமல் எல்லாம் இலவசமாக கிடைப்பது நீங்கள் பெற்றோர் பணத்தில் வாழும் வரைதான் நண்பரே!

 

 

சரி அதைவிடவும்,

தமிழ்மக்கள் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில் தற்போது ஒரு பொது நிறுவனத்துக்கோ அன்றேல் வெளிநாடுகளில் காணப்படும் கட்சிகள், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கோ நிதி உதவி செய்யவேண்டுமெனில் சட்டப்படியான வங்க்கிக்கணக்குப் பரிமாற்றங்களையே செய்திடல்வேண்டும். அனேக இங்குள்ள வங்களில் கணக்குவைத்திருப்போர் ஏதாவது அலுவலாக வங்கிக்குச் செல்லும்வேளை ஒருசில கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது அக்கேள்விகள் காலத்துக்குக்காலம் மாறுபடும்.

உதாரணமாக அண்மையில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி நீங்கள் வாழும் நாட்டுக்கு வெளியே ஏதாவது அரசியல் கட்சியிலோ அல்லது அதற்கு இணையான இயங்கங்களுடனேயோ தொடர்புவைத்துள்ளீர்களா அல்லது பணப்பரிமாற்றம் செய்துள்ளீர்களா என்பதாகும்.இது ஒரு சம்பிரதாயமான கேள்வியாயினும் பதில் சரியானதாக இருக்கவேண்டும் இல்லையெனில் எதிகாலத்தில் சிக்கல்.

தவிர சட்டரீதியாக வெளிநாடுகளில் உள்ள கட்சிகளோ அன்றேல் இயக்கங்களோ நிதிசேர்ப்பதாகவிருந்தாலும் வங்கியுடனான கொடுக்கல்வாங்கல்களின்மூலமே செய்திடல்வேண்டும்.

கனடாவில் கூடமைப்புக்கான தேர்தல் நிதி எப்படிச்சேர்க்கப்படுகின்றது, வங்க்கிக்கணக்கில் வைப்பிலிடுவதன்மூலமா?

இதில் நிதிகொடுப்போரது கணக்கில் காட்டாத பணமும் அடக்கமா?

கனடாவில் கூட்டமைப்புச் சேர்க்கும் தேர்தல்நிதி எப்படி இலங்கையில் கூட்டமைப்பின் கைகளில் போய்ச்சேர்கின்றது?

யார் இதனை முன்னின்று செய்கிறார்கள்?

இந்நிதி என்ன தேவைக்காகப் பயன்படுகின்றது?

இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட பணம் கணக்கில்வரும்பட்சத்தில் இவை முறையாகத் தேர்தல் செலவினத்தில் கணக்குக்காட்டப்படுகிறதா?

இவைபோன்ற கேள்விகள் எதிர்காலத்தில் எங்கிருந்தாவது வரும், இதைவைத்தே சட்டநடவடிக்கைகளுக்குள் யாரையும் சிக்கவைக்கலாம், அல்லது இஅதைவைத்து மிரட்டிக் காரியம்சாதிக்கமுயலலாம்.

இலங்கையின் சட்டத்துறையில் முதன்மைப்பதவியிலிருந்த ஒருவருக்கு இந்தவிடையங்கள் தெரியாமலிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அரசியல் ஒருவர் காலை ஒருவர் வாரிவிடும் விளையாட்டு, இதில் சுமந்திரன் ரெம்பக்கெட்டிக்காரன், இந்தப்பொறிக்குள்ள  நானாகவிருந்தாலும் விழமாட்டன்.

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.